டேய் ஜேகே

வவுனியா
கலைஞரின் பிறந்தநாள் விழாவில் யாரோ குஷ்புவின் இடுப்பை கிள்ளி விட்டார்களாமே? ஒரே குழப்பமா இருக்கு பாஸ்! வேணும்னா லைன்ல எல்லாரையும் கிள்ளவிட்டு யாருன்னு கண்டுபிடிக்கலாமா?
இவ்வளவு கலைநயமான மாட்டரை செய்தவர் நிச்சயம் ஒரு “கலைஞரா” தான் இருப்பாரு பாஸ்!நம்ம கலைஞர் தான் பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டுவாரே! இம்முறை ஆட்டுக்கல்லு ஆப்பிட்டாப்ல!
சர்வாதிகாரிகள்! நினைத்தது நடப்பதற்காக என்னவென்றாலும் செய்பவர்கள். சாம தான பேத தண்ட தகிடுத்தனங்கள் எல்லாமே யூஸ் பண்ணி... சாத்தியப்படாத எல்லைகளை வகுத்து அதை அடைவதற்காக அல்லும் பகலும் உழைப்பார்கள். ஹிட்லர் அதற்கு “triumph of the will” என்பார். ஸ்டீவ்
ஜாப்ஸ் பேசுவதை “reality distortion field” என்பார்கள். முன்னால் இருப்பவர்களை மயக்கும் பேச்சு அது. நாஸிக்களும் ஆப்பிள் நிறுவனமும் கிட்டத்தட்ட ஒரே வகையானவை. தலைவர் சொல்லுக்கு மறுபேச்சு இல்லை. ஜனநாயகம் கிலோ என்னவிலை? மற்றையவர்களின் பலவீனத்தை சுட்டிக்காட்டியே தம் எண்ணங்களை சந்தைப்படுத்துபவர்கள். ஹிட்லருக்கு ஜுதர்கள் என்றால் ஸ்டீவுக்கு அடோப், அன்ரோயிட், மைக்ரோசாப்ட். வெறுப்பென்றால் அப்படியொரு வெறுப்பு!

கொஞ்சம் பெர்சனலாக போனால் ஹிட்லர் இளம்வயதில் அப்பாவை இழந்தபோது அம்மாவுக்கு பதின்ம வயது. வேலையில்லாமல் அங்கேயும் இங்கேயும் அலைந்தார். ஸ்டீவ் ஜாப்ஸின் பெற்றோர் பிறந்தவுடனேயே அவரை தத்துக்கொடுத்துவிட, அவரும் இள வயதில் திக்கின்றி திரிந்தார். அந்தக்காலத்து ஹிப்பி. இந்தியாவுக்கு கூட சென்று என்லைட்மென்ட் தேடி .. குளிக்காமல் திரிந்து . இருவருமே தமது முதல் குழந்தையை தங்களுடையது என்று முதலில் ஏற்றுக்கொள்ளவில்லை. மரக்கறி தான் சாப்பிடுவார்கள். புற்றுநோய் வந்தபின் ஸ்டீவ் மீனை கொஞ்சம் ட்ரை பண்ணினார்!

இருவருமே ஐம்பத்தாறு வயசில் இறந்தார்கள்!
ஒரு சர்வாதிகாரியின் நோக்கம் தவறும்போது எவ்வளவு கொடுமைகள் விளையும் என்பதும், நன்மை பயக்கும் பட்சத்தில் எவ்வளவு முன்னேற்றம் என்பதற்கும் இருவரும் சிறந்த உதாரணங்கள்!
துன்பியல் சம்பவம்! சுஜாதாவின் இடத்தை பிடித்திருக்கக்கூடிய திறமை(இருவரும் ஸ்ரீரங்கத்துகாரர்கள், ஏதாவது கட்டுத்தறி மாட்டரோ?). சுஜாதாவின் தேடல் இருந்தாலும் கிரியேட்டிவிட்டி மதனிடம் கொஞ்சம் மிஸ்ஸிங். சுவாரசியமாக பொது விஷயங்களை தருவதில் கில்லாடி. ஆனந்தவிகடனுக்கும் குமுதத்துக்கும் உள்ள ஒரே வித்தியாசம் என்னவென்று கேட்டால் இந்த ஹாய் மதன் தான்! இப்போது அதுவும் இல்லை! விலக்குவதற்கு சொன்ன காரணம் படு மொக்கை. நடுவுநிலைமை இல்லையாம்! என்றைக்கு எந்த பத்திரிக்கை நடுவுநிலைமையோடு இருந்திருக்கிறது? பப்ளிக் சென்டிமெண்ட்டுக்கு மாறாக ஜல்லிக்கட்டுவை எதிர்த்து பத்தி எழுதினீர்கள் என்று தானே ஞானி உங்களையும் தூக்கினார்கள்! நடுவு நிலைமை அங்கேயே ரிப்பேர் பாஸ்!
எனக்கென்ன கவலைன்னா, ஹாய் மதனும் நின்றுவிட்டதால, தக்காளி “டேய் ஜேகே” க்கு எதிர்பார்ப்பு எகிறப்போகுதல்லோ!

கூகிள்
Facebook பங்குகள் இறங்கியது சம்பந்தமாக ஏதும் புதுத்தகவல்கள்? Facebook இதை எப்படி எதிர்கொள்ளப்போகிறது?
Facebook பங்குகள் தேனிலவு முடிந்த தம்பதியர் வாழ்க்கை போல கட கடவென்று சரிந்ததுக்கு, அதற்கென்று நிலையான ஒரு வருமான மொடல் இல்லை என்று பேசியிருந்தோம் இல்லையா? Facebook விளம்பரங்களை நாங்கள் ஏன் கணக்கெடுப்பதில்லை என்ற உளவியல் விளக்கமும் டிஸ்கஸ் பண்ணினோம். கீதா உட்பட்ட 80% பாவனையாளர்களுக்கு இந்த விளம்பர மாட்டரே தெரியாது!
இப்போது facebook புதிய வியாபார யுக்தியை கையாளபோகிறது. “Pay-For-Promotion” என்று அழைக்கபடும், உங்கள் ஸ்டேடஸ், நீங்கள் ஷேர் பண்ணும் விஷயங்கள் எப்போதுமே மற்றவர்கள் பார்வையில் படுமாறு டைம்லைனில் இருக்கவேண்டும் என்று நினைத்தால் அதற்கென்று பிரத்தியேகமாக நீங்கள் பணம் கட்டலாம். அதற்கு “Announce” என்று பெயர் வைத்திருக்கிறது. உதாரணமாக நான் பணம் கொடுத்தால், வியாழ மாற்ற பதிவின் லிங்க் எப்போதுமே உங்கள் Facebook Wall இல் முதலில் இருக்குமாறு ஏற்பாடு செய்யலாம்! அதனால் எனக்கு ஹிட்ஸ் அதிகரிக்கும். என்னை விடுங்கள், ஒரு பைசா தேறாது. ஆனால் வியாபார நிறுவனங்கள் இதன் மூலம் அதிகமான வரவுகளை சம்பாதிக்கலாம். ஆயிரம் பேர் வந்தால் அதில் ஐந்து பேராவது இளிச்சவாயனாக அந்த கம்பனி பொருட்களை வாங்குவான் இல்லையா? கூடிய சீக்கிரம் பில்லியன் பயனாளர்களை எட்டபோகும் Facebook இற்கு இது ஓரளவுக்கு பயன்தரக்கூடிய feature தான். பவர்ஸ்டார்கள், சுதந்திர போராட்ட வீரர்கள், இலக்கிய போராளிகள், விஞ்ஞானிகள் என்று தம்மைத்தாமே காட்டிக்கொள்ளும் கைப்பிள்ளைகள் நாளொரு வண்ணமும் பொழுதொருமேனியுமாக வளர்வதை பார்த்தால், இந்த Announce feature பில்லியன் பில்லியனாய் உழைத்துக்கொட்டப்போகிறது என்பது மட்டும் நிச்சயம்.
மற்றபடி facebook பத்துவருடங்களில் காணாமல் போய்விடும் என்ற விஷயம் … Facebook என்றால் என்ன, படலை என்றால் என்ன, தேங்கினால் அது காணாமல் தான் போகும்! புதுப்பித்துக்கொண்டே இருக்கவேண்டும்.. இதைத்தான் நாளைய அமெரிக்க ஜனாதிபதி விஜய் “நதி போல ஓடிக்கொண்டிரு” என்று அட்வைசினார்!
நடராஜா அஜீத்,
நடைபாதை!
நடனத்தில் என்னுடைய வாரிசு என்று யாரை சொல்லுவீர்கள்?
நடைபாதை!
நடனத்தில் என்னுடைய வாரிசு என்று யாரை சொல்லுவீர்கள்?
வேற யாரு? நம்ம சனத் ஜெயசூர்யா தான்! நம்பிக்கை இல்லையா? இந்த வீடியோவை பாருங்கள்! அதுவும் அந்த கடைசி ஸ்டெப் இருக்கே பாஸ் …. கடவுளா பார்த்து மைக்கல் ஜாக்சனை முதலிலேயே அனுப்பி வச்சிட்டான்!
இலக்கிய சந்திப்பு
இந்த வாரம் இரண்டு சுவையான சம்பவங்கள். வாலிபன் இலக்கிய ஆர்வம் கொண்ட இளைஞர்களை(டேய் டேய் டேய்…) திரட்டி “ஃ - தமிழரின் புதிய ஆயுதம்” என்ற ஒரு இயக்கம்(!) ஆரம்பித்திருக்கிறான். ஓரளவுக்கு தரமானது என்று நினைக்கும் படைப்புகளை இங்கே வைத்து கும்ம போகிறார்கள் போல் தெரிகிறது. சும்மாவே கொஞ்சம் புரியாத பதிவாக எழுதினால் வாலிபன் அவற்றை இலக்கிய நண்பர்களுடன் பகிர்ந்து கும்முவான். இப்போது சலங்கையை வேறு கட்டியாச்சு! ஆரம்பத்தில் என் பதிவையும் அப்புறம் லோஷனையும் அறிமுகப்படுத்தினார்கள். நான்கு லைக்குகள்! கல்லு நகரவில்லை. நேற்றைக்கு லோஷனுக்கு பிறந்தநாள் விழா கொண்டாடினார்கள். நானும் லைக்கினேன்! இன்றைக்கு “மட்டக்களப்பில் காதல் தோல்வியால் இளம் ஜோடி ஒன்று தற்கொலை” பற்றிய ஒரு இலக்கிய பதிவு! கணையாழி எல்லாம் புரட்டிப்பார்த்தும் இதை எப்படி விமர்சிப்பது என்று தெரியவில்லை! இதன் வெற்றி, இங்கே தரப்படும் படைப்புகளின் தரத்திலும், மட்டுறுத்தலிளும் தங்கியிருக்கிறது. பார்ப்போம்.
மணிமேகலை அக்கா இரண்டு வாரங்களுக்கு முன் நான் ஒபிசில் ஏதோ ஒரு அல்கோவோடு அல்லுப்பட்டுக்கொண்டிருக்கும் போது கோல் பண்ணினார். ஹாய் கூட சொல்லாமல் “தம்பி நீ சிட்னி வருகிறாய்” என்றார்! கவிஞர் கேதாவை விட்டுவிட்டு என்னை மட்டும் அழைத்தால் தமிழ் கூறும் நல்லுலகம் செருப்பால் அடிக்கும் என்றேன். விளைவு, நானும் கேதாவும் இந்த வாரம் சிட்னியில் பேசுகிறோம். நான் சிறுகதைகள் சம்பந்தமாக உளருவதாக இருக்கிறேன். கேதா கவிதைகள் பற்றி! தலைப்பு? வேறொன்றுமில்லை, ஜீவ நதி சஞ்சிகையை அடிப்படையாக வைத்து சிறுகதை கவிதைகளின் போக்கு எப்படி, அதை எந்த பாதையில் கொண்டுபோகலாம் என்ற ஒரு உரையாடல் அரங்கு. சிலவேளைகளில் மாட்டை மரத்தில் கட்டிவிட்டு மரத்தின் வரலாறு பேசும் ஐடியாவும் இருக்கிறது! சிறுகதை பற்றிய என்னுடயை பார்வை கொஞ்சம் விவகாரமானதால் சுவாரசியமான புழுதி கிளம்பலாம். கிளப்பலாம்!
அமைப்புக்கு என்ன பெயர் வைக்கலாம் என்றார்கள். நோக்கத்தை கேட்டேன். இலக்கியத்தில் உயர்தர ரசனையை மேம்படுத்துவது என்று குண்டை தூக்கிபோட, உடனேயே “உயர்திணை” என்று ஒரு சொல்லு தட்டுப்பட, அது எல்லோருக்கும் பிடித்துவிட … “உயர்திணை அமைப்பின் இலக்கிய ஒன்றுகூடலுக்கு அன்புடன் அழைக்கிறோம்”

பாஸ் .. அவனவன் கார் ரென்ட் பண்ணி பத்து மணி நேரம் டிரைவ் பண்ணி கூட்டத்துக்கு போறான். சிட்னியிலேயே இருந்துகொண்டு சீண்டாமல் போனால் வெயிட் .. கருட புராணம் ரெபரன்ஸ் ப்ளீஸ்!
கண்ணன் அருணாசலம்
அவரவர் தமக்கு தெரிந்த துறையினூடாக சமூகத்துக்கு என்ன செய்யமுடியுமோ அதை செய்யவேண்டும். நீ சாப்ட்வேர் என்ஜினியர் என்றால் அதன் மூலம் என்ன செய்யலாம் என்று யோசித்து செய். எழுதுவாயா? அதில் ஏதாவது உருப்படியாக .. கண்ணன் இந்த ரகம்! பிரிட்டன் ரிட்டர்ன்! தமிழ் அவ்வளவாக தெரியாத … தமிழன்!

எழுதாதே .. மஞ்சள் வானம் .. தென்றல் சாட்சி!
வாலிபன் என்னை “Midnight In Paris” பார்க்கசொல்லி எப்போதோ சொன்னான். சென்றவாரம் நிவேரன் டோரேன்சில் சுட்டு தர .. மழைக்கால மெல்பேர்ன் அழகாய் தெரிய ஆரம்பித்தது!
கில், எழுத்தாளன், தன்னுடைய முதல் நாவலை முடிப்பதற்கு தடுமாறிக்கொண்டு இருக்கிறான். அவனும் காதலியும்(fiancée) பாரிஸ் போகிறார்கள். கில்லுக்கு பாரிஸ் பிடித்துவிட்டது. அதுவும் மழை நேரத்து பாரிஸ்! ஒரு நாள் இரவு மப்பில், மந்தாரமான பாரிஸ் முழுதும் அலைந்து திரிந்து கடைசியில் ஒரு புறநகர் பகுதியை அடைகிறான். அப்போது ஒரு பழங்கால கார் ஒன்று அவனை ஏற்றிக்கொண்டு ஒரு பாருக்கு போகிறது. From this moment!
அந்த பாரில் எல்லோருமே 1920களில் கோலோச்சிய இலக்கிய கர்த்தாக்கள். எர்னெஸ்ட் ஹெமிங்வே மட்டுமே எனக்கு தெரிந்தவர். அவர் மூலம் ஒரு இலக்கிய விமர்சகர்.. பிக்காசோ போன்றவர்களை கில் சந்திக்கிறான். ill tempered ஆன பிக்காசோவின் மனைவி அட்ரியானா மீது கில்லுக்கு காதல். அவளுக்கும் தான். அப்புறம் நிஜம் நிழல் குழப்பம், இவன் போலவே அவளுக்கும் அவள் நிஜம் பற்றிய குழப்பம், கில்லின் உண்மையான(?) காதலியின் துரோகம்.. அதை ஹெமிங்வே கண்டுபிடிப்பது ... அப்படி இப்படி என்று படம் முடியும் போது நள்ளிரவு! மெல்பேர்ன் குளிரில் நடுங்கிக்கொண்டு முச்சந்தியில் நிப்போமா என்று கூட யோசிக்கவைக்கும் திரைக்கதை. சென்ற டிசெம்பரில் நண்பர்களுடன் கிப்ஸ்லாண்ட் மலைச்சாரலுக்கு காம்ப் அடிக்கப்போன போது தான் பக்கத்தில் ஹெமிங்வே இல்லாத ஏக்கம். புத்தகங்கள் சிலவேளைகளில் எதிரியாகிவிடுவதுமுண்டு! அட .. படத்தை பற்றி பேசுவோம் .. ஒரே வார்த்தை .. “அருமை”. பார்த்து பிடிக்காவிட்டால் சொல்லுங்கள். ஆளுக்கு நூறு டொலர் மணியோர்டர் அனுப்புகிறேன்! காசா பணமா!
வாலிபனுடன் பேசும்போது இந்த knot ஐ எடுத்து அழகாக தமிழில் எழுதலாம் என்றேன். அவனும் கேதாவும் ஏற்கனவே பிளான் பண்ணியிருந்திருக்கிறார்கள் போல. எப்படி எழுதலாம்? ஸ்கெட்ச் போட்டு பார்ப்போமா?
தமிழிலக்கியத்தில் ஆங்கிலேயர் அடிமைக்காலம் அப்புறம் திராவிட போராட்டம் என்று ஒரு அழகான இலக்கிய மறுமலர்ச்சி நாற்பது .. ஐம்பதுகளில் நடந்தது அல்லவா? அந்தக்காலத்துக்கு போய் பாரதி, புதுமைப்பித்தன் என்று சீண்டலாம். கொஞ்சம் முன்னே வந்து சுஜாதாவை கூட அழைக்கலாம். ஆனால் அது very close to present. திரில் இல்லை. மெனக்கெட்டு சங்ககாலம் போனால் அடித்து ஆடலாம். அதிலும் கடைச்சங்கம் தான் பெஸ்ட். வள்ளுவர் இருக்கிறார். விமர்சகராய் நக்கீரன்!வரலாற்றில் மூன்று ஔவையார் காலம் இருக்கிறது என்பார்கள். Era லாஜிக் பார்க்கவேண்டாம் என்றால் கம்பர், ஒட்டக்கூத்தர் கூட சேர்த்து கதகளியே ஆடலாம்.
எண்ணா யிரத்தாண்டு நீரிற் கிடந்தாலும்
உண்ணீரம் பற்றாக் கிடையேபோல் – பெண்ணாவாய்
பொற்றொடி மாதர் புணர்முலைமேற் சாகாரை
எற்றோமற் றெற்றோமற் றெற்று.
என்று காதலனை பிரிந்து பிரிவுத்துயர் எய்யும் இளமையான ஒளவை பாட்டை அவளின் காதலுக்கே பயன்படுத்தலாம். தற்கால எழுத்தாளர் ஒருவர், அதென்ன ஒருவர்? சாட்சாத் நானே! protagonist ஆக மாறி, இளமைகால ஒளவைக்கு காதல் கொண்டுவந்து, அவள் கடைசி மட்டும் ஏன் தனித்தே இருந்தாள் என்று காரணம் கற்பித்து … கடைச்சங்கத்துக்கும் கந்தர்மடச்சந்திக்கும் லிங்க் ஏற்படுத்தி .. மிக அழகாக ஒரு சிறுகதை,
எழுதலாம் … துறு துறுவென்று இருக்கிறது … எழுதவா?
இந்த வார பாடல்
சுட்ட பழம் எது சுடாத பழம் எது என்று கூட தெரியாத அளவுக்கு உருவும் நம்ம ஊர் இசையமைப்பாளர்கள் கண்களில் சிலவேளைகளில் மிக அருமையான ஆங்கில மேலடிகள் டிமிக்கி விடுவதுண்டு. அப்படியான ஒரு பாட்டு தான் இன்று! பாடலில் வரும் வயலினுக்காக .. சொத்தை எழுதி கொடுத்துவிட்டு நடுத்தெருவில் கூட நிற்கலாம்.
அந்த வயலின் இருக்கிறதே. உயர் சுரத்தில் கிறு கிறுவென்று ஓடித்திரியும் ஒரு அதிசய பீஸ். தன் பாட்டுக்கு பின்னாலே பல விளையாட்டுகள், ஐபொடில் .. பக்கத்தில் பெண்கள் யாரும் இருந்தால் வாயில் பிளாஸ்திரி ஒட்டிவிட்டு, அமைதியாக கேட்டுப்பாருங்கள். விசுக் என்று அடிவயிற்றில் இருந்து ஈரல், சதயம், இதயம் எல்லாம் தாண்டி மூளைக்கு மாறி மாறி ஓடித்திரியும். ஒருவகை காதல் போல. காதலித்திருக்கிறேன்!
ஷானியா ட்வைனை பற்றி ஏற்கனவே “Notting Hill” பாட்டு மூலம் ஜொள்ளு விட்டிருக்கிறேன். அருமையான குரல் கொண்ட மிகத்திறமையான பாடகி. ஐந்து தடவை கிராம்மி வாங்கியவர். கொம்போஸர். சமகாலத்து mainstream பாடகிகளான மரியா கிரே, செலியன் டியோன் வரிசையில் வரக்கூடியவர். பொப் பாடல்களிலும் ஒருவித country இசையோடு சாஸ்திரிய வயலின் செல்லோ எல்லாம் கலந்தடிக்கும் fusion கம்போஸர். தேடித்தேடி இசைகேட்பவர்கள் ஷானியாவை தவறவிட்டுவிடாதீர்கள். அதிலும் அவரின் From This Moment .. ஐயோடா!
கேட்டுக்கொண்டிருக்கும் போது தேவையே இல்லாமல் கார்த்திக்ராஜா ஞாபகம் வந்தது. இளைய இசையமைப்பாளர்களில் உயர் சுரங்களில் வயலினை ஓட விடும் இசையமைப்பாளர் இவர். குறிப்பாக டும் டும் டும் படத்தின் பாடல்கள். ரகசியமாய் பாட்டை தெரிந்திருக்கும் தானே. ஆனால் “அத்தான் வருவாக” பாட்டில் கூட இதை அழகாக பாவித்திருப்பார்! ப்ச்ச் … ராஜாவின் உண்மையான வாரிசு .. கிளிக்காக முடியவில்லை!
மன்மதகுஞ்சு ஸ்பெஷல்
இந்த வாரம் அனுப்பிய படம். இந்தக்கடையில் தான் மன்மதகுஞ்சு அவ்வப்போது பாத்திரம், அடுப்பு இத்யாதி இத்யாதி எல்லாம் வாடகைக்கு எடுப்பானாம்.எடுத்தபோது கிளிக்கிய படம்!

மாடி மனை வீடு தானா சந்தோஷம் எனக்கு?
நீ மூணு மொழம் பூ கொடுத்தா முந்தான ஒனக்குவாலு போச்சு கத்தி வந்தது பழங்கதை இருக்கு அடி
வசதி வந்தது வாழ்க்கை போனது நம்மோட கணக்குஇருவர்க்கும் ஒரு தலையணை உறக்கம் வராதா?
இருக்கட்டும் இவனுக்கும் அந்த நெனப்பு வராதா?ரெக்கை கட்டிப் பறக்குதடி அண்ணாமலை சைக்கிள்
ஆசைப்பட்டு ஏறிக்கோடி ஐயாவோட பைக்கில்

// ஹாய் மதனும் நின்றுவிட்டதால, தக்காளி “டேய் ஜேகே” க்கு எதிர்பார்ப்பு எகிறபோகுதல்லோ! //
ReplyDeleteநிச்சயமாக அவரை மாதிரி கேள்வி பதிலை மட்டும் போட்டு பதிவை தந்தால்
மற்றைய விடயங்களை தனிப் பதிவாக தந்தால் உண்மையாகவே பிரயோசனம் ஒரு முழுப் பதிவை படித்த திருப்தி இரு சாராருக்கும் ஏற்படும்
ReplyDeleteஇந்த கிழமை வியாழ மாற்றம் வழமைய விட அட்டகாசம்! வியாழன் உச்சத்தில நிக்குது எண்டுறது இத தானோ?
ReplyDeleteகடைச்சங்கத்துக்கும் கந்தர்மடச்சந்திக்கும் லிங்க் ஏற்படுத்தி .. ஹா ஹா ஹா...ரசித்தேன்..விரைவில் அந்தச் சிறுகதையை எதிர்பார்க்கிறேன்!
ReplyDeleteதலைவரே கொன்னுட்டீங்க போங்க...
ReplyDeleteஎழுதாதே...மஞ்சள் வானம் தென்றல் சாட்சி பகுதி...நின்றுவிட்டேன்...
அட்டகாசம்... சீக்கிரம் ஆரம்பிங்க...
விஜயை கலாய்த்த மரு வரியிலேயே அஜீத்தையும் கலாய்த்த ஜேகே நடுநிலைவாதி என்று பஞ்சாயத்தில் அறிவிக்க படுகிறது...
ReplyDeleteசுஜாதா அளவிற்கு மதனை ஒப்பிட்டது கொஞ்சம் ஒப்புக்கொள்ள இயலவில்லை.. ஹாய் மதனை சமீப காலமாக வாசிக்கிறீர்களா என்று தெரியவில்லை.. ஒரு stereotypic feeling வந்துவிட்டது.. கேள்வியை படித்ததும் இன்ன விதத்தில்தான் பதில் இருக்கும் என்று நாம் எளிதில் ஊகித்து விடலாம்...ஓ பக்கங்கள் நீக்கப்பட்டபோது இருந்த தாக்கம்கூட ஹாய் மதன் நீக்கத்தில் இல்லை...
இப்போதும் இன்றும் வியாழ கிழமை ஆனதும் முதல் ஆளாய் விகடன் வாங்கத்தான் செய்கிறேன்... மிகை என்று நினைத்தாலும் பரவா இல்லை... இப்போதெல்லாம் வியாழ கிழமை மாலைக்குள் கிட்டத்தட்ட விகடனை பாதி கடக்கும் முன்பே "வியாழமாற்றம்" வெளியிட்டு விட்டீர்களா என்று மூன்று நான்கு முறையாவது உங்கள் பக்கத்திற்கு வந்து செல்கிறேன்...
மதன் மிகத் திறமையானவர், ஆனால் அவர் திறமை cartoon வரைவதில். "ஹாய் மதன்" இல் ஏதோ ஒன்று missing. சுஜாதாவுடன் அவரை ஒப்பிடமுடியாது (மயிலன் வாழ்க).
ReplyDeleteShania Twain வயலில் 'தக்காளி' பொஸ். தேடிக் கேட்கவும் L.Subramanian. ஆரம்பமாக "Distance Visions" Track 03, பிறகு Track 02, பிறகு தனிமையில் இருக்கும்போது Track 01.
>பாஸ் .. அவனவன் கார் ரென்ட் பண்ணி பத்து மணி நேரம் டிரைவ் பண்ணி கூட்டத்துக்கு போறான். சிட்னியிலேயே இருந்துகொண்டு சீண்டாமல் போனால் வெயிட் .. கருட புராணம் ரெபரன்ஸ் ப்ளீஸ்!
ReplyDeleteகுத்து வெட்டோ? சே, இருக்காதே. ஆனாப் பாருங்கோ சிட்னிவாசிகளுக்கே மெல்பனிலிருந்துதான் தகவல் கிடைக்குது.
கண்ணன் அருணாசலம் அமெரிக்கன் ரிட்டர்ன் அல்ல. இங்கிலாந்து ரிட்டர்ன்..
ReplyDeleteகலைஞரின் பிறந்தநாள் விழாவில் யாரோ குஷ்புவின் இடுப்பை கிள்ளி விட்டார்களாமே? ஒரே குழப்பமா இருக்கு பாஸ்! வேணும்னா லைன்ல எல்லாரையும் கிள்ளவிட்டு யாருன்னு கண்டுபிடிக்கலாமா?
ReplyDeleteவண்டு முருகன் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு இந்த குற்றத்தை விசாரிக்க வேண்டுகிறேன் ; தமிழக அரசுக்கு கருணாநிதி கடிதம் மூலம் வேண்டுகோள் .
//கடைச்சங்கத்துக்கும் கந்தர்மடச்சந்திக்கும் லிங்க் ஏற்படுத்தி .. மிக அழகாக ஒரு சிறுகதை//
ReplyDeleteசெமையா இருக்கே... தாக்குங்க பாஸ்! :-)
//சுஜாதாவின் இடத்தை பிடித்திருக்கக்கூடிய திறமை//
ReplyDeleteகேள்வி பதில்களில்....தான் தேடியவற்றை வாசகனோடு பகிர்ந்துகொள்வதில் மட்டும்!.... இல்லையா பாஸ்?
//நேற்றைக்கு லோஷனுக்கு பிறந்தநாள் விழா கொண்டாடினார்கள். நானும் லைக்கினேன்! இன்றைக்கு “மட்டக்களப்பில் காதல் தோல்வியால் இளம் ஜோடி ஒன்று தற்கொலை” பற்றிய ஒரு இலக்கிய பதிவு! கணையாழி எல்லாம் புரட்டிப்பார்த்தும் இதை எப்படி விமர்சிப்பது என்று தெரியவில்லை!//
ReplyDeleteசுஜாதா ஸ்டைல்ல...அதிலும் சுஜாதாவையே துணைக்கு வச்சுட்டு.... கிளாஸ் தல! :-) :-) :-)
//கண்ணன் அருணாசலம்// தெரிந்துகொண்டேன்! நன்றி பாஸ்!
ReplyDeleteஇம்முறை ஆட்டுக்கல்லு ஆப்பிட்டாப்ல!
ReplyDeleteசுந்தர் என்ன பண்ணிட்டிருக்கா
//ஒரு சர்வாதிகாரியின் நோக்கம் தவறும்போது எவ்வளவு கொடுமைகள் விளையும் என்பதும், நன்மை பயக்கும் பட்சத்தில் எவ்வளவு முன்னேற்றம் என்பதற்கும் இருவரும் சிறந்த உதாரணங்கள்!//
வித்தியாசமான சிந்தனை நன்றாக இருக்கிறது
//எனக்கென்ன கவலைன்னா, ஹாய் மதனும் நின்றுவிட்டதால, தக்காளி “டேய் ஜேகே” க்கு எதிர்பார்ப்பு எகிறப்போகுதல்லோ!//
ஏன் கவலைப்பட வேண்டும் நம்மளுக்கு ஜாலி தான்
// 80% பாவனையாளர்களுக்கு இந்த விளம்பர மாட்டரே தெரியாது!//
மஜோரிட்டி எகிறுது பாஸ் அப்ப நாம மட்டும் இல்லை கூட்டமே இருக்கு என்றீங்க
//கடவுளா பார்த்து மைக்கல் ஜாக்சனை முதலிலேயே அனுப்பி வச்சிட்டான்!//
அதுதானே.....பார்த்து அஜித் டீம் கொடி தூக்கப்போகிறார்கள்
//… கடைச்சங்கத்துக்கும் கந்தர்மடச்சந்திக்கும் லிங்க் ஏற்படுத்தி .. மிக அழகாக ஒரு சிறுகதை,//
அட நம்ம ஏரியா தொடங்குங்க பாஸ்
// இந்தக்கடையில் தான் மன்மதகுஞ்சு அவ்வப்போது பாத்திரம், அடுப்பு இத்யாதி இத்யாதி எல்லாம் வாடகைக்கு எடுப்பானாம்.//
போயும் போய் லேடீஸ் பைக் தான் கிடைத்ததா
@நன்றி சுகுமாரன் .. வியாழ மாற்றத்தை துண்டு துண்டாக பதிந்தால் வாசிப்பு அனுபவம் மிஸ்ஸாகிவிடும் என்பது என்னுடைய தாழ்மையான எண்ணம். எல்லாமே குழைத்து சாப்பிடும்போது தான் அது கல்யாண சாப்பாடு!
ReplyDeleteநன்றி முன்பனிக்காலம் ... அதான் சொல்லீட்டீங்களே .. ட்ரை பண்ணீட்டா போச்சு!
ReplyDeleteநன்றி மயிலன்!
ReplyDelete//விஜயை கலாய்த்த மரு வரியிலேயே அஜீத்தையும் கலாய்த்த ஜேகே நடுநிலைவாதி என்று பஞ்சாயத்தில் அறிவிக்க படுகிறது...//
இந்த டகால்டி எல்லாம் வேணாம் .. நடுவுநிலைமைக்கு இது என்ன நடுவர்மன்றமா? அடிப்படையில் நான் விஜய் ரசிகன் தான். அஜீத்தும் பிடிக்கும். என்ன ஒன்று இருவரும் இப்போது படங்கள் நடிப்பதை குறைத்துவிட்டு ஆன்மீகத்தில் ஈடுபடுவது தான் பிடிக்கவில்லை. விஜய் கடந்த பத்து வருடங்களில் கில்லி, வசீகரா, சச்சின் .. நண்பன் ... அஜீத்? கண்டுகொண்டேன் கண்டுகொண்டேனுக்கு பிறகு எது? முகவரியா?
//சுஜாதா அளவிற்கு மதனை ஒப்பிட்டது கொஞ்சம் ஒப்புக்கொள்ள இயலவில்லை.//
ReplyDeleteஆகா இது பஞ்சாயத்து ஆக போகுதே! இளையராஜாவுக்கு பிறகு டிஎஸ்பி தான் சிறந்த பின்னணி இசை கோர்ப்பவர் என்று கமல் சொல்லவில்லையா .. அது போல! மதனிடம் சுஜாதாவின் சில glimpses இருந்ததை மறுக்கமுடியாது. வந்தார்கள் வென்றார்கள் ... அன்பேசிவம் எல்லாம் நல்ல உதாரணம். ஆனால் அவரிடம் நான் சொன்னது போல கிரியேட்டிவிட்டி கொஞ்சம் கம்மி.. இப்போதெல்லாம் ஆனந்தவிகடன் வாசிக்கும் பழக்கம் குறைந்து நூல்களில் நாட்டம். அம்மா வாரம் தோறும் வாங்குவார். ஏதாவது சுவாரசியம் என்றால் சொல்லுவார்!
// "வியாழமாற்றம்" வெளியிட்டு விட்டீர்களா என்று மூன்று நான்கு முறையாவது உங்கள் பக்கத்திற்கு வந்து செல்கிறேன்//
ஆகா .. நன்றி மயிலன் .. எல்லா புகழும் ஹன்சிகாவுக்கே!
@சக்திவேல் அண்ணா!
ReplyDeleteசுஜாதா விஷயம்! மயிலனுக்கு அளித்த பதில் தான் .
//Shania Twain வயலில் 'தக்காளி' பொஸ். //
ஆகா வீட்டுக்கார அம்மா படலை வாசிக்கமாட்டாங்களா! நீங்க எதை மீன் பண்ணினாலும் நாங்க அத தான் மீன் பண்ணுவோம்!
L.Subramaniyam எனக்கு அறிமுகமானது ஹேராம் மூலம். அவர் தான் முதலில் இசையமைப்பதாக இருந்து அப்புறம் ராஜா வந்தார். கேட்டிருக்கிறேன். அவர் கடல் என்பது சொல்லத்தேவையில்லை. என் பாயிண்ட் என்னவென்றால் பொப் genre இல் இப்படி சாஸ்திரியத்தை புகுத்தும் புத்திசாலித்தனம் ...
சொன்னாப்ல .. என்னுடைய ஐபாடில் இருந்த வெர்சன் வேறு. நான் இங்கே கொடுத்த வீடியோ வேறு. இப்போது திருத்திவிட்டேன். இதில் வயலில் போர்ஷன்ஸ் இன்னமும் அதிகம்!
//குத்து வெட்டோ? சே, இருக்காதே. ஆனாப் பாருங்கோ சிட்னிவாசிகளுக்கே மெல்பனிலிருந்துதான் தகவல் கிடைக்குது.//
ReplyDeleteவாங்க வாங்க வாங்க!
நன்றி @பாலா ..திருத்திவிட்டேன். நேற்றிலிருந்து உங்களோடு சேர்த்து நான்கு பேர் சொல்லிவிட்டார்கள். கண்ணனை தெரிந்த அந்த ஐந்து பேருக்கு என்னையும் தெரிந்திருக்கு .. அட !!
ReplyDeleteவாங்க முருகேசன். என்னுடைய பழைய பதிவுகளை தேடி தேடி வாசித்து கமெண்ட் போடுகிறீர்கள். மிகவும் நன்றி .. தொடர்ந்து .. பாராட்டுங்க .. குட்டுங்க .. வாசியுங்க .. அது போதும்!
ReplyDeleteவாங்க ஜீ!
ReplyDelete//கேள்வி பதில்களில்....தான் தேடியவற்றை வாசகனோடு பகிர்ந்துகொள்வதில் மட்டும்!..//
ஓகே ஓகே உள்குத்து புரியுது பாஸ்!
//சுஜாதா ஸ்டைல்ல...அதிலும் சுஜாதாவையே துணைக்கு வச்சுட்டு.... கிளாஸ் தல!//
அத ஏன் கேட்கிறீங்க .. இன்னிக்கு பாலியல் வல்லுறவு பற்றி கிடக்கு! நமக்கு இந்த இலக்கிய போராளிகள் பற்றி புரியுதே இல்லையப்பா!
வாங்க கீதா
ReplyDelete//சுந்தர் என்ன பண்ணிட்டிருக்கா //
நானே கொஞ்சம் ஓவரா போனாப்ல .. நீங்க ஹைவே பிடிச்சிட்டாப்ல!
//அதுதானே.....பார்த்து அஜித் டீம் கொடி தூக்கப்போகிறார்கள் //
சிவ சிவா .. தல போல வருமா!
//அட நம்ம ஏரியா தொடங்குங்க பாஸ் //
கந்தர்மடமாஆஆஆ?
//போயும் போய் லேடீஸ் பைக் தான் கிடைத்ததா//
பைக் எடுத்தா தான் பரவாயில்லையே .. இவன் பைக்கோடா எக்ஸ்ட்ராவா வேற எடுக்கிறானே!
கண்ணீரில் கதை எழுதாதே ? ஓகே ஓகே
ReplyDeleteஉனக்காகவே நான் வாழ்கிறேன்.
கடைச்சங்கம் - கந்தர்மடம் சாந்தம் அட சீ சந்தம். (எங்கயோ கேட்ட மாதிரி இருக்கே)
நம்மால் கோத்து விடுறதில உங்களுக்கு அப்படி என்ன குசி ? நான் தொடங்கவில்லை ஃ அது ஒரு நண்பன் தொடங்கினது உங்களை இழுத்து விட்டா ஏன் பாஸ்? ஏன் ?
இந்த யானை விடுறது கரடி விடுறது எப்படிப் போகுது வியாபாரம் யாரும் கண்டுக்குற மாதிரி தெரியேல்லை. அதுசெரி சுஜத்தாவா ஹாய்-மதனா எண்டுறது சுந்தரம் ராமசாமிய விட நல்லா விலை போகும் போல. ஆனாலும் ஹாய்-மதன் சுஜாத்தா ஆகியிருப்பார் எண்டுறது கொஞ்சம் ஓவரில்ல ? கமல்ஹாசன் தேவி ஸ்ரீ பிரசாத்தை அடுத்த MSV இளையராஜா என்ட மாதிரி - இந்த ஒபாமாக்கு ஒஸ்கார் குடுக்குறதை நிப்பாட்டுங்க. அது ஒஸ்காரா இல்லை நோபலா ? (இந்தாளுக்கு வாரணம் மூன்றில கொடுத்த ரோதனை காணாது)
ஜெயசூர்யா டான்ஸ் பார்த்தேன். மென்மையான இதயமுள்ளோர் தவிர்ப்பது நல்லது என்று எச்சரிக்கை போட்டிருக்கலாமில்லையா?
ReplyDeleteஆக்கம் நன்றாக உள்ளது. ரெம்ப நீட்டம் என்பது எனது கருத்து. நல்வாழ்த்து.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
"ஹாய் மதன்" பகுதியில் சாதாரண மனிதன் மற்றவரிடம் பணிந்து போவது பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் ஒரு நீண்ட பதில் அளித்திருப்பார். அதை பிரசுரிக்கும் போது அந்தக்கேள்விக்குரிய படமாக ஜெயலலிதாவின் காலில் ஒருவர் விழுந்து வணங்குவது போன்ற படத்தை விகடன் ஆசிரியர் வெளியிட்டிருந்தார்.
ReplyDeleteஅப்போது மதன் "ஜெயா டி.வி"-இல் தான் ஒரு நிகழ்ச்சி செய்வதாகவும் ஆதலால் இந்த படம் பிரசுரிக்கப்பட்டதுக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என வெளியிடுமாறு விகடன் ஆசிரியரைக்கேட்க, அவர்கள் இவரை தங்கள் இதழில் இருந்து நீக்கி விட்டார்கள். இதில் பிழை யாருடையது என்று ஒரு பட்டிமன்ற விவாதமெ நடத்தலாமாயினும் என்னைப்பொருத்தவரையில் மதன் விகடன் ஆசிரியரை அவ்வாறு கேட்டது தவறே!!!
ஒளிப்பதிவில் ஆர்வமும் அபிமானமும் உள்ள எனக்கு கண்ணன் அருணாச்சலத்தைப் பார்க்கும் போது பொறாமையாக இருக்கிறது.... ஆனாலும் இப்பிடி ஒரு திறமையாளனை எனக்கு அறிமுகப்படுத்தியமைக்கு "படலை"-க்கு நன்றி....
-வாமணன்-