Skip to main content

Posts

ஊக்கி

“Yarl IT Hub” நிறுவனத்தினர் “ஊக்கி” என்கின்ற மென்பொருள் எழுதும் பயிற்சி நெறி ஒன்றுக்கான புலமைப்பரிசில் திட்டத்தை அறிவித்திருக்கிறார்கள்.

இக்கரைகளும் பச்சை 3 : மினோஸா

“அடுத்த திங்கள்கிழமை முதல் எங்களுடைய அலுவலக நண்பர் மினோஸ் ஹென்றிக்பெண்ணாக அறியப்படுவார்” மனிதவள முகாமையாளரிடமிருந்து வந்திருந்த அந்த மின்னஞ்சலை நம்பமாட்டாமல் திரும்பத் திரும்ப வாசித்துக்கொண்டிருந்தேன். வெள்ளி மாலை அலுவலக நாள் முடிவடையும் சமயத்தில் அந்த மின்னஞ்சல் வந்திருந்தது. நம்மோடு கூட வேலை செய்பவன் ஒருவன் பெண்ணாக மாறுகிறான் என்ற செய்தியை எப்படி சீரணம் செய்வது என்று தெரியவில்லை. ஒருவனை இனி ஒருத்தி என்று விளிக்கவேண்டும். அவன் இனிமேல் அவள். எப்படி முடியும்? இதெல்லாம் சாத்தியந்தானா? ஒரு மின்னஞ்சலிலேயே செய்து முடித்துவிடலாமா? 

இக்கரைகளும் பச்சை 2 – கொண்டாட்டங்களின் நகரம்

Credit : Shane Bell மெல்பேர்னில் எனக்கு மிகப்பிடித்த விடயம், இந்நகர மையத்தின் இரவுகள்தான். இதன் இரவுகள் எப்போதுமே பன்முகப்பட்ட கலை அடையாளங்களால் நிரம்பியிருக்கும். நகரம் முழுதும் வரலாற்றின் பலவிதமான கலைவடிவங்களுக்காக மையங்களையும் நிலையங்களையும் திறந்துவைத்து உலகம் யாவிலுமிருந்து கலைஞர்களை வரவழைத்து அவர்களது திறமைகளை வருடம் முழுதும் காட்சிப்படுத்திக்கொண்டிருப்பார்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதம். எம்முடைய குட்சொட் பார்ட்டிகளையும், அரங்கேற்றங்களையும், வெறுப்பையும் சோர்வையும் உமிழும் தமிழ் விழாக்களையும் வாராவாரம் வெளியாகும் சிங்கம்3 வகையறாக்களையும் சற்றுப் புறந்தள்ளி, வெளியே எட்டிப்பார்த்தோமானால் மெல்பேர்னின் குளிர் இரவு அவ்வளவு அழகாகத் தெரியும்.

ஜல்லிக்கட்டு - கடிதம்

ஜேகே, அதிக பணிச்சுமையில் இருப்பது போல் தெரிகிறது, அப்படியென்றால் இந்த ஈமெயிலுக்கு பதிலெழுத வேண்டாம். கீழே நீங்கள் எழுதியது: "ஒரு இனம் அடிமைப்பட்டுக் கிடந்தால் உடனே "புறப்படு, பொங்கியெழு, புரட்சி" என்று கோபாவேசத்தோடு முகநூல் எனும் பூமியில் குப்பைகள் போடுவதற்காக அமைக்கப்பட்ட தொட்டியில் போடுவார்கள். ...............ஒரு கட்டத்தில் வேறொரு புத்திசாலி புதிதாக இன்னொரு குப்பையைப் போடவும், ரோட்டிலே சிதறிக்கிடக்கும் பழைய குப்பைகளை எல்லோரும் மறந்துவிடுவார்கள். .............................கேட்டால் சமூக வலைத்தளம் என்பார்கள். குப்பை தொட்டிகளிலேயே பூமிக்கிரகத்தின் அத்தனை புரட்சிகளும் எழுச்சியும் வீழ்ச்சியும் இடம்பெறுகின்றன." இப்படியெழுதிட்டு, தமிழ்நாட்டில் நடந்த தன்னெழுச்சி போராட்டத்தை பற்றி (ஆதரித்தோ/எதிர்த்தோ) எதுவும் சொல்லாமல் விட்டது ஏன்? கேட்கனும் நினைச்சேன் கேட்டுவிட்டேன். மோகன்

புனைவுக் கட்டுரைகளும் ஆசிரியரின் மறுஜென்மமும்

சொல்வனம் இணையத்தில் வெளிவந்துள்ள அ. முத்துலிங்கம் சிறப்பிதழில் நான் எழுதிய "புனைவுக் கட்டுரைகளும் ஆசிரியரின் மறுஜென்மமும்" என்ற கட்டுரை வெளியாகி உள்ளது. //தமிழில் ஒரு உதாரணத்தை எடுத்துப்பார்க்கலாம். சயந்தனின் ஆதிரை அண்மையில் வெளிவந்து பரவலாக வாசிக்கப்பட்ட ஒரு நாவல். நாற்பது ஆண்டுகளுக்குமேலான ஈழத்துப்போராட்ட வாழ்க்கையை அழகியலோடு சொல்லிய நாவல் ஆதிரை. அதுவே ஆசிரியர் ஏற்படுத்துகின்ற நாவலின் மையப்புள்ளியுமாகும். ஆனால் ஆசிரியரின் மரணம் அந்நாவலின் மற்றமைகளை தெளிவாகப் படம்பிடித்துக்காட்டும். மலையகத்தமிழரையும் உள்வாங்குகின்ற அந்த நாவலில் முஸ்லிம்கள் என்பவர்கள் மற்றமையாகவே அதில் தெரிவர். அதன் அரசியல் நாவலாசிரியரின் சொந்த அரசியலைப்போலவே எல்லா விமர்சனங்களையும் எல்லாப்பாத்திரங்களினூடு கடமைக்குப் பதிவுசெய்துவிட்டு தமிழ்த்தேசியத்தின் மீதும் புலிகள்மீதும் ஒருவித உறவு கலந்த கரிசனையை வலிந்து ஏற்படுத்தும். இது சயந்தனை விலத்தி ஆதிரையை அணுகும்போது சாத்தியப்படும் மாற்று மையங்கள்.// மேலும் வாசிக்க.. http://solvanam.com/?p=48404

கிடுகுவேலி விசாகன் - அஞ்சலி

இன்று காலை இன்னுமொரு மரணம் எதிரே வந்தது.  நண்பர் விசாகன் சமூக வலைத்தளங்களினூடு அறிமுகமான ஒரு நண்பர். நேரிலும் சந்தித்திருப்போமே தெரியாது. சந்தித்திருந்தாலும் அடையாளம் கண்டுபிடித்திருக்கமாட்டேன். விசாகன் என்றால் அவருடைய என்றைக்கும் மாறாத, சிரித்த முக, புரபைல் பிக்சரும் கிடுகுவேலியும் அவர் இடும் பதிவுகளும்தான் ஞாபகம் வரும். சின்னமணியின் வில்லிசையையும் கானமூர்த்தி பஞ்சமூர்த்தியையும் யாழ்ப்பாணத்துக் கிரிக்கட்டையும் கம்பன் விழாக்களையும் நானும் அவரும் வெவ்வேறு மண் கும்பிகளில் இருந்து ரசித்திருக்கிறோம். கோயில் திருவிழாக்கடைகளில் நாங்கள் அருகருகே நின்று கச்சானோ, ஜூஸ் பக்கற்றோ வாங்கியுமிருக்கலாம். தூத்துக்குடி வானொலி நிலையத்தில் “நிலாக்காயும் நேரம்” பாடலை அவரவர் வீட்டிலிருந்து கேட்டிருக்கிறோம். நான் வடக்குவீதியில் பார்த்துரசித்த ஹால்ப்சாரியை அவர் தேரடியில் கண்ணுற்றிருக்கலாம். என் கொல்லைப்புறத்துக் காதலிகள் அவருக்கும் கொல்லைப்புறத்துக் காதலிகள். அருண்மொழிவர்மனுக்கும் காதலிகள். பாலாவுக்கும் காதலிகள். சயந்தனுக்கும் அதே. நிலாவை அவரவர் முற்றங்களிலிருந்தும் வியந்து பார்த்திருக்கிறோம். ஒவ்வொருவ

இக்கரைகளும் பச்சை 1 – பருப்புக்கறி வாங்கிய பெண்

மெல்பேர்னின் புறநகர்ப்பகுதியான எப்பிங்கில் இருக்கும் “தமிழ் பலசரக்குக் கடை” ஒன்றுக்கு “மட்டன் ரோல்ஸ்” வாங்கச் சென்றிருந்தேன். மட்டன் ரோல்ஸ் தாச்சியில் பொரிந்துகொண்டிருந்ததால் கடைக்காரர் என்னைச் சற்றுநேரம் காத்திருக்கும்படி கூறினார். பத்து நிமிடங்கள் எடுக்கும் என்றால் அந்தப்பத்து நிமிடங்களுக்குள் நான் கடையை இரண்டுதடவை சுற்றிபார்க்கவேண்டிவரும், ஆங்காங்கே சில பொருட்களை எடுக்கலாம், இரண்டு ரோல்சுக்கு வந்தவன் இருபது டொலர்களுக்கு சாமான்கள் வாங்குவான் என்று கடைக்காரர் எதிர்பார்த்திருக்கக்கூடும். நான் உள்ளே சுற்றாமல் வாசலிலேயே நின்று விடுப்புப்பார்க்க ஆரம்பித்தேன்.

இரண்டாவது விமர்சகன் – நா. பார்த்தசாரதி

நா. பார்த்தசாரதியின் இந்தச் சிறுகதை 1966ம் ஆண்டு கணையாழி இதழில் வெளிவந்தது. ஐம்பது வருடங்களில் தமிழில் இலக்கிய விமர்சன உலகில் உள்ள அரசியல் அப்படியே மாறாமல் இருக்கிறது என்பதற்கு இக்கதை ஒரு சாட்சி. எஸ்.பி.எஸ்களும், மர்ம பலராமன்களும் வேறு வேறு பெயர்களில் அலைந்துகொண்டேயுள்ளனர். இலக்கிய இராட்சசன், இலக்கியக் கொம்பன் போன்ற பத்திரிகைகளும் இன்னமும் வெளிவந்துகொண்டேயிருக்கின்றன. இரண்டாவது விமர்சகர்களுக்கு மரணமே கிடையாது. சிறுகதையைப் பகிராமல் இருக்கமுடியவில்லை.

சகுந்தலா கணநாதனின் உரையின் எழுத்து வடிவம்

என்னை “எப்போது தமிழிலே எழுதப்போகிறீர்கள்?” என்று இங்கு வந்திருக்கும் எஸ்.பி.எஸ் ரேணுகா துரைசிங்கம் ஒருமுறை கேட்டார். அப்போது ஜேகேயின் கொல்லைப்புறத்துக் காதலிகள் பாணி எனக்கு மிகவும் பிடிக்கும், அப்படி எழுதவேண்டும் என்றேன். அதன்பிறகு தொடர்ச்சியாக அவருடைய எழுத்துகள் மீது காதல் கொண்டேன்.  William Shakespeare, George Bernard Shaw இருவரும் சமூகக்குறைபாடுகளை கேலிப்பேச்சு, அதாவது satire மூலம் மக்களுக்கு அவர்கள் காலத்துக்கேற்ற பாணியில் எடுத்துரைத்திருக்கின்றனர். உதாரணமாக , Touchstone என்று ஒரு முட்டாள் செக்ஸ்பியரின் நாடகத்தில் அப்பப்போ தோன்றி மக்களை சிரிக்க வைத்தது மட்டுமல்லாமல் சிந்திக்கவும் உதவினார் .

கந்தசாமியும் கலக்சியும் - வாசிப்பு அனுபவப் பகிர்வுகள்

கந்தசாமியும் கலக்சியும் நூல் வாசிப்பு அனுபவப் பகிர்வின்போது இடம்பெற்ற உரைகளின் தொகுப்பு. சுபாசிகன் கேதா சகுந்தலா கணநாதன் ஜூட் பிரகாஷ் முருகபூபதி நிருஜன் - தமிழ்த்தாய் வாழ்த்து

ஜெயலலிதா

பதினொரு வயது இருக்கலாம். எங்கள் ஊர்களில் எல்லாம் மண்ணெண்ணெய் ஜெனரேட்டர்களை வாடகைக்கு எடுத்து இரவு முழுதும் ஆறேழு படங்களைத் தொடர்ச்சியாகப் பார்க்கின்ற சீசன் அது. ஸ்பொன்சர்களுக்காகப் பழைய படங்களை முதலாவதாக ஏழு மணிக்கே போடவேண்டிய தேவை எமக்கு அப்போது இருந்தது. ஒருமுறை இரண்டு லீட்டர் எண்ணெய் இலவசமாகத் தந்தார் என்பதற்காக, அவர் சொல்லிப் போட்ட படம்தான் “எங்கிருந்தோ வந்தாள்” ஹீரோ சிவாஜி. மனநிலை பாதிக்கப்பட்டவராக நடித்த படம். ஹீரோவுக்கு மனநிலை குழம்பிய சமயத்தில் அவரை எல்லோரும் கைவிட்டுவிட, ஹீரோயின் மாத்திரம் பரிவுகாட்டிப் பணிவிடை செய்வார். ஆனால் ஹீரோ குணமானதும் அவருக்கு நிகழ்ந்ததெல்லாம் மறந்துவிடும். தமிழில் இதுபோல் ஆயிரம் திரைப்படங்களும் நாவல்களும் வெளியாகிவிட்டன. “எங்கிருந்தோ வந்தாள்”தான் எல்லாவற்றுக்கும் ஆரம்பம் என்று நினைக்கிறேன். “எங்கிருந்தோ வந்தாள்” படத்தில் மனநிலை பாதிக்கப்பட்டவராக நடிப்பதற்கு நிறைய ஸ்கோப் உள்ள பாத்திரம் சிவாஜிக்கு. ஆனால் அடித்து ஆடியது என்னவோ அதில் ஹீரோயினாக நடித்த ஜெயலலிதா. வழமையாக ஜெயலலிதா எடுத்து நடிக்கும் பாத்திரங்களிலிருந்து சற்று வேறாக கொஞ்சம் அடக்க

கந்தசாமியும் கலக்சியும் - கார்த்திகா

நீண்டதொரு ரயில் பயணம், நீண்ட நாட்களின் பின்னான நல்லதொரு நாவலும்,என் தமிழ் எழுத்தும். கடுகதி ரயில் சேவை என்று கடைசியில் கடுகடுப்பாக்கிய 12 மணித்தியாலங்கள்,ஆபத்பாந்தனாய் "கந்தசாமியும் கலக்சியும்" முன் பின் தெரியாதவர்களிடம் அவ்வளவாக பேச்சுக் கொடுக்கமாட்டேன்,ஆனால் அவர்கள் பேசிய இரண்டாவது நிமிடத்தில் என் பூர்வீகம் முழுவதும் அவர்கள் தெரிந்து கொள்வார்கள்,பதிலுக்கு அவர்கள் தமிழ் பேசத் தெரிந்தவர்கள் என்று மட்டும் தெரிந்து கொள்வேன்.அப்படிப்பட்ட சக பயணியிடம் தப்பிப்பதற்கு நான் எடுத்துக் கொள்ளும் ஆயுதங்கள் ஒன்று புத்தகம்,இன்னொன்று நல்ல மலையாளப்படம். அச் சகபயணி கொழும்பு பயணத்தை ரத்து செய்து இன்னுமொரு அரைமணித்தியாலதில் அநுராதபுரத்தில் இறங்கிவிடுவார் என்ற செய்தி லாட்டரிச்சீட்டு விழுவதைப்போல.லாட்டரிச்சீட்டு விழுகிறதோ இல்லையோ எனக்கு அவாட ஜன்னல் சீட்டு confirm.பிறகென்ன , ஜன்னலோரம் ,ரயில் பயணம், தனிமை,புத்தகம்,கையில் ஒரு hot coffee இல்லாததுதான் குறை.ஸ்டார்ட் த மியூஜிக். ஜேகே அண்ணா,உங்களுடைய "கொல்லைப்புறத்து காதலிகள்" பற்றியே முதல் பதிவு போட வேண்டும் என்று நினைத்திருந்த

தமிழில் ஒலிப்புத்தகங்கள்

வேலை மாறியதன் விளைவாக ரயில் பயணங்களில் புத்தகம் வாசிப்பதை வெகுவாக மிஸ் பண்ணிக்கொண்டிருந்தேன். ஆபத்பாந்தவராக எனக்கு ஒலிப்புத்தகங்கள் வந்துசேர்ந்தன. நான் முதலில் கேட்க ஆரம்பித்தது தாஸ்தாயேவ்ஸ்கியின் இடியட் நாவலை. மொத்தமாக நான்கு பாகங்கள். புத்தகமாக வாசித்தால் எழுநூறு பக்கங்கள்தான் வந்திருக்கும். ஆனால் அந்த ஓலிப்புத்தகம் முப்பது மணித்தியாலங்கள் நீளமானது. கொஞ்சம் அகலக்கால்தான். நட்டாசியா பிலிப்போவ்னா மாதிரியான ஒரு பெண் பாத்திரத்துக்காகவே பொறுமையாகக் கேட்டு முடித்தேன். ஒரு மாதம் எடுத்துவிட்டது. அச்சடித்த புத்தகங்களை மடியில் வைத்து வாசம் பிடித்து வாசித்தவனுக்கு இடியட் நாவலைக் கேட்ட அனுபவம் ஒலிப்புத்தகங்கள் மீது நம்பிக்கையை வரவழைத்தது.

கந்தசாமியும் கலக்சியும் நிகழ்வு புகைப்படங்கள்

ஜேகே.வின் ‘பொண்டிங்’- கதை சொல்லும் விளையாட்டு

"பதாகை" இணைய இதழில் பொண்டிங் சிறுகதை பற்றி வெளிவந்திருக்கும் விமர்சனம். ஜேகே.வின் ‘பொண்டிங்’- கதை சொல்லும் விளையாட்டு பொண்டிங் சிறுகதைக்கான சுட்டி பொண்டிங் நன்றி.

SBS வானொலி நேர்காணல்

நேற்றைய தினம் அவுஸ்திரேலிய தேசிய வானொலிச்சேவையான SBS இல் வெளியான எனது நேர்காணல். பகுதி 1 http://www.sbs.com.au/yourlanguage/tamil/ta/content/puttkngkllaik-kuuvikkuuvi-virrk-veennttiy-kiilllttrmaannn-nilaiyil-ellluttaallr-cmuukm?language=ta பகுதி 2 http://www.sbs.com.au/yourlanguage/tamil/ta/content/naannn-elllutuvtu-aavnnppttuttlukkaak-all?language=ta

ஜே.கே.யின் கந்தசாமியும் கலக்சியும் - முருகபூபதி

"மௌன வாசிப்பில் வெடித்தெழும் சிரிப்பலைக்குள் மூழ்கும் அனுபவம் தரும் நாவல்" நவீன படைப்பிலக்கியப்பிரதிகளை நான் வாசிக்கத்தொடங்கிய 1970 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கையில் ஒரு எழுத்தாளர், "இலக்கியம் படைப்பவர்களுக்கு கம்பராமாயணமும் கல்குலசும் ஓரளவாவது தெரிந்திருக்கவேண்டும்" என்றார். அவுஸ்திரேலியாவில் எமக்கு கணினி அறிமுகமானதன் பின்னர், எழுத்தாளர்களுக்கு கம்பராமாயணம் முதல் கம்பியூட்டர் வரையில் தெரிந்திருத்தல் வேண்டும் என்ற நிலை வந்தது. ஜே.கே. எழுதியிருக்கும் கந்தசாமியும் கலக்சியும் படைப்பை படித்ததும், மேலும் ஒரு படி சென்று கலக்சியும் தெரிந்திருக்கவேண்டியதாயிற்று. ஒரு ஓவியக்கண்காட்சியில் பால்வீதியை சித்திரிக்கும் படத்தை பார்த்திருக்கின்றேன். பால்விதியில் கலக்சி வருகிறதாம். பார்த்ததில்லை. ஜே.கே.யின் இந்தப்படைப்பில் பார்க்க முடிகிறது. ஒரு நாவலாக தொடங்கினாலும் நாவலுக்கே உரித்தான நேர்கோட்டுத்தன்மையில் விரியவில்லை.

இடியட்

கடந்த இருவாரங்களாக தாஸ்தாயேவ்ஸ்கியின் “இடியட்” என்ற நாவலை ஒலிப்புத்தகமாகக் கேட்டுவருகிறேன். ரயில் யன்னலோரமாக உட்கார்ந்து, அதன் மிதமான தள்ளாட்டத்தோடு கதைகளை வாசித்து வந்தவனுக்கு மகிழூந்திலே பயணம் செய்யும்போது ஒலிப்புத்தகத்தைக் கேட்பது என்பது புது அனுபவம். முன்னால் செல்லும் வாகனம் பாதை மாறும்போதும், சிக்னல் நிறம்மாறும்போதும், பின்னால் வரும் வாகனத்திலுள்ள பெண் மூக்கு குடையும்போதும் புத்தகத்திலிருந்தான நம்முடைய கவனம் தவறும்.  புத்தகத்தை வாசிப்பதற்கும் ஒலிப்புத்தகத்தைக் கேட்பதற்கும் பாரிய வித்தியாசம் உண்டு. ஒலிப்புத்தகத்தில் நமக்கும் புத்தகத்துக்குமிடையே வாசிப்பவர் எப்போதுமே விளக்குப்பிடித்துக்கொண்டு நிற்பார். அது வாசகருக்கும் புத்தகத்துக்குமான நெருக்கத்தையும் ஆழமான அமைதியையும் குலைக்கிறது. கூடவே வாசிப்பவரின் வேகத்துக்கும் குரல்மொழிக்கும் நம்முடைய மனவேகம் இயைவாக்கப்படவேண்டும். நாமே வாசிக்கும்போது எங்கோ ஒரு ஆழத்தில் ஒலிக்கின்ற நம்முடைய தனித்த குரல் இங்கே ஒலிக்காது. எழுத்துநடை போன்று ஒவ்வொரு வாசகருக்கும் ஒரு தனித்த நடை உண்டு. வாசகருக்கேயுரிய எள்ளல், சிரிப்பு, ஆண், பெண் முதியவர

மெல்பேர்னில் "கந்தசாமியும் கலக்சியும்"

அன்போடு அழைக்கிறோம்