Skip to main content

Posts

ஊரோச்சம் : கட்டாக்காலி நாய்கள் : 1

யாழ்ப்பாணம் முழுதும் கட்டாக்காலி நாய்களால் நிறைந்திருந்தது. முன்னரானால் ஒழுங்கை முகப்புகளிலும் கோயில் முன்றல்களிலும் சந்தைகளிலும் சாப்பாட்டு ஓட்டல்களுக்குப் பின்னாலிருக்கும் வெறுங்காணிகளிலுமே கட்டாக்காலி நாய்கள் திரிவதுண்டு. என்னதான் கட்டாக்காலிகள் என்று சொன்னாலும் அவற்றுக்கும் ‘கண்ணன் லொட்ஜ் நாயள்’, நந்தாவில் அம்மன் நாயள்’, ‘நல்லூரடி நாயள்’, ‘மூத்திர ஒழுங்கை நாயள்’, பணிக்கரடி நாயள் என்று பல முத்திரைப் பெயர்கள் இருந்தன. அந்தக் கட்டாக்காலிகள் போட்ட குட்டிகள்தான் எங்கள் வீடுகளிலெல்லாம் வளர்ப்பு நாய்களாகவும் இருந்தன. கட்டாக்காலிகளின் எண்ணிக்கை அதிகமானாலோ அல்லது அவற்றின் தொல்லை கூடிவிட்டாலோ நகரசபை நாய்பிடிகாரர் வந்து அவற்றைப்பிடித்துக்கொண்டு போய்விடுவார்கள். பல நாய்களைத் தெருவிலேயே வைத்து இயக்கங்களும் இந்திய இலங்கை ஆர்மிகளும் மாறி மாறிச் சுட்டுப்போட்ட சம்பவங்களும் இடம்பெற்றிருக்கின்றன. சுடும்போது அவர்கள் வளர்ப்புநாயா கட்டாக்காலியா என்று பேதம் பார்க்கமாட்டார்கள். எது எப்படியோ, இன்னோரன்ன காரணங்களால் அந்நாட்களில் கட்டாக்காலிகளின் எண்ணிக்கை எப்போதுமே ஒருவித கட்டுக்குள்ளேயே இருந்தது என்க.

'சமாதானத்தின் கதை' பற்றி ஹஸனாஹ் கவிதா

ஜே.கே இனது கொல்லைப்புறத்துக் காதலிகளை அனுபவித்து, இரசித்ததைப் போன்று ஆதிரை வெளியீடாக வந்துள்ள சமாதானத்தின் கதையை இரசிக்க முடியவில்லை. கொல்லைப்புறத்துக் காதலிகளை ஒரே மூச்சில் வாசித்து முடித்ததைப் போன்று சமாதானத்தின் கதையை வாசித்து முடிக்க முடியவில்லை.

'சமாதானத்தின் கதை' பற்றி சஞ்சயன் செல்வமாணிக்கம்

அ. முத்துலிங்கத்திற்கு எழுத்துலக வாரிசு கிடைத்துவிட்டார். அ. மு போன்று இலகுநடையிலும், ஐனரஞ்சகமாகவும், நகைச்சுவையாகவும், நீரில் வழுக்கிச்செல்லும் இலைபோன்று தமிழைக் கையாழ்வதும் இலகுவல்ல. வாசகனின் கவனக்குவிப்பு கலைந்துவிடாது கதை முழுவதையும் ஒரே மூச்சில் வாசிக்கவைப்பது ஒரு தனிக் கலை. இவையெல்லாமே 'சமாதானத்தின் கதை' எழுதியவரிடம் உண்டு.

'சமாதானத்தின் கதை' பற்றி ரோஸி கஜன்

ஜேகே அவர்களின் சமாதானத்தின் கதை , அதிலுள்ள 11 சிறுகதைகள் பற்றி என்ன என்னவோ எல்லாம் சொல்லவேண்டும் என்று ஒவ்வொரு கதையும் வாசித்து முடிக்கையில் நினைத்திருந்தேன். இப்போதோ கோர்வையாகச் சொல்ல ஒன்றுமே வருதில்ல. வெரைட்டியா நாலு ரெசிபி கேளுங்க நச்சென்று சொல்லுவன்.

"சமாதானத்தின் கதை" பற்றி தாரணி பாஸ்கரன்

ஜேகே ஐ பற்றி நான் தெரிஞ்சுகொண்டது கந்தசாமியும் கலக்சியும் வந்த timeலதான் . Fbல யாரோ பகிர்ந்த போஸ்ட் பார்த்து impress ஆகி படலைக்கு போய் இன்னும் நிறைய தெரிஞ்சு fbல friend request குடுத்து அதை அவர் accept பண்ணி ஆச்சரியங்களிலே காலம் கடந்தது. ஜேகேயின் எழுத்துக்கள் தன்னை நோக்கி மெல்ல மெல்ல என்னை இழுக்கத்தொடங்கியிருந்தது என்னையறியாமலே.