Skip to main content

Posts

என் கொல்லைப்புறத்துக் காதலிகள் பற்றி டிலக்சனா

இது கொல்லைப்புறத்துக் காதலிகள் வாசித்தபிறகு சிலநாட்கள்/கிழமை சென்றபின் என் மனதிலே உள்ள பதிவுகளை உங்களுக்கு கூறுவதற்காக எழுதுகிறேன். தமிழில் டைப் பண்ணே நீண்ட நேரம் எடுக்கும் என்பதற்காக என் கைப்பட எழுதுறன்!  

திருட்டு

இணையத்தில் திருட்டு என்பது கிட்டத்தட்ட திருட்டு வீ.ஸீ.டி க்கு இணையானது. படைத்தவனுக்குத்தான் அந்தவலி தெரியும். மற்றவன் கவலையே படுவதில்லை. நம்மில் பலருமே திருடர்கள்தான். லிங்காவில் பழைய ரகுமானை காணவில்லை என்று இணையத்தில் பாட்டை திருடிக்கேட்டுவிட்டு கொமெண்ட் போடுவோம். நகைக்கடையில் திருடிய நெக்லஸ் உனக்குவடிவா இல்லையடி எண்டு மனைவிக்கு சொல்லுவதுக்கு ஒப்பானது அது. இப்போதெல்லாம் பாடல்களை ஐடியூனில் காசு குடுத்து வாங்கலாம். ஆனால் திருட்டுப்புத்தி. பழகிவிட்டது. எம்முடைய கடைக்காரர்களுக்கும் திருடி விற்றே பழகிவிட்டது. தண்ணிமாதிரி கொப்பி, கொண்டுபோங்க என்னும்போது வெட்கமேயில்லாமல் வாங்கிவருவோம்.

என் கொல்லைப்புறத்துக் காதலிகள் பற்றி நா. குணபாலன்

அன்பின் ஜெயக்குமரன்!  நான் உங்கடை எழுத்தை எண்டைக்கு வாசிக்கத் துவங்கினநானோ அண்டைக்கே அந்த எழுத்திலை எடுபட்டுப் போனன். முதல் விழுந்த இடமே பதுங்குகுழிதான். பதுங்குகுழியிலை தடக்கி விழுந்த நான்,பேந்தென்ன அடிக்கடி படலைக்குள்ளாலை இடைசுகம் எட்டியெட்டி விடுப்புப் பார்க்கிற பழக்கமாய்ப் போச்சு. நீங்கள் உங்கடை பதுங்குகுழி பற்றிச் சொன்னது போலை ஒவ்வொருத்தரும் தங்கடை கதைகளைக் குறைஞ்ச பட்சம் தங்கடை பிள்ளைகளுக்கு எண்டாலும் சொல்லி வைக்க வேணும்.

ஏன் எண்ணெய் விலை குறைகிறது?

கடந்த சில மாதங்களாகவே பெட்ரோல் ஸ்டேஷன்களை கடந்துசெல்லும்போதும் எழும் கேள்வி இது. நான்கைந்து மாதங்களுக்கு முன்னர் ஒரு டொலர் ஐம்பது சதமாகவிருந்த லீட்டர் பெட்ரோல், நேற்றைக்கு தொண்ணூற்றெட்டு சதம். இது நானறிந்து கடந்த எட்டு வருடங்களில் ஆகக்குறைந்த விலை. இது இன்னமும் குறையும் என்கிறார்கள்.

தீண்டாய் மெய் தீண்டாய் : ஓரம்போ

நீர் திரண்டன்ன கோதை பிறக்கிட்டு ஆய்கோல் அவிர்தொடி விளங்க வீசிப் போதவிழ் புதுமலர் தெருவுடன் கமழ மேதகு தகைய மிகுநல மெய்தி -- மாங்குடி மருதனார், (மதுரைக் காஞ்சி) பரத்தைப்பெண் ஒருத்தி தெருவிலே தன்னை மிகையாக அலங்கரித்து விண்ணை எட்டும் நறுமணம் தவழ நடந்தாளாம். இந்த சுதந்திரம் சமூகம் அவளுக்குத்தந்த உரிமையாக நினைத்து வளையல்கள் ஒலிக்க கைகள் வீசியபடி நடந்தாளாம். “மேதகு தகைய மிகுநல மெய்தி” க்கு, முன்னர் பலரோடு புணர்ந்ததால் கலைந்த ஒப்பனை கொடுக்கும் அழகு அவளுக்கு மேலும் நீடித்த பெருமை சேர்க்கிறது என்று நச்சினார்க்கினியர் விளக்கம் கொடுக்கிறார். அதில் ஒரு உள்ளார்த்தமும் இருக்கிறது. பாவம், தலைவனின் இன்பத்துக்காகத்தான் அவள் இப்படி அலங்கரிக்கிறாள், அதனாலேயே அவளுக்கு இந்த சுதந்திரம் என்பதைக்கூட அறியாமல் அதனை ஒரு பெருமையாக கருதுகிறாளே இந்தப்பேதை.