வியாழமாற்றம் (05-01-2011) :விராட் கோலி

Jan 5, 2012

மணவாளனும் மதிகெட்ட மனைவி மகிந்தாயினியும்!

art-svKOHLI-420x0காணி தாருங்களேன்
காணியா? அய் … ஆசைய பாரு!
காவல் துறையாவது ப்ளீஸ்
போடாங் .. சிரிப்பு பொலிஸ் கூட  தர முடியாது 

சுயாட்சிக்கு சம்மதிச்சீங்களே
அது போன வாரம். இது இந்த வாரம்.
அப்ப நாங்க தனியா ஒண்டுமே செய்ய முடியாதா?
செய்யலாமே .. எல்லாரும் தனியா கக்கா போகலாம்!
அப்ப பேச்சு வார்த்த, தெரிவுக்குழு எல்லாம்?
அது உங்களுக்கு கோவணம் என்ன கலரில தைக்கோணும் எண்டு முடிவு செய்யிறதுக்கு?
ஆ அருமை, நாங்களும் பயந்து போனோம், எங்கே பேச்சு வாரத்தையை முறிச்சிடுவீங்களோ எண்டு!
உங்கட தரப்பு தான் பேச்சு வார்த்தைய முறிக்கும். நாங்க என்னிக்குமே முறிச்சது இல்ல, முதல்ல கிரிக்கட் விளையாடலாமா?
ஓ ஆடலாமே? நாங்க பாட்டிங்கா பௌலிங்கா?
நீங்க ஆணியே புடுங்க வேணாம், அதெல்லாம் நாம பாத்துக்கறோம். நீங்க தேர்ட் மான்ல பந்து பொறுக்கினா போதும்! சகோதர்கள் போல ஒண்ணா விளையாடலாம்!
(இடையில் புகுந்த தாடிக்காரர்)அய் நான் தான் பொறுக்குவேன் .. நான் தான் பொறுக்குவேன்!
ம்கும் ம்கும், அப்படி கண்டவன் எல்லாம் பொறுக்கமுடியாது. எங்களுக்கு தான் சனம் வாக்களித்து இருக்கு . முதலில் கோவணம் பற்றி பேசலாம். அப்புறம் கிரிக்கட் ஆடலாம். எங்களுக்கு சிவப்பும் மஞ்சளும் சேர்ந்த கலரில் தான கோவணம் வேண்டும்
முடியாது, இது தான் உங்கள் பிரச்சனை. அவனின் அஜெண்டா படியே நீங்கள் செயல் படுகிறீர்கள். நான் சொல்கிறேன், நீலக்கலர் கோவணம் தான் நீங்கள் அணியவேண்டும்.
இதில் கூட முடிவு எடுக்கமுடியாதா? பரவாயில்லை, கருநீலம் தருவீங்களா? ஆகாய நீலம் தருவீகளா? கோவணத்தில் கோடு வைத்த டிசைன் போடும் அதிகாரமாவது எமக்கு கிடைக்குமா?
போடாங், இது சரிவராது, நீ அளவுக்கு அதிகமாய் கேட்கிறாய், எனக்கு போர் அடிக்கிறது, முதலில் கிரிக்கெட் ஆடுவோம் வா!
இது வெறும் நகைச்சுவை இல்லை. பிச்சை வேண்டாம் நாயை பிடி என்றால், பிச்சையும் தராமல் நாயையும் விரட்டி விடுகிறார்கள். கல்லெடுத்து அடிக்க பக்கத்தில் கல்லும் இல்லை. இரண்டு கையும் இல்லை. கையறு நிலை தான் இது. ஆனாலும் அவனோடு தான் பேச வேண்டும். அப்போது தான் அவன் ஒன்றுமே தர தயாராக இல்லை என்று உலகம் முழுதும் கூவவாவது முடியும். பேசாமல் ஒதுங்கினால், யாராவது பன்னாடை இடையில் புகுந்து நாயையும் குளிப்பாட்டி நாயுக்கு போடும் உணவையும் கெஞ்சி கூத்தாடி வாங்கிவிடுவான். அப்புறம் எல்லோருக்குமே ஆப்பு தான்!
அவ்வை பாட்டி ஒருநாள் தன் அபிமானி ஒருவனது வீட்டுக்கு போனாராம். அங்கே அவன் மனைவி அவனை படாத பாடு படுத்துகிறாள்.  சோறு போடும் போது சிதருகிறது. பருப்பு  முழுதும் தலை மயிர் இழுபடுகிறது. சொதியை நின்ற நிலையில் இருந்து இலையில் ஊற்றுகிறாள். கேட்கப்போன கணவனை பத்திரகாளியாட்டம் வைகிறாள். கணவன் கோபப்படாமல் அவ்வைக்கு தானே வந்து பரிமாறுகிறான். மனைவியை உள்ளே அழைத்து போகிறான். அவள் இன்னமும் திட்டுக்கொண்டே இருக்கிறாள். இவன் சமாளித்துக்கொண்டே போகிறான். அவ்வைக்கு மனம் பொறுக்கவில்லை. ஆத்திரத்தில் பாடிவிட்டார்.
owvaiyar

“சண்டாளி சூர்ப்பனகை தாடகை போல் வடிவு
கொண்டாளைப் பெண்ணென்று கொண்டாயே தொண்டர்
செருப்படி தான் செல்லாவுன் செல்வமென்ன செல்வம்
நெருப்பிலே வீழ்ந்திடுதல் நேர்”
 
 
 
 
பாடிக்கொண்டே மீதியை சாப்பிடாமல் வெளியேறிவிட்டார். அவ்வை வெறும் விசிட்டர் தானே. பாடி விட்டு அடுத்த வேளை சோற்றுக்கு வேறு இடம் போய்விடலாம். அவ்வை அப்படி பாடிக்கொண்டு போனது மனைவியை இன்னமும் ஆத்திரப்படுத்த, அன்றிரவே படுக்கையில் வெட்டிவிட்டாள். கணவனின் கையை தான்! புரிகிறதா. இங்கிருந்து கொண்டு நாம் என்ன வேண்டுமானாலும் எழுதலாம்.கோஷம் போடலாம். ஆனால் ஒரே வீட்டில் வாழ்பவர்கள் சூதானமாக தான் நடக்க வேண்டும். ஒன்றாக படுக்கும் போது, கத்தியை எடுத்து அவள் செருகிவிட்டால்? அவ்வைத்தமிழர்களே, பாடும்போது அந்த கணவன்தமிழர்கள் பக்கத்தையும் யோசித்து பாடுங்கள்!
மன்மதகுஞ்சு : இங்கால பக்கம் இனி தலை வச்சு படுப்ப நீயி? உனக்கு சிவப்பு கம்பள வரவேற்பு ஏர்போர்ட்ல இருக்குடி .. வாடி வா!!

விராட் கோலி

இன்றைக்கு எந்த வெப்சைட் திறந்தாலும் நம்மை பார்த்து நடுவிரலை காட்டுகிறார் விராட் கோலி. சிட்னி டெஸ்டில் ரசிகர்கள் அவரின் அக்காளையும் அம்மாவையும் வசை பாடி இருக்கிறார்கள். நான் போன வாரம் மெல்போர்ன் பாக்சிங் டே டெஸ்ட் மேட்ச் பார்க்கப்போயிருந்தேன். தெரியாத்தனமாக ஆஸ்திரேலியர்கள் இருக்கும் இடத்தில் சீட் பிடிக்க, சேம் பிளட், ரெட் ப்ளட். ஆனால் விரல் காட்டி இருந்தால் அன்றைக்கு நான் வீடு போயிருக்கமுடியாது. ஆஸ்திரேலியாவில் எல்லாவற்றுக்கும் fucking என்ற அடைமொழி சேர்ப்பார்கள். அதை பெரிதாக யாரும் அலட்டிக்கொள்வதில்லை. அதே போல நடு விரல் காட்டுவது offensive தான் என்றாலும் கூட, சாலையில் போகும் போது பெண்களை பார்த்து கண் அடித்தால், சிம்பிள் ஆக நடுவிரல் காட்டிவிட்டு சின்னதாக சிரிப்பார்கள்! எங்களுக்கு எப்போ ரோஷம் வந்திச்சு? விரல் காட்டியதே போதும் என்று அன்று முழுக்க தூங்க மாட்டோம்! 

MAINbombay
மன்மதகுஞ்சு: அக்கா அம்மாள பத்தி தப்பா சொன்னா யாருக்கு தான் கோபம் வராது? ஆனா ஹர்பஜன் சைமண்ட்ஸ் அ பார்த்து குரங்கு எண்டு தான் சொல்லயில்ல, அவன் அம்மாவ தான் தப்பா சொன்னன் எண்டு சொன்னாப்ல, அதுக்கு பஞ்சாபில விழா எல்லாம் எடுத்தாங்களே.. ஒண்ணுமே புரியல பாஸ்!

செவாலியே

செவாலியே விருது ஞாபகம் இருக்கிறதா? சிவாஜியை பத்மபூஷன் சிவாஜி என்று சொல்லமாட்டோம். செவாலியே சிவாஜி கணேஷன் என்று கெத்தாக சொல்வோம். பிரான்ஸ்காரன் கொடுத்தது இல்லையா? பாலமுரளிகிருஷ்ணாவுக்கு கூட கொடுத்தார்கள். இந்த விருது நெப்போலியன் காலத்து விருது. பாரம்பரியமானது தான். ஆனால் அதை வாங்குவது ஒன்றும் பெரிய விஷயமில்லை என்பது இந்த வருடம் சல்மா ஹயக்குக் கொடுத்ததன் மூலம் நிரூபித்து இருக்கிறார்கள்.

Letterman show வில் சல்மா!
யாரு இந்த சல்மா? மெக்ஸ்சிகன் அமெரிக்கன் நடிகை.  சல்மா ஒரு கில்மா நடிகை! சல்மா திறமைசாலி தான். ஆனால் செவாலியே வாங்கும் அளவுக்கு திறமை எங்கிருந்து வந்தது? அவர் கணவனிடம் இருந்து தான் வந்தது. கணவன் பிரான்சில் மகா பணக்காரன். பிரான்ஸ் அதிபர் சார்கோசியின் நண்பர், டோனர். அவ்வளவு தான்! இது போதுமே!
இப்போது புரிகிறதா சர்ப்பம் எப்படி  கர்ப்பம் தரிக்கிறது என்று? எருதுக்கு எப்படி விருது கிடைத்தது என்று?
மன்மதகுஞ்சு: மச்சி எனக்கெண்டா சிவாஜி தான் இந்த விருதுக்கு தகுதியில்லனு படுது. இத விட நமீதாவுக்கு எவ்வ்வ்வ்வ்வ்ளவு தகுதி இருக்குது பாஸ்?

இந்த வார நெகிழ்ச்சி

நண்பன் கஜேந்தி, என் பதிவுகளை வாசித்தாலும் பிடித்தது, பிடிக்கவில்லை என்று ஒன்றுமே சொல்லமாட்டான். வாசிக்கிறான் என்பதே எனக்கு சந்தோசம் தான். இந்த நிலையில் தான் என்னுடைய ஐம்பதாவது பதிவுக்கு ஒரு காமென்ட் போட்டு இருக்கிறான்!
வாழ்த்துக்கள் மச்சான்,
எல்லாப்பதிவுகளும் அருமை. குட்டி, சுந்தரகாண்டம், கடவுள்கள் துயிலும் தேசம் மற்றும் அக்கா போன்றன நெஞ்சை தொட்டன. இதையெல்லாம் தொகுத்து புத்தகமா அடிப்பம். (முதல் பதிவு வெளியீடு சிங்கப்பூரில்) அது என் வீட்டு நூலகத்தில் இருக்கவேண்டும்.
நானெல்லாம் ஒரு வரி எழுத நூறு முறை யோசிப்பேன், இன்னும் ஐம்பது பதிவுக்குப் பிறகுதான் அடுத்த comment போடுவேன், என்னைப்போல நிறையப்பேர், வாசிக்க மட்டும் செய்பவர்கள். அதனால், அதிகம் comment இல்லையே என்று ஏக்கம் தேவையில்லை.
Keep writing

மற்றையது செந்தில் அண்ணாவிடம் இருந்து, பதிவுகளை வாசித்தாலும் அவரிடம் இருந்து பாராட்டு பெறுவது என்பது காளை மாட்டில் பால் கறப்பது போல! அவருடன் ஐந்து வருடங்கள் வேலை செய்திருக்கிறேன். கடுமையான perfectionist. ரொம்ப பிடித்தால் மாத்திரமே ஒரு வரியில் பாராட்டுவார். ஆனால் சொன்னால் அது திருவாசகம் தான். அந்த திருவாசகம் இங்கே!
[1/01/2012 6:36:10 PM] Senthil: You are really great writer...
[1/01/2012 6:37:35 PM] Senthil: Lucky guy, I really feel what i missed in my life after seeing you...
 
மன்மதகுஞ்சு: இந்த கஜேந்தி தானேடா பத்து வருஷமா உங்கட பாட்ச் ரெப்பா இருக்கிறானு! சச்சின் ரெடைர் ஆனாலும் இவன் இருப்பாண்டா!

Yarl IT Hub

Yarl IT Hu bஇல்  வெளியே சொல்லக்கூடியவாறாக நான்கு முயற்சிகளை ஆரம்பிக்கலாம் என்று இருக்கிறோம்.
  • யாழ்ப்பாணத்தில் ஒரு IT innovation போட்டி ஒன்று நடத்துவது. இதில், பல்கலைக்கழகம், ஏனைய நிறுவனங்கள், ஐடி துறையில் வேலை செய்யும் நம்மவர்கள், துறை சார் நிபுணர்கள் எல்லோரும் இணைந்து ஐந்தாறு குழுக்களாக பிரிந்து போட்டி போட போகிறார்கள். எல்லாமே யாழ்ப்பாணத்தில் தான் நடக்கும். விரிவான போட்டியின் ப்ரோபோசல் தயாராகிவிட்டது. பல நிறுவனங்கள் ஆதரவு தெரிவிக்கின்றன. இணைகின்றன. நீங்கள் துறை சார் பணியாற்ற முடியுமா? குழுக்களை ஸ்பொன்சர் செய்ய முடியுமா? போட்டியின் இணை அனுசரணையாளராக முடியுமா? யோசித்து வையுங்கள். விரிவாக எழுதுகிறேன். தனிப்பதிவில்!
  • கிராமப்புறங்களில் நூலகங்கள் அமைப்பது. அல்லது ஊராக நூலகங்களுடன் இணைந்து தொழில்நுட்ப awareness நிகழ்வுகள் நடத்துவது.
  • Toastmasters போன்று communications and presentations skills சார்ந்த சந்தர்ப்பங்களை வழங்கக்கூடிய கிளப் ஒன்று அமைப்பது.
  • ySchool என்று புதிதாக ஒரு opensource project ஆரம்பிப்பது. இந்த மென்பொருள் School Management System சம்பந்தப்பட்டது. விசேடமாக பாடசாலைகள் கல்லூரிகள் பயன்படுத்தக்கூடிய இலகு மென்பொருள். இதில் துறை சார்ந்த நிபுணர்கள் யாருமே கலந்து கொள்ளலாம். முழுக்க முழுக்க opensoure, எங்கிருந்தும் பணிபுரியலாம். மேலதிக விவரங்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள். விரிவாக எழுதவும் செய்கிறேன்.
மன்மதகுஞ்சு: இப்ப தான் கொஞ்சம் கொஞ்சமா Yarl IT Hub சூடு பிடிக்கிறாப்ல. ஒலகம் முழுக்க எங்கட ஆக்கள் எப்பிடி பிரயோசனமா உதவலாம் எண்டு நினைச்சுக்கொண்டு இருக்கிறாங்களே. எப்பிடியும் அடி பின்னிட மாட்டாங்க?

இந்த வார பாடல்

படத்தின் பெயர் மறந்துவிட்டது. ஒரு தெலுங்கு டப்பிங் படம் தான். சௌந்தரியா நடித்திருந்தார். காட்சி முக்கியம் இல்லை. பாட்டு தான்! இது வந்தது 98ம் ஆண்டாக இருக்குமா? அந்த நேரம் எஸ்பிபி ஆட்சி கொஞ்சமே அடங்கி ஹரிகரனும் உன்னியும் கோலோச்சிக்கொண்டு இருந்த காலம். இந்த பாடல் வந்து எம்மை எல்லாம் நிமிர்ந்து பார்க்க வைத்தது. அதே பழைய எஸ்பிபியின் குழைவு, பாவம் எல்லாமே இருந்தது. அற்புதமான மெலடி. இதுவும் அரிச்சந்திரா படத்து நாடோடி பாட்டு பாட என்ற பாடலும் எஸ்பிபியின் come back பாடல்கள் என்று கூட சொல்லலாம்.

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை” என்ற பாடலை போய் இப்போது கேட்டு பாருங்கள். அதில் “ஆனால் அது ஒரு குறையில்லை” என்ற வரிகள் வரும் இடமும் இந்த பாடலில்  “உனக்கு என்றும் தேய் பிறை இல்லை இல்லை, இனி என் பாட்டிலே” என்ற இடமும் ஒரே மெட்டில் அமைந்து இருக்கும். சங்கீதம் தெரிந்தவர்கள், ஒரே ராகமா? என்று கொஞ்சம் பார்த்து சொல்லுங்க ப்ளீஸ்!
இதை கண்டுபிடித்த போது அக்காவிடம் யுரேகா என்று கத்திக்கொண்டே ஓடிப்போய் சொன்னேன்! அக்கா இப்ப அதுக்கென்ன? என்று கேட்டுது. அய் ஆம் பினிஷ்ட்!
மன்மதகுஞ்சு: மச்சி, ஆக்கிமிடிஸ் குளிச்சு முடிக்கும் முன்னாலேயே யுரேகா எண்டு கத்திக்கொண்டு போனாரில்ல? அப்புறமா மீதி குளியல் குளிச்சாரா? சோப்பு நுரை என்ன ஆச்சுது? ஒருக்கா ஹிஸ்டரியை ரெபர் பண்ணி சொல்றியா? வரலாறு முக்கியம் அமைச்சரே!

ஹாட் நியூஸ்

அன்புள்ள மேகலாவுக்கு
hansika sruthi hasan o my friend-789512எனக்கும் ஸ்ருதிக்கும் இடையில் ஏதோ இது என்று பத்திரிகைகள் கொட்டம் அடிக்கிறது. உன் குடும்பத்தார் கூட கடும் கோபத்தில் இருப்பதாக செய்தி வந்தது. காலையில் நான் கண் விழிக்கும் போது ஹன்சிகா காப்பி போட்டுக்கொண்டு என் முன்னே நிற்பாள் என்றெல்லாம் கூட கிசு கிசு வருகிறது. நீ எதையும் நம்பாதே. உனக்கு தெரியும் நம் காதல் எவ்வளவு வீக் என்று! ஆக உன்னையல்லால் ஒரு பெண்ணை இனி நான் உள்ளத்தினாலும் தொடமாட்டேன். என் உள்ளம் இருப்பது ஹன்சிகாவிடம், அதை உயிர் போனாலும் தர மாட்டேன்.
அன்புடன்,
குமரன்!
மன்மதகுஞ்சு: தம்பிரி, உன்னோட தங் சிலிப் ஆகி ஹன்சிகானு கடிதத்தில போட்டிருக்க. இப்ப புரியுது யேன் ஒனக்கு மேகலா கிடைக்கல எண்டு!

Contact Form