வியாழ மாற்றம் 24-05-2012 : ஆறு அது ஆழமில்ல


டேய் ஜேகே

121சுமந்திரன், ஏக பிரதிநிதி,
தமிழ் தேசிய கூட்டமைப்பு
தம்பி ஜேகே, சரத் பொன்சேகாவை சிறையில் இருந்து வெளியே விட்டுவிட்டார்களே? சர்வதே அழுத்தம் தான் காரணமா?
 

சர்வதேச அழுத்தமா? புரியவில்லை. யுத்தக்குற்ற விசாரணை செய் என்கிறார்கள். குற்றம் செய்து உள்ளே இருந்த ஒரே ஒருத்தனை கூட வெளியே விட்டவுடன் அதற்கு பாராட்டு பத்திரம் கொடுக்கிறார்கள். நம்ம ஆட்களில் சிலர் கூட, “ஹீரோ இஸ் பாக்” என்று ஸ்டேடஸ் போடும் கொடுமை. ஒன்றை புரிந்துகொள்ளுங்கள். ஏரியல் ஷரோன், யிட்ஸாக் ராபின், ஷிமோன் பரோஸ், எஹூட் ஒல்மேர்ட் தொடக்கம் பெஞ்சமின் நேத்தன்யாகு வரை இஸ்ரேலை ஆண்ட எல்லோருமே sarath-fonseka-in-jail-colombo-telegraphஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான். ஒரு இன்ச் நிலம் கூட பாலஸ்தீனத்துக்கு விட்டுக்கொடுக்கமாட்டார்கள். அவற்றுள் ஷிமோன் பரோஸ் தான் கொஞ்சம் தேவலாம். அவர் ஏதோ ஒரு உப்புச்சப்பில்லாத தீர்வை அர்பாத்துக்கு கொடுக்க, அரபாத் அதை வாங்கி, அதை தளமாக கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக இஸ்ரேலை அரிக்கும் உத்தியை கையாண்டார். அவர் மறைவுக்குப் பிறகும் முஹம்மாட் அப்பாஸ் அந்த எருமைகளுடன் இழுபடடுக்கொண்டு, பாலஸ்தீனர்களின் இருப்பையும் காப்பாற்றிக்கொண்டு ஏதோ வண்டியை முதலுக்கு மோசமில்லாமல் ஓட்டுகிறார். பாலஸ்தீனியர்கள் ஒருபோதும் இஸ்ரேலிய அதிபர்களை நம்பி தங்கள் அரசியலை செய்யவில்லை. அதேபோல நம்மவரும் தமிழர் தரப்பு அரசியல் பலப்படுத்துவதை பற்றி மட்டுமே நம்மவர் சிந்திக்கவேண்டும். புருஷன் இல்லை என்றால் புருஷனை தேடவேண்டுமேயொழிய அரசனை தேடி போனீர்கள் என்றால் இருப்பதையும் உருவிவிடுவான்!
இதிலே இலங்கை அரசாங்கத்தின் மதிநுட்பத்தை பார்த்து ஆச்சரியப்படாமல் இருக்கமுடியவில்லை. தேர்தலுக்கு இன்னமும் மூன்று வருடங்கள் இருக்கின்றன. இப்போது பொன்சேகாவை வெளியில் விட்டால், இரண்டு நாட்களுக்கு ஜெயவேவா என்று சொல்லிவிட்டு அவனவன் சோலியை பார்க்க போய்விடுவான். இவரும் அத இத உளறி, தனிக்கட்சி வைத்து விஜயகாந்து ஆகும் வாய்ப்பே அதிகம். அடுத்த தேர்தலிலும் எதிர்க்கட்சிகள் பிரிந்து இன்னமும் பலவீனப்படும். மாஸ்டர் பிளான்!
பயபுள்ள அரை ட்ராயருடனும் என்னமா போஸ் குடுக்கிறாப்ல!

0மார்க் சக்கர்பெர்க்
Facebook IPO சறுக்கலுக்கு என்ன காரணம்?
Mark-Zuckerberg-Choking-His-Chicken
38டாலரில் ஆரம்பித்த பங்குவிலை 45, 46 எல்லாம் எகிறிவிட்டு இப்போது 32இல் போய் நிற்கிறது. அளவுக்கதிகமான பங்குகளை சந்தைக்கு விட்டது, உணர்ச்சிவசப்பட்ட தன்மை எல்லாமே இந்த மாயைக்கு காரணம். யோசித்து பார்த்தால், facebook இன் வருமான மூலம் அவ்வளவு ஸ்ட்ரோங் இல்லை. எத்தனை மில்லியன் பாவனையாளர்களாக இருந்தாலும் அவர்கள் எல்லோரும் அரட்டைக்காகவே அங்கே வருபவர்கள். விளம்பரங்களை கணக்கெடுப்பதே இல்லை. கூகிள் விளம்பரங்களுக்கும் facebook விளம்பரங்களுக்கும் உள்ள அடிப்படை வேறுபாடு இது.
கூகிளில் நீங்கள் ஏதோ ஒன்றை தேடி அலையும் போது அது சார்ந்த விளம்பரங்களை கூகிள் காட்டும். அடடே இதை வாங்கினால் நல்லது என்ற ஒரு desperation தேடுபவருக்கு இருக்கும். அந்த பொருளை கிளிக் பண்ணி பார்க்கத்தோன்றும். அது தான் கூகிளின் வெற்றி. ஆனால் facebook விளம்பரங்களில் அந்தவகை desperation பாவிப்பவர்களுக்கு இருக்காது. இப்போது நான் ஓபன் பண்ணினால் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் விளம்பரம் காட்டுகிறது. யாருக்கு வேண்டும் அது? அதுவே கூகிளில் போய் “Audi” என்று தேடினால் “Audi” விளம்பர லிங்க் வருகிறது. எனக்கு வேண்டியதும் அதுவே! தேடிப்போகும் விஷயம் இல்லையா? கூகிள் டிமாண்டுக்குரிய சப்ளை தருகிறது. facebook டிமாண்டே இல்லாத விளம்பர தொந்தரவு. வேறு யுக்திகளை அது கையாளும் வரை எத்தனை யூசர்ஸ் இருந்தாலும் பணம் புரளாது!

sakuntla_thumbமேகலா, இதயனூர்
ஜெயமோகன் இந்திய ராணுவம் ஈழத்தில் பாலியல் வல்லுறவு செய்யவில்லை என்று ஒரு இந்திய இராணுவத்தில் இருக்கும் வாசகர் சொல்லியிருப்பதாக எழுதியிருக்கிறாரே?
அந்த பதிவுக்கு பதிலாக திருமாவளவன்(விடுதலை சிறுத்தை இல்லை, இவரு கனடா கவிஞர்), தான் நடுவுநிலமைவாதி, இந்திய இராணுவம் வல்லுறவு செய்தது உண்மை தான் என்று சொன்னவுடன், ஜெயமோகனுக்கு சங்கடமாகிவிட்டதாம். ஷோபா சக்தியும் திருமாவளவனும் சொன்னால் சரியாக தான் இருக்கும் என்பதால் இந்த குழப்பமாம். அட கொக்கமக்கா, உங்கட பதிவுகளையும் பதில்களையும் பார்த்தா அப்படியே தில்லானா மோகனாம்பாள் சிவாஜி பத்மினி போலவே இருக்கடா!நாளைக்கு கோத்தா ஈமெயில் அனுப்பினார். முள்ளிவாயக்காலில் படுகொலையே நடக்கவில்லை. தமிழர்கள் மிகைப்படுத்தப்பட்ட பிரச்சாரம் செய்வதை தவிர்த்து, சிங்களவர்களுடனான மனப்பிளவுகளை பரிசீலனை செய்யவேண்டும் என்றும் சொல்லுவார். ஏன் சொல்லியே விட்டார். கேக்கிறவன் கேனையா இருந்த எலி ஏரோப்ளேன் ஓட்டுமாம்!

ஆறு அது ஆழமில்ல! அது சேரும் கடலும் ஆழமில்ல! ஆழமெது ஐயா?

ஏன் குமரன் கடைசி மட்டும் வெயிட் பண்ணினவன், What was his problem?
Girl Is Mine (தமிழில் மேகலா) கதையை வாசித்த ஹர்ஷால், அதை அவர் மனைவிக்கு போய் சொல்ல, அவரும் வாசித்துவிட்டு, பிடித்துப்போய், மூவரும் ஒரு நாள் டின்னர் போனோம். Merlot, கோப்பையில் இன்னமும் தளம்பவில்லை … இரண்டாவது சுற்றில் அந்த கேள்வி வந்தது.
அது ஒரு உளவியல். கதையில் வரும் மேகலா படித்தவள். இன்டலிஜண்ட்.. குமரனை காதலிக்கிறாள். எங்கே அது தெரிந்துவிடுமோ என்ற பயத்தில் கொஞ்சம் extra cautious ஆக இருப்பதற்காக அவளே அவர்களுக்கிடையில் ஒரு திரையை போட்டுவிட, அதுவே குமரன் அவளை நெருங்க விடாமல் தடுத்துவிட்டது. Anti climax.
அங்க தான் ஜேகே நீங்க எழுத்தாளரா தோல்வி அடைஞ்சிட்டீங்க. பெண்களுக்கு ஒருத்தனை பிடித்துவிட்டால் எப்படியும் அதற்கான சைகைகளை கொடுத்துக்கொண்டே இருப்பார்கள். They virtually drive the show. டவுட் என்றால் ஹர்ஷாலையே கேட்டுப்பாருங்கள்.
ஹர்ஷால் அடுத்த கிளாசை எடுத்து மடக்கென்று குடித்தான்.
இல்ல, அவள் தான் desperate என்று காட்டாமலிருக்க ..
நத்திங் டூயிங் .. யூ ஜஸ்ட் டோன்ட் நோ அபவுட் வுமன்! அனிதா நாயரின் “லேடீஸ் கூ” வாசிச்சு பாருங்க. அதுவரைக்கு பெண்களை பற்றி எழுதாதீங்க, ப்ளீஸ்!
அன்றைக்கு இரவே பசு மாடு வாங்குவதற்கு டெல்லிக்கு போய் நின்ற கஜனுக்கு கோல் போட்டு, “லேடீஸ் கூ” வாங்கிவாடா என்று சொல்ல அவன் “என்ன கக்கூஸா?” என்று திருப்பி கேட்டு, ஒரு மாதிரி வாங்கி,  அப்புறமாக சிங்கப்பூர், சிட்னி என்று எல்லா இடமும் சுற்றி கடைசியில் மெல்பேர்ன் வந்து சேர்ந்தது.

Santhanam-Comedy-Collection
என்னடா இன்னமுமே விமர்சனம் ஸ்டார்ட் ஆகலியா? இந்த பாட்டுக்கே முக்கால்வாசி பேரு பீடி குடிக்க போயிருப்பாங்களேடா? சொன்னாலும் கடுப்பாயிடுவ! பால் பொங்குறதுக்குள்ள வாசிச்சு முடிக்கும்படியா பதிவு எழுதோணும் மச்சான்… விளங்கிடும்டா டேய்!

ladies-coupe-anita-nairஅகிலா, நாற்பத்தைந்து வயது சிங்கிள். அப்பா திடீரென்று விபத்தில் இறந்துபோக, அவர் பார்த்துவந்த  இன்கம் டக்ஸ் அலுவலகத்து கிளார்க் உத்தியோகம் இவளுக்கு கிடைக்க, குடும்பத்தின் “அவள் ஒரு தொடர்கதை” சுஜாதாவாகிறாள். இடையில் எட்டு வயது குறைந்த இளைஞனுடன் காதல், அதுவும் வேண்டாம் என்று விலகி, வீட்டில் மாப்பிள்ளை பார்ப்பார்கள் என்று காத்திருக்க, இவளுக்கு கலியாணம் செய்துவைத்தால் வீட்டுப்பாரத்தை யார் பார்ப்பார்கள் என்று அவர்களும் ஜகா வாங்க, அப்படி இப்படி என்று வயசாகிவிட்டது. இப்போதும் தங்கை குடும்பம் அவளோடு அவள் வீட்டிலேயே ஒட்டி இருக்க, வெட்ட தெரியாமல், ஒரு நாள் போதும் சாமி என்று பெங்களூரில் இருந்து கன்னியாகுமரி ட்ரெயின் ஏறுகிறாள். அது ஒரு பெண்களுக்கான பிரத்தியேக பெட்டி. Ladies coupe! அதிலே பயணிக்கும் ஐந்து பெண்கள் தங்கள் கதையை சொல்ல சொல்ல … ரயில் வேகமாக நகருகிறது. கதை அதை விட!
கணவனா மகனா என்று குழப்பத்தில் வாழும் ஜானகி. கணவன் இறந்த பின்னர் தனக்கு துணை மகன் தானே என்று மகனை கொண்டாட, மகன் அவளை மதித்தானில்லை. ஒரு கட்டத்தில் மகன் சங்காத்தமே வேண்டாம் என்று கணவனில் நண்பனை காணும் பெண்ணின் கதை.
மார்கரெட், புத்திசாலி, கெமிஸ்ட்ரியில் தங்கப்பதக்கம் பெற்றவள். காதலித்து திருமணம் செய்யும் கணவன் ப்ரின்சிபலாக இருக்கும் அதே பாடசாலையில் இவள் ஆசிரியை. கணவன் ஒரு ஷாவனிஸ்ட். மனைவியை மதிக்கத்தெரியாதவன். ஒரு வித நாசிஸ்ட் என்றும் சொல்லலாம். மார்கரெட் எப்படி அந்த கணவனை வழிக்கு கொண்டு வருகிறாள் என்பது இன்னொரு கதை.
பிரபாதேவி, பணக்காரி. கணவன் தங்க வியாபாரம். இவளுக்கு தனக்கென்று ஒரு ஆளுமை வேண்டுமென விருப்பம். ஆனால் எப்படி என்று தெரியாமல் இறுதியில் தானே சுயமாக நீச்சல் பழகுகிறாள். ஒருநாள், ஒரு கரையில் இருந்து இன்னொரு கரையை எட்டும்போது அந்த ecstasyயை எட்டுகிறாள்.
de
ஷீலா, பதினாலு வயது பெண்ணுக்கும் ராங்கிக்காரி பாட்டிக்கும் இடையில் உள்ள க்யூட் உறவு.
மரிக்கொழுந்து ஒரு ஏழைப்பெண். செட்டியார் வீட்டில் வேலைக்கு போய், அங்கே ஒருவனால் பாலியல் வல்லுறவுக்குள்ளாகி, பிறந்த குழந்தையை சீண்டாமல், ஒரு கட்டத்தில் லெஸ்பியனாகி, அதுவே பை செக்ஸுவலுக்கும் மாறி ... ஒரு இருண்ட கதை இது. தன் செயல்களுக்கு அவளே சுயபச்சாதாபம் அது இது என்று காரணங்களை தேடிக்கொள்ளுகிறாள்.
நாவலில் எனக்கு பிடித்த பாத்திரங்கள் அகிலாவும் மார்கரேட்டும் தான். கணவன் சுகதேகியாய், கட்டுடலுடன் இருப்பது தான் அவனின் சுபீரியாரிட்டி கொம்பிளக்ஸுக்கு காரணம் என்பதை அறிந்து, எண்ணெய், நெய், இறைச்சி என்று சுவையான சாப்பாட்டை மூன்று நேரமும் கொடுத்து, ஒரு கட்டத்தில் மூன்றடி நடந்தாலே அவனை மூச்சிரைக்க வைக்கிறாள். வாய் ருசியை தேட, உடல் தளர அவனுக்கு மனைவியின் தேவை அதிகரிக்க, அவள் காலடியே தஞ்சம் என்று கிடக்கிறான்.. scary!
அகிலாவோ, பஸ்சில் நெரிசலில், முகம் தெரியாதவன் இடுப்பை பிடிக்க, அதில் திரில் ஆகி, தினமும் அதே பஸ்சில் வேண்டுமென்றே கூட்ட நெரிசலில் சென்று அந்த முகம் தெரியாதவனின் கைகள் இடுப்பை சுற்ற அனுமதிக்கிறாள். இத்தனைக்கும் அவள் தப்பான பெண் என்றால், நோ வே… சின்ன சின்ன விஷயங்கள் .. அனிதா நாயர் வியக்க வைக்கும் இடங்கள் இவை.
2004120500190301பெண் எழுத்தாளர்களில் என்னை மிகவும் கவர்ந்தவர் ஜோஹும்பா லாகிரி தான். ஆனால் அவர் பொதுவாக ஆண்களின் பார்வையில் தான் கதையை கொண்டுபோவார். தமிழில் சிவசங்கரி. அவர் எழுத்தில் ஒரு சோகம் இருக்கும். வீணான சுய பச்சாதாபங்கள், பெண் எப்போதுமே தோற்கும் விஷயங்கள் என சிவசங்கரி எழுத்துக்கள் சிலசமயம் சீரியல் ரேஞ்சில் இருக்கும். Except நூலேணி.
அனிதா நாயர் ஒருவித லாகிரி டைப் எழுத்தாளர். நிறைய உருவகங்கள் கதையில் இருக்கும். திருக்குறல் கூட ஒருமுறை சாடப்படும். பெண்களின் சில பெர்சனாலான பார்வைகள், ஆண்களை அவர்கள் அணுகும் விதம் …எனக்கு புதுசு. I am sure,  எங்கள் சமூகத்தில் எண்பது வயது தாத்தாவுக்கும் புதுசு. ஏனென்றால் அதை அறியும் ஆர்வம் எங்களுக்கு எப்போதுமே ஏற்பட்டதில்லை. Why should we care? என்ற எண்ணம் தான். “லேடிஸ் கூ” வாசிப்பது முக்கியம். வெறுமனே பெண்களை அறிந்துகொள்ள மட்டுமில்லாமல், ஆண்கள் தங்கள் வாழ்க்கையில் வரும் தேவையில்லாத சிக்கல்களை தவிர்க்க இந்த நாவல் ஒரு பால பாடம்! திருமணம் முடித்தவர்கள், பெண் மனது புரியும் என்று நினைக்கும் ஐன்ஸ்டீன்கள் .. போய் இதை ஒருமுறை வாசியுங்கள்! அட்லீஸ்ட் இன்னமும் புரிவதற்கு  நிறைய இருக்கென்றாவது புரியும்!

41654_100001612310791_4570591_n

மன்மதகுஞ்சு : அவங்கெல்லாம் வாசிக்கிறது இருக்கட்டும் .. என்ன மண்ணுக்கடா நீயி போய் இத வாசிச்ச?

 

ஆதீனம் ஸ்பெஷல்!

nithyananthaaa
“தலைக்காவிரிக்கு ஒரு பெண்ணோடு ஓடிப்போனவர் தானே ஜெயேந்திரர்: மதுரை ஆதீனம் தாக்கு” – செய்தி
மன்மதகுஞ்சு : அடேய் தகப்பா வீ வாண்ட் மோர் எமோர்சன்... இன்னும் கொஞ்சம் அதிகமா எதிர்பார்க்கிறோம்

 

இந்த வார பாடல்

நந்தினி திமிர் பிடித்தவள். விஜயகுமாரின் “ஈகோ பிடிச்ச கழுதை”! சந்திரன் ஒரு subtle இளைஞன். An elusive! கட்டேல போக, சரியான தமிழ் சொல்லு மாட்டுதில்ல. யாழ்ப்பாணத்தமிழில் ஒரு சொறியன் என்று சொல்லலாம்! எதற்கும் சக்திவேல் அண்ணேயிடம் கேட்கவேண்டும்!
A.theeye
இருவரும் சந்தர்ப்ப சூழ்நிலையால் திருமணமாகி ஒரே வீட்டில் வாழ ஆரம்பிக்கிறார்கள். சாதாரண கதை தான். எலியும் பூனையுமாக சண்டை பிடித்து கடைசியில் கவிதையாய் “பூம்” என்று காதலிக்க படம் முடிகிறது. தியேட்டரை விட்டு நாம் வெளியே வந்த பின்னர், இந்த இரண்டும் எப்படி கலியாணம் கட்டி சமாளிக்க போகுதுகள்? என்று யோசிப்பதற்குள் மட்டக்குளி பஸ் வந்துவிட …..
ஏறிவிட்டேன்!
சாதா கதை ராதா மோகன் கை பட, சான்ஸே இல்லாத சினிமாவாக மாறிவிட்டது. வசனங்கள், உருவகங்கள் அபாரம். சினிமாவை புரிந்து எடுப்பவர். நகைச்சுவையாய் முன்னால் வரும் காட்சி ஒன்று திரும்பவும் மிக டச்சிங்காக கிளைமாக்ஸில் வரும். மொழி படத்தில் அந்த மணிச்சத்தம், பல்ப் எரியும் காட்சி பாவிக்கப்பட்டது இல்லையா? இந்த படத்தில் அப்படி “தேவதை”, “பூம்” போன்ற விஷயங்கள். ஒரே வித்தியாசம். முற்பாதியில் கவிதையாய் சொல்லி, கிளைமாக்ஸில் இயல்பாய் பாவித்து … ராதாமோகன் தமிழ் சினிமாவின் எதிர்காலம்!
ரமேஷ் விநாயகம், நம்ம கடம் விக்கு விநாயகத்தின் மகன். அள்ளு கொள்ளையாய் திறமையை வைத்துக்கொண்டு “90களின் வித்தியாசாகராய்” கவனிக்கப்படாமல் இருப்பவர்! கமல் மிஸ் பண்ணாமல் “நள தமயந்தி” சான்ஸ் கொடுக்க “என்ன இது என்ன இது” என்று எம்மை பாடவைத்தவர். “விழிகளின் அருகினில் வானம்”, “கஸ்தூரி மானினமே” என்று பல வைரங்கள். கேட்கும் போது பறவை முனியம்மா முன்னாலே இருந்தால் கூட லவ் பண்ண தோணும்படியான மெலடிகள்! இந்த பாடல் ஒரு படி மேலே போய் அதன் வரிகளிலும் ஸ்கோர் பண்ணுகிறது. கம்பன், புகழேந்தி பாரதிக்கு வகையறாக்களுக்கு கொஞ்சமும் குறைவில்லாத பொருள் நயம்!

அவன் சொல்கிறான். சாதாரண ஆணுக்குள் இருக்கும் எண்ணம்,
Azhagiya_Theeye_300பனிவிழும் பார்வை பரம்பரை நாணம்
தணிந்திடும் கோபம் திருமண ஆசை
பெண்ணில் எல்லாம் இதை பார்த்தேனே
அவள் எண்ணம் அதுவல்ல பாருங்கள்!
இலக்கணம் இல்லா இலக்கியம் நானே
விழிகளுக்கெல்லாம் அதிசயமானேன்
மௌனத்தில் தான் இசை கேட்பேனே
அவன் விடவில்லை, தான் எப்படி பெண்ணை மதிக்கிறான் என்று பாடுகிறான்.
உறவில் கலந்து கருவை சுமந்து
உயிரை படைக்கும் பெண்கள் தெய்வங்களே
அவள் பதில் நச்!
கோவிலும் வேண்டாம் சிறைகளும் வேண்டாம்
பெண்ணை பெண்ணாய் கொஞ்சம் பாருங்களேன்
இந்த பாடலின் முதல் சரணத்தின் சில வரிகள் எனக்கு விளங்கவில்லை. கேட்டுவிட்டு யாராவது விமர்சனம் ட்ரை பண்ணுங்கள்! முழுப்பாடலையும் தந்து டெஸ்ட் மாட்ச் ஆட ஆசை தான்! But வியாழமாற்றம் வெறும் 20-20 தானே

ஹாட் நியூஸ்

விண்ணைத்தாண்டி வருவாயாயவில் கார்த்திக் கடைசி வரைக்கும் ஜெஸ்ஸி ஜெஸ்ஸி என்று புலம்பியத்தில் எனக்கு அடித்தது அதிர்ஷ்டம். சமந்தா இஸ் ஸ்டில் அவைளபில்! அவங்க என்னைய லவ்வு பண்ணினாலும் நாங்களா லெட்டர் கொடுப்பது தானே மருவாதை! ஆனா நமக்கு தான் இந்த காதல், கவிதை, கடிதம் எல்லாம் சரிப்பட்டு வராதே என்று நம்ம ஷாஜகான் மன்மதகுஞ்சுவுக்கு படத்தை அனுப்பி, இந்த பொண்ணை வர்ணிச்சி கவுஜ எழுது, எழுதி வாசிக்கும்போது மறக்காம காதை பொத்திடு என்றேன். ஓகே எப்படிப்பட்ட கவிதை வேணும்னான்? படலைக்கேற்ற மாதிரி தரமாக வேணும்னேன். ஓ அப்படீன்னா பக்கா கூசிழிவா இருக்கோணும், அடிக்கடி கம்பரையும், பின்னவீனத்துவத்தையும் போட்டு ஒப்பேத்தினா யாருமே ஒண்டுமே சொல்ல மாட்டாங்க, அது தானே! என்றான். பயபுள்ளக அலேர்டா தான் இருக்காக. ஜாக்கிரதையா இருக்கணும்.

photo

ஒட்டுகள் கூட இல்லாத அட்டுக்கள் பின்னாலே
பட்டுகள் கொண்டு நெய்யாத சிட்டு நீ முன்னாலே
வெட்டுக்கள் தட்டுக்களின் பட்டமளிப்பு விழாவிலே
கட்டிளங் காளை நான் பாடினேன் ஆரோமலே!
கெளதம் மேனன், கார்த்திக் எல்லாம் கடங்கார பசங்க தான்!
சமீரா ரெட்டி, நயன்தாராவை பாரேன் நீ கேட்டுத்தான்!
வெள்ளைபூச்சு வீட்டுக்கும் அடுப்படி அது கறுப்புத்தான்
கறுப்பான மாமன் இவன் உன் உருப்படிக்கு பொறுப்பு நான்!
ஆ டண்டனக்கா .. டனக்கு டக்கா!
13 comments :

 1. வணக்கம் ஜேகே...
  பொன்சேகா விடுதலை பற்றிய சாதாரண அரசியல் தந்திரம் ஆயினும் சொன்ன விதம் நச்..
  ஜெயமோகனின் அந்த பதிவின் இணைப்பை உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி இருந்தேன்.. கவனித்தீர்களா என்று ஐயம் இருந்தது.. எப்படியோ மேகலா (:)) மூலம் கேள்வி உங்கள் செவியடைந்தல்தில் மகிழ்ச்சி.. அந்த விளக்கமும் அருமை...

  ReplyDelete
 2. This comment has been removed by the author.

  ReplyDelete
 3. ஹ்ம்ம்.. அப்படினா "லேடீஸ் கூ" ல போன வாரம் நா கெட்ட கேள்விக்கு பதில் இருக்குதுங்க்ரிங்க...ரைட்டு...

  பாடல் அலசல் இரசித்தேன்.. அந்த பாடல் கேட்டு நீண்ட நாளாகிவிட்டது...

  @ மன்மதகுஞ்சு : யோவ் too muchஆ போய்கிட்டு இருக்கே.. சமந்தா பாவம்...

  ReplyDelete
 4. எழுத்துக்களால் "Ladies Coupe" வாசிக்க வேணும் என்ற கிக்கை ஏத்திட்டு, கடைசியில மன்மதக்குஞ்சு பன்ச்அ போட்டு நாளைக்கு எவனாச்சும் இப்படி கேட்டிடுவானோ என்று மப்பை இறக்கினதால "Ladies Coupe" வாங்கிற பிளான் கான்சல்.... :P

  பை தி வே சொல்லவும் வேணுமா இந்த முறை வழமையை விட எக்ஸ்ரா ஸ்பெஷல் வியாழ மாற்றம்

  ReplyDelete
 5. அருமையான வாசிப்பு... உங்களது நடை அருமையாக உள்ளது :)

  ReplyDelete
 6. புது டிசைன் வேகமா லோட் ஆகுது - எனக்கு பிடிச்சிருக்கு. ஆனா கடைசியா போட்ட கொமன்ட் எனேபில் பண்ணுங்க.

  ReplyDelete
 7. நன்றி மயிலன் .. உங்கள் கடிதம் சென்ற வாரம் பார்த்தேன் .. சென்ற வாரம் yarl IT Hub, எழுத்தாளர் விழா என்று குரல்வளை திருகப்ப்ட்டு இருந்ததால் பதில் போட முடியவில்லை .. இந்த வாரமும் பத்து மணிக்கு வந்து வியாழமாற்றம் எழுதிய அவசரத்தில் உங்கள் பெயருக்கு பதில் மேகலாவை போட்டுவிட்டேன் .. மன்னிக்க!

  //@ மன்மதகுஞ்சு : யோவ் too muchஆ போய்கிட்டு இருக்கே.. சமந்தா பாவம்...//
  சமந்தா பாவம் என்பதை வன்மையாக கண்டிக்கிறேன்! நம்மை போல ஒரு லவ்வர் கிடைப்பானா?

  ReplyDelete
 8. Think why not?

  //நாளைக்கு எவனாச்சும் இப்படி கேட்டிடுவானோ என்று மப்பை இறக்கினதால "Ladies Coupe" வாங்கிற பிளான் கான்ச//
  அதையேன் வெளில சொல்லுறீங்க .. வாசிச்சிட்டு கம்முன்னு இருங்க பாஸ்!

  //பை தி வே சொல்லவும் வேணுமா இந்த முறை வழமையை விட எக்ஸ்ரா ஸ்பெஷல் வியாழ மாற்றம்//
  எங்கேடா இந்த வாரம் ஊத்திக்கிச்சா என்று பயந்துகொண்டிருந்தன்.. பீரை வார்த்தீங்க!

  ReplyDelete
 9. நன்றி கனகு! தொடர்ந்து வாங்க!

  ReplyDelete
 10. //புது டிசைன் வேகமா லோட் ஆகுது - எனக்கு பிடிச்சிருக்கு. ஆனா கடைசியா போட்ட கொமன்ட் எனேபில் பண்ணுங்க.//

  வாலிபன் .. உங்கட கொமென்ட் வந்த மாதிரி தெரிய இல்ல பாஸ்!

  ReplyDelete
 11. அட நான் அந்த பிளக்-இன் ஐய்ச் சொன்னன்.... உங்க பிளாக்கில கொமேண்டுகளும் களை காட்டுமே அதான்.

  ReplyDelete
 12. அடுத்த வியாழ மாற்றமும் வந்துவிட்டது ..........நேரம் இல்லை என்று சொன்னாலும் அந்த வாங்கு வாங்குவான் விமர்சனம் எழுதிதான் ஆகவேண்டும்

  //புருஷன் இல்லை என்றால் புருஷனை தேடவேண்டுமேயொழிய//
  ஆஹா நல்லாதான் இருக்கு

  facebookஇல் விளம்பரம் இருக்கா .அதை எவன் பார்த்தான்

  // கேக்கிறவன் கேனையா இருந்த எலி ஏரோப்ளேன் ஓட்டுமாம்//
  ஜெயமோகனின் பதிவை வாசித்து சிரிப்பு தான் வருகிறது அனுபவம் உள்ளவர்கள் எழுதுவதற்கும் மற்றவர்களின் கதையை கேட்டு எழுதுவதற்கும் உள்ள வித்தியாசம்

  //அனிதா நாயரின் “லேடீஸ் கூ” வாசிச்சு பாருங்க. அதுவரைக்கு பெண்களை பற்றி எழுதாதீங்க, ப்ளீஸ்!//
  வாசித்து விட்டு வருகிறேன் ஆனால் நீங்கள் அடுத்த கதை தொடங்குங்க

  // யாழ்ப்பாணத்தமிழில் ஒரு சொறியன் என்று சொல்லலாம்! //
  மறந்து விட்டது

  //இந்த பாடலின் முதல் சரணத்தின் சில வரிகள் எனக்கு விளங்கவில்லை. கேட்டுவிட்டு யாராவது விமர்சனம் ட்ரை பண்ணுங்கள்! முழுப்பாடலையும் தந்து டெஸ்ட் மாட்ச் ஆட ஆசை தான்! But வியாழமாற்றம் வெறும் 20-20 தானே//

  புரியும் வரை தான் மனதின் மயக்கம் சரியா தவறா என்று ஏங்காதே ........
  தவறே ஒரு நாள் சரியாய் தெரியும்........... Test match எல்லாம் எத்தனை பேர் பார்க்கிறாங்க 20 20 தான்

  //எனக்கு அடித்தது அதிர்ஷ்டம். சமந்தா இஸ் ஸ்டில் அவைளபில்! அவங்க என்னைய லவ்வு பண்ணினாலும் ..........
  அடிச்ச காத்தில காதில வச்ச பூ கூட பறந்திட்டுதப்பா .....பயபுள்ளக ரொம்ப தான் ........

  ReplyDelete
 13. வாங்க கீதா ..

  // Test match எல்லாம் எத்தனை பேர் பார்க்கிறாங்க 20 20 தான் //
  ஆனாலும் இந்த வாரம் ♫♫ உ.. ஊ.. ம ப த ப மா ♪♪ பொட்டிட்டோம்ல!

  //அடிச்ச காத்தில காதில வச்ச பூ கூட பறந்திட்டுதப்பா .....பயபுள்ளக ரொம்ப தான் ........ //

  வர வர கமெண்ட் கவிதையா வருதே கீதா .. நாமளும் ஒரு பதிவை ஆரம்பிக்கலாமே?

  நன்றி .. அழகாக வாசித்து விமர்சனம் பண்ணியமைக்கு!

  ReplyDelete