ஒரு முட்டாளும், இரண்டாயிரத்து நானூறு அறிவாளிகளும் - புரபைல் பிக்சர்

பாகம் 3 புரபைல் பிக்சர்


 • அமுதவாயன், நீ எங்க இருக்கிறாய்? உண்மையிலேயே நீ ஒருத்தனை கொலை செய்திட்டுத்தான் என்னோட சட் பண்ணிகொண்டிருக்கிறியா?
 • எத்தினை தடவை சொல்லுறது காந்தாரி? நம்ப மாட்டியா? போட்டோ எடுத்து அனுப்பவா?
 • எனக்கு வேண்டாம் … முதலில நீ அம்புலன்ஸுக்கு கோல் பண்ணு. போன் நம்பர் ஏதாவது சொல்லு அமுதவாயன். நீ எங்க இருக்கிறாய் இப்போ? ஸ்ரீ லங்காவா? ரசியாவா?
 • சொல்லுவன். ஆனா சொல்லுறதுக்கு முதல் எண்ட கதையை நீ கேட்கோணும் காந்தாரி. நாளைக்கு நான் செத்தா, இவன் இதுக்குத்தான் செத்தான் எண்டு சொல்ல ஒருத்தியாவது வேண்டாமா? நீ அந்த ஒருத்தியா இருப்பியா காந்தாரி?

ஒரு முட்டாளும், இரண்டாயிரத்து நானூறு அறிவாளிகளும் - பேஸ்புக் இலக்கியம்

பாகம் 2 பேஸ்புக் இலக்கியம்


 • Sunday
 • நான் ஒரு கொலை பண்ணீட்டன் காந்தாரி.
 • சின்னதா ஷேவிங் ப்ளேட்டால. தலையை இழுத்து, கழுத்தை விரிச்சு வச்சு, இரத்தம் போகுமே நாடி, அதை இலேசாக கீறினன் காந்தாரி. போய்ட்டான். கரோடிட் ஆர்டரி டிசெக்சன். இன்ஸ்டன்ட் ஹெமரேஜ். சத்தம் இல்ல. திமிறினான். இரண்டு செக்கனிலேயே அதையும் நிப்பாட்டிட்டான். ஸ்ட்ரோக். எனக்கு எவ்வளவு திமிர் காட்டினவன் தெரியுமா? என்னைப் போய் …..பச்சை தூஷணம் காந்தாரி. உன்னட்ட சொல்ல வெக்கமா இருக்கு. கொட்டினவன் காந்தாரி. ஒரு சின்ன ப்ளட் க்லொட். அவ்வளவு ஆட்டமும் குளோஸ். கொண்டிட்டன்.

ஒரு முட்டாளும், இரண்டாயிரத்து நானூறு அறிவாளிகளும் - டெம்டேஷன்

பாகம் 1 : டெம்டேஷன்


 • ஒரு பெரிய பிழை விட்டிட்டன் காந்தாரி.
 • Monday
 • ஹாய் காந்தாரி ... ஆர் யூ தெயார்?

 • Tuesday
 • ரிப்ளை பண்ணன் காந்தாரி. Seen 3.46pm எண்டு காட்டுதே. பார்த்தனி, பதில் அனுப்ப மாட்டியா?

 • Wednesday
 • ரெண்டு நாளா நீ ரிப்ளை பண்ணேல்ல … கடைசில நீயும் என்னை அன்பிரண்ட் பண்ணீட்டியா காந்தாரி?
 • நீ ஞானவடிவேலிண்ட கழுசறை போஸ்டுக்கு லைக் பண்ணுறாய். அவள் சிங்களத்தி, நிரோஷினி பேரேராவிண்ட பிள்ளையை கியூட் எண்டுறாய். நான் ஒருத்தன் மூண்டு நாளா மெசேஜ் பண்ணுறன். நீ ரிப்ளை பண்ணுறாய் இல்ல. நான் உந்த சாட் விண்டோவையே பார்த்துக்கொண்டிருக்கிறன். ப்ளீஸ் காந்தாரி

ஏன் எண்ணெய் விலை குறைகிறது?கடந்த சில மாதங்களாகவே பெட்ரோல் ஸ்டேஷன்களை கடந்துசெல்லும்போதும் எழும் கேள்வி இது. நான்கைந்து மாதங்களுக்கு முன்னர் ஒரு டொலர் ஐம்பது சதமாகவிருந்த லீட்டர் பெட்ரோல், நேற்றைக்கு தொண்ணூற்றெட்டு சதம். இது நானறிந்து கடந்த எட்டு வருடங்களில் ஆகக்குறைந்த விலை. இது இன்னமும் குறையும் என்கிறார்கள்.

தீண்டாய் மெய் தீண்டாய் : ஓரம்போ

woman1

நீர் திரண்டன்ன கோதை பிறக்கிட்டு
ஆய்கோல் அவிர்தொடி விளங்க வீசிப்
போதவிழ் புதுமலர் தெருவுடன் கமழ
மேதகு தகைய மிகுநல மெய்தி

-- மாங்குடி மருதனார், (மதுரைக் காஞ்சி)

பரத்தைப்பெண் ஒருத்தி தெருவிலே தன்னை மிகையாக அலங்கரித்து விண்ணை எட்டும் நறுமணம் தவழ நடந்தாளாம். இந்த சுதந்திரம் சமூகம் அவளுக்குத்தந்த உரிமையாக நினைத்து வளையல்கள் ஒலிக்க கைகள் வீசியபடி நடந்தாளாம். “மேதகு தகைய மிகுநல மெய்தி” க்கு, முன்னர் பலரோடு புணர்ந்ததால் கலைந்த ஒப்பனை கொடுக்கும் அழகு அவளுக்கு மேலும் நீடித்த பெருமை சேர்க்கிறது என்று நச்சினார்க்கினியர் விளக்கம் கொடுக்கிறார். அதில் ஒரு உள்ளார்த்தமும் இருக்கிறது. பாவம், தலைவனின் இன்பத்துக்காகத்தான் அவள் இப்படி அலங்கரிக்கிறாள், அதனாலேயே அவளுக்கு இந்த சுதந்திரம் என்பதைக்கூட அறியாமல் அதனை ஒரு பெருமையாக கருதுகிறாளே இந்தப்பேதை.