நேற்று அவள் இருந்தாள்.

 

185815_10151190737308313_1351057308_n

பாக்கியம் செத்து போனாள்.

மீண்டும் ஒரு முறை சாமி நெஞ்சில் காது வைத்துப்பார்த்தார். அசுமாத்தம் இல்லை. மூச்சுக்கான எந்த சிலமனும் இல்லை. உடல் ஏற்கனவே சில்லிட ஆரம்பித்துவிட்டிருந்தது. பின்னந்தலையில் இருந்து இரத்தம் திட்டு திட்டாக இன்னமும் வழிந்து ஓடியபடியே. தரையில் சுளகு, கொஞ்சம் தாறுமாறாக கிடந்த முருங்கை இலைகள். நிச்சயமாக பாக்கியம் செத்துதான் போனாள். பக்கத்திலேயே ஒரு ஸ்பானர். ஸ்பானரின் முனையில் மாத்திரம் கொஞ்சம் இரத்தம் ஒட்டியிருந்தாற்போல; சாமி அதை எடுத்துப்பார்த்தார். பாக்கியத்தை பார்த்தார். பற்கள் கொஞ்சம் வெளித்தள்ளி சாமியை பார்த்து ஏளனமாக சிரிப்பது போல தோன்றியது.

ஓங்கி ஸ்பானரால் மீண்டும் ஒரு அடி. “னங்” என்ற சத்தத்துடன் ஸ்பானர் எகிறியது. இம்முறை இரத்தம் பெரிதாக சீறவில்லை.

குசினிக்குள் போனார். ஸ்பானரை நன்றாக விம் பார் கொண்டு தேய்த்து கழுவினார். பின்னர் பக்கத்தில் தொங்கிக்கொண்டிருந்த அடுப்புத்துணியால் துடைத்துவிட்டு, நிதானமாக கேத்திலை அடுப்பில் ஏற்றி, தேங்காய் மட்டை வச்சு …. தேநீர் கோப்பையுடன் மீண்டும் நடு ஹோலுக்கு வந்தார். பாக்கியம் இன்னமும் அப்படியே கிடக்க இரத்தம் இன்னமும் கொஞ்சம் பரவி, ஈக்கள் மொய்க்க ஆரம்பித்திருந்தன. தேனீரை உறிஞ்சியபடியே சுற்றி சுற்றிப்பார்த்துவிட்டு, கரப்பான் பூச்சி மருந்தை எடுத்து ஈ மொய்க்கும் இடத்தில் பீய்ச்சி அடித்தார். மீண்டும் தேநீர் கோப்பையையும் ஸ்பானரையும் கையில் எடுத்துக்கொண்டு, வெளிக்கதவை நன்றாக சாத்தி பூட்டிக்கொண்டு முற்றத்துக்கு வந்தார். அங்கே கழுவிப்பூட்ட கொடுக்கப்பட்டிருந்த ஓவசியர் நாகலிங்கத்தின் பழைய ரலி சைக்கிள் இன்னமும் தலைகீழாக ஒற்றைச்சில்லோடு நின்றது. மற்றைய சில்லை கையில் எடுத்தபடியே நிலத்தில் விரித்துவைத்திருந்த சாரத்தின் மேலே உட்கார்ந்தார் சைக்கிள் கடை சாமி.

பின் சில்லின் நடு அச்சை வெளியே எடுத்து இரண்டு புறமும் கிரீஸ் தடவி போல்ஸ் ஒவ்வொன்றாக அழுத்தியபோது சாமிக்கு கைகள் நடுங்காமல் கவனித்தபோது பார்க்க அவருக்கே ஆச்சர்யமாக இருந்தது. வருகிற வைகாசியோடு செத்துக்கிடக்கிற பாக்கியத்தை கலியாணம் கட்டி சரியாக முப்பது வருடங்கள். மணவறையில் பக்கத்தில் வந்து நின்ற பாக்கியம் ஞாபகத்துக்கு வந்தாள். இவர் களவாக இடுப்பை கிள்ளியபோது அவள் திருப்பி கிள்ளியதும், அதற்கு பிறகு சாமி பேசாமல் விட்டதும் ஞாபகம் வந்தது. முதலிரவில் மெதுவாக முத்தமிட நெற்றியருகே நெருங்கியபோது அவள் வேகமாக பிடரி மயிரை இரண்டு கைகளாலும் கெட்டியாக பிடித்து ப்ச் பிச் என்று … போல்ஸ் ஒன்று கீழே தவறி விழுந்தது. எடுத்து நிதானமாக மண்ணெண்ணெய் தோய்த்த துண்டால் ஒத்தி மீண்டும் கிரீஸில் அமுக்கினார். முதல் வருடத்திலேயே மூத்தவன் ரமேஷ் பிறந்துவிட்டான்.

“எருமை நாயை கட்டி இத்தினை வருஷத்தில என்ன சுகத்தை கண்டன் … சனியன் சனியன் … இவ்வளவு சொல்லுறன் .. காதுல போடுதா பாரு”

காலையிலேயே ஆரம்பித்துவிட்டாள். வழமையான பாக்கியத்தின் திட்டு என்றே நினைத்துக்கொண்டார். திரும்பி பதில் சொன்னாலும் திட்டுவாள். சொல்லாவிட்டாலும் திட்டுவாள். கொஞ்ச நேரத்தில் தானாகவே அடங்கிவிடுவாள் என்று பேசாமலே இருந்தார். முப்பது வருடமாக பொறுமையாக இருந்தவர். இதுவும் அடங்கிவிடும். சைக்கிள் சில்லில் கவனமானார்.

“லீவு நாளுமா அன்னிக்கு கண்டறியாத ஓவசியரிண்ட கிழிஞ்ச சைக்கிள கழுவிப்பூட்டிறத விட்டிட்டு சிவலிங்கத்திட்ட போய் சீட்டுக்காசை வாங்கியோண்டு வா பார்ப்பம் … “

இன்றைக்கு சீட்டுக்காசு தான் பிரச்சனை என்று புரிந்துவிட்டது. சைக்கிள் கடை சாமி சீட்டும் பிடிப்பார். நூறு ரூபாய் சீட்டில் ஆரம்பித்து, கொஞ்சம் கொஞ்சமாக பத்தாயிரம் ரூபா சீட்டு வரைக்கும் பிடிக்க ஆரம்பித்தார். முதல் தவணை வசூல் சீட்டு மொத்தமாக பாக்கியம் கைக்கு போய்விடும். அப்படி உழைத்த காசில் தான் ரமேஷை இத்தாலிக்கும் அனுப்பினார்கள். அவன் போன இரண்டாம் வருடத்திலேயே பக்கத்துவீட்டு நல்லசிவத்தின் மூத்ததை ஸ்பொன்சர் பண்ணி கூப்பிட்டுவிட்டான். காதலாம். வீட்டில் யாருக்கும் தெரியாது. பாக்கியத்துக்கு மகன் மேல் இருந்த கோபம் பூரா சாமி மீது திரும்பியது. அது வரைக்கும் கத்தரிக்காய் புழுவுக்கும், வாழைக்குலை விற்கமுடியாமல் போனதுக்கும் விழுந்த ஏச்சு இப்போது மகன் சொல்லாமல் கொள்ளாமல் காதலித்ததுக்கும் சேர்த்து விழுந்தது. பேத்தி வயிற்றில் இருக்கும்போது மகன் தன்னை கூப்பிடாமல் தன்னோடு ஒன்றாக பங்கு கிணற்றில் கூழான் பிலாப்பழத்துக்கு சண்டை பிடிக்கும் நல்லையாவின் மனைவியை அழைத்தபோது, சாமிக்கு ஏச்சு இன்னமும் கூடியது.

“சிவலிங்கம் வீட்டுக்கு கக்கூஸ் உடைச்சு கட்டுறான் .. நீ இங்க இருந்து சில்லை சிரைச்சுக்கொண்டு இரு .. போய் வாங்கிட்டு வாவன் ஆம்பிளை எண்டா”

இரண்டாவது கூறுக்கு மிச்ச சீட்டுக்காரரை மிரட்டி கேட்கவிடாமல் பண்ணி, தான் மட்டும் கேட்டபோது சிவலிங்கம் மீது சாமிக்கு சந்தேகமாக தான் இருந்தது. விதானை ஒருநாளும் அநியாயம் பண்ணமாட்டான் என்ற நம்பிக்கையில் சாமி சீட்டை கொடுத்துவிட்டிருந்தார். ஆனால் அதற்கு பிறகு அவன் கட்டாமல் உச்ச தொடங்கிவிட்டான். கடைசியாக ஏழு தவணைகள் அவன் சரியாக கட்டவில்லை. கேட்க போகும்போதெல்லாம் சீட்டுப்பிடிக்கிற விஷயத்தை இயக்கத்திடம் சொல்லி மீட்பு நிதி கேட்க வைத்துவிடுவேன் என்று மிரட்டினான். சாமி பொதுவாகவே பயந்த சுபாவம் உள்ளவர். ஏன் வம்பு என்று திரும்பிவிட்டார். அதை வந்து பாக்கியத்திடம் சொன்னதும் தான் தாமதம்.

“மாடு. எருமை செக்கு மாடு. விதானை சொன்னா அதையே கேட்டுக்கொண்டு வருது…”

அவள் சொல்லும்போது முன் சில்லை சைக்கிளில் பூட்டி நேர் பார்த்துக்கொண்டிருந்தார் சாமி.  இடப்பக்கம் நட்டை இழக்கி, ஒருபக்கம் இழுத்தார்.

“இண்டைக்கு சிவலிங்கம் மாட்டன் எண்டுவான் .. நாளைக்கு கனகநாயகம் கள்ளன் மாட்டன் எண்டுவான் … பே எண்டு கேட்டுக்கொண்டு வரும் இந்த சனியன்”

ரிம் இன்னமும் கொஞ்சம் வலப்பக்கம் சாய்ந்திருந்தது போல தெரிந்தது. ஸ்பானரால் நட்டை இறுக்கி இலேசாக்கி கூர்மையாக நேர் பார்த்தார்.

“கிழட்டு வயசில விளக்கணைச்சா பிறகும் மேல வந்து கை போட தெரியுது .. போய் கைநீட்டி சீட்டுக்காசை வாங்கெண்டா அவருக்கு மூக்கு நீண்டிடும்.”

சைக்கிள் சாமி இன்னமும் கூர்மையாக ரிம் நேர் பார்த்தார். இன்னும் கொஞ்சம் தான். இந்த பக்கம் இரு இறுக்கு. அந்தப்பக்கம் ஒரு இறுக்கு. ரெண்டு ரிம் கம்பியையும் கொஞ்சம் இறுக்க.

“ஆம்பிளை எண்டு வெளில சொல்லிடாத .. உன்னை விட உனக்கு உச்சுற சிவலிங்கத்தை கட்டியிருந்தாலும் காரியமா போயிருக்கும்”

சைக்கிள் சாமி நிமிர்ந்து பார்த்தார். கையில் இருந்த ஸ்பானரோடு அவளை நெருங்கினார். நடு ஹோலில் முருக்கை இலையை சுண்டியபடி இவரை பார்க்காமல் பாக்கியம் அவள் இஷ்டத்துக்கு சொல்லிக்கொண்டிருந்தாள். சாமி பக்கத்தில் வந்து நின்றதை கவனிக்கவில்லை. குனிந்து இலை சுண்டிக்கொண்டிருந்தவளின் பிடரி நன்றாக தெரிந்தது.

“வீரவான் முக்குற முக்கு ஊருக்கு தெரிஞ்சா சீட்டு காசு கட்டுறவன் கூட உச்சிடுவான் .. அவரும் அவரிண்ட  கொ..”

“னங்” என்று ஒரே அடி. 

சின்னதுக்கும் கூப்பாடு போடும் பாக்கியம் எந்த சத்தமும் போடவில்லை. அப்படியே சரிந்தாள். சாமி எந்த சலனமும் இல்லாமல் சுற்றிவந்தார். மூச்சுப்பார்த்தார்.  அந்த ஒரே அடி தான்.

பாக்கியம் செத்து போனாள்.

பின் சில்லை பூட்டி நேர் பார்த்து நட்டு இறுக்கிய பிற்பாடு சைக்கிளை நிமிர்த்தினார் சாமி. டபிள் ஸ்டாண்டில் விட்டுவிட்டு கைகளால் சுழட்டிப்பார்த்தார். எல்லாமே சரியாக இருந்தது போல தோன்றியது. திருப்தியாக இருந்தது. முற்றத்துக்குள்ளேயே ஒரு ரவுண்ட் வந்தார். சீட் உயரம் பதித்து, ப்ரேக் கொஞ்சம் இழக்கி எல்லாமே சரியாக இருந்தது.

உள்ளே போனார். பாக்கியம் அப்படியே கிடந்தாள். தலைப்பக்கம் பூரா இரத்தம் இப்போது கட்டியிருந்தது.  ஈக்கள் மொய்த்திருந்தன. பக்கத்தில் கிடந்த கரப்பான் பூச்சி மருந்து டின்னை எடுத்து பத்திரமாக கப்பேர்டுக்குள் வைத்தார். அலுமாரிக்குள் கிடந்த பாக்கியத்தின் இரண்டு மூன்று சேலைகளை எடுத்தார். தலையிலிருந்து அடிக்கால் வரை உடலை சேலைகளால் சுற்றி சுற்றி கட்டினார். பத்தியில் கிடந்த இரண்டு செத்தமிளகாய் சாக்குகளை கொண்டுவந்து தலைப்பக்கமாக ஒன்று, கால்பக்கமாக ஒன்று செருகி, இடுப்பில் வைத்து இளக்கயிற்றால் நன்றாக இறுக்கி கட்டினார். அயர்ச்சியாய் இருந்தது. வீட்டில் என்றுமில்லாத ஒரு அமைதி. பானசோனிக் ரேடியோவில் வர்த்தக சேவையை திருகிவிட்டு தேநீரை இன்னொரு மிடறு குடித்த படியே சாக்கு மூட்டையை வெறித்து பார்த்தார்.

சாக்கோடு சேர்த்து கால் பகுதியை தர தரவேண்டு இழுத்துக்கொண்டு பின் பத்திவழியாக பிலாமரத்தடியில் கிடத்தினார். பக்கத்தில் பாழடைந்து போய் கிடக்கும் பங்கருக்குள் குப்பைகளை கொஞ்சம் அகற்றிவிட்டு, உள்ளே உடலை போட்டார். பத்தியில் மாட்டியிருந்த புளியம் விறகு தூக்கை இழுத்துக்கொண்டு வந்து பங்கருக்குள் அடுக்கினார். திடீரென்று ஏதோ ஞாபகம் வந்தவராக மண்வெட்டியை எடுத்து வந்தார். அடுக்கிய விறகை மளமளவென நீக்கிவிட்டு, மண்வெட்டியால் மீண்டும் சாக்கின் தலைப்பகுதியில் தடக் தடக் தடக் தடக்கென்று நாலு தரம் போட்டார். மீண்டும் விறகை அடுக்கி, கிடந்த நான்கைந்து டயர்களை தூக்கி போட்டு, அதற்கு மேல் மீண்டும் குப்பைகளை போட்டு, மண்ணெண்ணெய் ஊற்றி நெருப்பு பற்றவைக்க, கண்ணை எரிக்கும் புளிச்சம் விறகு, டயர் தீய்ந்த நாற்றத்துடன் எரிய ஆரம்பித்தது.

கொஞ்சநேரம் அப்படியே பார்த்துக்கொண்டிருந்தவர், கிணற்றடியில் போய், சுத்தமாக லைபோய் போட்டு தேய்த்து குளித்தார். நெருப்பு இப்போது ஜீவாலை விட்டு எரிய ஆரம்பித்து பிலா கொப்பு இலைகளையும் கறுக்க ஆரம்பித்திருந்தது. குளித்து முடிந்து உடுப்பு மாற்றி, வெள்ளை சாரம் சேர்ட்டுக்கு மாறியவர், மீண்டும் இரண்டு டயர்களை நெருப்புக்கு மேலே போட்டுவிட்டு, வீட்டை பூட்டி கேட்டை கொழுவிக்கொண்டு, ஓவசியரின் கழுவிப்பூட்டிய சைக்கிளில் சைக்கிள் கடை சாமி

சிவலிங்கத்தின் வீட்டுக்கு புறப்பட்டார்.

 

&&&&&&&&&&&&&&&&


43 comments :

 1. ரெண்டாம் தரம் வாசிக்கேக்க தான் மேட்டர் இதுதான்னு புரிஞ்சுது இந்த மண்டைக்கு ;)

  ReplyDelete
  Replies
  1. என்ன தலைவரே இப்பிடி சொல்லிபுடீக ... குழப்பாம எழுதோணும் எண்டு யோசிச்சும் நம்ம நிலைமை இப்பிடியா?

   Delete
 2. சயந்தன்5/17/2013 2:12 am

  "ரெண்டாம் தரம் வாசிக்கேக்க தான் மேட்டர் இதுதான்னு புரிஞ்சுது இந்த மண்டைக்கு ;)"
  அப்ப...எனக்கு...புரிஞ்சது..பிழையா??ரெண்டு..மூணு..தரம்..வாசிச்சும்..எனக்கு..ஒண்ணு..தான்..புரிஞ்சது!..அதுபடி..கதை..மிக..நன்றாக..இருந்தது!வாழ்த்துக்கள்..அண்ணா!

  ReplyDelete
 3. What I feel is killing is not good. This is Samy's weakness. Final line is Marvalous. But again revenge.
  If one takes revenge the he/she is nailing two coffins.
  There is another thing call decent revenge.

  In the last paragaraph மீண்டும் சாக்கின் தலைப்பகுதியில் தடக் தடக் தடக் தடக்கென்று is too much.

  But to read a story in our known accent is very interesting.கிணற்றடியில்,வெளிக்கதவை,சாக்கோடு,கேட்டை

  May God bless you to write more & morea & more.

  Siva

  ReplyDelete
  Replies
  1. Thanks Siva .. Its a story and story can always tell a message by bringing a negative impact to a reader. And you rightly picketed. Big thanks for it.

   //Final line is Marvalous. But again revenge.//
   There are three possible interpretations for this final line. For a hint, just telling you "Vithaanaiyaar" got the police/custody power in rural villages.

   Cheers!

   Delete
 4. Hyper active பாக்கியமா? பாவம் அவங்களும் தான் என்ன பண்ணுவாங்கள்? எல்லாரையும் திட்டி தீர்க்க வேண்டியதுதான். இந்த விஷயத்தில நான் dating ஐ ஆதரிக்கிறான்.

  திரும்ப எதுக்கு மண்வெட்டியால போட்டனீங்கள்? இதென்ன பாலா படமா?

  ReplyDelete
  Replies
  1. //இந்த விஷயத்தில நான் dating ஐ ஆதரிக்கிறான்.//

   டேட்டிங் நிச்சயமா இப்படியான சாத்தியங்களை குறைக்கலாம் . ஆனால் மனித மனங்கள் காலத்தோடு மாறுற விஷயம் . இந்த கதைல பாக்கியம் டேஞ்சரான ஆளா இல்ல கோபத்தை முப்பது வருஷமா அடக்க தெரிஞ்ச சாமி டேஞ்சரான ஆளா? கோபத்தை கட்டுபடுத்திறது உண்மையான அங்கர் மனெஜ்மெண்டா? நீங்க ரிசெர்ச்சர் .. .சொல்லுங்களேன் .

   //திரும்ப எதுக்கு மண்வெட்டியால போட்டனீங்கள்? இதென்ன பாலா படமா?//
   அவ்வளவு .கோபம் அதை காட்டாம முப்பது வருஷம் குடும்பம் நடத்தியிருக்கிறார். ஆனா தப்பித்தவறி உயிரோட இருந்திட்டாலும் ஏன்டா சந்தேகம் வர்ற அளவுக்கு கோபம் .. கொஞ்சம் பயம் .. சாமியின் பயந்த சுபாவம் தான் அவனின்ட எதிரி.

   //பாலா படமா?//
   யேன் நாம போட கூடாதா மேடம்!.

   நன்றி நன்றி

   Delete
  2. பாக்கியமும் முப்பது வருஷமா அடக்கிட்டு தானே இருந்தாங்கள்

   Delete
  3. இல்லையே .. பாக்கியம் வாழ்நாள் பூரா தொனதொனத்துக்கொண்டு தானே இருந்தா. அது தான் சரியான அங்கர் மனேஜ்மெண்டு எண்டு நினைக்கிறேன் (இரண்டு போரையும் ஒப்பிடேக்க). அமுசடக்கிகாரர் டேஞ்சர் ஆசாமிகள் எண்டு பட்சி சொல்லுது!

   Delete
 5. கதை கச்சிதம் JK. சைக்கிள் திருத்திறது, கூழல் பலாபழம் மாதிரி சின்ன சின்ன details அருமை.

  ReplyDelete
  Replies
  1. நன்றி தன்யா ... நேரம் கிடைச்சா புதுமைப்பித்தனின் செல்லமாள் வாசிச்சு பாருங்க .. அதை வாசிச்சிட்டு தான் இதை எழுதினான் எண்டு சொன்னா யாருமே நம்ப ..மாட்டாங்கள் . ஆனா ஒரு குட்டி தொடர்பு ரெண்டு கதைக்கும் இருக்கு.

   Delete
 6. If a person kill without any planning and only as a result of sudden anger, will that person behave calm? Did Samy become insane after the murder?

  J

  ReplyDelete
  Replies
  1. Killing of Pakkiyam brought him great calm and relief to Sami. And it wasn't his sudden anger. It was an aggravated anger built up over the years. Sami had a very poor anger management, he succumbed his anger for last thirty years (which is the poorest of all anger management techniques) and it was like the tip of the iceberg. And tipping point can happen any time, any moment and when it happens it can only lead to a disaster!

   Samy didn't become insane .. he just became relieved and clear minded person. That's how I would read the story (Not necessarily for every readers). As a writer I don't hold any opinion once written it :D

   Delete
 7. சாமிக்கு முப்பது வருஷம் கழிச்சு ஏன் இப்படி ஒரு கோபம்? அதிலயும் தயக்கமா, லேட்டாத்தான் ரியாக்ட் பண்ணியிருக்கார். இருந்தாலும் கொலை செய்துட்டு சாமி காட்டுற நிதானம் பயங்கரமா இருக்கு. என்னமோ பத்துப் பதினஞ்சு கொலை செய்து பழக்கப்பட்ட ஆள்மாதிரி. கொரியன் படங்களில்தான் இந்தமாதிரி நிதானமான ஆசாமிகளைப் பார்த்திருக்கிறேன். பாக்கியம் பேசும் வசனங்கள் செம்ம ஷார்ப். திரும்பத் திரும்ப பலமுறை வாசித்துக் கொண்டிருந்தேன். எப்பிடி பாஸ்?

  ReplyDelete
  Replies
  1. தல அது முப்பது வருடம் கழிச்சு வந்த கோபம் இல்ல. முப்பது வருஷமும் அடக்கினதால வந்த கோபம் .. வரும்போது சுனாமி மாதிரி சேர்ந்தாப்போல வருது. அது அடங்கிய பிற்பாடு வரும் நிம்மதியும் அமைதியும் தான் சாமி காட்டுற நிதானம்!

   Delete
  2. தல .. பாக்கியம் சாமி சிவலிங்கம் எல்லாம் எங்கட ஊரிலேயே அங்கனைக்க .. இருப்பாங்கள் அத இத தொடுத்தா ஒரு கதை வரும் ... நீங்களும் முயலலாம் பாஸ்

   Delete
 8. மிளகாய் எல்லாம் போட்டு நாய் மோப்பம் பிடிக்காதபடி பக்காவா பண்ணியிருக்கிறீங்க. பிறகு எதுக்கு சிவலிங்கத்தார்?
  1. எஸ்கேப் (காசு வாங்கிட்டு / தள்ளுபடி செய்து)
  2. இன்னொரு கொலை?
  நிற்க, நிலத்திலை ரத்தம் சிந்தலையா?

  ReplyDelete
  Replies
  1. 3. கக்கூஸ்?

   Delete
  2. நம்மள மண்டை காய வைக்க நாலு பேரு இருக்காங்கப்பா!

   மிளகாய் விஷயம் கண்டுபிடிச்சு சொன்னது சந்தோசம்.

   சிவலிங்கத்தை மீட் பண்ண போனதுக்கு பல காரணங்கள் இருக்கலாம். எது எண்டு நான் சொல்ல கூடாது தானே! சீட்டுப்பணம் வாங்க கூட போயிருக்கலாம் தானே! ஆனா "கக்கூஸ்" என்ற பதில் புதுசு . விளங்க கொஞ்ச நேரம் எடுத்துது. சிரிச்சிட்டன் :)

   //இரத்தம் சிந்தலையா?//
   விளங்கேல்ல

   Delete
  3. //சீட்டுப்பணம் வாங்க கூட போயிருக்கலாம் தானே!//
   அதைதான் காசு வாங்கிட்டு எங்காவது எஸ்கேப் எண்டு சொன்னான். மற்றையது காசு வாங்காம கூட்டு சேர்த்துக்கலாம்.
   கக்கூஸ் விஷயம் ரெண்டிருக்கு. ஒண்டு நீங்க சொன்னது. மற்றது எரியாம மிச்ச மீதியிருந்தா சிவலிங்கத்தார்ட கக்கூசில போட்டு கட்டலாமில்ல. :) (ரொம்பவே ஓவரா கிரிமினலா யோசிக்கிரமோ.?)
   //இரத்தம் சிந்தலையா? விளங்கேல்ல//
   இவ்வளவும் பக்காவா பண்ணிட்டு நிலத்தை கழுவின மாதிரி தெரியலையே. அதான் நிலத்தில ரத்தம் சிந்தலையா எண்டு கேட்டன்.

   Delete
  4. ஓ .. அது கழுவிற மாட்டார் நான் சொல்லேல்ல தான் .. டீ ஊத்திற வரியை கவனிச்சிங்கள் எண்டால் முழுக்க ..சொல்லியிருக்கமாட்டன் அது போலவே எடுத்துக்கலாம் (அடிடா அடிடா)

   .. சொன்னாப்ல கொலை மாட்டரில இவ்வளவு டீடைலா இருக்கிறீங்களே கௌரி .. டேங்கர் ஆசாமிஙகப்பா

   Delete
  5. haha.. நல்லகாலம் கரப்பான் பூச்சி மருந்திலை ரத்தம் கரைஞ்சு போய் ஆவியாயிட்டுது எண்டு சொல்லாம விட்டீங்களே?

   Delete
 9. நான்கூட யோசிச்சேன் அதென்ன இரத்ததைக் கழுவாம ஈக்கு, கரப்பான்பூச்சி மருந்தடிக்கிறது ரொம்ப முக்கியமோ?

  //ஓ .. அது கழுவிற மாட்டார் நான் சொல்லேல்ல தான் .. டீ ஊத்திற வரியை கவனிச்சிங்கள் எண்டால் முழுக்க ..சொல்லியிருக்கமாட்டன் அது போலவே எடுத்துக்கலாம் (அடிடா அடிடா)//

  செல்லாது செல்லாது! :-))

  அப்போ நீங்க அப்பிடி எழுதலையா? நான் நினச்சேன் அடுத்தது சிவலிங்கம்தான்! காரணம், அந்தக் கக்கூஸ் ஆக இருக்கலாம்னு..

  ReplyDelete
  Replies
  1. ..ஹ ஹா .

   இதுதான் முடிவென்று தெளிவாக எழுத விரும்பேல்ல தல .. எனக்கு எல்லா முடிவுமே ஒகேயா இருந்ததால அந்த லைனோட கதையை முடிச்சிட்டன் .. எனக்கு பெர்சனலா பிடிச்ச முடிவு, சாமி போய் சிவலிங்கத்திடம் சீட்டுப்பணம் கேட்க , அவன் இல்லை எண்டு சொல்ல இவன் பேசாம திரும்பி வாறது தான்! கோபம் உச்சிக்கு போய் ஒரு கட்டத்தில .அடங்கும் . அதுக்கு பிறகு சாமியும் சாது தான் எண்டது என்ர ..நிலை ஆனா கதையில அத நான் சொல்ல கூடாது!

   Delete
 10. ///மற்றது எரியாம மிச்ச மீதியிருந்தா சிவலிங்கத்தார்ட கக்கூசில போட்டு கட்டலாமில்ல. :) (ரொம்பவே ஓவரா கிரிமினலா யோசிக்கிரமோ.?///

  ஸ்ஸ்ஸ்ஸபா!!!!! சும்மாவா பெரிய பெரிய காங்ஸ்டருங்க எல்லாம் பொண்ணுங்களையும் குரூப்ல வச்சிருக்காங்க! :-))

  ReplyDelete
  Replies
  1. இந்த பொண்ணே ஒரு காங்கு ரன் பண்ணும் போல

   Delete
 11. This comment has been removed by the author.

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete
  2. oh பல்லிலை அடிச்சிருக்கிரப்பல.

   Delete
  3. அடப்போங்கப்பா .. மண்டைல ஒண்டு போட்டா தெரியும் எப்பிடி சத்தம் வருமெண்டு .. நல்லா கேக்கிறாங்க தீடைலு

   Delete
  4. ஹஹா சாரி மாறி delete பண்ணிட்டன்.

   Delete
 12. அண்ணா கிட்டடில கொலை பண்ணிட்டு சூர்யா படம் பாத்து செய்தது எண்டு அறிக்கை விட்டது தெரியும் தானே!. கவனம் யாராவது கொலை பண்ணிட்டு நன்றி ஜே.கே எண்டு எழுதிடபோறாங்க..அதுனால் கொப்பிரைட்ஸ் வாங்குறது நல்லமெண்டு படுது! ஹி ஹி ஹி
  super annaa! kalkkuringa!

  ReplyDelete
  Replies
  1. என்ன கொடுமை சரவணன் இது ... நன்றி ஜீவன்.

   Delete
 13. I was trying to read again and again getting so many hidden messages. Who is right and who is wrong? Is this right way to express the anger? Why he was keeping harm for 30 years and even after he killed her. Couldn't conclude my answer these questions? Finally i thought he killed her because of his anger??????????????

  It put my thoughts in so many ways, great story. are you plan to kill the Thursday changes with this kind of story. Can you please write some love story boss(like Ramanichanthran's)?

  Ajanthan

  ReplyDelete
  Replies
  1. Thanks Anna ... I won't dig into the details anymore. I think as a story it instigated enough in your mind. That's all I wanted :)..

   Thursday changes will come. I am bit bored of writing similar stuff/templates. So I am thinking experimenting few more things at the expense of more readers and hits :D

   Yep romantic story on the way!

   Delete
 14. I want to write my second comment after reading all 30.

  Now u have to be proud because your writting made ur readers to mentioned about Director Bala, Actor Surya, some Korian film, Anger Mgt (Aaruvathu Sinam), புதுமைப்பித்தன், கொப்பிரைட்ஸ்.

  No doubt u give us an opportunity to think varios ways.

  1000 thanks.(Norwagian style)

  Siva

  ReplyDelete
  Replies
  1. Thanks Siva... yes its gives me sense of assurance to try new things. I am bit more than convinced to proceed..

   1000 thanks :)

   Delete
 15. This comment has been removed by the author.

  ReplyDelete
 16. திருமணம் முடித்து முப்பது வருடங்களாக சகித்த ஒருவன் கொலை செய்ய கூடும் என்று தோன்றவில்லை. இன்னொருவருடன் ஒப்பிட்டு பேசும் போது கோபம் வரும் தான் ஆனால் அது ஒரு பத்து வருடங்களுக்குள் நடந்திருந்தால் ஏற்க கூடியதாக இருக்கும் போல. இவள் இப்படித்தான் என்ற மனநிலை இவ்வளவு காலங்களில் வந்திருக்கும்.இனி இவளை திருத்தி நான் என்னத்தை காணப்போகின்றேன் என்ற வார்த்தை ஊரில் மட்டுமல்ல இங்குமே அதிகம் கேட்கலாம்.
  பொறுமைக்கும் ஒரு அளவுண்டு என்று எடுத்துக்கொள்வதா?
  விதானையாருடன் டீல் போட போகிறாரோ அல்லது அவரையும்.......

  ReplyDelete

இந்த பதிவின் நீட்சி தான் உங்கள் கருத்துகளும். தெரிவியுங்கள். வாசித்து மறுமொழியுடன் வெளியிடுகிறேன்.

அன்புடன்,
ஜேகே