வியாழமாற்றம் (15-12-2011) : யார் தமிழர்?

Dec 15, 2011

Yarl IT Hub : Logo Competition

போன் அடித்தது. வேறு யாரு? அக்கா இல்லாவிடில் மேகலா! இம்முறை அக்கா தான்!
“டேய், Logo competition பற்றி சயந்தனிண்ட பதிவு வாசிச்சன்”stock-photo-9552671-frustrated-crying-baby
“நீயும் ஒண்டு ட்ரை பண்னேன்?”
“Logo எப்படி இருக்கும் எண்டே தெரியாதடா”

“அது தான் நல்லது, ஒரு அடையாளம், identity … போதும்”
“அடையாளமா? Yarl IT Hub எண்டத கொஞ்சம் ஸ்டைல்லா எழுதவா?”
“வேணாம் அக்கா, புதுசா திங் பண்ணு, Yarl IT Hub பெயர் வர தேவையில்ல, அதான் ஏற்கனவே இருக்கே!அப்பாக்கும் மகனுக்கும் எதுக்கு ஒரே பெயர்?”
“படம் போடவா? உங்கட நோக்கத்த சொல்ற மாதிரி”
“உண்ட விருப்பம் அக்கா, அடையாளம், அது தான் முக்கியம். நாங்க என்ன செய்யிறம் எண்டது கூட அதில தேவையில்ல. இப்ப பாரு, “பாரதி” என்ற பெயர் அவன் ஒரு  எழுச்சி கவிஞன் எண்டு சொல்லுதா? இல்லை, எழுச்சி செய்த கவிஞனுக்கு தான் பாரதி  எண்ட பெயர்.  செய்வன தெரியவரும்போது அது எல்லாத்தையும் relate பண்ண ஒரு அடையாளம். கொஞ்சம் catchyயா இருந்தா போதும். கனக்க யோசிக்காத, புரியுதா?”
“சுத்தம்! உண்ட பதிவு மாதிரியே குழப்பிற நீயி, எனக்கு இந்த MS Paint, Photoshop ஒண்டும் தெரியாதடா”
“ஆணியே வேண்டாம், நீ சும்மா பேப்பர்ல கீறு, ஒரு ஸ்கெட்ச், எங்கட ஐஞ்சு வயசு திவ்யா கூட ஞாபகம் வச்சு வரையிற மாதிரி, சிம்பிளா ஒண்டு கீறு, Apple, Audi logo எல்லாம் பாரு. மறக்கவே மாட்டாய். “Simplicity is the ultimate sophistication”
ஆ?
“Simplicity is the ultimate sophistication”
Yarl IT Hub Facebook Page!

vadivel-fe5-2009மன்மதகுஞ்சு : ஷப்பா, முடியல, இவனுக்கு அக்காவா பொறந்து இந்த பொண்ணு படுற பாடு இருக்கே! நானா இருந்தா குத்தி கொலை பண்ணீட்டு ஜெயிலில ராஜாவோட சீட்டாடிக்கிட்டு இருந்திருப்பேன்!


யார் தமிழர்?

நான் எழுதிய “இந்தியருக்கு விளையாட்டு ஈழத்துக்கு சீவன் போகுது!” என்ற பதிவில் தமிழரை “இந்திய தமிழர்” என்று நவிற்சியோடு விளித்தது பலருக்கு கொஞ்சம் சுட்டுவீட்டது. அது ஒன்றும் வீம்பில் எழுதவில்லை,  அது என்ன ஈழத்தமிழர் பதம்? என்று கேள்வி கேட்டபோது பிறந்த சொல் தான் இந்த “இந்திய தமிழர்”. நாரதர் கலகம் தான். நாராயணன் செயலில் வெற்றி இல்லாமல் இல்லை. ஆளாளுக்கு தமிழரை எப்படி பிரித்து பார்க்கலாம் என்று கேட்டதில், இனி கவனமாக இருப்பார்கள் என்று நினைக்கிறேன். ஈழத்தமிழர் என்று சொல்லும்போது ஈழத்தை சேர்ந்தவர்கள் பெருமைப்படுகிறார்கள். ஏன் என்று புரியவில்லை. குற்றம் பார்த்தால் சுற்றம் இல்லை. சுற்றம் பார்த்தால் குற்றமும் இல்லை. எதை பார்ப்பது? வேறு என்ன? நம்ம வேலையை தான்!
marudhamalai_049மன்மதகுஞ்சு : இதுக்கு கமல் தேவலாம்! தெளிவா குழப்பிற நீ! நல்லா தானேடா எழுதிக்கொண்டு இருந்த?  சரி யுகபாரதி தான் எழுதிட்டாரு, பிடிக்கலையா, விட்டிட்டு வேலைய பார்ப்பியா? பெரிய அப்படாக்கரா நீ? நாலு பேரு லைக் பண்ணுறவன் எல்லாம் இப்பிடி எழுத ஆரம்பிச்சா நாடு தாங்காதுடோய்!


இராக் படை விலகலும் Times சஞ்சிகையும்

408967-timeஇந்த வாரம் இரண்டு சம்பவங்கள். இராக்கிலிருந்து கடைசி அமரிக்க படையணி விலகுகிறது. டைம்ஸ் சஞ்சிகை இந்த ஆண்டின் “Person Of The Year” ஆக “The Protester” ஐ தெரிவு செய்து இருக்கிறது. யார் இந்த “Protester”? துனூசியாவில் ஆரம்பித்து எகிப்து, லிபியா என்று தாவி சிரியாவுக்கு கொஞ்சம் கொஞ்சமாக பரவிக்கொண்டிருக்கும் கிளர்ச்சி போராளிகளை கௌரவித்து இந்த பெருமையை டைம்ஸ் அளித்திருக்கிறது. அமரிக்காவின் நோக்கம் மிக தெளிவானது. டைம்ஸின் கட்டுரையை வாசிக்கும்போது, அமரிக்கா பார்க்கும் உலகம் எந்த அளவுக்கு நானும் சிலவேளை நீங்களும் பார்க்கும் உலகில் இருந்து வேறுபடுகிறது என்பதை புரிந்துகொள்ளலாம்.
எழுபதுகளில் ஆரம்பித்த தத்துவரீதியான பரிமாணங்கள்(Ideological Evolution) 1991ம் ஆண்டு சோவியத் யூனியனின் மறைவுக்கு பின்னர் மேலைத்தேய தாராளமய கொள்கைக்கு மாறியதாம்.  இருபது வருடங்களுக்கு பின்னர் மீண்டும் இப்போது தான் ஆக்கபூரவமான புரட்சிகள் வெடிக்கின்றன என்று டைம்ஸ் உச்சி மோர்ந்து வரவேற்கிறது. இப்போது மக்கள் குரல் மீண்டும் ஒலிக்க தொடங்கிவிட்டதாம். இடையில் இருபது வருஷங்கள் நடந்த புரட்சி எல்லாம் தீவிரவாதம் என்ற ஒற்றை சொல்லில் தூக்கிப்போடப்படுகிறது. அட பாவிகளா, நீங்களே ஆயுதத்த குடுத்திட்டு, நீங்களே ஸ்ட்ரீட் புரட்டஸ்ட் பண்ணுரவங்களை தூண்டிவிட்டிட்டு இப்ப புரட்சி என்று சொன்னா? ஆனாலும் அவங்கள் அதிர்ஷ்டகாரங்க தான். எதுக்கு போராடுறோம் என்று கூட அரை வாசி கிளர்ச்சிகாரர்களுக்கு தெரியாது. ஒரு போன் கால், டெக்ஸ்ட் மெசேஜ் மூலம் ஐஞ்சு பேரு கூடினா கூட, CNN எக்ஸ்குளுசிவ் கவரேஜ் கொடுத்தது. ம்ம்ம் அமரிக்கா தான் செய்ய நினைத்ததை தனக்கு ஒரு கீறல் கூட இல்லாமல் சாதித்துவிட்டது. என் நண்பி அமுதா ஒருமுறை சொன்னது ஞாபகம் வருகிறது.
“Who told you the world is fair? Just live with it!”

pokiribrothers_041மன்மதகுஞ்சு : மெல் கிப்ஸன் நடிச்ச “Conspiracy Theory” படம் பார்த்தியா? உலகில் நடக்கும் அரசியல் சம்பவங்கள் எல்லாம் எங்கோ ஒரு ரகசிய அறையில் முன்னாலேயே பிளான் பண்ணிடுவாங்களாம். ஒசாமா சம்பவம், இராக் படை விலகல், அரபு கிளர்ச்சி, பாகிஸ்தானில் குண்டு வீச்சு, இணைச்சு பாரு, புரியும். கேக்க மறந்திட்டன், இந்த Protester வரிசையில லண்டன் கிளர்ச்சியாளர்களும் அடக்கமா? அய்யயோ அவங்க தான் லூட்டேர்ஸ்(looters) ஆச்சே!  சாரி பாஸ்!


வீராசாமி ஸ்பெஷல்

டீ ஆர் செய்யும் அலப்பறைகளுக்கு ஏன் Youtube இன்னமும் கோல்டன் விருது கொடுக்கவில்லை என்று தெரியவில்லை. அவரோட ஆனந்த விகடனுக்கு கொடுத்த கவுண்டரும், ஆபிரிக்க இசையும் கேட்காத ரசிகர்கள் இருக்கமாட்டார்கள் என்பதால், இந்த வீராசாமி கிளிப்பிங். சினிமா எப்படி எடுப்பார்கள் என்று எனக்கு தெரியாது. ஆனால் இதை பார்க்கும் போது, பக்கத்தில் சிரிக்காமல் நடித்துக்கொண்டு இருக்கும் ஹீரோயினுக்கு முதலில் ஒரு ஹாட்ஸ் ஆப்!

rajini_vadivelu_350மன்மதகுஞ்சு:
த்லீவருக்கு பீலிங்கான
வாய் பிரிஞ்சு வானத்த பாக்குது.
வயுறு பிரிஞ்சு சட்டை பட்டன் அவிழுது!

 

நெகிழ்ச்சி

Hello JK
Last Monday, through my friend, I was introduced to your blog. I just wanted to say thank you. I lived in Jaffna till October 31,1995 and I was in tears when I read your articles.  I am still reading and I gave the link to my father, Kandiah Ganeshalingam. He is very happy. if you are SJC old boy then you might know him
I can't express and write like you but I am enjoying reading
All the very best
                                                    ***************************
ஹலோ அண்ணா... 
உங்களிட்ட ஜாவா படிச்ச கும்பலில நானும் ஒருத்தன்.. ஞாபகமிருக்கோ தெரியேல்ல.. இண்டைக்கு கேதாரோட கதைக்கேக்க ப்ரீயா இருக்கேக்க வாசிச்சுப்பார் எண்டு உங்கட ப்ளொக் லிங்க தந்தவன்... என்ன ஏதாவது அடிக்கொரு சிஸ்டம் வொயிட் மெயின் போட்டு கொம்பைல் பண்ணியிருப்பீங்கள் எண்டு சுவாரசியமில்லாமல் பாத்தன்.. ஆனா.. கடைசியில இண்டைக்கு முழுக்க இருந்து எல்லாப்பதிவும் வாசிச்சு முடிச்சாச்சு.. அந்த குட்டியிண்ட கதை சும்மா அதகளம்.. அப்பிடியெல்லாம் எல்லாருக்கும் எழுதவராது.. எனக்கு வாசிப்பு குறைவு எண்ட படியால சில பதிவுகளை வாசிக்கும்போது என் மச்சுரிட்டி குறித்து பயம் வந்தது தவிர  அருமையான வாசிப்பு.. அடுத்த ஜனவரியில் சிட்னியில் இருப்பேன்.. முடிந்தால் வந்து சந்திக்கிறேன்.. தொடர்ந்து எழுதுங்கள்..
பவான்..

 
vedigundu-murugesan-vadivelu-photo-gallery-20 (1)மன்மதகுஞ்சு: ஆரம்பிச்சிட்டான்டா! டேய் உனக்கு வர்ற கடிதம் எல்லாம் இப்பிடியா வருது?  எனக்கு என்லார்ஜ்மென்ட், வாயாக்ரா எண்டு தான் வருது மச்சி வருது. தக்காளி ஈமெயில் அட்ரஸ் மாறிடிச்சு போல. செக் பண்ணோணும்!

Busy Bee

“நான் ரொம்ப பிஸி”
“Its been long busy week maite”
“Its getting crazy, damn busy”
“நேரமே கிடைக்கேல்ல”
நான் காணும் எவருமே தாம் பிஸி இல்லை என்று சொன்னதில்லை. எனக்கு இந்த விஷயம் புரியவில்லை. எல்லோருக்கும் 24 மணி நேரம் தான். அதை கழிக்கிறோம் அவ்வளவே. இதில் பிஸி, பிஸி இல்லை என்ற மாட்டரே கிடையாது.  யோசித்துப்பார்த்தால் நான் ஒருபோதும் பிஸியாக இருந்ததேயில்லை தான். சில வேலைகளை செய்யும் நேரம் மாறுபடும், அவ்வளவே. பதினைந்து மணி நேரம் அலுவலகத்தில் வேலை செய்தால், அன்று வீட்டில் செய்யும் வேலை நேரம் குறையும். அதுவே வியாழன் என்றால், வந்து வியாழ மாற்றம் எழுதி விட்டு படுக்க போகும் போது, சயந்தன் Yarl IT Hub க்கு conference call என்பான், ஒரு மணிக்கு படுத்தால், ஐந்து மணி நேரம் தூக்கம். அடுத்த நாள்  ரயிலில் கடல் புறா வாசித்துக்கொண்டு இருக்கும் போது ஒரு கலக்கு கலக்கும். காரணம் தூக்கமா இல்லை கடாரத்தின் காஞ்சனாதேவியா என்று தெரியாது. அவளும் அழகுகளும் கோதாவரியில் மூழ்கி எழுவதை பார்த்து பல்லவன் ரசிக்கும்போது,
“Guess you getting down in Southern Cross don’t ya?”
காஞ்சனாதேவியின் ஆங்கில புலமை கொண்டு கருணாகரபல்லவன் பெரும் வியப்பெய்தினான். இவள் சாதாரண நங்கை இல்லை என்றும், கடாரத்தை ஆள அத்தனை தகுதிகளும் கொண்டவள் என்றும் நினைத்துக்கொண்டான்.
“Hey, you hear me..?”
திடுக்கிட்டு விழித்தேன்.
“Its Southern Cross, ya station right? seen ya alighting here everyday!”
“Southern Cross, oh yeh, Thank you very much .. Thanks”
“No worries … next time, keep an alarm .. ha ha "
சிரிக்கும்போது காஞ்சனாதேவி இன்னும் அழகாக இருந்தாள். மார்கழி கோடை வந்ததை காஞ்சனா தேவி உடுத்தியிருந்த உடை சொல்லியது. உடுத்தாத உடையும் சொல்லியது! இன்று பார்த்து பல்லவன் Sun Glasses ஐ இன்று மறந்துவிட்டான்! காஞ்சனாதேவி நடந்து போகும் போது பின்னால் இருந்து ரசிக்க ஒரு சாண்டில்யன் போதாது. ச்சே நம்பர் கேட்க மறந்துவிட்டேன்.
resize_20110806011420மன்மதகுஞ்சு: மகா ஜனங்களே, இவரு என்ன சொல்ல வர்றாருன்னு புரியுதா? பயபுள்ள வெட்டியா இருந்து பதிவு எழுத இல்லையாம்! தூக்கமே இல்லையாம் சாருக்கு.  டேய் இப்ப நீ எழுதினது எல்லாம் லக்கியமா? லத்தி சார்ஜ் செய்யணும்டா உனக்கெல்லாம்! வீட்டில செய்யிறத ஏண்டா ரயில்ல செய்யிற! தூக்கத்த சொன்னன்! தட்டி எழுப்பின காஞ்சனா தேவி அறுபது வயசு ஆண்ட்டி தானே? … என்னமா கதை விடுறான் பாரு! 

ஹாட் நியூஸ்நான் கரும்பாறை பல தாண்டி வேராக வந்தேன்
கண்ணாளன் முகம் பார்க்கவே

என் கடுங்காவல் பலதாண்டி காற்றாக வந்தேன்
கண்ணா உன் குரல் கேட்கவே

மன்மத்குஞ்சு: என்ன தான் சொல்லு, பம்பாய் படத்துல மனீஷா கொய்ராலா ஓட்டம் தான் பெஸ்ட்டு!
hansika-20

Contact Form