Skip to main content

Posts

தோழர் நேசமணி

சற்றுமுன்னர்தான் நண்பர் கிருஷ்ணமூர்த்தியுடன் தொடர்புகொண்டு பேசினேன். தோழர் நேசமணி அபாயக்கட்டத்தைத் தாண்டிவிட்டதாகவும் மிகுந்த உற்சாக மனநிலையுடன் இருப்பதாகவும் கூறினார். தோழரோடு பேசப்போகிறீர்களா என்றும் கேட்டார். ஏதோ ஒன்று தடுத்தது. பின்னர் பார்க்கலாம் என்று சொல்லிவிட்டேன். நேற்றுத் தகவல் அறிந்தமுதல் எனக்குத் தோழர் நேசமணியின் ஞாபகமாகவே இருந்தது. பிரான்சில் இருக்கும் எம்முடைய இயக்கத்தோழரோடு அழைப்பெடுத்துப் பேசியபோது கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. இருவரும் தோழர் நேசமணியோடு பழகித்திரிந்த, கதைகள் பல பறைந்த அந்தக் காலத்தை நினைவு கூர்ந்தோம். காலமும் தூரமும் நம் உறவுகளை பிரித்தே வைத்திருந்தாலும் அனிச்சைகளால் நாங்கள் எப்போதும் பேசிக்கொண்டே இருந்திருக்கிறோம் என்று தோன்றுகிறது.

இரண்டாயிரத்துப் பத்தொன்பது, மே, இருபத்தியேழு

குளிர் ஆரம்பித்துவிட்டிருந்தது. இலையுதிர்காலம் வந்ததும் தெரியவில்லை. போனதும் தெரியவில்லை. கடந்த தடவை வசந்தகாலத்துக்கும் இதுதான் நிகழ்ந்தது. வசந்தத்தையும் இலையுதிரையும் கோடையும் குளிரும்தான் நமக்கு ஞாபகப்படுத்தவேண்டியிருக்கிறது. வீட்டில் அப்பிள் மரம் காய்த்துக்கொட்டிக்கொண்டிருந்தது. கொழும்பிலிருந்து அப்பா ஓமந்தையால் கொண்டுவரும் நான்கு அப்பிள்களை முன்வீடு பின்வீடு என்று எல்லோருக்கும் பிரித்துக்கொடுத்தக் காலம் என்று ஒன்றுண்டு. நான்காய், எட்டாய்ப்பிரித்து அதிலொரு துண்டு கிடைக்கும். தீர்ந்துவிடுமே என்று நன்னி நன்னி சாப்பிட்டது. காலையில் காருக்குள் ஏறும் முன்னர் மரத்தில் எட்டி ஒன்றைப் பிடுங்கி, பக்கத்துப் பைப்பிலேயே கழுவி, கடித்தபடி புறப்படுகிறேன். இதனை முன்வீட்டு லலிக்குச் சொன்னால் புன்னகைப்பான் என்று நினைக்கிறேன்.

ஷாஜகானின் காட்டாறு

அண்மைக்காலங்களில் தமிழில் வாசிப்பது என்பது பெரும்பாலும் அயர்ச்சியையே கொடுத்து வந்திருக்கிறது. அதற்குக் காரணம் அவை வாசிப்புக்கு உகந்ததாகாமல் போய்விட்டன என்பதல்ல. அவற்றை வாசிக்கும்போது என் மனநிலை தளம்புகிறது. தமிழில் வாசிக்கும்போது கதைக்களனுக்குள் நுழைந்து ஒன்றிணையமுடியாமல் வாசிப்பு மனநிலை அலைக்கழிக்கப்படுகிறது. நூல்களையும் அவற்றை எழுதிய எழுத்தாளர்களையும் உள்ளடக்கிய புறச்சூழ அரசியலும் விவாதங்களும் அவர்களை வாசிக்கும்போது முழித்துக்கொண்டு ஒவ்வொரு பக்கங்களிலும் நிற்பதைத் தவிர்ப்பது கடினமாக இருக்கிறது. அதனால் அவற்றிலிருந்து வலிந்து விலகி நின்று, எழுத்தாளர்களின் பொதுவெளிகளை அவதானிக்காமல், அவர்களுடைய முகநூல், இணையத்தள, காணொலிப்பதிவுகளைக் கவனிக்காமல் நூல்களை மாத்திரமே தேடி வாசிக்கவேண்டிய நிலை ஏற்படுகிறது. வேற்றுமொழி இலக்கியங்களை வாசிக்கும்போது இந்த மனநிலை ஏற்படுவதில்லை. அந்தப் புத்தகங்களை அவற்றின் புறவெளி விவாதங்களைப்பற்றி அறியாமலேயே அணுகமுடிகிறது. அதனால் புத்தகங்களின் உள்ளடக்கங்களோடு நெருங்குவது என்பது இலகாகிறது.  கேட்கப்படாத பாடல்கள்போல வாசிக்கப்படாத புத்தகங்களும் கொஞ்சம் அதிகம் அழக

கொள்ளை நோய்

ஓரன் என்கின்ற கடலோர நகரம் ஒன்றில் இடம்பெறும் கதை இது. ஒரு ஏப்ரல் நாளில் ஓரன் நகரமெங்கும் திடீரென்று ஆயிரக்கணக்கான எலிகள் செத்துவிழத்தொடங்குகின்றன. முதலில் ஒருவருடைய வீட்டு வாசலில் எலி ஒன்று செத்துக்கிடந்தது. பின்னர் தோட்டத்தில் ஐந்தாறு எலிகள் செத்துக்கிடந்தன. குப்பைத்தொட்டியருகே ஐம்பது எலிகள். ஒரு தானியக் கிடங்குக்குப் பின்னே நூற்றுக்கணக்கான எலிகள். இப்படித் தொடர்ச்சியாக எலிகள் செத்துவிழ ஆரம்பிக்கின்றன.

நண்பர்கள் மற்றும் பிறர்

சென்றவாரம் எனக்கொரு தொலைப்பேசி அழைப்பு வந்தது. புதிய இலக்கம்.  “தம்பி நான் மகாலிங்கம் கதைக்கிறன். உங்கட அப்பாண்ட பழைய பிரண்ட். ஒஸ்ரேலியால வந்து நிக்கிறன் … அவரோட கதைக்கலாமா?” அப்பாவிடம் போனைக் கொடுத்தேன். அப்பாவும் அந்த மகாலிங்கம் அங்கிளும் பேச ஆரம்பித்தார்கள். தியத்தலாவை, நொச்சியாகமை, குமரப்பெருமாள் அண்ணன், சேர்வெயிங் டிபார்ட்மெண்ட், ரெமி மார்டின், பெர்ணாண்டோ, எச்.என்.பெரேய்ரா, டோஹா, பாரெயின், தியோடலைட், டோடல் ஸ்டேசன், ஶ்ரீகரன், ஒரேட்டர் சுப்ரமணியம் என்று பொதுவாகவே இரண்டு நில அளவையாளர்கள் பேசிக்கொள்ளும்போது அடிபடும் சொற்கள் மீண்டும் கேட்டன. அவர்கள் சொல்லிக்கொண்ட பெயர்களில் பலர் இப்போது உயிரோடு இல்லை. அந்த நில அளவை உபகரணங்களும் பாவனையில் இல்லை. கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் பேசினார்கள். பேசிமுடியும்போது அப்பா மகாலிங்கம் அங்கிளுக்கு வீட்டின் முகவரியைக் கொடுத்தார். அவ்வளவுதான். இனி ஒரு வார இறுதியில் மகாலிங்கத்தாரின் மகனோ மகளோ காலையில் கொண்டுவந்து அவரை இறக்கிவிட்டுப்போனால் இரவு உணவு முடிந்து பத்துப் பதினொரு மணிவரைக்கும் அவர்களிருவரும் பேசிக்கொண்டிருப்பார்கள். அம்மா அப்பவே