"நீள இரவு
நீயும் நானும்
களித்துக் கிடக்கையில்
கடவுள் வருவான்.
விரட்டிவிடு!”
“In to the yielding night
Enriching you and me
Enter the mighty God
Phantom ‘like haunt it out”
“மாதரும் கண்டேன்.
மாலைகள்மாறின கண்டேன்.நாணங்கள் விட்டுகானங்கள் பாடிபோதையில் ஊறிஆடினர் கண்டேன்.கோதையில் கட்டுண்டுமட்டினை விட்டுண்டுகொண்டதை விண்டவர்கொட்டமும் கண்டேன்.குடில் கண்டேன்.கூடிய கூடலும்கண்டேன்.கூடலின் ஈடலில்ஆடைகள் மாறியகோலமும் கண்டேன்.அக்கரைப் பசுமைவெம்மையில் குளித்துஇக்கரை யாவும்கருகிடல் கண்டேன்.
“ஆழமது, கடலிலும் ஆழமாம்
அகலமது, புவியிலும் அகலமாம்
நெடியதிது, வானிலும் நெடியதாம்
கோதையது, கோடனொடு நட்பு”
“என்னருகில் நீ.
நீலமாய் தெரிவது,
வானமா?
பூமியா?”
***********************************************************************************
வெள்ளி நாவலில் எழுதப்பட்ட கவிதைகள்.
Photos : http://nityamsingharoy.in/
No comments :
Post a Comment
இந்த பதிவின் நீட்சி தான் உங்கள் கருத்துகளும். தெரிவியுங்கள். வாசித்து மறுமொழியுடன் வெளியிடுகிறேன்.
அன்புடன்,
ஜேகே