பன்னி!
ஈழத்தில் உள்ளவர்கள் பற்றியும் ஈழத்து அரசியல் பற்றியும் வெளிநாட்டில் இருந்துகொண்டு சகட்டு மேனிக்கு எழுதித்தீர்க்கலாம். ஆபத்தில்லை! மிஞ்சி மிஞ்சி போனால் Facebook இல் யாராவது பன்றி என்று திட்டுவார்கள். ஆனால் ஈழத்தில் இருந்தே அப்படி எழுதினால்? டங்குவாறு தான்!
இப்படி திட்டியவன் வேறு யாருமல்ல. ராஜபக்சவின் அருமைத்தம்பி, நாட்டின் அதிசக்தி வாய்ந்த மூவேந்தரில் ஒருவர், பாதுகாப்பு செயலாளர். அண்ணன் கோத்தா! அப்பனும் ஆத்தாளும் சாத்திரம் பார்த்திருப்பாங்க போல! கெட்ட வார்த்தையையே பெயராக வைத்துவிட்டனர்.


இது சம்பந்தமாக Facebook இல் இருக்கும் அனேகமான சிங்கள நண்பர்கள் அடக்கியே வாசிக்கின்றனர். பயம் தான் காரணமா? என்றால் ம்ஹூம் .. எங்கே கோத்தாவை தப்பாக சொன்னால், அது தமிழர்களுக்கு சார்பாக போய்விடுமோ என்ற கீழ்த்தர எண்ணம். மிரட்டும்போது கோத்தா இதையும் சொல்லுகிறார்.
I will put you in jail! You shit journalist trying to split this country – trying to show otherwise from true Sinhala Buddhists!!
பிரெடெரிக்காவுக்கு முன்னர் எடிட்டராக இருந்த லசந்த விக்கிரமதுங்கவை நடுவீதியில் நாயை சுடுவது போல .. ஸாரி பாஸ் .. நடுறோட்டில மனிசரை சுடுவது போலவே சுட்டு போசுக்கினார்கள். எல்லா பெரியவாளும் மிக்ஸர் சாப்பிட்டுக்கொண்டு இருந்தார்கள்! லசந்த தன் படுகொலைக்கு முன்னர் கோடிகாட்டிய பிரபல நாஸிகள் காலத்து வசனம்.
First they came for the communists,
and I didn't speak out because I wasn't a communist.
Then they came for the trade unionists,
and I didn't speak out because I wasn't a trade unionist.
Then they came for the Jews,
and I didn't speak out because I wasn't a Jew.
Then they came for me
and there was no one left to speak out for me.
தமிழர்கள் நாங்கள் சிங்களவர்களுக்கு சொல்லிக்கொள்வது ஒன்றே ஒன்று தான். எங்களுடைய இறந்த காலம் உங்களுக்கு எதிர்காலம். Keep watching.
கொசுறு தகவல். பிரெடெரிக்காவின் தங்கை தான் பெர்னாண்டஸ். ஹிந்தி படங்களில் நடிப்பவர். Murder2 மூலம் பிரபலமானவர்.
துவாய்!
இந்த வாரத்து “கந்தசாமியும் கலக்ஸியும்” அத்தியாயத்தில், துவாய் என்று ஈழத்தில் அழைக்கப்படும் துவாலை பற்றிய குறிப்பு. எங்கே போனாலும், எதை மறந்தாலும் தன் துவாயை ஒருபோதும் மறக்காமல் இருக்கவேண்டும் என்று சொன்னதில் ஆழம் இருக்கிறது. ஈழத்தவருக்கு இதிலே அனுபவம் அதிகம். இடம்பெயர சொன்னால், முதலின் சின்ன சரவச்சட்டி, பானை, அரிசி, பருப்பு .. இது தான் எடுத்து வைப்பார்கள். அடுத்தநாள் மரத்துக்கு கீழே வாழவேண்டி வந்தாலும் சமாளிக்கத்தக்கதாக, இடம்பெயரும் ஆற்றல் எங்களுக்கு இருக்கிறது. ஆனால் வாழ்க்கையில் அதை படித்தோமா என்றால் இல்லை என்றே நினைக்கிறேன். எங்கள் இருப்பை மிக இலகுவாக மறந்து ஆடும் குணம் நான் தினம் காணும் அனேகமானோரில் இருக்கிறது. ஒரு டப்பா காரை வைத்து ஓடிக்கொண்டு திரிகிறாயே? பாக்கிறவன் நீ என்ஜினியர் என்றால் நம்புவானா? என்று தெரிந்தவர்கள் கேட்கும்போது … ஒன்று ஏன் நம்பவேண்டும்? மற்றது .. என்ஜினியர் இல்லாதவன் Ferrari வைத்திருக்கிறான். அப்புறம் ஹெலிகாப்டர் வாங்கு என்றால் என்னிடம் லைசன்ஸ் இல்லை!
I know where my towel is!
இப்படியான் அபத்தங்களை ஆதாரமாக வைத்து தான் டக்லஸ் அடம்ஸ் அந்த நாவல் முழுதும் பின்னியிருப்பார். இவரின் ரசிகர்கள் தனி ரகம். அவரை நினைவு கூறுவதற்காக அவர் மே 25ஐ “Towel Day” என்று பிரகடனப்படுத்தி இருக்கிறார்கள். அவருடைய ரசிகர் யாருடனாவது பேசிப்பாருங்கள். ஏதோ ஒரு எக்ஸ்டாஸி மனநிலையில் துள்ளுவார்கள். அவ்வளவு சுவாரசியமான எழுத்து. “கந்தசாமியும் கலக்ஸியும்” எழுத ஆரம்பிக்கும்போது, வாசிப்பவர்களுக்கு அந்த “Think Different” என்ற விஷயத்தை தூண்டவேண்டும் என்ற ஆரவம் ஒருபுறம். எழுதும்போது நானும் சும்மா தலைகீழா யோசிச்சு என்ஜோய் பண்ணலாம் என்பது மறுபுறம். ஈழத்து எழுத்துகளில் இந்தவகை ஸ்டைல் எடுபடாது என்றார்கள்.
ஒவ்வொரு செவ்வாய் காலையும், வாலிபனும், கேதாவும், வீணாவும் கெளரியும் நல்லது, நொள்ளது, லொஜிக் பிழை கூட சுட்டிக்காட்டும்போது …ஹிட்ஸ் ஐநூறை எட்டுகையில் … அவ்வளவு மோசம் இல்லை என்று ஒரு துளிர்!
நல்லா வருவேடா .. நீயே தொடர்கதை எழுதி, நீயே வெளக்கம் கொடுத்து, நீயே வாசி .. சுத்தம்!
அட்டக்கத்தியோட அவனவன் கத்திக்கிட்டிருக்கான்!
ஏழு மணிக்கு அலுவலகத்துக்கு ரெடியாகி ஹோலுக்குள் வந்தால், அம்மா சன் டிவியில் வணக்கம் தமிழகம் பார்த்துக்கொண்டிருந்தார். ப்ளேன் டீ குடித்துக்கொண்டே அசுவாரசியமாக கவனித்தால் அட, பாரதி பாஸ்கரும் ராஜாவும் காஷுவலாக ஏதோ பேசிக்கொண்டிருந்தனர். எள்ளலும் துள்ளளுமாக தமிழை பதினைந்து நிமிஷமாக … நேரம் போனதே தெரியவில்லை. காலை வேளையில் இப்படி நிகழ்ச்சி .. யார் சொன்னது தொலைகாட்சி நம்மை கெடுத்துக்கொண்டு இருக்கிறது என்று?
மபொசி பற்றி சொல்லும்போது ஏதோ ஈழத்து பிரச்னையை தான் கோடி காட்டுகிறார்களோ? என்று சந்தேகம் வந்தது. சேர் பொன் இராமநாதன் ஏமாற்றப்பட்டது போல மபொசி ஏமாற்றப்படவில்லை! அல்லது ஏமாறவில்லை! மபொசி பற்றி மேலும் தேடி வாசிக்கவேண்டும்.

தில்லுமுல்லு படத்து இன்டர்வியூ காட்சியும் பேச்சில் அடிபட்டது. அடடா என்று இதற்கென்றே தேடி பார்த்தேன். ஐந்து நிமிட காட்சி தான். எத்தனை விஷயங்கள் இருக்கிறது பாருங்கள். அடி நாதமாக நகைச்சுவையை வைத்துக்கொண்டு பாலச்சந்தர் அடித்து ஆடியிருக்கிறார். ரஜனி பேசும் “Mustache is the mirror of Heart” என்பது ஷேக்ஸ்பியர் வசனம்(இதுவே ஒரு தனி கதை, இங்கே எழுதியிருக்கிறேன்). கூடவே Black Pearl என்ற உதைபந்தாட்ட வீரர் பற்றி வருகிறது! அவர் பெயர் சொல்லமாட்டார்கள். தேவையென்றால் நீயே தேடி கண்டுபிடி என்று பாலச்சந்தர் நினைத்திருக்கிறார். இரண்டு வசனங்களும் படத்தின் கதைக்கு பின்னாடி தேவைப்படும் foreshadowing வகை வசனங்கள். ப்ரில்லியன்ட்.
இத்தகைய வசனங்கள் இந்தக்காலத்து படங்களில் கிடைக்குமா என்று அங்கலாய்ப்பவர்களுக்கு .. ஒரே பதில் .. கிடைக்கும் .. கிடைக்கிறது. சாம்பிளுக்கு ஒன்று!
ஹேராமுக்கு பின்னர் தமிழில் வெளிவந்த மிகச்சிறந்த படம் “பிரிவோம் சந்திப்போம்”!
பொப் டிலானும் கேதாவும்!
பொப் டிலானின் “When the Deal Goes Down” என்ற கவிதை. எப்போது கவிதை எழுத போனாலும், இப்படி சில கவிதைகள் ஞாபகத்துக்கு வந்து “ஏன் உனக்கு வேண்டாத வேலை?” என்று ஏசும். படிமம் தான். வாசிக்கும்போது முகத்தில் பளாரெண்டு அடிக்கும் படிமம். நீங்களும் வாங்குங்களேன்.
The moon gives light and it shines by night
Well, I scarcely feel the glow
We learn to live and then we forgive
O’er the road we’re bound to go
More frailer than the flowers, these precious hours
That keep us so tightly bound
You come to my eyes like a vision from the skies
And I’ll be with you when the deal goes down
கேதாவின் கவிதைகளை, குறிப்பாக அவனின் படிமங்களை வாசிக்கும்போது இயல்பாக பொப் டிலான் கவிதைகள் ஞாபகத்துக்கு வருவதை தவிர்க்கமுடியாது. குறிப்பாக, அவனுடைய “காற்றில் ஒடிந்த தளிர்கள்” கவிதையை வாசித்தபோது கூட இதே ஞாபகம். ஆனால் சொல்லமாட்டேன். சொன்னால் திட்டு விழும். “ஏன் ஒப்பிடுறீங்க?” என்று “இரு குழல் பீரங்கி” போல ரெண்டு பேரும் கும்மோ கும்முவார்கள். தனியனாக சமாளிக்கமுடியாது.
இன்றைக்கு பேசிக்கொண்டு இருக்கும் போது, மேலே இருந்த கவிதை பற்றியும் வந்தது. இதை தமிழில் வாசித்து பார்க்கும் ஆர்வம்; ஆனால் நம்மால் முடியாது சாமியோவ். வேறு யாரால்? கேதாவை கேட்டேன்; வாசித்தான்; வசமிழந்து; வசப்பட்டு மீண்டு வரும்போது கையில் ஒரு அழகான குழந்தை என்னை பார்த்து சிரித்தது. பெற்றுக்கொடுத்துவிட்டான். கவிஞன்!
மொபைலில் வாசிப்பவர்கள் வீடு போகும் மட்டும் வாசிக்கவேண்டாம் ப்ளீஸ். வீட்டிலே இருந்தால், டிவியை நிறுத்திவிட்டு, யாருடனும் சாட் பண்ணாமல், இந்த கவிதையை வாசித்து முடித்து, இரண்டு நிமிடம் கண்மூடி அதனை உள்வாங்கி, மீண்டும் வாசியுங்கள். ஏதோ செய்யும்.
இரவெல்லாம் எறிகிறது நிலவுபொப் டிலானின் கடைசி இருவரிகளை ஏன் மொழிமாற்றம் செய்யாமல் விட்டாய்? என்று கேட்டபோது வந்த பதில்,
எனக்கு மட்டும் இருட்டு.அந்தி நேரத்து பூ
காம்பு தொலைத்து விழும் நேரம்,
கையில் ஏந்திக்கொண்டாய்.
யார் நீ?
யாரோ நீ!
நாம் போகும் பாதை சொல்லித்தருகிறது
புரியாத நம் வாழ்வை.
மன்னிக்க கற்றுக்கொண்டபின்
முட்கள் கூட முத்தமிடுகின்றன.
எப்போதும் எங்கேயும் எல்லாமும்
இனி நீ இன்றி இல்லை
நான் இல்லை!
“சில விஷயங்களை பேசாமல் அப்படியே விட்டுவிடவேண்டும்”
செத்து செத்து விளையாடுவோமா?
எக்காரணம் கொண்டும் கேட்டுவிட கூடாது என்று சில பாடல்களின் லிஸ்ட் இருக்கிறது. அதிலும் தனியாக ஆஸ்திரேலிய வசந்தகாலத்தில், மலையடிவாரத்தில் நடந்துபோகும் சமயங்களில், ஐபொடில் அந்த பாடல்களை கேட்டாலோ, யாருமில்லாத, மரங்களின் சலனங்கள் மட்டுமே இருக்கும் பின்னேர பொழுதுகளில் சில பாடல்கள் வந்துவிட்டாலோ, மனதைக் கல்லாக்கிக்கொண்டு ஸ்கிப் பண்ணிவிடவேண்டும். ஆனாலும் மனம் கேளாது. மீறி ப்ளே பண்ணிவிட்டீர்கள் என்றால் அன்றைக்கு உயிர் மீண்டும் ஒருமுறை விட வேண்டிவரும். இந்த செத்து செத்து விளையாடும் விளையாட்டை இன்றைக்கு விளையாடலாம். இரண்டு தடவைகள்!

பாட்டிலே இரு வேறு மெட்டுகள் உள்ள சரணங்கள் இருக்கிறது. ஏற்கனவே “பூங்காற்றிலே”, “தென்றலே” போன்ற பாடல்களில் இந்த ஸ்டைலை தலைவர் முயற்சி செய்திருக்கிறார். முதல் சரணம் “தாளம்” படத்து “காதலில்லாமல் வாழ்வது வாழ்வா” வின் டியூனை ஒத்திருக்கும். இரண்டாவது சரணம் சமகாலத்தில் தமிழில் வந்த "காதல் வைரஸ்” பாடலை ஒத்திருக்கும். கேட்டு பாருங்களேன்.
பாழும் மனசு அது. அதற்கு மறைக்க தெரியவில்லை. அவனுக்கு அவள் காதலை உளறிவிட்டது. அவளுக்கோ கோபம். எப்படி நீ சொல்லலாம்? என்கிறாள். மோசம் செய்துவிட்டாயே பாவி என்று மனதை நோகிறாள்.
ஒன்றை மறைத்து வைத்தேன்
சொல்ல தடை விதித்தேன்
நெஞ்சை நம்பி இருந்தேன்
அது வஞ்சம் செய்தது
மனசு என்ன செய்யும்? பறிகொடுத்தது நான் தானே. தோற்கப்போகிறோம் என்று தெரிந்த பின் விபீஷணன் போல அந்த பக்கம் தாவிவிட்டது. இனியும் வெட்கத்தடையை பார்த்தால் வேலைக்காகாது. அவளும் போய்விட்டாள்.
நதியென நான் நடந்தேன்
அலை தடுத்தும் கடந்தேன்
கடைசியில் கலந்தேன் கடலே
கலந்த பின்னர் தான் மனசின் மீது அவளுக்கு ஒரு கழிவிரக்கம். அவன் வேறு தான் லஞ்சம கொடுத்தேன் என்று சொல்லிவிட்டானா? அட பாவமே, வீணாக என் மனசை நொந்துவிட்டேனே என்று மனசை சமாதான படுத்துகிறாள்.
எல்லாம் தெரிந்திருந்தும் என்னை புரிந்திருந்தும்இப்படி தான் சில பாடல்களோடு செத்து செத்து விளையாட வேண்டி …. My Bad
சும்மா இருக்கும்படி சொன்னேன் நூறு முறை

மன்மதகுஞ்சு ஸ்பெஷல்!
ஜேகே : மச்சி, இந்த வார வியாழமாற்றம் பூரா லைட்டா ஒரு லக்கிய தனம் எட்டி பார்க்குது.
மன்மதகுஞ்சு: வேண்டாம்டா … டேஞ்சர்.. ஒன்னையும் லக்கியவாதி எண்ணுடுவாங்க! பொஸ்தகம் எல்லாம் கிழிப்பாங்க!
ஜேகே : பயமா இருக்குடா! தோழர் என்று சில பேரு பீதிய கிளப்புறாங்கடா! நீயி அரசியல் பத்தி எழுதி ஈழத்தில் மறுமலர்ச்சி கொண்டு வரோணும் எண்டு கூட..
மன்மதகுஞ்சு: உன்னைய போய் எந்த நாதாரிடா தோழர் என்று சொன்னது? நீ இயக்கம் பிரச்சாரத்துக்கு வந்தாலே ஒண்ணுக்கு போன கேஸ் ஆச்சே!
ஜேகே : அத இப்ப வெளிய சொல்ல முடியாது மச்சி .. நாங்களும் போராளி தாண்டா! Facebook பார்த்த இல்ல!
மன்மதகுஞ்சு: பார்த்தோம் .. அப்பிடியே மெயின்டைன் பண்ணு மச்சி! வடக்கு முதலமைச்சர் நீ தான்! அட்லீஸ்ட் 13+ செனட் சபை மெம்பரா கூட..
ஜேகே: வேண்டாம்டா .. ஆல்ரெடி கோத்தா பற்றி எழுதினத பார்த்து ஆத்தா வையுது. வாசிச்சா மொக்கையா இருக்கோணும்டா .. எவனாவது கோத்தாவுட்ட போட்டு கொடுத்தாலும், இவன் டம்மி பீசு எண்டு நெனைச்சிடோனும். நல்ல படமா ஒன்னை அனுப்படா!
மன்மதகுஞ்சு: நம்ம வீட்டு நாயோட நான் வெளையாடும்போது எடுத்த படம் .. டக்கரா வந்திருக்கு. போடுவமா?
ஜேகே : அட நாதாரி .. போட்டா பிறகு எடுக்க கூடாதா?

//ரகுமான் 90களுக்கு பின்னர் முன்னர் //
ReplyDeleteஅவர் வந்ததே 90களுக்குப் பின் தானே?
வாங்க இளா.. அவர் வந்தது 90 களில். நான் சொன்னது 90 களுக்கு பின்னர் .. அதாவது 2000 ஆண்டு time.. சொல்லவந்தது அதைதான் பாஸ்.
ReplyDelete//பிரெடெரிக்காவின் தங்கை தான் பெர்னாண்டஸ்.//
ReplyDeleteஎன்னாது ?ஜாக்குலின் பெர்னாண்டஸ் பிரெடெரிக்காவின் தங்கையா? புதிய தகவல் பாஸ்! அதென்னவோ இலங்கைல இருந்து அழகின்னு தெரிவானவங்கள்ல ஜாக்குலின் உண்மைலயே...அழகிதான்! எனக்கு அப்பவே ஒரு இது...:-)) வெள்ளை குறொஸ் ஆ பாஸ்? தெளிவு படுத்தவும்!
மகிந்தாவின் நெருங்கிய நண்பரான ,லசந்த விக்ரமதுங்கவுக்கே அந்த கதி என்றால், பிரெடெரிக்கா வின் நிலை? கோத்தாவை, கொஞ்ச காலத்திற்கு, அக்கா கொஞ்சம் அடக்கி வாசித்தால் நல்லது.
ReplyDelete“கந்தசாமியும் கலக்ஸியும்” தொடர் அருமையாக உள்ளது . கலக்குங்கள். வாழ்த்துக்கள்.
//"Mustache is the mirror of ஹார்ட்"// .மீசை மயிர் ஆண்களின் குணாதிசியத்தை பிரதிபலிக்கிறது, என்று வைத்துக் கொண்டால் பெண்களின் குணாதிசியத்தை பிரதிபலிப்பது எது தல?
//எங்கள் இருப்பை மிக இலகுவாக மறந்து ஆடும் குணம் நான் தினம் காணும் அனேகமானோரில் இருக்கிறது// Super!
ReplyDelete//பாட்டிலே இரு வேறு மெட்டுகள் உள்ள சரணங்கள் இருக்கிறது. ஏற்கனவே “பூங்காற்றிலே”, “தென்றலே” போன்ற பாடல்களில் இந்த ஸ்டைலை தலைவர் முயற்சி செய்திருக்கிறார்//
'சின்ன சின்ன மழைத்துளிகள் சேர்த்து' பாட்டும் அப்படித்தான்! ஆனா அது மெலடியான்னு தெரியல! (மெலடி கலந்த கொண்டாட்டம்?) நான் மீசிக்ல வீக் பாஸ்! :-))
தலைவரை பற்றி தரக்குறைவா எழுதின ஜேகே இந்த பாட்டை பார்த்தபிறகாவது திருந்தி நடக்குமாறு எச்சரிக்கிறோம்.
ReplyDeletehttp://www.youtube.com/watch?v=Jx_fG7xhw74
பன்னிங்க தான் கூட்டமா வரும் சிங்கம் சிங்கிளாத்தான் வரும் எண்ட பிரபல சம்பாசணைக்கு பிறகு ஒரு சிங்கம் பன்னிய பற்றி பேசியிருப்பது இதுவே முதல் தடவை. எனவே இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்தர்ப்பம்.
தமிழ் பதிவர்களுக்கான புதிய திரட்டி
ReplyDeleteJacqueline Fernandez is not the sister of Frederica Jansz, but her cousin. [ஆமா ரொம்ப முக்கியம் :-)]
ReplyDeleteவாங்க ஜீ
ReplyDelete//என்னாது ?ஜாக்குலின் பெர்னாண்டஸ் பிரெடெரிக்காவின் தங்கையா?//
நாம ரொம்ப ஸ்லோ பாஸ் .. யாரோ ஒருத்தர் ..நம்மள விட க்ளோஸா வாட்ச் பண்ணிக்கிட்டிருக்காப்ள .. அவ தங்கச்சி இல்லையாம் .. கசினாம் .. !
வாங்க முருகேசன் ...
ReplyDelete//அடக்கி வாசித்தால் நல்லது//
நானே இனி மேல் .. நிலா, நீர் காற்று என்று தான் எழுதிற ஐடியா .. பன்னி ஐடம் எல்லாம் சாப்பிட முடியாது பாஸ்!
////"Mustache is the mirror of ஹார்ட்"// .மீசை மயிர் ஆண்களின் குணாதிசியத்தை பிரதிபலிக்கிறது, என்று வைத்துக் கொண்டால் பெண்களின் குணாதிசியத்தை பிரதிபலிப்பது எது தல?//
இப்பெல்லாம் அவங்க மூடி மறைக்கிறதே இல்லையே பாஸ்!!
ஜீ
ReplyDelete//'சின்ன சின்ன மழைத்துளிகள் சேர்த்து' பாட்டும் அப்படித்தான்! //
அது மெலடி தான் தல .. ரகுமான் மேலும் சில பாடல்கள் அப்படி அமைத்திருக்கிறார் .. தைய தையா இன்னொன்று!
கேதா .. உன்னைய மாதிரி ஒருத்தன் இருந்தா போதும் .. தேடி வந்து என்னைய தூக்கிடுவாங்க! கோத்தா வாழ்க!
ReplyDeleteதம்பி Cpede News .. அட்லீஸ்ட் .. ஒரு படத்தை பார்த்திடாவது கொமென்ட் போடோணும்!
ReplyDeleteபெயரில்லா ரசிகரே .. ஜாக்குலின் பற்றி அவ்வளவு டீடெயில் விரல் நுனில இருக்கே .. ஆளு யாருன்னு பிடிச்சிடுவோம்ல!
ReplyDeleteஎன்னப் பிடிச்சு என்ன செய்யப் போறீங்க. அத விட்டிட்டு சோலியப் பாப்பீங்களா... (சத்தியமா நான் வாலிபன் கிடையாது). நீங்க சேக்ஸ்பியரப் பத்தி இவ்ளோ டீடெய்லா தேடும் போது, நாங் ஜாக்குலீனப் பத்தி தேடமாட்டமா என்ன?
ReplyDeleteஎன்ன ஜே.கே., கேதாவும் கோதாவும் ஒண்ணு சேந்துடுவாங்க போல இருக்கே?
பாஸ் .. அவங்க அப்பவே கூட்டணி தான்!
ReplyDelete