Skip to main content

Posts

என் கொல்லைப்புறத்து காதலிகள்: யாழ்ப்பாணத்து கிரிக்கட் - பாகம் 1

  இன்னும் ஐந்து ரன் அடித்தால் வெற்றி. நன்றாக இருட்டிவிட்டது.  தீயிடப்பட்டு நிர்மூலம் ஆக்கினாலும் கம்பீரமாக நிற்கும் யாழ் நூலகத்துக்கு பின்னாலே சூரியன் மறைந்துகொண்டிருக்க, எங்கே வெளிச்சம் இல்லை என்று சொல்லி ஆட்டத்தை நிறுத்தி விடுவார்களோ என்ற பயம் எங்களுக்கு. மணிக்கூண்டு கோபுர முனையில் இருந்து பிரபா அண்ணா பந்துவீச தயாராக, பூங்கா முனையில் எதிர்கொள்வது காண்டீபன் அண்ணா. மொத்த மைதானமே ஆர்ப்பரிக்கிறது. பந்து மட்டிங் பிட்ச்சில் லெந்தில் விழ, காண்டீபன் அண்ணா லோங் ஓனில் இழுத்து அடிக்க… பந்து பறக்கிறது. அத்தனை பேரும் ஆவென்று வாய் பிளந்து நிற்க, அது மைதானத்தை தாண்டி, வீதியை தாண்டி மணிக்கூண்டு கோபுரத்தின் உச்சியில் இருந்த சேவல் கொண்டையில் பட்டு…. சேவல் கூவும் சத்தம். எழும்பிப்பார்த்தால் இன்னமும் விடியவில்லை. காலை நாலு மணி. இன்னும் நான்கு மணித்தியாலங்களில் ஆரம்பித்துவிடும். வடக்கின் பெரும்போர் என்று அழைக்கப்படும் சென்றல் சென்ஜோன்ஸ் பிக் மேட்ச். நித்திரை அதற்கு பிறகு வரவில்லை. “கடவுளே காண்டீபன் அண்ணா எப்பிடியும் செஞ்சரி அடித்து அஞ்சு விக்கட்டும் விழுத்தோணும்.” 1992ம் ஆண்டு. மாசி மாதத்து இறுதி வெ

2 States: Story of My Marriage.

“Island of Blood”, “கோபல்ல கிராமம்”, “Restaurant at the end of universe”, “காட்டாறு” என்று தொடர்ச்சியாக கொஞ்சம் சீரியசான புத்தகங்கள். இம்முறை லைட்டாக தான் வாசிக்கவேண்டும் என்று புத்தக வரிசையை நோட்டம் விட்டபோது தலைவரின் “விடிவதற்குள் வா” அகப்பட்டது. திறந்து இரண்டு பக்கங்கள் வாசித்துவிட்டு .. ப்ச் .. இன்னும் லைட்டாக வேண்டும் என்னும்போது வீணா அடிக்கடி சொல்லுவது ஞாபகம் வந்தது. “அண்ணே புத்தகம் வாசிக்கிறது மனசுக்கு சந்தோஷத்துக்கு தானே .. பேந்தென்னத்துக்கு டென்ஷன் தாற புத்தகங்களை வாசிக்கிறீங்கள்? பேசாம ரமணிச்சந்திரன் வாசியுங்க .. கதை தெரிஞ்சாலும் வாசிக்க நல்லா இருக்கும்” எனக்கு இப்போதைக்கு தேவை ரமணிச்சந்திரன் வகையறா தான் என்று அம்மாவிடம் போய் கேட்க, உனக்கென்ன லூசா? வாசிச்சு ரெண்டு பக்கத்தில தூக்கி எறிஞ்சுடுவ, உனக்கு அது தோதுப்படாது” என்றார். சரி ஆணியே வேண்டாம் என்று மீண்டும் என் கலக்ஷனுக்கு வந்து தேடியபோது மாட்டுப்பட்டது தான் 2 States : Story of My Marriage. சென்ற வருடம் கஜன் டெல்லி போயிருந்தபோது பரிசாக வாங்கிவந்த புத்தகங்களில் ஒன்று. வாசிக்காமல் கிடந்தது. இரண்டு நாட்களுக்கு முன

Yarl Geek Challenge!

  தொழில்சார் சம்பந்தமான விஷயங்களை வெறுமனே ஒருவித அகடமிக் பாணியில் அணுகாமல், சுவாரசியமாக, ஆர்வத்தை தூண்டும் வகையாக எப்படி கொண்டு செல்லலாம்? அவற்றை வெறுமனே வேலை சார்ந்தது என்று நினைக்காமல், நித்தமும் சிந்தித்துக்கொண்டிருக்ககூடிய, விளையாட்டு இசை போன்ற எழுச்சி தரும் விஷயமாக எப்படி மாணவர்களை நினைக்கவைக்கலாம்? மாணவர்களுக்கு தொழிற்துறையில் நாளாந்தம் நடைபெறும் விஷயங்களை, அதன் செயற்பாடுகளை அந்த துறைகளில் இருந்து தொழிற்படுவர்களை கொண்டே பகிரவைக்க வேண்டும். ஆனால் அது கலந்துரையாடல் போன்று இல்லாமல் ஒரு சவாலாக இருக்கவேண்டும். பங்குபற்றும்போது ஒரு எக்சைட்மெண்ட் ... சுவாரசியம், தேடல் ஒருவித அட்டாச்மெண்ட், முடிந்து வீடு போனபின்னரும் நடந்த சம்பவங்கள் சிந்தனையில் ஓடிக்கொண்டு இருக்கவேண்டும். எப்படி செய்யலாம்? The Apprentice என்று அமெரிக்காவில் பிரபலமான டிவி சீரியல், பொதுவான வணிக, முகாமைத்துறையில் உள்ளவர்களுக்கிடையில் reality show பாணியில் போட்டிகள் வைத்து, elimination எல்லாம் வாரம் வாரம் நடைபெறும். நிறுவனங்களில் நடைபெறும் board room சந்திப்புகள், விவாதங்கள் எல்லாவற்றையுமே போட்டியில் உருவாக்கி, அதில் எப

வானம் மெல்ல கீழிறங்கி!

  “விளக்கு வச்சாபிறகு தான் அந்த ஈர்வலிய எடுத்தோண்டு போய் நல்லா இழு, உள்ள தரித்திரம் எல்லாம் வந்து சேரட்டும்” இரண்டு ஈர் அடிப்பதற்குள் அம்மா குசினிக்குள் இருந்தவாறே திட்ட ஆரம்பிக்க கரண்டும் கட்டாக சரியாக இருந்தது. செவ்வாய்க்கிழமை என்றால் கம்பஸ் பகுதிக்கு மின்வெட்டு என்பதை ஏதோ ஒரு ஞாபகத்தில் மேகலா மறந்துபோயிருந்தாள். சிமினி எதையுமே துடைத்துவைத்திருக்கவில்லை. உடனேயே தட்டுத்தடுமாறி எழுந்துபோய் மெழுகுதிரி ஒன்றை கண்டுபிடித்து ஏற்றிக்கொண்டு, பழைய உதயன் பேப்பரை கிழித்து அரிக்கன் லாம்பையும், மேசை லாம்பையும் கவனமாக துடைத்தாள். கத்திரிக்கோலால் முனை கருகியிருந்த திரிகள் இரண்டையும் நேர்கோட்டில் வெட்டிவிட்டு, நெருப்புக்குச்சியை தட்டும்போது, தம்பி அறைக்குள் இருந்துகொண்டு  “விளக்கை எடுத்தண்டு வர இவ்வளவு நேரமா?” என்று நாட்டாமை செய்தான். அவனுக்கு இன்னமும் இரண்டு மாதத்தில் ஒஎல் பரீட்சை. சலலகினி சந்தேஷயவையும் குசுமாசனதேவியையும் மனப்பாடம் செய்வதற்கு அவன் செய்யும் அலப்பறைக்கு பதிலாக தான் பேசாமல் டொக்டருக்கே படித்திருக்கலாம் என்று மேகலா சமயத்தில் நினைப்பதுண்டு. முதல் ஆளாய் அவனுக்கு தான் விளக்கு கொடுக்கவே

நீ தானே என் பொன் வசந்தம்!

அதிகாலை மூன்று மணி.  மெல்பேர்ன் குளிர், வசந்தகாலம் ஆரம்பித்து ஜஸ்ட் ஒரு நாள் தானே! இன்னமும் கொஞ்சமும் குளிர்ந்துவிட்டு போகிறேனே என்ற அடம் பிடித்தது. ஹீட்டர் போட்டு அதன் ஆசையை கலைக்க மனம் இல்லை. சூடாக ஒரு ப்ளேன் டீ போட்டு குடித்துக்கொண்டே, ஹோம் தியேட்டரின் வொலியூமை கொஞ்சம் குறைத்துவிட்டு couch க்கு வந்து quilt ஆல் போர்த்துக்கொண்டு சாய்ந்து கிடக்க, பதினொறாவது தடவையாக மீண்டும் ப்ளே பண்ண ஆரம்பிக்கிறது, மீண்டும் மீண்டும் மீண்டும். அப்படி ஒரு இரவின் நிசப்தத்துக்கு தேவையான அளவு சத்தம். இரண்டு பேர் மட்டுமே. ஒருவர் நான். மற்றையவர் … இளையராஜா. இது “நீ தானே என் பொன் வசந்தம்” படத்து இசை விமர்சனம் கிடையாது.  இசை என்பது எம்மோடு கூட வரும் ஜீவன். அதை விமர்சிக்க கூடாது. அனுபவிக்கலாம். இந்த பதிவு கடந்த ஒரு வாரமாக, குறிப்பாக கடந்த சில மணித்தியாலங்களில் இளையராஜா எனக்கேற்படுத்துகின்ற அனுபவம். பகிரவேண்டும் போன்று தோன்றியது. சில மொமென்டஸ் .. பகிர தவறினால் அப்புறம் விட்டுவிடுவோம். அனுபவி ராஜா அனுபவி! முதற்பாடல், “என்னோடு வா வா என்று சொல்லமாட்டேன்”,  ஏற்கனவே இரண்டு வரி டீசர் கொடுத்து வாரக்