Skip to main content

Posts

வானிசை நேர்காணல்

சிலவாரங்களுக்கு முன்னர் குமார் என்பவர் தொலைபேசி அழைப்பெடுத்து என்னோடு ஒரு வானொலி நேர்காணல் செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். வானிசை என்று இங்கே மெல்பேர்னில் இயங்குகின்ற பிராந்திய வானொலி மையமொன்று. “சரி, செய்யலாம்” என்றேன். “நல்ல கேள்விகள் இருந்தால் சொல்லுங்கள்” என்று வழமைபோல என்னிடமே கேட்டார்! சிரித்துவிட்டு, “நீங்களே கேளுங்கள், எதுவானாலும் ஒகே, ஆனால் என்னைப்பற்றி இல்லாமல் பொதுவான வாசிப்பு, இலக்கியம் பற்றி அமைந்தால் கேட்பவர்களுக்கு பிரயோசனமாக இருக்கும்” என்றேன். “இடக்கு முடக்காகக் கேட்கலாமா?” என்றார். “கேட்பது உங்கள் வேலை, ஆனால் சர்ச்சையான பதில்களை என்னிடமிருந்து எதிர்பார்க்காதீர்கள்” என்றேன். இனிமையான மனிதர். புரிந்துகொண்டார். சென்ற வெள்ளியன்று பேட்டி நேரடியாக ஒலிபரப்பானது. எமில்ராஜா என்பவர் பேட்டிகண்டார். முன்னர் சக்தி எப்.எம்மில் பணிபுரிந்ததாகச் சொன்னார். ஞாபகம் இல்லை. நானறிந்து எழில்வேந்தன் என்பவர் முன்னர் சக்தியில் இயக்குனராக இருந்தார். அப்புறம் அபர்ணாசுதன் வந்தார். அபர்ணாவையும் லோஷனையும் குணாவையும் தனிப்பட்ட ரீதியிலும் தெரியும். குணாவுடன் "அழைத்துவந்த அறிவிப்பாளர்&

ஊரோச்சம் : சோ.ப

யாழ்ப்பாணம். திருநெல்வேலிச்சந்தியிலிருந்து கிழக்கே ஆடியபாதம் வீதியால் ஒரு அரைக்கட்டை சென்றதும் இடதுபக்கம் வருவது கலாசாலை வீதி. அந்தவீதியால் உள்ளே ஒன்றிரண்டு கட்டைகள் வளைந்து வளைந்து சென்றால் முத்துத்தம்பி மகா வித்தியாலயம் வரும். அதற்கு இரண்டு வீடுகள் முன்னே இருக்கிறது சைவ வித்தியா விருத்திச் சங்கம். இறங்கி உள்ளேபோய்க் கேட்கிறேன். “சோ.ப சேர் இருக்கிறாரா?” “ஊற்றுக்கண்” என்று ஒரு கவிதை இருக்கிறது. நம்மூர்ப்பொங்கல் பற்றியது. நினைவு தெரிந்த நாள்முதலே கொண்டாட்டம் என்றால் அது நமக்குப்பொங்கலையன்றி வேறில்லை. பொங்கல் என்றதும் புக்கைக்கு அடுத்ததாகக் கூடவே ஞாபகத்துக்கு வருவது சீனன்வெடி. “பொடியள் வெடி சுடத் தொடங்கிவிடுவார்கள் வெடிகளில் எத்தனை வகை!” என்று ஆரம்பித்து ஒவ்வொரு வெடியாகக் கவிதை வரிசைப்படுத்தும். நூறு வெடிகளைக்கொண்ட ஆனைமார்க் வட்டப்பெட்டி. மான்மார்க் வெடி. இருபது வெடிகளைக்கொண்ட புத்தகவெடி. சின்னச் சின்ன கொச்சி வெடிகள். கந்தகத்தை நிரப்பி அடிக்கும் கோடாலி வெடி. ஈர்க்கு வானம். இப்படி வரிசையாக வெடிகள் விளக்கப்படும். “எத்தனை கோடி இன்பம்” என்று வெடி வெடிப்பதைக் கவிதை விளிக்கும். வெடி

சதைகள்

  “அழகியல் சார்ந்தும் அதன் அமைப்பு வடிவம் சார்ந்தும் நவீனத் தமிழ் இலக்கியப் பிரதிகளின் நீட்சியாகவே அனோஜன் பாலகிருஷ்ணனின் பிரதிகளைப் பார்க்கமுடிகிறது” என்ற பதிப்பாளர் குறிப்போடு ஆரம்பிக்கிறது “சதைகள்” சிறுகதைத்தொகுப்பு. மொத்தமாகப் பத்து சிறுகதைகள். அநேகமானவை சமூகக்கதைகள். சிலது பாலியலைப் பற்றிச் சொல்லுகின்றன. சில நம் சமூகத்தின் உள்ளீடாக புரையோடிப்போயிருக்கும் சாதியச்சிக்கல்களைப் பேசுகின்றன. சிலது புலம்பெயர்ந்தவர் வருகையினை எதிர்கொள்ளும் உள்ளூர்க்காரர்களின் உணர்வுகளைப்பேசுகிறது. சிலது காதல். சிலது முன்னைய காதல். ஆங்காங்கே இயல்பான அரசியல். இப்படிப் பத்துக்கதைகளும் சுற்றுகின்றன.

சிறுவர்கள் சொல்லும் கதை

  சந்திரனின் தகப்பன் காசிப்பிள்ளையர் ஒரு கடை முதலாளி. ஞாயிற்றுக்கிழமை காசிப்பிள்ளையர் வீட்டிலே நிற்கின்ற நாளென்பதால் காலையிலேயே மொத்த வீடும் அதகளப்படத்தொடங்கிவிடும். கடை வேலையாட்கள் விடிய வெள்ளனயே வந்து தோட்டத்தில் பாத்தி மாற்றிக்கொண்டிருப்பர். ஒன்பது மணிக்கே சங்கரப்பிள்ளை ஆடு அடித்து முதற்பங்கோடு இரத்தத்தையும் வீட்டுக்கு எடுத்து வந்துவிடுவார். அழுக்கு உடுப்புகளை எடுத்துப்போகவந்த நாகம்மாக்கிழவி வீட்டு வாசலில் உட்கார்ந்து யார் கேட்கிறார்களோ இல்லையோ, ஊர்த்துலாவாரங்கள் பேசத்தொடங்கிவிடும். அன்னலிங்கத்தார் மூத்த மகளோடு மா இடிப்பதற்காக வந்துவிடுவார். கிணற்றிலே தண்ணி இறைத்து தொட்டிலில் நிரப்புவதற்கென புக்கை வந்துவிடுவார். காயப்போட்ட புழுங்கல் நெல்லை மில்லுக்கு கொண்டுபோகவென ஒருவர் வந்துநிற்பார். தேங்காய் பிடுங்க இன்னொருவர். காசிப்பிள்ளையருக்கு ஸ்பெஷல் கள்ளு கொண்டுவர வேறொருவர். கணக்குப்பிள்ளை இன்னொருபக்கம். சந்திரனும் ஞாயிற்றுக்கிழமையானால் காலையிலேயே எழுந்து கால் முகம் கழுவி தயாராக நிற்பான். ஏழரை மணியானவுடனேயே படலைக்கும் வீட்டுக்குமாய் இருப்புக்கொள்ளாமல் ஓடித்திரிவான். காரணம் சண்முகம். சண்

செங்கை ஆழியான் உரைப்பதிவு

அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்துக்கு அண்மையில் வழங்கிய மறைந்த எழுத்தாளர் செங்கை ஆழியான் பற்றிய நினைவுப் பகிர்வு. சந்தர்ப்பம் கொடுத்த கானா பிரபா அண்ணாவுக்கு நன்றிகள். நிகழ்ச்சியில் இடம்பெற்ற முழு உரைப்பதிவுகளை பின்வரும் சுட்டியில் கேட்கலாம். http://www.madathuvaasal.com/2016/03/blog-post.html