வியாழமாற்றம் 02-02-2012 : ஒய் திஸ் கொலைவெறி

Feb 2, 2012

ஒய் திஸ் கொலைவெறி !

அரசியல் satire எழுத ஆரம்பித்தபோதே அம்மா சனிப்பெயர்ச்சி சரியில்லை என்றார். நாங்க தான் சனீஸ்வரனுக்கே வியாழமாற்றம் பாக்கிறவங்க ஆச்சே! முதல் வாரம் ரெஸ்பான்ஸ பார்த்தால் எல்லாப் புகழும் இறைவனுக்கே! அடுத்த வாரம் தான் சனிக்கு பொஞ்சாதி மற்ற பக்கம் திரும்பி படுத்திருக்காப்ல(Is சனி married?). சனி கடுப்புல என்னைய வந்து பிடிக்க,  நான் அப்துல் கலாமுக்கு கிளாஸ் எடுக்கப்போய் கலாஸ் ஆகிவிட்டேன்.

வர வர நீயி ரொம்ப அரசியலுக்கு போறாப்ல என்று கல்யாணி அப்பவே கமெண்டிச்சி. கஜன் வேற ஜட்டி விலை எல்லாம் ஈரான் எண்ணை தடையோட கூடிப்போச்சு. உன்னால வாரா வாரம் கிழிபட முடியாது மாப்ள என்றான். நான் சும்மா ஜாலிக்கு எழுதுறேன் என்றாலும் சீரியஸ் சிகாமணிகளிடம் கோர்த்து விட சில கூட்டம் US வரைக்கும் போய் PhD செய்துகொண்டு இருக்கு. என்னத்த சொல்ல?
இந்த வாரம் அரசியல் மேடையில் இருந்து ஒதுங்கலாம். வர்ற வாரத்துக்குள் ஈழத்தமிழர் காமெடியில் சீரியஸ்னஸ்யையும் சீரியஸ் பதிவில் வடிவேலையும் தேடுவதை நிறுத்திவிட்டால் , நானும் ஜெயலலிதாவை எதிர்த்து சங்கரன் கோவிலில் தனித்து நிற்கலாம்!
வெயிட்! அப்படி புறமுதுகிட்டு ஓட நான் என்ன கலிங்கத்து பரணி படிக்காத காரிருளா? புறநானூறு தெரியாத புண்ணாக்கா? குதித்து பயந்தோட நான் என்ன குள்ள நரியா? நான் தான் ஆஸியில் safe ஆ இருக்கிறேனே! என்ன வேண்டும் என்றாலும் பொறுப்பில்லாமல் எழுதலாம்! விடிஞ்சா வேலையும் இருக்கும். வீடும் இருக்கும். குடிக்க தண்ணியும் இருக்கும்! இன்னிக்கும் ஒரு டாப்பிக் இருக்குடி!
அநேகமான சனிக்கிழமைகளில் புலம்பெயர் இலக்கியம் வளர்க்கவும், சமகால நேரிசை வெண்பா நாயகன் தனுஷ் போன்ற புறநானூற்று கவிஞர்களுடன் சேர்ந்து தமிழ் வளர்க்கவும், மெல்போர்னில், Jacobs Creek, Carlton Draught, Remy Martin போன்ற தமிழறிஞர்களுடன் கூடிப்பெசுவது வழக்கம். சென்ற சனிக்கிழமை, அப்படியான ஒரு தமிழாராய்ச்சி மாநாட்டில் கம்பர், Steve Jobs, சுஜாதா, தனுஷ், மகிந்தாவுடன் அடியேனும் Jacobs Creek உம்!!!
dhanush handsame vengai imagesகம்பர்: 
முன் கண்டு, முடிப்ப அரு வேட்கையினால்,
என் கண் துணைகொண்டு, இதயத்து எழுதி,
பின் கண்டும், ஓர் பெண் கரை கண்டிலெனால்;
மின் கண்டவர் எங்கு அறிவார் வினையே?

Steve Jobs :What is this rubbish?
தனுஷ் : ஐ ட்ரான்ஸ்லேட் யூ … திஸ் இஸ் ராமன், மிஸ்ஸிங்கு சீதா. யூ நோ சீதா? சீதா பழம்? பிக் புருட்!
Steve Jobs : Fruit? You mean Apple?
தனுஷ் : நோ நோ ஆப்பிள். ராமர் டோன்ட் நோ ஆப்பிள். ஒன்லி சீதா. ஹி இஸ் லவ்வு சீதா. கான்ட் மீட் பிபோர் வெட்டிங். ஸோ ஹி இஸ் கிரையிங்!
kambarசுஜாதா :
      குளித்து நனைந்த கூந்தல்
      நான் போகுமிடமெல்லாம்
       சொட்டுகிறது

மகிந்தா : மெக மொக்கத? (இது என்ன?)
சுஜாதா : ஹைக்கூ
மகிந்தா : எயா தேமலதா? கொட்டியாத? (அவன் தமிழனா? புலியா?)
சுஜாதா:  கவிதை, ஜப்பானிய கவிதை, குறும்பா என்றும் சொல்லலாம். ஆனால் அது தப்பாட்டம். ஹைக்கூ என்று தமிழில் எழுதவேண்டும்!
மகிந்தா : அப்பே கருணா லஸ்ஸன சிந்து கியன்ன புளுவாங் ( எங்கட கருணாவும் நல்லா கவித பாடுவாரு)
Steve Jobs : Can someone tell a good poem please?
mahinda-190ஜேகே :
அன்று பிள்ளையார் பிடிக்க போய் குரங்கானது,
இன்று குரங்கு பிடிப்பதேல்லாம் பிள்ளையார் ஆகிறது

மகிந்தா : சூப்பர் பஞ்ச் டயலாக்!
ஜேகே : இல்ல இது கவிதை, பொங்கல் விழாவுல கை எல்லாம் தட்டினாங்க! நம்புங்க
சுஜாதா : கவிதைல மரபு முக்கியம் ஜேகே. சும்மா எழுத கூடாது! For example…
பாரத் தலைவிரிக்கும் பன்னாடை மேற்சுற்றும்,
சோர இளநீர் சுமந்திருக்கும் – நேரமேல்,
எறி இறங்கவே இன்பமாம், தென்னை மரம்,
கூறும் கணிகை என்றே கொள்
கம்பர் : இந்தை இக்கவியை பாடுவன் எவனோ? பரந்தாமனோ? வெண்பா பண்பாளனோ? பன்முகம்  படைத்தனனோ? பறைக!
சுஜாதா: காளமேகம், 15th century, a very witty poet. கம்பரே, என்னோட கணையாழியின் கடைசிப்பக்கத்தை பார்க்கவில்லையோ?
Steve Jobs :  What the F!@# is going on here?
தனுஷ் : சார், தட் இஸ் வெரி ஓல்ட் டமில் சாங். மிஸ்டர் காளமேகம் சிங்கிங்கு, அபவுட் செக்ஸி  கேர்ள்,  ஷி இஸ் லைக் தென்னை மரம் …வித் தேங்காய்ஸ் .. யூ நோ கோகனட்?  ஒ வாட் அ ப்யூட்டி .. அன் இமாஜினபிள்!
steve-jobs-pointing-angryகம்பர் :
எங்கு நின்று எழுந்தது, இந்த இந்து? வந்து என் நெஞ்சு உலா
அங்கு இயன்று, அனங்கன் எய்த அம்பின் வந்த சிந்தை நோய்
பொங்குகின்ற கொங்கைமேல் விடம் பொழிந்தது; என்னினும்,
கங்குல் வந்த திங்கள் அன்று; அகம் களங்கம் இல்லையே
Steve Jobs : This is  shit!. You guys don’t have Beatles song?
Here I stand head in hand
Turn my face to the wall
If she's gone I can't go on
Feelin' two-foot small
 
தனுஷ் : சேர் வி ஹாவ் எ ஷேம் சாங்.
Steve Jobs : Shame song?
தனுஷ் : நோ சேர், same சாங்  .. சுப் சாங்
Steve Jobs :  What? come again?
தனுஷ் : வாய் திஸ் வாய் திஸ் வாய் திஸ் கொலை வெறிடி?
Steve Jobs : Wow mind blowing .. This is it .. இத இத இதத்தான் ஒங்களிட்ட எதிர்ப்பார்த்தேன். அது!!!
 

Yarl IT Hub

நேற்று Yarl IT Hub ஆரம்பிக்கும் open source project ஒன்றின் டிஸ்கஷன் skype இல்.  கிராமப்புற, புறநகர்ப்புற பாடசாலைகளுக்கென்றே விசேடமாக பயன்படுத்தக்கூடிய ஒரு மென்பொருள் வடிவமைக்கிறோம். ஐடியா சின்னது தான். வட்டக்கச்சி மகாவித்தியாலயமோ, யாழ்ப்பாணம் சைவப்பிரகாச பாடசாலையோ, நாகர்கோவில் மேல்நிலைப்பள்ளியோ (ஒரு ஊர்ப்பள்ளிக்கூடம் பாஸ்) எப்படி கணணி வசதியை பயன்படுத்துவது? அவர்கள் limitations க்கு மத்தியில் எப்படி, கல்வித்திட்டம், மதிப்பீட்டு திட்டம், admin வேலைகளை செய்வது என்ற ஆய்வும், வெறும் ஆய்வுடன் நிறுத்திவிடாது, develop செய்து, பொருளை இலவசமாக open source ஆக வெளியிடுகிறோம். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இருந்து ஒரு மாணவர் ஊரக பாடசாலைகளின் தேவையை ஆய்வு செய்கிறார். நான் ஆஸியில். டெவலப் செய்ய சிங்கப்பூர், கொழும்பு, நியூஸிலாந்து என பல தரப்பட்ட இடங்களில் இருந்தும் (நாலே நாலு பேரு தான் பாஸ்) இணைகிறார்கள். இலகுவான ஜாவா, bootstrap, MySQL தொழில்நுட்பங்கள் தான். உதவ முடியுமா? முயற்சி ஆரம்ப நிலையில் இருப்பதால், இணைந்தால் ஒரு கலக்கு கலக்கலாம். உங்களுக்கும் ஒரு இன்டர்வியூவுக்கு ப்ரோபைல் ஆகவும் அமையும். என்ன பாஸ்? சயந்தன் இது சம்பந்தமாக இங்கே எழுதியிருக்கிறார்.
ஆரம்பத்தில் PHP என்று இருந்தது. இப்போது ஜாவாக்கு மாறிவிட்டோம். அனுஷ்காவா இலியானாவா என்பது முக்கியம் இல்லை. இடுப்பு தான் முக்கியம்!
 

இந்த வார பாடல்

ஹாரிஸ்ஜெயராஜ் ஒரு காப்பி என்று சொல்வார்கள். விஜய் படத்தை “மொக்கை” என்று தியேட்டர் வாசலிலேயே நின்று facebook இல் ஸ்டேடஸ் போட்டுவிட்டு உள்ளே போய் முதல் ஷோ பார்க்கும் ஆசாமிகளை விட்டு விடுங்கள். அவ்வப்போது சச்சின்(படத்த சொன்னன்!) போல அவர் செஞ்சரியும் அடிப்பார். உள்ளம் கெட்குமே! ஸ்ரீனிவாஸ் மதுமிதா பாடியது. A gem!

முதல் இண்டர்லூடில் வரும் புல்லாங்குழல். ஊதல் காற்று, சூப்பர் லொகேஷன் என்றால் நல்லூர் தேரடிக்கு, திருவிழா முதல் பத்து நாட்களுக்குள் வரவேண்டும். சனம் அதிகம் இருக்காது. குறு மணல் சோளக காற்றில் உன் கண்ணில் நீர் வழிந்தால்!  அந்த இசை பின்னணியோடு மேகலாவை பார்க்கவேண்டுமே! நீங்களும் வேலிகள் தொலைத்த படலையாவீர்கள்!
தமிழ்நாட்டுக்காரரா? ரொம்ப வேண்டாம். டெல்லியில் இருந்து ஆக்ரா செல்லும் ரயிலில், சாதாரண பெட்டியில் யன்னலோரம், அப்படியே உத்தர பிரதேசத்து மஞ்சள் நிற மலர் வேளிகளை ரசியுங்கள். முன்னாலே யாரும் பெண் இருந்தால் உசிதம். மனைவி, காதலி இல்லாவிட்டால் இன்னும் .. வேண்டாம் வம்பு..  அந்த புல்லாங்குழலை உணர்வீர்கள். இந்த மாதிரி இசை தருவதற்கு காப்பி அடித்தால் முடியாது. காதலிக்கவேண்டும்!
எட்ட நின்ற மேகலா(கவனிக்க நின்ற!), வட்ட நிலா, வடம் பிடிக்க ஆசை தான். ஆஸி போல எப்போது அவள் என்னை பார்த்தாலும் இந்த இந்திய அணிக்கு white wash தான். ஒரு நாள்

வாய் திறந்து கேட்டு விட்டேன், வாழ்வை வாழவிடு அன்பே
ASIN1

அவள் விடவில்லை. இசை உடனே தடம் மாறியது. ட்ரம்கள் முழங்கின. இன்னமும் முழங்கிக்கொண்டே இருக்கின்றன. அது கடந்த அந்த சிம்பனி செல்லோ இன்னமும் கேட்கவில்லை. முடிய மூக்கு மீது மூக்கு வைத்து முட்டி விட தினம் மூக்குக்கு மொய்ஸ்தரைசர் போட்டு கிளீன் ஆக வைத்து இருக்கிறேன்! ஓசை இல்லாமல் மலரும் பூந்தோட்டம் வண்டாட, கொண்டாட .. இன்னும் எவ்வளவோ செய்யவேண்டும்! உன்னை காண முதலேயே இந்த மண்ணை நேசிக்கவும் ஆரம்பித்து விட்டேன்.  காலம் யாவும் காதல் கொள்ள/கொல்ல வாராயோ!

என்னை கொண்டாட பிறந்தவளே! இதயம் இரண்டாக பிளந்தவளே!

 

இந்த வார நெகிழ்ச்சி

நிரூபன், பதிவுலகில் இந்தப்பெயர் வெகு பிரபலம். ஈழத்து எழுத்தாளர்.  அவர் எழுதும் வேகம் மூச்சு முட்டும். ஜனவரி 50 பதிவுகள். போன வருஷம் 292 பதிவுகள். திங்கள் அன்று கர்ப்பிணிகள் உடம்பை எப்படி கவனிக்கவேண்டும்? எந்த மாசம் வரை மாட்டர் வைத்துக்கொள்ளலாம்? என்ற விஷயங்கள் எல்லாம் கண்ணை துறுத்த, நண்பர்களுக்காவது உபயோகப்படட்டும் என்று வாசித்துவைத்தேன்! முடிவில் படலை என்று இருந்தது. என்னடா படலையை சாத்தாமலா இதையெல்லாம் செய்வாங்க? என்று ஆச்சரியப்பட்டபோது தான், அட!
“வேலிகள் தொலைத்த ஒரு படலையின் கதை” க்கு அவரின் விளக்கத்தை பாருங்கள்.
படலை என்று சொன்னால் ஈழத்தில் உள்ளோருக்கு நல்ல பரிச்சயம் இருக்கும். வீட்டினுள் நுழைய முன்பதாக வீதிக்கு அருகாக இருக்கும் நுழை வாயிலைப் படலை என்று சொல்லுவார்கள்.
அப்படீன்னா "வேலிகள் தொலைத்த ஒரு படலையின் கதை" எப்படி இருக்கும் என நினைக்கிறீர்களா? வாருங்கள் அங்கே போய்ப் பார்ப்போம்!
படலைக்கு அழகு வேலிகள் இருப்பது தான். தன் மண்ணை விட்டுப் பிரிந்த ஓர் மைந்தனின் உணர்வலைகளினை, நினைவுகளை, அனுபவங்களை இவ் வலைப் பதிவு பேசி நிற்பதால்; இவ் வலைப் பதிவிற்கும் வேலிகள் தொலைத்த ஒர் படலையின் கதை எனும் பெயரைச் சூட்டியிருக்கிறார் ஜேகே அவர்கள்.
பதிவர் ஜேகே அவர்கள் தன்னுடைய வேலிகள் தொலைத்த ஒரு படலையின் கதை வலைப் பூவினூடாக தன் அனுபவங்கள், சுவாரஸ்யமான நினைவலைகள், பரீட்சார்த்த இலக்கிய முயற்சிகளைப் பதிவிட்டு வருகின்றார்.
ஜேகே அவர்களின் வலைப் பூவிற்கும் நீங்கள் ஓய்வாக இருக்கும் போது சென்று வரலாம் அல்லவா?”

இப்படி விளக்கம் கொடுக்கவேண்டும் என்று எனக்கே தோன்றவில்லை. எவ்வளவு உணர்ந்து அதை அனுபவித்திருந்தால் அதை புரிந்தது எழுதியிருப்பார்? எனக்கென்னவோ நிரூபன் போன்ற பதிவுலக நண்பர்கள் தான் நான் அடுத்த பதிவு எழுதுவதை உறுதிப்படுத்துகிறார்கள்.
தாங்க்ஸ் நண்பா!
 

இந்த வார காமெடி!

பதிவே காமெடி தானே அதிலே என்ன தனி காமெடி என்று நொட்டை போன்ற வாசகர்கள் மொக்கை ஜோக் சொன்னால், சட்டசபையில் இருந்து வெளியேற்றப்படுவீர்கள். உங்கள் மனைவி ஒரு சேஞ்சுக்கு தான் சமைத்து உங்களுக்கு சாப்பாடு போடுவாள்! துப்பமுடியாமால் விழுங்கவேண்டும். இல்லாவிடில் துப்பார்க்கு துப்பாய விஜய் நடிக்கும் துப்பாக்கியை விட நிலைமை மோசமாகும்! மாட்டருக்கு வாடா ஜேகே!
யோகர் சாமிகள் தெரியுமா? ஒரு சித்தர். சீடர் ஆப் செல்லப்பா சித்தர். யாழ்ப்பணத்தில் பிரபலம். பிரபலம் என்றால் அடிமட்டம் வரைக்கும் பிரபலம். யாழ்ப்பாணத்து சைக்கிள் திருத்தும் கடைகளில் கூட தொங்குவார்! எளிமையானவர். ரஞ்சிதா, நக்கீரன் இல்லாமலேயே  இவ்வளவு பெருமை சேர்க்க என்ன தான் செய்தார்? ஒன்றுமில்லை சிம்பிளா நாலு வார்த்தை தான்!
ஒரு பொல்லாப்பு மில்லை
எப்பவோ முடிந்த காரியம்
நாம் அறியோம்
முழுதும் உண்மை
வெயிட் இது காமடி இல்லை! போன ஞாயிற்றுக்கிழமை மெல்பேர்னில் கேணல் கிட்டு நினைவு கிரிக்கட், கொத்துரொட்டி, கூழ், தோசை,  அப்பம், ஓட்டம், புட்பால், வாலிபால் எல்லாமே கலந்த ஒரு விழா. விழா என்று சொல்லவும் முடியாது. ஞாபகார்த்த வைபவம் என்று வைத்துக்கொண்டால் கொத்துரொட்டி கிட்டுவுக்கு பிடிச்சதா? நான் கேள்விப்படல. ஒரு ஒன்று கூடல் என்று சொல்லலாமா? லௌட்ஸ் ஸ்பீக்கரில் எழுச்சி கீதங்களும் கூழுக்கு கியூவில் நின்ற போது கேட்க முடிந்தது. நித்யஸ்ரீ எஸ்பிபி .. உன்னிகிருஷ்ணன், அதே செல்லப்பா! இடையில் ரங்கீலா படத்து “ஹே ராமா யே கியா குவா” பாணி ஹிந்துஸ்தானியிலும் ஒரு புரட்சி பாடல். கூழ் புரைக்க்கேறியது! நிச்சயம் கிட்டண்ணே நினைச்சு இருக்கோணும்.
வெயிட் இது காமடி இல்லை! நான் விளையாடிய அணி இருந்த குழுவில், ஆஸ்திரேலியா சவுத் ஆபிரிக்கா தரத்து அணிகள். முதலில் சவுத் ஆபிரிக்காவுடன். ஓபன் ஆக இறக்கினார்கள். ஆட்டமிழக்கவில்லை. இறுதிவரை நின்று திரும்பி வந்த போது ஆறு ஓவருக்கேல்லாம் எதுக்கு டிராவிட்? என்றார்கள்!
வெயிட் இது காமடி இல்லை! அடுத்த மாட்ச். தோற்றால் நாங்கள் அவுட். உள்ளே போவதற்கு ஒன்றாவது வெல்லவேண்டும் இல்லையா! பீட்டர் சிடில் போல ஒருத்தன் அந்த டீமில். இந்த பந்து வீச்சுக்கு டிராவிட் தான் சரி என்று என்னையே அனுப்பினார்கள். போனேன்! முதல் பந்து, குனிந்த தலை தலை நிமிர முதலேயே, பிரம்மாஸ்திரம் தலைக்கு மேலால். கிருஷ்ணபரமாத்மாவுக்கு நன்றி. திரும்பிப்பார்த்தால், கீப்பர் பந்தை எடுத்து எச்சில் பண்ணிக்கொண்டு இருந்தான்! அடுத்த பந்து சார்ஜ் பண்ணி straight hit, one bounce, four! அப்புறம் இரண்டு ஓவருக்கு பின் ஆட்டமிழந்தேன் என்று வையுங்களேன்.
வெயிட் இது காமடி இல்லை! தோற்கப்போகிறோம் என்று தெரிந்து விட்டது. இது முதலே தெரிந்த கதை தானே! அதுக்கு தான் யோகர் சுவாமிகள் அப்போதே சொல்லி வச்சார் என்று காப்டனிடம் சொன்னேன். கடுப்பானான்!
என்ன சொன்னார்?
“எப்பவோ முடிந்த காரியம்”
அப்படீன்னா?
ஸ்கிரிப்ட் எல்லாம் எப்போதே எழுதியாச்சு! எந்த பால்,  கிளீன் போல்ட்!.. எல்லாமே! நாம் வெறும் நடிகர்கள் தான்
காப்டன் என்னை ஒரு மாதிரி பார்த்தான்! உதைத்து விடுவான் போல் இருந்தது. நல்லவேளை guard இன்னும் கழட்டவில்லை. பக்கத்தில் காறித்துப்பிவிட்டு சொன்னான்!
“All F@#$ed Up”
காப்டன் சுவாமிகளிடம் ஒரு படம் வாங்கி வீட்டில் மாட்டி வைக்கவேண்டும்!

இந்த வார தத்துவம்! 

சென்ற வாரம் அகத்தியன் பற்றி எழுதும்போது காதல் கோட்டைக்கு பதிலாக காதல் கொட்டை என்று எழுதிவிட்டேன். நம்ம கூட தானே ரொம்ப நொந்து நூலான பசங்க இருக்காங்க. கஜன் உடனே ஈமெயில் அனுப்பினான்!
“காதல் ஒரு கொட்டையாக இருக்கலாம்! அதுக்காக பப்ளிக்கா எல்லாம் இதை சொல்லக்கூடாது பாஸ்”

ஹாட் நியூஸ்

இன்னும் வாசித்து தூங்காமல் இருக்கும் பாச்சலர் பசங்களுக்கு கனவு காண ஒரு சூப்பர் படம் இன்று. பாச்சலர் பெண்களுக்கு நான் டென்னிஸ் ராக்கட்டுடன் நின்று எடுத்த படம் விரைவில் facebook இல்!
You married? I am so sorry. நீங்களே வீட்டு அலுமாரிக்குள் எலி அரிக்காமல் பூச்சி உருண்டைகளுடன் வாழ்க்கை நடத்தும் உங்கள் திருமண ஆல்பத்தை தூசு தட்டி மார்பில் அணைத்துக்கொண்டே கனவு காணலாம்! தலை மாட்டில் மறக்காமல் தண்ணீர் செம்பு எடுத்து வையுங்கள்! அடிக்கடி கனவு கலையும். பக்கத்தில் கிடக்கும்(!) கணவனையோ மனைவியையோ பார்த்தால் தூக்கம் அம்போ! மடக்கென்று குடித்துவிட்டு விட்டத்தை பார்த்துக்கொண்டே தூங்குங்கள். குறட்டை பலம் என்றால் காதில் headphone மாட்டுங்கள். குஸ்தி பாடல்கள் கேட்டால் குறட்டை சத்தம் பெரிதாக கேட்காது!
முக்கிய விஷயம்! கணவர்களே நீங்கள் ஹாட் நியூஸில் படங்களை பார்த்து தேவையில்லாமல் “ஜேகே யுடன் சேர்ந்து தான் கேட்டுப்போகிறீர்கள்” என்ற பஞ்ச தந்திர நண்பர்கள் ஆகிவிடவேண்டாம்!!!
hansika-0024நீ மட்டும் என்னோட ஆஸி ஆபன் ஆடிப்பாரு!
ஆறு மணிகள் என்ன?
ஆறு ஜென்மம் கூட டை பிரேக்கர் தான்!
ஆடாத ஆட்டம் எல்லாம் ஆடுவோம்
வீனஸ் வில்லியம் ஜாக்கட் வாஸ்து வைக்க மாட்டோம்!
மானர்ஸ் இல்லியாம், ராக்கட்  எடுத்து உடைக்கமாட்டோம்!
நடாலும்  நோவாக்கும் களைத்தால் களைக்கட்டும்!
நானும் நீயும் கலைத்தால் களைக்கவே மாட்டோம்!
கன்னத்தில் இருக்கும் கிண்ணம் போதும்
அன்னத்தை தொட்ட கைகளால்
ஆஸி கிண்ணத்தை இனி நான் தொடமாட்டேன்!
அன்னமே, அன்னா கொர்னிகாவே, அருகில் வா!
அதிரடிக்கார மச்சான் மச்சான் நான் தானே!

இந்த உலக கவிதைக்கு கேதா, வாலிபன் போன்ற பதிவர்கள் விமர்சனம் எழுதும் தகுதியை இழக்கிறார்கள். இது நேரிசை வெண்பாவில் ஈற்றடியின் கடைசிச் சீர் குற்றியலுகரமும், இடையிடையே ஓரசைசீரிலும் முடிகிறது என்று சிவத்தம்பி ஈமெயில் அனுப்பியிருந்தார். அப்படியும் இல்லை என்று வீம்பு பண்ணினால், தடாரெண்டு காலில் விழுகிறேன்!
ஆமா சார், இன்றைக்கு வியாழ மாற்றம் சுஜாதாவின் “கணையாழியின் கடைசிப்பக்கங்கள்” இன்ஸ்பிரேஷனில் எழுதியது. இப்போது புரிகிறதா ஏன் ஹாரிஸ் ஜெயராஜுக்கு வக்காலத்து?
டோட்டல் பதிவே லொள்ளு என்பதால்(நான் நினைப்பதால்!), இன்றைக்கு மன்மதக்குஞ்சு சட்டசபையில்!Contact form