Skip to main content

Posts

யாழ்ப்பாணத்தில் "என் கொல்லைப்புறத்துக் காதலிகள்"

யாழ் பொதுசன நூலக வாசகர் வட்டம் ஏற்பாடு செய்திருக்கும் "என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" நூல் கலந்துரையாடல் இன்று மாலை மூன்று மணிக்கு யாழ் நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெறும். கூடவே நூல் பிரதிகளையும் விரும்புபவர்கள் வாங்கிக்கொள்ளலாம். யாழ்ப்பாணம் பூபாலசிங்கம் புத்தகசாலை நல்லூர் கிளையிலும் புத்தகத்தை பெற்றுக்கொள்ள முடியும். சந்திக்க காத்திருக்கிறேன்.

ஆக்காட்டி நேர்காணல் - 6

இலங்கையை பொறுத்தவரை இன்று பல குறிப்பிடத்தக்க தமிழ் எழுத்தாளர்கள் உருவாகி வருகின்றார்கள். உங்களோடு ஒப்பிடுகையில் சிலரின் எழுத்துக்கள் சுவாரஸ்யமற்று இருப்பினும் அவர்களைப் பற்றி பலர் தெரிந்து வைத்திருக்கின்றார்கள், கொண்டாடவும் செய்கின்றனர். அவர்களைப் போன்று நீங்களும் உங்களை முன்னிலைப்படுத்தினால் எழுத்துலக ஜாம்பவானாக வருவதற்குரிய சாத்தியம் இருக்கின்றது. ஆனால் நான் கவனித்தவரையில் உங்களை நீங்கள் முன்னிலைப்படுத்தியது குறைவு. ஒரு குறுகிய பரப்புக்குள்ளேயே நிற்பதாக உணர்கின்றேன்.  

ஆக்காட்டி நேர்காணல் - 5

ஒரு புத்தகத்திற்கான விமர்சனமென்பது அந்தப் புத்தகத்திற்கான கட்டணமில்லா விளம்பரமென்று எங்கேயோ படித்தேன் ,அது உண்மையும் கூட.ஒரு புத்தகத்திற்கு விளம்பரம் அவசியம் தானா?இதனால் ஒரு மோசமான புத்தகம் கூட அந்தப் புத்தகத்தைப் பற்றிய எதிர்மறையான புரிதலை ஏற்படுத்தக்கூடிய சாத்தியம் இருக்கிறதல்லவா?

ஆக்காட்டி நேர்காணல் - 4

ஜாக் ஓடியா. ஒரு பிரான்ஸ் தேசத்து மனிதர். பிரஞ்சு மொழியை தாய்மொழியாக் கொண்டவர். வேறு இனம், வேறு மதம். இத்தனை தூரமான ஒரு மனிதர் இலங்கைத் தமிழ் அகதியொருவரின் அகச் சிக்கலைப் பற்றி படமெடுத்து கான் திரைப்பட விழாவில் மிக உயரிய விருதான தங்கப் பனை விருதினையும் வென்றிருக்கின்றார். ஆனால் இலங்கையைச் சேர்ந்த எங்களின் படைப்புகள் ஒரு குறுகிய வட்டத்துக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றது. சினிமாத்துறைக்கு மாத்திரமல்லாது, இலக்கியத்துறைக்கும் இது பொருந்தும். ஏன் இவ்வாறானதொரு நிலைமை? எங்களால் சர்வதேச விருதினை வென்றிடும் அளவிற்கு இலக்கியமோ அல்லது சினிமாவோ எடுக்க முடியாதா?

ஆக்காட்டி நேர்காணல் - 3

ஆங்கில இலக்கியங்களை நான் பெரிதாக வாசித்தது கிடையாது. ஆனால் அதன் தமிழ் மொழி பெயர்ப்புக்கள் சிலவற்றை வாசித்திருக்கின்றேன். அந்த தமிழ் மொழி பெயர்ப்புகளை எழுத்தாளர்கள் அல்லாத ஆங்கிலம் தெரிந்த மொழிபெயர்ப்பாளர்களே எழுதியிருப்பார்கள். அவர்களின் எழுத்து லாவகம் சாதாரணமாகத்தான் இருக்கும். இன்னும் சொல்லப்போனால் ராஜேஸ்குமாரின் எழுத்துக்களை விடவும், ரமணிசந்திரனின் எழுத்துக்களை விடவும் அயர்ச்சி தரக்கூடிய எழுத்துக்கள் தான் அவை. ஆனால் படைப்பை வாசித்து முடித்த பின்பு நல்லதொரு அனுபவத்தை பெறக்கூடியவாறாக உள்ளது. ஒரு திரைப்படத்தினை பார்த்து முடித்தவொரு உணர்வு நமக்குள் ஏற்படுகின்றது. ஆனால் தமிழில் நானறிந்து எந்தவொரு இலக்கியமும் அவ்வாறானதொரு உணர்வினை ஏற்படுத்தியதில்லை. நீங்கள் தமிழ் இலக்கியங்களை மாத்திரமல்லாது, ஆங்கில இலக்கியங்களையும் பெருமளவு வாசித்து வருகின்றீர்கள். மாறுபட்ட உணர்வுகளை இலக்கியங்கள் ஏற்படுத்துகின்றனவா?அல்லது அவ்விலக்கியங்களை எழுதிய எழுத்தாளன் ஏற்படுத்துகின்றானா?