Skip to main content

Posts

நாச்சார் வீடு

நாச்சார் வீடுகள். நடுவிலே செவ்வக வடிவிலே முற்றம் அமைத்து, சுற்றிவரத்' திண்ணை அமைத்துப் பின்னர் அதனைச் சுற்றி அறைகளை அமைத்திருப்பார்கள். திண்ணையின் உள்புற சுவர்கள் பூராக ரயில் டிக்கட் எடுத்தவர்களின் படங்கள் தோற்றம் மறைவோடு உக்கிப்போய் காட்சியளிக்கும். திண்ணை மாடங்களில் உக்கிய நிலையில் ஒரு கந்தபுராணம், அந்திரட்டிக் கல்வெட்டு, பழைய பஞ்சாங்கங்கள் என அடுக்கியிருக்கும். பஞ்சாங்கத்தின் உள்ளே ஒரு பக்கத்தில் குட்டி குட்டிப் கட்டங்களால் நிரம்பிய பக்கம் ஒன்று இருப்பதுண்டு. ஒவ்வொரு கட்டத்துள்ளும் ஒரு இலக்கம் இருக்கும். கண்ணை மூடிக்கொண்டு சுட்டுவிரலை ஒரு கட்டத்தின்மேலே வைத்துப் பின்னர் அந்தப் கட்டத்தின் இலக்கத்துக்குரிய பலனை அடுத்த பக்கத்தில் அறிந்துகொள்ளலாம். “பணம் வரவு”, “வீண் அலைச்சல்”, “காரியம் சித்தம்” என்று ஏதோ ஒன்று இருக்கும். நாற்சார் வீடுகள் யாழ்ப்பாணம் முழுதுமே பரவலாக இருப்பினும் மானிப்பாய், மருதனார்மடம் உட்பட்ட வலி மேற்கு, வலி வடக்கு பகுதிகளிலேயே அதிகம் என்று ஒரு அநுமானம். கோட்டைப் பிரச்சனை மூட்டம் நாம் இடம்பெயர்ந்து தங்கியிருந்த மானிப்பாய் வீடும் ஒரு நாச்சார் வீடுதான். சிறு

பிடித்ததும் பிடிக்காததும் : 2015

    புத்தாண்டுக் காலை. கையில் தேநீரோடு ஜெயமோகன் தளத்தில் மேய்ந்தால் அற்புதமான வாக்கியம் ஒன்று அகப்பட்டது. “பெய்தொழிந்தாலொழிய முகிலுக்கு மீட்பில்லை” எவ்வளவு உண்மை. அங்கிங்கெனாதபடி அலைந்தோடும் முகிலினுடைய பேறுதான் என்ன? பெய்தொழிதலே. பெய்தொழிந்து, மண் சென்று, அது நீங்கி, மீண்டும் முகிலாகிப் பெய்தொழிந்து என்ற சங்கிலியில் முகிலுக்கு என்றைக்கும் மோட்சமில்லை. பெய்தொழிந்தாலும் அதற்கு மீட்பில்லை. அப்படியானால் முகிலிடம் எதற்கு இத்தனை அவதி? எழுத்தும் வாசிப்பும் எப்போதுமே தூங்குகின்ற எரிமலைபோல. அடிவயிற்றில் ஒரு அந்தளிப்பு எப்போதுமே இருக்கும். எழுத்தைக்கூட விட்டுத்தள்ளலாம். ஆனால் இந்த வாசிப்புக் கொண்டுவரும் அந்தளிப்பு தாங்க முடியாதது. பொக்ஸ் கதைப்புத்தகத்திலே அந்தப் பாலியல் விடுதி பற்றி வருகின்ற இடத்திலே எரிமலை குமுறும். யாமத்தில் பண்டாரத்தொடு நாயின் பின்னே நாமும் செல்லும்போது கடைசிநேரத்தில் அந்த நாய் செய்கின்ற “நாய் வேலை”க்கு அதனை அடித்துக்கொன்றால் என்னவென்றிருக்கும். இப்போது வாசித்துக்கொண்டிருக்கும் சைமன் சிங்கின் “Big Bang” புத்தகம் கொடுக்கின்ற அந்தளிப்பு அளவிலாதது. வெள்ளையானையில் தொங்கி

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி விக்கி விக்னேஷ்.

தூக்கத்தை தொலைத்த ஒரு இராப் பொழுதை, என் குழந்தையின் அழுகையோடு கழிக்க நேர்ந்தது. குழந்தையை ஒரு பக்க மார்பில் சாய்த்தவாறு, குறுகிய அறைக்குள் நடந்துக் கொண்டிருந்தேன். நீண்ட தினங்களுக்கு முன்னர் வாங்கி சில அத்தியாயங்களை மாத்திரமே வசித்துவிட்டு வைத்த ஜே.கே. அண்ணாவின்; நூல் நினைவுக்கு வந்தது. புத்தகத்தை எடுத்து நடந்து கொண்டே வாசித்தேன்…

சந்திரனுக்குப் போன சுந்தரி

    அனேகமான விஞ்ஞானக் கதைகளைப்போலவே அன்றைக்கும் நாசாவின் விண்வெளி நிலையம் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. விண்கல ஏவுதளத்துக்கான இறுதிநேர சரிபார்த்தல்கள், தயார்படுத்தல்கள் நடந்துகொண்டிருந்தன. விஞ்ஞானிகள் குறுக்கும் நெடுக்குமாக  கைகளில் இருந்த டப்லட்டில் எதையெதையோ சுட்டிக்காட்டிப் பேசியபடி உடைகள் பறக்க நடந்து திரிந்தார்கள்.   கணனித்திரையில் ஏவுதளம் 40Bயிலே "சுண்டர்1" விண்கலம் சிறிய உருவில் தெரிந்தது. “சுண்டர்1” சந்திரனுக்கு மனிதர்களைக் கொண்டுசெல்லுகின்ற ஏழாவது விண்கலம். நாற்பது ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் மனிதர் சந்திரனுக்குச் சென்று திரும்பப்போகும் பயணம். மூன்று விண்வெளி வீரர்கள், ஒன்பது பயணிகள் என்று மொத்தமாக பன்னிருவர் ஒரே சமயத்தில் பிரயாணம் செய்யும் முதல் பயணிகள் விண்கலம். அணுச்சக்தியில் இயங்கும் எஞ்சின், உள்ளக ஈர்ப்பு என்று பல நவீன தொழில்நுட்பங்களில் வடிவமைக்கப்பட்டிருக்கும் விண்கலம். இப்படி சுண்டர்1 விண்கலத்துக்குப் பல சிறப்புகள் இருக்கின்றன. இன்னமும் மூன்று மணித்தியாலங்களில் "டி மைனஸ்" கவுண்டவுன் ஆரம்பித்து ஒவ்வொன்றாக சரி பார்க்கப்பட்டு, வானிலையும

என் சொல்லே!

படைக்கும் வார்த்தைகளை விட அழிக்கும் வார்த்தைகள் அதிகமாயின. முதல்வரியிலேயே முழுநாளும் சிறுகதைகள் தேங்குகின்றன. எது எழுதியும் எழுதா வரியதைத் தேடி மனம் அலைகிறது. வார்த்தைகளுக்காய் காத்திருந்து வாயிலிலே கறையான் ஏறிவிட்டது. வருதும், வருதும் என்று வழிபார்த்து கண்மூடி. துளிசோர கிடந்தேனடி. வருவாயோ. வரம் தருவாயோ. என் மனது சஞ்சலிக்கிறது. வருவதை எலாம் வீதியில் வைத்து வேடிக்கை மனிதரலாம் வெட்டிப் புதைத்தனரடி. பசிக்கிறது. வாசிப்பு, இருக்கும் ஓரிரு வார்த்தைகளையும் பிடுங்கிக்கொள்கிறது. எல்லாமே இங்கே எழுதிச் சிறை பிடிக்கப்பட்டுவிட்டது. தப்பிய வார்த்தைகள் கண்காணா பிரபஞ்சத்துள் சுற்றித் திரிகின்றன. எனக்கு அவை வேணும். எடுத்து வா. எப்போதோ எனக்காக புறப்பட்ட ஒளிக்கதிரின் துணுக்குகளில் உட்கார்ந்து கடுகதியில் பறந்துவா. என் சொல்லே! ஊடலுற்ற காதலிபோல உம்மணாமூஞ்சியுடன் என்னைப்பார்த்து நீ திருப்பிக்கொள்ளாதே. என் காதல் சொல்ல நீ வேண்டும். நான் காதலிக்க சொல் வேண்டும். வார்த்தைகளின் வரம் வேண்டும். அடியேய் சிவசக்தி. அதை அருள்வதில் உனக்கெதுந் தடையுண்டோ?