வியாழமாற்றம் (12-01-2011) : வடக்கு தேய்கிறது, தெற்கு வளர்கிறது

Jan 12, 2012 11 comments

வடக்கு தேய்கிறது, தெற்கு வளர்கிறது

1948ம் ஆண்டு ஜனநாயக குடியரசாக இந்த நாடு மாறுகிறது. சீனாவையும் ரஷியாவையும் காக்கா பிடிக்கிறது. அந்த நாடுகளும் அமரிக்காவை ஏய்க்க ஒரு நல்ல துரும்பு சீட்டாக இதை பயன்படுத்துகின்றன. முதலில் ஒரு ஜனாதிபதி வந்தான். நாய்க்குட்டி வளர்ப்பது போல, நாட்டுக்கு தானே ஒரு கொள்கை ஒன்றை உருவாக்கி வளர்த்தான். கொள்கையா? எத்தனை கிலோ? வெறும் கொள்ளை தான்!
தானும் தன் சந்ததியும் காலம் காலமாய் இந்த நாட்டை ஆளவேண்டும். அதற்கு என்ன எல்லாம் செய்யவேண்டுமோ அதெல்லாமே செய்தான். அரசமைப்பை மாற்றினான். எதிர்த்தவர் அட்ரஸ் அம்பேல். இராணுவ தலைவர்கள் பலர் உள்ளே. பாலர் பள்ளியில் இருந்து பல்கலைக்கழகம் வரை புத்தகங்கள் எல்லாம் அவன் புகழ் பாடுகின்றன. படிப்பும் இலவசம். மருத்துவமும் இலவசம். ஜனங்க கேள்வியே கேட்க முடியாது. கேட்டவன் அடுத்த நாள் காலைல இந்த உலகத்திலேயே இருக்கமாட்டான். 
north_korea_0546 ஆண்டுகள் ஆட்சி என்ற கருமாந்திரத்தை செய்துவிட்டு அவன் மண்டையை போட, அவன் மகன் அடுத்ததாக வந்து இன்னொரு 17 வருஷம் கொடுமை மேல் கொடுமை. அவனுக்கு வெளியில் தெரிந்து மூன்று பசங்க! பசங்களை பப்ளிக்காக காட்டி வளர்க்கவில்லை. அப்பன் போன வாரம் சாகும் போது,  எங்கிருந்தோ ஒரு மூத்திரசந்துக்குள்ளால மூன்றாவது மகன் உள்ளே வந்தான். அப்போது தான் அவன் மூஞ்சியே மக்களுக்கு தெரிகிறது. டிவி முழுக்க அவன் புராணம். குதிரை ஓடுறான். டாங்கி ஓடுறான். தக்காளி, ரக்பி ஒண்ணு தான் ஆடேல! டிகிரி காபிய குடிச்சிட்டு ரெண்டு டிகிரி எடுத்திட்டன் என்று பீத்துகிறான். அப்பன் கூட கள்ள சர்டிபிகேட் என்று கேள்வி!
இப்போது 26 வயசு, நாட்டின் ஜனாதிபதி. இன்டர்நெட் எல்லாம் பில்டர்கள் போட்டு விஞ்ஞான வெப்சைட்கள் மட்டும் தான் நாட்டில் பார்க்கலாம். பற்றாக்குறைக்கு அணு ஆயுதம் கூட வைத்திருக்கிறது.
வடகொரியா ஆட்சி, நவீன நீரோ மன்னர்களுக்கு எல்லாம் ரோல் மாடலாக திகழ்கிறது. எங்கள் போதாக்காலம் கேக் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறோம். 
சரி இவன் தான் இப்பிடி. இந்த அமெரிக்காகாரன் செய்யிற அநியாயத்த பாருங்க!
அமரிக்கா இப்போது இந்த வீடியோ  உண்மையானதா என்று விசாரிக்கிறதாம். உண்மை என்று தெரிந்தால் தண்டனை கொடுக்கப்படும் என்றும் சொல்கிறார்கள்.
0மன்மதகுஞ்சு : நம்ம கோத்தா எண்டா, வீடியோ பார்க்காமலேயே போலி எண்டு சொல்லி இருப்பானேடா! ஆப்கான் டயாஸ்பரா தான் CNN க்கு பணம் கொடுத்தது இதை செய்விக்கிறது எண்டும் சொல்லுவான்.

கிரிக்கெட்

india-australia-tour3நாளை Perth இல் டெஸ்ட் மாட்ச். Perth பிட்சில் வேகப்பந்து ஒன்றுக்கு இரண்டு மடங்கு எகிறும். சென்ற முறை இந்தியா வென்றுவிட்டது. அப்போது அணி நல்ல போர்மில் இருந்தது.  ஆனால் இப்போதோ இந்திய அணி இலங்கை, கென்யா அணிகளின் ரேஞ்சுக்கு பர்போர்மன்ஸ் கொடுத்துக்கொண்டு இருக்கிறது. சச்சின் மாத்திரமே நன்றாக ஆடுகிறார். எல்லோருக்கும் இன்னிக்கு இரவு வயிற்றை கலக்கும் என்று நினைக்கிறேன். யோசித்தபோது இந்த முதல்வன் படத்து சீன் தான் ஞாபகம் வருகிறது.
மைக்கல் கிளார்க்கை அர்ஜூன் ஆகவும், ரகுவரனை டோனியாகவும் நினைத்துப்பாருங்கள்! அவ்வ்வ்வ்வ்
Vivek-Comedy-Manathai-Thirudi-Viddaai-YouTubeமன்மதகுஞ்சு: டோனி பையா, நீயி என்ன தான் டாய்லட்டுக்க போயி ஒளிஞ்சு இருந்தாலும், இழுத்துக்கிட்டு வந்து கிரவுண்ட்ல வுட்டிடுவாங்க!  ஆடியே ஆகணும் தம்பிரி!!

கக்கூஸ்

கக்கூஸ் சிறுகதை ஓரளவுக்கு நல்ல விமர்சனங்களை பெற்றுக்கொண்டு இருக்கிறது. பல நண்பர்கள், இப்போது தான் கொஞ்சம் எழுத்து செட்டில் ஆகி இருக்கிறது என்றார்கள். அக்கா தான் முதன் முதலில் வாசித்தது. அப்போதே சொல்லிவிட்டார், புதுசா இருக்கு, நிச்சயம் கிளிக் ஆகும் என்று. நீங்கள் எல்லோரும் இப்படி ஆதரவு தருவீர்கள் என்றால் எழுதிக்கொண்டே இருக்கலாம்.
T.Rajendar (1)மன்மதகுஞ்சு: நாதாரி, நாத்தம் தாங்க முடிய இல்ல. இதுக்கு  லக்கியம் ரேஞ்சில நீயே விமர்சனம் சொல்லுவியா? டீ ஆர் இதுக்கு தேவலாம்!

இந்த வார நெகிழ்ச்சி 

ஜூட் அண்ணா, மெல்போர்னில் அறிமுகமானவர். என் எழுத்தை தொடர்ந்து வாசிப்பவர். ரோஜா பற்றிய பதிவை  வாசித்துவிட்டு தொலைபேசியில் பேசும் போது, உணர்ச்சிவசப்பட்டு பெரும் சத்தமே போட்டு விட்டார். அவருக்கு ரோஜா வெளியானபோது பத்தொன்பது வயசு. பன்னிரெண்டு வயசிலே நீயே இவ்வளவு பீல் பண்ணி இருக்கும் போது, பத்தொன்பது வயசில நாங்க எவ்வளவு பீல் பண்ணி இருப்போம் என்றார். சொல்லிவிட்டு அவர் தன்னுடைய ரோஜாவின் உண்மைப்பெயரும் சொன்னார்! சேம் ப்ளட், ரெட் ப்ளட்!
அம்மா இந்த வாரத்து கொல்லைபுறத்து காதலிகள் வாசித்து விட்டு,  மீண்டும் ஒரு முறை 77 கலவரம் பற்றி பேசினார். பேசியது முழுவதையும் எழுத முடியவில்லை. மேலும் நாங்கள் ஏறிய ஸ்டேஷன் கோண்டாவில் இல்லை, கொக்குவில் என்று திருத்தமும் சொன்னார்.
அம்மாவிடம் இருந்து தான் எனக்கு இந்த வாசிப்பு வியாதி தொற்றி இருக்கவேண்டும். கடல்புறா முதலாம் பாகத்தில் நான் இருக்கும் போதே, மூன்று பாகங்களையும், சிவகாமியின் சபதத்தையும் முடித்துவிட்டு இப்போது கணையாழியின் கடைசி பககங்களுக்கு தாவிவிட்டார். அம்மாவுக்கு புத்தகம் வாங்கிக்கொடுப்பது என்பது யானைக்கு தீனி போடுவது போல. போண்டியாகவேண்டியது தான்!
Vadivelu-pictureமன்மதகுஞ்சு: டேய் கஜனிண்ட மூத்த பையன் கூட கலியாணம் கட்டி அப்பா ஆகப்போறான்! நீயி இன்னுமாடா அம்மா அப்பாவோட  இருந்து ஐஸ் கிறீம் சாப்பிட்டுக்கிட்டு இருக்கே? இது தெரிஞ்சா வெள்ளைக்கார பொண்ணுங்க ஒண்ணுமே ஒன்ன அண்டாதேடா? 

ஆப்பிள்

ஆப்பிள் அண்மையில் ஹைட்ரஜனை பாவித்து பாட்டரி உருவாக்கும் தொழில்நுட்பத்துக்கு காப்புரிமை எடுத்து இருக்கிறது. ஐபோன், ஐபாட் போன்றவற்றுக்கு பாவிக்கபோகிரார்கள். இந்த வகை பாட்டரிகள் பல வாரங்களுக்கு சார்ஜ் இறங்காமல் இருக்குமாம். வெயிட்டும் குறைவு. அது கிடக்கட்டும்.
அதன் காப்புரிமை விண்ணப்பத்தில் இருந்த ஒரு வசனம் என்னை கவர்ந்தது!
'Our country's continuing reliance on fossil fuels has forced our government to maintain complicated political and military relationships with unstable governments in the Middle East, and has also exposed our coastlines and our citizens to the associated hazards of offshore drilling,'
எப்படி சிந்திக்கிறார்கள் என்று பாருங்கள்! இந்த வசனத்தை எழுதாமலேயே காப்புரிமை வாங்கியிருக்கலாம். ஆப்பிள், அமரிக்கர்களின் அடுத்த தலைமுறையை “அமரிக்க” சிந்தனை ஊட்டி வளர்க்க எடுக்கும் முயற்சி இது. Alternative energy source இன் முக்கியத்துவத்தை அரசியல் நலன் சார்ந்து முதன் முதலில் பப்ளிக்காக வந்த விஷயம் இது என்று நினைக்கிறேன்.
பாலமுருகன் சொல்வது போல, அரசியல் என்பது எம் வாழ்க்கையில் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து இருக்கிறது. அதை நாங்கள் அரசியல்வாதி ஆகி தான் செய்ய வேண்டியதில்லை. உன் துறையின் ஊடாகவே அணில் போல பாலம் கட்ட உதவலாம். Yarl IT Hub முயற்சியும் அப்படியான ஒன்று தான்.  ஒரு தலைமுறையை influential and inspirational ஆக உருவாக்க வேண்டும். அப்புறம் மற்ற விஷயங்கள் தாமாக நடக்கும். முதலடியை எடுப்போம், ப்ளீஸ்!
Vadivelu02மன்மதகுஞ்சு : ய்யா யியா .. ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார் ஹொவ் ஐ வொண்டர் வாட் யூ ஆர் .. மிஷன் இம்போஸிபிள், டைட்டானிக், பில் கேட்ஸ், நெக்ஸ்டு

 

இந்த வார பாடல்

என்னையும் மேகலாவையும், ஆளே இல்லாத தன்னந்தனி தீவு ஒன்றில் இரண்டு வருடங்கள் இருக்கவிட்டால், நான் முதலில் எடுத்து வைப்பது என்னுடைய மியூசிக் கலக்ஷனாக தான் இருக்கும். அதிலும் இருபது பாடல்கள் தான் கொண்டு போக முடியும் என்றால், நிச்சயம் இந்த பாடல் அந்த இருபதில் இருக்கும்.
ஹரிகரன் சாதனாசர்க்கம் பாடிய பரத்வாஜ் இசை. ஒவ்வொரு முறையும் ஹரிகரன் மேலே போய் அப்படியே பங்கி ஜம்பிங் செய்யும் போது என்ன குரலடா என்று ஏங்கவைப்பார். அவரோகணிக்கும் போது, ஒவ்வொரு இறக்கமும் ஒவ்வொரு ரகம். பெண்களை போல!
பாடலின் மெலடி அடிக்கடி மேகலாவை ஞாபகப்படுத்தி குரல்வளையை கீறும். ஏன் தான் இப்படி பாடல்களை உருவாக்குகிறார்களோ தெரியாது! கொலைகார பாதகர்கள்!

காதலி காதலனுக்கு சொல்கிறாள்.
பூமிக்கு வந்த பனித்துளி நான்
சூரியனே என்னைக் குடித்துவிடு
சாதாரண வரிகள் தான். ஆனால் காதலனின் பதில் தான் அதை இலக்கியம் ஆக்குகிறது.
யுகம் யுகமாய் நான் எரிந்துவிட்டேன்
பனித்துளியே என்னை அணைத்துவிடு!!
Wow… வைரமுத்து, சிந்திக்க தெரிந்த மனிதன்!!!
கொஞ்சம் ஆழமாக யோசித்தால் இந்த வரிகளை மனிதன்-கடவுள் ரிலேஷன்ஷிப்புக்கும் ஒப்பிடலாம்! இது நாங்கள் கடவுள்களை அணைக்கும் தருணம்!!
 
1232193597மன்மதகுஞ்சு : டேய், மச்சி, உன்னோட கொசுக்கடி தாங்க முடியேல்ல! யாரு அந்த மேகலா எண்டு சொல்லு! ரெட்டிய தாக்கறோம்! பொண்ணை தூக்கறோம்!
 

ஹாட் நியூஸ்

நண்பன் வெளியாகி விட்டது. ஒரே நிலா ஒரே சூரியன் நம்ம சூரியா கூட ஒரு சீனில் வருகிறாராம். அது போதும் எங்களுக்கு! “அஆ” வையே ஆறு தரம் பார்த்த ஆளு நான்!!  கொஞ்சம் சச்சின், வசீகரா பாணி என்றால் நிச்சயம் பார்க்கலாம். அந்த வகை விஜய் எப்போதும் கலக்கல் தான். சங்கர் சொதப்பாமல் எடுத்து இருந்தால், அப்படித்தான் படம் வந்திருக்கவேண்டும். பார்ப்போம். கடைசியாக படம் பார்த்து நான்கு ஐந்து மாதங்கள் ஆகிவிட்டது.
vijay-ileana-in-3-nanban-3-idiots-remake
பூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது எந்தன் தோட்டத்தில்
விண்மீன் எல்லாம் நிலவாய் போனது எந்தன் வானத்தில்
முப்பது நாளும் முகூர்த்தம் ஆனது எந்தன் மாதத்தில்
முள்ளில் கூட தேன்துளி கசிந்தது எந்தன் தாகத்தில்

imagesமன்மதகுஞ்சு : டேய்! பூவுக்கு சிறகு முளைக்கிறது இருக்கட்டும். ஒனக்கு மண்டைல முடி முளைச்சுட்டுதா மொதல்ல?Comments

 1. >>மன்மதகுஞ்சு: டேய் கஜனிண்ட மூத்த பையன் கூட கலியாணம் கட்டி அப்பா ஆகப்போறான்! நீயி இன்னுமாடா அம்மா அப்பாவோட இருந்து ஐஸ் கிறீம் சாப்பிட்டுக்கிட்டு இருக்கே? இது தெரிஞ்சா வெள்ளைக்கார பொண்ணுங்க ஒண்ணுமே ஒன்ன அண்டாதேடா?

  கெதியா ஒண்டைப் பாருங்கோ. உங்கடை வயசிலை நான் இருக்கேக்கை மூத்த மகன் பிறந்திட்டான். (கல்யாணம் கட்டித்தான் ஹீ ஹீ)

  (திரும்ப) ......ல்

  ReplyDelete
 2. >ஆளே இல்லாத தன்னந்தனி தீவு ஒன்றில் இரண்டு வருடங்கள் இருக்காவிட்டால்,

  என்ன அநியாயம். எனக்கும் இந்தத் தன்னந்தனித் தீவு, என் கிளி என்று ஒரு கனவு பதின்ம காலங்களில் இருந்தது.

  (நான் "...... ல்" இல்லை)
  (எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்று நீங்கள் யோசித்தால் நான் பொறுப்பு இல்லை)

  ReplyDelete
 3. கக்கூஸ் சிறுகதை - ஆம் உங்கள் எழுத்தில் ஒருவித திருப்பம் (நல்ல திருப்பம்) தெரிகிறது. அதற்காக முந்தி எழுதியது சரியில்லை என்பதில்லை. "குட்டி" தான் இன்னும் என் லிஸ்ட் இல் இன்னும் உச்சியில்.

  (விரைவில் அதை இரண்டாம் இடத்திற்குத் தள்ளும் விதத்தில் எழுதவும்)

  ReplyDelete
 4. நன்றி .........ல்
  மூத்த மகன் பிறக்கும் போது கல்யாணம் கட்டீட்டீங்களா? இல்ல மூத்த மகன் கல்யாணம் கட்டினா பிறகு பிறந்தானா? ஹ ஹ ஹ

  அந்த தன்னந்தனி தீவு, எல்லோருடைய பதின்ம கனவுகள். அது நிஜ வாழ்க்கையில் அத்தனை சுவாரசியமாக இருக்குமா என்பது சந்தேகம் தான். இருந்தாலும் கனவுகள் தானே வாழ்க்கை!

  ReplyDelete
 5. நன்றி சக்திவேல்!

  களத்தையும் பாணியையும் மாற்றி வித்தியாசம் காட்டவேண்டும் என்று உங்களை போல பலர் ஆலோசனை சொன்னார்கள். முயற்சி செய்கிறேன்.

  குட்டி சம்பவம் இயல்பாக ஒரு நாள் காலையில் யோசித்து அப்போதே எழுதியது. உண்மை கதை வேறு. அப்படி உருவாகவேண்டும். அதை தாண்டி எழுதவேண்டும் என்று யோசித்து எழுத ஆரம்பித்தால் soup song ஆக போய்விடும். பார்ப்போம்!!!

  ReplyDelete
 6. JK,
  The structure of this post is bit confusing. In this post, there are different sections like: "வடக்கு தேய்கிறது, தெற்கு வளர்கிறது", கிரிக்கெட், கக்கூஸ், இந்த வார நெகிழ்ச்சி etc. In the first section you tried to write an overview of North Korea's recent history then suddenly switched to Afghan controversy. I did not understand why you were connecting the two. Are you saying USA and North Korea are similar countires in other words the rulers of USA and North Korea are same kind. In my opinion you should spilt it into two different sections. I don't agree, this sentence "சரி இவன் தான் இப்பிடி. இந்த அமெரிக்காகாரன் செய்யிற அநியாயத்த பாருங்க!" as a proper transition or connection to those two different items.
  Mohan

  ReplyDelete
 7. Hi udoit!

  Thanks for the comment. I can understand the confusion coming from. That little section is a political sattire! Although I was writing about North Korea,,
  most of the readers from India's neighbour country(Ha .. I can't name it here in English), would understand what is this metaphor all about.
  Each and every incident I mentioned there can be related back here. Then I am switching to how a democratic nation would react to a warcrime allegation by mentioning about afcan incident.
  Afterthat manmathakunju comments about how the neighbour country would react to such allegations. I think the connection is setup and I thought twice before actually written it!

  I know its complicated, so is the sattire and the implications of writing it explicitly. Hope now you can understand.

  Even this comment is written with extreme care, its not easy to be a political writer and stay alive buddy! And I at times try to write it, but I am not a brave person as others. But at times I couldnt resist myself writing it :(

  Last week also, I did the same ..

  "vadakku theikirathu, thetku valarkirathu" .. hope now you know which part I am referring to :)

  Cheers,
  JK

  ReplyDelete
 8. Thanks சமுத்ரா

  ReplyDelete
 9. JK,
  Thanks for your explanation, however next time if I write something like this don't answer to me because always safety first.
  Enjoy!
  Mohan

  ReplyDelete
 10. Thanks for understanding udoit mohan

  ReplyDelete

Post a comment

Contact Form