“டொப்…” … முதல் வெடி. பின்புறமாக. உரிக்கும்போது செட்டையை படக் படக்கென்று அடிக்கும் கோழி போல கைகள் இரண்டையும் அடித்துக்கொண்டு விழுகையில், இரண்டாவது வெடி. இம்முறை முதுகில். ஒரு அடி எட்டி வைத்திருப்பான். மூன்றாவது வெடி. பிடரியில். உதயன் இறந்துவிட்டான்.