Skip to main content

Posts

ஒரு காண்டாமிருகத்தைப்போல

"This is a bondage, a baited hook. There's little happiness here, next to no satisfaction, all the more suffering & pain." Knowing this, circumspect, wander alone like a rhinoceros.” "இது ஒரு கட்டு, இரையுள்ள தூண்டில். இங்கு இன்பம் குறைவு, கொஞ்சமும் திருப்தி இல்லை, துக்கமும் துன்பமுமே அதிகம்." இதை அறிந்து, எச்சரிக்கையோடு இருந்து தனித்து நடமாடு காண்டாமிருகத்தைப் போல.” கடந்துபோன இரண்டாயிரத்துப் பதினெட்டு சற்று விசித்திரமான ஒரு ஆண்டு. எதிலுமே பிடித்தமில்லாமல், எவற்றிலுமே நம்பிக்கை கொள்ளாமல் எல்லாவற்றிலுமிருந்து விடுபட்ட மனநிலை மேலோங்கியிருந்த ஆண்டு இது. என் தொலைப்பேசி முழுதும் தவறவிடப்பட்ட அழைப்புகள் நிறைந்திருந்த வருடம். தகவல் பெட்டிகளும் மின்மடல்களும் வாசிக்கப்படாமல் முடங்கியிருந்த காலம். வாசிப்பில் பிடித்தம் அருகிக்கொண்டு வந்ததும் எழுதும் எழுத்தை வெளியிடும் ஆர்வம் குறைந்ததும் இதே காலப்பகுதியில்தான். சமூக வலைத்தளங்கள் மீதான வெறுப்பும் மேலோங்க ஆரம்பித்ததும் அப்போதுதான். மனிதர்களின் போலித்தனங்கள் மேலும் மேலும் பட்டவர்த்தன

நிஸ்ஸி

நேற்று காலை, வேலையிலும் பாட்டிலும் மூழ்கியிருந்தபோது பென் வந்து முதுகில் தட்டினான். “உன்னோடு வேலை செய்யக்கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியானது” “என்ன நடந்தது?” என்றேன். “வேலை போய்விட்டது … இப்போதே வெளியேறுகிறேன். இந்த கக்காவை இனிமேலும் சகித்துக்கொள்ள முடியாது” தூக்கிவாரிப்போட்டது. பென் என்னைவிட அதிகக்காலம் இங்கே வேலை செய்பவன். செய்தவன். வேலையை விட்டு ஆள்கள் போவதும் வருவதும் சகஜமான விசயம்தான். ஆனால் இந்த இக்கணத்தில் போட்டது போட்டதுபடியே அவனை வெளியேறச்சொன்னதுதான் அதிர்ச்சியாக இருந்தது. வார்த்தைகள் வரவில்லை.

கன்னடக் கதைகளு 1: நெல்லி

மாலை ஐந்து மணி தாண்டியிருந்தது. ஹம்பி எக்ஸ்பிரஸ் ஹோஸ்பேட்டுக்கு வந்துசேர இன்னமும் நான்கு மணித்தியாலங்கள் இருந்ததால், அவ்வளவு நேரமும் என்ன செய்வது என்று தெரியவில்லை. வெளியே இறங்கி நடக்கலாம் என்றால் மழை தூறிக்கொண்டிருந்தது. தனியனாக உணவகத்துக்குள்ளேயே முடங்கிக்கிடந்து வெறுமனே கிங்பிஷரை அருந்திக்கொண்டிருக்க அலுப்படித்தது. இன்னொரு மிளகு மசாலா சொல்லலாம் என்றால் வயிறு வாய்தா கேட்டது. இன்னொருபுறம் மனம் இக்கணங்களை இப்படிக் கழித்து இலகுவில் இழந்துவிடாதே என்று சொல்லியது.  வெளியே வந்தேன்.  மழையை எவருமே பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. தெருவோரமாக ஒரு பெண்மணி சோளம் பொத்திகளை நெருப்பில் சுட்டு விற்றுக்கொண்டிருந்தார். இடது கையால் ஒரு பழைய கறுப்புக்குடையை நெருப்பு அணையாவண்ணம் மழைக்குப் பிடித்தபடி, மறு கையில் ஒரு குழாயை ஊதி ஊதி தணலை எரியூட்டிக்கொண்டிருந்தார். அவருக்கருகிலேயே சிறு பெட்டிக்கடையில் வெங்காயப்பஜ்ஜி போட்டுக்கொண்டிருந்தார்கள். சூடாக எதையாவது வாங்கிச்சாப்பிட்டால் நன்றாக இருக்குமே என்று தோன்றியது. வீதியைக் குறுக்கே கடந்து போனபோது, பக்கத்திலேயே ஒரு சிறுமி நெல்லிக்காய் விற்றுக

96

அலுவலகத்திலிருந்து காரை எடுத்துப் பிரதான வீதிக்குள் திரும்பமுதலே சசி அண்ணாவிடமிருந்து அழைப்பு வந்தது. அப்போதே தெரியும் அண்ணர் 96 பார்த்துவிட்டுத்தான் இருப்புக்கொள்ளாமல் எடுக்கிறார் என்று. அடுத்த முக்கால் மணிநேரம் நானும் அவரும் பேசிக்கொண்டதன் தொகுப்பு இது. படம் பார்க்காதவர்கள்கூட வாசிக்கலாம். ஒரு ஸ்பொயிலரும் கிடையாது. மே பி, கலாச்சார காவலர்கள், ஸ்கிப் இட். 

அயல்

நேற்று வீடு கூட்டிக்கொண்டிருக்கும்போது துணைக்குப் ப்ளே லிஸ்ட் ஒன்றைக் கொஞ்சம் சத்தமாகவே ஒலிக்கவிட்டிருந்தேன். ‘நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ’. கூடவே சேர்ந்து பாடியபடி. கூட்டிக் குவித்து குப்பையை அள்ளி வெளியே தொட்டியில் போட்டுவிட்டுத் திரும்பும்போது, பின்கதவை இழுத்துச்சாத்த மறந்துவிட்டேன். அடுத்து ‘திமு திமு தீம் தீம்’ ஒலித்தது. அதன் இதமான தாளத்திற்கேற்ப தும்புத்தடி மெதுவாகவே கூட்டிக்கொண்டிருந்தது. பாட்டு முடியும்போது வாசல் மணி அடித்தது. முதலும் பல தடவைகள் அடித்திருக்கவேண்டும். எனக்கு அப்போதுதான் கேட்டது. போய்த்திறந்தேன்.  பக்கத்துவீட்டு மனிசி. முறைத்துக்கொண்டு நின்றது. இத்தாலிக்காரி.