வியாழமாற்றம் 16-02-2012 : வயது வந்தவருக்கு மட்டும்

Feb 16, 2012

 

கண்டிப்பாக வயது வந்தவருக்கு மட்டும்! (18+, 13+)

இந்த வருஷ வாலண்டைன்ஸ் டேக்கு எப்படியும் ஹன்சிகாவிட்ட காதல சொல்றது எண்டு ஜேகே முடிவு எடுத்து மூன்று வருஷம் ஆயிட்டுது. ஆறு மாசமா ப்ளாக்ல காதலை ஜொள்ளி ஜொள்ளி கைக்கெட்டிய மேகலாவும் யாருக்கோ எட்டினது எட்டப்பனுக்கே வெளிச்சம். இனியும் விடக்கூடாது எண்டு ஜேகேயின் அல்லக்கைகள் மீட்டிங் கூட களை கட்டுகிறது. மன்மத குஞ்சு ஏர்போர்ட்ட ஒருக்கா கிளியர் பண்ணிவிடு மச்சி!

ஜேகே :  Facebook க்கு நுழைந்தாலே ஏதோ மேட்ரிமானி சைட்டுக்கு போறமா இல்ல மாட்னி ஷோ போறமா என்று டவுட்டா இருக்கு! அவனவன் கடுப்பேத்தறான் பாஸ். யாரோ ஒரு பன்னாடை புரோக்கர் கிட்ட இருந்த போட்டோ எல்லாம் திருடி facebook ல “என் கொல்லைபுறத்து would be கள்” என்றெல்லாம் போட்டு வெறுப்பேத்தறான் பாஸ்! இந்த கூட்டத்தை எல்லாம் …
ஒபாமா : “Identifying a group of people and generalizing their qualities is a common ability of human brain - has its own consequences”
கவுண்டமணி : டேய் ஜார்ஜியா மண்டையா, சும்மாவே பதிவுக்கு வர்றவன் எல்லாம் துண்ட காணும் துணிய காணும்னு ஓடறான். அதுக்க இங்க்லீஷ் வேறயா? இவரு பெரிய தனுஷு.. வந்திட்டாரு இங்க்லீஷ்ல பாட்டு எழுத.
TRடீஆர்: 

ஜேகே நீ என் தம்பி!

காதல் வலி காய்ச்சிய கம்பி!

ஈசல் போல அதுவும் ஒரு தும்பி!

ஏங்கி ஊசலாடும் அது வெம்பி!

தனித்திரு விழித்திரு பசித்திரு அம்பி

அண்ணன் டி ஆர் சொல்லை நம்பி!

ஆ டண்டனக்க டனக்கு டக்கா!
பெஞ்சமின் நேத்தன்யாகு : சார் ஒபாமா, இவரு தான் டீ ஆர், ஈரானுக்கு அட்டோம் பாம் வாயாலயே செய்யிறதுக்கு சொல்லிக்கொடுத்தவர்!
டீ ஆர் : You try to Suppress and Oppress and Depress the Tamilian!
ஜேகே : டேய் அடங்குங்கடா. மாஞ்சு மாஞ்சு கதை எழுதினா, கதையை விட்டுட்டு, ஒண்ணுக்கு போன தமிழனா? இரண்டுக்கு போன தமிழனா? மேல் சாதி எண்டு கமெண்ட் போடுவீங்க. இங்க கன்சிகாவா செட் பண்ணுங்கடா எண்டு சொன்னா   ஈரானுக்கு குண்டு போடுறீங்களா?
122983.2சச்சின் : குத்துங்க எசமான் .. குத்துங்க ..இந்த ரசிகர்களே இப்பிடி தான்.  சென்ஷரி அடிக்க போறாருன்னு அவங்களே கமெண்ட் போடுவாங்க. அடுத்தவன் வந்து அவரு அண்டர் பிரஷர் எண்டுவான்.  திருட்டு ஸ்ட்ரீமிங்ல கிரிக்கட் பாக்கறவன் எல்லாம் சச்சின் ரிட்டையர் பண்ணனும் எண்டுவான். என்னைய அடுத்த வேர்ல்ட் கப் விளையாட விடாம செய்ய சதி நடக்குது பாஸ்.
ஜேகே : டேய் உனக்கு அப்பிடி ஒரு எண்ணம் வேற இருக்கா? அட கடவுளே!
பிள்ளையார் : அழைத்தாயா பக்தா? என்ன வரம் வேண்டும் சொல்லு! ஹன்சிகாவா? சுருதியா? சார்ஜாவா? பாரைனா?
ஜேகே : தான் போக வழிய காணும். மூஞ்சூறு விளக்குமாறு கேட்டுதாம்! அட நீங்க கூட மூஞ்சூற வச்சிருக்கீங்க இல்ல? கருமம் கருமம்! வர்ர கடவுள் கூட பாச்சலர் கடவுளாவே வர்றான் பாரு? நல்லா வாயில வருது?
arasangam-vijayakanthவிஜயகாந்ந் : அம்மா ஆட்சி ஜேகே. அப்பிடித்தான். எனக்கும் வாயில வந்திச்சு!சும்மா இருக்காம நாக்கை சின்னதா மடிச்சேன். டிஸ்மிஸ் பண்ணீட்டாங்க மிஸ் ஜெயலலிதா!
கருணாநிதி : எல்லாம் பார்ப்பனர் சூழ்ச்சி!
நயன்தாரா : இந்தாள் வேற பார்ப்பனர், தலித்துன்னுகிட்டு! பெரியார், பாரதி எல்லாம் சாதி பெயர் சொல்லி பிரச்சாரம் செய்தா புரட்சிங்கறாங்க. அதையே ஜேகே கதைல எழுதினா முட்டி பெயர்க்கிறாங்க!
Nayanthara-In-Sri-Rama-Rajyam-Movie-Stills-5ஜேகே : வாவ் நயன் ! உங்களுக்கு பெரியார் ,பாரதி எல்லாம் தெரியுமா?
நயன்தாரா : மேகலாவ கூட தெரியும்! உங்களோட ப்ளாக் இப்பெல்லாம் படிக்கறேனே!
ஜேகே : ஐ கான்ட் பிலீவ் இட்! இங்கிலீஷ் லிட்ரேச்சர்?
கவுண்ட மணி : எஸ் கிஸ் மீ! ரீல் போதும்! டேய் நெட்ல நாலு நாள் உட்கார்ந்து டிக்ஷனரி வச்சு எழுதினா நீ எல்லாம் இங்கிலீஷ் லிட்ரேச்சர் தெரிஞ்சவனா? கூகிள் ட்ரான்ஸ்லேடை தடை செய்யணும் மொதல்ல!
நயன்தாரா : நீங்க எதை எழுதினாலும் நன்னா இருக்கு ஜேகே!
ஜேகே : ஆரம்பத்தில அப்பிடி தான் இருக்கும்!
நயன்தாரா : அப்பிடி இல்ல ஜேகே! நீங்க அதிக குள்ளமும் இல்லை! அதிக உயரமும் இல்ல!!
ஜேகே : தாங்க்ஸ் நயன்!
நயன்தாரா : யூ ஆர் வெல்கம் ஜேகே. யூ லுக் நைஸ்!
Goundamani_1கவுண்டமணி : பாவம் பயபுள்ள! வீடெல்லாம் விக்க வேண்டி வருமேடா!
ஒபாமா : சொல்லப்போனா, ஹன்சிகாவுக்கு முன்னால ஒங்கள தான் ஜேகே … இருந்தவர் …
நயன்தாரா : ஒ ஆக்சுவலி!
கருணா : நோ ஹீ இஸ் ப்றோம் திருநெல்வேலி!
நயன்தாரா : ஹூ இஸ் திஸ்?
karuna singingமகிந்தா : என்ன கருணாவை தெரியாதா? ஸ்ரீலங்கன் ஐடல் ஜட்ஜு. ஸ்ரீலங்காவின் பிரபல பாடகர்! சிங்களம் தமிழ் இரண்டிலும் பாடுவார், ஆடுவார்!  இலங்கையில் சிறுபான்மை என்பதே கிடையாது. எல்லாரும் ஓரினமே!
டக்ளஸ் : பொறுங்க சார் .. அவசர படாதீங்க. போன வாரம் தானே அப்துல் கலாம், மும்மொழி திட்டம் ஆரம்பிச்சிருக்குறாரு. இப்ப தான் ஈழத்தமிழன் கொஞ்சம் கொஞ்சமா பிரிஞ்சு இலங்கை தமிழன், புலம்பெயர் தமிழன் எண்டு சண்டை போட தொடங்கி இருக்காங்க. அப்புறமா சிங்களம் படிச்சு, சிங்களம் மட்டும் கொண்டுவந்து .. மிக்ஸ் பண்ணி .. கோவேறு எல்லாம் ஈசியா வராது தலைவரே! எவ்வளவு இருக்கு? நாசூக்கா செய்யவேணாம்?
சம்பந்தர் : நீங்கள் பொருத்தம் பார்க்காமல் இழுத்தடிக்கிறீர்கள். ஜேகேயும் எவ்வளவு என்று தான் பொறுத்திருப்பது? எங்களுக்கு பிரிக்கமுடியாத கன்சிகாவும் ஸ்ருதியும் வேண்டும். அப்பிடியே பிரித்தாலும் ஸ்ருதிக்கு முதலமைச்சராக நாங்கள் சிபாரிசு செய்யும் நபரையே நியமிக்க வேண்டும். ஜேகேயின் ஏக புரோக்கர்கள் நாங்களே!
எஸ் எம் கிருஷ்ணா : இஸ் ஹீ ஓகே? இவரு இப்ப கலியாண புரோக்கரா? எப்பிடி இருந்த மனுஷன் இப்பிடி ஆயிட்டாரு?? ஐயோ ஐயோ!
மகிந்தா : இன்னும் ரெண்டு தடவை என்னோட பேசிப்பாருங்க, நீங்களும் கீழ்ப்பாக்கம் தான்!
TamilNational_Sampanthanசம்பந்தர் :  ஏதாவது கொடுங்கள் ப்ளீஸ்! எந்த முகத்தோடு நாங்கள் திரும்பி ஜேகேவிடம் போவது?
மகிந்தா : இந்தா பிடிச்சுக்க 13+!
ஜேகே : அட கடவுளே .. இதுக்கும் 13+ தானா? எத்தனை பசங்க பாஸ் ஒங்களுக்கு ?

நண்பன்!

ஆறு மாசங்களாக படம் ஒன்றும் பார்க்கவில்லை. கடைசியாக பார்த்தது எங்கேயும் எப்போதும். படம் பார்க்காத அயர்ச்சி! பார்ப்போம் என்றால் நண்பன் பார் என்றான் ஒரு எதிரி!  ஏற்கனவே த்ரீ இடியட்ஸ் பார்த்து கொஞ்சம் disappointed.  நாவலை வாசித்து விட்டு படம் பார்ப்பதில் இருக்கும் சிக்கல் இது.
nanban-stills-7 
நாவலில் வரும் அடிப்படை விஷயங்களையே மாற்றி விட்டார்கள். முக்கியமானது விஜய்/அமீர்கான் பாத்திரம். நாவலில் அது ரியான். படத்தில் வருவது போல நாவலில் அவன் ஒன்றும் வகுப்பில் முதலாவதாக வரமாட்டான். நாவலில் வரும் மூவருமே Five Point Someones தான். உண்மையான திறமைசாலி அதுவும் ஒரு க்ரேஸி ஸ்டூடன்ட்  இந்த சிஸ்டத்தை சமாளிக்க மாட்டான் என்பது நாவல் சொல்லும் முக்கிய கருத்து. அமீர்கான் வகுப்பில் முதல் மாணவனாய் வருவதிலேயே அடித்தளம் ஆடுகிறது. அப்புறம் அந்த டிராமாடிக் பினிஷிங் என்ன தான் திரைக்கதைக்கு உதவினாலும் நாவல் அளவுக்கு த்ரீ இடியட்ஸ் நெருங்க கூட முடியாது என்று நான் சொல்ல, படத்தை பார்க்கும் போது நாவலை யோசிக்க கூடாது என்றார்கள்! அதே பசங்க தான் த்ரீ இடியட்ஸ் அளவுக்கு நண்பன் இல்லை என்று! ஹ ஹா! I don’t get this!
படத்தில் விஜய் சூப்பர். சச்சினுக்கு பிறகு நீண்ட கால இடைவெளிக்கு பிறகு விஜய் நடித்து வெளிவந்திருக்கும் படம். எனக்கென்னவோ  ஜெயகாந்தன் மீண்டும் எழுத வந்தது போல இருந்தது! வரிவிலக்காமே!(ஸ்டார்ட் கும்மி!).
இலியானாவின் இடை அனிச்சம் பூக்களின் காம்பு களைந்து சூடினால் கூட தாங்குமோ தெரியாது. ஓவர் டு வள்ளுவர்.  சரி காணாமல் போன இடைக்கு தான் ஹாபியஸ் கொபஸ் வழக்கு என்றால், சற்றே நிமிர்ந்தேன், தலை சுற்றிப்போனேன்! வடிவேலுவின் கிணற்றை காணவில்லை! நமக்கு ஹன்சிகா போல முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம் வேலுண்கண் வேய்த்தோளே வேண்டும்!
By the way அந்த அஸ்கு புஸ்கு சாங் கலக்கல். விஜய் பிரகாஷ் காதல் அணுக்களுக்கு பிறகு காதலித்திருக்கிறார்!

The Cage By Gordon Weiss

the-cage-the-fight-for-sri-lanka-the-last-days-of-the-tamil-tigersமே மாசம் பதினெட்டு. பிரபாகரனின் சடலம் மீட்கப்படுவதோடு புத்தகம் ஆரம்பிக்கிறது! அந்த சம்பவத்தின் பின்னரான சிங்களவர் தமிழர் உணர்ச்சிகளும், வெளிப்படுத்திய முறையும் தொடர, அடுத்த சாப்டரில், விஷயம் இலங்கை வரலாறுக்கு தாவுகிறது. முதல் முதலில் தமிழர்களும், சிங்களவர்களும் எனக்கு சொல்லிவைத்திருந்த வரலாற்றை ஒரு வெள்ளைக்காரன் வேறு தளத்தில் மூலாதாரங்களுடன் எழுத, வரலாறுகளில் நம்பிக்கை இழக்கிறேன்! ரோமில் எரியும் போது பிடில் பிடித்தவன் யார் என்ற உண்மை! அப்புறமாய் தீயை அணைத்தவன் எழுதும் வரலாற்றில் தங்கியிருக்கிறது!. சோழ சாம்ராஜ்யத்தில் பாலும் தேனும் ஓடியதா அல்லது குருதியும் குரோதமுமா? என்பது நீங்கள் தமிழனா கலிங்கனா என்பதில் தங்கியிருக்கிறது. கலிங்கன் அடுத்த தலைமுறைக்கு தங்கினானா என்பதிலும் தங்கியிருக்கிறது! அஜீத்தன் எழுதியது போல, history always written by winners. நம்ம சங்க இலக்கியத்தையும் கம்பனையும் ஏன் காந்தியையும் கூட ஒரு வித பதட்டத்துடன் பார்க்கும் தருணம்!
Gordon Weiss இன்னொரு வெள்ளைக்கார லசந்த விக்கிரமசிங்க, சிவராம், ரஜனி திரணகம .. You name it! வாசித்த ஒவ்வொரு சிங்களவனும் தமிழனும் தன்னை தானே காறித்துப்பவேண்டும். துப்பினேன்! கோத்தாவும் மகிந்தாவும் செய்த அநியாயங்கள், போர் முனையில் சிக்கியிருந்த கருண் என்ற UN காரரின் அனுபவங்கள், புலிகள் செய்த அட்டூழியங்கள். வேண்டாம் இதை எழுதி, அதற்கொரு ஐநூறு கமெண்ட்கள் அங்கேயும் இங்கேயுமாய் .. அயர்ச்சி!
இதை வாசிக்கும் நீங்கள் தமிழரோ இல்லை சிங்களரோ இல்லை என்றால், தயவு செய்து இந்த புத்தகத்தை வாங்கி வாசியுங்கள்! தந்த பாலாவுக்கு நன்றி. சீக்கிரம் வாங்கப்பா .. நிறைய கதைக்க இருக்கு!
நான் ஏன் இதை வாசிக்கவேண்டும்? பேசாமல் ஒரு பைனரி பாயிண்ட்டில் நின்று விட்டால் என்ன? எது என்னை தடுக்குது? ஓவர் டு வாலிபன்!

ஆப்பிள்

ஸ்டீவ் ஜாப்ஸ் கஞ்சா அடிச்சாராம். LSD அடிச்சாராம். Vulnerable character ஆம். FBI குறிப்பில் இருந்தது வெளிவர, social networks முழுக்க இவனும் ஒரு மனுஷனா? அவசரப்பட்டு கருத்து தெரிவிப்பதில் நம்ம பசங்களுக்கு ஈடாக யாருமே இல்ல. அவரோட biography இலேயே இந்த விஷயம் தெளிவாக இருக்கிறது. அவரின் வெற்றிக்கு தாரக மந்திரமே “Think Different”, “Be Ruthless”, “Stay Hungry” , “Stay Foolish” and “Be Crazy”. அவர் ஒரு முறை Standford பல்கலைக்கழகத்துக்கு லெக்சர் பண்ண போன போது கேட்ட இரண்டு கேள்விகள்.
article-2098925-11A8D07E000005DC-866_306x461யாரு இதுக்க இன்னமும் கஞ்சா அடிக்காதவங்க?
யாரு இதுக்க இன்னமும் வர்ஜினாக இருக்கிறவங்க?
எல்லோருமே அவசரப்பட்டு கை உயர்த்த, ஸ்டீவ் ஜாப்ஸ் இவர்கள் வேலைக்காக மாட்டார்கள் என்று சொல்லிவிட்டார். ஸ்டீவ் ஒரு விதமான இன்ஸ்பிரேஷன். Ethics, Morale values என்ற விஷயம் எல்லாம் கிலோ என்ன விலை ரகம் இவர். ஒருவரை ரோல் மாடலாக எடுக்கும் போது வரிக்கு வரி ரீமேக் பண்ணி நண்பன் ஆக தேவையில்லை. தேவையானதை மாத்திரம் absorb பண்ணி நாயகனானால் நிமிரலாம்! எல்லோரிலும் குறை கண்டால், மறை மூர்த்தி கண்ணாவுக்கும் மறை கழன்று தான் இருக்கும்!

 

கனகரத்தினம் மாஸ்டர்

இந்த கதை, நான் எழுதிய கதைகளுக்குள்ளேயே மிகவும் matured ஆன கதை என்று அக்கா சொன்னாங்க என்று நான் சொன்னால் நம்ப மாட்டீர்கள். பிறந்தநாளுமா அதுவுமா அக்கா பொய் சொல்லமாட்டா. வாழ்த்துக்கள் அக்கா!
கதையில் சாதியம் வருவதால் நான் சாதிய வெறி பிடித்த மூதேசி என்று என்னையும், பாரதியையும் பெரியாரையும் ஒரே தட்டில் வைத்த ஒரு சில வாசகர்களுக்கு நான் மூத்திரச்சட்டி தூக்க தயார்!
a4f92a8efb637a45e1e774c91005d4696gஜாதி மதங்களைப் பாரோம் - உயர்
ஜன்மம் இத் தேசத்தில் எய்தின ராயின்
வேதியராயினரும் ஒன்றே - அன்றி
வேறு குலத் தினராயினும் ஒன்றே
ஈனப் பறையர்களேனும் அவர்
எம்முடன் வாழ்ந்திங்கிருப்போர் அன்றோ
என்று சாதிப்பெயர் சொல்லி சாதி மறுப்பு செய்த பாரதியோடு சேர்த்து என்னையும் ஈனப்பிறவி ஆக்கியது பெருமை. தலையில் தான் மயிர் கொட்டிப்போச்சு. முண்டாசு கட்டி மறைச்சுக்கலாம்! எதுக்கும் இதால தான் மனிசனிண்ட செத்த வீட்டுக்கு முப்பது பேரு கூட போக இல்லை எண்டு சொன்னாலும் சொல்லுவாங்கள். நாவலர் வளர்த்த சைவ பரம்பரை இல்லையா! 
கொஞ்சம் சீரியஸ் விஷயம். கணையாழியின் கடைசிப்பக்கத்தில் சுட்டது. தாமஸ் டிஷ் என்ற அமரிக்க எழுத்தாளர். இந்தியா வருகிறார். 1989ம் ஆண்டு. சல்மான் ருஷ்டி சாத்தானின் வேதம் ஓதி தலை போக இருந்த நேரம்! அந்த புத்தகத்தை பற்றி என்ன சொல்கிறீர்கள் என்று கேட்டதுக்கு கொஞ்சம் யோசித்துவிட்டு தயக்கத்தோடு சொன்னார்,
“எந்த ஒரு புத்தகமும் அது கொஞ்சமாவது நல்ல புத்தகமாக இருந்தால், யாரையாவாது அவமதித்தெ தீரும்”
கனகரத்தினம் மாஸ்டர் சிறுகதை நல்ல கதை!
 

காதல் காதல் காதல்!

சக்தி எப்எம் இளைய சக்தி நிகழ்ச்சியில் ஒரு முறை ஹைக்கூ கவிதைகள் பற்றிய நிகழ்ச்சி செய்கிறேன். தலைவர் புண்ணியத்தில் ஹைக்கூ பற்றி ஆத்தோ ஆத்தென்று ஆத்தும்போது பக்கத்தில் அறிவிப்பாளர் குணா சொன்னார்
“தம்பி எல்லோருக்கு புரியுமா போல ஈஸி கவிதை சொல்லுங்க! “
“பேசினால் ஏசி மூசுகிறது”
“இப்பிடி கஷ்டமான கவிதை வேண்டாம் ப்ளீஸ்”
“அண்ணே எனக்கு வீஸிங், நீங்க வேற!”
அப்புறமா ஒரு பாடல் விளக்கம் கொடுத்து ஒலிபரப்பலாம் என்று விளம்பர இடைவெளியில் பிளான் பண்ணினோம். படம் உன்னால் முடியும் தம்பி. பாடியவர் எஸ்பிபி, சித்ரா. இசை இசை!
இதிலென்ன பெரிய கவிதை இருக்கப்போகுது என்று குணா முகத்தில் கவலை! விளக்கம் கொடுத்தபின் இன்னும் பெரிய கவலை? எங்கே எனது கவிதை?
அந்த ஆணுக்கும் பெண்ணுக்குமிடையேயான சின்ன சின்ன சில்மிஷ பேச்சு, ஊடல், அது தொடரும் காதல், காமம். காதலர் தினத்தில் அட்லீஸ்ட் கவிதையை ரசிக்கும் பாக்கியம் கொடுத்தமைக்கு கடவுளுக்கு நன்றி! கஜனுக்கும் நன்றி என்றும் எழுதலாம்! கோபப்படுவான். அவன் சொன்னவுடன் நீக்கி விடுகிறேன்!
ஆண் : “தோகை போலே மின்னும் பூவை உந்தன் கூந்தல், கார்மேகம் என்றே நான் சொல்வேன் கண்ணே”
பெண்ணை பார்த்து, அதுவும் சீதா போல ஒரு பெண்ணை பார்த்தால், சொல்ல தோன்றுமா இல்லையா? சான்ஸே இல்லை. அவள் சொன்ன பதில் இலக்கியம்!

பெண் : பாவை எந்தன் கூந்தல் வாசம் யாவும் அந்த மேகம் தனில் ஏது நீ சொல்வாய் கண்ணா
இது தான் பெண்களில் இருக்கும் பிரச்சனை என்று கீர்த்தி சின்ன வயது முதலே சொல்லுவான்! எதை சொன்னாலும் நம்ப மாட்டாளுகள். அதுக்குள்ள ஒரு குறை பிடிக்கிறது.
ஆண் : அழகைச் சுமந்து வரும் அழகரசி ஆனந்த பூமுகம் அந்தியில் வந்திடும் சுந்தர நிலவோ
நம்மாளு ஸ்டார்ட் பண்ணினா ப்ரேக் போடாமா Freeway ல ஓடுற கேஸ் ஆயிட்டே. அடிச்சு விடுறான். திரும்ப மாட்டுப்பட போறான் பாருங்க.  காதலிக்கு இலக்கியம் தெரிஞ்சா பேசாம “டிஸ்டன்ஸ்ல மூனு” ரேஞ்சில கவித சொல்றது பெட்டர். ஒங்களுக்கும் இலக்கியம் கொஞ்சம் தெரியுது எண்டு காட்டிப்பாருங்க. காட்டோ காட்டுனு காட்டுவாங்க! எல்லாம் கதைல வாசிச்சது .. ஹி ஹி!
பெண் : நாளும் நிலவது தேயுது மறையுது நங்கை முகமென யாரதைச் சொன்னது?
ஷிட், இதுகளுக்கு கவிதை சொல்ற நேரத்துக்கு வெள்ளைக்காரிக்கு சொல்லிடலாம். வாவ் மைன்ட் ப்லோயிங் எண்டு சிம்பிளா கிஸ் பண்ணீட்டு போய்க்கிட்டே இருப்பாளுக எண்டு வாலிபன் டெக்ஸ்ட் பண்ணியிருந்தாப்ல!! எத சொன்னாலும் குறை சொன்னா என்னத்த தான் எழுதுறது. சாரி காதலன சொன்னன். கடைசியில் அவன் காலில் விழுந்துவிடுகிறான்!
ஆண் :மங்கை உன் பதில் மனதினைக் கவருது மாறன் கணை வந்து மார்பினில் பாயுது.
காலில் விழுந்தால் சில காதலிகள் எம்மை கால் மிதியாக்குவார்கள். சிலர் தாம் விழுந்து எமை எழ வைப்பார்கள். இவள் சிலநேரங்களில் விழ வைக்கிறாள். சில நேரங்களில் எழ வைக்கிறாள். எதுக்கு இதுக்கிந்த விளையாட்டு?
Neethane-En-Ponvasantham2பெண் : காமன் கணைகளை தடுத்திடவே காதல் மயில் துணை என வருகிறது
ஆண் : மையல் தந்திடும் வார்த்தைகளே மோகம் எனும் நெருப்பினைப் பொழிகிறது
பெண் : மோகம் நெருப்பாக அதை தீர்க்குமொரு ஜீவ நதி அருகினில் இருக்குது

ஊடல் கூடி காதல்! அடுத்தது மகிந்தவின் 18+ ஆயிடும்!! நான் கோய்ந்த பாஸ்.

காதல் போயின் சாதல்!

சின்ன வயசு பாட்டு. அந்த காலத்தில் கஜனும் நானும் அடிக்கடி கேட்கும் பாட்டு. இப்போது எனக்கு மெமரி பவர் ஜாஸ்தி தானே. மனப்பாடம்! பாட்டாலே புத்தி சொன்னான். பாட்டாலே பக்தி சொன்னான். பாட்டுக்கு அவன் பாடு பட்டான். அவன் பாடுகள் பலவிதமே!

மேய்வது எல்லாமே மேய்க்கப்படுவதால் 
மேய்க்கலாம் என்று மேயப்போனவன்!
மெய்யெனப் பெய்யும் மழையும்
பொய்யன மேனியாம்
பொன்னாம், பெண்ணாம்
பெண்ணாகரத்தில் இடைத்தேர்தலாம்!
கானல் நீராம் !காட்சிப்பிழையாம்!
காதலியாம்!
போனதெல்லாம் கனவினைப்போல் புதைந்தழிந்தே போனதாம்
போதாத கனவாம்! பூமியும் பொய்யாம்!
படி தாண்டா பத்தினியாம்
படலை தாண்டிய பரமனாம்!
குஞ்சியழகும் கொடுந்தானை கோட்டழகும் குமட்டுதாம்.
நெஞ்சத்து நல்லம்யாம்!
ஒரு போல்லாப்பும் இல்லையாம்!
புங்குடுதீவு புகையிலையாம்!
பொருள் தேடும் பூமியில் அருள் தேடும் நெஞ்சமாம்!
போகமாம், மோகமாம், மோசமாம்
முப்பது நாளாய் மாசமாம்!
முன்னூறே நாளில் போகியாம்!Contact form