யாழ்ப்பாணம் வழமை போலவே அதிகாலையிலேயே விழித்திருந்தது. வெளிச்சம் இன்னும் பரவலாக படரத் தொடங்கவில்லை. மார்கழி மாத பருவமழையில் திருநேல்வேலி சந்தை சாக்லட் தொழிற்சாலையாக காட்சியளித்தது. வியாபாரிகள் சைக்கிளில் கட்டிக்கொண்டுவந்திருந்த மரக்கறி மூட்டைகளை இறக்கி அன்றைய ஏலத்துக்கு தயாராகிக்கொண்டிருந்தனர். Special Task Force officer குமரன் Splender Motorbike இல் வந்து இறங்கும் போது நேரம் சரியாக நான்கு மணி. யாழ்ப்பாணம் ASP திலீபன் spot இல் ஏற்கனவே காத்துகொண்டிருந்தார்.
“எப்பிடி தெரியும் திலீபன்?”
“சந்தைல தேங்காய் கடை வச்சிருக்கிற சண்முகம் தான் inform பண்ணினவர்”
“வரச்சொல்லுங்க”
“நான் தான் அய்யா சண்முகம், காலைல சந்தைக்கு பின்னால ஒதுங்க…”
“எத்தினை வருஷமா இங்க கடை வச்சிருக்கிறீங்க?”
“இருவது வரியமா இங்க தான், வாசாவிளானால இடம்பெயர்ந்து வந்தா பிறகு வச்ச கடை அய்யா, குத்தகைக்கு தான்”
“எப்ப பார்த்தீங்க?”
“சவத்தையா கேட்கிறீங்க? மூண்டு மணி இருக்கும்”
“அந்த நேரம் இங்க என்ன வேலை? வீடு வாசல் இல்லையா?”
“வீடு கொக்குவில்ல, நான் வெள்ளி எண்டா சந்தைல தான் படுப்பன். வெள்ளன கடை திறக்கிறத்துக்கு… காலம கக்குசுக்கு போன இடத்தில தான் சவத்த கண்டனான்”
“திலீபன், நீங்க எத்தனை மணிக்கு spotக்கு வந்தீங்க?”
“மூண்டரைக்கு வந்திட்டன்”
“Forensic க்கு inform பண்ணியாச்சா”?
“ஓம்”
“வீட்ல யார் யாரு?”
“அம்மா மட்டும் தான், மனிசி Doctor, கண்டில ”
“Then keep it secret, அம்மாக்கும் தெரிய வேண்டாம், உதயனுக்கு news போயிட்டா?”
“Press க்கு இன்னும் தெரியாது Sir”
That's good. கொலையாளி alert ஆகக்கூடாது …சண்முகத்த warn பண்ணுங்க …வெளிய சொன்னா இங்க கடை இனி வைக்க ஏலாது எண்டு சொல்லுங்க”
“Done”
“Spot எல்லாம் full ஆ check பண்ணீட்டீங்களா?”
“தேடினதுல போன் மட்டும் தான் கிடச்சுது, Post-mortem இண்டைக்கே செய்ய சொல்லணும்”
“சொல்லாதீங்க .. செய்யுங்க”S P கோகுலின் சடலம் சந்தையின் பின்புறத்தில் உள்ள குப்பைத்தொட்டி அருகே அழுகிய வாழைப்பழங்கள் நடுவில் கழுத்திலும் மார்பிலும் வெட்டுக்காயத்துடன் மல்லாக்க கிடந்தது.
நல்லூர் கோயில்மணி நேரம் மணி ஐந்து என்றது.
----------------------------------&&&&&&&-----------------------------------------
“என்ன திலீபன் இண்டைக்கும் அதே நேரத்தில call பண்ணுறீங்க? நீங்க என்ன morning person ஆ?”
குமரன் திலீபனிடம் பேசிக்கொண்டிருக்கும் போது நேரம் காலை ஐந்து மணி. முந்தைய தினம் முழுதுமான கோகுல் கொலை விசாரணையின் அசதி குமரனின் குரலில் தெரிந்தது. குடும்பம் எல்லாம் மலேசியாவில் குடியேறிவிட இவன் மட்டும் இங்கேயே தங்கிவிட்டான். வவுனியாவில் வேலை செய்யும்போது அங்கே உள்ள படை அதிகாரியுடன் நடந்த தகராறில் யாழ்ப்பாணத்துக்கு மாற்றப்பட்டவன். சுடுதண்ணி என்று சக பொலிசாரால் அழைக்கபடுபவன்.
“Sir, இன்னொரு துன்பியல் சம்பவம்!”
“Don’t say its a murder”
“I am afraid, It is sir!”
“என்னய்யா நடக்குது யாழ்ப்பாணத்தில, நான் இங்க posting ஆகியே இருக்க கூடாது …ஏதோ கிரீஸ் பூதம் வருது, control பண்ணுங்க எண்டு அனுப்பினாங்க.. இங்க பார்த்தா காலைல கோயிலுக்கு போற மாதிரி கொலை நடக்குது!”
“நிறைய para military groups இயங்குது Sir… Hard to control”
““யாருன்னு தெரியுமா?”
“I can only guess sir”
“யாரு?“
“Sure இல்ல, ஆனா எண்ட guess சரியா இருக்கும் எண்டா…"
“Will you just cut the crap and tell who is it?”
“விஷ்ணு எண்டு நினைக்கிறன்”
“யாரு அந்த Informer ஆ?”
“That’s what I think, கோகுல் phoneல இருந்த Informer விஷ்ணுவோட முகத்தோட இந்த முகம் ஒத்துப்போகுது”
“You Sure?”
“இங்கயும் Jeans pocketல அதே மாதிரி ஒரு துண்டு கிடச்சுது”
“திரும்பவும் துண்டா? என்ன எழுதியிருக்கு?”
Sir,
எஸ்.பி .கோகுலிடம் நான் தவறான
குறியீட்டைத்தான் கொடுத்திருக்கிறேன்.
கவலை வேண்டாம்
– விஷ்ணு
Mr கோகுல்--
S W H2 6F - இது தான் குறியீடு. கவனம்.
-விஷ்ணு
மீண்டும் அந்த துண்டு சீட்டை வாசித்தான் குமரன்.
Mr கோகுல்--
S W H2 6F - இது தான் குறியீடு. கவனம்.
-விஷ்ணு
– விஷ்ணு
”இப்ப எந்த துண்டு உண்மை? தப்பான குறியீட்டை வச்சு நேற்று நாள் முழுக்க மண்டைய பிச்சது தான் மிச்சமா? இப்ப புதுசா ஒரு Sir வந்திருக்கிறார். Atleast ஒரு lead ஆவது கிடச்சுது, அங்கேயே இருங்க .. நான் பத்து நிமிஷத்துல வாறன்“
“ம்..ஒ ஓகே ..”
“என்ன தயங்கிறீங்க? வேற news ஏதாவது?”
“ Erggh… check பண்ணினதில… விஷ்ணுக்கு ஒரு girl friend இருக்கோணும் போல கிடக்கு”
“Great, makes our life easy!”
----------------------------------&&&&&&&-----------------------------------------
“மொனவட ஒனே”
“முறைப்பாடு ஒண்டு செய்யோணும் அய்யா .. கம்ப்ளைன் யு நோ … ஐ கம் அண்ட் கிவ்"
“சிங்கள கதகரன்ன பாய்ட?"
“நோ சேர், டிக்க டிக்க”
யாழ்ப்பாண போலீஸ் நிலையம் பரபரப்பாக இயங்கிக்கொண்டு இருந்தது. ஓரத்தில் பல தாய்மார்கள் கவலையுடன் எதற்கோ காத்துகொண்டிருந்தனர். ஒருபக்கம் சிங்களம் தெரியாதவர்கள் தங்களுடைய முறைப்பாட்டை விவரிக்க சிரமப்பட்டுக்கொண்டு இருக்க இன்னொரு பக்கம் மொழிபெயர்ப்பாளர்கள் முறைப்பாடு ஒன்றுக்கு 5000 ருபாய் வரை பேரம் பேசிக்கொண்டு இருந்தனர். ஒரு சிலர் குமரன், திலீபன் போன்ற தமிழ் போலீசாரின் உதவியை தெரிந்தவர்கள் ஊடாக முயற்சித்துக்கொண்டு இருந்தனர்.
“கோகுல் case சாதாரணமானது இல்ல திலீபன். Very Sensitive, Communal Riots கூட வரலாம், சீக்கிரம் கண்டுபிடிச்சு case அ close பண்ணனும்”
“விளங்குது … இந்த விஷ்ணு யாருன்னு கண்டு பிடிச்சா போதும்”
“Postmortem த்தில இந்த துண்ட விட வேறு ஏதும் தடயம் கிடைச்சுதா?"
“இல்ல சார்.. இது கூட கோகுலின் underwear க்குள் இருந்தது, so தனக்கு வர இருந்த ஆபத்து கோகுலுக்கு முன்னமேயே தெரிஞ்சிருக்கு…”
“I see, விஷ்ணு இந்த கொலையை செய்திருக்க சான்ஸ் இருக்கா?”
“நான் நினைக்கேல்ல, விஷ்ணு கோகுலின் secret informer… அவனோட numberஉம் படமும் கோகுலின் phone ல இருக்கு. விஷ்ணுவுக்கும் தன்னுடைய நம்பர் கோகுலின் போனில் இருப்பது தெரியும். So விஷ்ணு இதை செய்து இருந்தா, நிச்சயம் தன்னோட number ஐ delete பண்ணி இருப்பான், இல்ல phone ஐ அப்பிடியே spotல விட்டிட்டு போயிருக்கமாட்டான். அத்தோட அவன் கொலை செய்வதற்கு இந்த நிமிஷம் வரை எங்களால் ஒரு காரணமும் கண்டுபிடிக்க முடியேல்ல”
“விஷ்ணுவுக்கு இந்த போனில் இருந்து call பண்ணி பாத்தீங்களா?”
“Phone switched Offல இருக்கு, Dialog operator SIM, customer service ல சொல்லி நம்பர் எந்த பெயரில register ஆகி இருக்கு எண்டு பார்க்க சொல்லியாச்சு”
“Mobile ஓட location ஐ trace பண்ணலாமா?”
“அவன் phone ஐ switched on பண்ணினா முடியும்னு தான் நினைக்கிறன், Secret Audit enable பண்ணணுமாம் … Defence ministry approval வேணும்… மெதுவா தான் செய்வாங்க, சொல்லியிருக்கு, இன்னைக்குள்ள அனுமதி எடுக்க சொல்லி இருக்கிறன்”
“Good Job, So இந்த Phone ஆல ஒரு பிரயோசனமும் இல்ல”
“இருக்கு சார், கோகுல் இறந்தது இன்னும் public க்கு தெரியாது, So விஷ்ணு கொலையாளி இல்லை எண்டா சிலவேளை,அவன் கோகுலுக்கு call பண்ண சான்ஸ் இருக்கு”
“Brilliant thinking … எங்க படிச்சீங்க?”
“Jaffna University”
“No Wonder”
திலீபன் சிரிக்கும்போது சிறிய பெருமை தெரிந்தது. திலீபன் கிளிநொச்சியை சேர்ந்தவன். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருக்கும் போது புலிகள் இயக்கத்தில் சேர்ந்து பின்னர் படையினரிடம் பிடிபட்டு approver ஆக மாறி இப்போது ASP வரை வளர்ந்திருப்பவன். அவன் எது செய்தாலும் ஒரு புத்திசாலித்தனம் இருக்கும். இயக்கத்தில் இருக்கும்போதே ஆங்கிலம் கற்றவன். இப்போது சிங்களமும் நன்றாக பேசுவான்.
Mr கோகுல்--
S W H2 6F - இது தான் குறியீடு. கவனம்.
-விஷ்ணு
மீண்டும் அந்த துண்டு சீட்டை வாசித்தான் குமரன்.
“இது என்ன குறியீடாக இருக்கும் எண்டு நினைக்கிறீங்க திலீபன்?”
“No idea at all. எனக்கென்னவோ “Mr கோகுல்” எண்டு சொல்லி இருக்கிறதால விஷ்ணு படிச்சவனா இருக்கணும். ஒரு மணித்தியாலம் அவகாசம் தாங்க. கொஞ்சம் Googleல தேடிப்பார்க்கிறன்”
“Go ahead திலீபன் .. அப்படியே கோகுலின் Profile Copyய ஒருக்கா Forward பண்ணி விடுங்க”
“Sure”
என்று சொல்லிக்கொண்டே திலீபன் தன்னுடைய அறைக்கு விரைந்தான்.
திலீபன் எப்படியும் ஒரு துப்பாவது பிடித்துவிடுவான் என்று நினைத்துகொண்டே குமரன் மீண்டும் அந்த துண்டுச்சீட்டை வாசித்தான்.
Mr கோகுல்--
S W H2 6F - இது தான் குறியீடு. கவனம்.
-விஷ்ணு
"விஷ்ணு நீ எங்கு இருக்கிறாய்?"
----------------------------------&&&&&&&-----------------------------------------
நாவலர் வீதியில் இருக்கும் விஷ்ணுவின் வீட்டை குமரன் அடையும் போது நேரம் ஐந்தரை ஆகி இருந்தது. வீடு பிரதான வீதியில் இருந்து இறங்கிய ஒரு குச்சு ஒழுங்கைக்குள் இருந்தது. பத்து வீடுகள் தள்ளி ஒரு இராணுவ முகாம் இருக்கவேண்டும் போல. ஒருவித இராணுவ பிரசன்னத்தை அந்த பிரதேசத்தில் உணரக்கூடியதாக இருந்தது.
“Good .. So அந்த “Sir" யாருன்னு கண்டுபிடிக்கணும், விஷ்ணு double game ஆடி இருக்கிறான். Dangerous fellow!”விஷ்ணுவின் தலையும் மார்பிலுமாய் இரண்டு குண்டுகள் பாய்ந்திருந்தன. கைகலப்பு நடந்ததுக்கான எந்த அடையாளமும் இல்லை. சுவற்றிலே நயினாதீவு நாகபூஷணி அம்மன் calendar தொங்கியது.
“நான் அப்பிடி நினைக்கேல்ல”
“என்ன சொல்றீங்க, வேற கோணம் இருக்கா?”
“கோகுல் underwear ல இருந்த துண்டுச்சீட்டு நான்கா மடிச்சு இருந்திச்சு. ஆனா விஷ்ணு pocketல இருந்த துண்டுச்சீட்டு எட்டா மடிச்சு இருந்திச்சு”
“அடடா நல்ல observation… but அத வச்சு ஏதாவது சொல்ல முடியுமா.."
“முடியும், ரெண்டு சீட்டுமே கிட்டத்தட்டஒரே அளவு… So ஒருத்தரே மடிச்சு இருந்தா அநேகமாக ஒரே மாதிரி தான் மடிச்சு இருந்திருக்கணும். So ரெண்டையும் விஷ்ணுவே செய்திருக்க chance இல்ல , எனக்கென்னவோ விஷ்ணு கோகுலுக்கு நம்பிக்கையானவனாத்தான் இருந்து இருக்கணும்”
“Makes sense, but proceed பண்ணுறத்துக்கு இது போதாது திலீபன்”
“I know, ஆனா என்னட்ட இன்னொரு தடயம் இருக்கு”
“தடயமா? come-on Thileepan .. என்ன அது? சொல்லவே இல்ல, யாரு அந்த விஷ்ணுவின் காதலி?”
“விஷ்ணுக்கு காதலி இருக்காளானு தெரியாது. But கொலையாளியை பற்றி கொஞ்சம் ஊகிக்க முடியுது”
"என்ன திலீபன் குழப்புறீங்க, நீங்க தானே காதலி இருக்காள்னு சொன்னீங்க"
"அது உங்கள divert பண்ணுரத்துக்கு சொன்னது...."என்ற திலீபன் தயங்கியபடியே சொல்லியபோது அங்கே ஒருவித அசாதாரண சூழ்நிலை உருவாகத்தொடங்கி இருந்தது.
"திலீபன் ... என்னை ஏன்.."
....
....
“எண்ட guess சரின்னா ..... நீங்க தான் குமரன் இந்த ரெண்டு கொலையையும் செய்திருக்கவேண்டும் !!!!”
“What? ..... Come again?” -- அதிர்ந்தான் குமரன்.
“You heard it right Mr Kumaran .. You are the prime suspect”
“திலீபன், விசரா உனக்கு? நேற்று முழுக்க நான் உன்னோட தானே இருந்தன், நான் எப்படி?”
“Except of that one hour! நான் Google ல தேடிக்கிட்டிருந்த சமயம் நீங்க என்னோட இருக்கவில்லை… நேற்று இரவே எனக்கு சந்தேகம் வந்திட்டு… ஆனா இன்னிக்கு confirm ஆயிட்டுது”
“மூளை குழம்பி போச்சா திலீபன், You are out of your mind”
“Nope, நேற்று இரவு எனக்கு Dialogல இருந்து information வந்தது. விஷ்ணு numberல இருந்து கோகுல் phoneக்கு call பண்ணியிருக்கிறதா சொன்னாங்க. முதல்ல எனக்கு ஆச்சரியம். உங்களை உடனே contact பண்ண முயற்சி பண்ணினேன். ஆனா phone off ல இருந்திச்சு. விஷ்ணு நேற்று call பண்ணின சமயம் தான், நான் Googleல தேடிக்கிட்டு இருந்திருக்கேன் எண்டு அப்புறம் புரிஞ்சுது. So நீங்க விஷ்ணுவோட பேசியிருக்கிறீங்க. ஆனா நான் நேற்று பின்னேரம் திரும்பவும் check பண்ணும் போது phoneல புதுசா ஒரு call detailsம் இருக்கவில்லை!”குமரனுக்கு அந்த யாழ்ப்பாண காலைப்பனியிலும் மெதுவாக வியர்க்க ஆரம்பிச்சது
“அந்த குறியீடு இப்ப கோகுல் கைக்கு போனது தெரிஞ்சு நீங்க தான் கோகுலை மிரட்டி கொலை பண்ணி இருக்கணும். ஆனா கோகுல் underwearக்க துண்டுச்சீட்டை மறைச்சு வச்சிருப்பார் எண்டு நீங்க யோசிக்கவில்லை, Am I right?”
“Its silly திலீபன், நீங்க என்ன சொல்றீங்க என்றே எனக்கு புரிய இல்ல”
“இப்ப எனக்கும், department க்கும் தெரிஞ்சிட்டு எண்டதால, என்ன செய்யலாம் எண்டு நீங்க குழம்பி போய் இருந்த நேரம் தான் விஷ்ணு call பண்ணி இருக்கிறான். அந்த நேரம் அவனோட பேசி தந்திரமா நேற்றிரவு சந்திக்க திட்டம் போட்டு இருக்கிறீங்க. அப்பிடியே விஷ்ணு கோகுலுக்கு தப்பான குறியீடு குடுத்ததா ஒரு துண்டு சீட்டையும் print பண்ணி இருக்கிறீங்க. நேற்று இரவு விஷ்ணுவ இங்க கொலை பண்ணீட்டு அந்த சீட்ட அவன் pocketல வச்சிட்டு போயிருக்கீங்க. எனனை திசை திருப்பலாம் எண்டு ஒரு set-up....எவ்வளவோ கண்டுபிடிக்கிறம், இதை கண்டுபிடிக்க மாட்டமா? Its so childish Kumaran!”
“திலீபன், இது எல்லாமே உங்கட கற்பனை தான், உங்களிட்ட எந்த ஆதாரமும் இல்ல”
"ஹா ஹா, இன்னும் சொல்லப்போனா, I think நீங்க ரெண்டு தடவை நேற்று விஷ்ணுவோட பேசியிருக்கணும், சரியா குமரன்?"
என்றான் திலீபன் சிரித்துக்கொண்டே. குமரனின் முகத்தில் இப்போது ஈயாடவில்லை.
“எல்லாத்துக்கும் மேல, காலைல நீங்களே ஒத்துகிட்டீங்க! விஷ்ணு வீடு எங்கே இருக்கு எண்டு நான் எந்த இடத்திலையும் உங்களுக்கு சொல்ல இல்ல.. But சரியான timeல spotக்கு வந்திட்டீங்க.. தப்பு மேல தப்பு குமரன்”
"!@#$ …!@#$ …!@#$" --கெட்ட வார்த்தையால் தன்னை தானே திட்டினான் குமரன்
“ஒண்டு மட்டும் புரியவில்ல, அந்த குறியீட்டுக்கு என்ன அர்த்தம்?… அது ஒரு iron cabinet ஆக இருக்கலாம் எண்டு Google சொல்லுது”
“You are so close திலீபன் .. ஆனா "உதவி போலிஸ் அத்தியட்சகர் திலீபன் கோகுல் கொலையாளியை தேடிப்போன சமயத்தில் நடந்த சண்டையில் பலியானார்” என்ற நியூஸ் நாளைக்கு பார்க்கப்போறத நினைக்க தான் பாவமா இருக்கு”என்றான் குமரன் ஒரு உதட்டோர ஏளனச்சிரிப்போடு...
“என்ன சொல்றீங்க குமரன்?”
திலீபன் முகத்தில் இப்போது சிறு கலவரம் தோன்றியது.சர்ரென்று அவனுடைய கை jeans pocket இல் இருந்த pistol ஐ தேடியது.
“Hands Up திலீபன், Too late, இவ்வளவு யோசிக்கிறீங்க... இதையும் யோசிச்சு இருக்கணும்… பெரிய தப்பு”
“No Sir, Its Over …நீங்க தான் தப்பு மேல தப்பு பண்ணுறீங்க, நான் ஏற்கனவே IG க்கு morning inform பண்ணீட்டன்”
“ஹா ஹா, Good Try .. But I am sorry திலீபன்!”
என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போதே குமரனின் கையில் இருந்த pistol “சட், சட்” என இரண்டு குண்டுகளை திலீபன் மார்பில் பாய்ச்சியது.
“Rest In Peace திலீபன்!”என்று அவனின் உயிர் பிரியும் வரை காத்திருந்து சொல்லிவிட்டு திரும்பிய குமரன் .... எதிரே வந்த நின்ற உருவத்தை பார்த்து விக்கித்து போய் நின்றான்
....
....
....
....
“SIR...நீங்களா?!”
“சட் சட் சட்”
-------------------------------------------- முற்றும்-----------------------------------------
ஆஹா யாழ்தமிழ் இனிமையோ இனிமை! அமர்க்களம் அதுவும் முடிவு எதிர்பாராதது..ரொம்பவே ரசிச்சேன் பாராட்டுக்கள்.
ReplyDeleteநன்றி ஷைலஜா .... யாழ்ப்பாணத்தமிழில் ஒரு துப்பறியும் கதை எழுதுவது கொஞ்சம் சவாலாகத்தான் இருந்தது. உங்கள் வருகைக்கும் ஊக்கத்துக்கும் மீண்டும் நன்றி...இயலுமென்றால் என்னுடைய மற்றய கதைகளை வாசித்து உங்கள் கருத்தை தெரிவித்தால் இன்னும் மகிழ்ச்சியாக இருக்கும்...
ReplyDeletegood story ... all the best
ReplyDeleteநன்றி வெங்கி வருகைக்கும் கருத்துக்கும்
ReplyDeleteஈமெயில் இல் நண்பன் ஒருவன் அனுப்பிய விமர்சனம். உபயோகம் என்பதால் இங்கே பதிகிறேன்.
ReplyDeleteHi Machi
I read your story. The story looks good in Jaffna background
http://orupadalayinkathai.blogspot.com/2011/10/2011.html
But I am confused with flow of the the incidents in the story. I wanted write so many things not in the right place. But after reading couple of times, it looks like you may have got the order of the sections wrong. I guess the second and the third sections are in the wrong order.
In the second section, you say
“இங்கயும் Jeans pocketல அதே மாதிரி ஒரு துண்டு கிடச்சுது”
“திரும்பவும் துண்டா? என்ன எழுதியிருக்கு?”
But there is no reference to the துண்டு before that in the story. If it's some kind of technique, I (the audience!) am confused with that bit ;)
[ஜேகே] சரியான கணிப்பு மச்சான். கதை சொல்லும் பாணி non linear வகை... முதல் இரண்டு சம்பவங்களுமே கொலைகாலாக இருந்து மற்றய இரண்டும் அவற்றை கண்டுபிடிக்கும் படியாக அமைத்திருந்தேன். Chronological order படி முதல் மற்றும் மூன்றாம் பந்திகள் ஒரு நாளும் ரெண்டாம் மற்றும் கடைசி பந்திகள் அடுத்த நாளும் நடக்கின்றன. ஆக நீ சொன்ன சம்பவம் நிகழ்ந்த நேரம் அந்த விவரங்கள் இருக்கும் விவரங்கள் குமரனுக்கும் திலீபனுக்கும் தெரியும் இல்லையா.
----------------------
I was also confused in the following section but it may just be my point of view
“என்னய்யா நடக்குது யாழ்ப்பாணத்தில, நான் இங்க posting ஆகியே இருக்க கூடாது …ஏதோ கிரீஸ் பூதம் வருது, control பண்ணுங்க எண்டு அனுப்பினாங்க.. இங்க பார்த்தா காலைல கோயிலுக்கு போற மாதிரி கொலை நடக்குது!”
“நிறைய para military groups இயங்குது Sir… Hard to control”
Here, you talked about para military groups killing people. And immediately after, you say
““யாருன்னு தெரியுமா?”
“I can only guess sir”
I was thinking you were talking about who the killer is. Then you go
“யாரு அந்த Informer ஆ?”
“That’s what I think, கோகுல் phoneல இருந்த Informer விஷ்ணுவோட முகத்தோட இந்த முகம் ஒத்துப்போகுது”
Now, you are talking about the victim. when I read it for the first time., I was thinking Vishnu is suspect but actually he was the murdered victim. Just my view
[ஜேகே] அது ஒரு சம்பாஷனை பாணி. ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு சம்பாஷனை பாய்ந்தது தெரிந்தும் தெரியாமலும் இருக்கவேண்டும் என்பதால் அப்படி வைத்தேன்
But happy to see you writing in full flow. Keep going buddy
[ஜேகே] நன்றி மச்சான். எனக்கு இதிலே குழப்பங்கள் முதல் தடவை வாசிக்கும் போது இருக்கும் என்று தெரியும். துப்பறியும் சிறுகதை எழுதும் போது நிறைய பாத்திரங்களை அறிமுகப்படுத்த முடியாது. அதே நேரம் வாசகர்களுக்கும் ஆங்காங்கே யாரு காரணம் என்ற clue வேறு கொடுக்க வேண்டும், suspense உம் இருக்க வேண்டும். அதனாலேயே கொஞ்சம் குழப்பமான presentation ஐ தீர்மானித்தேன். சின்ன slip ஆனாலும் கதை சப்பென்று முடிந்துவிடும் இல்லையா?
வாசிக்கும் பலருக்கும் இந்த குழப்பம் இருக்கும் என்பதால் இதை பதிவில் இடுகிறேன் உந்தன் அனுமதியோடு!
நேற்று அக்காள் அழைத்து சொன்னால், சிறுகதை என்றாலும் பாத்திரங்களுக்கு மெருகு இன்னமும் சேர்க்கவேண்டும் என்று. எழுத்து இன்னும் சரியாக படியவில்லை என்றாள். உண்மை தான். தொடர்ந்து எழுதினால் படியுமோ என்னவோ.
Really glad you guys reviewing to this extent. Appreciated it wholeheartedly. நன்றாக எழுத முயற்சிக்கிறேன். தேங்க்ஸ் buddy
cheers,
JK
நண்பன் விமலுடனான buzz உரையாடல்--
ReplyDelete------------
Vimalaharan Paskarasundaram நீங்க தான் துப்பறியும் கதையில் கில்லாடி ஆச்சே .. வாசிச்சிட்டு சொல்லுங்க .. போட்டிக்கு அனுப்பபோற கதை இது!
------------
நீங்க தான் துப்பறியும் கதையில் கில்லாடி ஆச்சே
//
துப்பறியும் கதை வாசிப்பதில் என்றால் உண்மை :)..
கொடுத்த வரைமுறைக்குள் அழகான துப்பறியும் கதையை எழுதியிருகிறீங்க.. யாழ்ப்பாணத்து மொழிவழக்கு, சின்ன சின்ன ஊர் சம்பந்தமான details நலலா வந்திருக்கு.. எங்கள் மொழிவழக்கை கதைக்குள் கொண்டுவருவது சிரமமான காரியந்தான்.. அதை நல்லா கொண்டுவந்திருக்கீங்க.. கதையை இரண்டாம் முறை வாசிக்கத்தான் புரிந்தது.. சின்ன சின்ன துப்பறியும் உத்திகள் சூப்பர்.. கதையில் இரண்டாம், மூன்றாம் சம்பவங்கள் இடம் மாறி இருக்குது.. இது எதாவது புதிய உத்தியா?
//
எவ்வளவோ கண்டுபிடிக்கிறம், இதை கண்டுபிடிக்க மாட்டமா
//
நீங்க இதமாதிரி ஹர்ஷா & துமிதுட்ட சொன்னதுதான் ஞாபகம் வருது.. அத நான் அவங்களுக்கு மொழிபெயர்க்க பட்ட பாடு இருக்கே.. ஐயையோ
நன்றி தமிழ்வாணன்!!!! இதை அங்கே ப்ளாக் இல போட்டா நல்லது தலைவரே... நான் நினைக்கிறன் எங்கள் மொழிவழக்கை இயல்பாக பாவிக்காமல் நாடகத்தன்மையாக இதுவரை எழுதியிருக்கிறோம். So புரட்சி தவிர்ந்த வேறு எந்த genre இலும் யாழ்ப்பாண வழக்கை பாவிக்கும்போது ஒருவித சிரிப்பு ஏற்பட்டுவிடும். அதை தவிர்க்க நிறைய யோசிக்கவேண்டி இருந்தது. இந்தியர்களுக்கும் விளங்கவேண்டும் என்பதற்காக சில compromises செய்யவேண்டி இருந்தது.
ReplyDeleteகதையில் வித்தியாசம் காட்டுவதற்கும், போட்டியில் தரப்பட்ட இரண்டு நபர்களையும் அடுத்தடுத்து கொல்வதன் மூலம் ஒரு nowhere zone ஐ ஏற்படுத்தவுமே non-linear plot செய்தேன். Comfortable இல்லாத genre ... எழுதி முடிக்கும்போது மண்டை காஞ்சு போச்சு!!
கதை அருமை, ஆனால் அலைபேசி திரையில் விஷ்ணு அழைப்பது போல் தான் எனக்கு படுகிறது... அதை கதையில் கோட்டை விட்டு விட்டீர்களோ என்று கொஞ்சம் உதைக்கிறது... கதை நகர்த்தியதும் அருமையாக இருந்தது
ReplyDeleteநன்றி சூர்யாஜீவா,
ReplyDeleteவிஷ்ணு அழைக்கிறார் என்று தானே சொல்லியிருக்கிறேன்! அது தான் கதையும் அடி நாதமே. கோட்டை விட்டது போல தெரியவில்லையே. தப்பு என்றால் தயவுசெய்து தெரியப்படுத்துங்கள்.
---
“இப்ப எனக்கும், department க்கும் தெரிஞ்சிட்டு எண்டதால, என்ன செய்யலாம் எண்டு நீங்க குழம்பி போய் இருந்த நேரம் தான் விஷ்ணு call பண்ணி இருக்கிறான். அந்த நேரம் அவனோட பேசி தந்திரமா நேற்றிரவு சந்திக்க திட்டம் போட்டு இருக்கிறீங்க. அப்பிடியே விஷ்ணு கோகுலுக்கு தப்பான குறியீடு குடுத்ததா ஒரு துண்டு சீட்டையும் print பண்ணி இருக்கிறீங்க. நேற்று இரவு விஷ்ணுவ இங்க கொலை பண்ணீட்டு அந்த சீட்ட அவன் pocketல வச்சிட்டு போயிருக்கீங்க. எனனை திசை திருப்பலாம் எண்டு ஒரு set-up....எவ்வளவோ கண்டுபிடிக்கிறம், இதை கண்டுபிடிக்க மாட்டமா? Its so childish Kumaran!”
--------------
இந்த கதையில் இருக்கும் சின்ன மயக்கத்துக்கு காரணம், அதன் non-linear அமைப்பே. முதலில் இரண்டு கொலைச்சம்பவங்களையும் காட்டிவிட்டு பின்னர் அந்த சம்பவங்களுக்கு இடையில் என்ன நடந்தது என்பதை காட்டிவிட்டு பின்னர் மீண்டும் கதை நிகழ்காலத்துக்கு நகர்கிறது.
Hey JK
ReplyDeleteRead your short story written for the contest and voted for it.
I came across another story which is also written for the contest, and it has some similarities to yours.
http://nanbanpakkam.blogspot.com/2011/10/2011.html
Take a look.
Regards,
Ramanan
Thanks Anna. Yeah. Just read it. It's bit similar. The issue is, the plot can't be much differed as the challenge photo pretty much outlined the context we should hang on with. So the only way I could surpass others is by a having a different presentation style and domain. So I chose nonlinear technique with Jaffna domain. Hope it is ok. Thanks again a lot Anna. Really appreciated.
ReplyDeleteYou are welcome. Your view is definitely unique compared to other plots which I have read. Keep writing, it is an opportunity to keep in touch with the language.
ReplyDeleteTo be honest, ever since we left Jaffna we never wrote in tamil, nowadays when we try to write some sentences in tamil, we are lost for words and at times we cannot even write some letters as we have lost touch with the language.
Keep up the good work.
Ramanan
திலீபன் வழியே கதை வியக்கவைக்கிறது! யாழ் தமிழ் அழகு, கடைசியில் சுட்டது யார் என்று கொஞ்சம் சொல்லுங்களேன்??
ReplyDeleteநல்ல கதை, ஆனா சஸ்பென்ச அப்படியே விட்டுப்புட்டீங்களே?
ReplyDelete@நம்பிக்கை பாண்டியன் நன்றி, சுட்டது யார்னு ஓபன் எண்டா முடிச்சேன். அப்ப தான், அட இதுக்கு மேல இருக்கா என்று பீலிங் வரும் இல்லியா? தொடர்ந்து வாருங்கள்
ReplyDeleteநன்றி பன்னிக்குட்டி ராமசாமி ...
ReplyDeleteஅப்பிடியே சஸ்பென்சை உடைச்சுக்கிட்டு போறது மாதிரி காட்டிபுட்டு முடிவுல அதுகூட தப்பு, அதுக்கு மேல வேற இருக்கு என்று ஒரு ஓபன் எண்டா வச்சேன் ... எல்லாத்தையும் திறந்து காட்டிட்டா அடுத்த படத்துக்கு கால் ஷீட் கிடைக்காதில்ல!!
தொடர்ந்து வாங்க சாரே .... யாருமில்லாத கடைல டீ ஆத்த கஷ்டமா இருக்கு!!!!
கணேஷ் - வசந்த் கதை மிகப் பிடிக்குமோ? கதை வசனத்தில் தெரிகிறது.. நல்ல முயற்சி.. தொடர வாழ்த்துகள்.. I like your style dude.. specially natural conversations by mixing english.. Some of our writers have an opinion such that story must be in Tamil.. But it'll become dramatic if you do so..
ReplyDeleteகணேஷ் வசந்த் பிடிக்கும் .. தலைவருடையது இல்லையா? ஆனாலும் 1500 வார்த்தைகள் என்பதால், பல சுவாரசியமான விஷயங்களை விட்டு விட்டேன் .. முதலில் எல்லா முடிச்சுகளையும் அவிழ்த்து தான் எழுதினேன். பின்னர் சிறுகதை தானே, அப்படி அவிழ்க்கவேண்டிய தேவை இல்லை என்று சுவாரசியத்துக்காக openended முடிவு வைத்தேன் ...
ReplyDeleteஆங்கிலம் பாவித்த முக்கிய காரணங்கள், ஒன்று நீங்கள் சொன்ன இயல்பு தன்மைக்காக, மற்றையது யாழ்ப்பாண தளம் ஆதலால், முழுக்க முழுக்க ஈழத்தமிழ், இந்தியர்களுக்கு புரியாமல் போய்விடும். இந்திய தமிழ் பாவித்தால் odd ஆக இருக்கும் .. அதனால் natural ஆக அப்படி கலந்தேன்.
நன்றி
இரண்டாம் இடம் பிடித்து வெற்றி பெற்றதற்கு இனிய வாழ்த்துக்கள்!
ReplyDeleteகதை அளித்ததும் முதல்ல வந்துவாழ்த்தினேன் பலித்துவிட்டது சகோதரரே! மறுபடி வாழ்த்துகள்.நல்ல எழுத்து உங்களுக்கு நிறைய பத்திரிகைகளுக்கும் எழுதுங்கள்!
ReplyDeleteவாழ்த்துக்கள்...வெற்றி மீது வெற்றி வந்து சேரட்டும்
ReplyDelete@நம்பிக்கைபாண்டியன் மிகவும் நன்றி .. உங்கள் ஆதரவும் நட்பும் தொடர்ந்து வேண்டும் .. தொடர்வோம்!
ReplyDelete@ஷைலஜா பக்கத்தில் யாராவது இருக்கிறார்களா? இருந்தால் உங்கள் வாயிலே அரைகிலோ சர்க்கரையை கொட்ட சொல்லுங்கள்... தொடர்ந்து வாருங்கள் தமிழில் தர்க்கம் செய்யலாம் .. நன்றி நன்றி நன்றி !
ReplyDelete@வெண்புரவி .. அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
ReplyDeleteவாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றி ஆசியா ஓமர்
ReplyDeleteவாழ்த்துக்கள் JK! கதை எப்பவோ வாசித்தாலும் பரிசு கிடைத்த விடயம் இப்போதுதான் வாசித்தேன் ..
ReplyDeleteஅதுசரி என்ன பரிசு தந்தாங்க எண்டு சொல்லவே இல்லையே ;)
--காருண்யா--
நன்றி காருண்யா!! நீங்க எப்பவோ வாசித்தாலும் எனக்கு இப்ப தானே தெரியுது!!! வந்தா ஒரு ஹாய் சொல்லீட்டு போங்க .. நண்பர்கள் முக்கியம் இல்லியா?
ReplyDeleteபரிசு கிடைத்ததே பரிசு கிடைத்த மாதிரி தானே!! .. அனுப்புவதாக சொல்லி இருக்கிறார்கள் .. நல்ல பல புத்தகங்களாக இருக்கும் என் எதிர்பார்க்கிறேன்!!
வாழ்த்துக்கள் எழுத்து நடைக்கும், பரிசு பெற்றதற்கும்! உங்கள் தளத்திற்கு என் முதல் விசிட் இது. மற்ற பதிவுகளையும் படிக்க முயல்வேன்.
ReplyDeleteஉங்கள் நண்பரின் ஈ-மெயிலும், உங்கள் விளக்கங்களும் பிடித்திருந்தன. முக்கியமாக உங்கள் நண்பரின் ஆழ்ந்த வாசிப்பும், சந்தேகங்களை க்ளியராக எழுதியிருந்த விதமும் நன்று. கதை நிறைய இடங்களில் ரொம்பவும் ஜம்ப் செய்கிறது உண்மை. நான்-லீனியர் ஸ்டைல் என்றாலும், படிப்பவர் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். 1500 வார்த்தைகள் லிமிட் என்பதற்காக எழுதிய பகுதிகளை அடித்துவிட்டது போல் இருந்தது!
மீண்டும் வாழ்த்துக்கள்!
-ஜெகன்னாதன்
@Jagannathan .. நன்றி வருகைக்கு.
ReplyDeleteகதையில் கொஞ்சம் அதிகப்ரசங்கிதனம் இருக்கிறது. அது தான் கதைக்கு பெரிய குறை... திருந்துவதற்கு முயற்சிக்கிறேன்..
தொடர்ந்து ஊக்கம் தாருங்கள்
ஒரே கன்ப்யுசனா போச்சு JK . கதைய ஒருக்கா வாசிச்சு, கமெண்ட்ஸ் எல்லாம் வாசிச்சு, திருப்பி வாசிக்க தான் கொஞ்சம் விளங்கிச்சு. பிறகு இன்னுமொருக்கா வாசிக்க தான் முழுக்க விளங்கிச்சு. அதான் த்ரில் கதையிண்ட சக்சஸ். Congrats . Logic ல எங்கயாவது கோட்டை விட்டிருக்கிறிங்களா எண்டு பாத்தன். எல்லாம் சரியா தான் இருந்திச்சு :) இன்னும் எழுதுங்கோ.
ReplyDeleteYour observation of the given photo is also excellent. Fully utilized each and every information of the photo. Have to read the others story and see how they have interpreted and used the information.
ReplyDeleteபிரவீணா,
ReplyDeleteஎல்லாம் சரி தான் .. ஆனால் ரொம்ப குழப்பி விட்டேன். அதனால் எல்லோருக்கும் புரிய மறுத்துவிட்டது. Momento ரேஞ்சில் கதை இருக்கோணும் எண்டு நினைச்சது எண்ட பிழை தான்
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=EJL0tngsH1I#t=530s
ReplyDeleteand the award goes to
ReplyDeleteThank you great B ... wish I know you :)
ReplyDeleteஎங்கள் ஊர் கதைகள் எல்லாம் ஊர், சாதி , கிராமத்து பிரச்சனைகள் சார்ந்து தான் இருந்தது. முதன் முதலில் எங்கள் தமிழில் ஒரு மர்மக்கதை. உங்கள் முயற்சியின் வளர்சிக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றி ஊர் விரும்பி .. ஒரு முயற்சி தான் ... ஊக்குவிப்பதற்கு நன்றி.
ReplyDeleteஹாய்! வாழ்த்துக்கள்.. உங்க பரம விசிறி(வாசகி தான் சரியோ?)யாகிட்டேன் இப்போ நான்.உங்க பதிவுகள் தேடித் தேடிப் படிக்கிறேன் இப்போது..
ReplyDelete“மார்கழி மாத பருவமழையில் திருநேல்வேலி சந்தை சாக்லட் தொழிற்சாலையாக காட்சியளித்தது.” அருமையான ரச்னைமிக்க உவமை.. எமக்கே தெரியாமல் எம் மனசிலிருக்கும் எண்ணங்களை இன்னொருவர் எழுத்து மூலம் வாசிக்கும் போது ஏற்படும் ஒத்ததிர்வில் மனம் றெம்ப உயரத்தில் துள்ளுவதை உணர்ந்திருக்கிறீங்களா? நான் இப்போ உணர்ந்திருக்கிறேன்... உங்க எழுத்து மூலம்... -ஜனனி செல்வநாதன்-
நன்றி ஜனனி.
Deleteநல்ல முயற்சி. பலரைப் போல எனக்கும் 2ம் 3ம் சம்பவங்கள் பற்றிய குழப்பம் வந்தது.
ReplyDeleteசில சின்னத் தப்புகள்.
மார்கழி மாதத்தில் அதிகாலை நான்கு மணிக்கு "வெளிச்சம் இன்னும் பரவலாக படரத் தொடங்கவில்லை" என்று சொல்வது கொஞ்சம் ஓவர். அந்த நேரத்தில் கும்மிருட்டு போர்த்தியிருக்கும்.
அடுத்த படியாக சந்தையில் நடந்த கொலையை ஒருவருக்கும் தெரியாதபடி மறைக்க முயற்சி செய்வது செயற்கைத்தனமாக இருக்கிறது. இடத்தை மாற்றியிருக்கலாம்.
திலிபனுக்கு முதலில் குமரன் மீது சந்தேகம் வந்தது ஏன்? விளக்கியிருக்கலாம்.
சொல்ல மறந்து போனன். மேலே உள்ள சின்னத் தப்புகள் சின்னவை தான். மற்றப்படி கதை அருமை.
Delete//அடுத்த படியாக சந்தையில் நடந்த கொலையை ஒருவருக்கும் தெரியாதபடி மறைக்க முயற்சி செய்வது செயற்கைத்தனமாக இருக்கிறது. //
Deleteகொலையை மறைக்கமுயலவில்லை .. பிரேதத்தை தான் அங்கே டம்ப் பண்ணியிருந்தார்கள்.
//மார்கழி மாதத்தில் அதிகாலை நான்கு மணிக்கு "வெளிச்சம் இன்னும் பரவலாக படரத் தொடங்கவில்லை"//
தவறு தான்.
//திலிபனுக்கு முதலில் குமரன் மீது சந்தேகம் வந்தது ஏன்? விளக்கியிருக்கலாம்//
விளக்கப்பட்டிருக்கிறது நண்பரே
பெயரை சொல்லேல்லியே? மிகவும் நன்றிகள்.