இவன் ரொம்ப நல்லவன்டா!!!

Nov 2, 2011

 

14022006-THN14image2

 

“ஆ .. ஐயோ ஆ”

 

“முதலாளி, இந்த வீங்கு வீங்கி இருக்கே, ஆளே இல்லாத ஒங்க ப்ளாக்ல இந்தா ஆத்து ஆத்தறீங்களே? ஆக மிஞ்சிப்போனா ஒரு எட்டு வோட்டு தானே விழுது?”

 

“அட போம்மா நீ வேற, மொதல்ல நான் இங்க்லீஷ்ல தாம்மா எழுத்திக்கிட்டிருந்தேன். அங்க ஒரு மூணு நாலு தடியங்க தான் எப்பவுமே கிழிப்பாங்க… அப்ப தான் இந்த கீர்த்தி எண்ட ஒரு பனங்கொட்டை தலயன் போன் பண்ணி, மச்சான் இங்கிலிஷ்ல எழுதினா எவனும் சீண்ட மாட்டான் .. நீ தமிழ்ல எழுது, நன்னா வரும்னான்”

 

வந்திச்சா பாஸ்?

 

நல்லா வாயில வந்திச்சு…. நானும் நம்பி, தமிழில ஒரு பதிவ முக்கி முனகி லக்கியதனமா போட்டன். தக்காளி, ஐஞ்சு பத்து இல்ல, ஒரு அம்பது பேரு facebookல கூட்டு சேர்ந்து கும்மோ கும்முன்னு கும்மினாங்க….

 

அட , நல்லது தானே பாஸ்?

 

ஜிவ்வுன்னு ஏறிச்சுதுன்னா பாத்துக்கொயன்! .. ஆனா அது முதல் பதிவுக்கு மட்டும் தான்… அப்புறம் அவனவன் தன்னோட ஜோலிய பாக்க போயிட்டானுக…

 

ஐயோ பாவம்

 

அப்ப தான் இந்த முட்டாசு தலையன் கீர்த்தி, இது போதாது மச்சி, நீ திரட்டில ஆட் பண்ணுடா இன்னும் கூட்டம் அள்ளும்னான்.big_No_reentry_for_Vadivelu_in_film_again-3682e55117c0265ee808c2876a22a1a3

 

ஆட் பண்ணீங்களா பாஸ்?

 

பண்ண வச்சிட்டாங்களே, பண்ணியாச்சு …அங்க மொத்தமே ஏழு பேரு தாம்மா,  தமிழ்மணம், தமிழ்10, தமிழ்வெளி, சுண்டெலி, உடான்ஸ் னு ஐஞ்சு திரட்டில மொத்தமா சேர்த்து ஏழு பேரு தான், வந்தாங்க, அவனுகளால எவ்வளவு முடியுமோ அவ்வளவு நல்லா “அழகான பதிவு” னு ஒரே ஒரு கமெண்ட் போட்டுட்டு எஸ்கேப்பாயிடானுக. தக்காளி காப்பி பேஸ்ட் பண்ணி எல்லா பதிவிலேயும் இத தான் போடுறாங்கன்னு தெரியாம நானும் பதிலு போட்டன்.

 

ஆ அப்புறம்?

 

அப்புறம் அது முடிஞ்சு ஒரு ஆட்டோல ஏத்தி விட்டாங்கம்மா. சரி நம்மள வீட்டுக்கு தான் அனுப்புறாங்கனு நெனைச்சா, ஆட்டோ ஒரு மூத்திர சந்துக்க போச்சுது. திரும்பவும் அந்த ரப்பர் வாயன் கீர்த்தி தான் வந்து நின்னான்.

 

திரும்பவும் அவனா?

 

அவனே தான், பொண்ணு பொறந்திருக்கே, பொறுப்பா இருப்பான்னு நினைச்சா, அவன் சொன்னான், மச்சான் உடான்ஸ்ல சிறுகதைப்போட்டி நடத்தறாங்க .. நீ தான் நல்லா கதை விடுவியே .. ட்ரை பண்ணு .. நல்லா வரும்..பேமஸ் ஆயிடுவேன்னான்

 

 

 

அவன் ஐடியா வெவகாரமா இருக்குமே பாஸ்?

 

 

 

நானும் ஆரம்பத்திலே அப்படிதாம்மா நினைச்சேன், பட் இருந்தாலும் அந்த டீலிங் எனக்கு பிடிச்சிருந்திச்சு, சரின்னு போட்டிய போய் பார்த்தா,  அட கூறு கெட்ட கேன சிறுக்கி, ஒரு படத்த போட்டு அதுக்கு கதை எழுதுடான்னுட்டாங்க. என்னாடா இது வம்பா போச்சுதுன்னு அஜீத்தன்கிட்ட ஒரு டக்கீலா ஷாட்டு வாங்கி அடிச்சிட்டு ஒண்ண யோசிச்சு எழுதினேன்.

 

கதைக்கு ரெஸ்பான்ஸ் எப்பிடி இருந்திச்சி பாஸ்?

 

அதை ஏன்மா கேட்கற? மொத்தம் பதினோரு பேரு, மூச்சு திணற… திணற போட்டு கிழிச்சாங்க, சாரு கூட ஜெமோ பொத்தகத்த இப்பிடி கிழிச்சிருக்க மாட்டாருனா பாத்துக்க. சரி வந்தது தான் வந்தீங்க, கிழிச்சுட்டு போங்கடானு விட்டிட்டன்..

 

Vadivelu-in-Maja-விட்டுட்டீங்களா? அவங்கள திருப்பி கிழிக்கல?

 

இல்லம்மா ..

 

யேன்?

 

அவ்வ்வ்.. … கிழிக்கும் போது கஜன்னு ஒருத்தன் ஒரு கமெண்ட் போட்டான் .. மச்சான் இவன் எவ்வளவு கிழிச்சாலும் தாங்கறான் .. ஜெமோ மாதிரி இவன் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்லவன்னு ஒரு வார்த்த சொல்லீடான்மா .. நானும் …. வலிக்காத மாதிரி எவ்வளவு நேரம் தான் நடிக்கறது?

 

முதலாளி இதெல்லாத்துக்கும் காரணம் அந்த கோமுட்டி தலையன் கீர்த்தி தான், அவனுக்கு வேலாயுதம் DVD கொடுத்து அமுக்குவோம் பாஸ்!

 

 

 

--- சும்மா டைம் பாஸு மச்சி, மனஸ்ல எடுத்துக்காத!---

Contact Form