வியாழமாற்றம் (19-01-2011) : எஸ் எம் கிருஷ்ணா நீ பேகனே

Jan 19, 2012

எஸ் எம் கிருஷ்ணா நீ பேகனே

5828305575_bced9595d5கார்ட்டூன் போல political satire எழுதலாம் என்று ஒரு விவகாரமான ஐடியா. கூடிய சீக்கிரம் இலங்கை போகவேண்டிய தேவை இல்லாததால் எனக்கும் திடீரென்று டமில் உணர்வு பீறிட்டுவிட்டது! உடனே வயலுக்கு வந்தாயா, நாற்று நட்டாயா என்று ஆரம்பிக்கவேண்டாம் ப்ளீஸ். நான் ஒரு காமெடி பீஸ்! என்னை எல்லாம் விமர்சித்து அமைதிப்படை சத்தியராஜ் ஆக்கவேண்டியதில்லை! பட் இந்த வகை எழுத்துக்களையும் கொஞ்சம் அனுமதியுங்கள்.

கிருஷ்ணா தமிழ் கூட்டு சந்திப்பு
கிருஷ்ணா நீ பேகனே  .. பாரோ  முகவன்னே தோரோ!
பயப்படாதீங்க,  இந்திய அரசும் இந்திய மக்களும் உங்களை கைவிட்டு விடாது! உங்கள் நலன் தவிர வேறு நலன் பாரோம்!
நெஞ்சில் பீரை வார்த்தாய் கிருஷ்ணா! காப்பாற்று கிருஷ்ணா, இவன் ஒண்டும் தாறான் இல்ல. இருக்கிறதையும் அவுக்கிறான்!
Oh I see! I think he is a generous man! ஒரு மகஜர் ஒண்ணு எழுதிதாங்க. மன்மோகனிட்ட கொடுக்கிறன்!
மறுபடியுமா? போன தடவ மன்மோகன் பதில் அனுப்பவே இல்லையே!
ஓ, அது விஜய் ரசிகர்களின் தந்திகளுக்கு மத்தியில மிஸ்ஸாயிடிச்சு! திரும்பி ஒண்ணு எழுதுங்க. இல்லாட்டி உங்கட குறைகளை எங்கிட்டயும் தெரிவிக்கலாம்!
(குழப்பத்துடன்) இப்பிடி திடுப் திடுபென்று கேட்டா நாங்க என்னத்த சொல்லுவம்?
தமிழருக்கு என்ன வேணும்னு தெரியாமலா பேச்சுவார்த்தைக்கு போறீங்க?
(இது எப்படி இந்தாளுக்கு தெரிஞ்சுது) தமிழ் மக்களின் நீண்ட கால அபிலாஷைகளை திருப்திப்படுத்தும், தங்களை தாமே ஆளும், வடக்கு கிழக்கு இணையாவிட்டாலும் அட்லீஸ்ட் ஒருங்கிணைந்து இருக்கும் என்ற உறுதிமொழி, சுயநிர்ணய உரிமை .. சாரி சாரி அந்த சொல்ல எச்சில் போட்டு அழிச்சிடுங்க, மக்களின் உரிமை பாதுகாக்கப்படவேண்டும், உடனடி தேவைகள் .. காணி உரிமை வேண்டும், நீங்களே காணியை எடுத்துக்கொள்ளுங்கள் ஆனால் உரிமை வேண்டும். எங்கள் போராட்டம் என்பது மக்களின் விழுமியங்களை ..
Hang on guys .. என்ன தான் சொல்ல வர்ரீங்க?
அவ்வ்வ்வ் … அது தெரிஞ்சிருந்தா தான் சொல்லியிருப்போமே. வச்சுக்கொண்டா வஞ்சனை செய்யறோம்? ஒரு பக்கம் மாவை இழுக்கிறார். சுமந்திரன் தன் இஷ்டத்துக்கு பேசறாரு. இதுக்க புத்தி ஜீவிங்க எல்லாம் கத்தரி போடறாங்க. வெளிநாடு போனா நாடு தாண்டிய நாட்டாமைகள் தொல்லை வேற. ஐம்பது ரூபாய்க்கு ஐஞ்சு சதம் குறைக்கிறாங்கள் இல்ல. பிரேசிடென்டுக்கு பிடிக்காததை வேற பேச முடியாது. அப்புறம் தம்பி டீயும் கிடைக்காது!
ஆக மொத்தம், பழையபடி உங்களுக்குள்ளேயே சண்டை பிடிக்க தொடங்கீட்டீங்க போல? Let me see what can I do!
கிருஷ்ணா மகிந்தா சந்திப்பு
முகுந்தா முகுந்தா கிருஷ்ணா முகுந்தா முகுந்தா, வரம் தா வரம் தா தீர்வு திட்டம் தா திட்டம் தா!
You serious Krishna? நீங்க கன்னடிகா, நான் சிங்களிகா .. நாங்க எப்பிடி தமிழனுக்கு தீர்வு கொடுப்போம்? இன்னுமா நம்மள தமிழங்க நம்பிக்கிட்டு இருக்காங்க?
தமிழ்நாட்டு தமிழங்க எதையும் சீக்கிரமா மறந்திடுவாங்க. You remember ஒகேனக்கல்? முல்லை வந்தா காவிரிய மறந்திடுவாங்க. ஹன்சிகா வந்தா இரண்டையும் மறந்திடுவாங்க! ஆனா ஈழத்தமிழனுக்கு மெமரி பவர் கொஞ்சம் ஜாஸ்தி! ஏதாவது ஒண்ணு கொடுக்கணும்! அடங்கமாட்டேங்கிறாங்க!
Oh I see! வேணுமெண்டா தங்கட காணில வாழைமரம் நட நடுவன் அரச கேட்க தேவையில்ல என்ற ஒரு பவர் கொடுப்பம்! I think we batted really well!
போதாது.  இன்னும் பெட்டரா கொடுக்கணும்!
யூ மீன் 13+
invisible_massacre_in-sri_lanka_chappatte (1)13+ Not enough .. நாங்க இன்னும் சின்ன பிள்ளைங்க இல்ல
16+?
What is 16+?
16+ = 13+ – காணி – பொலிஸ் - வடக்குகிழக்கு இணைப்பு
This looks better than 13+. ஆனா இன்னும் பெட்டரா ட்ரை பண்ணுங்க முகுந்தா!
How about 18+ கிருஷ்ணா?
That sounds better, what do you have in 18+
வெயிட், காட்டறேன். டேய் கோத்தா, அந்த “காமசூத்ரா” டிவிடி ய மிஸ்டர் கிருஷ்ணாவுக்கு போட்டு காட்டு!

பொங்கல் விழா

வரும் ஞாயிறு மெல்போர்னில் இருக்கும் பெருவிக் கேஸி தமிழ் மன்றத்தில் பொங்கல்விழா. காலையில் ஆரம்பித்து இரண்டு மணி வரை நிகழ்வுகள் நடக்க இருக்கின்றன. அடியேன் முதன்முதலில் கவியரங்கம் ஒன்று செய்ய இருக்கிறேன்( யாரடா அது காறித்துப்புறது? எழுதிக்கிட்டு இருக்கோம்ல!), அப்புறமா வழக்காடு மன்றம் ஒன்று. நான் வழக்கு தொடுப்பவனாகவும் கேதா எதிர்தரப்பிலும் வாதாடுகிறோம்! நீதிபதிக்கு மண்டை காயப்போவது என்னவோ வாஸ்தவம் தான்!
குற்றக்கூண்டில் யாரு? நல்லூரு முருகன் அவர் பெரு!!
களை கட்டலாம், கல்லும் எறி வாங்கலாம்! வாருங்கள் மக்களீஸ்! அட்லீஸ்ட் நல்ல பொங்கலுக்கு உத்தரவாதம் தரலாம்!
Balla Balla Community Centre,
No.65, Berwick-Cranbourne Road. Cranbourne East
(Next to the Cranbourne Library, Mel Ref: 134 B6).
senthil-goundamani-250_19022008மன்மதகுஞ்சு: இதுக்க கவிஞரு வேறயா? மச்சி மறக்காம நிலா, வானம், பெண், காதல், ஈழம், புரட்சி .. சேர்த்துட்டியான்னோ? அப்புறம் லெந்த்தா உண்ட பதிவு போல போயிடாத! தூங்கிடுவான்! நானெல்லாம் தூக்கம் வரலைன்னா உன்னோட பதிவு தான் .. . கொர்ர்ர் கொர்ர்ர்

The Namesake

கடந்த ஞாயிறு கொல்லைப்புறத்து காதலியாக “The Namesake” நாவல் பற்றி எழுதினேன். புத்தகங்கள் பற்றி எழுதடா என்று ரங்கன் அடிக்கடி சொல்லுவான். எழுதினால் நானும் இன்னும் இருநூறு ஆக்களும் தான் வாசிக்கிறோம்! அனுபவித்து எழுதிய பதிவு, குடியேறிகளின் identity crisis பற்றிய ஒரு நல்ல விவாதத்தை தோற்றுவித்திருக்க வேண்டும். செய்யவில்லை! நம்ம எழுத்து நாறுது என்று மட்டும் தெரியுது!
என் பதிவு தான் மோசம். இந்த வீடியோவை நிச்சயம் பாருங்கள்! படம் பார்க்க தூண்டும்! பார்த்துவிட்டு ஒரு கமென்ட் அனுப்புங்கள். உங்களுக்கு Namesake பிடிச்சு இருந்ததா? என்னை விட நல்ல நண்பன் எங்கேயும் கிடைக்கமாட்டான்! Contact me!

3:52 வது கணத்தை கவனியுங்கள்!
மற்றவனுக்காக எழுதாதே, உனக்காக எழுது என்று சொல்வதெல்லாம் வெறும் ரீல் தான்! அதுக்கு நான் டயரியே எழுதலாமே! சுஜாதா சொன்னமாதிரி அநேகமான டைரிகள் கூட யாராவது எப்போதாவது வாசிக்கமாட்டார்களா என்ற நப்பாசையில் எழுதப்படுவது தானாம்!
எழுத்தும் பொண்ணும் மற்றவர்கள் ரசிக்கும்போது தான் இன்னும் இன்னும் அழகாகின்றன! அது சரி உங்கட லவ்வர் அழகா அழகில்லையா?
senthilமன்மதகுஞ்சு: தக்காளி குடுப்பத்துக்க குழப்பம் செய்யிறியா? ஆமா, நம்ம பிகர் அழகன்னாலும் தப்பு, இல்லாட்டியும் தப்பாயிடுமே! சிண்டு முடிஞ்சிட்டானே!

 

இந்த வார நெகிழ்ச்சி

பிரபாகரனின் தத்துபித்துவங்கள் என்ற வலைப்பதிவு நடத்தும் பிரபல பதிவர் பிரபா, கடந்த வாரம் என்னை பற்றி எழுதியிருந்தார்.
சமீப காலங்களில் ஜே.கே என்ற பெயரில் எழுதி வருபவரின் இடுகைகள் எக்கச்சக்கமாக ரசிக்க வைக்கின்றன. தெருவிற்கு தெரு பதிவர்கள் கலவை இடுகைகள் எழுதி வந்தாலும் மிகச்சிலருடயது மட்டுமே ஸ்பெஷல். அந்த வகையில் இவர் வாராவாரம் எழுதிவரும்வியாழ மாற்றம் ஆரவாரம்.
முதன் முதலில் தமிழ்நாட்டை சேர்ந்த பதிவர் ஒருவர் தன்னிச்சையாக கவனித்து எழுதியிருக்கிறார். அதுவும் பிரபல பதிவர். பெருமையாய் இருக்குது. நன்றி பிரபா! இன்னும் எழுதோணும்!
யாழ் இணையத்தளத்தில் அவ்வப்போது யாராவது என்னுடைய பதிவுகளை ஏற்றிவிட பல கமெண்டுகள் கிடைக்கும். யாராவது ஏற்றுவதற்கு நானே ஏற்றலாமே என்று நேற்று இணைந்தேன். நிழலி என்பவரின் கமெண்ட் இது.
மிகவும் ரசனைக்குரிய எழுத்து நடை உங்களுக்கு இருக்கு.. தொடர்ந்து எழுதினால் முக்கியமான ஈழத்து எழுத்தாளராக முன்னுக்கு வரக்கூடிய அத்தனை சாத்தியங்களும் இருக்கு. ஒரு சிறு பதிவிலேயே காதல், அரசியல், நகைச்சுவை என்பதுடன் மற்றவருக்கும் அனுபவ தொற்றலைத் தரும் அருமையான எழுத்து நடை உங்களது!
ஜன்னி பிடிக்குமாப்போல இருக்கு … ஹாச் ச்சும்!
kanakamba jpgமன்மதகுஞ்சு : ஷப்பா … கண்ண கட்டுதே. மகா ஜனங்களே. இந்த எழுத்தாளர்கள் தொல்லை தாங்கமுடியேல்லையே!  ஆ ஊ ன்னா அள்ளுது கொல்லுது, தமிழ், லக்கியம் பின்னவீனத்துவம் எண்டு ஒரு காம்பினேஷன்ல எழுதி ரைட்டர் ஆவுடுறாங்கப்பா!

இந்த வார பாடல்

தமிழுக்கு பெலே ஷிண்டே வந்த புதுசு. 2008ம் ஆண்டு. அந்த ஆண்டின் சிறந்த பாடகியாக ஆஸ்கார் கொடுத்து இருந்தேன்! இன்றைக்கு ஐபாடில் கேட்டபோது, கைப்புள்ள, நல்ல பாட்டு தாண்டா என்று மைன்ட் வாய்ஸ் சொன்னது. வால்மீகி படம். ராஜா தான் பாஸ்! கொஞ்சம் “உன்னை விட” ஸ்டைல் பாட்டு. ஸ்ரேயா கோஷல் பாடவேண்டியது. ரெக்கார்டிங் டைம் பொண்ணு என்னோட சிங்கப்பூர்ல பிஸியா பாடிக்கிட்டு இருந்ததால, பெலே ஷிண்டேய பாடவச்சிட்டார். இட்ஸ் ஓகே! ஹை நோட்ஸ் கொஞ்சம் மூக்கு! பேஸ் எல்லாம் ரொம்ப சாப்டு! பட் இந்த பாட்டுக்கு வாய்சு ரொம்ப ஆப்டு!

“நீயில்லாமல் வாழ்க்கை ஒன்று இனியேது?” என்ற இடம் சரணத்தின் கடைசியில் வரும். கேட்கும் போது இளங்காற்று வீசுதா? குழலில் ராகம் மலரில் வாசம் சேர்ந்தது போல இருக்குமே!! அதே தான்!
vadivelu_070601_f3[1]மன்மதகுஞ்சு: மச்சி ரொம்ப இழுக்கவிட்டிடாத! ரெட்டி ஆந்திராவிலேயே பெரிய ரவுடி தெரியும்ல!
ஹாட் நியூஸ்

ஆஸ்திரேலியாவில் சம்மர் சீசன் மச்சி. வாழ்க்கைல நெசமாகவே மச்சம் உள்ளவன் யாரு தெரியமா? சம்மரில மெல்போர்ன் ட்ரெயின்ல பயணம் செய்யிறவன் தாங். கூலிங் கிளாஸ் இருந்தா எடுத்து மாட்டிக்க. நாங்க பூந்து பாக்கிறத மத்தவன் கவனிக்ககூடாது இல்ல! ஆனா எண்பது வயசும் கலைஞர் கணக்கா கூலிங் கிளாஸ் மாட்டிக்கிட்டு மாட்டிக்காம பாக்கும். பொண்ணுங்கன்னா அப்பிடி ஒரு பொண்ணுங்க. நம்ம ஊரு சென்சார் போர்ட்டு இங்க வந்தா ட்ரெயின் எல்லாத்துக்கு ஏ சேர்ட்டிபிக்கெட் கொடுத்து வரி விலக்கு கான்ஸல் பண்ணீடுவாங்க! ஒடம்புல எங்க துணி இருக்கு எண்டு கண்டுபிடிப்பவனுக்கு  ஆயிரம் பொற்காசுகளை விஸ்வாமித்திரரே கொடுப்பாரு. அவ்வளவு ஹாட் பாஸ். நாம மட்டும் பார்க்கிறோம்னு அதுங்களுக்கு தெரிஞ்சிட்டுன்னு வச்சிக்க! தக்காளி, அத அப்படி இழுப்பாளுக.  இத இப்பிடி அட்ஜஸ்ட் பண்ணுவாளுக! அப்பிடி ஒரு பில்ட் அப்பு! அப்புறமா அவனவன் ஸிக் அடிச்சிட்டு வீடு போகவேண்டியது தான்!
இப்பிடித்தான் நேத்து ஒரு சோடி. எனக்கு முன் சீட்டில. கிஸ் எண்டா அப்பிடி ஒரு கிஸ்ஸு. கமல் கூட வெட்கபடுவாருன்னா பாத்துக்க! பாத்துக்கிட்டே இருந்தேன். அடுத்த ஸ்டாப்ல இறங்கினாங்க. அப்ப தான் கவனிச்சேன். கருமம் கருமம்.ரெண்டு பேரும் ஆம்பளைங்க!
மன்மதகுஞ்சு : அவனாடி நீயி!

09
       அவளை ரசித்தபின்னே
நிலவு இனிக்கவில்லை
மலர்கள் பிடிக்கவில்லை
ஏ கண்டு கேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
பெண்ணில் இருக்கு
இந்த பூமி மீது வந்து நானும் பிறந்ததற்கு பொருளிருக்கு!மீண்டும் அடுத்தவாரம் சந்திப்போம்!

Contact Form