வியாழமாற்றம் (29-12-2011) : பன்னாடை ஆண்கள்

Dec 29, 2011 4 comments

பன்னாடை  ஆண்கள்!

குல்நாஸ்க்கு வயது பத்தொன்பது. ஒரு நாள் அவளின் ஒன்று விட்ட சகோதரியின் கணவன் அவளை பாலியல் வல்லுறவு செய்துவிட்டான்.  குல்நாஸ் வெளியில் தெரிந்தால் அவமானம் என்று மறைத்துவிட்டாள். கொஞ்சநாட்களிலேயே அவள் கர்ப்பம் என்பது தெரியவர, சட்டம் தன் கடமையை ஆரம்பித்தது. Guilty of sex outside marriage அடிப்படையிலும் உடனடியாக முறைப்பாடு செய்யாததற்கும் பன்னிரெண்டு வருட சிறைத்தண்டனை. yes yes, அவளுக்கு தான். அவள் சகோதரியின் கணவன் பன்னாடைக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அவளுக்கு தண்டனை ரத்தாகவேண்டும் என்றால் அவனை திருமணம் செய்யவேண்டும் என்று ஒரு கண்டிஷன் வேறு.

இது நடந்தது ஆப்கானிஸ்தானில் தான். அப்புறம் இந்த விஷயம் மீடியா மூலம் வெளியே வந்து,  அதிபர் அந்த பெண்ணுக்கு பொது மன்னிப்பு செய்ததெல்லாம் கண் துடைப்பு தான். இஸ்லாமிய ஷாரியா சட்டத்தில் வரும் ஜீனா என்ற சரத்து தான் இதற்கு காரணம். அதை மாற்றும் எண்ணம் ஹர்சாய்க்கு கிடையாது. அவர் அதை செய்யவும் முடியாது. ஆப்கான் சமூகம் ஐம்பது வருட போரினால் வங்குரோத்து கலாச்சாரமாக போய்க்கொண்டு இருக்கிறது. உலகையே மயக்கும் சூபி இசை கோலோச்சிய தேசம்.  Thousands of splendid suns வாசித்து பாருங்கள். மரியமும் லைலாவும் படும் அவஸ்தை இருக்கிறதே. ச்சே பன்னாடை ஆண்களின் தேசம்!


vivek1

மன்மதகுஞ்சு: இவனுகளுக்கெல்லாம் மைனர் குஞ்சுக்கு கொடுத்த தீர்ப்பு தான் கொடுக்கணும் பாஸ். சுட்டிட வேண்டியது தான்.

 


Cricket

283610-sachin-tendulkarMCG இல் நடக்கும் Boxing Day test match இன் இரண்டாம் நாள் ஆட்டம் பார்க்கப்போயிருந்தேன். சச்சினின் இன்னிங்க்ஸ் பார்க்க காணக்கண் ஆயிரம் வேண்டும். தலயின் கவர் டிரைவ் ஒன்று, பரவசத்தில் பின்னால் ஆஸ்திரேலியர்கள் ரொம்ப தண்ணியில் இருக்கிறார்கள் என்ற விவஸ்தை கூட இல்லாமல் எழுந்து கை தட்டிவிட்டேன். !@#$ing !@#$%^, Sit down என்று கத்தினார்கள். சுற்றும் முற்றும் பார்த்தேன். கைப்பிள்ளையை தனிக்காட்டில் விட்டு விட்டு வந்தவங்கள் எல்லாம் எஸ்கேப் ஆயிட்டான்கள். அடுத்தடுத்த பௌண்டரிக்கு எல்லாம் அமத்திக்கொண்டு இருந்துவிட்டு, சச்சின் அவுட் ஆகும்போது எழுந்து ஆக்ரோஷாமாக கைதட்டினேன். பெருமையாக இருந்தது!

vivek_0016மன்மதகுஞ்சு: இது நமக்கு புதுசா என்ன? விடுடா விடுடா சுனா பானா, அது சரி,  ஆஸ்திரேலிய சம்மர் டெஸ்ட் மாட்சில எல்லாம், மேல் சட்டை போடாம பிகருங்க இருக்குமாமே? பாத்தியா நீயி?

இந்த வார புகைப்படம்

எனக்கும் photography க்கும் வெகுதூரம். இந்த வாரம் ஒரு காட்டுப்பகுதியில் காம்பிங் போயிருந்தோம். Wild life photography க்கு ஏகப்பட்ட situations. கேமரா கொண்டுபோகவில்லை. கமராவே என்னிடம் இல்லை! ஆனால் அப்படியே அமர்ந்து அந்த கொள்ளை அழகை ரசித்துக்கொண்டே இருக்கலாம். ஆளே இல்லாத ஒரு காட்டில் அழகான அருவி ஓடிக்கொண்டு இருந்ததை, இரண்டு மணி நேரம் நடந்து கண்டுபிடித்தோம். அருவிக்கு பெயர் ஸ்னோ ரிவர்(Snow River). எனக்கு அங்கேயே அன்று முழுதும் உட்கார்ந்து புத்தகம் படிக்கவேண்டும் போன்று இருந்தது. நம்மோடு வந்தவர்கள் என்னை கொலை பண்ணி அங்கேயே குழி தோண்டி புதைத்து விடுவார்கள் என்பதால் மனமில்லாமல் விடைபெற்றேன். நண்பி அமுதா ஒருமுறை கணவனுடன் போர்னியோவில் இருக்கும் சபா என்ற கடலோர காட்டுப்பகுதிக்கு  சென்று, இருவருமே புத்தகம் வாசித்துக்கொண்டு இருந்ததாக சொன்னாள். நான் ஒரு முறை தனியாகவேனும் செல்லவேண்டும்.
இந்த வருட ஆரம்பத்தில் நண்பர்களுடன் இலங்கையில் மத்திய மலை நாட்டில் இருக்கும் “தேமோதர” என்ற இடத்துக்கு போயிருந்தோம். நான் தற்செயலாக சயந்தனை பின்னால் இருந்து எடுத்த போட்டோ. அருமையாக வந்திருந்தது.
5828305575_bced9595d5

41654_100001612310791_4570591_nமன்மதகுஞ்சு: மச்சி, ப்ளீஸ் அடுத்தமுறை காட்டுக்குள்ள தனியா போய் காம்ப் அடிச்சு என்ன கருமத்தையோ வாசிச்சிட்டிரு. சிங்கமோ, புலியோ, அட்லீஸ்ட் ஒரு பன்னியோ ஒன்ன கொன்னு போடட்டும். விட்டுது சனியன் என்று ஜாலியா இன்டர்நெட் பாக்கலாம். காட்டில ராஜ்குமாரை எல்லாம் கடத்துறாங்க. ஒன்னயல்லாம் என்ன எழவுக்கடா விட்டு வைக்கிறாங்க? 

இந்த வார பாடல்

இந்த துரியோதனன் இருக்கிறானே, அவன் எப்போது பார்த்தாலும் அரச வேலையாகவும், பாண்டவரை எப்படி ஒழிக்கலாம் என்று சதா சிந்திப்பதிலும் பிஸியாக இருக்கிறான். அவன் மனைவி பானுமதி, an intelligent and romantic lady.  இவன் பாவி தன்னை கவனிப்பது இல்லை என்று அவளுக்குள் ஏக்கம். அந்தப்புரத்தில் தோழியருடன் பாடுகிறாள். இது situation. இசை விஸ்வநாதன். மெட்டு அமர்க்களம். சேவாக் போல அவர் அடித்து ஆடிவிட,  இப்போது கண்ணதாசன் பாட்டிங் செய்யவேண்டும். தல தான் சச்சின் ஆச்சே. அத்தனை ஷாட்களும் கண்களில் ஒற்றி எடுக்கும் அழகு.  கண்ணதாசன் எத்தனை ரசிகன்பா!
என்னுயிர்த் தோழி கேளொரு சேதி
இதுதானோ உங்கள் மன்னவன் நீதி?      (என்)

தன்னுயிர் போல மண்ணுயிர் காப்பான்
தலைவன் என்றாயே தோழி        (என்)

அரண்மணை அறிவான் அரியணை அறிவான்
அந்தப்புரம் ஒன்று இருப்பதை அறியான்
வருகின்ற வழக்கைத் தீர்த்து முடிப்பான்
மனைவியின் வழக்கை மனதிலும் நினையான்   (என்)

இன்றேனும் அவன் எனை நினைவானோ
இளமையைக் காக்க துணை வருவானோ
நன்று தோழி நீ தூது சொல்வாயோ?
நங்கையின் துயரச் சேதி சொல்வாயோ?    (என்)சுசீலாவின் குரல் கணீரென்று காதல் செய்ய காட்சியமைப்பும் கவிதை போல இருக்கும். பார்த்துக்கொண்டே இருக்கலாம்! துரியோதனனும் கர்ணனும் ஒளிந்திருந்து பார்ப்பதும், பானுமதியின் நயங்களும், ச்சே சான்ஸே இல்ல!
vadivelu09

மன்மதகுஞ்சு: சாவித்திரி இடுப்ப பார்க்கும் பொது, நம்ம பாட்டி தேங்காய் சம்பல் இடிக்கிற உரல் ஞாபகம் வருதில்ல? ஐயோ ஐயோ!

ஹாட் நியூஸ்

நண்பன் திரைப்படம் வெளியாகப்போகிறது. அவனவன் ஐஞ்சு வருஷத்துக்கொரு முறை ஆட்சி மாத்துகிறான். நாங்கள் ஐஞ்சு வாரத்துக்கு ஒருமுறை ஆளையேனும் மாற்றவேண்டாமா? ஹன்சிகா மேடம், ஐ ஆம் சாரி. இனி இலியானா தான் என் வாழ்க்கை!

Ileana-actress-wallpapers (3)

ஒத்தமரம் போல செத்துக்கெடந்தனே
ஒன்னப்பாத்த பின்னே உசுரு மொளச்சதே
சொந்தமா கிடப்பியா? சாமிய கேப்பேன்

e0c72363-28bf-4840-9129-b94bb59fa8c11மன்மதகுஞ்சு: நீ தாண்டா நேசமான மைனர் குஞ்சு , ஒன்ன தாண்டா மொதல்ல சுடணும்! ஹன்சிகா, ஸ்ருதி அப்புறமா இலியானாவா? பன்னி கூட பார்த்தா வாந்தி எடுக்கிற மூஞ்சிக்கு இதெல்லாம் ரொம்ப ஓவர்டா டேய்!

Comments

 1. >எனக்கும் photography க்கும் வெகுதூரம்

  நானும் அப்படித்தான். ஆனால் ஒரு வித்தியாசம். நான் எடுக்கும் புகைப்படங்கள் அழகானவை என்று define பண்ணிவிடுவேன் :-)

  ReplyDelete
 2. எங்கட வீட்டில நாங்க தானே ராசா சக்திவேல்

  ReplyDelete
 3. தேமோதர ரயில் பாதை, இலங்கையில் அநேகம் பேசப்படாத ஒரு அழகிய இடம். ஒரு முறை பணி நிமித்தம் ஹப்புத்தளையிலிருந்து, பதுளை போகும்போது, வழியில் தேமொதரவுக்கு போய், அதன் சுற்று ரயில் பாதையில் ஒரு நடை நடந்தோம். மெல்லிய குளிர்காற்றும், இயற்கையின் அளவற்ற பேரழகும் நிறைந்த அந்த பாதையில் ஒரு சுரங்கவழி. அதனருகில் நாங்கள் நின்றபோது தலையில் சுமையுடன் சில பெண்கள் எம்மை கடந்து போனார்கள். அப்போது நான் எடுத்த ஒரு புகைப்படம், எனக்கு மிகவும் பிடித்த ஒரு படம்.
  https://picasaweb.google.com/116909742489795164084/Demothara?authkey=Gv1sRgCOfuqOHZ6OXrEA#5693922293648274018

  ReplyDelete
 4. தெமோதர வியூஸ் எல்லாம் கொள்ளை அழகு. அந்த பயணம் .. நீண்ட ரயில் பாதை நடை .. அந்த பாலம் .. அழகோ அழகு!

  ReplyDelete

Post a comment

Contact form