Skip to main content

Posts

என் கொல்லைப்புறத்து காதலிகள் : சச்சின் & சச்சின் & சச்சின் & …

  சனிக்கிழமை காலை பாணும் சம்பலும் இறக்கியபிறகு சரியாக ஒன்பது மணிக்கு ஆட்டம் ஆரம்பிக்கிறது. வெட்டிக்கிடந்த வாழைமரத்தின்  அடித்தடலை எடுத்து, இரண்டு அடுக்கு சரிக்கட்டி, இரண்டு கால்களிலும் முழங்கால் வரைக்கும் வைத்து கட்டுவேன்.  இன்னொரு தடலை சின்னனா வெட்டி காற்சட்டையின் ஒருபக்கம் செருகினால் அது சைட் பாட். கயர் ஊறி, தோய்க்கும்போது அம்மா திட்டுவார் என்று தெரியும். அதை அப்போது பார்த்துக்கொள்ளலாம். போல் கார்ட் என்ற விஷயம் இருப்பது அந்த வயதில் தெரியாது. அப்பா அந்தக்காலத்தில யமாகா-350 மோட்டர்சைக்கிள் வச்சிருந்தவர். அதிண்ட பிஞ்சுபோன ஹெல்மட்டை எடுத்து தலையில் மாட்டி, பட்டி இழுத்து டைட் பண்ணியாயிற்று. லக்ஸ்பிறே பை இரண்டை கொளுவினால் கிளவ்ஸ். பிரவுன் கலருக்கு மாறியிருந்த பழைய லேஸ் தொலைந்த டெனிஸ் ஷூவை, கரப்பான் கலைத்து, போட்டுக்கொண்டு, தென்னைமட்டையில் சரிக்கட்டின பேட்டை கையில் தூக்கினால், ஐயா ரெடி.

கம்பவாரிதியிடம் இருந்து ஒரு மடல்!

  உ திரு ஜே.கே அவர்கட்கு,                                                                                         06.11.2013 அவுஸ்திரேலியா. அன்புத்  தம்பிக்கு, நலம் வேண்டிப் பிரார்த்திக்கின்றேன். நலமே நாடு சேர்ந்தோம். மனம் அங்கும் இங்குமாய்த் தத்தளிக்கின்றது. அவுஸ்திரேலியா வருகை மகிழ்வு தந்தது. மண் பிடிக்காவிட்டாலும் மக்கள் பிடித்துப் போயினர். கம்பனும் தமிழ்த்தாயும் உறவுகளைப் பெருக்குகின்றனர். நீண்டநாள் எதிர்ப்பார்த்த உங்கள் சந்திப்பு, நிகழ்ந்து நெஞ்சை நெகிழ்வித்தது. ஆற்றல் கண்டு அதிசயித்தேன். பேச்சாள நிலைகடந்து, சிந்தனையாளனாய் என் உளம் புகுந்தீர்கள். எழுத்தாற்றல் வியப்பேற்படுத்துகின்றது. சுஜாதாவின் ஆன்மா நிச்சயம் மகிழும். கருத்துக்களை மக்கள் மனதேற்றும் நுட்பம் வாய்த்தது பெரிய பேறு. விமர்சகளுக்காய் மட்டுமே எழுதும் எங்கள் எழுத்தாளர்கள், மக்கள் மனமேறி மகிழ விரும்புவதில்லை. நீங்கள் நினைந்தால் ஈழத்து எழுத்துலகை எழுச்சியுறச் செய்யலாம். இந்திய சஞ்சிகைகளுக்கு நிறைய எழுதுங்கள். வெளிநாட்டு எழுத்து அங்கே வரவேற்கப்படும். மற்றை இனத்தார் தமது தகுதிகளை, அன்றாடம் உலகறியச் செய்து உயர்கின்றனர். ஈழ

அடேல் அன்ரி

முல்லைத்தீவிலிருந்து படகு மூலமாக பாலாவும் அடேலும் வெளியேறுகிறார்கள். கூடவே துணைக்கு சூசையும் சில போராளிகளும். தூரத்தில் சக்கையோடு இரண்டு படகுகள் காவலுக்கு. ஆபத்து மிகுந்த இந்த பயணம் முடிவில் ஒரு சரக்கு கப்பலை அடைகிறது. அந்தக்கப்பலில் சிலநாட்கள் பயணம். பின்னர் அதிலிருந்து இன்னொரு சரக்கு கப்பலுக்கு தாவுகிறார்கள். அதில் பலநாட்கள் பயணம். முடிவில் தாய்லாந்து நாட்டு கரையிலே மேலும் இரண்டு படகுகள் மாறி, நள்ளிரவில் கரையை அடையும் அதி பயங்கர அனுபவத்துடன் அடேல் பாலசிங்கம் எழுதிய “The Will To Freedom”, தமிழில் “சுதந்திர வேட்கை” நூல் ஆரம்பிக்கிறது.

பேசாப்போருட்கள் பேசினால் - சூர்ப்பனகை மூக்கு

  அவுஸ்திரேலியா கம்பன்விழா(2013-10-27) இறுதிநாள் நிகழ்வு கவியரங்கில் அரங்கேற்றப்பட்ட கவிதை இது. பேசாப்போருட்கள் பேசினால் என்ற தலைப்பில் என்னது “சூர்ப்பனகை மூக்கு”. கேதாவும் உடன் ஏறிய(அகலிகை கல்), அரங்கின் தலைவர் ஸ்ரீபிரஷாந்தன் அண்ணா என்பதும் அவையிலே என்னுடைய கொல்லைப்புறத்து காதலி கம்பவாரிதி அவர்கள் இருந்து கேட்டு ரசித்ததும் வாழ்நாள் பெருமை. இருப்பத்துமூன்று வருட தவமும் கூட! கறந்த பால் கன்னலொடு கலந்த நெய் கடையவல்லர். கம்பநாடன் காவியத்தின் இதயம் புக்கி ஆவி கொள்வர். இவரெல்லாம் இருக்கும் அவையீர், இவனை ஆசி வழங்கிடுவீர். உவரெல்லாம் இருக்கும் கவி, உறை போட்டு வடித்திடுவீர்!

ஆண்கள் இல்லாத வீடு

முற்றத்து வேம்பு விளக்குமாறால் கூட்டித்தள்ளியும் சோளககாற்றில் பறந்து விழும் மஞ்சள் பூக்கள் மரத்தடி நிழலில் நாற்காலி என் ராங்கிகார அம்மா, கால்கள் மெல்லமாய் தாளம்போட ஏதோ ஒரு பாட்டு நாளை இந்த வேளையோ?  இது நல்ல வேளையோ? எப்படிச்சொல்வேன் நான்? என்னை விட்டு போய்விட்டான் என்றா? அதிர்வாளா? அழுவாளா? யாருக்காக அழுவாள்? ப்ளேன்டீயும் ஊத்தி பனங்கட்டியும் நொறுக்கி ப்ளேட்டில் கொடுத்தேன் அவளுக்கு. பேன் சீப்பை எடுத்து தலை நீவினேன். என்னடா? சொன்னேன். என்னடி சொல்லுறாய்? திரும்பவும் சொன்னேன். போயிட்டாரா? ஐயோ போயிட்டாரா? அரற்றினாள் விடம்மா.. போனால் போறான். அம்மாளாச்சி … போயிட்டாரா .. அவரை இனி எப்பிடி பார்ப்பன்? ஐயோ அழுதாள். அரட்டினாள். அதிர்ந்து போனேன் நான். அம்மா நீ வந்து…  உடம்பில் ஏதோ ஊர்வது போல அவனை காதலித்தேனா? அறிந்தேனா புரிந்தேனா? என்ன கருமாந்திரம் செய்தேன் நான்? நான் நினைத்தது தான் அவன் என்றேனோ? அவனுள்ளும் பலவுண்டு அறியேனோ? அறியவும் முயலாமல் முனிந்தேனோ? அம்மாவை பார்த்தேன். கண்களால் கோதிவிட்டாள். இந்த அன்பு அவங்கள் இல்லாதவிடத்தில்  அம்மாவின் அன்பு அவளுக்கு என் அன்பு நடக்கும் என்று பயந்தது தான் நடந்த