Skip to main content

"சட்டென நனைந்தது இரத்தம்!" - யுடான்ஸ் சிறுகதை போட்டி ...சும்மா Trailer கண்ணு!

என்னடா சென்ற வாரம் முழுதும் நாலு பதிவு போட்டிட்டு இந்த வாரம் ஒண்ணுமே இல்ல, ஆளிட்ட ஸ்டாக் முடிஞ்சுதா என்று சந்தோசப்பட்ட நண்பர்களுக்கு ஒன்று மட்டும் சொல்லிகொள்ளுறன். நீங்க என்ன தான் என்னை Suppression of the depression of the impression of the railwaystation ஆக்கினாலும் நம்ம டி ஆர் மாதிரி ஒருதலைக்காதல் ரிலீஸ் பண்ணியே தீருவேன் ... So Stay Tuned!!

ஓகே கொஞ்சம் சீரியஸ் ஆவோமா(ஆமா இவரு கவுண்டர் ரேஞ்சுல காமெடி பண்ணீட்டாரூ இப்ப சீரியஸ் ஆகிறத்துக்கு எண்டு கமெண்ட் போட நம்ம கீர்த்திராஜ் ரெண்டு நாளுக்கு வர மாட்டாரு. பயபிள்ள அப்பா ஆக போகுதில்ல... வாழ்த்துக்கள் மன்மதகுஞ்சு!

எழுதுவோம் என்று திங்கட்கிழமை ஆரம்பிக்கும் போது தான் உடான்ஸ் குழுமம் நடத்தும் சிறுகதை போட்டி பற்றி நண்பர் ஒருவர் அறியத்தந்தார்.(எவண்டா அவன் என்று confuse ஆக வேண்டாம், அந்த நண்பர் சாட்சாத் நானே!). சரி நாம எழுதாத கதையா எண்டு ஆரம்பிச்சா அவங்க ஒரு போட்டோ போட்டு அதில இருக்கிற மாதிரி ஒரு சம்பவம் நடக்கும் கதையாக வேண்டும் என்று கண்டிஷன். இப்ப படத்த பாருங்க!


ஒரு பொண்ணு அழுது கொண்டு இருக்கிற மாதிரியும் ஒரு பையன் வோட்கா கிளாசுடன் அஜீத்தன் oops அஜீத் ஸ்டைல்ல பீல் பண்ணுற மாதிரியும் படம் இருந்தா தக்காளி ஒன்னுக்கு மூணு லவ் ஸ்டோரி இந்தா பிடினு எழுதித்தள்ளி இருப்பன். இது Crime Subject ... ஆனாலும் சூனா பானா அப்பிடியே maintain பண்ணு எண்டு சொல்லிக்கொண்டே ஆரம்பிச்சாச்சு .. ப்ரூப் ரீடிங் முடிந்தா பிறகு நாளை இரவு வெளியாகும்!!!

அதுவரை இந்த Trailer ஐ வாசித்து ரசிக்கவும்!!!

“என்னய்யா நடக்குது யாழ்ப்பாணத்தில? நான் இங்க போஸ்டிங் ஆகி இருக்கக்கூடாது …. காலம கோயிலுக்கு போற மாதிரி கொலை செய்துகிட்டிருக்காங்க”
“நிறைய பரா மிலிட்டரி குரூப்ஸ் இயங்குது சேர்… Its hard to control”
“யாருன்னு ஒரு ஐடியாவாவது இருக்கா?”

நாளை இரவு யுடான்ஸ் சிறுகதை போட்டிக்காக ஜேகே எழுதிய "

சட்டென நனைந்தது இரத்தம்!

 " பதிவாகிறது...காத்திருங்கள்!!! 

அடச்சீ நாமளே கூவ வேண்டி கிடக்கு!!!

வந்த பாவத்துக்கு ஒரு ராப் சாங் பார்த்திட்டு போங்க மக்களே