Skip to main content

ஒய் திஸ் ஒய் திஸ் ஒய் திஸ் தமிழ்வெறிடா?

 

pigஎழுத்தாளர் பன்னிசாமி அவர்களே, வணக்கம்!

எவண்டா அவன் எனக்கு தெரியாம எழுத்தாளர் ஆனது?

சார் உங்கள தான், எழுத்தாளர் எண்டு கூப்பிட்டன்!

வாவ், யூ மீன்.. மீ? ரைட்டர்? யா யா யா யா .. எழுத்தாளர் …. தமில் எழுத்தாளர்

சார் உங்கள சின்ன பேட்டி எடுக்கலாம்னு..

இன்டர்வியூ? ஜஸ்ட் பைவ் மினிட்ஸ் ஓகே… ஹன்சிகாவுக்கு தவில் சொல்லி கொடுக்கணும்

தவிலா?

ஆ சாரி தமில் ..

தமிலா? இதுக்கு சுப்பர் ஸ்டார் தேவலாம்

ய ய ய யா, பார்ஸ்ட் குவசியன் ப்ளீஸ்..

சார், உங்களுக்கேன் பன்னிசாமின்னு பெயர் வந்திச்சு?

சுமார் பத்து வருஷத்துக்கு முன்னால, நான் வன்னில இருக்கும் போது ஒரு அழகான கன்னிய பார்த்தேன். அவளை பார்த்து கண்ணடிச்ச போது அந்த கன்னி என்னய பஃன்னியா பாத்து சிரிச்சிச்சு. ஆனா பக்கத்தில நின்ன பன்னி ஒண்ணு மட்டும் என்னய பாவமா பாத்திச்சி, சாமி கூட தண்ணி காட்ற இந்த காலத்தில, அந்த பன்னி கால கண்ணியில மிதிச்சது கூட தெரியாம, ஜன்னி பிடிக்கிற அளவுக்கு என்னைய பார்த்து வழிஞ்சதில பக்கத்தில இருந்த கிண்ணி ரொம்பி போச்சு. அந்த சந்தோஷத்தில எண்ட பெயர பன்னிசாமினு மாத்திக்கிட்டேன்

பேசிக்கா பன்னிய லவ் பண்ணினதால பன்னிசாமிய வச்சுக்கிடீங்க

அடிங்கொய்யால.. பன்னிசாமிய வச்சுக்க நான் என்ன அவனாடி?

இப்ப இருக்கிற கேட்டுக்கு இதுவே மேல் எண்டு கஜன் சொன்னாப்ல

சொல்லுவாங்க சொல்லுவாங்க .. சூரியன பார்த்து தானே நாயி கொரைக்க முடியும், அவன விடு, அடுத்த கேள்விக்கு போ!

ஒங்கள மாதிரி எழுத்தாளர்கள் தான் அடுத்த தலைமுறை தமிழை வளர்க்கவேண்டும் என்று ஒரு கருத்து நிலவுதே?

11 - 1டேய், தலைல இருக்கிற மயிரையே ஒழுங்கா வளர்க்க காணும்,  இதில நானெல்லாம் தமிழ் வளர்க்க போறேனா? எவண்டா எவரெஸ்ட் வரைக்கும் எலி ஒட்டினது?

இல்ல, உங்களுக்கு வர்ற கமெண்ட் சிலதுல, நீங்க தமிழ் நன்னா எழுதுறீங்க .. இன்னும் மேலே வளர்க்கோணும், ஆங்கிலம் கலக்க கூடாதுன்னு  அபிப்பிராயம் வருதே?

யாரு அந்த பிகர் அபி? எனக்கு கோலங்கள் அபிய மட்டும் தான் தெரியும்!

இல்ல சார், அபிப்பிராயம்.. கருத்து தெரிவிக்கிறாங்க!

ஓ யூ மீன் ஒப்பீனியன்? டேய் நீங்களா சச்சின் நூறாவது செஞ்சரி அடிக்கப்போறாருனு எழுதுவீங்க. அப்புறமா, சச்சினுக்கு ஏதோ பக்கத்தில நின்னு பிரஷர் செக் பண்ணின மாதிரி, சச்சின் அண்டர் ப்ரஷர் எண்டு ஸ்டேடஸ் போடுவீங்க. சச்சின் எப்படா சொன்னாரு செஞ்சரி அடிக்க போறன் எண்டு? போங்கடா .. போய் பெத்த அப்பனுக்கு ப்ரஷர் ஒழுங்கா இருக்கானு போய் பாருங்கடா! போக்கத்த பசங்களா!

நீங்க ஈழத்தமிழ் தானே? அப்புறம் ஏன் இந்திய தமிழ், மெட்ராஸ் தமிழ், வடிவேல் தமிழ் எல்லாம் மிக்ஸ் பண்ணி எழுதுறீங்க?

டேய் தமிழன் ஒற்றுமையா இருக்கணும், ஒண்ணா குரல் கொடுக்கணும் எண்டு சொல்லுறீங்க… அவன் தமிழையும் இவன் தமிழையும் மிக்ஸ் பண்ணினா அதுக்கும் திட்டறீங்க? என்னைய என்ன தாண்டா செய்ய சொல்றீங்க?

நீங்க இப்பிடி சொல்றீங்க, சிங்கை எழுத்தாளர் கௌரி வேற மாதிரி சொல்றாங்களே?

சிங்கர் எழுத்தாளர் கௌரியா?  யாரடா அது சைக்கிள் காப்ல சிங்கர் எல்லாம் எழுத்தாளர் ஆனது?

சிங்கர் இல்ல சார், சிங்கை .. சிங்கப்பூர்

ஏண்டா நாட்டு பெயரை எல்லாம் ஷார்ட்டா எழுதுறீங்க? அப்ப இந்தியாவ இந்தி எண்டு எழுதுவீங்களா? அப்புறமா இந்தி எதிர்ப்பு போராட்டம் எல்லாம் தனிநாடு போராட்டமா?

சார் இடியப்பத்துக்கு என்ன கறி எண்டு கேட்டா, இடி அமீன்னுக்கு ஐஞ்சு பொண்டாட்டி எண்டு சொல்றீங்களே!

ஓ சாரி, கொஞ்சம் எமோஷனல் ஆயிட்டேன், நெக்ஸ்டு கேள்விய கேளுங்க.

யாழ் கொலை வெறி!

“தமிழை விற்று பதக்கம் வாங்கும் தமிழா கேள் கொஞ்சம்” என்று எழுத்தாளர் கௌரி கொலை வெறி தனுஷுக்கு விமர்சனமா இந்த யாழ்ப்பாணத்து கொலை வெறி சாங்க போட்டு இருக்காங்களே?

தமிழை விற்று பதக்கமா? எங்க சார் தாறாங்க? நான் ஐம்பது பதிவு போட்டாலும், ஐஞ்சு பேரு அவசரத்துக்கு கூட ஒதுங்க மாட்டேன்கிறாங்க? இதில பதக்கமா? ஐயோ ஐயோ!

அதில்ல சார், கொலைவெறி பாட்டில தமிழ கொலை செய்து இருக்கிறாங்களாம் .. அவங்க பொங்கிட்டாங்க…

பொங்கலுக்கு தான் இன்னும் ரெண்டு வாரம் இருக்கே!

இல்ல சார் கோபத்தில பொங்கிட்டாங்க.

ஓ அந்த பொங்கலா …சிலுக்கு டான்ஸ் ஆடுறான்னு பத்மா சுப்ரமணியம் பரதக்கலை கெட்டுதுன்னு சொல்ற பேச்சால்ல இருக்கு! …. அவன் பாட்டுக்கு ஏதோ கொலை வெறின்னு பாடினா, அத ஜாலியா கேட்கணும் .. .. அது அவன் நேரம், ஹிட் ஆச்சுது .. இதில தமிழ் வளர்ச்சில என்ன பிரச்சனை? ஏன் இந்த யாழ்ப்பாண பசங்க தாங்களே ஒரு மெட்ட போட்டு தவில வளர்க்கவேண்டியது தானே.. கொலைவெறி மெட்டை ஏன் காப்பி பண்ணனும்?

இல்ல சார், பிபிசி எல்லாம் இத தான் தமிழ் பாட்டுன்னு சொல்லுதாம்?

பிபிசி க்கு எப்பிடி இந்த பாட்டு தெரியும்?

அது தான் யூடியுப்பில ஹிட் ஆச்சே சார்?

யாரு ஹிட் ஆக்கினது?

Kaval_Kottamநம்ம தமிழன் தான்!

அப்பிடி போடு அருவாள,  நீயே ஹிட்டாக்குவ… அப்புறம் நீயே திட்டுவியா? எழுத்தாளர் வெங்கடேசனுக்கு போன வாரம் அவர் எழுதிய காவல் கோட்டத்துக்கு சாகித்திய விருது கெடச்சுதே, யாராவது பய புள்ள பேஃஸ்புக்ல ஷேர் பண்ணிச்சா? ரொம்ப வேண்டாம் .. ஜேகே வுக்கு சவால் சிறுகதை போட்டில ரண்டாம் இடம் கிடச்சுதே? எவனாவது சீந்தினிங்களாடா? அப்புறம் தமிழ் வளரல, அணில் அசையேல்ல எண்டா?

சார் என்ன இருந்தாலும் இப்பிடி ஒரு பாட்டு ஹிட் ஆகும் போது நம்ம தமிழ் இவ்வளவு தானான்னு நெனைக்க மாட்டாங்களா?

ஆணியே புடுங்க மாட்டாங்க! ஐயாயிரம் வருஷ மொழி ஐஞ்சு நிமிஷ சினிமா பாட்டால தான் கெட்டிடும்னா, அது என்னிக்கோ கெட்டிருக்கும்.

அப்ப, கொலை வெறி பாட்டு கேட்டதால வந்த அவமானத்த துடைக்க கடல்ல குதிக்க இருந்ததாக எழுத்தாளர் விமலாகரன் குறிப்பிட்டு இருக்கிறாரே?

யாரு, அந்த காமிக்ஸ் ஆசாமியா? அவரு வேற ஏதாவது தொடைக்க போயிருப்பாரு .. அது புரியாம நம்மாளுங்க கதை கட்டி இருப்பாங்க..

இறுதியா என்ன தான் சொல்றீங்க பன்னிசாமி, கொலைவெறி பாட்ட புறக்கணிக்க வேணாமா?

டேய் எதுக்கெடுத்தாலும் புறக்கணிப்பா? புறக்கணிச்சி புறக்கணிச்சி நாமெல்லாம் பொறம்போக்கு ஆனது தான் மிச்சம். பாட்ட பாரு பாஸ். அவன் மட்டுமா நிக்கிறான்? பக்கத்தில ஸ்ருதி பொண்ணு பாஸ் .. எப்படிடா புறக்கணிக்க மனசு வருது? ஸ்ருதிடா .. ஸ்ஸ்..ஸ் .ஸ்ருதி... ஐயோ ..

shruti-hassan-photo

 

சார் பப்ளிக் பப்ளிக்

ம்ஹும் ம்ஹும் … யாரும் யாரையும் புறக்கணிக்க வேணாம், எது தகும் எது தகாது என்பதை காலம் தீர்மானிக்கும்

ஓ அப்பிடியா .. ஆனா இந்த சிம்பு ஏதோ பொறாமைல தான் …

டேய் ரொம்ப லெந்த்தா போகுதடா .. ஹன்சிகா கண்ணு கோபிச்சுக்குமில்ல .. ஐ ஆம் எஸ்கேப்பு