வியாழமாற்றம் (17-11-2011) : யாழ்ப்பாணம்

Nov 17, 2011 13 comments

யாழ்ப்பாணம்


யாழ்ப்பாணத்தில் இருந்து வரும் செய்திகள் திகிலூட்டுகின்றன. சென்ற வாரம் எனக்கு ஆறாம் வகுப்பில் இருந்து ஒன்பதாம் வகுப்புவரை கற்றுக்கொடுத்த ஆசிரியர் தயாபரன்(குமரன்) வெட்டிகொலைசெய்யப்பட்டு இருக்கிறார்.
ஏன் என்பது அல்ல இங்கே விஷயம். கொலைகள் வகை தொகை இன்றி நடை பெறுகின்றன. சாதாரண வட்டி பிரச்சனை முதல் வைப்பாட்டி பிரச்சனை வரை எந்த சிக்கலுக்கும் கொலை தான் தீர்வாகின்றது. மூன்று பேருக்கு மரண தண்டனை வேண்டாம் என்று உலகம் பூராக போராட்டங்கள். அங்கே என்னவென்றால் மரணங்கள் மலிந்து கேட்பாரற்றுப்போய் கிடக்கிறது.  இதிலே வேறு போதை வியாபாரம், களவு, கிறீஸ் பூதம் என சமூக சீரழிவு எல்லாம் நன்றாக ஊக்குவிக்கப்படுகிறது. அவன் தான் தூண்டி விடுகிறான் என்றால் நமக்கு எங்கே புத்தி போச்சு? புலிகள் இருக்கும் போது இது நடக்க வில்லையாம். நடந்தால் என்ன நடக்கும் என்று எல்லோருக்கும் தெரியும் தானே. கடினமாக கட்டுப்படுத்தி வரும் கட்டுக்கோப்பு, அந்த கட்டுப்பாடு இல்லாமல் போகும் போது சீட்டுக்கட்டு போல குலைந்து விடும். அது தான் யாழில் இன்று நடக்கிறது. பணத்தின் அருமை டாலர்களின் வருகையால் இளைஞர்களுக்கு புரியவில்லை. அப்போது எல்லாம் ஒரு தீக்குச்சியை வீணாக்கினால் கூட அம்மா உதைக்க வரும். இப்போது வீணாய்ப்போன வெளிநாட்டு பணம், ஒரு தலைமுறையை வீணடித்துக்கொண்டு இருக்கிறது. கடவுளுக்கு கூட பணத்தின் அருமை தெரியவில்லை. எத்தனை கொட்டினாலும் கண் திறக்க மாட்டேன்கிறான்! கொஞ்சம் கூட கருணை இல்லை .. அட அவன் அந்தப்பக்கம் மட்டும் பாய்ந்திருக்காவிட்டால் .. ச்சே

மைனர்குஞ்சு கோர்னர்vijaypower
 vijaika
இதுக்குள்ள பவர் ஸ்டாரை கொண்டுவந்து அவரை அசிங்கபடுத்திட்டாங்களே!!
அட இதுவாவது கொஞ்சம் ஓகே .. இந்த வீடியோ ..… என்னாங்கடா நினைச்சுகிட்டு இருக்கீங்க?
என்னா கொலைவெறி .. பக்கத்தில வேற ஸ்ருதி .. டேய் இதெல்லாம் ரொம்ப ஓவர்டா!
என்ன தான் சொல்லு, பாட்டு சூப்பர் தான் பாஸ்! ரிதம் கரெக்ட்!

சவால் சிறுகதை

இரண்டாம் இடம் கிடைத்து இருக்கிறது. மகிழ்ச்சியை தனிப்பதிவு ஆக்கியாச்சு. வலையுலகம் மீண்டும் மீண்டும் இப்படியான போட்டிகள் மூலம் தன்னை புதுப்பித்துக்கொண்டே இருக்கிறது. எழுதும் ஆவலை வருகின்ற வாழ்த்துக்களும் வரவேற்புகளும் தூண்டுகின்றன.  புது நண்பர்கள் கிடைக்கிறார்கள். இருக்கும் நண்பர்களள் இன்னும் இன்னும் வேண்டும் என்கிறார்கள். இதை தொடர்ந்து தக்க வைப்பது சவால் தான். ஜெயிச்சுடுவோம்ல!!

இந்த வார நெகிழ்ச்சி

அப்பா என்னுடைய உதயன் பற்றிய பதிவை வாசித்து விட்டு, உன் எழுத்தில் ஏதோ இருக்கிறது என்றார். பொதுவாக இலக்கியம் என்பதே டைம் வேஸ்ட் என்று நினைப்பவர், இப்படி சொன்னது ஆச்சரியமாக இருந்தது. ஒரு வேளை இலக்கிய தரத்தில் எழுதி இருந்தால் பிடித்திருக்காதோ என்னவோ! தேங்க்ஸ்பா!!

ஒரு நண்பர், இலக்கியவாதி, இலக்கிய உலகில் எப்போதுமே இயங்கிக்கொண்டு இருப்பவர். எனக்கும் தெரியும், ஒருமுறை ஒன்றாக பட்டிமண்டபம் கூட செய்து இருக்கிறோம். ஆனால் இப்போது எந்த தொடர்பும் இல்லை. ஜெயராஜ் பற்றிய பதிவை வாசித்து விட்டு நான் என்று தெரியாமல் சிலாகித்தார். யார் என்று தெரிந்தபின், இதயம் கனிந்தது, கண்கள் பனித்தது. அத்தோடு விடவில்லை, தன்னுடைய முப்பதுக்கும் மேற்பட்ட இலக்கிய நண்பர்களை திரட்டி ஒரு குழு அமைத்து “உஷ்... இது கடவுள்கள் துயிலும் தேசம்” பற்றி கலந்துரையாடினார். ஒரு வித இலக்கிய உரையாடல் குழுமம் இது.  அழகான உரையாடல்கள். அதன் சில பகுதிகள் இங்கே…
“உங்கள் அஞ்சல் பெட்டியை அடைக்கும் ஆர்பிகோ அல்லது வால்மார்ட் விளம்பரமல்ல இது! உங்கள் உணர்வு மற்றும் வாசிப்பின் மீதான மதிப்பின் வெளிப்பாடு .
உஷ்... இது கடவுள்கள் துயிலும் தேசம்! உங்களில் பலருக்கு தெரிந்த கதைதான், ஆனா இந்த எழுத்தாளர் அதை பதிந்த விதம் ஒரு அற்புதம். உங்கள் நினைவுகளை நிச்சயம் இந்த புனைவு நெருடி வருடி செல்லும்.
தமிழ் உணர்வுக்காக எழாமறிவு பார்பதிலும் இந்த மாதிரி பதிவுகளை ஆதரிப்பது அவசியம் என்பது என் தாழ்மையான எண்ணம்.
உங்கள் வெளிப்பாடுகளை தயவு செய்து அவரின் blog இல் பதியவும், அப்படி செய்தால் கவிஞ்ஞர்களின் தேசத்தில் உங்களுக்காக ஒரு ரோசா பூ பூக்கும்.
அந்த நண்பர் ஜெயக்குமாரன் இந்த மடலில் இணைக்கப்பட்டுள்ளார் .”
“Jeyakumaran - hats off to you and your work..Your blog should reach many people... specially it should reach the people from tamil naadu..”
“சிறப்பான படைப்பு.. அதன் கருத்தியல் தளமும் அது சொல்லப்படும் விதமும் அருமை.. இதனை கட்டாயம் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க வேண்டும்.. மேலும் எழுத வாழ்த்துக்கள்..”
“we can make one wonderful film with Seran "semmaniyil en pokisam" .........that what I felt ...but I thought it was true until the last lines...!!!”
“When I saw that name ... I almost collapsed ... I got the same feeling when I watched "life is beautiful"”
“No Words”
இந்த ஆதரவு எனக்கு இல்லை, நான் எழுதிய எழுத்துக்கு, அதை இன்னும் மெருகேற்றவேண்டும்!

ஆப்பிள்

ஸ்டீவ் ஜோப்ஸ் சுயசரிதம் பில் கேட்ஸ்க்கு பெரும் தலை குனிவாய் போய் விட்டது. சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம், கேட்ஸை திருடன் என்றும், புதுதிதாக ஒன்றும் கண்டு பிடிக்காதவர் என்றும் ரசனை கெட்டவர் என்றும் திட்டி இருந்தார். அது ஜோப்ஸ்க்கும் ஒன்றும் புதிது இல்லை. இதில் நல்ல விஷயம் என்றால், இருவரும் நல்ல நண்பர்கள். ஜோப்ஸின் இறுதிக்காலத்தில் கூட கேட்ஸ் அவர் வீட்டுக்கு சென்று மணிக்கணக்காய் அவருடன் இருந்து நட்பு பாராட்டி இருக்கிறார். ஜோப்ஸ் பற்றி தெரிந்தவர்கள் இந்த திட்டை பெரிதாக எடுக்க மாட்டார்கள். ஆனால் மீடியா விடாது இல்லையா! அதனால் கடந்த வாரம் முழுதும், கேட்ஸின் பொதுமக்கள் ஊடக குழு (PR) விழித்து விட்டது.  seattle, bloomberg, forbes என எல்லா முன்னணி சஞ்சிகைகளும் கேட்ஸ் புகழ் பாடின.  இத்தனை பணம் சேர்த்தவர்களுக்கு இது தெரியாதா?


அதிர்ச்சி

நேற்று அலுவலகத்தில் ஒன்றாக பணிபுரிபவர், காண்ட்ராக்ட் ஒப்பந்த அடிப்படையில் ஜாவாவில் ஆணி புடுங்குபவர். காலையில் வந்தார். மீட்டிங் எல்லாம் நடந்தது. சிரித்துப்பேசினார், சிக்கலான அல்கோரிதம் எல்லாம் டிஸ்கஸ் பண்ணினோம். இரண்டு மணி ஆனது. வந்தார்கள், உனக்கு இனி வேலை இல்லை என்றார்கள். அவர் அதிர்ந்து போனார். ஏன் வேலை போனது என்பது வேறு விஷயம். ஆனால் போன விதம் தான் ஷாக்கிங். அவர் புலம்பிக்கொண்டே பேப்பர் வோர்க்கை முடித்து விட்டு கையை காட்டிவிட்டு சென்று விட்டார். என்ன உலகமடா இது? காலையில் போகும் போது மாலையில் வேலை இருக்குமோ என்று தெரியாது! மாலையில் வீடு போகும் போது வீட்டிலே மனைவி இருப்பாளா என்றும் தெரியாது!! ஆஸ்திரேலியா அஸ்கு புஸ்கு தான் பாஸு!!

ஹாட் நியூஸ்

தெலுங்கிலே “Oh My Friend” என்று ஒரு படம். இன்றைய தேதிக்கு உலகையே கிறங்கடித்துக்கொண்டு இருக்கும் இரு பெண்கள் தான் நாயகிகள். தக்காளி ஒருத்தி படம் பார்த்தாலே ஒரு நாள் பூரா தூங்க முடியாது. இதில வேறு இரண்டு குதிரைங்க. கடவுள் உண்மையாகவே இருக்கிறார் பாஸ். சுயம்மா இதெல்லாம் உருவாகாது. ரூம் போட்டு உட்கார்ந்து பிரம்மா பிக்காசோ மாதிரி ஆட்கள் டிசைன் பண்ணினாதான் உண்டு, கடவுள் ரசிகன்டா!!

Shruthi-Hassan-Navadeep-and-many-moreHansika-Oh-My-Friend-Movie-Audio-launch-event-images-50

கறந்தபால், கன்னலொடு, நெய்கலந்தாற் போலச்
சிறந்து, அடியார் சிந்தனையுள் தேனூறி நின்று,
பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான்
நிறங்கள்ஓர்ஐந்து உடையாய்! விண்ணோர்கள் ஏத்த
மறைந்து இருந்தாய் யெம்பெருமான்
வல்வினையேன் தன்னை!


சென்ற வாரத்து பலன்கள்!
வியாழமாற்றம் (10-11-2011)
வியாழமாற்றம் (03-11-2011)
வியாழமாற்றம் (27-10-2011)
வியாழ மாற்றம் (20-10-2011)

Comments

 1. யாழ்ப்பாணம், அதிர்ச்சி, நெகிழ்ச்சி, ஆப்பிள், சவால் சிறுகதை ஆகியவை மட்டுமே சூப்பர்.. மற்றவை ஊறுகாய்

  ReplyDelete
 2. @Suryajeeva ...மிகவும் நன்றி .... தலைவர் நாயகன் எடுக்கும்போது கூட "நிலா அது வானத்து மேல" தேவைப்பட்டது .. நாங்க எல்லாம் எந்த மூலைக்கு பாஸ்? கொஞ்சம் ஊறுகாய் போட்டா தான் உண்மையை கூட சொல்ல முடியுது இங்க!!

  ReplyDelete
 3. This comment has been removed by the author.

  ReplyDelete
 4. ஜேகி அண்ணை , உங்கட அக்க எங்கே போறாதான் என்னை இழுத்து வந்தது, ஜெயா அண்ணை பற்றின பதிவு ரசனை , ஆனா அதை நான் சொன்னா எனக்கு அவரோடிருக்கும் உரிமை காட்டி அதற்க்கு வேறு சாயம் பூசப்பட்டிருக்கும் எண்டு நினைக்குறேன். உங்கள் காதலிகள் - நான் யானையில போற மாதிரி ஒய்யார ரகம், கதைகள் சில குதிரைகளை என் மூளைக்குள் ஓட விடுற மாதிரி ஒரு 'எண்ணப் போர்' ரகம். பகிர்ந்ததும் அதனால் உங்களுக்கு கிடைத்த வார்த்தைகளும் எனக்கும் சந்தோசம்.

  அனால், எழாம் அறிவுடை நம்பி என்னுள், அறிவுடை நம்பி கலிய பெருமாள் இந்திரன் , அறிவுடை நம்பி கலிய பெருமாள் சந்திரன் எண்டு இரண்டு துருவங்களை உண்டு பண்ணி ஒரு பெரிய பட்டி மண்டபம் நடந்து கொண்டிருக்கு, நடுவர் தீர்ப்பு சொன்னால் ஒரு முடிவான கருத்தை நேரம் பொறுப்பது பொறுத்து பதியுறன் , நானே எனக்குள் சில தெளிவு கொள்ளாததால் - என் உணர்வுகளை ஆட்கொள்ளும் சுழல்களை முடிந்தால் பகிர்கிறேன் - அது கொஞ்சம் சிக்கல் - will c.

  நான் ஒரு இலக்கியவாதியா ? கவிதைக்கு பொய் அழகு - ஓகே, ஆனா இது அபாண்டம்.

  ReplyDelete
 5. JK அண்ணே,
  கொலைவெறி நல்லாத்தான் இருக்கு.
  தனுசிண்ட குரல்ல ஒரு கவர்ச்சி இருக்கு உங்கட எழுத்து மாதிரி !!!

  //என்னா கொலைவெறி .. பக்கத்தில வேற ஸ்ருதி .. டேய் இதெல்லாம் ரொம்ப ஓவர்டா!//
  அதில ரெண்டு பொண்ணு இருக்குண்ணே ரஜனி & கமல் பொண்ண் :)

  ReplyDelete
 6. நன்றி உதயா

  காதலும் எழுத்தும் ஒரே வகை. ஆரம்பிக்க முதல் ஒரு பதட்டம். முடியுமா ... ஏற்றுகொள்வாளா? எப்படி பேசுவது? எங்கே தொடங்க எங்கே முடிக்க? எல்லா குழப்பங்களும் இருக்கும். ஆரம்பித்துவிட்டால் அதுவாக வந்துவிடும். வார்த்தைகள், சம்பவங்கள், உணர்ச்சிகள் எதையுமே தீர்மானித்து எழுதுவதில்லை. ஆரம்பித்துவிட்டோம். முடித்துவைப்பது எது என்று தெரிவதில்லை. இப்படியான விடை இல்லாத கேள்விகளுக்கு கடவுளை காரணம் காட்டலாம் என்றால், கடவுள் இருக்கிறாரா என்ற கேள்விக்கே இன்னும் எனக்கு விடை இல்லை. சரி அதற்கும் கடவுளையே காரணம் காட்டி விடலாம்! விடை இல்லை இல்லையா!!

  இந்த இலக்கியவாதி மேட்டர்!! நான் உங்கள இலக்கியவாதி என்று சொல்ல நீங்க எனக்கு திரும்பி சொல்ல, ஒரு வித epidemic கொஞ்சம் கொஞ்சமாக கிரியேட் ஆகி இருவருமே இலக்கியவாதிகள் ஆகிவிடலாம் இல்லையா ;) .. jokes apart ..உங்கள் எழுத்தில் இருக்கும் ஒரு வித அனாயசமான வலிந்து புகுத்தப்படாத இலக்கிய நடை எனக்கு பிடிக்கும். கம்பவாரிதி வீட்டு கட்டுத்தறி இல்லையா!!

  BTW உங்கள் பதிவு வாசித்துவிட்டேன். கமெண்ட் வாற இறுதியில்!!

  ReplyDelete
 7. Thilakan ... அண்ணேயா? கொய்யாலா .. மாசி வந்தால் இருபது தான் ஆகுது எனக்கு!!

  "தனுசிண்ட குரல்ல ஒரு கவர்ச்சி இருக்கு உங்கட எழுத்து மாதிரி !!!"

  --ஏதோ போட்டு வாங்கிறாபில தெரியுது .. தலைவரே நம்ம வச்சு காமெடி கீமெடி பண்ணலையே!

  But அந்த பாட்டு சூப்பர் பாட்டு .. நல்ல ஸ்டைல் ஒண்ணு இருக்கு

  ReplyDelete
 8. //காதலும் எழுத்தும் ஒரே வகை. // ஏற்றுக்கொள்கிறேன்,

  (என்) படைப்புகள் பற்றி ஒரு பொதுப் பார்வை - http://athens-valiban.blogspot.com/2011/11/blog-post_18.html. இதே தவிப்பு + குழப்பம் எனக்கும் இருக்கு.

  //இப்படியான விடை இல்லாத கேள்விகளுக்கு கடவுளை காரணம் காட்டலாம் // விஞ்ஞான மாணவர்கள் இல்லையா , சட்டென்று அப்படி மனது ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.

  நீங்கள் வேறொரு பின்னுட்டத்தில், மொழிப் பயன்பாட்டை பற்றி ஒரு தன்னிலை விளக்கம் அளிக்கையில், சொன்ன மாதிரி, தளங்களும் முடிவுகளும் மாறிக்கொண்டே இருக்கின்றது, அதான் வாழ்க்கையை சுவாரசியப்படுத்துகிறது. முடிவு ஒன்று கண்ட பின்தான் எல்லாத்தையும் பேசலாம் என்பது சாத்தியமில்லை, இருந்தாலும் அதை காரணங் காட்டி நான் சில சமயங்களில் நழுவிவிடுவதுண்டு ;).

  ReplyDelete
 9. தலைவரே ... அப்புறமா கடவுள் இருக்கிறாரா என்ற கேள்விக்கே இன்னும் எனக்கு விடை இல்லை. சரி அதற்கும் கடவுளையே காரணம் காட்டி விடலாம்! விடை இல்லை இல்லையா!! என்று சொல்லிஇருப்பேன். We are on the same page என்று தான் நினைக்கறேன்!!

  இப்போது தான் ஒரு நீண்ட பதில் பதிவாக போட்டேன்
  http://orupadalayinkathai.blogspot.com/2011/11/will-c.html

  சனிக்கிழமை மற்றைய பதிவுகளும் புத்தகங்களும் வாசிக்கும் நாள். ஆனால் உங்கள் புண்ணியத்தில் ஒரு பதிவு போட்டாச்சு

  ReplyDelete
 10. மன்மதகுஞ்சு11/21/2011 9:41 pm

  யாழ்ப்பாணத்தை பற்றி இப்போ கவலைப்படவேண்டியது கட்டாயம் தான் ஏனெனில் இனி வரும் காலம் எமது சந்ததியினரின் வாழ்க்கை சம்மந்தப்பட்டது ,என்ன செய்ய இதைத்தானே நாம் எல்லோரும் தெரிந்தே ஆதரித்தோம்..

  ஸ்டீவ் ஜொப் பற்றி தற்போது வந்துகொண்டிருக்கும் வரலாற்று செய்திகளைப்பார்க்கும் போது அவரின் மீது ஒரு வியாபாரி,தொழில்நுட்ப புரட்சியாளர் என்பதை விட அவர் ஒரு சிறந்த எடுத்துக்காட்டான மனிதர் என்பதை எம்முள் விட்டுசென்றிருக்கிறார் என்ற தோற்றப்பாடு உன் பதிவை வாசிக்கும்போது ஏற்படுகிறது
  சுருதி மீது அவ்வளவாக ஈடுபாடு இல்லை, ஏனெனில் "7 ம் அறிவு வந்தால் தமிழனாய் பெருமைப்படுவோம் " எண்டு முருகதாஸ் சொன்னார் , அது சரிதான், சுருதி பேசும் தமிழை நான் பேசும் தமிழுடன் ஒப்பிடும் போது நான் தமிழனாக பெருமைப்படுகிறேன்.. ஆனாலும் ஹன்சிகா போன்றவர்களை கொண்டாடும் உன் போன்றவர்களை " வாகை சூடவா" நடிகை "இனியா" இன் நடிப்பினையும் ஒரு கணம் நோக்கவேண்டும் என்பதே என் வேண்டுகோள்..


  உன் தந்தையின் பாராட்டு உனக்கு கிடைத்த அங்கீகாரம்,ஆனாலும் இது ஒன்றும் புதிதில்லை என நினைக்கிறேன் ஏனெனில் பாடசாலைக்காலத்திலேயே உனது பட்டிமன்றங்கள், பேச்சுப்போட்டி களை கூட இருந்த் பார்த்தவன் ஆதலால்... ஒரே குண்டுசட்டிக்குள் குதிரை ஓட்டாமல் வட்டம் விட்டு வெளியிலும் வரவேண்டும் என்பதும் இந்த நண்பனின் அவா மச்சி

  ReplyDelete
 11. தாங்க்ஸ்டா ... அந்த ஹன்சிகா மாட்டார் .. சும்மா ஊறுகாய் மச்சி .. அது சும்மா ஜாலிக்கு .. அதில எலுமிச்சம்புளி தூக்கல் எண்டு சொல்லக்கூடாது!

  நீ குண்டுச்சட்டி என்று எதை சொல்கிறாய் என்று கொஞ்சம் புரிகிறது .. வேறு தளங்களில் எழுத முயன்று கொண்டு இருக்கிறேன் .. விரைவில் காண்பாய் ...தொடர்ந்து விமர்சனகளையும் குட்டுகளையும் தா மச்சி

  ReplyDelete
 12. எழுத்து நடையில் இருந்து இளைஞராக இருப்பீர்கள் என் ஊகிக்க முடிகிறது. 40 பிளஸ் இல் உள்ள என்போன்ற முன்னால் இளைஞர்களுக்கு ஒரு 'நனவிடை தோய்தல்' :-)

  ReplyDelete
 13. சக்திவேல் எழுத்து இளமை என்று சொன்னதற்கு நன்றி!!!!

  ReplyDelete

Post a comment

Contact Form