“My Picks” என்று கடந்த மூன்று வருடங்களாக எனக்கு பிடித்த அந்த ஆண்டுக்கான தெரிவுகளை பதிவது வழக்கம். அது எனக்கு பிடித்த தெரிவாகவே மாத்திரமே அமைந்து விடுவது வழமை. இந்த வருடம் மொத்தமாக ஐந்து தமிழ் படங்களே பார்த்து இருக்கிறேன். ஆங்கிலப்படங்கள் நான்கு. Rockstar பாடல்கள் இன்னமும் கேட்கவேயில்லை. எனக்கு வயதாகிக்கொண்டு வருகிறது என்பது புரிகிறது. எப்படி கஜன் எந்தப்படம் வந்தாலும் தியேட்டர் போய் பார்க்கிறான் என்பதும் புரியவில்லை. ம்ஹூம்.
அரசியல்
மிக முக்கிய அரசியல் சம்பவம்: துனூசிய புரட்சி(Tunisian Revolution)
துனூசிய புரட்சி தான் இந்த வருடம் முழுவதும் நடந்த அரேபிய வசந்தத்துக்கு(Arab Spring) வித்திட்டது. மேற்குலக நாடுகளின் சூழ்ச்சி தான் என்றாலும், அரேபிய வசந்தம் சர்வாதிகாரிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்ததை ஏற்றுக்கொள்ள தான் வேண்டும்.
மிக சிறந்த அரசியல்வாதி : இரா சம்பந்தன்(தமிழ் தேசிய கூட்டமைப்பு)
அடடா, உடனே இவன் அவனா? அவன் இவனா என்றெல்லாம் ஆரம்பித்து விடாதீர்கள். மனுஷன் ஆளாளுக்கு இழுப்பதை எல்லாம் சமாளித்துக்கொண்டு, அங்கேயே சூதானமாக அரசியல் செய்வதை ரசிக்கிறேன். எனக்கு உங்கள் அளவுக்கெல்லாம் அரசியல் தெரியாது. ஆனால் சம்பந்தரின் intellectual சிந்தனைகளுக்கு நான் ரசிகன். அவ்வளவே.
கேவலமான அரசியல்வாதி :
ஹி ஹீ … சொன்னா இலங்கை ஏர்போர்ட்ல என்ன தூக்கிடுவாங்க பாஸ் (back to back winner)
விளையாட்டு
மிகச்சிறந்த விளையாட்டு சம்பவம்: கிம் கிளைஜெர்ஸ் ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியன்ஷிப் வென்றது.
அந்த பொண்ணை ஆஸ்திரேலியா மீடியா என்ன பாடு படுத்தியது. திருமணம், ஒரு குழந்தைக்கு தாய், grumpy மார்பகங்கள் என்ற விமர்சனம், கிம் எல்லாவற்றையும் இலகுவாக கையாண்டார். கோப்பையை வென்றார். நான் ரசிக்கும் ஒரு சில பெண் வீராங்கனைகளில் ஒருவர்.
மிகச்சிறந்த விளையாட்டு வீரன் : ஜோகோவிக்
Spirited வீரர். பெடரர், நடால் கோலோச்சும் காலத்தில், விமர்சனங்களை தாண்டி ஒரு வருடத்தில் நான்கு கிராண்ட்ஸ்லாம்ஸ் வென்றவர்.
மிகச்சிறந்த விளையாட்டு வீராங்கனை : சாலி பியர்சன்
கடந்த ஒலிம்பிக்ஸில் hurdles பந்தயத்தில் இரண்டாம் இடம். அவர் காட்டிய சந்தோசம் அந்த போராட்ட குணத்தை காட்டியது. பொண்ணுக்கு இந்த வருடம் முழுதும் கலக்கல் தான். லண்டன் ஒலிம்பிக்ஸ் காத்திருக்கிறது!
IT தொழில்நுட்பம்
சிறந்த தொழில்நுட்பம் : Cloud இன் வளர்ச்சி
Cloud தொழில்நுட்பம் இப்போது தான் வீடு தேடி வருகிறது. கொஞ்சம் கொஞ்சமாக webos பரிணமித்து நாம் வைத்திருக்கும் கணணிகள் எல்லாம் வெறும் hubs ஆகின்றன. சரியான திசை என்று தான் நினைக்கிறேன்.
சிறந்த மென்பொருள் : சிறி(SIRI)
சிறி அடுத்த தலைமுறை தொழில்நுட்பம். அதை ஆப்பிள் ஆரம்பித்து வைத்தது நல்ல பயணத்துக்கு வித்து. கூகிளின் search பிசினஸுக்கு ஆப்பு போல தெரிகிறது. இதன் தொலை நீட்சி தான் கூகிள் கார் ப்ராஜெக்ட். Eagle Eye தொலைவில் இல்லை போல !!!
காமெடி விருது : கூகிள்
கூகிள் panic ஆகி விட்டது. iTunes வெளியான காலத்தில் Microsoft panic ஆனது போல தான் இதுவும். எதிலும் அவசரம். கூகிள்+ நல்லதாகவே இருக்கட்டும். ஸ்டார்ட்டிங் மிகப்பெரிய ட்ரபிள். என்ன தான் ஆளாளுக்கு facebook ஐ வசை பாடினாலும், கூகிள்+ அதற்கு மாற்றா என்று கேட்டால், I don’t think so.
சிறந்த தொழில்நுட்ப முயற்சி : Yarl IT Hub!
இது ஒரு முக்கிய முயற்சி. ஒபாமாவுக்கு நோபல் பரிசு கொடுத்தது போல, Yarl IT Hub உம் சாதிக்கும் என்ற நம்பிக்கையில் கொடுக்கும் விருது. ஒபாமா தப்பான உதாரணமோ?
திரை விருதுகள்
இந்த வருடம் வெளியான படங்களில் பார்த்தது : காவலன், யுத்தம் செய், கோ, மங்காத்தா, எங்கேயும் எப்போதும், Hangover II, Limitless, Transformers : Dark Of The Moon, No Strings Attached
சிறந்த இயக்குனர்: எம். சரவணன் (எங்கேயும் எப்போதும்)
சிறந்த நடிகர்: சேரன் (யுத்தம் செய்)
சிறந்த படம்: எங்கேயும் எப்போதும்
சிறந்த நடிகை: அஞ்சலி (எங்கேயும் எப்போதும்)
சிறந்த பாடல்: விழிகளிலே (குள்ளநரி கூட்டம், V.செல்வகணேஷ்)
சிறந்த பாடகர்: இளையராஜா (குதிக்கிற குதிக்கிற, அழகர்சாமியின் குதிரை)
சிறந்த பாடகி: ஸ்ரேயா கோஷல் (ரயிலின் பாதையில், அப்பாவி)
அதிகம் ஐபாடில் நான் கேட்ட தமிழ் பாடல்: வானத்தில வெள்ளிரதம் ( இளையராஜா)
அதிகம் ஐபாடில் நான் கேட்ட ஆங்கில பாடல்: Girl Is Mine (Thriller, Michael Jackson)
அதிகம் ஐபாடில் நான் கேட்ட ஹிந்தி பாடல்: Tere Naina ( My Name Is Khan)
இந்த வருடம் வாசித்த புத்தகங்கள்
- Three Mistakes Of My Life (Chetan Bhagat)
- Disgrace (J. M. Coetzee)
- Thousands Of Splendid Suns ( Khalid Hosseini)
- Mort ( Terry Pratchett)
- Island Of Blood (Anita Prathaap)
- Steve Jobs( Walter Isaacson)
- Australian Short Stories (Laurie Hergnhan)
- The Traitor (Shaba Shakthi)
- A R Rahman : Sprit Of Music (Nasreen Munni Kabir)
- கடல் புறா (சாண்டில்யன்)
- போரே நீ போ போ (செங்கை ஆழியான்)
- கண்ணீர் தேசம் (யாழர் துரை)
- ஸ்ரீ ரங்கத்து கதைகள் (சுஜாதா)
Person Of The Year
Steve Jobs
வித்தியாசமான பதிவுகளை எழுதி கலக்கும் நண்பரே, உங்கள் பதிவுகளை தினமும் http://www.hotlinksin.com/ இணையதளத்தில் இணைத்திடுங்கள்.
ReplyDeleteஹாய் அண்ணா,
ReplyDeleteநல்ல சாராம்சம்..
//
Yarl IT Hub
இது ஒரு முக்கிய முயற்சி. ஒபாமாவுக்கு நோபல் பரிசு கொடுத்தது போல,
//
நல்ல இரசனையான உதாரணம் :).
>சிறந்த தொழில்நுட்பம் : Cloud இன் வளர்ச்சி
ReplyDeleteCloud தொழில்நுட்பம் இப்போது தான் வீடு தேடி வருகிறது. கொஞ்சம் கொஞ்சமாக webos பரிணமித்து நாம் வைத்திருக்கும் கணணிகள் எல்லாம் வெறும் hubs ஆகின்றன. சரியான திசை என்று தான் நினைக்கிறேன்.
உடன்படுகின்றேன், சிறிது பயத்தோடு. இத்தனைக்கும் என் வேலையும் கொஞ்சம் cloud ஓடு தொடர்புபட்டது; பகாசுரக் கம்பனிகள் கையில் "எல்லாம்" மாட்டி, எங்கள் கையில் ஒரு முட்டாள் 'உபகரணம்' மட்டும் மிஞ்சும். பிறகு 'அவன்' வைத்ததுதான் சட்டம் என்றாயி விடுமோ என்று பயம்.
தாங்க்ஸ் சக்திவேல் .. cloud இல் குறிப்பிடத்தக்க அளவுக்கும் openness இருக்கிறது. எனக்கென்னவோ, நிறைய புது ஐடியாக்கள் அதிக முதலீடு இல்லாமல் மார்க்கட் வர cloud உதவுகிறது. SIRI போன்ற AI தொழில்நுட்பங்கள் cloud இல்லாமல் சாத்தியம் குறைவு. cloud இன்று நேற்று வந்ததும் இல்லை தானே. Localisation இன் நீட்சி தானே. ஆனால் நம்மை அது ஆளலாம் என்ற உங்கள் பயம் நியாயமானது. சிறந்த governance முக்கியமாகிறது
ReplyDeleteதேங்க்ஸ் விமல்! ஒபாமா பெரிசாக ஒன்றையும் புடுங்கவில்லை. பார்ப்போம் .. ஹி ஹி ஹி
ReplyDeleteகிரிட் எண்டாங்க cloud என்றாங்க.. நாளைக்கு mind to mind connectivity (டெலிபதியை சொல்லவில்லை) எண்டு ஒண்டு வரும் பாருங்க.. ஆளாளுக்கு தலையைப் பிச்சுக்கப் போறாங்க .. :)
ReplyDeleteஅது தான் ஈகிள் ஐ படத்து நிலைமையும் கூட!
ReplyDelete