குறிப்பு : இந்த பதிவு சென்ற பதிவான "அக்கா" சிறுகதைக்கு ஒரு முடிவுரை மாதிரி.
அருள்மொழிவர்மன் தனக்கு நாட்டை ஆளும் சந்தர்ப்பம் இருந்தும் உத்தம சோழருக்காக கிரீடம் துறந்து தியாகம் செய்த அத்தியாயத்தோடு வருடக்கணக்காக நீண்ட பொன்னியின் செல்வன் நவீனத்தை கல்கி முடித்து வைத்தார். கதை மாந்தர்களான வந்தியத்தேவனும் குந்தவையும் இணைந்தனரா? பின்னாலே சில ஆண்டுகளுக்கு பின்னர் உத்தமசோழர் மரணித்ததும் அருள்மொழிவர்மன் ஆட்சிக்கும் வந்து ராஜராஜசோழன் ஆகி கடாரம் கடந்து மாட்சிமை கண்டதும் சரித்திர பதிவுகள். இவற்றை தொடரில் எதிர்பார்த்த வாசகர்கள் கல்கியின் சப்பென்ற முடிவில் மனம் வெதும்பி போனதும் அடுத்த பதிப்பில் கல்கி முடிவுரை எழுதி சமாளித்ததும் இப்போது யோசித்தால் விஜய் டிவி சத்யப்ரகாசுக்கு தனியாக நிகழ்ச்சி வைத்து சூப்பர் சிங்கர் அளிக்காமல் போனமைக்கு பாவவிமோசனம் செய்தது கண்ணுக்குள் நிற்கிறது. நான் கல்கி இல்லை. அக்கா என்ற கதை பொன்னியின்செல்வனும் கிடையாது. ஆனால் அப்பிடி நினைத்தாலும் தப்பு இல்லை. கனவு காணுங்கள் என்று சொன்னது அப்துல்கலாம் தானே.

“கதைய வாசிச்சிட்டு facebook க்கு போனால், நான் நினைச்சது போலவே ஒரு பிள்ளை கமெண்ட் அடிச்சிருக்கு”
என்று அக்கா சொன்ன போது உடனே login பண்ணி பார்த்தேன்.
கௌரி அனந்தனின் விமர்சனம் நேர்மையாக இருந்தது.
மிகச்சிறப்பு.. அக்காவுக்கு என்ன நடந்தது என்ற கேள்வியில் இறுதி வாக்கியத்தின் மீதான அழுத்தம் குறைந்து போல் தோன்றியது.. யோசனை சொல்லும் அளவுக்கு எனக்கு புலமை உள்ளதா என்று தெரியாது.. இருந்தும் இப்படி முடிந்திருந்தால் இன்னும் நன்றாய் இருந்திருக்கும் போல் தோன்றியது.."என்று நான் சொல்லி முடிக்கவும் பின்னாலிருந்து ஓர் கரம் என்னை பிடித்து இழுத்தது, எனக்குத் தெரியும் அது என் அக்காவே தான்.." ;)உங்கள் ஆக்கம் தொடர என் வாழ்த்துக்கள்..
சத்தியமான வார்த்தைகள். மீண்டும் கதையை வாசித்தபோது இறுதியில் கதையில் உள்ள ஜீவனை கொன்றுவிட்டேன் போன்று தோன்றியது. ஒன்றுமில்லை, அதிகப்ரசங்கிதனம் தான். இப்போது இப்பிடி ஏன் கதையை முடித்தேன் என்று சொல்லும் கடமை இருக்கிறது. ஆசையும் கூட.
இந்த கதையின் plot ஒரு முறை ஆங்கிலத்தில் ஆரம்பித்து கைவிட்டிருக்கிறேன். எழுதும்போது வட்டார வழக்கை என்னால் ஆங்கிலத்தில் கொண்டு வரமுடியவில்லை. தமிழில் எழுதும்போது கதையின் design ஐ ஏற்கனவே தீர்மானித்திருந்தேன். இரண்டு கோடுகளில் பயணிக்கும் கதை. ஒரு பதின்ம வயதை எட்டும் சிறுவனுக்கும் அவனின் அக்காவுக்கும் இடையிலான ஒரு cute ஆன உறவு. அந்த கோட்டில் லேசான புன்முறுவல் இருக்க வேண்டும். மற்றையது அரசியல் தளம். அதே சிறுவனுக்கூடாக சமகால அரசியலை light ஆக சொல்லுதல். முடிவு வரை ஓரளவுக்கு இரண்டு கோடுகளும் சரியாகவே போய் கொண்டிருந்தன என்று நினைக்கிறேன். முடிக்கும் புள்ளியில் கோட்டை விட்டு விட்டேன். நம்பமாட்டீர்கள், இங்கே கௌரி சொல்லும் முடிவு கூட மனதில் வந்தது. ஆனால் “மறுபடியும்" படத்தின் முடிவில் பாலுமகேந்திரா ஏலவே அதை பயன்படுத்திவிட்டார் போன்று தோன்றியது. என்னுடைய challenge அக்காவுக்கு என்ன நடந்தது என்பதை கடைசி வரியில் சொல்ல வேண்டும். ஆனால் அது ஒரு mystery ஆகவும் இருக்க வேண்டும். அப்போது புகுத்தியது தான் “உரும்பிராய் சம்பவம்”, அங்கே ஒரு சிறுவனை தவிர மற்றவர்கள் பங்கருக்குள் இறந்தது பற்றி சொல்லி இருந்தேன். அது முதலாவது hint. ஆனால் அது போதாது. எனவே அக்கா மூலமே மற்றைய hint ஐ சொல்ல வைத்தேன்.
“வீட்டில ஒரே பிள்ளை நீ தான் எண்டு சொல்லு என்ன”
இதை சொல்லும் போது அந்த குடும்பத்தில் இரண்டு பிள்ளைகள். பின்னர் குண்டு வெடித்ததும் அக்கா காணமல் போனதும் நடந்த பிற்பாடு அந்த சிறுவன் அதே வசனத்தை மீண்டும் சொல்வதில் இருந்த அரசியல் straightforward என்பதால் விளக்கம் தேவையில்லை. ஆனால் அக்காவுக்கு என்ன நடந்திருக்கும் என்பதும் ஒரு irony ஆக தொக்கி நிற்கிறது என்று தான் அப்படி முடித்தேன்.
இப்போது மீண்டும் வாசித்து பார்த்த போது இப்பிடியெல்லாம் யோசித்ததில் கதையின் அடிநாதமான உணர்வை தொலைத்துவிட்டேன் என்பது புரிகிறது. வருத்தம் தான். முடிவையும் மாற்றலாம் தான். மாற்றினால் அதை ரசித்து புரிந்த விமர்சனத்தின் இருப்பு இல்லை என்று ஆகிவிடும். ஒரு படைப்பு என்பது அதன் விமர்சனங்களுடனும் சேர்ந்து தானே முழுமை அடைகிறது. அப்படியே இருக்கட்டும். என்னை மாதிரியே குறைகளுடன்.
ஒரு நிமிடம், கீர்த்திராஜ் Skype இல்.
“மச்சான் உண்ட “கதை உருவான கதை” வாசிச்சன்”
“எப்பிடி மச்சி, ஆத்தா நானும் எழுத்தாளர் ஆயிட்டன் போல”
“போடாங் கொய்யால, மூக்கு புடைப்பா இருந்தா தான் இப்பிடி எல்லாம் யோசிக்க தோணும்”