அத்தியாயம் ஒன்று : முகவுரை
அத்தியாயம் இரண்டு : சுமந்திரன் வருகை
அத்தியாயம் மூன்று : கள்ளுத்தவறணை
அத்தியாயம் நான்கு : மிகின் காற்று
அத்தியாயம் ஐந்து : விடுப்பு மீன்
அத்தியாயம் ஆறு: சுமந்திரனை நம்பாதே!
அத்தியாயம் ஆறு: யார் பெத்த பிள்ளையோ?
எதை நாங்கள் சரியானது என்று நினைக்கிறோமோ அது பொதுவாக தலைகீழாகவே இருப்பதுண்டு; அதுவே பின்னர் சரியாகவும் போய்விடுவதுமுண்டு. சரியும் சரி, தவறும் சரி, எல்லாமே அவரவர் சட்டத்தில் தான். அது தெரியாமலேயே பூமிக்கிரகத்தில் வாழ்ந்த மனித இனம் கூட ஏதோ தாம் தான் கூர்ப்பில் சிறந்த அறிவுஜீவிகள் என்று அழியும் வரை நினைத்துக்கொண்டிருந்தார்கள். அதிலும் கூட இனத்துக்கினம் கூர்ப்பு வித்தியாசப்படும் என்றும் நம்பினார்கள். அமெரிக்காக்காரன் தன்னை விட சிறந்த புத்திஜீவி வேறு இல்லை என்பான். ஜூதனை கேட்டால் அமெரிக்காவின் மூளையே தன்னது என்பான். சீனாக்காரனை கேட்டால் மற்றவன் ஒருவனுக்கு நாங்கள் பத்துபேர் சமம், நேருக்கு நேர் வரட்டும் பார்க்கலாம் என்பான். இந்தியாக்காரன் ஆ ஊ என்றால் ஆன்மீகத்தையும் அகிம்சையையும் தாம் தான் உலகுக்கு அறிமுகப்படுத்தியவன் என்பான். ஒரு பகவத் கீதையை திறந்து வாசிக்காமலேயே தம் மதம் தான் சிறந்தது என்பான். தனக்குள்ளேயே சாதி பிரிப்பான். அதிலும் திட்டித்தீர்ப்பதில் ஒரு சாதி மற்ற சாதிக்கு என்றைக்குமே சளைத்ததில்லை. கந்தசாமி கள்ளுத்தவறணையில் கொட்டாத தூஷணம் எல்லாம் சாதியின் பேரால் மாறி மாறி கொட்டி திட்டிவிட்டு ஒரு கட்டத்தில் “சேர் இவன் நுள்ளீட்டான்” என்று போலீஸில் ஒரு சாதி போய் கொம்பிளைன் கொடுக்கும். உடனேயே ரெண்டு பக்கத்து சாதிகளிலும் உள்ள இலக்கிய வாதிகள் “மனப்போராட்டம் நிறைந்த யதார்த்த தூஷணம் பெரிதும் வெளிப்பட்டது யாரில்?” என்று டிவி, பத்திரிக்கை என்று எல்லா பொதுவெளியிலும் சண்டை போடுவார்கள். கொஞ்ச நாளில் அது அலுத்துபோய் கூர்ப்புவாதிகள் ஏப்ரகாம் லிங்கன் ஒரு தமிழன் என்று பெருமைப்பட ஆரம்பிப்பார்கள். இப்படியாக இனத்திலிருந்து மதத்துக்கு தாவி, ஊருக்குத் தாவி. படிக்கும் பாடசாலை, நண்பர்கள் வட்டாரம், தன் குடும்பம் என்று சுருங்கி இறுதியில் ஒவ்வொரு மனிதனும் தான் தான் பிரபஞ்சத்தின் சிறந்த அறிவுஜீவி என்று நிரூபிப்பதில் எல்லாமே வந்து முடியும். அல்லது அதிலிருந்து தான் எல்லாமே ஆரம்பமாகிறது என்று கூட சொல்லலாம்.
இந்தப்பெண் அழகாக இருக்கிறாள் என்று ஆரம்பத்தில் நினைத்திருப்பினும் ஆறே மாசத்தில், அவளுக்கு வருகிறதோ இல்லையோ, பார்த்தவனுக்கு வாந்தி வந்துவிடும். ஆறுமாசத்துக்கு பிறகு வரும் வாந்தி ஏன் ஆரம்பத்திலேயே வருவதில்லை என்று லொஜிக்கலாக கேட்டால், மனிதனுக்கே உரிய ஆறாம் அறிவு தொழிற்பட ஆரம்பிக்க குறைந்தபட்சம் ஆறுமாசமாவது எடுக்கும். ஆரம்பத்திலேயே அவனுக்கு அது தொழிற்பட ஆரம்பித்திருந்தால் அவன் அவளிடம் இருந்து தப்பியிருப்பான் தான். ஆனால் மனித இனம் தப்பியிருக்கமுடியாது. அவன் இனம் தப்பியிருக்கமுடியாது. அவன் படைப்பின் நோக்கம் தப்பியிருக்கமுடியாது. இதெல்லாம் அறியாமலேயே விழுந்து எழும்பி பின்னரும் விழுந்துகொண்டிருப்பான் மனிதன். பூமியில் மனிதர்களுக்கிடையே இடம்பெறும் காதல்கதைகளை கேட்டாலே “முஸ்பாத்தி” யாக இருக்கும்.
“ரெண்டு வருஷத்துக்கு முதல் உன்னை முதல் முறை கண்ட …. அந்த செக்கனே …நீ தான் எண்டு டிசைட் பண்ணீட்டன் தெரியுமா?”
“நானும் தான் .. ஒருக்கா அம்மாள் கோயிலில நான் தேங்காய உடைக்க முடியாம கஷ்டப்பட்டு கொண்டு இருக்கேக்க வந்து உடைச்சு குடுத்தியல்லோ ..அழுகல் தேங்காய் .. அத உடைச்சிட்டு ஒரு திமிரோட என்னை பார்த்தியேயடா .. அப்பவே நீ தான் எண்டு ..”
கோயில் கேணியில் நான்காவது படிக்கட்டில் மத்தியானம் ரெண்டு மணிக்கு, உட்கார்ந்தால் பஞ்சாபி பின் பக்கம் பொசுங்கிடும். அவனோ ஏற்கனவே பொசுங்கினத அம்மாவிடம் கொடுத்து தைத்து தான் போட்டுக்கொண்டே வந்திருப்பான். இப்படி ஒரு காதல்கதை பத்து வருஷமாக போய்க்கொண்டிருக்கும். அப்புறம் இருவர் படிப்பும் முடிந்து, அவர் ஒருவழியாக ஆர்ஜெண்டீனா, மெக்ஸிகோ ரூட் பிடித்து கனடா போய், பேப்பர் எடுத்து, டெலிபோன் கார்ட் கூட டொக்கியூமெண்டா கொடுத்து காதலை கனடாவுக்கு நிரூபித்து, காதலி கம் மனைவியை ஸ்பொன்சர் பண்ணி, ரிசப்ஷன் வைத்து, இங்க்லீஷ் கிஸ் அடித்து, அதை எடுத்து Facebook இல் போட்டு லைக் வாங்கி, அந்த சந்தோஷத்தில் அன்றைக்கு இரவு தான் முதன் முதலாய் அவளிடம் ஆசையோடு நெருங்கினால்… நடுங்கும் குளிரில் அவள் ஜக்கட் கழட்டமாட்டேன் என்று அடம்பிடிக்க, காஸ் பில் எகிறினாலும் பரவாயில்லை என்று ஹீட்டர் போட்டு … எல்லாமே முதல் செக்ஸ் தான், அது முடிவதற்குள் முப்பத்தெட்டு வயதாகிவிடும்.
மனித இனம் வந்தவேலையை விட்டுவிட்டு இப்படி ஒரு கூத்து அடித்துக்கொண்டிருக்க, பூமியில் வாழ்ந்த குரங்குகள், மனிதர்களை விட புத்திசாலிகளாக இருந்தன. அவர்கள் அகராதியில் கண்டதும் காதல் என்ற கதையே கிடையாது. “கண்டதும் மாட்டர்” தான். அதற்கு பிறகு தான் தேவைப்பட்டால் ஒரு ஹாய் .. சில நேரங்களில் ஒரு Coffee! .. அதுவும் மரத்துக்கே போய் கோப்பிக்கொட்டை உடைத்து எடுத்து குடிக்க! அப்படிப்பட்ட கூர்ப்பறிவு மிக்க குரங்குகளுக்கு மனிதர்களின் நடவடிக்கையை பார்க்க சிரிப்பு சிரிப்பாக இருக்கும். அடே மொக்குகளா வந்தவேலையை விட்டுவிட்டு இந்த வேலையை செய்துகொண்டிருக்கிறீர்களே? உங்களை போய் டிசைன் பண்ணின “பிரம் கொம்பியூட்டரை” செருப்பாலே அடிக்கோணும் என்று நினைத்துக்கொள்ளும். பூமி தட்டையானது, நான்கு யானைகள் அதை தாங்கி நிற்கின்றன என்பதில் தொடங்கி, அது உருண்டை, சூரியனை சுற்றிவருகிறது, உயிரின கூர்ப்பு என்றெல்லாம் கண்டுபிடித்து கடைசியில் எல்லாவற்றுக்குமே திணிவு கொடுத்தது ஹிக்க்ஸ் வெளி தான் என்பதை மனிதர்கள் கண்டுபிடித்து பெருமைப்படும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஏதாவது குரங்குக்கூட்டம் மனிதர்களை ஏளனமாக பார்த்து “நெக்” காட்டியிருக்கின்றன. நோபல் பரிசு கொடுக்கும்போது ஊருக்குள் நுழைந்து மாங்காய்களையும் தேங்காய்களையும் ஆத்திரத்தில் பிடுங்கி எறிந்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்திருக்கின்றன. மற்றும்படி தாமும் தன்பாடுமாக வாழும் காலத்தை சந்தோஷமாக கூட்டம் கூட்டமாக திரிந்து கொண்டாடியிருக்கின்றன.
பூமி அழியப்போகிறது, மிகிந்தர்கள் வரப்போகிறார்கள் என்று பல நூறு ஆண்டுகளுக்கு முன்னமேயே பூமியில் வாழ்ந்த குரங்குகள் இனத்துக்கு தெரிந்திருந்தன. அவர்களில் சில புத்திசாலிகள் அமேசான் காட்டுப்பகுதிக்குள் ஆய்வுகூடங்கள் அமைத்து எப்படி அங்கிருந்து கூட்டம் கூட்டமாக பூமி அழிக்கப்படும்போது தப்பலாம் என்று கூட ஆராய்ச்சி செய்திருக்கின்றன. அதை மனிதர்கள் டிஸ்கவரி சனலில் படம்பிடித்து குரங்குகளின் போக்குகளை டிவியில் பிரித்துமேயந்து கொண்டிருந்திருக்கிறார்கள். இருந்தும் குரங்குகள் என்ன தான் செய்கின்றன என்று மனிதனுக்கு விளங்கவில்லை. விளங்க முயற்சிக்கவும் இல்லை.
பல நேரங்களில் குரங்குகள் மனிதர்கள் மீது இரக்கப்பட்டு விஷயத்தை சொல்லலாம் என்று நெருங்கி வந்தும் இருக்கின்றன. பெண்கள் புத்திசாலிகள் என்று நினைத்து எங்கேயாவது பெண்கள் கண்ணில் தட்டுப்பட்டால் அருகே வந்து “பூமி இன்னமும் கொஞ்சநாளில் அழியப்போகிறது” என்று சொல்ல விளைந்திருக்கின்றன. இதை கண்ட ஆண்களோ, “குரங்குகளுக்கு பெண்டுகளை கண்டா கொஞ்சம் கூட பயமில்லை” என்று சொல்லி அதிலும் தங்கள் ஆதிக்கத்தை காட்டி குரங்குகளை கலைத்துவிடுவர். பெண்கள் கூட அது உண்மை என்று நம்பி குரங்குகள் தோட்டத்துக்குள் நுழைந்தால் ஆம்பிளைகளின் சேர்ட்டையும் சாரத்தையும் கட்டிக்கொண்டு தான் துரத்துவார்கள். பார்க்க பார்க்க குரங்குகளுக்கு பாவமாக இருக்கும்.
இன்னும் சில குரங்குகள் ஆட்டம் போட்டு, கல் தோன்றா கலக்சி தோன்றாக்காலத்திற்கு முன் தோன்றிய மூத்த மொழியான “செடில்” மொழியில் பேசியாவது மனிதனுக்கு புரியவைக்க முயன்றன. மனிதனோ குரங்கு அழகாக வேடிக்கை காட்டுகிறது என்று சொல்லி அதை வைத்து வித்தை காட்டி பிழைக்க ஆரம்பித்துவிட்டான். அதோடு நின்று விடாது …
கட்டுரையை வாசித்துக்கொண்டிருந்த கந்தசாமி சுமந்திரனை நிமிர்ந்து பார்த்தார். எழுத்தின் நடையை பார்த்ததுமே இது சுமந்திரன் தான் எழுதியிருக்கவேண்டும் என்று தோன்றியது.
“என்னடா இப்பிடி எழுதிக்கிடக்கு … ஏன் இதை எழுதினி?”
“இதான் என்னோட பிஎச்டி தீஸிஸ், அப்புரூவ் ஆனா அடுத்த பிரகராதி ரிலீஸ்ல போட்டிடுவாங்கள்”
“என்னடா எங்களை பற்றி இப்படி போட்டிருக்கிற? பாக்கிறவன் என்ன நினைப்பான்? அதுவும் குரங்குகளை பற்றி ..சொன்னாப்போல இந்த மொக்கு குரங்குகள் எல்லாம் எங்களை விட கெட்டிக்காரரா?”
“எங்களை எண்டு என்னையும் சேர்க்காத .. நான் மனுஷனே இல்லை கந்தசாமி”
“நீ சொல்லவே தேவையில்லை .. அதான் எல்லாருக்குமே தெரியுமே!”
கந்தசாமியோடு சுமந்திரன் எவ்வளவு காலம் நண்பனாக இருந்தாலும் சில நேரங்களில் கந்தசாமியின் நக்கல் கதைகள் சுமந்திரனுக்கு புரிவதில்லை.
“மனிதர்கள் வந்த நோக்கத்தை மறந்து தங்களுக்க அடிபட்டது தான் பெரும் பிழை .. இத்தனை ஆயிரம் வருஷங்கள் எலிகள் கொஞ்சம் கொஞ்சமா டிசைன் பண்ணி பிரபஞ்சத்தையே உலுக்கிக்கொண்டிருக்கும் அந்த கேள்வியை கண்டுபிடிக்கிற டைம்ல .. எல்லாமே கவுண்டு கொட்டிப்போச்சு”
“என்ன சொல்லுற சுமந்திரன்? எலிகளா? டிசைன் பண்ணினதா? .. அதென்ன கேள்வி? .. எல்லாமே விட்டலாச்சாரியார், ஷங்கர் படம் போல கதை போகுது”
“இட்ஸ் ட்ரூ கந்தசாமி .. எலிகள் தான் இந்த மிசனுக்கே இன்சார்ஜ். எல்லாமே சரியா தான் போய்க்கொண்டிருந்தது .. ஆனா கடைசி நேரத்தில மிகிந்தர்கள் வந்து குழப்பிவிட்டான்கள் .. ச்சே”
“டேய் .. இனியும் உண்ட புளுகுகளை நான் கேட்கிறதா இல்ல … ஒழுங்கா மரியாதையா என்னை பூமிக்கு திருப்பி அனுப்பிவிடு.. இந்த அழிஞ்சு போச்சு கிழிஞ்சு போச்சு என்ற வித்தை எல்லாம் வேண்டாம்”
“விளங்குது கந்தசாமி .. இனி நான் பேசுவதாகவே இல்லை .. நான் வந்தவேளை ஓரளவுக்கு முடியுது … கொஞ்ச நேரம் தான் ..எங்களை கூட்டிக்கொண்டு போக வாகனம் வந்திடும் .. ரிசெர்ச் லாபுக்கு போனாப்பிறகு உனக்கு எல்லாமே விளங்கும்.”
“ரிசெர்ச் லாபா?”
“யேப் … எலிகளிண்ட ரிசெர்ச் லாப் .. இப்போதைக்கு அதுகளிட்ட இருக்கிற ஒரே சப்ஜெக்ட் நீ தான் கந்தசாமி”
“என்ன கருமம்டா இது .. நான் எலிகளுக்கு சப்ஜெக்ட்டா? பூமில எதையாவது கண்டுபிடிச்சா எலிகளில தானே முதலில பரிசோதனை செய்வம் .. இங்க என்ன தலைகீழா .”
இதைக்கேட்டது சுமந்திரன் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தார். பொதுவாக சுமந்திரன் ஒரு நமுட்டு சிரிப்பு தான் சிரிப்பது வழக்கம். ஆனால் இந்தமுறை அவரால் சிரிப்பை அடக்க முடியவில்லை. கந்தசாமிக்கு இதைப்பார்க்க கோபம் பொத்துக்கொண்டு வந்தது.
நான் இங்க ஒருத்தன் அஞ்சும் கெட்டு அறிவும் கெட்டு கிடக்கிறன். நீ என்னடான்டா சிரிச்சுக்கொண்டு இருக்கிறாய். கொஞ்சமாவது சுரணை இருக்காடா உனக்கு?
சுமந்திரனுக்கு இன்னமும் சிரிப்பை அடக்கமுடியவில்லை. கந்தசாமி போன்ற ஆட்களை டிசைன் பண்ணி உலவ விட்ட டெவலப்பரை எலிகளிடம் சொல்லி உடனேயே வேலையை விட்டு தூக்கவேண்டும் என்று தனக்குள்ளே நினைத்துக்கொண்டார்.
இஞ்ச பார் கந்தசாமி … முதலிலேயே சொன்னது போல, பூமி எண்டது சாதாரணமான ஒரு கிரகமே கிடையாது. அது கொம்பியூட்டர் .. ஒரு டிவைஸ் .. பிரபஞ்சமே புரியாமல் வியந்து தேடிக்கொண்டிருக்கும் அந்த கேள்வியை கண்டுபிடிக்கிறதுக்காக டிசைன் பண்ணுப்பட்ட ப்ரோகிராம்….
அட பன்னாடை பரதேசிகளா .. அப்ப நாங்கள் எல்லாமே ப்ரோகிராம் பண்ணுப்பட்ட ஆக்களா? ச்சே அப்பவே பாரதி சொன்னான் .. “போனதெல்லாம் கனவினை போல் புதைந்தழிந்தே போனதனால் நானும் ஓர் கனவோ, இந்த ஞாலமும் பொய்தானோ “ .. ச்சே நான் தான் கேட்க இல்ல “
“கேட்டா மட்டும் ஏதாவது வெட்டி விழுத்தியிருப்பியா? ஆ ஊ எண்டா பாரதி சொன்னான், வள்ளுவன் சொன்னான், வைதேகி காத்திருந்தாள் எண்டு கவிதையை மட்டும் எடுத்து விடுங்கடா”
வர வர சுமந்திரன் பேச்சில் மரியாதை குறைவதை கந்தசாமி கவனிக்க தவறவில்லை. ஆனாலும் இப்போதைக்கு அவனை விட்டால் வேறு போக்கிடம் இல்லாததால் அடக்கி வாசிக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டார். தன் சிக்கல் மட்டும் தீர்ந்தாப்பிறகு இவனை ஒரு வழிப்பண்ணவேண்டும் .. முடியுமென்றால் எலிகளிடம் கேட்டாவது, இந்த எலிகள் எங்களை அடக்கி ஆண்டிருக்கின்றன என்பதை கந்தசாமியால் நம்பவே முடியவில்லை. அதுவும் தமிழனாக, வணங்காமுடி யாழ்ப்பாண தமிழன், உலகத்துக்கே வீரம் என்றால் என்ன என்பதை விளக்கி கூறியவன். ஒரு சாதாரண எலி தங்களை பரிசோதனை செய்திருக்கிறது என்றால்? மீண்டும் சந்தேகம் வந்தது.
நியமா தான் சொல்லுறியா சுமந்திரன். எலிகள் தான் பூமியை டிசைன் பண்ணினதா?
டிசைன் பண்ணினது எலிகள் கிடையாது. நீ இருந்த பூமியை டிசைன் பண்ணினது பிரம் கொம்பியூட்டர். ஆனா அதை டிசைன் பண்ணினது தான் எலிகள். இந்த ரிசெர்ச் லாபையே ரன் பண்ணுற பிரபஞ்சத்தின் அதிசக்தி வாய்ந்த உயிரினங்கள்.
ஆனா நாங்க அதுகளையே வச்சு ஆராய்ச்சி செய்தமே சுமந்திரன்.
அடே மொக்கு சாம்பிராணி. அதுகள் தான் உங்களை வச்சு ஆராய்ச்சி செய்ததுகள். ஆய்விண்ட ரிசல்ட்டை எடுத்து இங்க கரும்பொருளில இருக்கிற ரிசெர்ச் லாபுக்கு அனுப்புறதுக்காக உங்களுக்கே சப்ஜெக்ட்டா வந்துதுகள். நீங்களும் விஷயம் தெரியாம என்னத்தை கண்டுபிடிச்சாலும் முதலில அதுகளில தானே டெஸ்ட் பண்ணுவீங்க .. அடுத்த செக்கனே ரிசல்ட் இங்க வந்திடும் ..
எண்ட கடவுளே ..
அது மட்டுமில்ல, எலிகள் இல்லாத இடமே பூமில இல்லை, நில எலி, சுண்டெலி, காட்டெலி, மூஞ்சூறு என்று எல்லா இடமுமே எலி இருந்து ரிசெர்ச் செய்துகொண்டிருக்கும். பிரபஞ்சத்திலேயே முதன் முதல் ஓர்கானிக் கொம்பவுண்டை வச்சு டிசைன் பண்ணின ரிசெர்ச் .. சூப்பர் டூப்பர் சக்சஸா போய்கொண்டு .. ஒல்மொஸ்ட் அந்த கேள்வியை கண்டுபிடிச்சு .. பார்ட்டி எல்லாம் வைக்க ப்ளான் பண்ணின டைம்ல தான் .. பச்ச் .. பூமியே அழிஞ்சு போச்சு ..
டேய் கேள்வி கேள்வி எண்டு சொல்லிகொண்டிருக்கிறாயே .. என்ன தான் அந்த கண்டறியாத அறுந்த கேள்வி எண்டு தான் சொல்லித்துலையேன் .. அப்பதில இருந்து அலுப்படிக்கிறாய்
“அந்த கேள்வி எது என்று தெரிந்திருந்தால் இத்தனை தேடலும் இருந்திருக்காதே கந்தசாமி”
வாசல் பக்கம் இருந்து வந்த தெய்வீகமான குரலை கேட்ட மாத்திரத்திலேயே திரும்பிப்பார்த்த கந்தசாமி, தனக்கு முன்னாலே தெரிந்த காட்சியை கண்டகணமே மெய்சிலிர்த்து வியர்த்து விதுவிதுர்த்து .பரவசத்தில் கையேந்தி கும்பிட்டார்.
“ஐயோ எண்ட கடவுளே!”
![310691_10150312965606415_753825724_n[3] 310691_10150312965606415_753825724_n[3]](http://lh6.ggpht.com/-Wjl_OMHjyJ8/UJJp2jFhRxI/AAAAAAAAFgo/qzP2Y2VJfjE/310691_10150312965606415_753825724_n%25255B3%25255D%25255B4%25255D.jpg?imgmax=800)
நானும் ஒரு கந்தசாமி தான் போல கிடக்கு :D
ReplyDeleteஎலி மாட்டர் நல்லா இருக்கு!
ReplyDeleteமைந்தன் ... நீங்க கந்தசாமி எண்டா ... செல்வராணி யாரு .. வெளக்கம் ப்ளீஸ் !
ReplyDeleteநன்றி வீணா .. இந்த அத்தியாயம் .. மொக்கை பாதி .. மாட்டார் பாதி .. மொக்கையிலும் மாட்டார் இருக்கு .. அது வேற மாட்டார்!
ReplyDeleteமுதல் ரெண்டு மூண்டு பந்தி வாசிக்கேக்க என்ன இழவடா இது எண்டமாதிரி ஒரு உணர்வு உருவாகிச்சு. கீழ சுமந்திரண்ட phd thesis எண்டு போட்டு தூள் கிளப்பீட்டீங்க தலை. அப்பிடியே ஒரு ஆய்வுக்கட்டுரையிண்ட வலியை கொண்டந்திட்டீங்க. எலி மாட்டர் சூப்பர்.
ReplyDeleteமொக்கையிலையும் நிறைய மிக்ஸ் பண்ணி இருக்கிறியள். கறந்தபால் கன்னலொடு நெய்கலந்ததுபோல விஷயம் இருக்கு.
"கந்தசாமி கள்ளுத்தவறணையில் கொட்டாத தூஷணம் எல்லாம் சாதியின் பேரால் மாறி மாறி கொட்டி திட்டிவிட்டு ஒரு கட்டத்தில் “சேர் இவன் நுள்ளீட்டான்” என்று போலீஸில் ஒரு சாதி போய் கொம்பிளைன் கொடுக்கும்." இதிலை ஒரு எழுவாய் குழப்பம் இருக்கிறதாக படுகிறது, தெளிவு படுத்தவும்.
செடில் மொழி,ஆகா அருமை.
“எங்களை எண்டு என்னையும் சேர்க்காத .. நான் மனுஷனே இல்லை கந்தசாமி”
“நீ சொல்லவே தேவையில்லை .. அதான் எல்லாருக்குமே தெரியுமே!”
"கந்தசாமியோடு சுமந்திரன் எவ்வளவு காலம் நண்பனாக இருந்தாலும் சில நேரங்களில் கந்தசாமியின் நக்கல் கதைகள் சுமந்திரனுக்கு புரிவதில்லை."
ஓவர் நக்கல்.
ஆ ஊ எண்டா பாரதி சொன்னான், வள்ளுவன் சொன்னான், வைதேகி காத்திருந்தாள் எண்டு கவிதையை மட்டும் எடுத்து விடுங்கடா”
இல்லை தெரியாமத்தான் கேக்குறன் இந்தமுறை நம்மள குறிவச்சு தாக்கினமாதிரி இருக்கு. எதன்டாலும் நேர்ல பேசிக்கொள்ளலாம், இப்பிடி பொதுவெளியில வெடியை போடுவதை கண்டிக்கிறேன். அண்ணன் வாலிபன் சார்பாகவும் இந்த கண்டனத்தை தெரிவிக்கிறேன்.
குரங்கு நெக் காட்டுவதற்கு காரணம் இது தானா..? சூப்பர் விளக்கம் தான் போங்கண்ணே...:) //அடே மொக்குகளா வந்தவேலையை விட்டுவிட்டு இந்த வேலையை செய்துகொண்டிருக்கிறீர்களே? உங்களை போய் டிசைன் பண்ணின “பிரம் கொம்பியூட்டரை” செருப்பாலே அடிக்கோணும் என்று நினைத்துக்கொள்ளும். பூமி தட்டையானது, நான்கு யானைகள் அதை தாங்கி நிற்கின்றன என்பதில் தொடங்கி, அது உருண்டை, சூரியனை சுற்றிவருகிறது, உயிரின கூர்ப்பு என்றெல்லாம் கண்டுபிடித்து கடைசியில் எல்லாவற்றுக்குமே திணிவு கொடுத்தது ஹிக்க்ஸ் வெளி தான் என்பதை மனிதர்கள் கண்டுபிடித்து பெருமைப்படும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஏதாவது குரங்குக்கூட்டம் மனிதர்களை ஏளனமாக பார்த்து “நெக்” காட்டியிருக்கின்றன. நோபல் பரிசு கொடுக்கும்போது ஊருக்குள் நுழைந்து மாங்காய்களையும் தேங்காய்களையும் ஆத்திரத்தில் பிடுங்கி எறிந்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்திருக்கின்றன. மற்றும்படி தாமும் தன்பாடுமாக வாழும் காலத்தை சந்தோஷமாக கூட்டம் கூட்டமாக திரிந்து கொண்டாடியிருக்கின்றன.//
ReplyDeleteநன்றி கேதா ..
ReplyDelete//அப்பிடியே ஒரு ஆய்வுக்கட்டுரையிண்ட வலியை//
சுத்தி சுத்தி ஆராய்ச்சியாளர்கள் இருக்கிறது தான் காரணமோ?
//இல்லை தெரியாமத்தான் கேக்குறன் இந்தமுறை நம்மள குறிவச்சு தாக்கினமாதிரி இருக்கு. எதன்டாலும் நேர்ல பேசிக்கொள்ளலாம், இப்பிடி பொதுவெளியில வெடியை போடுவதை கண்டிக்கிறேன். அண்ணன் வாலிபன் சார்பாகவும் இந்த கண்டனத்தை தெரிவிக்கிறேன்.//
அண்ணனை ஏன் பாஸ் இழுக்கிறீங்க .. அவர் பிறகு கோபியை இழுப்பார் .. பிறகு சக்திவேல் அண்ணா வாசிக்காமலேயே அருமை என்று கொமென்ட் போட்டிட்டு எஸ்கேப் ஆயிடுவார் .. நம்ம நிலைமை வங்குரோத்து நிலைமைக்கு போய்க்கொண்டு இருக்கு பாஸ்.
வாங்க செழியன் .. எல்லாமே ஒரு flow ல அடிக்கிறது தான் ..!
ReplyDeleteகாதல் அனுபவங்கள் தரமாக இருந்தது...உலகம் இலூசன் கந்தசாமியின் வேர்ஸன் தரம்.மற்றிக்ஸ் பார்த்தீர்களா அதிலும் இதே இல்லூஸன் தான்(எனக்கு விளங்கியவரையில்)
ReplyDeleteநன்றி கிருத்திகன் ... Matrix பார்க்கவில்லை .. எல்லாமே இலூஷன் தான் ... பாரதியை இழுத்தது அதுக்கு தான்!
ReplyDelete//காதல் அனுபவங்கள் தரமாக இருந்தது//
பாண்டு கிளிஞ்சிடுச்சு!