வியாழமாற்றம் (10-11-2011) : மகிந்த காமெடி

Nov 10, 2011 7 comments

மகிந்த காமெடி

இலங்கையில் ரக்பி விளையாட்டு லீக் ஒன்று நடக்கிறது.ஐபில் போல வெளிநாட்டு வீரர்களும் பங்கேற்கிறார்கள். எனக்கு இதைப்பற்றி ஒன்றும் தெரியாது. ஆனால் தற்செயலாக இணையத்தில் பார்த்த போது “Jaffna Challengers” அணி “Central Kings” அணியை வென்றுவிட்டதாக ஒரு செய்தி.
என்னடா இது நம்ம பசங்க ரக்பி என்றாலே ஏதாவது புடிங் என்று நினைப்பாங்களே, அவங்க எப்படி வென்றாங்க என்று ஒரு சந்தேகத்துடன் அணியை பார்த்தால், அணித்தலைவர் யோசித ராஜபக்ஸ, ராஜபக்சவின் கடைசி மகன். யாழ்ப்பாண அணிக்கு அவர் தலைவராம். ஒரு தமிழன் கூட அணியில் கிடையாது. இந்த காமெடி யாழ்ப்பாணத்தில இருக்கிறவனுக்கே தெரியாது! ச்சே சூரியா முதலிலேயே சொல்லி இருந்தால் ஒன்பது துரோகிகளையும் அப்பவே கண்டுபிடிச்சு இருக்கலாம். இந்த நிலைமை நமக்கு வந்து இராது.

மைனர்குஞ்சு கோர்னர்

மைனர்குஞ்சு கீர்த்தி  போட்ட இந்த மினி சேலை கட்டிய பெண்ணின் படம் facebook ஐ இந்த வாரம் ஒரு கலக்கு கலக்கியது.

saree


மைனர்குஞ்சு: எனக்கென்னவோ இன்னும் கொஞ்சம் கூட கிழிச்சி இருந்தா நன்னா இருக்குமோனு தோணுது!!!அரசியல்

obama-sarkozy-berlusconi-check-93490கிரீஸிலும் இத்தாலியிலும் நடப்பது, ஐரோப்பிய ஒன்றியம் ஒரு சீட்டுக்கட்டு என்பதை நிரூபித்து இருக்கிறது. வாழ்ந்து இப்போது கெட்டுக்கொண்டு இருக்கும் இரு நாகரிக சமுதாயங்கள். பெரும் தலைகள் எல்லாம் உருண்டுகொண்டு இருக்கின்றன. பிரான்சின் சார்கோசிக்கு இப்போதே வயிற்றை கலக்கி இருக்க வேண்டும். 100 பில்லியன் யூரோவை வரி மற்றும் சிக்கனம் மூலம் சேர்க்க இருப்பதாக தெரிவித்து இருக்கிறார். எனக்கென்னவோ வீம்பு பண்ணாமல் ஐரோப்பிய ஒன்றியத்தை கலைத்து விட்டு அவனவன் தன் ஜோலியை பார்க்க போகலாம். இப்போது சீட்டுக்கட்டு குலைந்து விடுமோ என்ற அச்சம் நிலவுகிறது. இத்தாலி பிரதமர் பெர்லுஸ்கோனி ஒரு கில்மா கில்லாடி. இத்தாலியில் எந்த சொத்தை எடுத்தாலும் இவனின் முதலீடு இருக்கும். பெண்கள் விஷயத்தில் பலே கில்லாடி. இத்தாலியின் இந்த நிலைமைக்கு அந்த மக்களின் சோம்பேறி குணமும் தான் காரணம். நாலு வீடு இருந்தா, வாடகைக்கு விட்டுட்டு உட்கார்ந்து பாஸ்டா சாப்பிடுவான் இந்த இத்தாலிகாரன். பணக்காரனிடம் காசு இல்லையென்றால் ஏழையிடம் தான் புடுங்குவான். பாவம் ஆபிரிக்க ஆசிய நாடுகள். இதிலே பிரேசில் எப்படியும் தப்பி விடும். எண்ணை கிடைத்திருக்கும் அளவை பார்த்தால், அடுத்த போர் தென் அமெரிக்காவோ தெரியாது!

இந்த வார நெகிழ்ச்சி

ஆங்கிலத்தில் எழுதியதன் பலன் ஆஸ்திரேலியா வந்த பின் கொஞ்சம் கொஞ்சம் தெரிகிறது. அலுவலகத்தில் Peter என்ற நண்பர் என்னுடைய எல்லா ஆங்கில பதிவுகளையும் வாசித்து விட்டு சிலாகித்தார். சந்தோஷமாக இருந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக இந்த கடிதம்
Hi,
My name is Luis Ibáñez, I am writting a blog about java problems that I found in my job. I have solved a part of a new program using your implementation of State Pattern written here:
http://blogs.oracle.com/jkumaran/entry/state_design_pattern_using_java . And I would like to translate the history into spanish and publish it in my blog with a reference to you and your blog. Can I do it?
Whatever your answer will be, thansk for publish it. It helps me very much!!
Lui

தக்காளி ஸ்பெயின வரை புகழ் பரவுதா? என்ன கொடும சரவணன் இது.
இதை வாசித்து சிரித்துக்கொண்டு இருந்த நேரம் இன்னொரு கடிதம் என்னுடைய நண்பரின் நண்பர் “உஷ் .. இது கடவுள்கள் துயிலும் தேசம்” கதையை வாசித்து விட்டு அனுப்பியது..
 Hi, 
It's a really heart touching story and developed in well format. I can understand that it is likely written by a professional writer. Convey my regards to him. 
With love, 
xxxxxx
இவற்றை பதிவு செய்ய வேண்டிய காரணம் ஒன்று இருக்கிறது, சென்ற வாரம் கூட நண்பர் ஒருவர், இப்படி எழுதுகிறாயே, உன்னை பைத்தியகார ஆஸ்பத்திரிக்க்கு தான் அனுப்ப வேண்டும் என்று சொன்னார். அடிக்கடி நம்ம எழுத்து மீது நமக்கே சந்தேகம் வர வைக்கிறார்கள். 

 
ஜோப்சின் focus இருந்தால் எந்த தடைகளையும் தாண்டி விடலாம்!
நன்றாக எழுத முயற்சி செய்ய வேண்டும்! 
 
 
 

 

ஆப்பிள்

திங்கள் அதிகாலை சரியாக நான்கு முப்பது ஆகி விட்டது, ஸ்டீவ் ஜோப்சின் சுயசரிதையை படித்து முடிக்கும்போது. அப்புறம் என்ன, வேலையில் தூக்கம் தான்! நெக்ஸ்ட் கம்ப்யூட்டர் காலப்பகுதி சிறிது போரடித்தது. அப்புறம் Toy Story இல் பிடித்த வேகம் முடியும் வரை குறையவில்லை. அதிலும் iTunes உருவாக்கத்தில், அத்தனை மியூசிக் நிறுவனங்களின் கண்களிலும் எண்ணையை விட்டு ஆட்டியது ரசிக்க வைத்தது.  ஸ்டீவ் ஜோப்ஸ் ஒரு inspiring model ஆ? என்று கேட்டால் இல்லை என்றே சொல்வேன். எல்லோரும் இவரைப்போல ஆக முடியாது. இவர் ஒரு born personality, நாம் நினைத்தாலும் replicate பண்ண முடியாது. எது முடியும் என்றால், அவர் தன் வேலையில் வைத்திருந்த காதலை, அதிலும் அந்த டிசைனுக்கு கொடுத்த முன்னுரிமையை,  ஒவ்வொரு சின்ன சின்ன விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்ததை. உங்களிடம் iPod, iPad, iPhone அல்லது Mac இருந்தால் ஒருமுறை சற்றே ரசித்து பாருங்கள். ஒவ்வொரு சின்ன விஷயத்துக்கும் மாசக்கணக்கில் உழைத்திருக்கிறார்கள். எல்லோருக்கும் ஐடியாக்கள் இருக்கிறது. அதை எப்படி செயலில் கொண்டு வருகிறோம் என்பதில் தான் சிக்கலே. ஸ்டீவ் ஜோப்ஸ் அதில் ஒரு மேதை!

இன்றைய பாடல்

சவால் சிறுகதைப்போட்டி முடிவுகள் அடுத்த வாரம் வருகிறது. நண்பர் ஒருவர் பேசும் போது, எல்லாம் ஒகே தான், ஆனால் அந்த தலைப்பு ஒரு சாதாரணமாக இருக்கிறதே என்று கேட்டார். உண்மை தான். ஒரு தலைப்புக்காக யோசித்துக்கொண்டு இருக்கும்போது தான் இந்த பாடல் iPad இல் சட்டென ப்ளே ஆகியது. எனக்கும் நெஞ்சில் எப்போதுமே இரத்தம் தான்(!) என்பதால் “சட்டென நனைந்தது இரத்தம்” என்று பெயரிட்டேன்.


மாதவன் ஒரு என்ஜினீயர். கோபக்கார அக்கா. அவன் ஒரு எழுத்தாளரும் கூட!!!
எந்த வாசல் வழி காதல் நடந்துவரும் என்று காத்துகிடந்தேன்
அது வானில் பறந்து வந்து கூரை திறந்து வரும் என்று இன்று தெளிந்தேன்
தாவி வந்து எனை அணைத்த போது எந்தன் சல்லிவேர்கள் இருந்தேன்
சாவின் எல்லை வரை சென்று மீண்டு இன்று இரண்டு ஜென்மம் அடைந்தேன்


ஹாட் நியூஸ்

சென்ற வாரம் ஹன்சிகா புராணம் என்பதால், பல நேயர்கள் எதிரிப்புகுரல்கள் எழுப்பினார்கள்.
குறிப்பாக தபால் அட்டை மூலம் தொடர்புகொண்ட வசாவிளானை சேர்ந்த கேசி மற்றும் அவரின் நண்பர் நிவேரன்(!), சுகிந்தன், நயினாதீவை சேர்ந்த தவா மற்றும் அவரது குடும்பத்தினர், காரைநகரை சேர்ந்த வைகுந்தன் ஆகிய நேயர்களின் விருப்ப தெரிவாக இந்த வாரம் ..
ஒரு எலி, ரெண்டு எலி, மூணு எலி, நாலு எலி …

kilinochchi central college grounds

சேலைக்குள் ஆடும் மங்கையின் மேனி
மேனிக்குள் ஆடும் மனம் எனும் ஞானி
ஞானியின் மனமும் ஆசையில் தேனி
நான் ஒரு ராணி பெண்களில் ஞானி
என் மனம் என்னவென்று என்னை அன்றி யாருக்கு தெரியும்
கண்ணிலே என்ன உண்டு கண்கள் தான் அறியும்?
 
இந்த வார வியாழ மாற்றம் உங்களுக்கு எப்படி? அடுத்த வாரம் தொடர்வோமா?
வியாழமாற்றம் (03-10-2011)
வியாழமாற்றம் (27-10-2011)
வியாழ மாற்றம் (20-10-2011)


Comments

 1. பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 2. கன்னத்தில் முத்தமிட்டால் கதையை எங்கிருந்து மணிரத்னம் சுட்டார் என்று காலகாலமா விவாதம் நடக்குது.. இதைபத்தி அந்த காலத்துல பத்து பதினைஞ்சு ரேடியோ ப்ரோக்ராம் நடத்தியும் ஒரு தீர்வுக்கும் வர முடியல..

  //
  மாதவன் ஒரு என்ஜினீயர். கோபக்கார அக்கா. அவன் ஒரு எழுத்தாளரும் கூட!!!
  //

  அடிங்கொய்யாலே.. உங்க கதையையா சுட்டிருக்காரு மணி சார்.. ஒரு கத்தியை அவருட கழுத்தில வச்சு ரோயல்ட்டியை வைக்கிரியா இல்லியான்னு ஒரு கேள்வி கேளுங்க பாஸ்..

  வேற என்ன..

  "இது எனக்கு பிடிச்சிருக்கு" என்று சொல்லிட்டு "பூக்கடை" படத்துக்கு ஹீரோவா போட்டாலும் போடுவார். ராயல்டி மிச்சம்தானே அவருக்கு

  ReplyDelete
 3. November 11, 2011 1:35 a.m.

  ReplyDelete
 4. நன்றி suryajeeva, தொடர்ந்த வருகைக்கும் கருத்துக்கும்!

  ReplyDelete
 5. @விமல், இந்த உள்குத்து வெளிக்குத்து எல்லாம் ஏற்கனவே பார்த்தாச்சு!! மணிரத்னம் சுடுறதுக்கு அதில பெரிசா கதயோன்னுமில்ல ...இலங்கை பிரச்சனையை எடுக்கும்போது அந்த பிளாட் சாதாரணமா அவரக்கூடியது தான். அத எப்படி screenplay செய்கிறார் என்பது தானே விஷயமே...அரைக்கிணறு தான் ... ஆனா மணிரத்தினத்தின் கிணறு ரொம்ப ஆழம்!!

  ReplyDelete
 6. நான்தேன்11/12/2011 8:10 pm

  Epping C.J.Yesudas அவர்களே(கடந்த வாரம் முதல்), கடந்த வார உங்கள் இசைநிகழ்ச்சியில் எழுந்த அஞ்சலி பற்றிய கருத்து Hansika ரசிகர் மன்ற தலைவரை பாதித்து விட்டது போல இருக்கிறது??? We join all the fan clubs, don't stick to one.....

  ReplyDelete
 7. யோவ் நான்தான்! ... பிடிக்காமலா அஞ்சலி படம் போட்டிருக்கேன் ... பாஸ் பொண்ணுன்னு வந்திட்டா எந்த கிளப்பிலும் நாங்க மெம்பர்ஸ் தான்!!

  ReplyDelete

Post a comment

Contact Form