யாழ்ப்பாணத்தில் ஒரு சிலிக்கன் வாலி!
நான்கு மாசங்களுக்கு முன்னால் சயந்தன் “அண்ணே மரம் நடப்போறன், வாறீங்களா?” என்று கேட்டபோது செய்யோணும் என்று தோன்றியது. ஒருவகையில் சுயநலமும் தான். அட மரம் நட்டு என் காலத்திலேயே நிழல் தந்தால், நானும் போய் ஒரு குடிசை போடலாமே!
அப்புறம் சர்வேசும் வந்து சேர இது முடியும் என்று தோன்றியது. இந்த சனிக்கிழமை Yarl IT Hub இன் அங்குரார்ப்பண(என்னா தமிழடா இது, கூகிள் கூட டென்சன் ஆயிட்டுது) வைபவம். சயந்தன் CNN க்கு பேட்டி கொடுக்க இருந்தவன். நான் அழைத்தேன் என்பதற்காக அதை மறுத்து படலை வாசகர்களுக்காக கொடுக்கும் பேட்டி.
அப்புறம் சர்வேசும் வந்து சேர இது முடியும் என்று தோன்றியது. இந்த சனிக்கிழமை Yarl IT Hub இன் அங்குரார்ப்பண(என்னா தமிழடா இது, கூகிள் கூட டென்சன் ஆயிட்டுது) வைபவம். சயந்தன் CNN க்கு பேட்டி கொடுக்க இருந்தவன். நான் அழைத்தேன் என்பதற்காக அதை மறுத்து படலை வாசகர்களுக்காக கொடுக்கும் பேட்டி.
ஜேகே: அதென்ன Yarl IT Hub?
சயந்தன் : I Think .. you know..Yarl IT Hub is ..ஜேகே : தமிழ் ப்ளீஸ்! படலைல ஏற்கனவே இங்கிலிஷ் அதிகம் என்று கம்ப்ளைன்ட் வருது!சயந்தன் : இட்ஸ் ஓகே! யாழ்ப்பாணத்தில இருக்கிற வளம் என்பது எங்கட கல்வி தான். குப்பி விளக்கில படிச்சு சாதிச்ச சமூகம் நாங்க. இண்டைக்கு ஜெர்மனில இருந்து, யூதர்களில இருந்து, கலிபோர்னியாவில இருந்து இத்தனை ஆயிரம் விஞ்ஞானிகளும், தொழில்நுட்ப வல்லுனர்களும் வந்தது போல யாழ்ப்பாணத்தில இருந்து ஏன் வரவில்லை என்று யோசிச்சோம். Steve Jobs உம் Einstein உம் இருந்தாலும் ஏன் இன்னொரு ஆப்பிளும், இன்னொரு தியரி ஒப் ரிலேட்டிவிட்டியும் நம்மிடமிருந்து வரவில்லை? ஒரு நாராயணசாமி, ஒரு அப்துல்கலாம் வரவில்லை. ஏன்?ஜேகே : என்னெண்டு வாறது? அது தானே எப்ப பார்த்தாலும் சண்டை… உயிர் தப்புறது பெரிய விஷயம். இதில எங்க போய் இதை பற்றி யோசிக்கிறது?சயந்தன் : அது உண்மை தான். ஆனா யூதர்கள் எவ்வளவு கஷ்டம் என்றாலும் தொடர்ந்து செய்தார்களே? முக்கிய காரணம், நம்மளிட்ட ஒருங்கிணைந்த வேலைத்திட்டம் இல்லை. ஒரு நல்ல ஐடியா தோன்றினால், அத கிரியேட் பண்ணி, டெஸ்ட் பண்ணி, product road map போட்டு, ஸ்பொன்சர் எடுத்து எவ்வளவு செய்யணும்? எப்பிடி செய்யிறது? யாரை பிடிக்கிறது? இதெல்லாத்தையும் யோசிக்கிறத விட பேசாமா ஒரு companyல போய் சிவனே என்று வேலை செஞ்சிட்டு வீட்ட வந்து “வியாழ மாற்றம்” எழுதுறது இலேசு எண்டு தான் நம்மட ஆக்கள் நினைக்கிறினம்!ஜேகே : சைக்கிள் கேப்புல எனக்கேவா? சரி இந்த பிரச்சனைய Yarl IT Hub எப்படி அணுக போகுது?சயந்தன் : முதலில, யாழ்ப்பாணத்தில தொழில்நுட்பத்துக்கான ஒரு அத்திவாரம் போடவேண்டும். I mean an infrastructure. ஒரு awareness. எங்க போனாலும், யார பார்த்தாலும் IT பற்றியும், அதன் வளர்ச்சி பற்றியும் பேசிக்கொள்ளோணும். ஒரு அண்டர்ஸ்டாண்டிங் வேண்டும். அது இப்ப கொஞ்சம் மிஸ்ஸிங். உதாரணத்துக்கு சிலிக்கன் வாலில வர்ற மார்ச் 7ம் திகதி என்ன ஸ்பெஷல் என்று கேட்டா எல்லாருமே சொல்லுவாங்க.ஜேகே : அண்டைக்கு என்ன ஸ்பெஷல்?சயந்தன் : அண்டைக்கு தான் ஆப்பிளின் iPad3 ரிலீஸ் ஆகலாம் என்று ஒரு வதந்தி இருக்கு!ஜேகே : ஒ வதந்தியா … நமக்கு தெரிஞ்ச வதந்தி எல்லாமே நயன்தாரா இப்ப எப்பிடி அந்த “பிரபு” டாட்டூவ அழிக்கபோறாங்க? எங்களில் யாரு அடுத்த பிரபுதேவா? தலையை பிச்சிடலாம் போல இருக்கு. நான் கூட டான்ஸ் பழகுவோமா எண்டு யோசிச்சுக்கொண்டு இருக்கிறன்!சயந்தன் : அது உங்கள மாதிரி வெட்டிபசங்களோட வேலை! ஆனா முன்னேறவேண்டும் என்று ஒரு தலைமுறை யாழ்ப்பாணத்தில 24*7 யோசிச்சுக்கொண்டு இருக்கு. அவங்கள எப்புடி தூக்கிவிட வேண்டும் எண்டு இன்னொரு தலைமுறை இலங்கையிலும் வெளிநாட்டிலேயும் தலைய பிச்சிக்கிட்டு இருக்கு!ஜேகே : இதை எப்பிடி லிங்க் பண்ண போறீங்க?சயந்தன் : முதலாவதா, லிங்க் பண்ணுறதுக்கு நாங்க இருக்கிறம் எண்டு எல்லாருக்கும் சொல்லோணும். பூனைக்கு மணி கட்டிறம். இன்டரஸ்ட்டிங் ஆக இருக்கோணும் எண்டதுக்காக "சூப்பர் சிங்கர் ஸ்டைலில IT போட்டி வைக்க போறோம். வாரா வாரம் போட்டிகள். எலிமினேஷன் .. எல்லாமே இருக்கும்.ஜேகே : சித்ரா மேடம் ஜட்ஜா வருவாங்களா?சயந்தன் : Software industry இருக்கிறவங்க. வாரா வாரம் துறை சார்ந்த நிபுணர்கள் ட்ரைனிங் கொடுப்பாங்க. மாணவர்களுக்கு நிறுவனங்களில் இன்டேர்ன் வாய்ப்பு கொடுக்கிறது போன்ற வாரா வார பரிசுகள் கூட இருக்கு.ஜேகே : சூப்பர் .. வேற என்ன செய்யிறீங்க?
சயந்தன் : Open source எனப்படும் திறந்த மென்பொருள் projects செய்யபோகிறோம். அதன் மூலம் Opensource projects ல யாழ்ப்பாணத்துக்கென்று ஒரு பிராண்ட் உருவாக்கலாம்.ஜேகே : என்னத்த செய்தாலும், நம்மாளு படிச்சிட்டு கொழும்பு, வெளிநாடு என்று எஸ்கேப்பாயிட்டு அங்க இருந்து சவுண்டு விடுவாங்களே சேர்?சயந்தன் : அது படலை எழுதுற ஜேகே மாதிரு ஒரு சில பேர்வழிகள் தான்! ஆனா உண்மையிலேயே சொந்த ஊருக்கு ஏதாவது செய்யோணும் என்று நினைக்கிறவங்க இருக்கிறாங்க. அவங்கள திரும்பி வா என்று கட்டாயப்படுத்த முடியாது. ஆனா வரவைக்க தூண்டலாம். ஒரு நல்ல சூழல், ஒரு ஐந்து மென்பொருள் நிறுவனங்கள் அங்கே வந்திட்டுது என்றால், ஒட்டோமடிக்கா அதுக்கு இஞ்சினியர்ஸ் வந்து தங்குவாங்க. அவங்க குடும்பங்கள் அங்க வரும். வெளிநாட்டுக்கொம்பனிகள் வரும். கூகிள் வரும். ஆப்பிள் வரும். தன்னால இவங்களும் வருவாங்க. வாலிபன் போன்றவர்கள் எல்லாம் இப்பவே சாமான் அடுக்கி இலங்கைக்கு ப்ளேன் ஏற ரெடி. .. ரசிகை கௌரி குடிசை கூட பார்த்திட்டு வந்திருக்கிறா.. இப்படி பலர்!ஜேகே : சரி .. இதெல்லாம் செய்யிறதால எப்பிடி ஒரு Steve Jobs, ஒரு Bill Gates உருவாகலாம் என்று நினைக்கிறீங்க?சயந்தன்: பாருங்க .. இப்படியான சூழ்நிலைல வளரப்போகிற தலைமுறையின் சிந்தனைகள் எப்படி இருக்கும்? நீங்க இண்டைக்கு எழுதுறீங்கள் என்றால் அதுக்கு காரணம் அந்தக்காலத்தில லைப்ரரில போய் இருந்து சுஜாதாவையும், எண்டமூரியையும் வாசிச்சு இருக்கிறீங்க! ஜெயராஜின் கம்பராமாயண பிரசங்கம் கேட்டு இருக்கிறீங்க. இண்டைக்கு நீங்க வளர்ந்து கக்கூஸ் போன்ற சிறுகதைகள் எல்லாம் எழுத இல்லையா? அதே போல இந்த தலைமுறை, தொழில்நுட்பத்தை பார்த்து வளர்ப்போகுது. அவங்க வளரும்போதே இதையே யோசிச்சுக்கொண்டு வளரும் இல்லையா ..வளர்ந்து புதுசா ஏதாவது செய்யலாம்!ஜேகே : கொய்யால, இப்படி சொன்னா ஏதோ நானே கேள்வி, நானே பதில் போட்டேன் என்று வாசகர்கள் நினைச்சிடுவாங்க! பரவாயில்ல அப்படியே இருக்கட்டும் .. I get it .. ஆக இது ஒரு ஆரம்பம் தான்.சயந்தன் : ஆரம்பம் தான்… ஒரு பத்து வருஷத்தில யாழ்ப்பாணத்தை பெங்களூர் ஆக்குவம். இன்னொரு இருபது வருஷத்தில சிலிக்கன் வாலி ஆக்குவோம். யாழ்ப்பாணம் சிலிக்கன் வாலி ஆகும், அது அப்படியே பக்கத்து ஊருக்கு பரவும் .. முழு நாடுமே வளர்ந்திடுமே!சயந்தன் : பாத்தீங்களா .. இதான் .. இப்பிடி தான் ஒவ்வொரு முறையும் யாராவது ஏதாவது தொடங்கும் போது சிரிச்சு நக்கல் அடிச்சு கெடுத்துடுவீங்க…. கெஞ்சிக்கேக்கறோம், ஏதாவது பிறந்த ஊருக்கு செய்யோணும் எண்டு நினைக்கிறீங்க இல்ல? ஏன் இங்க இருந்து தொடங்க கூடாது?ஜேகே : Sorry சயந்தன் … என்ன செய்யோணும் சொல்லுங்க .. உங்களுக்கு ஆதரவு எப்படி இருக்கு?சயந்தன் : அதை ஏன் கேட்கிறீங்க .. சனிக்கிழமை நிகழ்ச்சிக்கு முப்பது பேரு தான் வருவாங்க போல இருக்கு. சில நேரங்களில எங்கட ஆட்களை புரிஞ்சு கொள்ள முடியிறது இல்ல. சம்பந்தன் ஒண்டும் செய்யிறார் இல்லை எண்டுவாங்க. வெளிநாட்டு தமிழரை திட்டுவாங்க. இலங்கைல இருக்கிறவங்களை வாருவாங்க .. ஆனா சந்தோஷமா இப்படி ஒன்று செய்யும்போது யாருமே சீண்ட மாட்டாங்க. புறக்கணிக்கிறதில இருக்கிற ஆர்வம் கொஞ்சங்கூட பாராட்டி பங்கெடுக்கிறதில இருக்கிறதில்லையோ எண்டு கவலையா இருக்கு!ஜேகே : பாஸ் .. டோன்ட் வொரி .. நெஞ்சில கையை வச்சு சொல்லுங்க பார்ப்பம் .. ALL IS WELL!சயந்தன் : ALL IS WELL!
அசிங்கப்பட்டுட்டாண்டா ஆறுமுகம்!
பூமியை போலவே ஒரு கிரகத்தை அண்மையில் கண்டுபிடித்திருக்கிறார்கள். கெப்லர் 22B என்று பெயர். பூமியின் சீதோஷ்ண நிலை. அதன் சூரியனை சுற்ற 290 நாட்கள். பூமியை விட ரெண்டரை மடங்கு பெரிசு.அனேகமாக கடல் தானாம். உயிர் அங்கே வாழ சான்ஸ் இருக்கு என்கிறார்கள். யாருக்கு தெரியும், பூமியை விட பெரிதாக இருப்பதால், அதுதான் நரகமோ தெரியாது. நரகம் சொர்க்கத்தை விட சௌகரியமாக இருக்கும் இல்லையா! நம்ம ஊரு “நல்லவங்க” எல்லாம் அங்கே இருக்கும் சான்ஸ் அதிகம்.

ஆனாலும் ஒரு சான்ஸ் இருக்கு. அந்த கிரகத்தில், எங்களை விட அதிக திறமையும், energy உம், Yarl IT Hub போன்ற அமைப்புக்களும் இருந்தால், அந்த கிரகத்தில் இருப்பவர்கள் நம்மை தேடி வந்துவிடலாம். வந்தால், சிரித்தால் முதுகில் குழி விழும் பெண்னை (அந்த ஊரில் முதுகில் தான் வாய் இருக்குமாம்!) தான் நான் காதலிப்பேன்! நீ முன்னாலே போ நானும் பின்னாலே வாரேன்!.
இதை எழுதும்போது, பத்து வருஷத்துக்கு முதல், Danny Boyle இன் “The Beach” என்றொரு திரைப்பட காட்சி ஞாபகம் வருகிறது. நாயகி ஒரு நிலவு இரவில், நடுச்சாமத்தில், காமராவை பொருத்தி நிலாவின் அழகை நொடி நொடியாக படம் பிடித்துக்கொண்டு இருப்பாள். பிரெஞ்சுக்காரி, அழகி, பெயர் Francoise. அவன் அமேரிக்கன் ரிச்சார்டுக்கு அவள் மீது ஒரு கண்! இம்ப்ரஸ் பண்ண ட்ரை பண்ணுகிறான். அவள் பதில் சும்மா கன்னத்தில் அறையும்! கதையை பாருங்கள்!
RICHARD “ You realize that in the eternity of space, there is a planet, just like this one, where you are photographing back towards us. You're photographing yourself.மன்மதகுஞ்சு : அசிங்கப்பட்டுண்டாண்டா ஆறுமுகம்! ஜேகே போலவே ஒலகம் முழுக்க பசங்க பீலா விட்டுக்கிட்டு திரியிறாங்க போல!
FRANCOISE : Incredible
RICHARD : There are infinite worlds out there, where anything that can happen does happen.
FRANCOISE : So on one you are rich, on another poor. On one you are a murderer, on another the victim.
RICHARD : Exactly
FRANCOISE : Richard, you know something … That is just the kind of pretentious bullshit that Englishmen and Americans always say to French girls so that they can sleep with them.
RICHARD : Sorry. I thought I was doing quite well.
இந்த வார நெகிழ்ச்சி
இந்த வாரம், இளையராஜா இசை என்னுடைய டீன் ஏஜ் பருவத்தில் எப்படி கூட வந்தது என்று கொல்லைப்புறத்து காதலிகள் பதிவில் எழுதினேன். பதிவில் வன்னியில் நெல் விதைப்பு பருவத்தில் “கிளி ஓட்டும்” விஷயம் சொந்த அனுபவத்தில் எழுதினேன். “அப்படியா?” என்று கூட ஒருவரும் கேட்காதது அயர்ச்சி தான். தக்காளி, இப்பிடியே போனா நம்ம பதிவுக்கு நான் ஒருத்தன் தானா வாசகனா? பேசாமா ஒரு டயரி வாங்கிடுவமா? என்று யோசிச்சுக்கொண்டு இருக்கும்போது தான் இந்த மெசேஜ் வந்தது.
வெங்கடசாமி சங்கர்குமார், தமிழ்நாட்டுக்காரர், “hai sir really unbelievable collection and ur word description
i hats of u
what a life u live in srilanka
i don't know how to type in tamil
in this site
otherwise i will type my lovabale tamil”
netru eravu athigalai 3 manivarai ungal padalay kettukondirunthan migavum santhosamairunthathu, nan tamilanattil tirunelveli pakkam kovilpatti
பிரபாகரன் (பெயர் பயன்!), ஸ்ரீதர், udoit மோகன் போன்ற ஒரு சிலரை தவிர தமிழ்நாட்டவர்கள் கண்ணில் என் பதிவுகள் அதிகம் படுவதில்லை. திடீரென்று திருநெல்வேலியில் இருந்து ஒருவர் இப்படி எழுதும்போது சந்தோசம். அதுவும் அதிகாலை மூன்று மணிவரை கேட்டுக்கொண்டு இருந்தாராம். இது நெகிழ்ச்சி!
இந்த வார புத்தகம் “Revolution 2020”
“படிச்சதென்ன பிடிச்சதென்ன” என்று அவ்வப்போது நானே சமைச்சு நானே சாப்பிட்டுவிட்டு மிகுதியை ப்ரிட்ஜில் வைப்பேன்! நெருங்கிய நண்பர்கள் மட்டும் கெட்டுப்போகிறதே என்ற நல்ல நோக்கத்தில் சிலநேரங்களில் எடுத்து மோந்து பார்ப்பார்கள். அதனால் வியாழன் சந்தையில் கொண்டுவந்து விற்றுப்பார்க்கலாம் என்று ஒரு ஐடியா .. போணியாகுமா? (கவிதையில் மட்டும் தான் உருவகம் முடியுமா?).

இதுவும் கல்வித்துறை சம்பந்தமானது. Chetan இன் எல்லா நூல்களிலும் ஒரு பாணி இருக்கும். யாராவது ஒருவர் chetan க்கு கதை சொல்வது போலவே ஆரம்பித்து முடிப்பார். இதுவும் அப்படியே. அவரின் மற்றைய கதைகள் போலவே, கொஞ்சம் வீக்கான மெயின் காரக்டர். Urban பெண் ஒருத்தி, ஒரு வெங்கலாந்தியாக இருப்பாள்! “The girl thing” என்று குறிப்பிடுவார்கள் இல்லையா? அதே! எப்படியும் கதையின் தேர்ட் குவார்டரில் அவளுக்கும் அவனுக்கும் செக்ஸ் நடக்கும். ஹீரோக்கு கில்ட்டி வரும், Dramatic turn around இறுதியில் வரும். One night at call centre இல் கடவுள் கூட வருவார்!! அப்புறம் சுபம்!
ஆனாலும் chetan வாசிக்க வைப்பார். வேகமான எழுத்து நடை. சொல்லவந்த விஷயத்தின் contextual facts தான் கதையின் நாதம். ஆனாலும் அவசரமாக மெட்ரோவில் பயணம் செய்யும் ஐடி இளைஞனை தன் புத்தகத்தை வாசிக்க வைப்பதற்கு தான் இந்த செக்ஸ், ஒரு வித படித்த ஆனால் முட்டாள் பெண், அதிரடி முடிவுகள் சமாச்சாரங்கள். கதையினூடாக வாரனாசி, IIT தயார் படுத்தல், அதன் ஸ்கோர் சிஸ்டம், கல்வித்துறை ஊழல், நல்ல எண்ணங்கள் உள்ள இளைஞர்கள், கந்துவெட்டி எம்எல்ஏ, மினிஸ்டர் என டிபிகல் இந்திய சினிமாவின் எல்லா விஷயத்தையும் கதையில் சொல்கிறார். நாவலுக்குரிய டீடெயிலிங்க் ரசிக்கவைக்கிறது. சினிமா ஆகவேண்டும் என்று நினைத்துக்கொண்டே கதை எழுதியிருப்பது போல படுகிறது. நிச்சயமாக சுவாரசியமான கதை தான்.
Chetan Bhagat ஐ இந்தியாவின் சிறந்த english writing எழுத்தாளர் என்று சொல்லும்போது கொஞ்சம் நெருடுகிறது. நாம் எதை இலக்கியம் என்று கொண்டாடுகிறோமோ அவற்றின் அடிப்படைகள் இவர் எழுத்தில் இல்லை. போலியான வாழ்க்கை சித்திரத்தின் மீது பல உண்மைகளின் நிறங்கள். இது சரியான எழுத்தா என்ற கேள்விக்கு எனக்கு பதில் இல்லை. ஆனால் தமிழில் இந்த எழுத்து வந்தால், ஜெயமோகனும் சாருவும் கூட்டாக சேர்ந்து குப்பைக்கூடைக்குள் போடுவார்கள். எஸ்ராவும் ரஜனியும் கூட இதற்கு பாராட்ட மாட்டார்கள்! ஞானி .. நாவல் பெண்களை கேலி செய்கிறது .. மனித சங்கிலி என்பார்! சான்ஸே இல்லை!!
“Two States” தவிர்ந்த ஏனைய இவரது நாவல்களை வாசித்துவிட்டேன். இந்த புத்தகம் கூட வெளியான அடுத்த கிழமையே ebay இல் வாங்கியாச்சு. இது தான் Chetan Bhagat இன் வெற்றி. தான் மட்டுமே இந்தியாவில் பூக்கும் ஒரே ஒரு இலுப்பைப்பூ என்ற மார்க்கட்டிங்கும் ஒரு காரணம்!
அவர் வெற்றிக்கு இன்னொரு காரணம், அவர் எழுதும்போது, சுற்றியுள்ள நண்பர்கள் ஒரு கொமென்ட் போட்டு ஊக்கப்படுத்துவதும் தான்!!
மன்மதகுஞ்சு : சைக்கிள் காப்பில ஹன்சிகாவை ஓட்டிட்டாய் மச்சி! ஓகே ஓகே ஒண்ணோட பதிவெல்லாம் இனிமேல் வாசிச்சா ஒரு லைக்காவது போடறேன். சரியா!
இந்த வார பாடல்
2001 ம் ஆண்டு cinematographer ஜீவா இயக்கிய படம் 12B வெளிவருகிறது என்று கஜனையும் இழுத்துக்கொண்டு கொழும்பு, மட்டக்குளியாவில் இருக்கும் கிங்ஸ்லி தியட்டருக்கு போகிறேன். தியேட்டரில் எம்மோடு சேர்ந்து ஒரு பத்து பேர் முதல் நாள் ஷோ பார்க்க வந்திருந்தார்கள்! அதிலும் மூன்று ஜோடிகளுக்கு பத்து நிமிஷம் முன்னாடியே ஷோ தொடங்கிவிட! நாங்கள் கூல் சோடா வாங்கி குடிச்சோம்! நல்ல வெக்கை!
படம் ஆரம்பித்து பார்த்தீபன் விஷயத்தை விவரிக்கும்போது நிமிர்ந்து உட்கார்ந்தோம். அப்புறம் அது “ஒரு படம்” தான் என்று புரிந்தது. பார்க்க பார்க்க, ஆச்சரியங்கள் விரிந்து, ஒவ்வொரு முறையும் முடிச்சுக்களை அவிழ்த்துவிட்டேன் பாரு என்று நான் அவனை பார்த்து சிரிப்பதும், அவன் என்னை பார்த்து சிரிப்பது, அந்த சண்டை காட்சியை இரண்டு பெரும் ஒரே நேரத்தில் அனுமானித்ததும் மறக்கமுடியாது. முடியும் போது சிம்ரன் அழுதுகொண்டே வந்து விழுவது, கிளாசிக் என்ட்!
ஆனால் அந்த மூன்று ஜோடிகளுக்கு மட்டும் எண்டு கார்டு போட்டதே தெரியாது!
இது பாட்டு! மகாலக்ஷ்மி ஐயர், அந்த நேரம் ஒரு கலக்கு கலக்கின பாடகி. ஹைபிட்ச் ஆகாது. ஆனால் பேஸ் அமர்களம்! ஹாரிஸின் வசீகராவை விட இந்த பாட்டு எனக்கு பிடிக்கும். இது ஒரு பூரணமான பாடல். மெட்டு, கொம்பஸிஷன், காட்சி .. அத்தோடு அந்த வரிகள்!
சென்ற வார வியாழமாற்றத்தில் கேதாவின் உருவககவிதை பற்றி நானே எனக்கு டீ ஆத்தி இருந்தேன்!! ஆனாலும் விடுவதாக இல்லை. கேதாவின் கவிதையில் காற்றும் மரங்களும் தான் உருவகம். ஆனால் வாசிக்கும் போது, இதை போல வேறு எங்கேயோ கேட்டது போல இருந்தது. காற்று ஒரு பயணி என்பதால் உருவககவிதைக்கு அது ஒரு சூப்பர் களம். அடித்து ஆடலாம். பலர் பலவிதமாக காற்றை கையாண்டு இருக்கிறார்கள். ரிதம் படத்தில் பஞ்சபூதங்களை அழகாக உருவகப்படுத்தி இருப்பார்கள். அதிலும் அந்த “கல கல வென” பாடலை கேதா விவரிக்கும் போது, அட இது என் மரமண்டைக்குள் ஏறவில்லையே என்று திட்டினேன். இனிமேல் இவங்களோடு கவிதை டாபிக் எடுக்கக்கூடாது!
இந்த பாடலும் same pinch தான். வைரமுத்துவின் வரிகள். காற்று தான் உருவகம். காற்றை பார்த்து பூ பாடுகிறதாம்! அதான்யா .. காதல் .. ஒருதலைக்காதல்!
என்ன காதல்டா இது! எங்கேயம்மா பூத்திருக்கிறாய்? சொல்லேன் ப்ளீஸ்!குளிர் வார்த்தை சொன்னால் கொடியோடு வாழ்வேன்
என்னைத் தாண்டிப் போனால் நான் வீழுவேன்
மண்ணில் வீழ்ந்த பின்னும் மன்றாடுவேன்!
என் நினைவு தோன்றினால்,
துளி நீரை சிந்திடு
துளி நீர் எது? அடடா காற்றுக்கு பூ மீது கொஞ்சமேனும் நினைப்பு இருந்தால் சாரல் சிந்துமாம்! … அது காதலி பூவுக்காக காற்று கொட்டும் பூமாரியாம்.. என்ன கவிதைடா இது … வைரமுத்து நீ கவிஞன்டா .. ஒத்துக்கிறேன்!
மன்மதகுஞ்சு : சூப்பர் பாட்டு மச்சி. சிமரனுக்காக யூடியூப்ல பார்த்தேன். அப்பிடியே கொமென்ட்ஸ கொஞ்சம் வாசி. ஒருத்தன் எழுதியிருக்கிறான் .. “Awesome ! I have Raped the replay button ! :D” …நம்ம மாதிரியே எல்லாரும் பீல் பண்ணுறாங்க அப்பு.
ஹாட் நியூஸ்
ஒஸ்கார் விருதுகள் நிகழ்வு ஞாயிறன்று. விருது பெற்ற படங்கள் ஒன்றையுமே பார்க்கவில்லை என்பதை விட, படங்கள் பார்ப்பதே முதலைக்கொம்பாக போய்விட்டது. ஆனாலும் நிகழ்ச்சியை தவறவிடுவதில்லை. இன்றைக்கு லஞ்ச் டைமில் அஞ்சலினா ஜூலியின் கால்கள் தான் டோக்கிங் பாயிண்ட். பொண்ணு சும்மாவே உயரம். அதுக்குள்ள அந்த போஸ்! அடேங்கப்பா!

ஒருக்கால், அந்தக்காலை காட்டியிருக்காவிடில், அஞ்சலினா அந்த நிகழ்ச்சியில் அட்ரஸ் இல்லாமல் போயிருப்பார். ஆனால் எங்கேயோ மெல்போர்னில் இருந்து ஒருத்தன், தமிழன், ஒண்ணுமே இல்லாத டப்பா காலை பற்றி எழுதிக்கொண்டு இருக்கிறான் என்றால், அதுதான் அவரின் புத்திசாதுர்யம்.
ஏதோ ஏதோ ஆனந்தராகம்
உன்னால்தானே உண்டானது
கால் போன பாதைகள் நான் போனபோது
கைசேர்த்து நீதானே மெய்சேர்த்த மாது!
மன்மதகுஞ்சு : என்ன மச்சி ஒண்ணோட டேஸ்டு இப்படியா போச்சு .. காலை பாரு.. காக்கா புரியாணிக்கு கூட தேறாது… என்னைய கேட்டாய் அன்னிக்கு ஜெனிபர் லோபஸ் தான் டாப்பு .. சாரி டாப்பு லெஸ்ஸு!!
//பிரபாகரன் (பெயர் பயன்!), ஸ்ரீதர், udoit மோகன் போன்ற ஒரு சிலரை தவிர தமிழ்நாட்டவர்கள் கண்ணில் என் பதிவுகள் அதிகம் படுவதில்லை //
ReplyDeleteEnnai pola palarin kangalil pattukkonduthan irukkirathu :-) , comments vachi mattum unga pathivugalai edai poda vendame pls..
கலக்கீட்டிங்க பாஸ்..
ReplyDelete//வாலிபன் போன்றவர்கள் எல்லாம் இப்பவே சாமான் அடுக்கி இலங்கைக்கு ப்ளேன் ஏற ரெடி.//
ரசிகைய விட்டுடீங்க பாத்திங்களா.. இப்பதான் இடம் பாத்திட்டு வந்திருக்கு.. குடிசை என்ன கோபுரமே கட்டிடலாம்.. என்ன ரோடுதான் இன்னும் சரியாகல.. அதுவும் சீக்கிரமே ஆயிடும் (ஆக்கிடுவம்ல.. ;0
ஆகா ... அப்டேட் பண்ணியாச்சு .. எழுதும்போது கிளிக் ஆக இல்லை .. சாரி!!!
ReplyDeleteSayanthan, Go ahead with session even 10 person or less attend... I too little disappointed with my session at university. But, what we are doing now, will start work background few of those attend and will open up or trigger to more step by step. We will get more hands to make it happen this dream soon.. So, Go ahead..be positive.. Good luck..
ReplyDeleteSorry JK for English comments..
Senthil
அண்ணா ... முதல் படி தான் .. ஆனாலும் ரெஸ்பான்ஸ் நினைத்த அளவுக்கு இல்லாதது சின்ன வருத்தமே ஒழிய .. நீங்க சொன்னது போல .. We are clear about what we trying to do ...
ReplyDeleteTry to join the day!
சூப்பர் பதிவு பாஸ் ... பதிவுக்கு ரொம்ப நன்றி.
ReplyDeleteஎப்படி இருந்த ஏஞ்சலினா, இப்ப இப்படி ஆகிட்டாங்க. கால் ரெண்டும் சூம்பிப் போன மாதிரி இருக்கு. படத்தில பார்க்குறதுக்கும் நேருக்கும் ரொம்ப வித்தியாசம்.
நிறைய நாட்களுக்கு பின் 12பி பாட்டை கேட்கிறேன். இதற்கும் நன்றி.
வாங்க ஹாலிவுட் ரசிகரே !! .. அஞ்சலினாவை நாங்கெல்லாம் நாலு நாள் சாப்பிடாம இருந்து ரசிச்சவங்க .. பொண்ணு சூம்பிப்போச்சு .. சரி விடுங்க ...!!
ReplyDelete//படத்தில பார்க்குறதுக்கும் நேருக்கும் ரொம்ப வித்தியாசம்.//
நீங்க ஹாலிவுட்ல பிரபலம்னு தெரியும் .. ஆனாலும் அவங்கட கால அவ்வளவு டீப்பா நேர்ல பார்க்கர அளவுக்கு செல்வாக்கா? அண்ணே எனக்கும் ஒரு டீ! ஹ ஹா
நன்றி மாதவ் ... சில நேரங்களில் ஒரு வித அயர்ச்சியில் அப்படி எழுதிவிடுகிறேன். நீங்கள் வாசிப்பதாக சொல்வதை கேட்கும்போது உண்மையில் சந்தோசம் தான்,
ReplyDeleteஅன்புடன்,
ஜேகே
பிற்காலத்தில் அங்கை போய், கொட்டில் போட்டுத் தங்கி 'அவுஸ்திரேலியன் பெஞ்சனியர்' எண்டு பீலா விடலாம் எண்டு ஐடியா எல்லாம் வைச்சிருகிறன். போட்டிக்கு ஆள் இருக்குப் போல இருக்கு.
ReplyDeleteயூ நோ;; டோன்ட் கே(ய)ர் எபவுட் தீஸ், 'சுத்தத் தமிழ் பேஸணும்' பீப்பிள்.
ReplyDeleteஹ ஹா .. சக்திவேல் .. எல்லாம் கிளிக் ஆனா நான் அதுக்கு முதலே வெளிக்கிட்டிடுவன்! இப்ப போன, நாங்க எழுதுற எழுத்துக்கு தூக்கி உள்ள போட்டிடுவான்... நான் ஒரு பயந்த கோழை!!
ReplyDelete//யூ நோ;; டோன்ட் கே(ய)ர் எபவுட் தீஸ், 'சுத்தத் தமிழ் பேஸணும்' பீப்பிள்.//
சுத்தம்!
//“Two States” தவிர்ந்த ஏனைய இவரது நாவல்களை வாசித்துவிட்டேன். இந்த புத்தகம் கூட வெளியான அடுத்த கிழமையே ebay இல் வாங்கியாச்சு. இது தான் Chetan Bhagat இன் வெற்றி. தான் மட்டுமே இந்தியாவில் பூக்கும் ஒரே ஒரு இலுப்பைப்பூ என்ற மார்க்கட்டிங்கும் ஒரு காரணம்!//
ReplyDeleteTwo States மட்டும் தான் வாசிச்சனனன், it is like a typical romantic & comedy movie. படம் எடுக்கோனும் எண்டதுக்காக வேண்டியே எழுதின மாதிரி தோன்றியது :).
மற்றய புத்தககளையும் வாசிகனும். எல்லாத்தையும் காசுகுடுத்து வாங்கேலது, எங்கயவது நூலகதில எடுக்கனும் ;).
ஆன, உங்கட புத்தகம் வரக்கே சொல்லுங்க. நான் இப்பவே ஒடர் தாறன் அண்ணே !!!
//ஆன, உங்கட புத்தகம் வரக்கே சொல்லுங்க. நான் இப்பவே ஒடர் தாறன் அண்ணே !!!//
ReplyDeleteஆக புத்தகமே வாழ்க்கைல காசு குடுத்து வாங்க மாட்டீங்க என்றீங்க!
This comment has been removed by the author.
ReplyDelete//ஆக புத்தகமே வாழ்க்கைல காசு குடுத்து வாங்க மாட்டீங்க என்றீங்க!//
ReplyDeleteஆகா, நாமளதான் வாயக்குடுத்து மாட்டிடமோ ? :)
நமக்கேண்டு சில ஒன் பொலிசியகளிருக்கு. அதன் படி வாங்கிகொள்ளுவம் :). அது தான் உங்கட புத்தகத்தை வாங்கிறன் எண்டு சொல்லியிருக்கேல்லோ !!!
ஏன் புத்தகம் எழுதுற idea இல்லையோ?
"Yarl IT Hub". யாழ்ப்பணத்தில் ஒரு தகவல் தொழில்நுட்ப புரட்சி ஏற்பட அடித்தளம் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் தங்களுக்கும் ,தங்கள் சகாக்களுக்கும் என்னுடைய இதயங்கனிந்த வாழ்த்துக்கள் !!.
ReplyDelete//Chetan Bhagat ஐ இந்தியாவின் சிறந்த english writing எழுத்தாளர் என்று சொல்லும்போது கொஞ்சம் நெருடுகிறது. நாம் எதை இலக்கியம் என்று கொண்டாடுகிறோமோ அவற்றின் அடிப்படைகள் இவர் எழுத்தில் இல்லை. போலியான வாழ்க்கை சித்திரத்தின் மீது பல உண்மைகளின் நிறங்கள். இது சரியான எழுத்தா என்ற கேள்விக்கு எனக்கு பதில் இல்லை. ஆனால் தமிழில் இந்த எழுத்து வந்தால், ஜெயமோகனும் சாருவும் கூட்டாக சேர்ந்து குப்பைக்கூடைக்குள் போடுவார்கள் //
மிகச் சரியாக சொன்னீர்கள் .சேடன் பகத்தின் எழுத்து இந்திய மசாலா சினிமா வகை. IIT யில் பட்டம் பெற்றவர் என்ற காரணத்தினால்,இந்திய ஆங்கில மீடியாக்களின் ஏக போக ஆதரவும் இருப்பதினால், இவருடைய எழுத்து ,கொஞ்ச நாட்களிலேயே குறிப்பாக software துறையில் பணிபுரிபவர்களிடம் பெரிதும் வரவேற்பைப் பெற்றது. நீங்கள் அறிமுகம் செய்த
“Revolution 2020” நாவல் தவிர்த்து ,இவருடைய மற்ற புத்தகங்களை வாசித்திருக்கிறேன் .அதில் என்னை கவர்ந்தது " The three mistakes of my life".