Skip to main content

Posts

பொண்டிங்

பொண்டிங் இன்னமும் வந்துசேரவில்லை. மழைத்தூறலும் குளிருமாய் இருந்தது. அருண் பொறுமை இழந்துகொண்டிருந்தான். “Where are you?”, மயூரிக்கு மெசேஜ் பண்ணினான். “On the way” என்று ரிப்ளை வந்தது. டிரைவ் பண்ணிக்கொண்டிருந்தால் எப்படி டெக்ஸ்ட் பண்ணுவாள்? பொய். வாய் திறந்தால் பொய். சட் பண்ணினால் பொய். எஸ்.எம்.எஸ் எல்லாம் பொய். மயூரி பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்து பொய்யாகி நிற்பவள். இன்னமும் அவள் கட்டிலிலேயே கிடக்கலாம். அருகிலேயே அந்தச் சூடானியன்… ச்சிக், பொண்டிங்கை நினைக்கத்தான் கவலையாக இருந்தது. அவனை எப்படி நடத்துகிறார்களோ. பாவம். பிள்ளைக்கு வாய் திறந்து சொல்லவுந் தெரியாது. அந்த சூடானியன் பொண்டிங் முன்னாலேயே மயூரியை… Stop it Arun, அப்படி எல்லாம் நடக்காது. தாம் ஏன் அவ்வாறெல்லாம் தேவையில்லாமல் யோசித்து விசனப்படுகிறோம் என்று அருண் தன்னையே நொந்துகொண்டான். மயூரி எக்கேடு கெட்டால் அவனுக்கென்ன? அவன் எண்ணம், சிந்தனை, கவலை எல்லாம் பொண்டிங்மீதே. மயூரி பொண்டிங்கைச் சரியாகக் கவனிப்பாளா? பொண்டிங் என்ற பெயரை வைத்ததே மயூரிதானே.

கந்தசாமியும் கலக்சியும் - காயத்திரி

ஒரு கணித-கணினி மூளையின் தமிழ் பரிசோதனைகள் தரத்தில் தகதகக்கின்றன… உங்கள் பாஷையில் சொல்வதானால்… Virtual realitiy யில் ஓர் பிரபஞ்சப் பயணம் - கந்தசாமியும் கலக்சியும் அசையும் கரும்பொருட்கள் எல்லாம் அகக் கண்ணில் தெரிகிறது… ஓடும் எலிகள் எல்லாம் விஞ்ஞானிகளாய் மிரட்டுகிறது… ஒவ்வொரு வார்த்தைக்குள்ளும் ஓர் புதிர்.. பல புரிதல்கள்.. புரியாத புதிர்கள் கூட புன்னகைக்க வைக்கிறது… நகைச்சுவை நதியில் ஓர் விஞ்ஞானப் பயணம் - ஒளித்து வைத்திருக்கும் உள்ளுணர்வுகளுடன் கூட.. இது தான் உஙகள் வெற்றிக்கான தனித்தடம்… எங்கள் எல்லோரினதும் - இதயத்திற்குள் ஒளிந்திருக்கும் நப்பாசையை முடிவாக்கி உங்கள் காவியம் தானே மகுடம் சூடிக்கொண்டது… ‘தமிழுக்கே தமிழா’.. என.. இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.. சின்னப் பெருமையுடன்,.-எனக்கு உங்களைத் தெரியும்.. உங்களுக்கும் என்னை ஞாபகமிருக்கலாம்.. பட்டிமன்ற எதிரணியில் இருந்துகொண்டு - உங்களின் சரளமான மொழிநடையில் ‘ஆ’வென வியந்து – அடுத்ததாய் பேச வார்த்தைகள் இடறிய கல்லூரிக் கால நினைவுகளுடன்.. உங்கள் எழுத்துக்களின் பல்லாயிரம் விசிறிகளில் ஒரு விசிறி – காயத்திரி

எழுத்தாளருடன் முரண்படுதல்

“நான் என்பது எனக்கு வெளியே இருப்பது” என்றார் ழாக் லக்கான். சிறு வயதில் எனக்கென்றிருந்த அறம் இப்போது என்னிடமில்லை. சிறுவயது நானுக்கும் இப்போதைய நானுக்குமே மிகப்பெரிய வித்தியாசத்தை "நான்" காண்கிறேன். சமயத்தில் அதனை வியப்போடு பார்த்துமிருக்கிறேன். நாளை இதுவும் மாறுமென்றே தோன்றுகிறது. இதில் எனக்கு கெட்டியான இரும்புப்பிடி கிடையாது.

கந்தசாமியும் கலக்சியும்

அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, அமெரிக்கா, கனடா, ஐரோப்பா, மத்திய கிழக்கு, சிங்கப்பூர், மலேசியா  இலங்கை, இந்தியா இலங்கையில் கொழும்பு,  நல்லூரடி பூபாலசிங்கம் புத்தகசாலைக் கிளைகளிலும் பெற்றுக்கொள்ளலாம். ஏனைய வழிகளில் பெற்றுக்கொள்ள jkpadalai@gmail.com எனும் மின்னஞ்சலில் தொடர்புகொள்ளுங்கள். முகப்பு

கந்தசாமியும் கலக்சியும்

நண்பருக்குக் குழந்தை பிறந்திருக்கிறது என்ற செய்தி கேட்டு வைத்தியசாலை விரைகிறேன். வைத்தியசாலை வாசலிலேயே பிறந்த குழந்தைகளுக்கு வாங்கிச்செல்ல என்று பொருட்களை விற்றுக்கொண்டிருப்பார்கள். ஒரு கிப்டைத் தூக்கிக்கொண்டு, அவர்களுடைய வார்டுதேடி அலைந்து, கண்டுபிடித்துப் போனால், நண்பர் வெளியில் யாருடனே தொலைபேசியில் சிரித்துக்கொண்டிருந்தார். மகன் பிறந்த சந்தோசத்தில் சிரிக்கும் தகப்பன். வாழ்த்துச்சொன்னேன். உள்ளே என்று கையைக் காட்டினார். வார்டுக்குள் நுழைந்தேன். கட்டிலில் நண்பி. கலைந்த தலை. களைத்த முகம். கண்ணெல்லாம் சொருகிக்கிடந்தது. என்னைக் கண்டதும் “வாங்கோ” என்று சன்னமாக அழைத்தார். “வாழ்த்துகள்” என்றேன். “பயங்கரமாகப் படுத்திவிட்டான், கள்ளன்” என்றார். மூன்று நாட்கள் தொடர்ச்சியாக வலி வருவதும் போவதுமாக இருந்ததே ஒழிய பிரசவம் தாமதமாகிக்கொண்டேயிருந்தது. வைத்தியர்களும் இயற்கையாகவே நிகழட்டும் என்று கத்தி வைக்க மறுத்துவிட்டார்கள். எதிர்பார்ப்பு, பயம், வலி, அலைச்சல் என்று எல்லாமே கலந்த மூன்று நாட்கள். இத்தனையையும் சத்தம்போடாமல் நிகழ்த்திய அண்ணர் அருகே தொட்டிலில் நிம்மதியாக நித்திரைகொண்டபடிக் கிடந்தார். ஒரு வ