வியாழமாற்றம் (08-12-2011) : அனிருத்

Dec 8, 2011

ஆப்கானிஸ்தான்

 

kite_runnerகாபுலில் மீண்டும் தற்கொலை தாக்குதல். வேறு மாநிலங்களிலும் தாக்குதல்கள். பாகிஸ்தான் border இல் அமெரிக்கா குண்டு வீசியதில் பாகிஸ்தான் படைவீரர்களும் பலி. அந்த பிராந்தியத்தில் அமைதி என்பது சாத்தியமே இல்லை. மூன்று புத்தகங்கள் வாசித்து விட்டேன்.
“Island Of Blood”, “Kite Runner” மற்றும் “A Thousand Splendid Suns”. மூன்று புத்தகங்களும் சொல்ல வரும் ஒரே விஷயம், அமைதி என்பது அங்கு குதிரைகொம்பு. எத்தனை குழுக்கள் ஆப்கானில் இருக்கிறது, யார் யாருடன் கூட்டு என்பதெல்லாம் அந்த குழுக்களுக்கே தெரியாது.அட, தமக்கு என்னதான் வேண்டும் என்பது கூட அவர்களுக்கு தெரியாது. ஆப்கானின் ஆயுதப்போராட்டம் இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னரான பனிப்போர் காலத்தில் உச்சம் பெற்றது. NATO மற்றும் Warsaw அணிகள் விளையாடுவதற்கு அப்போது இரண்டு விளையாட்டு மைதானங்கள் இருந்தன. ஒன்று யோகோஸ்லாவியா மற்றயது ஆப்கானிஸ்தான். முன்னையது சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்கு பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக உச்சம் பெற்று ஓய்ந்து விட்டது. ஆப்கானிஸ்தான் பிரச்சனை, பராமரிப்பு இல்லாத மைதானத்தில் விளையாடும் சிறுவர்கள் விளையாட்டு போல் ஆகிவிட்டது. பிரச்சனை தீராமல் இருப்பதற்கான அடிப்படை காரணம் என்று நான் நினைப்பது, ஆப்கானிஸ்தானின் கடந்த இரண்டு தலைமுறைகள் நிஜமான ஆப்கானிஸ்தானை நேரில் காணவேயில்லை. அவர்கள் பிறந்தது வளர்ந்தது எல்லாமே சண்டை சச்சரவு கொண்ட ஒரு நாட்டில் தான்.  சண்டை இல்லாத ஒரு சமூகம் எப்படி இருக்கும் என்பதே அவர்களுக்கு மறந்து விட்டது. கடவுள்களை காணாத சமூகமாக நாம் மாறவில்லையா? அது போல தான். சிலிக்கன் வாலி போல் ஒரு பிராந்தியம் இருந்தால் Steve Jobs உம் Bill Gates உம் கிடைப்பார்கள். சண்டை பிடிக்கும் பிராந்தியம் யாரை உருவாக்கும் என்பதை தான் நாம் ஏகத்துக்கு பார்த்து விட்டோமே. நாம் என்ன செய்கிறோம் என்பது எமக்கு மட்டும் தாக்கத்தை விளைவிக்கும் ஒன்றல்ல. இரண்டு தலைமுறைக்கு பின்னாலும் அதன் தாக்கம் நீடிக்கும்.  இதை எழுதும் போது அக்காவின் குழந்தை தவழ்ந்து வந்து காலடியை நோண்டுகிறது. எழும்பும்போது கவனமாக காலை எடுத்து வைக்கவேண்டும்!

Goundamaniமன்மதகுஞ்சு :  ஐயோ அம்மா, இவரு ஒலக அரசியல் பேசறாரு .. கேளுங்கோ கேளுங்கோ .. அடே, ஆட்டு மண்டை தலையா! நீ மூணு பொத்தகம், வாசிச்சா என்ன, முப்பது பொத்தகம் வாசிச்சா என்ன? அட நீ எல்லாம் பொத்தகம் வாசிக்கலைன்னு எவன்டா அழுதான்? வந்தமா மாட்டர் சொன்னமானு இருக்கணும்! நெக்ஸ்டு!

அனிருத்

அனிருத் இசையமைத்த “கொலைவெறி” பாடல் பற்றி BBC, Times போன்ற இதழ்கள் எல்லாம் சிலாகித்து எழுதிவிட்டன. Youtube கூட Youtube Gold விருது வழங்கி இருக்கிறது.  அலுவலகத்தில் வடஇந்தியர்கள் சிலர் தனுஷை பற்றி விசாரித்தார்கள். கடுப்பாகிவிட்டது. ஹிந்தி கவிஞர் ஜாவத் அக்தரும் இந்த பாடலின் வெற்றியை விமர்சிக்கிறார். இதே ஜாவத் அக்தர் தன்னுடைய “ஜெய்கோ” பாடலுக்கு ஒஸ்கார் கிடைக்கும்போது வாய் திறக்கவில்லை. விருதுகளும் அங்கீகாரங்களும் பாராட்டுகளும் தகுதியானவர்களுக்கு தான் கிடைக்கவேண்டும் என்றால், இன்றைக்கு இளையராஜா மலபார் கோல்ட் விளம்பரத்தில் எல்லாம் தோன்றவேண்டி இருந்திருக்காது! கொலைவெறி ஜாலியாக இருக்கிறதா? கேட்டமா போனமான்னு இருக்கணும். இந்த பாடலில் கூட பாருங்கள், இசையமைப்பாளர் பெயர் எத்தனை ரசிகர்களுக்கு தெரியுமோ தெரியாது. அந்த பாடலின் வெற்றியே அந்த ஜாலியான மெட்டு தான். ஆளாளுக்கு தம்முடைய வரிகளை போட்டாலும் கூட பாடல் கேட்கும்போது நன்றாக இருக்கிறது என்றால் ஏன்? மெட்டு தான். அந்த காலத்தில் தாத்தா சொல்லும், “பூமாலையில் ஓர் மல்லிகை” பாட்ட என்னமா TMS பாடறாரு! இசைன்னா அது டிஎம்எஸ் தாண்டா! இந்த அழகிரி கூட விழா எடுத்தது கூட TMS க்கு தானே. MSV ய சீண்ட கூட இல்லை…அனிருத் பாஸ் .. லூஸ்ல விட்டிடு!

மன்மதகுஞ்சு : வாயாலேயே வயத்தால போற எனக்கே ஆப்பா? இப்ப பாரு என் கொலை வெறிய!


Yarl IT Hub

Yarl IT Hub பற்றிய பதிவு பலரை சென்றடைந்து இருக்கிறது. ஒரு வாரம் ஆக வில்லை, ஆனால் ஹிட்ஸ் ஆயிரத்தையும் தாண்டி அலை மோதுகிறது. என் ப்ளாக்ல எல்லாம் ஐநூறு ஹிட்ஸ் ஒரு பதிவுக்கு வந்தாலே ஆத்தாவுக்கு ஆடு வெட்டும் ஆள் நான். இத்தனை ஆதரவு வந்தது ஏன் என்றால், எங்கள் எல்லோருக்கும் இந்த ஏக்கம் இருந்தே இருக்கிறது. யார் மணிகட்டுவது என்ற பிரச்சனை தான். ரொம்ப நாளாவே சின்னதாகவேனும் ஏதும் தொடங்கலாம் என்று யோசித்துக்கொண்டு இருக்க, ஒரு நாள் திடீரென்று சயந்தன் call பண்ணி “என்ன ஜேகே start பண்ணுவமா?” என்று நான்கைந்து மாதங்களுக்கு முன்னர் கேட்க, ஆரம்பித்து விட்டோம். பின்னர் பார்த்தால், எம்மை போல் பலர் இப்படி சிந்தித்துக்கொண்டு இருந்திருக்கிறார்கள். நாம் தனியாக இல்லை என்பது தைரியம் கொடுக்கிறது. ஆனால் இம்மாதிரி விஷயங்களில் commitment மிக அவசியம். அதனால் கொஞ்சம் கவனமாக தான் செயல்படுகிறோம். எடுத்த எடுப்பிலேயே six அடிக்க நாங்கள் ஒன்றும் sehwag கிடையாது இல்லையா?  Dravid போல் மெதுவாகவும் பலமாகவும் தான் ஆட வேண்டி இருக்கிறது. அரசியல் வரவிடாமல் பார்ப்பது என்பது மிகப்பெரிய சவால். ஆரம்பத்தில் இரண்டு முக்கிய செயல்திட்டங்கள் இருக்கின்றன. இன்னும் proposals எல்லாம் draft version இலேயே இருப்பதால் இன்னமும் பிறரிடம் உதவி கேட்க தொடங்கவில்லை. என்ன செய்யபோகிறோம் என்று சொல்லாமல் கேட்கமுடியாது இல்லையா. There must be an integrity and reputation. வடத்தை தயாராக வைத்திருங்கள், சீக்கிரமே இழுக்க ஆரம்பிப்போம்.

Yarl IT Hub got the guts to stand alone and look ridiculas initially! Who is going to be the first follower? Its not about the leader, its about us. Lets dance and rock!


10xsxew (1)மன்மதகுஞ்சு : அட டான்ஸ் ப்ரோக்ராமா அண்ணே? சொல்லவேயில்ல! நானும் எதோ ஐடி, கம்ப்யூட்டர் எண்டு கம்முனு இருந்துட்டன், சொப்பனசுந்தரி டான்ஸ் எல்லாம் இருக்கா அண்ணே?

இந்த வார நெகிழ்ச்சி

எழுத்தாளரும் நண்பருமான உதயா வின் நண்பரான கேதா என்பவர் என்னை தொடர்புகொண்டு சந்திக்கவேண்டும் என்றார். எனக்கு முன் பின் அறிமுகம் இல்லை, முதலில் தயங்கினேன். மீண்டும் மீண்டும் தொடர்புகொள்ள, திங்கள் அன்று சந்தித்தோம். இரண்டரை மணி நேரம், ஆம், இரண்டரை மணி நேரம் பேசினோம் என்றால் நம்புவீர்களா? ஓரளவுக்கு எங்கள் அரசியலை ஒரே கண்களால் பார்த்து இருக்கிறோம், என்ன ஒன்று, என் கண்ணுக்கு நான்கு வயசு அதிகம் என்பதால் அவர் அளவுக்கு ஆவேசம் கொள்வதில்லை! முன்னமேயே சொன்ன மாதிரி, ஒவ்வொரு வாரமும் ஒரு முக்கிய நண்பரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. அதுவும் மேம்போக்காக நன்றாக எழுதுகிறீர்கள் என்று சொல்லும் நண்பர்கள் கிடையாது. கிழித்து தொங்கபோடுவார்கள்! அவர்கள் பார்த்த ஒன்றை, அவர்கள் பதியவேண்டும் என்று நினைத்ததை நான் பதிகிறேன் போல, குத்தினால் எல்லோருக்கும் தானே வலிக்கிறது. கிச்சு கிச்சு மூட்டினால் சிரிக்காதவர் யாரு? நான் அதை எழுதுகிறேன். வலியையும் சிரிப்பையும் என்னை போலவே அனுபவித்தவர்கள் இருக்கும் வரை எழுதலாம். நண்பர்களையும் அடையலாம்.
ஒரு surprising package என்னவென்றால், கேதாவின் மனைவி என்னிடம் ஒரு காலத்தில் Java படித்தவர். இந்த விஷயம் பேசும்போது தான் தெரியவந்தது. அன்று இரவு அவரிடம் இருந்து ஒரு email வந்தது.
Hi Anna,
today only I was introduced to your blog! It's so wonderful. I couldn't resist myself from reading all of them continuously! Amazing writing! I can feel the pain and the memories of each and every incidents! Please keep on writing. In future you may like to consider publishing a book on this. Without exaggeration and any bias, it reflects the livelihoods of our people! Though I was in Colombo through out all the struggle period, I can somehow relate myself with all the stories. We were brought up in a way to believe that our roots are still in Yarl! The stories also reflect how the thinking process, believes, inspirations and targets evolved with time. Hats off!

T-Rajendaract_01மன்மதகுஞ்சு: டேய் சோமாறி தலையா, இதுக்கு கலைஞரு கெட்டாரு போ! விட்டா நீயே ஸ்பொன்சர் பண்ணி பாராட்டு விழா வச்சுடுவ போல! ஆளே இல்லாத கடையில் யாருக்கு டீ ஆத்தற தம்பி? என்னா டக்காலாடி செய்தாலும் ஹிட்டு ஏறாது மச்சி!

கெரோசின்

இந்த documentary யை அறிமுகப்படுத்தியது அதே நண்பர் கேதாவே தான். இவரும் சில நண்பர்களும் சேர்ந்து இப்படியான பதிவுகளை செய்கின்றனர். இதில் என்னை ஆச்சரியப்படுத்திய விஷயம் இந்த வீடியோவில் இருக்கும் “பாலுமகேந்திராத்தனம்”, இயற்கை ஒலிகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. கமரா கோணங்கள் சிலிர்க்க வைக்கிறது. காட்டியதை விட சில விஷயங்களை காட்டாமல் தவிர்க்கிறார்களே, அதுதான் அந்த கமரா கலைஞரின் வெற்றி. வெறுமனே முழுமையான காரை காட்டுவதை முற்றிலும் தவிர்க்கிறார். பேட்டிகள் கூட நேர்த்தியாக எடிட் செய்யப்பட்டு இருக்கிறது. 

Kerosene from Kannan Arunasalam on Vimeo.
இதை பார்த்ததும், உடனடியாக சாத்தியப்படக்கூடிய ஒரு குறும்பட script எழுத ஆசை வந்து விட்டது. கேதாவும் சுகிந்தன் அண்ணாவும் பக்கத்தில் இருக்கிறார்கள். ஜமாய்த்து விடலாம்.
What do you think Ketha?
3745_5_2மன்மதகுஞ்சு: ஓஓ படத்த்க்கு ஸ்கிரிப்ட் வேற எழுதப்போறியா மாப்பிள? கிழிஞ்சுது லம்பாடி லுங்கி! மாப்பிள ஸ்கிரிப்ட் எழுதுறது ஒன்னும் சும்மா “மேகலா, நெஞ்சத்தை அள்ளினாள், காதலித்துபாருங்கள், இளையராஜா பாட்டு” எண்டெல்லாம் ஒப்பேத்தமுடியாது!! எழுதோணும் பாஸ்… You know writing? எழுத்து!!!

 

இந்த வார பாடல்

இந்த வார ♫உ.. ஊ.. ம ப த ப மா ♪ எனக்கு கொஞ்சம் ஏமாற்றமும் நிறைய ஆச்சரியமும் தந்தது. பலரும் திரைத்தென்றலின் ரசிகர்கள் என்று நினைத்தேன். ஆனால் பதிவுக்கு வந்த வருகைகள் வெறும் 250 தான். ஆனால் மனதை தொடும் காமேன்ட்கள் கிடைத்தன. வேலை நாட்களில் பாடல் பதிவுகளை பார்த்து கேட்க முடியாது என்பது கொஞ்சம் லேட்டாக தான் புரிந்தது. அடுத்த வாரம் முதல், சனிக்கிழமைக்கு இந்த தொடரை மாற்றலாமா என்று யோசிக்கிறேன். இந்த தொடரில் எதோ ஒரு தவறு இருக்கிறது, எது என்று தெரியவில்லை! பேசாமல் நிறுத்தி விடலாமா என்றும் தோன்றுகிறது!

சிங்கப்பூரில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு இடம்பெயர(!) முன்னர் எழில் வீட்டில் ஒரு பார்ட்டி! பார்ட்டினா தப்பா எடுத்துக்க கூடாது. கூல் சோடாவும் குருவி மிட்டாயும் தான். அன்றைக்கு இசையமைப்பாளர் தீபன் பியானோவில் கலக்க, நான் ஒப்புக்கு அவனுடைய கிட்டாரில் ரிதம் கொடுக்க(கிட்டாரில் மிருதங்கம் வாசித்தேன் என்று கஜேந்தி சொன்னாரு), அதிகாலை நான்கு மணிவரை unplugged version இல் பாடல்கள். தீபனை வீணடித்துக்கொண்டு இருக்கிறோம் என்பது நன்றாக புரிந்தது! ஆளாளுக்கு ரகுமான் ஹரிகரன் ரேஞ்சுக்கு பாடிக்கொண்டு இருந்தோம். அந்த பாடல்களுக்குள் இந்த பாடல் தான் மிக நன்றாக வந்தது என்று நினைக்கிறேன். எல்லோருக்குமே பாடலின் வரிகள் அப்படியே மனப்பாடமாக இருந்தது ஒரு surprise. ஹரிகரனின் காதல் வேதம் என்ற ஆல்பத்தில் வந்த பாடல்.  இந்த பாடல் ஒன்றும் கொலைவெறி கொண்டு அலையவில்லை. ஆனால் எல்லோருக்குமே மனப்பாடம். அது தான் நல்ல பாடல்!!
0
மன்மதகுஞ்சு: நீ பாடின “ஊர் ஊரா புளிய மரம்” பாட்டு தான் பெஸ்ட்டுன்னு சொன்னாங்க! 

ஹாட் நியூஸ்

photo-finish1_2042493c
  போன் அடித்தது, எடுத்தேன், மறுமுனையில் ஹன்சிகா
   “ஜேகே!”
   “ம்ம் சொல்லு”
   “என்ன, கொஞ்ச நாளா ஸ்ருதி கேட்குது போல?”
   “இல்ல, அவ தான் கால் பண்ணி ஒரே தொந்தரவு!”
   “அப்ப என்ன மறந்துட்டியா?”
   “சிவ சிவா, ஏசுவை மறப்பேனா?”
goundamani-2l-86726


மீண்டும் அடுத்த வாரம் வியாழமாற்றத்தில் சிந்திப்போம் பாஸ்!

Contact form