காதல்கொண்டேன் படத்திலே “நெஞ்சோடு கலந்தது” பாடலை ரசிக்காமல் இருந்திருக்க மாட்டீர்கள், உயிரை அப்படியே கீறி கிழிக்கும் வயலின் செல்லோ இசையும் மெட்டும் கலந்த பாடல். என்ன கம்போசிங்டா இது, யுவன்சங்கர்ராஜா அப்பனுக்கு தப்பாமல் பிறந்த பிள்ளை என்று சிலாகித்த போது நண்பன் சொன்னான், தப்பு .. இது Corrs குழுவின் அல்பத்தில் இருந்து சுட்ட பழம் என்று. அன்றைக்கு ஆரம்பித்தது தான் ஐரிஷ் இசை பேண்ட் குழுவான “The Corrs” மீதான காதல். பாடும் பெண் தான் ஆண்ட்ரியா. பக்கத்தில் இருக்கும் வயலினில் கொஞ்சும் பெண் அவரின் சகோதரி ஷரோன். டிரம்மர் இன்னொரு சகோதரி கரோலின். அந்த கிடார் வாசிக்கும் இளைஞன் இவர்களின் சகோதரன் ஜிம். இந்த நான்கு சகோதரர்களும் சேர்ந்து உருவாக்கிய இசை சங்கமம் தான் இந்த “The Corrs” என்ற பாண்ட். மெய் சிலிர்க்க வைப்பது என்பது இது தான் ஆன்ரியா ஓகே என்று சொல்ல பியானோ கவுன்டிங்குடன் தொடங்கும் ஒன்று. அந்த ஒன்றை என்னவென்று சொல்வேன்? வெறுமனே பாடல் என்று சொல்ல முடியாது. இசை என்றும் சொல்ல முடியாது. ஏதோ ஒன்று, உள்ளத்தையும் உடலையும் கட்டிப்போட்டு படாதபடுத்தும் ஏதோ ஒன்று. காதல் கூட இப்படி போட்டு தா