நீண்ட காலம் ஆகிவிட்டது சந்தித்து! இன்றும் இது எழுதுவதாய் இல்லை. ஆனால் இந்த ஏதென்சு நகரத்து எழில் மிகு வாலிபன் இன்று எழுத தூண்டிவிட்டான். நண்பனின் கதை என்ன தான் எழுதி இருக்கிறான் என்றே வாசிக்க சென்றேன். சில கதைகள் உணர்ச்சி வசப்பட வைக்கும். சில கதைகள் சிந்திக்க வைக்கும். சில கதைகள் இலக்கியத்தனமாய் இருக்கும். கம்பன் பாடல் போல, வாசிக்க வாசிக்க புது புது அர்த்தங்கள் தோன்ற வைக்கும். இந்த கதை தோன்ற வைத்தது. ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு அர்த்தங்கள் கிடைக்ககூடிய கதை. அது தான் இலக்கியம். கம்பவாரிதி வீட்டு கட்டுத்தறி இல்லையா! என் அர்த்தம் இங்கே!
கதையை வாசிக்க இந்த லிங்க்!ஏதென்ஸ் தோட்டத்து ராஜகுமாரா!!!!!
ஷேக்ஸ்பியரின் “Merchant Of Venice” தான் உங்கள் பெயரை வாசிக்கும் போது ஞாபகம் வரும்! ஐரோப்பிய இலக்கியம் அழகாக காதலிக்கும். அதிலும் இளவரசர்கள் இன்னும் அருமை, நீங்கள் அந்த பெயரில் உலாவுவதில் எனக்கு ஆச்சரியம் இல்லை .. அது கிடக்கட்டும்!!
இந்த கதைக்கு, எனக்கு ஒரு interpretation இருக்கிறது. அது நிச்சயம் உங்களதாய் இருக்க வேண்டிய தேவை இல்லை. பிரபல கவிஞரும் வசனகர்த்தாவுமான Robert Browning இடம் அவருடைய கவிதை வரி ஒன்றின் விளக்கத்தை வாசகர் ஒருவர் கேட்டாராம். அதற்கு Browning சொன்ன பதில்,
"இதை எழுதும் போது எனக்கும் கடவுளுக்கும் மட்டுமே இதன் அர்த்தம் தெரிந்திருந்தது. ஆனால் இப்போது ............. Only God Knows!"
“இன்னும் தொண்ணூறு நாட்களுக்கு மட்டுமே” என்ற தலைப்பு ஆரம்பத்திலேயே கட்டியம் கூறிவிட அந்த பாணியிலேயே வாசித்தேன். இரு துருவங்கள் இணைந்த காதல். ஆரம்பம். அவனை அவளும் அவளை அவனும் நன்றாக புரிந்திருக்கிறோம் என்று நம்புவதும், அவனுக்கு அவளும் அவளுக்கு அவனும் என்றே பிறந்திருக்கிறோம் என்று நம்புவதும் அந்த தொண்ணூறு நாட்களில் நிச்சயம் நடக்கும். ஆனால் நிஜத்தில் அவனும் அவளும் வேறு வேறு. அவன் எதிலும் கவிதை தேடும் (கணணி மேசையை கூட கலைத்து போட்டு அழகு பார்க்கும் ஆண் அவன், அப்புறம் அந்த சமையல் ரசனை) ரசிகன். பாவம் அவளுக்கு அது புரியவில்லை. அவன் மனம் போல வாழவேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. ஆனால் அது “சிந்து பைரவி” படத்தில் ஜெகேபியின் மனைவி பைரவி, இசை படிக்கும் போது, வடகம் காயப்போட்ட சிந்தனை அவளுக்கு வரும் இல்லையா அது போல இருக்கிறது. பாவம் தொண்ணூறு நாட்களின் பின் நிஜம் உறைக்கும் போது இருவருமே உடைந்து விடுவார்கள். Brilliant Thinking!
“உப்பு தூக்கலாக போட்டு, நெயில தாளிச்சு துரம்பருப்பு வறை, அவன் தான் சொல்லித் தந்தான், இவளுக்கு முந்தி அறிமுகமில்லை. ரசம் ஒருபக்கம் கொதிச்சுக் கொண்டிருந்தது , தாளிக்குறது ஒரு ரசனை அனுபவம் எண்டுவான், கருவேப்பிலை கடுகு சீரகத்துடன் பொரியும் போது வரும் சத்தமும் மணமும் காங்கேசன் வீதிகளில் பயணிக்க வைக்கும் எண்டுவான் இப்படித்தான் கருவேப்பிலைக்கும் காங்கேசன் வீதிக்கும் என்ன லிங்க் எண்டு தெரியேல்லை கேக்க வேணும் , அதுக்கொரு கதை வச்சிருப்பான்.”
செங்கை ஆழியான் பெருமைப்பட போகிறார். அவரின் ஞாபகம் வருகிறது. அவருக்கு பின் யார் என்ற அச்சம் கொஞ்சம் குறைந்தது போல. கமல் “மைனா” படத்துக்கு சொன்னது போல, இன்றைக்கு நிம்மதியாக தூங்கலாம்!! கொஞ்சம் ஓவரா போயிட்டமோ?
எனக்கு என்ன ஒரு சந்தேகம் என்றால். ஒருவனை நன்றாக புரிந்து கொள்ளமுடியாத பெண் எப்படி அந்த உணர்வை இத்தனை தெளிவாக தெரியப்படுத்துகிறாள்? 
“இண்ட கதை வாசி எண்டு நாசரித்து எடுதிட்டான் - "உஸ் இது கடவுள்கள் துயிலும் தேசம் " எண்ட பெயரை கேட்டவுடன் எனக்கு விளங்கேல்லை , இது கடவுள்கள் துயிலும் தேசம் ஏண்டா சொர்க்கமோ , இல்லை இந்த ஊரில சாமி எல்லாம் கண்ணை மூடிக்கொண்டு இருக்கு எண்டு அர்த்தமோ. உஷ் எண்டு எதுக்கு சொல்லோணும் ? இங்கை ஆழத்த்துயில் கொள்ளும் எல்லாரும் கடவுள்கள் என்டர்த்தமோ ? சுடலை பற்றி இருக்குமோ ? துயிலும் இல்லம் ? குழந்தைகள் காப்பகம் ? அவன் இப்படித்தான் பல மாதிரி கேள்வி கேப்பான் - ஏன் இப்படி குழம்போணும் எண்டு எனக்கு விளங்கிறேல்லை.”
Narration அவள் சிந்தனையாக போகிறது. ஆனால் அதிலே அவனின் எண்ண அலைகள் தலை தூக்குகின்றன. அட அவனே அதை வாய் விட்டு சொல்லியதாய் வாதத்துக்கு எடுத்து இருந்தாலும், அதில் சின்ன சறுக்கல், பாத்திரத்துக்குள்ளாலே எழுத்தாளர் எட்டிப்பார்த்து விட்டார் போல தோன்றுகிறது. ஆனால் இது என்னுடைய interpretation தானே. இதுவே அவனின் hallucination எண்ணங்களாக இருந்தால் (அதுவும் அழகான வடிவம் தான்), இது தவறு கிடையாது.
தலைவரே கொஞ்சம் எழுத்து பிழைகள். எனக்கும் அது ஒரு பிரச்சனை. கொஞ்சம் கவனிப்போம்.
இப்படியான கதைகளில், இது தான் எழுதுகிறேன் என்று எழுத்தாளர் நீங்கள் சொல்ல மாட்டீர்கள். கதையும் ஒரு நேரிசையாக சென்று கொண்டிருக்கும். புரியாவிடில், வெறும் பெண்ணொருத்தியின் உணர்வெழுச்சிகள் என்று அந்த கதை பார்க்கப்பட்டு விடும். அதையும் தாண்டி அந்த இரு துருவங்கள் அடையப்போகும், நீங்கள் சொல்லாமல் தவிர்த்த ஏமாற்றம் இருக்கிறதே.. அது தான் இந்த கதை இலக்கிய வட்டத்துக்குள் நுழைய காரணமாகிறது.
நீங்கள் புரிந்து தான் எழுதுவீர்கள். அதனால் சொல்ல மாட்டீர்கள். எனக்கு புரிந்து விட்டது என்று நான் சொல்லும் போது உங்களுக்கு ஒரு புளகாங்கிதம் ஏற்படும். சொல்கிறேன்! அனுபவியுங்கள்!!
முன்னைய பதிவுகள்
பேசாம யாரவது ஒராள் பெண்ணாப் பிறந்திருக்கலாம், மொறாவில காதலிச்சு, கொடவில காந்தர்வம், தொண்ணூறு நாட்களுக்குப் பிறகும் கசந்திருக்காது - என்ன செய்யுறது, வகுத்தான் வகுத்த படி அல்லால்...
ReplyDeleteஇதை தூசி வாசிச்சா, நான் சொல்லி நீங்கள் எழுதினதெண்டு சண்டைக்கு வருவானேண்டு நினைக்கிறன்.
இவளவு நுணுக்கமாக ஒரு அண்ணாவும் தம்பியும் வாசிக்கிறது - புளி கரைக்குது. இனி இன்னும் கொஞ்சம் ஊறவிட்டு எழுதுறன்.
//...சொல்கிறேன்! அனுபவியுங்கள்!!// பினாலிருக்கும் வலியும், பெரு மனதும்... எனக்கு புரியுது - இப்ப நீங்கள் அனுபவிக்ககோணுமோ? ;)
எழுத்துப்பிழை -> திருத்துறன் + தவிர்க்கிறன்.
பாத்திரத்துக்குள் கொஞ்சம் ஓவராத்தான் எட்டிப் பார்த்திருக்குறன் - ஒருவேளை தெரிந்தே, வேணுமெண்டு.... எத்தனை பொருத்தம் பார்த்தாலும் இந்தச் சிக்கல் தவிர்க்காமல் வாழ்க்கையில் வரும் - எப்படி சிக்கெடுக்கிறது எண்டு ஏதும் idea இருக்கே ?
பெண்ணிய வாதிகள் கருத்துகளுக்காய் காத்திருக்குறன்,
இதில் பெண்ணியத்தை எங்கேயும் குறை சொல்லவில்லையே நீங்கள்!! இரு வேறு துருவங்களுக்காக ஒரு துருவம் மேல் என்று மற்றயது கீழ் என்றும் ஆகாது. அவளுக்குள்ளும் அந்த உணர்வுகள் இருக்கின்றனவே! இரண்டு புள்ளிகளும் இணையாது .. அவ்வளவே!
ReplyDelete//...சொல்கிறேன்! அனுபவியுங்கள்!!// பின்னாலிருக்கும் வலியும், பெரு மனதும்... எனக்கு புரியுது - இப்ப நீங்கள் அனுபவிக்ககோணுமோ? ;)
--- Very Dangerous Fellow மச்சி நீயி .. கவனமா இனி எழுதோணும்!!
மடம் + tubelight வைச்சுக்கொண்டு சண்டைக்கு வருவினம் எண்டு பார்த்தன். மரபு சிந்தனை போல கதைநாயகி வீட்டை திருத்திக்கொண்டு, ஆறுமணிக்கு தலைவன் வருகைக்கு காத்திருப்பது போல படைத்திருப்பது பற்றியும், அவளுக்கு இலக்கியம் போன்ற intellectual ரசனை இல்லாதிருப்பதும் பொதுவாக பெண்ணிய வாதிகள் முரண்படும்/ படக்கூடிய கருத்துக்கள். ஜே.கே.பி கள் ரசிக்காம விட்ட பைரவியின் பருப்பு-ரசம் பற்றி நாங்கள் இருட்டடிப்பு செய்து விடுவதாகவும்...செரி விடுங்கோ, சில கருத்துகள் தனிப்பட்ட முறையில் சொல்லுச்சினம்.
ReplyDelete//Very Dangerous Fellow மச்சி நீயி//: ச்சே...ச்சே...நான் அச்சாப்பிள்ளை.
அந்த சறுக்கல் பற்றி, சில சமயம் சிந்துகள் கூட கலியாணத்துக்கு பிறகு; அரிசி, பருப்பு, 80 marks, தமிழ்த்தினப் போட்டி சட்டை தைக்குறது எண்டு சுருங்கிடிறதை சுட்டும் முயற்சி, முயற்சியில் சறுக்கி இருக்கலாம். இது நிறைய அவள்களை ஒரு அவளாக காட்டும் முயற்சி.
பொதுவா, தவிர்க்கேலாத இந்த முரண்களை தாண்ட 90 நாட்கள் முடியுது எண்டால், அதை எப்படி நீட்டிக்கிறது எண்டுதான் கேள்வி.
//பெண்ணிய வாதிகள் கருத்துகளுக்காய் காத்திருக்குறன்// அப்படின்னா யார் சார்?
ReplyDeleteசிந்துவைப் போன்ற பெண்கள் பெரும்பாலும் குழப்பம் நிறைந்தவர்களாகவே ஆண்களால் பார்க்கப்படுகின்றனர். எனவே என்னை கேட்டால் பைரவிதான் வாழ்க்கையைக் ஏதோ கொண்டிளுப்பதுக்கு உதவுவாங்க என்பது எனது தாழ்மையான கருத்து. :)
வாங்க கௌரி! பெண்ணியவாதின்னா யாருன்னு வாலிபனே பதில் சொல்லட்டும். என்னை கேட்டால் உண்மையான பெண்ணியவாதிகள் ஆண்களே! பெண்களுக்கு அந்த தேவை இல்லை என்றே நினைக்கிறேன்!! இப்ப இந்த வாலிபனையே எடுத்து கொள்ளுங்கள்!! (நம்மால முடிஞ்சது)
ReplyDeleteஇந்த சிந்து பைரவி உவமானங்கள் கதையின் கான்டெக்ஸ்ட் இல் தான் பார்க்கிறேன். இருவருக்கும் இள வயது. கனவுகள் எல்லாம் நிஜமாகும் என்று நம்பி ஆரம்பிப்பார்கள். அந்த தொண்ணூறு நாட்கள் தானே. அவன் ரசனை அவளுக்கு இருக்க வேண்டியதில்லை, அவன் விரும்பியபடி அவள் இருக்க வேண்டியதும் இல்லை. இந்த பக்குவம் இல்லாத பெண்ணும் ஆணும் தான் அவர்கள். கனவில் நாங்கள் உருவாக்கிய காதல் காணும்போது ஆரம்பத்தில் நிஜம் போல இருக்கும் அந்த தொண்ணூறு நாட்கள். அதை தான் அவன் சொல்லி இருக்கிறான். அந்த காலகட்டத்தில் நிச்சயமாக பைரவி சாதாரணமாக தான் தோன்றும். கல்யாணி பாடும் சிந்து தான் வேண்டும் என்பான். உண்மையை சொல்லவா. அந்த சிந்து கூட அவனை திருமணம் முடித்தால் பைரவி போல தான் இருப்பாள். சிந்துகள் உண்மையில் கிடையாது. சிந்துகள் எல்லாமே எங்கள் அடிமனது inceptions! அதை eccentric ஆக சொல்லியது தான் சிந்து பைரவி. (கொஞ்சம் ஓவரா போயிட்டமோ?)
இதிலே யார் சிறந்தவாள் என்பதை விட இந்த உணர்ச்சி போராட்டத்தை நன்றாக கையாண்டிருப்பதே இந்த கதை. அட அவன் கதைக்கு நானேன் விளக்கம் கொடுக்கிறேன்???
இப்ப புரியுதா நான் ஏன் உங்கள் கதைக்கு கமெண்ட் போட வில்லை என்று! தொடர்கதை எழுதுகிறீர்கள். அத்தனை சீக்கிரம் புரியாது எனக்கு. புரிவது போல் தோன்றுவது எல்லாம் ஒரு மாயை என்றும் எனக்கு தெரியும், ebook வேண்டும் மேடம்!!!
இப்ப இப்படித்தான் சொல்லுவீங்க. ஆனால் sunday முடிவைப் படிச்சிட்டு கமெண்ட் பண்ணுவதா வேண்டாமா எண்டு தலையைப் பிச்சுக்க போறீங்க. "முதல் பகுதியை கொஞ்சம் குறைச்சிருக்கலாம், பிறகு எல்லாரும் அதையே தூக்கி வைச்சிட்டு முழுக்கதையையும் குப்பைத்தொட்டியிலை போட்டிடுவான்கள்" எண்டு அனந்தன் சொன்னது. ஆனால் எனக்கு என்னமோ அது அத்தனை விரிவாய் இருந்தால் தான் ரெண்டாம் பகுதியில் சொல்லவரும் கருத்தின் ஆழம் புரியும் என்று தோன்றியது. அதாலா விட்டிடன். பார்ப்பம் என்ன நடக்கப்போதுன்னு. மாற்றியபடி யாராருக்கு எப்படித் தோன்றுகிறதோ அப்படியே வைச்சுக்கொள்ளுங்கோ. :)
ReplyDeleteசிந்துக்கள் பைரவியாய் ஆக்கப்படுகிறார்கள் எண்டு சொன்னால் இன்னும் பொருத்தாமாயிருக்குமே.. :)
என்னோட interpretation என்னவெண்டால் பைரவியின் உலகம் அவளது கணவன் மட்டும் தான். ஆனால் சிந்துவிடம் அப்படியல்ல. அவளது உலகம் பரந்துபட்டது. கதையின் முடிவில் அவள் பிரிந்து செல்வதுபோல் அமைத்தது ரெண்டு பெண்ட்டட்டி இருக்கக் கூடாதென்பதால் இருக்க முடியாது. அவளால் அப்படி இருக்கமுடியாது என்பதாலே என்று சொல்லலாம். பல ஆண்கள் சொல்லுவது போல் "இட்ஸ் ஜஸ்ட் happened . தட்ஸ் ஆல்." அதனால் அவள் நடத்தைகெட்டவள், அப்பிடிப்பிடின்னு பல வாதங்கள் வரும். அதுக்கு நிச்சயமாய் அவளிடம் ஒரு பதில் இருக்கும். ஆனால் சொல்லமாட்டாள். ஏனெனில் அவளைப் புரிந்து கொள்ள முடியாதவர்களால் அவளது பதிலையும் புரிந்து கொள்ள முடியாது, இல்லையா?
சே.. கடைசிலை பைரவிதான் வாழ்க்கைக்கு பெஸ்ட் எண்டு சொல்லிட்டு ஏன் சிந்துபுராணம் படுறேன்.. ? தொண்ணூறு நாளில்லை தொடங்கி சிந்துபைரவி விமர்சனமாஎல்லே போட்டுது.
//பெண்ணியவாதின்னா யாருன்னு வாலிபனே பதில் சொல்லட்டும்.// - ஓணான் 1;
ReplyDelete// என்னை கேட்டால் உண்மையான பெண்ணியவாதிகள் ஆண்களே! ..... இப்ப இந்த வாலிபனையே எடுத்து கொள்ளுங்கள்!! // ஓணான் 2;
(நம்மால முடிஞ்சது): அடப்பாவிகளா, சண்டிக்கட்டு கட்டினது தப்பா ? என்ற வேட்டி தங்காது... இப்பதான் அண்ணரிண்ட(ஜேகே உட்பட) சால்வை எடுத்து வேட்டி கட்டத் தொடங்கி இருக்கிறன்.... எதோ மன்னிச்சு விட்டிடுங்கோ.... Mr.Mool.E.R (திருமூலர் ;)) சொன்ன மாதிரி "பேரறி யாத பெருஞ்சுடர் ஒன்றதின் வேரறி யாமை விளம்புகின் றேனே".....
பெண்ணியத்தை: பெண்மையின் உணர்வு, மீதான அக்கறை, உரிமை, பாதுகாப்பு என்பவற்றை முன்னிறுத்தி வாதிடுவதாக தங்களை அறிவித்துக்கொண்டவர்களை, அல்லது அப்படி கண்டு கொள்ளப் பட்டவர்களை - பெண்ணியவாதிகள் என்று நான் கருதி எழுதினேன் - யப்பா! எப்படி எல்லாம் சமாளிக்கிறாய் வாலிபா;
ஜேகே: //அட அவன் கதைக்கு நானேன் விளக்கம் கொடுக்கிறேன்???// நானே விளக்கம் குடுக்கிறது தான் வலி, அது என்ட பிள்ளை A/L இல அப்பனா pass பண்ணுவான் எண்ட staff room வீராப்பு ஆகிடாது ? still, இந்த எரியுற நெருப்பில எதோ என்னால முடிஞ்சளவு எண்ணை.
//சிந்துவைப் போன்ற பெண்கள் பெரும்பாலும் குழப்பம் நிறைந்தவர்களாகவே ஆண்களால் பார்க்கப்படுகின்றனர்.// - பெண்ணின் அறிவு ஆணை உடனடியாக மிரட்சி கொள்ள வைக்கும் - manufacturing defect ?. I think WE evolve...
//...வாழ்க்கையைக் ஏதோ கொண்டிளுப்பதுக்கு உதவுவாங்க...//என் அறிவு இதை முரண்பட சொல்லுது, பட்டறியாமல் என் சிற்றறிவு கொண்டு இதை இதுக்கு மேல் ஆராயலாமா எண்டு கொஞ்சம் குழப்பமயிருக்கு. பேசமா இன்னொரு பதிவெளுதலாம் எண்டா பயமாயிருக்கு: இவளவு நீளமா ஒருகதை விசாரிக்கப் படுவது.
//பெண்ணியத்தை: பெண்மையின் உணர்வு, மீதான அக்கறை, உரிமை, பாதுகாப்பு என்பவற்றை முன்னிறுத்தி வாதிடுவதாக தங்களை அறிவித்துக்கொண்டவர்களை, அல்லது அப்படி கண்டு கொள்ளப் பட்டவர்களை - பெண்ணியவாதிகள் என்று நான் கருதி எழுதினேன் //
ReplyDelete<< இவையெல்லாம் பொதுவாகவே அடிப்படை மனிதவுரிமை மீறல்களுக்குள் வருகின்றனவே? பிறகு பெண்களுக்கென்று தனியா போராடவேண்டிய அவசியமென்ன? ஆண்களுக்கும் சேர்த்தே போராடுங்களேன்? அவர்களும் மனிதர்கள் தானே. ஒவ்வொருவரின் கோபமும் ஒவ்வொருவிதமாக யாராருக்கெல்லாம் எதிராகத் திரும்புகிறதோ அதைவைத்து அதற்க்கு தனியாகவென்று ஒரு பெயர் வைக்கத் தொடங்கியிருக்கிறோம் என்பதுதான் உண்மை. எல்லாம் இருப்பை நியாயப் படுத்துவதற்க்கான ஒரு முயற்ச்சியாகத்தான் என்னால் பார்க்க முடிகின்றதேயொழிய வேறொன்றுமல்ல.
அதாகப்பட்ட பெண்ணியத்தைப் பற்றி இதில் கொஞ்சம் பிராண்டியிருந்தேன். சரி தவறென்பதை விட ஒரு ஆதங்கம் அவ்வளவே.
http://maranavaakkumoolam.blogspot.com/2010/12/blog-post_13.html
//...வாழ்க்கையைக் ஏதோ கொண்டிளுப்பதுக்கு உதவுவாங்க...//என் அறிவு இதை முரண்பட சொல்லுது, பட்டறியாமல் என் சிற்றறிவு கொண்டு இதை இதுக்கு மேல் ஆராயலாமா எண்டு கொஞ்சம் குழப்பமயிருக்கு.
<< அது ஆண்களையும் பொறுத்ததுதான். இருந்தாலும் பொதுவாகப் பார்த்தால் எனக்கு என்னமோ.. சரி விடுங்க.. திரும்ப சிந்துபைரவி திரைவிமர்சனமாகப் போயிடப் போகுது. :)
//இவையெல்லாம் பொதுவாகவே அடிப்படை மனிதவுரிமை மீறல்களுக்குள் வருகின்றனவே? பிறகு பெண்களுக்கென்று தனியா போராடவேண்டிய அவசியமென்ன? ஆண்களுக்கும் சேர்த்தே போராடுங்களேன்? அவர்களும் மனிதர்கள் தானே. //என்னை பெண்ணியவாதி எண்டு அறிவித்த ஜே.கே இதுக்கு பதில் சொல்லட்டும்.
ReplyDeleteஎன் நிலைப்பாடுகள் (முறையே): ஆம்; தப்பென்ன (தமிழருக்கேண்டு ஏன் போராட வேணும் - உலக சமாதானம் கேப்பமே, moreover, கொல்லங்குடி கருப்பாயிக்கு தேவையான உரிமைக்கும் கோபுரத்து சீமாட்டிக்கு தேவையானதுகளுக்கும்); கட்டாயமா; தானே.
//இருப்பை நியாயப் படுத்துவதற்க்கான ஒரு முயற்ச்சி// - ஐயையோ, இது இன்னொரு மூச்சு முட்டும் மேட்டர்.
உங்கள் பிராண்டல் பற்றி பெரிசா ஒரு முரணிருக்கே, பெரிசா அது பற்றி பிறகு பேசுகிறேன், (வாத்தி, வாற கிழமை லாப் மீட்டிங் கான்சல் பண்ணினா எழுத முயலுறன்),நிற்க என்னைப்போல் வாலிபருக்கு ஏதும் எழுதியது இருக்கே?
வாதங்களில் பெரும்பான்மை இரண்டு வகை, ஒன்று இதுதான் சரி: தத்துவ-நிலை மற்றது இதுதான் முடிகிறது: - வாழ்வு-நிலை. ஸப்பா... கண்ணைக் கட்டுது...
//உலக சமாதானம் கேப்பமே// சரியா பாண்டை பிடிச்சிட்டீங்க.
ReplyDeleteகொலங்குடி கருப்பாயிக்கும் கோபுரத்துச் சீமாட்டியினதும் தேவைகள் எதுவென்பதைப் பொறுத்தது. அடிமைப் படுத்தப்பட்டது கருப்பாயிஎனின் அவளுடன் சேர்ந்து சீமாட்டி போராடுவதில் ஒன்றும் தப்பில்லையே? எல்லோருக்கும் பொதுவென்றால் சமுதாயமாற்றம், விழிப்புணர்வு.. என பட்டியல் நீளும் தான். ஆனால் அடிமைப் படுத்தியதே சீமாட்டிஎனின்?
//வாதங்களில் பெரும்பான்மை இரண்டு வகை, ஒன்று இதுதான் சரி: தத்துவ-நிலை மற்றது இதுதான் முடிகிறது: - வாழ்வு-நிலை. ஸப்பா... கண்ணைக் கட்டுது...//
இதில் தத்துவ நிலை என்று எதைச் சொனீர்கள் என்று தெரியவில்லை. ஆனால் வாதங்களற்ற நிலை என்றும் ஒன்றிருக்கிறதே? அதை வாழ்வு நிலையிலிருந்து பிரித்துப் பார்க்கப் பழகிவிட்டோம் இல்லையா?
"உஸ் இது கடவுள்கள் துயிலும் தேசம் " எண்ட பெயரை கேட்டவுடன் எனக்கு விளங்கேல்லை , இது கடவுள்கள் துயிலும் தேசம் எண்டா சொர்க்கமோ? இல்லை, இந்த ஊரில சாமி எல்லாம் கண்ணை மூடிக்கொண்டு இருக்கு எண்டு அர்த்தமோ?. உஷ் எண்டு எதுக்கு சொல்லோணும் ? எழுப்பிடாதேங்கோ, இங்கை ஆழத்துயில் கொள்ளும் எல்லாரும் கடவுள்கள் என்டர்த்தமோ ? சுடலை பற்றி இருக்குமோ ? துயிலும் இல்லம் ? குழந்தைகள் காப்பகம் ? அவன் இப்படித்தான் பல மாதிரி கேள்வி கேப்பான் - ஏன் இப்படி குழம்போணும் எண்டு எனக்கு விளங்கிறேல்லை. "
ReplyDeleteJK : "எனக்கு என்ன ஒரு சந்தேகம் என்றால். ஒருவனை நன்றாக புரிந்து கொள்ளமுடியாத பெண் எப்படி அந்த உணர்வை இத்தனை தெளிவாக தெரியப்படுத்துகிறாள்?"
ஏதாவது கதை ஒன்றை வாசித்து விட்டு ஏ.ஏ.வா வெளிப்படையாக அடிக்கும் கொட்டம்
"வாசிச்சதில் ரசிச்சதை மற்றவர்களுக்கு விதவிதமாய் -வற்புறுத்தலாய் - பகிர்வது அவன் குணம்."
"கருவேப்பிலைக்கும் காங்கேசன் வீதிக்கும் என்ன லிங்க் எண்டு தெரியேல்லை கேக்க வேணும் , அதுக்கொரு கதை வச்சிருப்பான்." என்ற வரிகளின் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இப்படிப்பட்ட ஒருவனை விரும்பி கை பிடித்து ஒரு 3 மாதம் கூட இருந்தாலே அவன் விடயங்களை அணுகும் முறை, ஆராயும் முறை, வெளிப்படுத்தும் முறை, கழுத்தை அறுக்கும் முறை எல்லாம் இது இது இப்பிடி தான் இருக்கும் என்று ஒரு அளவுக்கு பழகி விடும். எல்லாம் குடும்பத்துக்கு உதவாத குப்பைகள் எண்டும் புரிந்து விடும் :). எனவே அந்த பெண் மூலம் அவனின் எண்ண ஓட்டங்கள் வெளிப்படுத்தப்பட்டிருப்பது சரியாகவே இருக்கின்றது.
ஆனால் அந்த ஆராய்வின் பின்னால் அவனுக்கு இருக்கும் மன நிறைவு, அங்கலாய்ப்பு அவ்வாறு ஆராய்ந்து எதையாவது கண்டு பிடித்து, தான் மேதாவி என்று மார்தட்டிக்கொள்வதில் வரும் பெருமை, இல்லாததையும் பொல்லாததையும் நினைத்து, பின் அது அப்பிடி இல்லை என்று தெரிந்து குட்டிக்கொள்வதில் வரும் தெளிவு ---- இவை அனைத்தும் தான் அவளுக்கு என்றும் புதிர்கதையாகவே இருக்கும். அந்த உணர்வுகள் அவனுக்கே வெளிச்சம்.
"அவன் இப்படித்தான் பல மாதிரி கேள்வி கேப்பான் - ஏன் இப்படி குழம்போணும் எண்டு எனக்கு விளங்கிறேல்லை."
அதனால் கதாசிரியர் கதைக்குள் எட்டிப்பார்த்த உணர்வு எனக்கு ஏற்படவில்லை ..... JK சொன்னவுடன், அண்ணா ஏ. ஏ. வா. ஐ விட அனுபவம் பெற்றிருப்பார் எண்டு "பாத்திரத்துக்குள் கொஞ்சம் ஓவராத்தான் எட்டிப் பார்த்திருக்குறன்" எண்டு ஒப்புக்கொண்டாகிவிட்டது போலும். இந்த விடயத்தில் உங்கள் ரெண்டு பேருக்கும் நான் அக்கா எண்டதால நான் சொல்லுறத நம்புங்கோ :). நேரம் வரேக்க மிச்சம் விளங்கும்.
//ஏதாவது கதை ஒன்றை வாசித்து விட்டு ஏ.ஏ.வா வெளிப்படையாக அடிக்கும் கொட்டம்
ReplyDelete"வாசிச்சதில் ரசிச்சதை மற்றவர்களுக்கு விதவிதமாய் -வற்புறுத்தலாய் - பகிர்வது அவன் குணம்."
"கருவேப்பிலைக்கும் காங்கேசன் வீதிக்கும் என்ன லிங்க் எண்டு தெரியேல்லை கேக்க வேணும் , அதுக்கொரு கதை வச்சிருப்பான்." என்ற வரிகளின் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. //
டேய் வாலிபா! சொந்தமா எழுதின கதையா, இல்ல பிரவீணாகிட்ட இருந்து சுட்டதா? இந்த ஆங்கிள் நமக்கு தோணவே இல்லையே!
பிரவீணா, எழுத்தாளர் எட்டிப்பார்க்கிறார் என்ற விமர்சனத்தை வாபஸ் வாங்க வைத்துவிட்டீர்கள். இப்போது அந்த கோணம் சரியாக புலப்படுகிறது.
வாலிபா பாஸ், விமர்சனம் கொஞ்சம் சறுக்கிப்போச்சு ! அடுத்த பஸ்ஸில் பார்த்துக்கலாம்!
ஊருக்கு போயிட்டு திரும்பி வாறதுக்குள்ள இவ்வளவு நடந்திருக்கா ? பிரவீணா ஆழ்ந்து வாசித்திருக்கிறார் (வரி வரியாய் எடுத்து விடுறதில தெரியுது) சந்தோசம் அக்கா.
ReplyDeleteஎன் கோணத்தை ஜே.கேக்கும் ஊருக்கும் விளக்கியதில் சந்தோசம். நான் ஏலவே சொன்னமாதிரி அவள் சிந்துவாயிருந்து மாறியிருக்கலாம் - பைரவியை இவன் சிந்து எண்டு முதலில் நினைத்திருக்கலாம் - அவளுக்கு இலக்கியத்தை ஆராய முடியலாம் - அதில் விருப்போ அல்லது உடன்பாடோ இல்லாதிருக்கலாம். இது பல அவள்கள்.
//ஏதாவது கதை ஒன்றை வாசித்து விட்டு ஏ.ஏ.வா வெளிப்படையாக அடிக்கும் கொட்டம்// - இதில ஏதும் உள்குத்து இருக்குமோ ? நிற்க கதையின் ஆசிரியரை கதையின் நாயகன் எண்டு வீணாவும் வீணா சறுக்கியதில் கொஞ்சம் வருத்தமே...
ஜேகே இந்தக்கதை வேறுபட்ட தளங்களில் ஏற்படுத்திய சலனங்களுக்கும், ரீச்சுக்கும் நீங்கள் எழுதிய விமர்சனமே காரணம்: நன்றி.
//...எல்லாம் குடும்பத்துக்கு உதவாத குப்பைகள் எண்டும் புரிந்து விடும்//
//இந்த விடயத்தில் உங்கள் ரெண்டு பேருக்கும் நான் அக்கா எண்டதால நான் சொல்லுறத நம்புங்கோ//
:ஜே.கே safe ஆ இது பற்றி react பண்ணாம தப்பிட்டுது...
//:ஜே.கே safe ஆ இது பற்றி react பண்ணாம தப்பிட்டுது...
ReplyDeleteசாரி சிக்னல் கிடைக்கேல்ல!!
வீணாவை வீணா..... என்று விமர்சித்ததை கண்டிக்கிறேன்!
// நிற்க கதையின் ஆசிரியரை கதையின் நாயகன் எண்டு வீணாவும் வீணா சறுக்கியதில் கொஞ்சம் வருத்தமே.
ReplyDeleteகதாசிரியர் ஏலவே நன்கு எனக்கு அறிமுகம் ஆனவர் என்பதால் நான் கதையின் நாயகனை கதாசிரியரா நினைக்கவே இல்லை. ஒரு வேளை சில வருடங்களுக்கு பிறகு அவரின் நிலை இப்படி ஆகாலாம் எண்டு நினைச்சது உங்களுக்கு விளங்கீட்டுது போல ;)
//ஏதாவது கதை ஒன்றை வாசித்து விட்டு ஏ.ஏ.வா வெளிப்படையாக அடிக்கும் கொட்டம்// - இதில ஏதும் உள்குத்து இருக்குமோ ?
குத்து வீட்டில இருக்கிற ஆக்களுக்காக இருக்கலாம், கொஞ்சம் தள்ளி இருக்கிற suburbல இருக்கிற ஆக்களுக்காக இருக்கலாம், இல்ல கொஞ்சம் தள்ளி இன்னொரு கண்டத்தில இருக்கிற ஆக்களுக்காகவும் இருக்கலாம்... but கொட்டத்தால வாற blood, same blood :)
Btw Uthaya anna, Very nice work and keep writing! I know your PhD will continue giving you motivation and full support to do such things ;)
// கொஞ்சம் தள்ளி இருக்கிற suburbல இருக்கிற ஆக்களுக்காக இருக்கலாம்
ReplyDeleteதொப்பி கொஞ்சம் சைஸ் காணாது மேடம்! வேற வாங்கி தர்றீங்களா?
//Btw Uthaya anna, Very nice work and keep writing! I know your PhD will continue giving you motivation and full support to do such things ;)//
அசிங்கப்பட்டுடானே அலெர்ட் ஆறுமுகம்!!!
//தொப்பி கொஞ்சம் சைஸ் காணாது மேடம்! வேற வாங்கி தர்றீங்களா?
ReplyDeleteWhat an irony? இந்த பதிவே "படிச்சதென்ன? பிடிச்சதென்ன?"ல தான் இடப்பட்டிருக்குது. தொப்பி காணாதத பற்றி நீங்க சொல்லக்கூடாது பாஸ்! இத படிக்கிற நாங்க சொல்லோணும், இந்த ஊர் சொல்லோணும், இந்த பாவப்பட்ட உலகம் சொல்லோணும்!!!
நிற்க, எனக்கு கொஞ்சம் தள்ளி இன்னும் பல suburbs இருக்கு :)
அசிங்கப்பட்டுடானே அலெர்ட் ஆறுமுகம்!!! phd இல இதெல்லாம் சாதாரணமப்பா....
ReplyDelete//I know your PhD will continue giving you motivation and full support to do such things...//
it is true that writing 'such things' is my 'only' stress relief while following a phd program 'single handedly' (:))
கேதா, அடிச்ச கைப்பிளைக்கே இவ்வளவு காயம் எண்டா அடிவேண்டின கட்டதுரை.... அவ்வ்வ்......
/நிற்க, எனக்கு கொஞ்சம் தள்ளி இன்னும் பல suburbs இருக்கு :)//
ReplyDeleteதங்கச்சி .. ouch .. உள்குத்து புரியுது!
அவன் பதிவுக்கு நான் விமர்சனம் போட்டு, இப்ப நம்மள வாட்டுறாங்க!