அத்தியாயம் இரண்டு : சுமந்திரன் வருகை
அத்தியாயம் மூன்று : கள்ளுத்தவறணை
“குக்குகள் மட்டும் இல்லாட்டி நாங்க தப்பியே இருக்கேலாது”
சுமந்திரன் சொல்லிக்கொண்டே இருக்கும் போது, கந்தசாமி கண்ணை கசக்கிக்கொண்டு திறந்து மூடினார். திறந்தாலும் மூடினாலும் இருட்டு இருட்டாகவே இருந்தது. மூடியவாறே சொன்னார்.
“ஒண்டுமே விளங்கேல்ல.. நான் இப்ப எங்க இருக்கிறன்?”
“ம்ம்ம் .. இந்தா கச்சான் கொஞ்சம் சாப்பிடு, எண்ட திணிவு கடத்தும் சிஸ்டம் கொஞ்சம் ரிப்பேர் ஆயிட்டுது. அதால நிறைய மாட்டர் லொஸ் ஆகியிருக்கும். உனக்கு இப்ப ப்ரொட்டினும் உப்பும் தேவை”
“ஆ?”
“அடிச்ச கள்ளு கொஞ்சம் தசைப்பிடிப்ப ரிலாக்ஸா வச்சிருக்கும் பயப்பிடாத!”
“என்ன சனியனோ .. எல்லாமே இருட்டா இருக்கு!”
“ம்ம்.. .. “
“சுத்திவர இருட்டு .. வெளிச்சமே இல்ல”
இந்த, இந்த விஷயம் தான் பூமி மனிதர்கள் பற்றி, இத்தனை தலைமுறை தாண்டியும் சுமந்திரனுக்கு புரிந்தபாடில்லை. வெளிப்படையான விஷயங்களை கூட தங்களின் கண்டுபிடிப்பாக அவர்கள் பீத்திக்கொண்டார்கள். “எப்பிடி சுகம்?” என்று கேட்டுவிட்டுத்தான் “அப்பா சீரியஸா இருக்கிறார்” என்பார்கள்.“கிரேட் சன் லைட் டுடே” என்பார்கள். “கீழ விழுந்திங்களாமே? நல்ல அடியா?” என்றெல்லாம் கேள்விகள். யாராவது “பூமி சூரியனை முன்னூற்று அறுபத்தைந்து நாளும் சுற்றி வருகிறது” என்று எழுதினால், இன்னொருவர் அதை “பூமி சூரியனை பன்னிரெண்டு மாதங்கள் சுற்றுகிறது” என்று திருத்துவார். எழுதியவரை விட்டுவிட்டு சொன்னவரை பாராட்டுவார்கள்.
சுமந்திரன் முதலில் இந்த மனிதர்கள் ஏன் தேவையே இல்லாமல் பேசிக்கொள்கிறார்கள் என்று குழம்பிப்போனார். பேசாமலேயே இருந்தால், எச்சில் உறைந்து உதடுகள் ஒட்டிக்கொள்ளும் என்பதால் தான் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்று முதலில் நினைத்தார். ஆனால், சாப்பிடும்போதும் ஏன் பேசவேண்டும் என்ற கேள்வி எழுந்ததால், பேசாமல் விட்டால் அவர்கள் மூளை வேலை செய்யதொடங்கிவிடுகிறது, அது வேண்டாமே என்று தான் பேசுகிறார்கள் என்று முடிவு செய்தார். மனிதர்கள் ஏன் பிரபஞ்சம் பற்றி ஒன்றுமே தெரியாமல் இருக்கிறார்கள் என்று சில நேரங்களில் அவர் வருந்துவதும் உண்டு. பேச்சை குறைத்து, எல்லாவற்றையுமே வேட்டிப்புறக்கணிப்பதை நிறுத்திவிட்டு, கொஞ்சம் யோசித்தால் இந்த பிரபஞ்ச சூட்சுமம் புரிந்துவிடுமே. ஆனால் செய்யமாட்டார்கள். தமக்கு மேல் என்ன இருக்கப்போகிறது? என்ற எண்ணமும், “தனக்கு தெரியாததா?” என்ற எண்ணமுமே அவர்களை இந்த நிலைக்கு இட்டுப்போனது என்று புரிந்தாலும், நாளடைவில் அவருக்கும் இந்த விளையாட்டு பிடித்துபோக தொடங்கியது. இதிலும் ஒரு சுவாரசியம் இருக்கிறது.
“ம்ம் .. வெளிச்சமே இல்ல .. கொஞ்சம் இருட்டு தான் .. எப்பிடி இருக்கிறாய்?”
“எப்பிடி ? .. முதல்ல எங்க இருக்கிற…?”
முடிக்காமல் கந்தசாமி தயங்கினார். கேட்டால் எடக்கு முடக்காக ஒரு பதில் வரும். சிலவேளைகளில் பூமியிலேயே இல்லை என்பான். ஏன் வம்பு.
“இப்ப பாதுகாப்பா தான் இருக்கிறம்”
“அப்பாடி .. நான் ஏதோ உலகமே அழிஞ்சு போச்சோ எண்டு பயந்து போனன்”
“அழிஞ்சிட்டு தான் .. பட் நாங்க ரெண்டு பேரும் சேஃப்.
“அழிஞ்சிட்டா? அப்ப பூமிக்கு என்ன ஆயிட்டு?”
“போய்ட்டுது, gone to nowhere, சொன்னா புரியாது, சிவன் பொசன் என்று ஒரு அடிப்படை கூறு, ஒளிக்கதிர்களை ஆர்முடுக்கி, ஒளியின் வேகத்தின் எட்டு மடங்கில, குறுக்கும் மறுக்குமா அடிச்சா, சிவன் பொசன் உருவாகும் ..அது, அந்த நேரம் தோன்றும் சிவன்வெளியில் நுழையும் எந்த பொருளின் திணிவையும் உறிஞ்சிவிடும். அப்புறம் எங்கேயும் எப்போதும் நினைத்த நேரத்தில் பாயலாம். போய் சேர்ந்த பிறகு மீண்டும் ஹிக்ஸ் போசனை …”
“என்ன? சிவனா? யார் எங்கட கடவுளா? அவர்அழிக்கவும் செய்வாரா?”
“அதால தானே அழித்தல் கடவுள் எண்டு பெயர் வச்சிருக்கிறீங்க? ஆக்கிறத ஒளியின் வேகத்திலேயே செய்யலாம். அழிக்கிறதுக்கு எட்டு மடங்கு .. அதனால தான் சிவன் பொசனை முழுமுதல் துணிக்கை என்று? ..அட .. முதலில உங்கட வேதத்தில இருக்கிற விஷயங்களையே நீங்க நம்பிறதில்ல..”
“அப்ப கடவுள் எங்க?”
சுமந்திரன் பதில் சொல்லாமல் தன் பைக்குள் எதையோ தேடினார். துவாய், பிரஷ், பேஸ்ட் எல்லாவற்றையும் கிளறி ஒருவாறாக லைட்டரை எடுத்தார். ஷ் என்று பற்றவைக்க, ஹீலியம் அதிகமான வளியில், நெருப்பு சுவாலை கொஞ்சம் மேலே கீழே பாய்ந்தது.
கந்தசாமி பேச்சை நிறுத்திவிட்டு சுற்றும் முற்றும் பார்த்தார். சின்ன வெளிச்சத்தில். ஏதோ பத்து வருடங்கள் துப்புரவாக்காத கராஜ் போல இருந்தது. எல்லா இடமும் இரும்பு போன்ற ஒரு கறுத்த உலோக கேடர்கள். அந்த இடம் முழுக்க ஒரு அபரிமிதமான நறுமணம், பூமியின் ஆறு நட்சத்திர ஹோட்டல் அறைகளில் இருக்கக்கூடிய வாசம். ஆனால் இடமோ, ஒரே குப்பையாக, பச்சை வெள்ளையாய் பூமியில் அறியப்படாத பொருட்கள் எல்லாம் சிதறிகிடக்க, செல்வராணி என்றால் இப்படி குப்பையாக வைத்திருப்பாளா?.. செல்வராணி? எங்கே போனாளோ? திடுக்கென்றது கந்தசாமிக்கு.
“எல்லோரும் இங்கே தான் இருக்கிறாங்களா?”
“எல்லோரும் எண்டா?”
“எல்லோரும் .. செல்வராணி, சண்முகம், சம்பந்தர்… நல்லூர் செட்டியார், ஒபாமா.. ரஜனிகாந்த்”
கந்தசாமி யார் பெயரை கேட்பது என்று தடுமாற்றத்தில், சிலர் முன்னமேயே இருந்தார்களா என்ற சந்தேகமும் கூட சேர்ந்துவிட,
“நாங்க ரெண்டு பேரும் தான் தப்பினாங்கள்”
“நாங்க … எல்லாமே இடிஞ்சு போச்சா?”
“அபத்தமா இருக்கு இல்லையா? உயிரை குடுத்து உயிரை எடுத்து.. காதல், அம்மா, பிள்ளை, பாசம், நாடு, வேலி .. இலக்கியம் .. என்னா ஆட்டம் ஆடினீங்க? ஒரே பட்டன் .. எல்லாமே போச்சு!”
சுமந்திரன் கொஞ்சம் சத்தமாகவே சிரித்தார்.
“சிரிக்கிறியா? உனக்கு என்ன தெரியும்? பற்று எண்டா என்னெண்டு தெரியுமா? பாசம் எண்டா? ஏன் நாங்க இதுக்கெல்லாம் எதையுமே இழப்போம் எண்டு .. ச்சே எல்லாமே அழிஞ்சு போச்சு .. ஆனாலும் சோமரத்ன மாத்தையாவுக்கு நல்லா வேணும் .. வீட்ட இடிக்க வந்தவரல்லோ .. இப்ப அவரே இல்லாம போயிட்டார்”
கந்தசாமி உளறிக்கொண்டு இருக்கும் போது இருட்டில் ஏதோ ஒரு நிழல் உருவம், அசைந்தது போல தெரிந்தது. கந்தசாமி பயத்தில் சுமந்திரனை கையை பற்றிக்கொண்டார். அந்த நிழல் போய் ஒரு ஓரத்தில் இருந்த கட்டில் போன்ற ஒரு மேடையில் படுத்துக்கொண்டது.
“என்னது?”
“இதுகள் தான் குக்குகள்”
“குக்குகளா?”
“எஸ், எங்களை காப்பாத்தின குக்குகள் … மிகிந்தர்களுக்கு தெரியாம எங்கள காப்பாத்தின குக்குகள்”
“அப்ப மிகிந்தர்கள் போய்ட்டாங்களா?”
“இல்ல அவங்கட விண்கலம் தான் இது.. பெயர் “மிகின் காற்று” அங்க தான் இப்ப நாங்க இருக்கிறம்!, கள்ளத்தோணி தான்… அவங்கட கலத்துக்கே பாய்ஞ்சு வந்திட்டம் .. வேற வழியில்ல”
“குக்குகள் காப்பாத்தினது எண்டுற, மிகின் காற்று எண்டுற .. எல்லாமே குழப்பமா இருக்கு”
“இதில என்ன குழப்பம்? .. ஓ .. ஞாயம் தான்.. வெறும் முப்பத்து மூன்று பில்லியன் ந்யூரான்ஸ வச்சிருக்கிற மூளையால பெரிசா ஒண்டையும் கிரகிக்கமுடியாது .. அதில நீ வேற டியூப் லைட்! எல்லாத்துக்கும் பதில் சொல்லிக்கொண்டு இருக்கமுடியாது.. இந்தா இந்த புத்தகத்தில தேடிப்பார், உனக்கு என்ன சந்தேகமோ அதெல்லாத்துக்கும் இதில விடை இருக்கும்”
சொல்லிக்கொண்டே சுமந்திரன் தன்னுடைய பயணப்பையிலிருந்து ஒரு சுருளை எடுத்து கந்தசாமியிடம், சர்வசாதரணமாக துவாயை அரையில் கட்டி கவர் பண்ணிக்கொண்டு சாரத்துக்கு மாறினார்.
“இந்த சுருளிலா?”
“விரிச்சு பாரேன்”
கந்தசாமி மெதுவாக அந்த சுருளை விரித்தார். பள பளவென A4 சைஸ் கண்ணாடி போன்ற தாள். 3D, உள்ளே கைவிட்டு துளாவலாம் போல் இருந்தது.
“2500 பிக்சல் பர் இஞ்ச் டிஸ்ப்ளே .. ஐபாட் எல்லாம் டப்பா தெரியுமா?”
கந்தசாமி நிமிரவேயில்லை. தாளின் முதற்பக்கத்தில் "பதற்றப்படாதே” என்று எழுதியிருந்தது. குழப்பமாக இருந்தது.
“பதற்றப்படாதே” எண்டு இருக்கு?”
“ஓ .. ஸ்பெல்லிங் மிஸ்டேக் போல .. பதட்டப்படாதே எண்டு வந்திருக்கோணுமா? ரெண்டுமே ஒரே சவுண்ட் தானே?”
“அடேய் .. டென்ஷன் ஆக்காத ..ஏன் என்னை பதட்டப்படாதே என்று சொல்லுது?”
“ஓ .. அது உன்னை பார்த்து சொல்லேல்ல .. அதன் முதல் பக்கமே அப்பிடித்தான். ஒரு சொல்லு தெரியாட்டி தானே அகராதியை தேடுவீங்க. அதுபோல, டென்ஷனா அவசரமா தான் யாருமே பிரகராதியை தேடுவினம் .. அதால தான் அந்த “
“இப்ப நான் இத வச்சு என்ன செய்ய?”
“தேடிப்பார், நீ எந்த சொல்லை நினைக்கிறியோ அத பற்றிய டீடைல்ஸ் தெரியும்”
கந்தசாமி சந்தேகத்துடனேயே “மிகிந்தர்கள்” என்று யோசித்தார்.
“மிகிந்தர்கள், இவர்கள் பிரபஞ்சத்தில் வேண்டத்தகாத இனத்தினர். உருவாகி இரண்டாயிரம் மிகின் ஆண்டுகளோடு கூர்ப்பு தடைப்பட்டுவிட்ட இனம். ஆனாலும் பிரபஞ்சத்தில் சிவில் சேர்விஸில் இணைந்து, சொல்வதை சொன்னபடியே செய்வார்கள். விருப்பு வெறுப்பு என்ற உணர்ச்சிகள் அறவே இல்லாத ஜடங்கள். அரசாங்க சேவையும் அதன் கட்டமைப்பும் தான் நிஜமான கூர்ப்பு என்று எண்ணுபவர்கள். தன் தாய் தெருவிலே விழுந்து கிடந்தாலும், முறையாக போலிசுக்கு அறிவித்து, அம்புலன்ஸ் வரும்வரை காத்திருந்து, வருவதற்கு உயிர் போய்விட்டால், நடைமுறைப்படி அம்புலன்ஸில் ஏற்ற முடியாது என்பதால், மோர்ட்சுவரி வாகனம் வரும்வரை காத்திருந்து ஏற்றி அனுப்புவார்கள். தாயை கொன்றவர்கள் யார் என்று தெரிந்தாலும், நாட்டின் நலனுக்காக ஒன்றும் பேசாமல் அடுத்தவேலையை பெருமையுடன் கவனிப்பவர்கள்.
இந்த காரணத்துக்காகவே மிகிந்தர்கள், வீதி கட்டுமான பணியில் குறுக்கிடும் கிரகங்களை அழிப்பதற்கு நியமிக்கப்பட்டு இருப்பவர்கள். இந்த வீதிக்கட்டுமான பணியின் டெண்டர் பணங்கள் எல்லாமே மிகிந்தர்களின் மூன்று தலைவர்களுக்கு போவதாக அறியப்படுகிறது. அதில் ஒருவருக்கு பல மொழிகளின் கெட்ட வார்த்தைகளில் சிறந்த தேர்ச்சியும் இருக்கிறது. (இந்த பகுதி, மிகின் கிரகத்து பிரகராதியில் கறுப்பு கோடு போட்டு அழிக்கப்பட்டு இருக்கிறது).
கள்ளத்தோணியில் இவர்களிடம் அடைக்கலம் போகும் எண்ணம் எந்த அகதிகளுக்கேனும் இருந்தால், மறக்காமல் வெள்ளை கொடிகளை பிடித்துக்கொண்டு செல்லுங்கள். அப்போது தான் உங்களை சரியாக இனம் கண்டு அழிப்பது அவர்களுக்கு இலகுவாக இருக்கும். வெள்ளிக்கொடி பிடிக்காமல் போனால், பிடிபட்டு கொல்லப்படுவதற்கு முன், அவர்கள் வாசிக்கின்ற கவிதையை கேட்டு, துன்புறுத்தப்படுவீர்கள். அது வேண்டாமே!”
கந்தசாமிக்கு பிரகராதி சீரியஸாக சொல்லுகிறதா? நக்கலாக சொல்லுகிறதா என்று புரியவில்லை. பக்கத்திலே துவாயை போர்த்துக்கொண்டு குறட்டை விடும் சுமந்திரனை தட்டி எழுப்பினார்.
“எங்களை கொல்ல போறாங்களா?”
“மாட்டுப்பட்டா எஸ்”
“மாட்டுப்படுவமா?”
“மாட்டுப்படாம இருக்க சான்ஸே இல்லை”
கந்தசாமி “பளார், பளார்” என்று சுமந்திரன் கன்னத்தை பொத்தி விளாசினார்.
“நானும் பார்த்துக்கொண்டு இருக்கிறன், வெள்ளனல இருந்து சேட்டை கதை கதைச்சுக்கொண்டு இருக்கிற, மரியாதையா இங்க என்ன நடக்குது எண்டு சொல்ல போறியா? இல்லாட்டி நானே உன்னை சாகடிக்கட்டா?”
சுமந்திரன் சிரித்துக்கொண்டே பதில் சொன்னார்.
“இங்க பாரு .. எல்லாத்தையும் விளங்கப்படுத்த ஏலாது. மிகிந்தர்களுக்கு சாப்பாடு எண்டா காணும். அதுக்காக குக்குகள் இனத்தை இங்க வேலைக்கு வச்சிருக்கிறாங்கள் போல. இந்த குக்குகள் இனம் எந்த நேரத்தில என்ன செய்யும் எண்டு தெரியாது. சகோதரன் போல பழகும். திடீரென்று மற்ற பக்கம் போய் போட்டுக்குடுத்துடும். சரி மற்ற பகுதியிலாவது நிம்மதியா இருக்கும் எண்டா, இல்லை, இடைகிடை அவங்கள சீண்டுறதுக்கு எங்களோட வந்து நிக்கும். இப்ப கூட மிகிந்தர்களை கடுப்பேத்த தான் எங்கள் ரெண்டு பேரையும் இந்த விண்கலத்துக்க அனுமதிச்சிருக்குதுகள் … இது கூட அதுகளிண்ட குவார்டஸ் ரூம் போல தான் கிடக்கு!”
கந்தசாமி மீண்டும் ஒருமுறை சுற்றும் முற்றும் பார்த்தார். அந்த சுகந்த வாசம், திரும்பி முகத்தில் அடிக்க நன்றாக மூச்சை இழுத்துவிட்டுக்கொண்டார். தூரத்தில் இருந்த கொடியில் மூன்று துளைகளுடன் தொங்கிக்கொண்டு .
“அது தான் இந்த குக்குகளிண்ட ஜட்டி .. நாத்தம் தாங்கேலாம இருக்கு .. வா வெளியால போவம்”
சுமந்திரன் சொல்லிக்கொண்டே சுருட்டிக்கட்டிக்கொண்டு புறப்பட, கந்தசாமி அதிசயமாக பார்த்தார், அட, ஜட்டி வாசம் இவ்வளவு சுகானுபவமா? குக்குகளின் சாப்பாட்டை ஒரு முறையேனும் டேஸ்ட் பண்ணிவிடவேண்டும் என்று நினைத்துக்கொண்டார்.
“குவிக்கா வா, இங்க இருந்து தப்புற வழியை பார்த்துக்கொள்ளோணும்”
“தப்பேலாது, எப்பிடியும் கொண்டிடுவாங்கள் என்று ..”
முடிக்கமுன்னமேயே திபு திபு என்று கதவை திறந்துகொண்டு பல உருவங்கள் உள்ளே நுழைந்தன. அந்த உருவங்களுக்கு தலை நிலத்தில் முட்டிக்கொண்டிருக்க, மூன்று கால்கள் கூம்புவடிவில் மேற்கூரையில் முட்ட முயற்சித்துக்கொண்டு இருந்தன. பின்னாலே ஒரு குட்டி உருவம், அந்த பெரிய உருவங்களில் ஒருவனிடம் ஏதோ ஒன்றை வாங்கிக்கொண்டு இருந்தது.
“காட்டிக்குடுத்திட்டாங்கள்.. உள்ளுக்க வரவைச்சு, வித்திட்டாங்கள் .. நாங்கள் வேற கொடி பிடிக்க இல்ல .. கவிதை நிச்சயம்”
“ஓ இப்பிடி தலைகீழா நிக்கிறதுகள் தானா மிகிந்தர்கள்?”
“ம்ம .. காசு வாங்கினது குக்கு .. வசமா மாட்டீட்டம் .. சங்கு தான் .. இவங்கட கவிதைய கேட்கிறத விட தற்கொலை செய்யலாம்”
“அட கவிதை தானே .. கேட்டு தொலைப்பம்.. அருமை எண்டு சொன்னா சிலவேளை விட்டிடுவாங்கள் ”
“கிழிச்சாங்கள், ஆணியே ..”
கந்தசாமி அவசரம் அவசரமாக பிரகராதியை தட்டிவிட்டு “மிகிந்தர் கவிதைகள்” என்று யோசித்தார்.
பிரபஞ்சத்திலே மிகமோசமான கவிதைகளை எழுதுபவர்கள் மூன்று இனத்தினர்.
அ) Backbook என்னும் சமூக இணையதளத்தில் உணர்ச்சிகளை கொட்டும் புரட்சி கிரகத்து கவிஞர்கள்
ஆ) காதலிகளை மூன்றாந்தர எரி நட்சத்திரங்களுனுடனும், வெடித்து சிதறிக்கொண்டிருக்கும் நட்சத்திரங்களுடனும் ஏழு பில்லியன் தடவைகளுக்கு அதிகமாகவே ஒப்பிட்டு கவிதை வடிக்கும் நெபுலா கலக்ஸி வாசிகள்.
இ) வரையறை அற்ற புதுக்கவிதையில் தான் புரட்சி செய்யலாம் என்று எங்கேயோ கேள்விப்பட்டு, இஷ்டத்துக்கு எழுதித்தள்ளும் மிகிந்தர்கள்.
இதிலே மிகிந்தர்களின் கவிதை கர்ண கொடூரமானது. சிக்கினால் சின்னாபின்னமாவீர்கள். உதாரணத்துக்கு மிகிந்தர்கள் மத்தியில் ஏழு லட்சத்து நானூற்று முப்பது லைக்குகள் வாங்கிய புகழ் பெற்ற கவிதை ஒன்று.
மழை சாரல்
மயிலிறகின் சடசடப்ப்பு.
எருமைகளில் சொரசொரப்பு
நீ
தேங்காய் மட்டையால்
தேய்த்து குளிக்க
பொச்சானது என் மனது!
- கவிமும்மூர்த்தி மன்மதகுஞ்சு
வாசித்த கந்தசாமியின் முகம் வெளிறிப்போனது. கால்கள் நடுங்கத்தொடங்கின. அதே சமயத்தில் கொஞ்சமும் சந்தோஷமும்.
“அவங்களுக்கு தான் தமிழ் தெரியாதே? அவங்கட மொழி கவிதை எனக்கு எப்பிடி விளங்கும்? சுமந்திரன் நீ தான் சாக போற”
“ஹ ஹ ஹா” சிரித்துக்கொண்டே சுமந்திரன் பைக்குள் இருந்து சின்னதாய் ஒரு மீன் குஞ்சை எடுத்து, கந்தசாமி சுதாரிக்கும் முன்னர் அவருடைய காதுமடலடியில் செருகிவிட, கந்தசாமியின் தலை சுற்றத்தொடங்கி, ஏதேதோ விநோதமான ஒலிகள் எல்லாம் கேட்டு, லொள், கால், பால், கர, சாரா என்றெல்லாம் சத்தம் வந்து கடைசியில் தமிழில் புரியத்தொடங்கியது.
“திரும்பவும் எச்சரிக்கிறேன் … அகதிகளுக்கு இங்கே இடமில்லை .. இந்த கலம் மிகிந்தர்களுக்கே சொந்தமானது.”
கூடவே வினோதமான ஒலிகள் எல்லாம் கந்தசாமியின் காதில் கேட்க தொடங்கின.
“இன்னமும் முற்றவில்லை!”
Blog ஐயும் சேர்த்துக்கொள்ளலாம்
ReplyDelete//பிரபஞ்சத்திலே மிகமோசமான கவிதைகளை எழுதுபவர்கள் மூன்று இனத்தினர்.
அ) Backbook என்னும் சமூக இணையதளத்தில் உணர்ச்சிகளை கொட்டும் புரட்சி கிரகத்து கவிஞர்கள்
ஆ) காதலிகளை மூன்றாந்தர எரி நட்சத்திரங்களுனுடனும், வெடித்து சிதறிக்கொண்டிருக்கும் நட்சத்திரங்களுடனும் ஏழு பில்லியன் தடவைகளுக்கு அதிகமாகவே ஒப்பிட்டு கவிதை வடிக்கும் நெபுலா கலக்ஸி வாசிகள்.
இ) வரையறை அற்ற புதுக்கவிதையில் தான் புரட்சி செய்யலாம் என்று எங்கேயோ கேள்விப்பட்டு, இஷ்டத்துக்கு எழுதித்தள்ளும் மிகிந்தர்கள்.//
அதாரந்த"கவிமும்மூர்த்தி மன்மதகுஞ்சு" !யாரையாவது மனசில வச்சு எழுதினீங்களா?? உள்குத்து ஏதுமில்லையே??....:)
நானும் பொறுமையாய் பொறுமையாய் வாசிப்பதக்குள் மிஹிந்தர்களின் கவிதை வர, உடைத்துக் கொண்டது - சிரிப்பு
ReplyDeleteநன்றி பாலா :)
ReplyDeleteசெழியன் அந்த கவிதைய எழுதினது சாட்சாத் மன்மதகுஞ்சுவே தான்..
ReplyDelete"Are you planning to translate the entire book? could be a copyright violation... "
ReplyDeleteMr Anonymous .. Please have a look on my Viyaala Maatrams .. This is not a translation ... I took the knots and writing my own version .. Its not a rocket science to figure it out when reading it :) Suggest you read my series first!
ReplyDeleteகவிதை அமோகம். பொச்சானது மனது என்ற ஒற்றை வார்த்தைகளுக்குள் ஆயிரம் ஆயிரம் அர்த்தங்கள்.
ReplyDeleteமிகிந்தர்களை (மகிந்தவை) நன்றாகவே கலாய்கிரீர்கள்.
ReplyDeleteThanks Ketha .. half of the credits goes to Manmathakunju on that poem!
ReplyDeleteMurugesan .. Ithu verum Sci_fi thaan .. politics illa .. nammala kali thinni vaikkaama oya maatteenga pola!
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete>இதிலே மிகிந்தர்களின் கவிதை கர்ண கொடூரமானது. சிக்கினால் சின்னாபின்னமாவீர்கள். உதாரணத்துக்கு மிகிந்தர்கள் மத்தியில் ஏழு லட்சத்து நானூற்று முப்பது லைக்குகள் வாங்கிய புகழ் பெற்ற கவிதை ஒன்று.
ReplyDeleteமழை சாரல்
மயிலிறகின் சடசடப்ப்பு.
எருமைகளில் சொரசொரப்பு
நீ
தேங்காய் மட்டையால்
தேய்த்து குளிக்க
பொச்சானது என் மனது!
- கவிமும்மூர்த்தி மன்மதகுஞ்சு
--------------------------
ஏய் யாரங்கே , எடு என் எழுத்தாணியை. அடுத்த பதிவு என் "க வதை"
-கவித்தாதா சக்திவேல்
இதெல்லவோ தொடர்! மணியா இருக்கு!
ReplyDelete//பேசாமல் விட்டால் அவர்கள் மூளை வேலை செய்யதொடங்கிவிடுகிறது, அது வேண்டாமே என்று தான் பேசுகிறார்கள் என்று முடிவு செய்தார்.//
ReplyDeleteஎல்லாருக்கும் நல்ல கடி.
ஜே.கே, வர வர உங்கடை போக்கே சரியில்லை:
//அட, ஜட்டி வாசம் இவ்வளவு சுகானுபவமா? குக்குகளின் சாப்பாட்டை ஒரு முறையேனும் டேஸ்ட் பண்ணிவிடவேண்டும் என்று நினைத்துக்கொண்டார்.//
ஜட்டிக்கும் சாப்பாட்டும் என்னங்க சம்பந்தம்?
மிகிந்தர்கள் என்பது மகிந்தரையோ, பேரினவாதக் காரர்களையோ மட்டும் குறிக்கவில்லை என்பது என் பார்வை.
ReplyDelete//மிகிந்தர்கள், இவர்கள் பிரபஞ்சத்தில் வேண்டத்தகாத இனத்தினர். உருவாகி இரண்டாயிரம் மிகின் ஆண்டுகளோடு கூர்ப்பு தடைப்பட்டுவிட்ட இனம். ஆனாலும் பிரபஞ்சத்தில் சிவில் சேர்விஸில் இணைந்து, சொல்வதை சொன்னபடியே செய்வார்கள். விருப்பு வெறுப்பு என்ற உணர்ச்சிகள் அறவே இல்லாத ஜடங்கள். அரசாங்க சேவையும் அதன் கட்டமைப்பும் தான் நிஜமான கூர்ப்பு என்று எண்ணுபவர்கள்.// இது அப்படியே கிளாக்கர் புத்தியை படம் பிடிக்குறது, அரை நூற்றாண்டுக்கு முன் யாழ்ப்பாணம் இப்படித்தான் இருந்தது என்று என் நண்பன் ஒருவன் அடிக்கடி பெரும் கோபம் சொல்லுவான்.
இந்த அரசியல் மசாலா, கதையை நோக்கி இட்டு வரும், கொஞ்சம் வாசிப்புக்கு உப்பு உறைப்பாய் இருக்க, மற்ற படி ஆழ ஓடும் காரணங்கள் தேடுவது - நிம்மதி நிம்மதி உங்கள் choice.
//பேசாமல் விட்டால் அவர்கள் மூளை வேலை செய்யதொடங்கிவிடுகிறது, அது வேண்டாமே என்று தான் பேசுகிறார்கள் என்று முடிவு செய்தார்.//
ReplyDelete//“அட கவிதை தானே .. கேட்டு தொலைப்பம்.. அருமை எண்டு சொன்னா சிலவேளை விட்டிடுவாங்கள்//
:-))))
வார்த்தைகளில் சிக்சர் அடிக்கிறீர்கள்!
மன்மதக்குஞ்சுவின் கவிதை அபாரம்! :-)
//Backbook என்னும் சமூக இணையதளத்தில் உணர்ச்சிகளை கொட்டும் புரட்சி கிரகத்து கவிஞர்கள்//