வியாழமாற்றம் (03-11-2011) : கனிமொழிக்கு மீண்டும் ஜாமீன் மறுப்பு

Nov 3, 2011 7 comments

அரசியல்

kadalகனிமொழிக்கு மீண்டும் ஜாமீன் மறுப்பு. இந்த வழக்கின் பின்னனியான ஊழலை பலர் மறந்துவிட்டனர். ஆனால் கனிமொழியை மறக்கவில்லை. அவரை வெளியே விட்டால் காங்கிரசுக்கு, தான் ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கிறேன் என்று காட்ட ராஜா மட்டும் தான் எஞ்சுவார். அதனால் ஹசாரே கோஷ்டி ஓயும்வரை கனிமொழிக்கு கடல்ல கூட ஜாமீன் கிடைக்காது.
கருண்சுக்கு இப்ப காங்கிரசை வெட்டவும் முடியாது, ஒட்டவும் முடியாது, இலங்கை சண்டை மட்டும் இந்நேரம் நடந்தது என்னு வச்சுக்க, தக்காளி கலைஞர் பிரபாகரனுக்கு மேலால புரட்சி பேசி காங்கிரசுக்கான ஆதரவை விலக்கி இருப்பார். இதில என்ன காமெடி  என்றால், இந்த சூப்பர்ஹிட் ஷோவை பார்க்க இயலாத அளவுக்கு அம்மாவை சுப்ரீம் கோட்டு விரலை விட்டு ஆட்டுது.  பெங்களூர் கோர்ட் வளாகத்தில ஒரு MGR சிலையை எதுக்கும் நிறுவி வச்சுக்க, அம்மா கோர்ட்டுக்கு வரவேண்டி வந்தாலும் சிலைக்கு மாலை போட தான் வந்தாங்கன்னு ஒரு பிட்ட போட்டு சுனா பானா மாதிரி மெயின்டைன் பண்ணலாம். இதையெல்லாம் எவன் கேட்கறான்?

மைனர்குஞ்சு கோர்னர்

hamsika2நம்ம தோஸ்து மன்மதகுஞ்சு facebookல செய்ற அலப்பற கொஞ்ச நஞ்சமில்ல. அவனோட அல்வாக்கள் கொஞ்சம்..
செய்தி : பூனை இளைத்தால் எலிகூட மச்சான் முறை கொண்டாடும்-வைகோவுக்கு கருணாநிதி கண்டனம்
மைனர்குஞ்சு: நீங்க சொன்னா சரிங்க மச்சான், வீட்டுல எல்லோரும் சௌக்கியமா மச்சான்?அவனின் ஹைக்கூ ஒன்று!!
“மச்சி ஏழாம் அறிவு காதில பூ,
வேலாயுதம் பூக்கூடைக்குள்ள காது...”

நெகிழ்ச்சி

சுகிந்தன் அண்ணா என்னுடைய “உஷ் .. இது கடவுள்கள் வாழும் தேசம்” கதையை ஈமெயில் மூலம் நண்பர்களுக்கு அனுப்புகிறார். பல நண்பர்கள் கதைகளை தங்கள் facebook இலே share பண்ணுகிறார்கள். சுந்தரகாண்டம் எழுதும்போது எனக்கே ஒரு நெகிழ்ச்சி ஏற்பட்டது. எழுதும்போது என்னைப்போலவே வாசிக்கும் எல்லோரும் மேகலாவை காதலிக்க வேண்டும் என்று நினைத்தேன். எதிர்பார்த்த அளவுக்கு அது நடைபெற இல்லை என்பது கொஞ்சம் தோல்வியே! ஆனாலும் எனக்கு அவள் மீதான காதல் கிஞ்சித்தும் குறையவில்லை! ஒரு நண்பன் “ரசிகன்யா நீ” என்று கமெண்ட் போட்டு இருந்தான். கலைஞனாய் இருப்பதற்கு கிடைக்கும் அங்கீகாரம் ரசிகனாய் இருப்பதற்கு இலகுவில் கிடைத்துவிடுவதில்லை. தேங்க்ஸ் நண்பா.

இன்றைய பாடல்

லேலூர் ரயில் நிலையத்தில் காலையில் காத்திருக்கும் போது,  crossing மூடும் சமயம் ஒரு மணி அடிக்கும். அந்த இசை வைதேகி காத்திருந்தாள் படத்தில் “இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமோ” பாடலின் ஆரம்ப மணியிசையை அப்படியே ஞாபகப்படுத்தும். அருகே வேறு ரயிலுக்கு காத்துக்கொண்டிருந்த ஆஸ்திரேலிய மொழு மொழு ஹன்சிகா! என்னைப் பார்த்து சிரித்து வைக்க, அட இன்றைக்கு நெசமாகவே ஆனந்தம் தான் என்று  “நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ”  டூயட் மைன்ட் வாய்சில தொடங்கும் போது,  பின்னாலே இருந்து ஒரு பிக்காலிப்பயல் ஓடிவந்து அவளுக்கு கழுத்திலே முத்தம் கொடுத்தான். அடச்சே படத்தில வந்த விஜயகாந்த் கதி தான் நமக்குன்னு நாக்க தொங்கபோட்டது மிச்சம்!


ஆப்பிள்

ஸ்டீவ் ஜோப்ஸ் சுயசரிதை கில்லி போல விறுவிறுப்பாக இருக்கிறது. ஸ்டீவ் ஜோப்ஸ் உண்மையிலேயே ஒரு கிறுக்கன் தான். அதனால் தான் இத்தனை உயரத்தை தொட முடிந்திருக்கிறது. 60களிலே இருந்த ஹிப்பி கலாச்சாரம், அதையொற்றிய சுதந்திர சிந்தனைகள், அதற்குள் ஒரு குழப்பமான ஆன்மீகம் அத்தோடு சேர்ந்து உலகப்போர் படையினரும் சாதாரண வாழ்க்கைக்கு திரும்புகையில் அவர்கள் கையோடு கொண்டு வந்த அனுபவங்கள், என எல்லாமே சேர்ந்து ஒரு விதமான தொழில் மற்றும் கலாசார புரட்சியை அமெரிக்காவில், குறிப்பாக கலிபோர்னியா, சிலிக்கன் வாலியில் உருவாக்கி இருக்கிறது. இவர் LSD என்ற போதையை தொடர்ந்து பாவித்திருக்கிறார். சைவ உணவையே அதிலும் பழங்களை உண்ணுவதே சிறந்த உணவுப்பழக்கம் என்று நம்பியிருக்கிறார்! அப்jobs_and_wozniak_1975படி உண்டால் குளிக்கவே தேவையில்லை என்று யாரோ எழுதிவைக்க, தல மீட்டிங்குக்கு வந்தாலே கப்பு தாங்க முடியாதாம். புத்தகத்தில் இருக்கும் சுவாரசியமான விஷயங்களை ஒரு தொடராக எழுதுவோமா என்று சிந்தனை… What do you think?

ஈழத்தில் ஏறத்தாழ இந்த சூழ்நிலை தான் இப்போது. போரில் பங்கேற்றவர்கள் நடைமுறை வாழ்க்கைக்கு திரும்பும் நேரம். எல்லோர் மனதிலும் ஒரு ரணம், “point to prove” என்ற சாதிக்கும் வெறி. என எல்லாமே இருக்கிறது. இந்த விஷயத்தை எப்படி புத்திசாலித்தனமாக கையாளப்போகிறோம் என்பதில் தான் எதிர்காலம் அடங்கி இருக்கிறது. நாங்கள் அதிகம் உணர்ச்சிவசப்படுகிறோம். ஏழாம் அறிவில் சூரியா துரோகம் என்னும் போது, அதில் உள்ள அரசியலை யோசிப்பதில்லை! மயிர் கூச்செரிகிறது.! இதே சூர்யாவை தான் கொஞ்ச காலத்துக்கு முன்னர் தடை செய்ய வேண்டும் என்று போராடியதை இலகுவில் மறந்துவிடுகிறோம். பாருங்கள், இப்போது கூட ஒரு சினிமா உதாரணம் தான் எனக்கு வருகிறது. அது தான் நாம். அமெரிக்காவில் தொழில் புரட்சிக்கு ஏதுவாக அமைந்த குடும்ப அமைப்பு எம்மில் இல்லை. கராஜில் இடம் போதாது என்று சமையலறை வரை ஸ்டீவ் ஜோப்ஸ் இன் ஆராச்சி பொருட்கள் வந்துவிட்டன. நண்பர் கூட்டம் வேறு. குடும்பம் கிஞ்சித்தேனும் முகம் சுளிக்கவில்லை. எனது அக்காவின் மருமகன், ஒரு டிவி ரிமோட்டை தொட்டாலே திட்டு விழும். இந்த சூழ்நிலை மாறவேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக,  சும்மா இருந்தாலும், எப்படியாவது வெளிநாடு போய் உழைக்கலாம் என்று நினைக்கும் ஒரு தலைமுறை சிறுவர்களை ஈழத்தில் பார்க்கிறேன். தபபு அவர்களில் இல்லை, எம்மில் தான். பயமாக இருக்கிறது.
மாறவேண்டும். அந்த மாற்றமாய் நாம் இருக்க முடியாவிட்டாலும் விஜய் அணில் மாதிரி ஏதாவது செய்யலாம் என்று யோசித்து வருகிறோம். செய்வோம் … செய்கிறோம்!

விளையாட்டு

photo-finish1_2042493cமெல்பேர்ன் கப் என்ற குதிரை பந்தயம் உலக அளவில் பிரசித்தம். இங்கே அதற்கு பொது விடுமுறை என்றால் பார்த்துகொள்ளுங்கள். இம்முறை பிரான்சை சேர்ந்த டுனாடேன் என்ற குதிரை வென்று இருக்கிறது. ஆனால் கடுமையான போட்டி. எந்த குதிரை வென்றது என்பதை ஜட்ஜ் பண்ணுவது கடினம். DRS மாதிரி ஒரு சிஸ்டம் தான் கடைசியில் முடிவை அறிவித்தது. இப்போது ரெண்டாவதாக வந்த குதிரை டோனி போல DRS சிஸ்டம் வேண்டாம் என்று புலம்பிக்கொண்டு இருக்கிறது!

ஹாட் நியூஸ்

வேலாயுதம் படத்த சூப்பர் ஹிட்டாக்க ஒரு சூப்பர் ஐடியா … விஜய் சொன்ன இந்த வசனத்த ஹன்சிகா சொல்றதா டிரைலர் செஞ்சிருந்தா போதிவரமனே வேலாயுதம் பார்ஸ்ட் ஷோ பாத்திருப்பான்!!

“நான் சும்மாவே காட்டு காட்டுன்னு காட்டுவேன் நீ வேற காட்டச்சொல்லுறே, காட்டாம இருந்தா நல்லாவ இருக்கும்”
hamsika

குனித்த புருவமும் கொவ்வைச்செவ் வாயிற் குமிண்சிரிப்பும்
பனித்த சடையும் பவளம்போல் மேனியிற் பால்வெண்ணீறும்
இனித்த முடைய எடுத்தபொற் பாதமும் காணப்பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவ தேஇந்த மாநிலத்தே.


 
இந்த வார வியாழ மாற்றம் உங்களுக்கு எப்படி? அடுத்த வாரம் தொடர்வோமா?
வியாழமாற்றம் (27-10-2011)
வியாழ மாற்றம் (20-10-2011)

Comments

 1. //
  புத்தகத்தில் இருக்கும் சுவாரசியமான விஷயங்களை ஒரு தொடராக எழுதுவோமா என்று சிந்தனை
  //
  எழுதுங்கோ எங்களை மாதிரி இங்கிஷுல தவழ்பவர்களுக்கு ஒரு நற்செய்தி :)

  ReplyDelete
 2. அருமையான தொகுப்பு,

  ReplyDelete
 3. நல்லாத்தான் மாறியிருக்கு...அருமை

  ReplyDelete
 4. @விமல் ... நீங்களும் சாந்தனும் தான் கேட்டு இருக்கீங்க .. எந்த அளவுக்கு ரெஸ்பான்ஸ் வரும்னு தெரியல .. பார்ப்போம்!

  ReplyDelete
 5. @suryajeeva .. நன்றி தலைவரே

  @Rajh ... நன்றிங்கண்ணா!

  ReplyDelete
 6. கிருஷாந்தி அக்காவும், மேகலா அக்காவும் என்னில் கண்ணீரை வரவழைத்து விட்டார்கள் .

  ReplyDelete
 7. நன்றி முருகேசன்!

  ReplyDelete

Post a comment

Contact Form