கொத்துபராட்டா, சாண்ட்விச் என்று தமிழின் முன்னனி பதிவர்கள் வாரம்தோறும் நாட்டு நடப்பு போல ஒரு பத்தி எழுதுவர். கூட்டம் கும்மி அடிக்கும். அதனாலே நானும் வான்கோழி போல ஆட முயற்சி செய்கிறேன். இப்படியான பத்திகளில் ஒரு casualness இருக்கும். இது எல்லாமே தலைவரின் “கணையாழியின் கடைசிப்பக்கங்கள்” இன் விட்ட குறை தொட்ட குறை தான். “Good Artists Copy, Great Artists Steal” என்று ஸ்டீவ் ஜாப்ஸ் சொல்லிஇருப்பார். இது அப்பியதா சுட்டதா என்று தெரியவில்லை! பார்ப்போம். எங்கே தான் போய் முடிகிறது என்று!
அரசியல்
மணலாறு என்று பூர்வீகமாக அழைக்கப்பட்டு பின்னர் சிங்களவரால் வெலிஓயா என்று சிங்களமயமாக்கப்பட்டு அனுராதபுர மாவட்டத்துக்குள் அதை சேர்த்து முழு சிங்கள பிரதேசம் ஆக்கினர். இப்போது மீண்டும் முல்லைத்தீவு மாவட்டத்துடன் இணைத்துள்ளார்கள். இனி சிங்கள பிரதிநிதித்துவம் முல்லைத்தீவில் கொஞ்சம் கொஞ்சமாக உருவாகி திருகோணமலையின் நிலைமை வன்னிக்கு வரப்போகிறது. எம்மை எல்லாம் கட்டிவைத்து விட்டு கண்முன்னாலேயே பெற்ற தாயை பாலியல் வல்லுறவு செய்துகொண்டே இருக்கிறார்கள். ஒன்றுமே புடுங்க முடியாத நாதாரி இனமாய் தமிழர் ஆகும் தூரம் வெகு தொலைவில் இல்லை. நான் கூட ஆஸ்திரேலியாவில் இருக்காவிடில் இப்படி எல்லாம் எழுதமாட்டேன். உள்ளே போட்டுவிடுவான் என்று குலை நடுங்கும். சிங்களவனை மோடயன் என்று சொல்லிய காலம் போய் நாங்கள் மோட்டுத்தமிழன் ஆகிக்கொண்டு இருக்கிறோம்.
இலக்கியம்
எழுத வந்து இருபது நாட்கள் ஆகிவிட்டன. ஆதரவு மெய்சிலிர்க்கவைக்கிறது. சிலர் அனுப்பும் ஈமெயில்களின் டீடைல்ஸ் பார்க்கும் போது அட இதை அப்போதே செய்திருக்கவேண்டும் என்று தோன்றியது. இப்போதாவது செய்கிறேனே! சில எதிர்மறை விமர்சனங்களும் வராமல் இல்லை. “அக்கா” கதையின் முடிவில் ஒரு உயிர் இல்லை என்று நண்பி ஒருவர் அபிப்பிராயப்பட, என்னுடைய சொந்த அக்காவும் அதே கருத்தை எதிரொலித்தார். அந்த constructive criticism அடுத்த கதையை செப்பனிட உதவியது. இன்னொரு நண்பர் ஆங்கில வார்த்தை பிரயோகம் அதிகம் தென்படுவதாக கூறினார். அவருக்கும் எழுதிய பதிலை தனிப்பதிவாகவே போடலாம். சில கருத்துக்கள் hurt பண்ணும். ஒரு நண்பர் facebook இல் “ Man, u got shit load of time to kill don't u?” என்று விமர்சனம் போட்டிருந்தார். வருத்தமாக இருந்தது, எழுதும்போது இருக்கும் ecstacy இப்படி ஓரிரு கருத்துகள் வரும்போது வடிந்துவிட அடுத்த வினாடியே “உஷ் இது கடவுள்கள் துயிலும் தேசம்” கதையை சுகிந்தன் அண்ணா தன்னுடைய facebook இல் போட, ஆரம்பித்துவிட்டேன், மீண்டும்!
ஆப்பிள்
எங்கு பார்த்தாலும் “SIRI” பற்றிய பேச்சு. ஏராளமான வீடியோக்கள். எனக்கு அதிகம் பிடித்த பதில்.“Siri, who is your daddy?”அந்த பதிலில் இருக்கும் புத்திசாலித்தனம் ரசிக்கக்கூடியது. அடடே இந்த கதை வாசித்து விட்டீர்களா?
“My Daddy?”
“Yeah, your daddy”
“That’s what I thought too!”
நண்பி ஒருவர் அனுப்பிய லிங்க். விழுந்து விழுந்து சிரித்தேன்.
ஆஸ்திரேலியா
நிரந்தரமாக வந்து நான்கு மாதங்கள் ஆகிவிட்டன. கடந்த ஆறு ஆண்டுகளாக வாழ்க்கை ஒரே ஓட்டம். பிரெஞ்சு படமான “Chocolat” இல் வரும் அந்த பெண் பருவக்காற்று வரும்போதெல்லாம் புதிய இடம் செல்வாள், அவளைப்போல எப்போதும் ஒரே இடத்தில் நிலையாக இருந்தது இல்லை. மெல்போர்ன் இந்த தடவை நன்றாகவே பார்த்துக்கொள்கிறது. ஏறெடுத்தும் பார்க்காத ஆஸ்திரேலியர்கள் என்னுடைய ஆங்கில வலைப்பதிவை வாசித்தபின்னர் இப்போது எல்லாம் மதிய உணவுக்கு அழைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். மெல்ல மெல்ல அவர்களை நானும் என்னை அவர்களும் புரிந்துகொள்கிறோம். பலர் வேண்டாம், ஒரு நண்பர் போதும், சிங்கப்பூரில் அமுதா போல.
இன்றைய பாடல்
பவதாரிணி இசை அமைத்த அமிர்தம் திரைப்பட பாடல். வேதம்புதிது கண்ணனின் படம். இசையில் இரு சாஸ்திரியம் படிந்து இருக்கும். இந்த கார்த்திக் பாடும் டூயட் பாடலின் சரணம் இனிமையானது. Don’t miss it.
விளையாட்டு
ரோஜெர் பெடரர் தரவரிசையில் நாலாம் இடத்துக்கும் இறங்கி விட்டார். இது ஒருவிதத்தில் நன்மையே. அரையிறுதியில் முதலாம் இடமும் நாலாம் இடமும் மோதும் என்பதால் தலைவர் ஜோகவிச்சை சந்திக்கும் சந்தர்ப்பம் அதிகம். எனக்கென்னவோ நடால், முர்ரேயை விட ஜோகோவிச்சை வெல்வது தலைவருக்கு சற்று சுலபம் போல தெரிகிறது. இம்முறை எப்படியும் Australian Open நேரில் பார்ப்பதாய் எண்ணம். பார்ப்போம்.
ஹாட் நியூஸ்
ஏ ர் முருகதாஸ் இயக்கத்தில் ஸ்ருதிகாசன் நடிக்கும் ஏழாம் அறிவு மெல்போர்னில் வெளியாகிறது. பார்க்கலாமா? விடலாமா என்று இருக்கிறது. பார்த்தால் விமர்சனம் அன்றே வரும்! சூரியாவும் தோன்றுகிறார். அடக்கிவாசித்தால் பார்க்ககூடிய படமாக இருக்கலாம்.
அடியே கொல்லுதே அழகோ அள்ளுதே
அடுத்த வியாழ மாற்றம் வரை !!!
தியாகத்தின் வேரைத்தேடி: தென் ஆப்பிரிக்காவிலிருந்து மயிலாடுதுறைக்கு ஒரு பயணம்
ReplyDeletehttp://arulgreen.blogspot.com/2011/10/blog-post_19.html
இப்போது தான் எழுதுவது போல் இல்லாமல் நல்ல நடை தொடருங்கள் , நானும் புதியவன் தான் தவறிருந்தால் தண்டிக்கலாம் ,இந்த பின்னூட்டம் ஆனாலும் , என் பதிவானாலும்
ReplyDeleteநன்றி அருள் வருகைக்கு
ReplyDeleteநன்றி ஆவணி, தண்டிப்பதால் ஓரளவுக்கேனும் தவறுகளை திருத்திக்கொள்ள முடிகிறது. வெறுமனே பாராட்டுவது எம்மை வளர்க்க உதவாது தான்.
ReplyDeleteநன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.
This comment has been removed by the author.
ReplyDelete//சிங்களவனை மோடயன் என்று சொல்லிய காலம் போய் நாங்கள் மோட்டுத்தமிழன் ஆகிக்கொண்டு இருக்கிறோம்.//
ReplyDeleteஉண்மை தான்.. இரண்டு நாட்களின் முன்பு எனது இந்தியத் தோழிக்கு அம்மா மாதனமுத்தா கதை சொல்லிக் கொண்டிருந்தபோது இதே எண்ணம் எனக்கும் வந்தது.. அதில் உருவானது தான் இது..
http://maranavaakkumoolam.blogspot.com/2011/10/blog-post.html
நல்ல அலசல்கள்
ReplyDeleteஎப்போது எங்களுக்கு எல்லாமே தெரியும், மற்றவன் என்னை சொல்வது என்று நினைப்பதை தமிழர் நாங்கள் நிறுத்துகிறோமோ அப்போது அரைவாசி திருந்துவோம்
ReplyDeleteநன்றி K S S Rajh வருகைக்கும் தொடர்ந்து கொடுக்கும் ஊக்கத்துக்கும்.
ReplyDeleteநானும் அக்கா என்று ஒரு "சிறுகதை " (மாதிரி ஒன்று) என் மனதில் வைத்துள்ளேன். அது எழுதும்வரை உங்கள் "அக்கா" வை வாசிப்பதில்லை. இல்லாவிட்டால் என்னை அறியாமல் பகுதிகளைச் "சுட்டு' விடுவேன்
ReplyDeleteசக்திவேல் .. உங்கள் கதை உங்கள் குழந்தை .. உங்கள் பாணி எப்போதும் இருக்கும் ... சும்மா வாசிச்சு கமெண்ட் போடுங்கள் .. சுடும் அளவுக்க இந்த கதை அத்தனை சூடானதும் கிடையாது!
ReplyDelete