Skip to main content

Posts

சியாமா

  சியாமா இப்போது அவனுக்கென்று அடைக்கப்பட்டிருந்த இரண்டடி உயர விளையாட்டு வேலிக்கூட்டுக்குள் இருந்தான். தரை முழுதும் பொம்மை படங்கள் போட்ட ரப்பர் விரிப்பு. கூடு எங்கும் விளையாட்டுப்பொருட்கள். அண்ணர் எதை எடுக்க? எதை விட? என்று தெரியாமல் குழம்பினார். "சியாமா கண்ணா .. அம்மாவை இஞ்ச ஒருக்கா பாருடா" தாய்க்காரி சியாமாவின் கவனத்தை இந்தப்பக்கம் திருப்பப் பார்க்கிறாள். சியாமா கணக்கே எடுக்கவில்லை. நண்பர்கள் வந்திருக்கிறார்கள். அவனைப் பார்ப்பதற்கென்றே வருவார்கள். சியாமா உறவு வட்டாரத்தில் அவ்வளவு பிரபலம். பொதுவாக ஈழத்தில் குழந்தைகள் இவ்வளவு வாளிப்புடன், கொழுகொழுவென, வெள்ளை வெளீரென்று சியாமா போல இருப்பதில்லை. ஆனால் ஆஸியில் நேரத்துக்கு தகுந்த உணவு, பால், சீஸ், பட்டர், மாடு, ஆடு என்று எப்போதும் புரதம், கொழுப்பு அதிகம் உள்ள உணவு வகைகளையே கர்ப்பிணி தாய்மார்களுக்கு பிரஸ்தாபிப்பார்கள். தெற்கு ஆசியர்கள் அந்த புதிய உணவுப்பழக்கத்துக்கு திடீரென்று மாறுவதால், பொதுவாக ஆஸி போன்ற நாடுகளில் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் எல்லாமே சியாமா போன்று மொழுமொழுவென்றுதான் இருக்கும். வைத்தியர் தசெவ்ஸ்கி இந்த விஞ

சப்புமல் குமாரயாவின் புதையல்

  குளித்துக்கொண்டிருக்கும்போது கிணற்றடிக்கு அம்மா வந்தார். "யாரோ ஒரு பொம்பிளைப் பிள்ளை உன்னை தேடிக்கொண்டு வந்திருக்கு" கிணற்றடியில்  நின்றவாறே அடைப்பு வேலி விரிசலுக்குள்ளால் முற்றத்தைப் பார்க்கலாம். சொப்பர் சைக்கிள், கறுப்புப்பாவாடை, சிவப்புச்சட்டை, முகம் கிளியராக தெரியவில்லை. தேவையில்லை. இது தாரணிதான். காதருகே மச்சம், இரட்டைப்பின்னல், ஒருபக்க கண் இமை நீளம், கிறங்கடிக்கும் .. என்று வழமையான கதை என்றால் வர்ணனையிலேயே புங்குடுதீவு வரையும் போயிருப்பேன். அந்தளவுக்கு தாரணியை விடாமல் முன்னே பின்னே துரத்தியிருக்கிறேன். 143 சொல்லியிருக்கிறேன். அதான், I LOVE YOU. அவள் கொஞ்சம் ஒபின் டைப். திருப்பி 143 என்றாள். எனக்கு சந்தோசம் தாங்கமுடியவில்லை. அன்றைக்கே கல்யாணியில் பெடியளுக்கு ஸ்பெஷல் வாங்கிக்கொடுத்தேன். ஒருநாள்தான். அடுத்தநாள் வந்து விளக்கம் கொடுத்தாள். 143 என்றால் அவள் அகராதியில் I HATE YOU வாம். இப்படி நிறையச் சொல்லவேண்டும்.  ஆனால் இந்தக் கதையில் அதைச் சொல்ல முடியாது. காரணங்கள் இரண்டு. முதலாவது, இந்தக்கதையில் அடுத்த இரண்டு வரிகளில் "உம்மளை ஒருக்கா பி.கே சேர் வரச்சொன்னார்&quo

மலரோ நிலவோ மலைமகளோ

  கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற வீட்டு நிகழ்வு ஒன்றில் பிரபல கர்நாடக சங்கீத பாடகனும்  நெருங்கிய நண்பனுமான அகிலன் வந்திருந்தான். நிகழ்ச்சியில் அவனுடைய பேச்சும் இருந்தது. ஆனால் சச்சினை அழைத்து டெனிஸ் விளையாடு என்றால் அரங்கு மன்னிக்குமா? அவன் பேசி முடித்ததும் பாடக் கேட்பது என்று முடிவானது. எதை பாடக் கேட்பது? மெல்லிசைப் பாடலைக் கேட்டால் அவனுக்கும் சங்கடம். கர்நாடக சங்கீதப் பாடலை பாடலாமென்றால் அந்த அவை அதற்குரியதல்ல. ஆகவே இரண்டையும் சரிசெய்யும் ஒரு பாடல். எது அது?

தங்க மகன்

    இரணமடு குளத்துக்கட்டு கரியரில கருக்கு மட்டை பறியிரண்டு ஹாண்டிலில பொரியுருண்ட வாயுக்குள்ள.

தீண்டாய் மெய் தீண்டாய் : உயிரேந்தும் கற்றாளை

  கான மஞ்ஞை அறை ஈன் முட்டை வெயில் ஆடு முசுவின் குருளை உருட்டும் குன்ற நாடன் கேண்மை என்றும்  நன்றுமன் வாழி தோழி. உன் கண் நீரொடு ஓராங்குத் தணப்ப உள்ளாது ஆற்றல் வல்லுவோர்க்கே. - கபிலர் கொஞ்சம் எங்கட தமிழாக்குவோம்.