வியாழமாற்றம் (01-12-2011) : கமலை ஆச்சரியமாக பார்க்கிறேன்

Dec 1, 2011

கமல்

kamal-hassan-young-photoஅண்மையில் நடந்த FICCI நிகழ்வில் கமலின் spontaneous ஆளுமையை மீண்டும் ஒரு முறை ரசித்தேன். நிருபர் ஒருவர் “கமல், ரஜனி, அமிதாப் போன்றவர்கள் ஓய்வு எடுத்துகொள்ளலாமே” என்று கேட்க அதற்கு கமல் சொன்ன பதில்,

“ஏன்...நீங்கள் எதற்காக வருகிறீர்கள்.. வயதாகிவிட்டதே என்று நீங்களும் ஓய்வு எடுத்துக் கொள்ளலாமே!”
இது வெறும் கோபத்தில் சொன்ன பதில் இல்லை. கேள்வி கேட்ட நிருபர் நிச்சயமாக வயதில்(!) இளைஞர் ஆக தான் இருக்கவேண்டும். ஆனால் வயதுக்கும் வயோதிபத்துக்கும் சம்பந்தமில்லை, நீ உன்னளவில் வயோதிபனாகி விட்டாய், ஆனால் நான் இன்னும் இளைஞனே என்பது தான் அந்த கமலின் பதில். சச்சினை ஓய்வு பெற சொல்லும் கோஷ்டியும் இதே கோஷ்டி தான். என்னை பொறுத்தவரையில் யாரும் ஓய்வு பெற வேண்டியதில்லை. சச்சின் நன்றாக  விளையாடவில்லையா? தெரிவாளர்கள் தான் அவரை நீக்க வேண்டும்.பெடரர் ஓய்வு பெறவேண்டும் என்று நாம் ஏன் சொல்லவேண்டும்? பிடிக்கவில்லை என்றால் பார்க்காமல் இருக்கவேண்டியது தானே? திறமை குறைந்தால் அவர்களாகவே ஒதுக்கப்பட்டு விடுவார்கள். மரணப்படுக்கையிலும் Steve Jobs அடுத்ததாக Apple TV யை பற்றி சிந்தித்துக்கொண்டே இருந்தார். இளைஞர்களுக்கு வழிவிடவேண்டுமாம். MSV வழிவிட்டா ராஜா வந்தார்? ராஜா வழிவிட்டா ரகுமான் வந்தார்? வருபவர்கள் தூணை கிழித்துக்கொண்டேனும் வருவார்கள்! யாரையும் யாரும் தடுக்கவேண்டாம்!
கமலை ஆச்சரியமாக பார்க்கிறேன்.  இந்த மாதிரி பதிலை உட்கார்ந்து எழுதும்போது யோசிக்கலாம். ஆனால் மேடையில் முகத்துக்கு நேரே கேட்கும்போது உடனே சொல்வது என்பது இலகுவான காரியம் இல்லை. கமலின் பேட்டிகளும் மேடைப்பெச்சுகளும் தொகுக்கப்படவேண்டும். தமிழ் சினிமாவில் intellectual ஆக பேச தெரிந்த மிகச்சில கலைஞர்களில் கமல் ஒரு முன்னோடி.
indexமன்மதகுஞ்சு : மச்சி விஸ்வரூபம் படத்துக்கு “தியா” தான் ஹீரோயினாம். நம்ம சூரியா ஜோதிகாவோட பொண்ணு தான். படம் முடியிறதுக்கு  இன்னும் பதினஞ்சு வருஷம் ஆகும், அப்ப அந்த பொண்ணு வளர்ந்திடும். இப்ப சூரியா கமலோட பொண்ணு கூட நடிக்க இல்லையா? நீயும் அப்ப ஸ்ருதிய விட்டிட்டு அங்க லொள்ளு பண்ண ஆரம்பிச்சுடுவ!!!நமக்கு என்னிக்கு வயசாச்சு?

 

அரசியல்

1135043_370பர்மாவில் நடைபெறும் அரசியல் மாற்றங்கள் கொஞ்சம் ஆர்வத்தை கிளருகின்றன. கிலாரி கிளின்டன் அங்கே விஜயம் செய்ய இருக்கிறார். இராணுவ ஆட்சியாளர்கள் கொஞ்சமே விட்டுகொடுப்பது போல தம்மை காட்டி கொள்கிறார்கள். ஆங் சாங் சூகி அடுத்த தேர்தலில் தானும் நிற்க போவதாக அறிவித்திருக்கிறார். எனக்கு அவரில் எப்போதுமே ஒரு மரியாதை.புத்திசாலிப்பெண்.அவசரப்படுவதில்லை,அதிகம்  உணர்ச்சிவசப்படுவதில்லை. இத்தனை வருடங்களாக காவலில் வைத்திருந்த ஆட்சியாளர்களுடனேயே கொஞ்சம் கொஞ்சமாக கரையான் புற்று போல பேசி பேசி வளர்ந்து வருகிறார். அதே நேரம் வெளிநாடுகளுடனான உறவுகளை அழகாக பேணி பர்மா ஆட்சியாளர்களை சுற்றி வியூகம் வகுக்கிறார்.  இது அரைக்கிணறு தான். ஆட்சியாளர்கள் தமக்கு ஆபத்து என்று வரும் போது மீண்டும் இவரை உள்ளே போடலாம். ஆனாலும் இந்த பெண் அவசரப்படமாட்டார்.  எகிப்து லிபியாவில் நடந்த களேபரம் இங்கே நடக்காமலேயே பர்மிய அமைதி புரட்சி ஒருநாள் ஏற்படும். இங்கே சாவுகள் அதிகம் இருக்காது. ஆங் சாங் சூகியிடம் இருந்து நாம் படிக்க நிறைய இருக்கிறது. நுட்பமான அரசியல் தூரநோக்கு உள்ள பெண். ஒரு சின்ன நூலிழை கிடைத்தாலும் அதில் தொங்கி கரை சேர பார்க்கிறார். இதற்கு ஒரு அசாத்திய பொறுமையும் அவர் சார்ந்தவர்களின் நம்பிக்கையும் வேண்டும்.  அவர் சாதிப்பார் என்றே தோன்றுகிறது. அவரை அதிகம் ஏமாற்றவும் முடியாது. அவர் கட்சி ஆளான Win Tin சொல்கிறார்,
"Changes happen, but actually they happen on paper," Win Tin said. "(There have been) announcements to the media and (talks with) Aung San Suu Kyi and so on. But at the grass roots level, there is no change at all. People suffer a lot ... people suffer human rights violations."
தங்கள் முன் இருக்கும் சவால் என்ன என்றும், அதை எப்படி புத்திசாலித்தனமாக முகம் கொடுக்கவேண்டும் என்றும் இவர்களுக்கு தெரிகிறது. எங்கே போய் முடிகிறது என்று பார்ப்போம்.
18vadi2-cut-out.jpg.crop_displayமன்மதகுஞ்சு : நீ என்ன சொல்ல வாறாய் எண்டு தெரியுது, ஆனா வரலாறு தெரியாம பேசற நீயி ..பர்மா, எகிப்து, லிபியா புரட்சிகாரங்க எல்லாம்  பெரும்பான்மை இனத்து காரங்க, சர்வாதிகார ஆட்சியை மாற்ற போராடினாங்க, ஆனா பெரும்பான்மை சிறுபான்மைய ஒடுக்கிற தேசங்களில இந்த பருப்பு வேகாது பாஸ் … ரஷ்யால செச்சின்யா எண்டு ஒரு பிரச்சனை இருத்திச்சி .. என்னாச்சு பாஸ்? ஒவ்வொரு பிரச்சனையும் ஒவ்வொரு வகை மச்சி .. அவ அத செய்யறா, இவ இத செய்யறானு இனி சொல்லு .. அப்ப நல்லா வாயில வர்ற மாதிரி நானும் சொல்றேன்!

குட்டியின் பதிவு

குட்டி பற்றி எழுதவேண்டும் என்று நீண்ட நாட்களாய் நினைத்திருந்தேன். ஆனால் நண்பியை பற்றி எழுதுவது முறையாகுமா என்ற எண்ணத்தில் எழுதவில்லை. ஞாயிறு அன்று மனம் கேட்கவில்லை.  இறுதியில் “நிலம் விரல் கிளைந்திட” என்று பதிவை முடிக்கும்போது கண்கள் கலங்கிவிட்டது. அன்றைக்கு நண்பன் பாலமுருகன் எங்கள் வீட்டுக்கு வந்திருந்தான். என் எழுத்து உங்களுக்கு நன்றாக இருந்ததோ இல்லையோ, எனக்கு பல நண்பர்களை தேடித்தந்து கொண்டு இருக்கிறது. பாலா இங்கே மெல்போர்னில் இருக்கிறான், சந்திக்க வீடு தேடி வந்துவிட, மணித்தியாலக்கணக்கில் பொன்னியின் செல்வனையும், செங்கை ஆழியானின் கடல் கோட்டையையும் டிஸ்கஸ் பண்ணிக்கொண்டு இருந்தோம். தான் மீண்டும் பொன்னியின் செல்வன் அத்தனை பாகங்களையும் வாங்கி வைத்திருப்பதாக சொன்னான். எனக்கு பொன்னியின் செல்வன் வாங்கித்தந்தவர்கள் யார் தெரியுமா? குட்டியின் அப்பாவும் அம்மாவும் தான்!! What an irony!  அந்த புத்தகங்கள் கூட தொலைந்து விட்டது. ச்சே நிறையவற்றை தொலைத்துவிட்டேன்.

இந்த வார பாடல்!

இசையமைப்பாளர் பிருந்தன் பற்றி இந்த வார ♫♫ உ.. ஊ.. ம ப த ப மா ♪♪ வில் எழுதியிருந்தேன். அவரை எனக்கு முன்னே பின்னே தெரியாது. அவர் ரசிகன் நான். ஆனால் பதிவு எழுதியது தெரிந்து என்னை தொடர்புகொண்டு நன்றி தெரிவித்தார். அவர் மனைவியும் கூட பாராட்டி நன்றி தெரிவித்தார். பிருந்தன், தன்னுடைய புதிய பாடல்கள் சிலவற்றையும் அனுப்பி இருந்தார். Very down to earth people. நட்புகள் தொடருகின்றன. இன்னும் எழுதவேண்டும்!
அடடா, சொல்லவேயில்லை, அந்த பதிவிலே அதிகம் ஆச்சரியப்படுத்துவது ராஜா தான் என்ற வகையில் எழுதியிருப்பேன். இரவு தூக்கத்தில் ரகுமான் கனவில வந்தார்.
ரகுமான் : ஜேகே என்ன இருந்தாலும் அப்பிடி எழுதியிருக்க கூடாது
ஜேகே : இல்ல ரகுமான், மெர்குரி பூக்கள் பாட்டெல்லாம் குறிப்பிட்டு இருக்கிறன், லூஸ்ல விடுங்க பாஸ்
ரகுமான்: அதை விட surprising ஆன song ஒண்ணு இருக்கு, நீ மறந்துட்ட!
ஜேகே: hint ஒண்ணு தாங்களேன்!
ரகுமான்: SPB, ஜானகி பாடியிருக்காங்க!
ஜேகே : காதலன்?
ரகுமான் : Bingo!!

“அடியே உன் தேகம் இரத்த ஓட்டம் பாய்கிற தங்கம்” -- அந்த வரி வரும் இடம், ரகுமான் பின்னி பெடலெடுத்து இருப்பார்.

vadivelu240310_1மன்மதகுஞ்சு:  மச்சி நாங்க இந்த பாட்டில நக்மா இடுப்பு வர்ற இடம் மட்டும் தான் பார்த்தோம். நீ சொல்ற வரி வர்ற இடமெல்லாம் பாக்க டைம் இல்ல…. அந்தா ஆட்டு ஆட்டும்போது எவண்டா மெலடிய ரசிப்பானுக? அவனாடி நீயி?!!

ஆப்பிள்




நான் அடிக்கடி எங்கள் இனத்தை யூதர்களுடன் ஒப்பிடுவேன். போரில் வாங்கிய அடியின் பின்னரான யூதர்களின் வளர்ச்சி அபரிமிதமானது.உலகம் முழுக்க பரந்து, அந்தந்த சமூகங்களுடன் பின்னி பிணைந்து தம்மை ஒரு புறக்கணிக்கப்பட முடியாத இனமாக மாற்றிவிட்டார்கள். இப்போது இஸ்ரேல் தன் நாட்டில் ஒரு சிலிக்கன் வாலி அமைக்க மில்லியன் கணக்கில் செலவு செய்கிறது. ஆனால் அவர்கள் அடிப்படையில் ஒரு தவறு செய்கிறார்கள். சிலிக்கன் வாலி என்பது பணம் போட்டோ, கட்டடங்கள் எழுப்பியோ வந்த நகரம் இல்லை.  அது ஒரு social epidemic. சின்னது சின்னதாய் சேர்ந்து சேர்ந்து வளர்வது தெரியாமல் வளர்ந்து இன்றைக்கு இப்படி நிற்கிறது. முக்கிய சிலிக்கான் புரட்சிகள் அந்த நகரத்து வீடுகளின் கொல்லைபுறங்களில் தான் உருவாகியது. சிறுவர்களை, இளைஞர்களை, அவர்கள் சிந்தனைகளை அவர்கள் வழியிலேயே சிந்திக்கவிடவேண்டும். அவர்கள் தேவை என்று திரும்பும்போது தோள் கொடுக்கவேண்டும்.  இந்த புரட்சியை மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களால் செய்ய முடியாது. இளைஞர்கள் தான் அதை ஏற்படுத்தவேண்டும்.  Hewlett, Packard, Steve Jobs, Bill Gates, Mark Zuckerberg, எல்லோரும் புதிய சிந்தனைகளுடன் இந்த துறைக்கு வந்த இளைஞர்களே!

Are you getting it? Are you getting it? Are you getting it?

யாழ்ப்பாணத்தில் அந்த இளைஞர்களை நாம் தேடப்போகிறோம். இவர்கள் வரிசையில் ஒரு யாழ்ப்பாணத்து இளைஞனோ இளைஞியோ வரப்போகிறார். வர வைக்கப்போகிறோம். எங்கள் நோக்கம் இன்னொரு ஆப்பிள் நிறுவனத்தை உருவாக்குவதில்லை. இன்னொரு மைக்ரோசாப்ட் நிறுவனத்தை உருவாக்குவதில்லை. நாங்கள் இன்னொரு சிலிக்கன் வாலியை யாழ்ப்பாணத்தில் உருவாக்க போகிறோம். என்ன சந்தேகமா? நாளை என்னுடைய பதிவை எதிர்பாருங்கள்!!!
Lets show’em why 2012 won’t be like 2012!!

vadivelu-stills-1மன்மதகுஞ்சு:  மச்சி, இந்த “Are you getting it” என்ற வசனம் ரொம்ப பேமஸ் ஆச்சே! ஆ .. இது ஸ்டீவ் ஜாப்ஸ் “ஐபோன்” அறிமுகப்படுத்தும் போது சொன்னதில்ல? சூப்பர் மச்சி ..  Yarl IT Hub வெற்றி பெற வாழ்த்துக்கள்.  நானும் விஜய் அணில் மாதிரி உதவலாமா  தல?

ஹாட் நியூஸ்

ஜாக்கி சேகர் நேற்று இந்த படத்தை facebook இல் போட்டதில் இருந்து கடுப்புல BP ஏறிப்போச்சு. ஸ்ருதிப்பொண்ணுக்கு ஏன் தான் இப்படி புத்தி போகுதோ!!!… பொண்ணே, அப்பிடியே வலையுலகம் தட்டிபாரு. ஜேகேனு ஒருத்தன் எழுதிறாப்ல .. ஸ்மார்டா இருப்பானு .. இந்த தனுஷ் பயல்லாம் வாணாம்! அசிங்கம்!
கண்ணே கண்ணே காதல் செய்தாய்
காதல் என்னும் பூவை நெய்தாய்
நண்பன் அந்த பூவை கொய்தால்
ஓ நெஞ்சே நெஞ்சே நீயென் செய்வாய்

thalainagaram_150406_16 மன்மதகுஞ்சு: அட நாதாறி பயலே, ஒன்ன பாக்கிறதுக்கு , பேசாம பொறந்த உடனேயே ஸ்ருதிக்கு கள்ளிப்பால் கொடுத்து கொன்னு இருக்கலாம்!!!!  என்ன சின்ன புள்ளத்தனமா பேச்சு!

sruthy

சூர்யா: வடை போச்சே!

Contact Form