கனவு காணுங்கள் Guys
இலங்கை அரசாங்கத்தின் மும்மொழித்திட்டம் நிகழ்ச்சிக்கு அப்துல் கலாம், தமிழ்நாட்டின் தென்னிந்திய விஞ்ஞானிகள் சங்கம், மற்றும் ஜனாதிபதிகள் சங்கத்தின் தடையை மீறி இலங்கை வருகை தந்திருந்தார்! அவரிடம் படலை ஒரு பேட்டி எடுக்க அப்பாய்ண்மன்ட் கேட்ட போது போடாங்கோ என்று சொல்லிவிட, அவர் விஜயம் சம்பந்தமான ஒரு whatever!
வணக்கம் அப்துல் கலாம்
ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது!
அது தானே நாங்க பாலர் வகுப்பிலேயே படிச்சிட்டோமோ
உங்களில் எத்தனை பேரு சந்திரனுக்கு போகவேண்டும் என்று விரும்புகிறீர்கள்?
சந்திரன் மாஸ்டரை தானே சுட்டிட்டாங்களே ஐயா?
மும்மொழி கல்வி அவசியம். நான் எல்லாம் பத்தாம் வகுப்பு வரைக்கும் தாய்மொழியில் படித்த காரணத்தால் தான் இந்த அளவு முன்னேறினேன்!
சார் நாங்க, O/L, A/L வரை தமிழில் தான் படிக்கிறோம். ஒங்கட பாஷையில பிளஸ் ஒன் பிளஸ் டூ.தாய் மொழியில் படிப்பதற்கும் மும்மொழித்திட்டத்த்துக்கும் என்ன சம்பந்தம் சார்?
சிங்களவரும் தமிழரும் தங்களுக்கு தெரிந்த பாஷையில் பேசிக்கொள்ளலாம்!
You mean, நான் சிங்களவனுடன் சிங்களத்திலும், அவன் என்னோடு தமிழிலும் பேசுவதா? confuse ஆக மாட்டோம்?
Oh I See!
சார், அவன் நோக்கம், நோகாமல் தமிழனை சிங்களம் படிக்க வைப்பது. சிங்களவனுக்கு தமிழ் படிக்கும் அந்த தேவை கிடையாது. சிங்களம் மட்டும் என்ற நோக்கத்தை இப்பிடி விஞ்ஞான ரீதியில் அறிமுகப்படுத்துகிறான். அதுக்கு தான் ஆரம்பித்து வைக்க விஞ்ஞானி! சார் தூங்கிற மாதிரி நடிக்காதீங்க. ஒன்னுமே தெரியாத பாப்பா போட்டுக்கிட்டாளாம் தாப்பா!ஓ இதில இவ்வளவு விஷயம் இருக்கா. ஆனா நீங்க எல்லாத்தையும் எதிர்க்கிறாப்ல இருக்கே. அறிஞர் கேதா இத ஆதரிக்கிறாரே!
அவருக்கு ஈழத்தின் முக்கிய சிந்தனையாளரான சயந்தன் இந்த பதிவில விளக்கம் கொடுத்து இருக்கிறாரு. வாசிச்சு பாருங்க! அது கிடக்கட்டும். இந்திய இலங்கை மீனவர்கள் பிரச்சனைக்கு சிறந்த தீர்வு கொடுத்து இருக்கிறீங்களாமே?
ஆமா மாஸ்டர் பிளான் ஒன்று தம்பி. நேற்று தான் உட்கார்ந்து யோசித்தேன்.
அது என்ன அணுகுண்டு பிளான் சார்?
வாரத்தில மூணு நாளு அவங்க மீன் பிடிக்கட்டும். மூணு நாளு இவங்க மீன் பிடிக்கட்டும். how’s that?
மீதி ஒரு நாள்?
ஓ, மீனு வளரணும் இல்லையா! என்ன தம்பி புரியாத பையனா இருக்கிறீங்க?
அணுகுண்ட விட பவரான பிளான் சார்! மகிந்த மாமா வேற என்ன சொன்னாரு?
13+ கொடுக்கப்போறாரு
உங்களுக்கும் சொல்லீட்டாரா? ஐயோ ஐயோ
தம்பிரி எல்லாத்தையும் அவநம்பிக்கையா பார்க்கவேணாம்! நான் சாதாரண ஏழைக்குடும்பத்தில படிச்சு இந்த அளவுக்கு போராடி முன்னேறி இருக்கிறேன் என்றால் அதற்கு என்னுடைய நம்பிக்கையும் கடின உழைப்பும் தான் காரணம்!அத மறக்க இல்ல ஐயா. அந்த பெயர ஏன் இப்பிடி கூடங்குளம், ஈழம், அணு சக்தி ஒப்பந்தம் என்று மழுங்கடிக்கிறீங்க என்பது தான் எங்கட வருத்தம்! நீங்க அம்பானி(!) மாதிரி கஷ்டப்பட்டு முன்னேறியது எங்களுக்கு தெரியும். ஆனா ஒங்கள பகடைக்காயா பயன்படுத்தறாங்க பாஸ்! ஈழத்தமிழர்கள், மகிந்த மாமா even பிரபாகரனை கூட்டிக்கொண்டு வந்து நிறுத்தினாலும் ஏற்றுக்கொள்ள மாட்டாங்க. அவ்வளவு வலி அவங்களுக்கு.ஆனா அதையே நினைச்சுக்கொண்டு இருக்காம நீங்க எல்லாம் இனி நல்லா படிக்கணும்.
அட கடவுளே! ஈழத்து மாணவர்களுக்கு படிப்பின் அருமை பற்றி சொல்ல முதல் எங்கள பற்றி ஹோம் வோர்க் செய்து இருக்கணும். மேலே ஷெல் அடிக்கும்போதும் பங்கருக்குள் இருந்து படிச்ச இனம் நாங்க. இந்த போராட்டத்துக்கு தரப்படுத்தலும் ஒரு காரணம் எண்டது தெரியுமா உங்களுக்கு?தம்பி ரொம்ப குழம்பி இருக்கிறீர். நான் ஒரு திருக்குறள் சொல்றேன். அப்படியே திருப்பி சொல்றீங்களா? திருக்குறள் உலக பொதுமறை!
சார் மொதல்ல நான் ஒரு குறள் சொல்றேன்!
நீங்களும் குறள் சொல்லுவீங்களா? எங்க பார்ப்பம்?
மனநலம் நன்குடைய ராயினும் சான்றோர்க்கு
இனநலம் ஏமாப் புடைத்து
டஃபான குறள் தம்பி .. என்ன அர்த்தம்?
மனவளம் மிக்க சான்றோராக இருப்பினும் அவர் சேர்ந்துள்ள கூட்டத்தினரைப் பொருத்தே வலிமை வந்து வாய்க்கும்.

ஒண்ணுக்கடிச்சா தப்பு இல்ல

மன்மதகுஞ்சு : வர வர, நீயி ரொம்ப அரசியலுக்க போறாப்ல இருக்கு! அடக்கி வாசி தம்பி. இப்ப எல்லாம் ப்ளாக் கூட ட்ரேஸ் பண்ணுறாங்களாம். சும்மா வீரம் பேசிட்டு ஜட்டி கூட இல்லாம நாலாம் மாடில இருக்கணும்! எலித்தொல்லை வேற அங்க அதிகம்னு இன்னொரு ப்ளாக்கரு சொன்னாப்ல!!!
சிந்தனை செய் மனமே
Facebook இல் மன்மதகுஞ்சு போட்ட ஸ்டேடஸ். சுட்ட பழமா, சுடாத பழமா தெரியாது. பழம் சூப்பர் டேஸ்ட்!
கடமை உணர்ச்சிய நாம எல்லாரும் கறிக்கடை கூண்டுக்குள்ளே இருந்தும், காலை 6 மணீக்கு கூவுதே, அந்த சேவல் அதுகிட்ட கத்துக்கணும்,விடிஞ்சா நம்மளை வெட்டிடுவானுக எண்டு தெரிஞ்சும் வெட்டுறவனை கூவி எழுப்பி விடுதே
மீரா நாயர்
பதமபூஷன் கிடைத்து இருக்கிறது. சமகாலத்து தேர்ந்த நடிகை ஷப்னா ஆஸ்மியும் சேர்ந்து வாங்குகிறார். இம்முறை கஞ்சா கருப்பு போன்றவர்களுடன் இணைந்து வாங்கவேண்டிய பாக்கியம் இவர்களுக்கு இல்லாதது கொஞ்சம் கவலை தான்! மீரா நாயர் உலக படைப்பாளிகளில் முக்கியமானவர். என்னுடைய இன்ஸ்பிரெஷணும் கூட. அவர் சொல்லிய ஒரு வசனம் என்னை எழுதவும் தூண்டியது.
“If we don’t tell our story, no one else will”
கேதா முதன்முதலில் என்னை சந்தித்தபோது எனக்கு மீரா நாயர் ஞாபகம் தான் வந்தது. சரியான டீம் அமையாமல் தடுமாறிக்கொண்டு இருந்தேன். கேதா பிரவீணா நம்பிக்கை தருகிறார்கள். இன்று அவர்கள் வீட்டுக்கு நாங்கள் செய்யும் ஒரு ப்ராஜெக்ட் சம்பந்தமாக டிஸ்கஸ் பண்ண போயிருந்தேன். ஐந்து மணிநேரம் பேசியிருப்போம். சலிக்கவில்லை. பேசும் டாபிக் இல் இருக்கும் non-pre-occupation தான் அவர்களில் எனக்கு பிடித்தது. I guess somewhere down the line, we should be able to connect these dotted lines in a good way. Lets see.
And yes … We are telling our story!
மன்மதகுஞ்சு : அவங்க தானே காமசூத்ரா எடுத்தது? என்னா ஆக்டிங்டா? அந்த எட்டாவது சீன்ல ஒரு பறவை, சிறகு மாத்திரம் ஓடிஞ்சிருக்கும், பறக்காம கவிதை பாடும். நான் கிறங்கிப்போனேன்! அந்த பின்நவீனத்துவம்! கொய்யால, பாக்கிறது கில்மா படம். அதுக்கு ஒரு விமர்சனமா?
ஆப்பிள்

ஆத்மா ராகம் ஒன்றில்தான் வாழும் உயிர்கள் என்றுமே
உயிரின் ஜீவ நாடிதான் ராகம் தாளம் ஆனதே
உயிரில் கலந்து பாடும்போது எதுவும் பாடலே

இந்த வார பாடல்
காதல்கோட்டையில் அகத்தியன் சிக்ஸர் அடித்தபோது அது ஒன் ஆப் என்று தான் நினைத்தேன். 1997ம் ஆண்டு பொங்கல். இருவர், மின்சார கனவு, பாரதிகண்ணம்மா வெளியாக, இவர் துணிந்து கவித்துவமான தலைப்பில் “கோகுலத்தில் சீதை” வெளியிட்டார். கார்த்திக், தேவா, மணிவண்ணன், தங்கர்பச்சன், சுவலட்சுமி கூட்டணி. ரமணிச்சந்திரன் பாணி கதை. ஹீரோ womaniser, drunkard, smoker, yet honest person!அவன் இந்தை இப்பிறவிக்கு any மாதர் ரகம்! ஆனால் ஹீரோயினை மட்டும் நன்றாக பார்த்துக்கொள்வான். அவள் வீட்டில் இருக்கும்போது படுக்கைக்கு அழைக்கமாட்டான்.
கதையின் ஸ்ட்ரோங் ஏரியா என்றால், அழகான வசனங்களும் கார்த்திக்கின் நடிப்பும் தான். தேவா ஒரு பாடலுக்கு இசையமைத்து இருந்தார்! One of my favourite!
கண்ணன் பாட்டு தான். சிலேடையாக அவள் கார்த்திக்கை பற்றி பாட, இரண்டாவது சரணத்தில் அவனின் ரெஸ்பான்ஸ் சூப்பர். வைரமுத்துவா?
என் வாழ்க்கையே பிருந்தாவனம் நானாகவே நான் வாழ்கிறேன்!
இந்த வார நெகிழ்ச்சி


ஹாட் நியூஸ்
சரியா படிக்காட்டி கழுதை மாதிரி குட்டிச்சுவர் ஆயிடுவன்னு அம்மா சின்ன வயசில் சொல்லும். பேச்சை நம்பி படிச்சதுல, இரவு ஒரு மணிக்கு வியாழமாற்றம் எழுதிக்கொண்டு இருக்கிறேன்! தக்காளி ஏண்டா படிச்சொம்னு இருக்கு. கழுதைக்கு எப்பவுமே பொண்ணுங்க மத்தில டிமாண்ட் தான். மெக்ஸிகன் சலவைக்காரி முதல் நம்ம ஊரு பொண்ணுங்க வரை கழுதைன்னா கேள்வி கேக்காம கழுத்த நீட்டிடுவாங்க!! சலவைக்காரி எத நீட்டினா எண்டத எழுதினா மகிந்த மாதிரி 18+ தரவேண்டி இருக்கும்! ஸோ லூஸ்ல விட்டிடலாம்!
மன்மதகுஞ்சு: நீயும் கட்டினா கழுதைய தான் கட்டுவேன்னு அடம் பிடிக்கிற! கழுத மட்டும் அடம் பிடிக்ககூடாதோ!!
முத்தம் ஒன்று தந்தவுடன் மூடி கொள்ளும் கண்கள்
மொத்தமாக கூந்தல் அள்ளி மூடி கொள்ளும் கைகள்
உடல் இறங்கி நீந்தும் என்னை உயிர் இழுத்து செல்லும்
ஒய்வு தந்த காரணத்தால் உடைகள் நன்றி சொல்லும்
விரலும் விரலும் இறுகும் பொழுது
முதுகின் சுவரில் வழியும் விழுது
உறங்கிடாமல் உறங்கிடாமல் கிறங்கி விடு…
விழியும் விழியும் நெருங்கும் பொழுது
வளையல் விரும்பி நொறுங்கும் பொழுது
வசதியாக வசதியாக வளைந்து கொடு
கலாமுக்கு நல்ல அடி! :-)
ReplyDeleteஅப்பிள் கல்வித்துறையில் நுழைவதை நான் அவ்வளவாக ரசிக்கவில்லை. iEducation (copy righted) கொடுத்து மூளைச்சலவை செய்துவிடுவார்கள் என்று பயம். Lets wait and see,
தல, சிவனே என்று இருந்த என்னையும் சைக்குள் gapla கலாயுச்சுடீங்க
ReplyDeletebtw I like your arguments in that first parts
"நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே." சலாம் பாஸ்...சுபெர்ப் டெலிவரி...கலாம் is bowled out
ReplyDeleteஎனது தனிப்பட்ட கருத்து.. எங்கண்டை சனங்களுக்கு என்ன பிளஸ் குடுத்தாலும் பரவாய் இல்லை பாஸ்.. சுயநலவாதிகள்...
நான் இங்கிருந்து கொண்டு எதுவும் சொல்லாம் அல்லது செய்யலாம்; அங்கிருந்து கொண்டு எதுவும் பண்ணமுடியாது என்டுறவைக்கு ஒரு சம்பவம்:
16/05/2009 நாங்கள் அமெரிக்கன் எம்பசி முன் "எஸ் யு can" என்று கத்திகொண்டிருக்கிறோம்.. ஒரு கால் வருகுது பிரோம் ஜபிபின. எனது நெருங்கிய சொந்தம். கேட்ட முதல் கேள்வி "நேற்று என்ரை மகனின் birthday எண்டு தெரியாதோ ஏன் போன் எடுக்கவில்லை?" எனக்கு நல்லா வாயிலை வந்துது .. ஒருமாதிரி சமாளிச்சுட்டன்.. பிறகு தான் கேள்விபட்டன் அவரின் கோபத்துக்கு நான் போன் பண்ணாதது மட்டும் தான் காரணம் இல்லை; போன் வந்தண்டு அவற்றை மனிசியின் நகைகள் ஒரு பிரபல கோவில் திருவிழாவில் களவு போயிருந்தது... அப்ப பாருங்கோவன்... பக்கதிலை உங்களுடைய உறவுகள் இரத்த வெள்ளதில . நீங்கள் கோவிலும் கொண்டாடமுமை இருகுறியல். உதவி செய்யாவிட்டாலும் பரவாய் இல்லை கடுப்பேத்தாமல் இருந்தால் காணும்...கொடி பிடிச்ச எனக்கே இவ்வளவு கடுபெண்ட்டால்.....without loss of generality எங்கண்டை சனங்கள் சுயநலவாதிகள்..
தாங்க்ஸ் சக்திவேல்.
ReplyDeleteஆப்பிள் விஷயம், எப்படியோ யாரோ ஒருவர் இதை கொண்டு வந்து தான் இருப்பர். ஆப்பிள் ஆரம்பித்து வைப்பதால், நல்ல ஒரு standard create பண்ணுவார்கள். Now others will have to live with it. ஒப்பன் புக் கான்சப்ட் monopolyஐ தடுக்கலாம். iOS க்கு போட்டியாக android வளரவில்லையா? எனக்கென்னவோ நிச்சயம் நிறைய புரிதல்களுடன் இந்த முறை மூலம் படிக்கலாம் என்று தோன்றுகிறது. பார்ப்போம் என்ன தான் நடக்கிறது என்று.
சயந்தன்... சிவ சிவா ஏசுவை கலாயப்பனா?
ReplyDeleteநொட்டை .. சுயநலம் எங்கட பெரிய வியாதி தான். சுயநலம் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால், இந்த போராட்டம் எப்போதே முடிந்து இருக்கும். பிரச்சனையும் தீர்ந்திருக்கும்.
ReplyDeleteஎன்ன செய்வது, நிறை குறைகளுடன் கூடியது தானே ஒரு இனம். அதை மாற்றலாமா என்பது தெரியவில்லை! தமிழன் பெரியார் கூட்டத்துக்கும் போயிட்டு, அது முடிய வாரியார் கூட்டத்துக்கும் போறவன். ஆணியே புடுங்க முடியாது தமிழனோட!
ஒரு முறை சாரு-நிவேதிதா சொன்னதாய் ஞாபகம், "இன்றைக்கு எங்களுக்கு தெரிந்து பொது மேடைகளில் தமிழ் இலக்கியங்களை அடிக்கடி தொட்டுப் பேசுபவர் கலாம் தான், ஆனா பாவம் அவர் திருக்குறளுக்குப் பிறகு எந்த தமிழ் இலக்கியமும் படிக்க வில்லை போலும்".
ReplyDeleteநிஜமாயே நல்லா பிளிஞ்சிருக்கிரீங்கள் - கலாமை.
அவரை பற்றிய நிறைய controversies அவர் இரண்டாவது presidency க்கு செய்த தகிடுதத்தங்களின் போது கொஞ்சம் கொஞ்சமாக தெரியவந்தது. He is an icon for the rightist ideologies. அவர் பின்பற்றிய வாழ்க்கையும், ஆய்வு மையங்களில் அவரின் management பாணி, சாதாரண ஏழைக்குடும்பத்தில் பிறந்து aeronautical engineer ஆக வளர்ந்து, பின்னர் atomic research lead ஆக வருவதற்கு திறமை முக்கிய காரணம். ஆனால் அந்த திறமை மட்டும் போதாது. அறிவியல் துறையின் அம்பானி கலாம். வியாபாரத்துறையின் விஞ்ஞானி அம்பானி! Steve Jobs, Bill Gates இன் philanthropy சம்பந்தமான கமெண்ட் ஞாபகம் வருகிறது! அது Gates க்கு பொருத்தமோ தெரியாது. கலாமுக்கு பொருந்துகிறது போல!
ReplyDeleteஐன்ஸ்டீன் வாழ்க்கையை ஒப்பிடவேண்டும். சீக்கிரம் படித்து எழுதவேண்டும்!
>அவரை பற்றிய நிறைய controversies அவர் இரண்டாவது presidency க்கு செய்த தகிடுதத்தங்களின் போது கொஞ்சம் கொஞ்சமாக தெரியவந்தது. He is an icon for the rightist ideologies. அவர் பின்பற்றிய வாழ்க்கையும், ஆய்வு மையங்களில் அவரின் management பாணி, சாதாரண ஏழைக்குடும்பத்தில் பிறந்து aeronautical engineer ஆக வளர்ந்து, பின்னர் atomic research lead ஆக வருவதற்கு திறமை முக்கிய காரணம். ஆனால் அந்த திறமை மட்டும் போதாது. அறிவியல் துறையின் அம்பானி கலாம். வியாபாரத்துறையின் விஞ்ஞானி அம்பானி! Steve Jobs, Bill Gates இன் philanthropy சம்பந்தமான கமெண்ட் ஞாபகம் வருகிறது! அது Gates க்கு பொருத்தமோ தெரியாது. கலாமுக்கு பொருந்துகிறது போல!
ReplyDelete100 % எனக்கும் இதே கருத்து :-)
சிறப்பான பதிவு நண்பா
ReplyDeleteபலே பலே!
ReplyDeleteஆரோகணம் அபாரம்!
??
ஓய்வு
தாங்க்ஸ் பாலா .. ஹைக்கூ மாதிரி கமெண்ட்டா?
ReplyDelete