வியாழமாற்றம் (22-12-2011) : என்னத்த சொல்ல?

Dec 22, 2011

என்னத்த சொல்ல?அரசியல் என் பதிவிலே அணுவளவும் இனி வேண்டாம் என்று தான் இருந்தேன். ஆனால் சிங்கள நண்பர்கள் மத்தியில் இந்த வீடியோ சுழன்று திரிகிறது. பேட்டி காணப்படும் பையன் புலிகள் இயக்கத்தில் இருந்து ராணுவத்திடம் பிடிபட்டு தடுப்பு முகாமில் இருந்தவன். முகாமில் இருக்கும் போது சிங்களம் படித்து பாடுகிறான். அதில் தப்பு இல்லை. ஆனால் அதற்கு பின்னால் இருக்கும் கீழ்த்தரமான அரசியல். என்னத்த சொல்ல? சொன்னாலும் தப்பு பிடிப்பார்கள்.

என் தம்பி ஒருவன், இரண்டு வருடம் தடுப்பில் இருந்து சென்றமாதம் தான் விடுவித்து இருக்கிறார்கள். அவன் ஒரு அப்பிராணி. ஏன் இத்தனை நாள் தடுத்து வைக்கப்பட்டான்? என்று கூட தெரியாது.  அவர்கள் சொல்லவும் இல்லை. எங்கேயோ அகப்பட்ட போன் மூலம் எனக்கு அவன் கடந்த ஏப்ரல் பதினைந்து புதுவருட வாழ்த்து அனுப்பினான். தருகிறேன் பாருங்கள்.
hi anna.
Iniya puthu varuda valththukkal. Eppadi sugam anna? acca,anna, mum, dad, elloraium sugam kettatha sollunga.Nan nalam. Pona varudaththai pola intha varudamum mudkampi velikkul kalinthu viddathu. Innum eththanai varudangalo....
இந்த தம்பி, புத்தியில் என்னை எல்லாம் தூக்கி சாப்பிடுவான். இப்போது இருபத்தாறு வயசு. கடந்த ஞாயிறு அன்று skype இல் கதைத்தோம். இப்போதும் மீண்டும் படிக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறான்.
நான் இங்கே அரசியல் பேசவில்லை. எந்த கருத்தும் கூறவில்லை. ஆனால் எங்கள் தம்பிமார் இருக்கும் சூழ்நிலையை புரிந்து கொள்ளுங்கள். சூதானமாகவும் தீர்க்கமாகவும் நடத்து கொள்ளுங்கள். நான் எது சொன்னாலும் குற்றம் கூறுகிறார்கள். இன்னும் எழுதினால் “வயலுக்கு வந்தாயா? நாற்று நட்டாயா?” என்பார்கள். நீங்களே முடிவு செய்யுங்கள்.

மன்மதகுஞ்சு : மச்சி நான் ஏதாவது சொல்ல விதண்டாவாதம் பேசுவாங்கள். சொல்லவேண்டியத நீயே சொல்லிட்டாய். நெக்ஸ்டு டாப்பிக் ப்ளீஸ்.

இந்த வார படம்

kannaadi  முன்னாடி
  பின்னாடி
  இது   வாழ்க்கையின்
  கண்ணாடி!261vivek

மன்மதகுஞ்சு : டேய் நான் போட்ட படத்த சுட்டாச்சா? அது என்ன பக்கத்தில ஏதோ கிறுக்கி இருக்கிறாய்? ஓ கவுஜ சொல்றீங்களா? கலைஞர் கவுஜ மைன்ட் புலோயிங்! போடாங்!

நெகிழ்ச்சி

நேற்று பதினொரு மணி இருக்கும். போன் வந்தது. எடுத்தால் சுபா அண்ணா. நான் எழுதிய ஒரு பதிவின் தலைவியின் அண்ணன்! நான் மிகவும் மதிக்கும் அண்ணா.  சந்திரன் மாஸ்டர் பதிவு வாசித்தேன் என்றார். எனக்கு கொஞ்சம் பதட்டமாக போய்விட்டது. தான் பதிவை வாசிக்கும் போது ஏதோ ஒன்று நெருடியது என்றார். கேட்கவே வேண்டாம். ஆனால் ஆச்சரியம்! இம்மாதிரி களம் எடுக்கும் போது வருகின்ற சுவாரசிய ஆனால் ஆபாசமில்லாத நடை பாலகுமாரனிடம் இருக்கிறது. உம் கதை வாசிக்கும் போதும் அந்த எள்ளலும் துள்ளலும் சேர்ந்துகொண்டது என்றார். எனக்கு தலை கால் புரியவில்லை. அவர் என்னை ஊக்கப்படுத்த தான் அப்படி சொன்னார். கமல் ஒருமுறை,  இளையராஜாவுக்கு பிறகு சிறந்த சிறந்த பின்னணி இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத்  என்று காமடி பண்ணவில்லையா? இதெல்லாம் புதிதாக ஆரம்பிப்பவர்களுக்கு தரும் ஊக்கம் தான். அத்தோடு விடவில்லை, சுஜாதா பாணி இடையிடையே வருகிறது என்று திட்டும் விழுந்தது. நீ யாரையும் பின்பற்றாதே. உனக்கென்று ஒரு நடை இருக்கிறது என்றார். சந்திரன் பதிவு நான் எழுதிய பதிவுகளில் முக்கியமான ஒன்று. நான் ஒரு சிந்தனாவாதியோ கருத்தியல்வாதியோ கிடையாது.ஒரு டம்மி பீஸ். வாசிப்பிலும் எழுத்திலும் ஒரு கிரேஸ். வெறும் உணர்வு பூர்வமாக மட்டும் எழுதி யோக்கியனாய் காட்டிக்கொள்ளும் ஐடியாவே கிடையாது.  
சிலர் வேலை வெட்டி இல்லாமல் எழுதுகிறேன் என்று நினைக்கும் வேளையிலும் சுபா அண்ணா போன்றவர்கள் போன் பண்ணி பட்டை தீட்டும்போது இன்னும் எழுதவேண்டும் போல தோன்றுகிறது.  அதிகாலை இரண்டு மணியாகிறது. காலையில் வேலை. ரயிலில் தான் தூங்கவேண்டும்!

power vs obamaமன்மத்குஞ்சு:  இவரு பாலகுமாரன் மாதிரியாம். சுஜாதாவை போல வேறு எழுதுவாராம்! டேய் நீ எல்லாம் ஜேகே ரித்தீஷ் பவர் ஸ்டார்  வகையறா பாஸ்!  மூஞ்சிய கிட்ட கொண்டு போனா ஹீரோயின் பொண்ணு மூணு நாளைக்கு பீதியில பேதி போகும் ரேஞ்சு. ரொம்ப ஆடாத ராசா!சரோஜாதேவி பதிவு எழுதீட்டு அதுக்கு லக்கிய விமர்சனமா?

ஆப்பிள்

புதுமையாக சிந்திக்கமுடியாவிட்டாலும், சிந்திப்பவர்களை கொண்டாடவேண்டும். ஆப்பிள் நிறுவனம் எண்பதுகளின் ஆரம்பத்தில் உருவாக்கிய “Think Different” என்ற விளம்பரம். முப்பது வருடங்கள் ஆகிவிட்டன. எங்களுக்கும் ஒரு Silicon Valley வேண்டும் என்றால், வெறுமனே programming உம் பக்கம் பக்கமாக process உம படித்து பிரயோசனமில்லை. அதை செய்தால் மற்றவனுக்கு மாடு மாதிரி உழைக்கலாமே தவிர நாம் முன்னேற முடியாது.  Yarl IT Hub பத்தோடு பதினொன்று ஆகாமல் தனித்து ஒரு புரட்சி செய்வதற்கு இந்த புள்ளி தான் முக்கியம். இந்த வீடியோவை பாருங்கள்.

315788_222533824477382_120361734694592_569044_373966331_nமன்மதகுஞ்சு: அடேய் சோமாறி மண்டையா. மாயி அண்ணன் வந்திருக்காக, மச்சான் வந்திருக்காக, அவுக வந்திருக்காக எண்டு வாய் வலிக்க கூவுற .. ஆனா மின்னலை கண்ணுலேயே காட்ட மாட்டீங்களாடா? பேச்ச குறையுங்கடா டேய்!

Yarl IT Hub

Yarl IT Hub முயற்சிக்கு ஒரு logo வேண்டும் என்று போட்டி நடத்துகிறார்கள்.  போட்டிக்கு நிறைய logo க்கள் வந்தன. நன்றாக இருந்தாலும் ஏதோ ஒன்று தப்புகிறது போல இருந்தது.  நானும் பலவழிகளில் முயற்சி செய்து  பார்த்துவிட்டேன். முடியவில்லை. என்னடா இது என்று யோசித்துக்கொண்டு இருக்கும் போது தான் கஜன் போன் பண்ணினான்.
ஜேகே, Logo போட்டி வைக்கிறாங்க போல
ஓமடா, ஒண்ணுமே செட் ஆகல
நான் ட்ரை பண்ணி இருக்கிறன், பாக்க போறியா?
அடடா! வீட்டில இருக்கிற கடவுள விட்டிட்டு ஐயப்பன பாக்க போயி கேரளாக்காரன்கிட்ட அடிவாங்க பார்த்துட்டன். தாங்க்ஸ்டா!

logo

மொத்தமாக பன்னிரெண்டு logo க்கள் அனுப்பினான். A perfectionist. எதை எடுக்க எதை விட என்று தெரியவில்லை. பன்னிரண்டு ஹன்சிகாகளை சேலை கட்டி நிறுத்தவைத்து யார் வேண்டும் என்று கேட்டமாதிரி இருந்தது! கண்ணை மூடிக்கொண்டு நான்கை சொன்னேன்.  மூன்றை எடுத்துக்கொண்டு நான்காவதாய் தான் விரும்பியதை சேர்த்து போட்டிக்கு அனுப்பி இருக்கிறான். என்ன இதுவும் சுப்பர் சிங்கர் மாதிரி Facebook like எண்ணிக்கையில் தெரிவு செய்யபடுமாம். கஜன் இன்னோரு சத்தியபிரகாஷ் ஆக வேண்டாமே! நல்ல ஒரு Logo வை மிஸ் பண்ண கூடாது என்று நினைக்கிறேன். உங்களுக்கு பிடித்து இருந்தால்  கீழே இருக்கும் லிங்கில் சென்று அவன் படத்தை லைக் பண்ணுங்கள். வேறு logo பிடித்திருந்தால் அதையும் லைக் பண்ணுங்க (நடுவுநிலைமையாம்) 
http://www.facebook.com/pages/Yarl-IT-Hub/218986791503185

vijayakanth-seril-brindo-1மன்மதகுஞ்சு: மச்சி கரியன் ஒரு கலைஞன்டா. அந்த காலத்திலேயே வானதி அக்காவை சைட் அடிக்கும் போது, வரைஞ்ச படம் எல்லாம் சேர்த்தா ஒரு கண்காட்சியே வைக்கலாம். ஓ சாரி, அவனோட  வீட்டுக்காரம்மா வியாழமாற்றம் வாசிப்பாங்களா? இன்னிக்கு மிஷன் இம்போசிபில் ஆக்க்ஷன் தான் அவனுக்கு? விடுறா சுனா பானா.. நாங்க வாங்காத அடியா உதையா?

இந்த வார பாடல்

இந்த பாடலின் ராகம் ராஜாவுக்கு ரொம்ப பிடிக்கும் போல. பல பாடல்களில் இதன் சாயல் தெரியும். மாதா உன் கோயிலில் என்ற பாடலின் மெட்டும் இதை ஒத்ததே. இனிமையோ இனிமை. SPB எப்படி பாடியிருக்கிறார்? இருமல் வரும் போல இருக்கும், ஆனால் வராது. அந்த அவஸ்தையை கூட அழகாக காட்டி பாடியிருக்கிறார். மோகன் இயல்பாக உணர்ச்ச்களை செடேடிவ்வாக காட்டக்கூடிய நடிகர். மௌனராகம் ஒன்று போதும். அது தான் மணிரத்னம் படம் என்றாலும் கூட, இந்த “தேடும் கண் பார்வை” பாடலை கேட்டு பாருங்கள். அவரிடம் ஒரு டைமிங் சென்ஸ் இருக்கிறது. அதனால் தான் அவர் பாடல் பாடுவது போல தோன்றும் காட்சிகள் கச்சிதமாக அமைகிறது.

மணியோசை கேட்டு எழுந்து
நெஞ்சில் ஆசை கோடி சுமந்து
திரு தேரில் நானும் அமர்ந்து
ஒரு கோயில் சேர்ந்த பொழுது
அந்த கோயிலின் மணி வாசலை
இன்று மூடுதல் முறையோ!!!

 vivek2மன்மதகுஞ்சு: நீ வந்து சேருவாய் என்று கோயிலுக்கு தெரியுமா? நீ வாராய் என்று தெரிஞ்சிருந்தா அந்த கோயில் மூடியே இருக்காது பாஸ்! நீ பாட்டுக்கு ஆடி பாடி ஆற அமர போனா? பொண்ணு இருக்குமா பாஸ்! ஐயையோ நாமளா தான் உளறிட்டமோ? நான் கோயிலை தான் சொன்னன்! வீட்டில டக்கீலா இருக்கா? அடிச்சிட்டு தூங்கு! காலைல எல்லாமே ஆப் ஆயிடும்!

சவால் சிறுகதைப்போட்டி

பரிசில், ஆதி, யுடான்ஸ் சேர்ந்து நடத்திய சவால் சிறுகதைப்போட்டி பரிசளிப்பு விழா ஞாயிறு அன்று  நடந்தது. இந்திய முகவரிக்கு மட்டுமே பரிசு அனுப்பி வைக்கப்படும் என்பது போட்டி விதிமுறை. ஆனால் அதை மீறி, என் மீது வைத்த அன்பின் காரணமாகவும், புதியவனுக்கு ஊக்கம் தரவேண்டும் என்பதற்காகவும், பரிசை விட கூரியர் செலவு அதிகம் என்றாலும் கூட மனமுவந்து அனுப்பிவைப்பதாக சொல்லியிருக்கிறார்கள். கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் மம்மூட்டி சொல்வது தான் ஞாபகம் வருகிறது.
“எங்கிட்ட என்ன இருக்கு? வாழ்க்கையில் சில கேள்விகளுக்கு சீக்கிரமா பதில் கிடைக்கிறதில்ல. இதெல்லாமே … இந்த பச்சை கண் தேவதைய உங்கிட்ட கொடுக்கிறேன், பத்திரமா பாத்துக்கன்னு கடவுள் எங்கிட்ட ஒப்படைச்சிருக்கிறாரு”
“பாத்துப்பீங்களா?”

2978026369_2a3dcd55bb_oமன்மதக்குஞ்சு: டேய் அம்பானி வீட்டிலையும் லம்பாடி போட்டு திரியுற பரதேசி! நீ பெரிய எழுத்தாளரா? உன்னை போய் இந்த எழுத்த கவனமா பாத்துக்க சொல்லி கடவுள் கேட்டாரா? நீங்களே கடவுள் கனவுல வந்தார் எண்டு ரீல் விடுவீங்க. அப்புறமா ரஞ்சிதா ரூமுக்குள்ள வரவேயில்லை எண்டும் சத்தியம் செய்வீங்க. சுய தம்பட்டம் கூடிபோச்சு மகனே. உன்னை பற்றி மற்றவன் எழுதோணும். நீ எழுத கூடாது. ஆனா நாங்களும் எழுத மாட்டமே!!!
அப்புறம் ஒனக்கு பரிசு கொடுத்ததே கொஞ்சம் ஓவர். அதுக்கு கூடுதலாக கூரியர் செலவா?

ஹாட் நியூஸ்

hansika12

வெள்ளை நிறமே வெள்ளை நிறமே…
மழையில் முளையும் தும்பை நிறமே…
விழியில் பாதி உள்ள நிறமே
உனது மனசின் நிறமே உனது மனசின் நிறமே


மன்மதகுஞ்சு: மச்சி .. இன்னிக்கு வியாழமாற்றமே ரொம்ப போரடிக்குது. நாங்க எல்லாம் ஹன்சிகா கவர்ச்சி படம் பாக்க தான் ஒன்னோட பதிவுக்கே வருவோம். கொஞ்சம் கவர்ச்சியா ஆனா ஆபாசம் இல்லாம, கிளாமரஸா ஆனா வல்கரா இல்லாம ஒரு படம் போடு பாஸ்..
ரிச்சானு ஒரு பொண்ணு வந்து இருக்கு.. கண்ணுல மாட்டலியா? புதுசா ட்ரை பண்ணு தல!

Contact form