கடந்த சில நாட்களாய் பதிவர்களுக்கு ஒரு ஆச்சரியம். தங்கள் பதிவுகளில் உள்ள திரட்டிகளில் வாக்குப்பட்டி எல்லாம் துடைத்து கிளீன் ஆக இருக்கிறது. தமிழ்மணம், தமிழ்10, உடான்ஸ், இன்டெலி என எல்லாமே மக்கர் பண்ணுகிறது. ஏன் இந்த சிக்கல் என்று மண்டையை பிய்த்துக்கொண்டவர்களுக்கு இதோ!
எல்லாம் கூகுளின் கண்டறியாத புதிய பிரைவசி பாலிசி தான். எல்லா blogger.com பதிவுகளையும் அந்தந்த நாட்டு டொமைன்களுக்கு மாற்றுகிறது. உதாரணமாக நீங்கள் இந்தியாவில் இருந்தால் நீங்கள் செல்லும் blogger தளங்கள் எல்லாம் blogger.com.in என்று redirect ஆகும். ஆஸ்திரேலியாவில் இருந்தால் blogger.com.au என்று முடியும். பதிவுகளை வாசிப்பதில் எந்த சிக்கலும் இல்லை. திரட்டியில் தான் சிக்கல். எப்படியா?
உதாரணமாக நான் இந்த பதிவை தமிழ்மணத்தில் இணைக்கிறேன். நான் இணைக்கும் URL “http://orupadalayinkathai.blogspot.com.au/2012/01/blog-post_30.html” என்று இருக்கிறது இல்லையா. இப்போது நீங்கள் இந்தியாவில் இருந்து பதிவுக்கு வருகிறீர்கள். உங்கள் URL http://orupadalayinkathai.blogspot.com.in/2012/01/blog-post_30.html. இதனால் நீங்கள் வாக்களிப்பது எனக்கு தெரியாது. நான் வாக்களிப்பது உங்களுக்கு தெரியாது. ஏன் என்றால் டெக்னிக்கலாக இருவரும் வேறு வேறு URL க்கு வாக்களிக்கிறோம்.
இதனால் பல சிக்கல்கள் வரப்போகின்றன. வாக்குப்பெட்டியின் Javascript ஐ மாற்றாவிடில், வாக்குகளின் எண்ணிக்கை நாட்டுக்கு நாடு வேறுபடப்போகிறது. திரட்டிகளில் “பிரபல பதிவுகள்” இருக்கும் நாட்டைப்பொருத்து மாறுபடப்போகிறது. இந்தியர்களுக்கு எண்ணிக்கை அதிகம் என்பதால் பெரிய ப்ராப்ளம் இல்லை. புலம்பெயர்ந்தவர்கள், ஈழத்தவருக்கு தான் சிக்கல். சிறுபான்மையர் சிக்கல் கூகிள் வரை வந்துவிட்டது! பார்ப்போம் இது எங்கே போய் முடியப்போகிறது என்று.
தற்காலிகமாக NCR(No Country Redirect) ஆப்ஷன் பாவிக்கலாம் தான். ஆனால் இது பிரச்னைக்கு தீர்வாகாது. எல்லா வாசகர்களையும் அப்படிப்பாவிக்க சொல்லவும் முடியாது.
வேறு ஏதாவது வழி இருக்கிறதா? உங்களுக்கு தெரிந்தா பகிருங்களேன்!
http://support.google.com/blogger/bin/answer.py?hl=en&answer=2402711
இந்தச்சிக்களில் இருந்து விடுபட ஒரே வழி, தனி டொமைன் எடுப்பது தான். எடுக்கவேண்டும் என்று ரொம்பகாலமாக யோசிச்சுக்கொண்டு இருந்தேன். இனிமேல் ஆணியே புடுங்கமுடியாது. எடுத்தாச்சு. மக்களே என் புதிய முகவரி.