வியாழமாற்றம் 22-03-2012 : கரிசல் காட்டு கடுதாசி

Mar 22, 2012 39 comments

டேய் ஜேகே


sakuntlaமேகலா, இதயனூர்
ஐநாவில் ஒருவாறாக இலங்கைக்கு எதிரான தீர்மானம் வெற்றி! அடுத்தது என்ன?
சூப்பர் கேள்வி. இதுக்கு தான் மேகலா வேணும்கிறது! நான் ரஷ்யா ஆதரிக்கும் என்று சொல்லியிருந்தேன். ஆனால் அது சீனாவுடன் சேர்ந்து எதிர்த்துவிட்டது. தீர்மானம் குற்றங்கள் பற்றியும், தீர்வு பற்றியும் விவரிப்பதற்கும் விளக்குவதற்கும் இலங்கையை கடப்பாடுடையதாக்குகிறது. ஆனால் அதற்கு எந்த விதமான கால அட்டவணையையும் குறிப்பிடவில்லை. இனி எல்லோரும் சேர்ந்து டீ குடித்துவிட்டு அவரவர் சோலியை பார்க்க போய்விடுவார்கள்.
அடுத்த திருவிழா ஒரு வருடம் கழித்து தான். இடையிடையே அம்னெஸ்டி வாய் கிழிய கத்தும். நவநீதம்பிள்ளை பேச்சு எடுபடாது. இந்தியா “கூர்ந்து” நிலைமையை அவதானிக்கும். அவ்வளவு தான். அதற்குள் அரசியல் சூழ்நிலைகள் மாறிவிடும். வெளிநாட்டு தமிழர்கள் BBQ போட போய்விடுவார்கள். நான் வியாழமாற்றத்தில் அமரிக்க அரசியல் எழுதுவேன். சிங்களவன் தன்பாட்டுக்கு அவன் வேலையை காட்டுவான். இஸ்ரேலுக்கு எதிராக இது போல நூற்றுக்கணக்கான தீர்மானங்கள் வந்துவிட்டது. செச்சின்யா என்று ஒரு பிரச்சனை இருந்தது யாருக்காவது ஞாபகம் இருக்கிறதா? ஈழத்தில் வாழும் தமிழர் நிலை தான் பரிதாபம். வீசுவதை காட்ச் பிடித்துக்கொண்டு வாழலாம் என்று நினைத்தவர்கள் வாயிலும் இப்போது மண்ணு. அவன் இனி குப்பையில் போட்டாலும் போடுவானே ஒழிய தமிழர் பக்கம் வீசவே மாட்டான்.  
TNA-1எனக்கென்னவோ ஈழத்தில் வாழும் மக்கள் இந்த ஜெனிவா தீர்மானத்தை எட்ட நின்று வேடிக்கை பார்ப்பதே நல்லது போல படுகிறது. இலங்கைக்கு இந்த தீர்மானத்தால் சின்ன அழுத்தம் வரத்தான் போகிறது. அதை ‘கப்’ என்று பிடித்து எப்படி தொங்கலாம் என்று கூட்டமைப்பு சிந்திக்கவேண்டும். நாங்கள் காந்தி, சுபாஷ் சந்திரபோஸ்(ஆயுத போராட்டம் இல்லை) பாணி அரசியல் செய்யவேண்டும்(செய்திருக்கவேண்டும்). புலம்பெயர் தமிழர்கள் வெளிநாட்டு அரசுகள் மூலமாக பிரஷர் கொடுக்க, “டயாஸ்பராவா? கூட்டமைப்பா?” என்று யோசிச்சு பேசாமல் அரசு கூட்டமைப்போடு பேச முன்வரும்போது, ஒன்றுமே தெரியாத கொள்ளிக்கள்ளன் போல கூட்டமைப்பும் தன் பாட்டுக்கு அரசியல் செய்து கொஞ்சம் கொஞ்சமாக உரிமை எடுக்கவேண்டும். அப்படியில்லை கூட்டமைப்பும் வெளிநாட்டு தமிழரும் ஒன்றிணைந்து தான் இதை சாதிக்கலாம் என்று நினைத்தால் அதுவும் டயாஸ்ப்ரா போடும் “கூத்து”களுக்கு, ஆணியே புடுங்கமுடியாமல் தான் போகும். ஒன்றை புரிந்துகொள்ளவேண்டும், ஆனானப்பட்ட புலிகளையே ஒழித்தவர்களுக்கு கூட்டமைப்பு எல்லாம் ஜூஜூப்பி.  புற்றீசல் போல “கருணாக்களை” உருவாக்க மகிந்தவால் முடியும். சோ அவசரப்படாமல் அவரவர் வேலையை சூதானமாக செய்வது தான் இப்போதைக்கு உசிதம் போல படுகிறது!
பை த பை, எனக்கு அரசியல் ஒண்ணும் தெரியாது, இது சும்மா உளறல் தான்!
lasantha_to_uvindu_j11

லசந்த விக்கிரமதுங்க, நிர்வாணா
சிங்களவர் மத்தியில் இந்த குற்ற விசாரணை எப்படி பார்க்கப்படுகிறது? என்னை போல கொஞ்சமேனும் மனிதநேயம் உள்ளவர்கள் இருக்கிறார்களா?

ஹாய் தல, மனிதநேயமா? அதெல்லாம் மைனர் குஞ்சை சுடுவது போல சுட்டிட்டாங்க பாஸ்! உங்கட தம்பி தான் இன்னமும் ரவுடி கணக்கா thesundayleader.lk இல எழுதி வருகிறார். அவருக்கும் எப்போது “விமோசனம்” என்பது யாமறியோம் பராபரமே! அரசியல்வாதிகளை விட்டுவிடுங்கள். படித்த ஓரளவுக்கு விஷயங்களை சீர் தூக்கி பார்க்ககூடிய சிங்கள நண்பர்களின் கருத்துக்களை பார்த்தால் புத்தர் போலிடோல் குடித்துவிடுவார். இன்டி என்று ஒருவர். ஆங்கிலத்தில் எழுதும் சிங்கள பதிவர்களில் அவர் பிரபலம். எனக்கு தெரிந்தவர். பாலச்சந்திரன் படத்தை போலி இல்லை, அது உண்மை தான், சுட்டுத்தான் வீசி இருக்கிறார்கள் என்று  அவர் எழுதியிருக்க எனக்கு கொஞ்சம் திருப்தி வந்தது. அடடா ஒருத்தனாவது உருப்படியா எழுதுகிறானே என்று.
ஆனால் அப்புறமா எழுதுகிறார் “மகாவம்சமும் சூட்டிவம்சமும்” சொல்லுதாம் எதிரியை கொல்லும்போது அவனோடு சேர்த்து குடும்பத்தையும் கொல்லவேண்டுமாம். நியாயமாம். மேலும் அண்ணன்காரன் தளபதியாக வந்ததை பார்த்தால் இவனும் வளர்ந்து போராடித்தான் இருப்பானாம். இப்பவே போட்டது தான் சரியாம்! அதையும் சொல்லிவிட்டு பிறகு தான் பெரிய “இவன்” போல சிலருக்கு இது தப்பாகவும் படலாமாம்! அனேகமான சிங்களவர் சிந்தனை இது தான். தமிழரின் பிரச்சனை புலிகளோடு தீர்ந்துவிட்டது. இப்போது சமாதானம். என்ன ம…. த்துக்கு தீர்வு?
13+ அதிகாரம் இல்லை, கக்கூசுக்கு கதவு போடும் அதிகாரம் கூட தர அவர்கள் ரெடி இல்லை. ஆனால் சோறு போடுவார்கள். இந்தியா பருப்பு போடும். பொரியலுக்கு “பிள்ளையார் அப்பளம்” சேர்த்தால் குழையல் கலக்கும்!

google_logo1எரிக் ஷ்மிட்ட், கூகிள்
எப்ப பாரு ஆப்பிள் புராணம் தான். நாங்களும் கம்பனி நடத்துறோம்ல! கொஞ்சம் எழுதுறது?
ஆகா, பொண்ணுங்க தான் பொறாமைப்படுதுன்னா நீங்களுமா பாஸ்? இண்டைக்கு கூட ஆப்பிள் ஷேர்ஸ் டிவிடன்ட் கொடுக்கபோகிற மாட்டர் எழுத இருந்தேன்! ஆப்பிள் பற்றி அடிக்கடி எழுதுவதற்கு காரணம், இதை வாசிக்கும் யாராவது ஒரு தமிழ் சிறுவன்/சிறுமி, இம்ப்ரெஸ் ஆகி,  ஸ்டீவ் ஜாப்ஸ் வாழ்க்கையை அறிந்து, ஸ்பார்க் ஆகி, எங்களுக்கென்று ஒரு ஆப்பிள் உருவாக்கமாட்டானா என்ற ஆதங்கம் தான. யாழ்ப்பாணத்தில் எத்தனையோ ஆப்பிள் பழங்கள் இப்படி “பாவிக்கப்படாமல்” மரத்தில் தொங்குகின்றன!! .. அதை பாவிக்க ஹெல்ப் பண்ணுவோம் என்று தான் !!! ஹீ ஹீ
உங்களோட புதிய ஆராய்ச்சியான “Google Glasses” கேள்விப்பட்டேன். இனிமேல் மொபைல் போன் எல்லாம் கண்ணில் தான். வாசித்து பார்த்தபோது! அதிர்ச்சியும் ஆச்சரியமும். இதை போட்டுக்கொண்டு நடக்கும் போது முன்னால் தெரியும் விஷயங்களின் முழு டீடைல்ஸ் எல்லாம் GPS உதவியால் சொல்லுமாம். கடைகளுக்கு பக்கத்தால் போனால் அவற்றின் வெப்சைட் எல்லாம் போய் செக் பண்ணலாம். எந்த வீதி, எங்கே திரும்பவேண்டும் எல்லாமே சொல்லும். சூப்பர் இல்ல?.
article-2105628-11E2125B000005DC-556_634x312
வீதியால் நடந்து போகும் போது முன்னால் அழகான ஒரு “கிளி” வந்தால், அதன் நதி மூலம், ரிஷி மூலம், என்ன “ஜாதி”, பொருத்தம் கூட பார்த்து. அங்கேயே சைட் அடித்து,  Facebook இல் search பண்ணி, அவள் “relationship” செக் செய்து, பிஃரீ(!) என்றால் படங்கள் பார்த்து மியூட்சுவல் பிரண்ட்ஸ் கண்டுபிடித்து, பிடித்த பாடல் எதுவென ரசித்து சட்டென்று முன்னே போய்,
ஹேய் நீங்க மேகலா தானே? வானதியோட ப்ரெண்ட் இல்லையா? உங்களுக்கு இளையாராஜா பிடிக்கும் என்று வானதி சொல்லியிருக்கிறா.. அதுவும் “தென்றல் வந்து” …
கமான் ஜேகே, நான் ஆல்ரெடி உங்கள செக் பண்ணி ஆட் பண்ணியாச்சு நீங்க லேட்!… உங்களுக்கு ரோஜா favourite இல்ல?.. நைஸ் டு மீட் யூ!
கூகிள் கண்டுபிடிப்பால் நிறைய காதல்கள் தெருவுக்கு வர போகின்றன!!

image 004
ஆடிவேல், வேப்பந்தோப்பு
தம்பி ஜேகே, நானொரு மூத்த ஈழத்து எழுத்தாளர் எண்ட உரிமைல சொல்றன்.  எழுதேக்க நீர் கனக்க இந்தியா தமிழ் பாவிக்கிறீர்.  வாசிக்கேக்க பயங்கரமா “உதைக்குது”. இது சரிப்பட்டு வராது .. விளங்குதே?
வணக்கமண்ணே! ஈழத்து தமிழில் விடாப்பிடியாக இருப்பேன் என்ற கொள்கை பற்று எதுவும் எனக்கு கிடையாது! தமிழை வளர்க்கும் எண்ணத்தில் நான் சத்தியமாக எழுதவரவேயில்லை(தமிழ் வளர்க்க நான் யார்? விளக்கம்).  நான் ஐந்தாறு வருஷமாக எழுதியது கூட ஆங்கிலத்தில் தான். ஆனால் அங்கே எப்போதாவது விண்வெளி வீர்ர்கள் சந்திரனில் காலடி வைப்பது போல அவ்வப்போது எட்டிப்பார்த்ததால் வெறுத்துப்போனதில் திடீரென்று “தமிழ்பற்று” வந்துவிட்டது!  பிரதேச எழுத்து நடை அந்த தளத்தில் எழுதும்போது இருக்கவேண்டும் என்பதில் மாற்று கருத்தே இல்லை. ஆனால் அதே தமிழ், பெரும்பாலான வாசகர்களை அந்நியப்படுத்தவும் கூடாது இல்லையா? மோகன் (udoit) போன்ற முக்கியமான தமிழக வாசகர்களுக்கு சில பல விஷயங்கள் சரியாக போய் சேராமைக்கு என் “அபரிமிதமான” ஈழத்து dialect தான் காரணமோ என்று நினைத்ததுண்டு. ஆனால் கொஞ்சம் “வாங்கோ” போய் “வாங்க”  என்று இயல்பாக எழுதினாலேயே ஈழத்து நடை இல்லை என்றால் என்ன செய்ய தலைவா?
“கள்ளிக்காட்டு இதிகாசம்” வாசித்தபோது வந்த ஒருவித அயர்ச்சி “கரிசல் காட்டு கடுதாசி”க்கு வராமல் போனதன் காரணம் கீ.ரா அவர்கள் dialect ஐ சரியான விகிதத்தில் சேர்த்ததால் தான் என்றே நினைக்கிறேன். அட, நோபல் பரிசு வென்ற “Disgrace” நாவலில் ஆங்காங்கே பிரதேச ஆங்கில வார்த்தைகள் italic font இல் இருந்தாலும் கூட பெரும்பாலும் பிரிட்டிஷ் ஆங்கிலத்தில் தான் உரையாடல் இருக்கும். அதனால் தானோ என்னவோ எங்கேயோ ஒரு மூலையில் அரை வேக்காட்டு ஆங்கில அறிவுடன் இருந்த என்னால் அதை வாசிக்க முடிந்தது. சொல்ல வந்த விடயத்தை, எழுதும் மொழிநடை அழகு படுத்த வேண்டுமே ஒழிய அடிமைப்படுத்த கூடாது என்பது இந்த “நேற்று பெய்த மழையில் முளைத்த காளானின்” எண்ணம். தலைவர் சுஜாதா கூட இதை அட்வைஸ் பண்ணி இருக்கிறார். எனக்கு சரி பிழை தெரியாது அண்ணே! எதுக்கும் அடி மேல் அடி அடிச்சு பாருங்க! நகர்ந்தாலும் நகர்வேன்!

10xsxewமன்மதகுஞ்சு, வவுனியா
Alphonsa-Pictureகாதலர் மர்மசாவு மாட்டரில் அல்போன்சா தலை மறைவாமே? உனக்கு தெரியுமா?
தக்காளி, இப்படி எல்லாம் கேள்வி பதில் போட்டா மட்டும் ஹிட்ஸு அதிகரிச்சிடுமா? நீ கேட்டாய் என்னு போடுறேன். என்னையும் கடைசில அரசியல்வாதி ஆக்கிட்டாங்களேப்பா!

சிரிச்சா போச்சு!

நான் இப்போது தவறாமல் பார்க்கும் டிவி நிகழ்ச்சிகள் இரண்டே இரண்டு தான். சனிக்கிழமைகளில் விஜய் டிவியின் “அது இது எது” நிகழ்ச்சியின் “சிரித்தால் போச்சு” பகுதி. மற்றையது Late Show with David Letterman. Letterman பற்றி அடுத்தவாரம். இந்த “அது இது எது” நிகழ்ச்சியில் காமெடி பர்போர்மர் வடிவேல் பாலாஜி வந்தால் கேட்கவே வேண்டாம். அதகளம் தான். பார்க்காதவர்கள் தேடி தேடி பாருங்கள். 100% காமெடி நிச்சயம். சாம்பிளுக்கு ஒன்று!


இந்த வார புத்தகம் : கரிசல் காட்டு கடுதாசி

2172011100822PMசவால் சிறுகதை போட்டி பரிசாக “கரிசல் காட்டு கடுதாசி” கொடுத்தார்கள் இல்லையா? வாசித்து, வாசித்து … வாசித்துக்கொண்டிருக்கிறேன். ஆம் மூன்றாம் தடவை!! கி.ரா அளவுக்கு எளிமையாக வாழ்க்கையை வெறு யாராலும் பதிய முடியுமா என்பது சந்தேகமே. சின்ன சின்ன விஷயங்களை அவர் எடுத்து கையாளும் விதம் அடடா … அதுவும் இயல்பாக வரும் நையாண்டியும் நக்கலும். நாய்கள் பற்றி ஒரு கட்டுரை/கதை இருக்கிறது. ஒவ்வொரு பத்தியையும் வாசித்து முடித்த பிறகு, புத்தகத்தை மூடி வைத்து யோசித்து யோசித்து .. வாவ் .. எழுத்தாளண்டா!
நாய்களை பற்றி எழுதும்போது சொல்கிறார்,
“அபூர்வமான ஒன்று தன்னிடம் இருப்பதை பெருமையாக நினைக்கிற மனுஷன், யாரிடமுமில்லாத ஒரு நாய் தன்னிடம் இருக்கவேண்டும் என்று பிரியபடுகிறான்”
Are you getting it? .. என்ன சொல்ல வருகிறார் பார்த்தீர்களா? இப்படி புத்தகம் முழுக்க ஒரு நக்கல் கலந்த நகைச்சுவை தான். அதற்குள் எத்தனையோ விஷயங்கள். கூர்ந்து வாசித்தால், இவருடைய எழுத்துக்களை கொஞ்சம் நகர மயப்படுத்தி, ஸ்டைல் சேர்த்தால் சுஜாதா! என்ன ஒன்று, சுஜாதாவின் எழுத்துக்களில் ஒரு வித ஏளனம் இருக்கும். கீராவிடம் நையாண்டி மாத்திரமே. ஆனால் அடி நாதம் ஒன்றே .. வேண்டுமென்றால் புதுமைப்பித்தனையும் இந்த வரிசையில் சேர்க்கலாம் என்று நினைக்கிறேன். நகுலன்?
konjamtheneer_1
நேற்று மீண்டும் “பதுங்குகுழி” , “கணவன் மனைவி” வாசித்து பார்த்தேன்.  ஒரு சில இடங்களில் கீராவின் ஆட்டத்தை பார்த்து நான் போட்ட “வான் கோழி” டான்ஸ் தெரிகிறது. அந்த கிழவி பங்கருக்குள் இருந்து தேவாரம் பாடுவதும், “கணவன் மனைவி”யில் வரும் காந்தனை ஒரு வித “impotent” பாத்திரமாக வைத்ததும் கீரா தந்த துணிச்சலில் தான்!

இந்த வார நெகிழ்ச்சி

கீதா என்று ஒரு வாசகர். என் கதைகளுக்கு எழுதும் விமர்சனங்கள் டென்ஷன் ஆக்குகிறது! நான் அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து எழுதினால், அவர் அதில் சுக்கு காபி வேறு போட்டு விமர்சிக்கிறார். சில நேரங்களில் லைன் பை லைன் விமர்சனங்கள். எழுதாததை கூட கோடி காட்டும் வாசகர். இதை விட எழுதுபவனுக்கு என்ன வேணும்? கதை கதையா இனி விட வேண்டியது தான்!
“என்ர அம்மாளாச்சி”, “கணவன் மனைவி” என்று வரிசையாக இரண்டு சிறுகதைகள் எழுதினேன் இல்லையா? எழுத்தாளன் சாபம், என் சாபம், நிஜ வாழ்க்கையில் நடந்தவற்றையே எழுதுகிறேன் என்று வாசிப்பவர்கள் நினைத்துக்கொள்வது( என் கற்பனை திறனில் அவ்வளவு நம்பிக்கை!). நெருங்கிய நண்பன் ஒருவன் தன் பெயரை இனிமேல் பதிவில் போடவேண்டாம் என்றான். எல்லோரும் நிஜத்தில் நடந்தது என்று நினைக்கிறார்களாம்! ““என்ர அம்மாளாச்சி” கதையை ஆங்கிலத்தில் எழுதியபோது என் வீட்டில் நான் ஏதோ வெள்ளைக்காரியுடன் “கொழுவி” விட்டேன் என்று நினைத்தார்கள். அடிக்கடி என் கதைகளில் வரும் மேகலா நிஜம் என்று நினைத்து ரிசெர்ச் செய்தவர்கள் கூட உண்டு! நிஜமில்லாவிட்டால் எப்படி எழுதுவது? என்பது ஒருபுறம், அவள் நிஜம் என்றால் என்ன கருமத்துக்கு அவளை கதையில் மட்டும் எழுதுகிறேன்? காலமென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பலநினைவும்…. கிறிஸ்டோபர் நோலனின் மொமேண்டோ பார்த்தீர்களா? அதில் ஹீரோ கொல்வதற்காகவே காரணம் தேடுவான். காரணம் தேடி கொல்லுவான். நான் எனக்கு எழுதிக்கொள்கிறேன்! உங்களை எழுதிக்கொல்கிறேன்!  ஏதாவது புரியுதா? ம்கூம் .. எனக்கும் தான்!

2978026369_2a3dcd55bb_oமன்மதகுஞ்சு : டேய் உன்னோட கதை ஒருப்பக்கம் சாவடிக்குதுன்னா, நீ அதுக்கு கொடுக்கும் அலம்பல் ஐயோ சாமி … சாவடிக்கிறாண்டா கஸ்மாலம்!

இந்த வார பாடல்

2008062051210401வீ.எஸ். நரசிம்மனை பற்றி ஒருமுறை “திரைகடல் ஆடிவரும் தமிழ் நாதம்” பதிவில் குறிப்பிட்டு இருந்தேன். அவரின் பேட்டி ஒன்றும் கானா பிரபாவின் தளத்தில் அண்மையில் வந்தது.  இவரை மறைந்த இசையமைப்பாளர் மகேஷுடன் ஒப்பிடலாம். இருவருமே அற்புதமான பாட்டுக்களை அவ்வப்போது தந்தவர்கள். வீ எஸ் ஒரு வயலின் “மாதா”! வெஸ்டர்ன் கிளாசிக்கில் ராஜா! ராஜாவின் “How to name it” ஆல்பத்து வயலின் கூட சாட்சாத் நரசிம்மனே! இவர் இசையமைத்த பாடல்களில் நுட்பமான கிட்டார், பியானோ, பேஸ் எல்லாம் இருக்கும். 1984 இல் வெளிவந்த கல்யாண அகதிகள் என்று ஒரு படம். கேபி இயக்கம். நரசிம்மன் இசை. அதிலிருந்து …
மணிமேகலை என்ற புனைபெயரில் எழுதிவரும் யசோ அக்காவை பற்றி நான் பல பதிவுகளில் குறிப்பிட்டு இருக்கிறேன். 90-95 காலப்பகுதிகளில் இசையை இப்படித்தாண்டா ரசிக்கவேண்டும் என்று ஓரளவுக்கு எனக்கு சொல்லித்தந்தவர். ஒரு முறை இந்த பாடலின் வரிகளை அவர் விவரிக்க விவரிக்க எனக்கு அப்படியே பசுமரத்தாணி! பாடலை முதலில் கேளுங்கள்!  பெண்குரல் one and only சுசீலா. ஆண் யாரோ சீதாராமனாம். நன்றாக இருக்கிறது. கொஞ்சம் எஸ்.எம் சுரேந்தர், பிபிஸ் கலவை.

அவன் டிவியில் வேலை செய்பவன். இவள் ரசிகை. பாடலின் வரிகள் டிவி சார்ந்தே இருக்கும். இடையிலே பாட்டில் ஒரு தடங்கல் வரும், தொடர்ந்து “கண்ணில் தடங்களுக்கு வருத்தம் சொன்னேன்” என்று ஒரு வரி வரும். அந்தக்காலத்து தூர்தர்ஷனில் கண்மணிப்பூங்கா, காண்போம் கற்போம், ஒளியும் ஒலியும் போன்ற நிகழ்ச்சிகள் ஞாபகம் இருக்கிறதா? வரிகளில் அவற்றை அழகாக பாவித்திருப்பார்கள். வைரமுத்து கவிதை என்று நினைக்கிறேன்! ஸ்டைல் அப்படி இருக்கிறது.
கண்களில் காதலின் முன்னோட்டம் பார்த்த பின்
இதயம் முழுதும் எதிரொலி கேட்டேன்
மாலையில் சோலையில் இளம் தென்றல் வேளையில்
காண்போம் கற்போம் என்றுனை கேட்டேன்
கண்மணி பூங்காவில் காத்திருந்தேன்
கண்ணில் தடங்களுக்கு வருத்தம் சொன்னேன்
விழியில்...ஆ ஆ ஆ...விழியில் ஒலியும் ஒளியும் கண்டேன்
கேபி இதையெல்லாம் பார்த்து பார்த்து சரியாக சுட்டாலும் வீரப்பனை கோட்டை விட்டுவிட்டார். பாடல் காட்சி வெறும் டப்பா. சகிக்கமுடியவில்லை. இது 80களின் சோகம், தரமான இசை இருந்தாலும் இயக்குனர்கள் சொதப்பிவிடுவார்கள். கேபி பொதுவாக பாடல் காட்சிகளில் ஒருவித இன்டலிஜென்ஸ் பாவிப்பவர், ஸ்ரீதர் அளவுக்கு மோசமில்லை. ஆனால் இது வெறும் மொக்கை தான.

ஹாட் நியூஸ்

சென்ற வாரம் கவிதை எழுதி அனுப்புங்கள் என்று கேட்டிருந்தேன் இல்லையா? கேதா வெண்பாவே எழுதி அனுப்பிவிட்டான். நான் இந்த ‘கவிதா’ மாட்டரில் அகல கால் வைக்காமல் இருப்பதற்கு முக்கிய காரணம் எனக்கு கவிதை எழுத தெரியாது! அதை விட முக்கிய காரணம் என்னோடு கூட இருப்பவர்கள் கவிதையில் “மாஸ்டர்கள்”. அதிலும் கேதாவும் வாலிபனும் கேட்கவே வேண்டாம். ‘களம்’ பல கண்ட வாலிப கவிஞரின் ஜெனீவா கவிதை மாஸ்டர் ரகம். பக்கா அரசியல் நெடி!  அடியேனும் ஒரு சின்ன ஸ்டூடண்டாக போய் பின்னூட்ட கவிதை போட்டிருக்கேன். பாருங்கள். கேதா அறுசீர்பா அனுப்புவான் என்று பார்த்தால் எல்லா வெண்பாவும் அரசியல்பாவாக அனுப்பிவிட்டான். நான் வேறு வியாழமாற்றத்தில் அரசியல் கிஞ்சித்தும் தொடுவதில்லையா?! வேண்டாம் மச்சி,  லொள்ளு வெண்பா எழுதி கொடு போதும் என்று சொல்லிவீட்டேன்!
மெல்பேர்ன் தெருக்களில் செல்லும்போது கண்ணில் தென்படும் பெண்கள் எல்லாம்(பொறுக்கி பொய் தானே?!) வழி மறித்து கேட்பது, வியாழமாற்றத்தில் ஏன் இப்போதெல்லாம் “குளிரூட்டும்” படங்கள் வருவதில்லை என்று! அதற்கு நான் சொல்லும் பதிலை இங்கே போட்டால் “Adults Only” ஆகிவிடும் என்பதால் ஒரு ஐஸ் லாரியே ஐஸ் பழம் சூப்பும் படத்தை தருகிறேன்!
34995046852759564626வெள்ளை நிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ
வள்ளல் அடியிணைக்கு வாய்த்த மலரெதுவோ
வெள்ளை நிறப் பூவுமல்ல வேறெந்த மலருமல்ல
உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது

-விபுலானந்தர்!

41654_100001612310791_4570591_nமன்மதகுஞ்சு : எவண்டா அந்த உத்தமனார்? ஒரு டேஸ்ட்டே இல்லாதவனா இருப்பான் போல!

Comments

 1. சுட சுட பதிவு...

  ReplyDelete
 2. இப்பிடியே பதிவும்,கவிதையும் எழுதிட்டு இருங்கடா சிங்களவன் 13 என்ன 17+ ஜயே வீட்டுக்கு வந்து கையில தருவான்..

  அதை அந்த இண்டி எழுத்தாளர் மட்டும் சொல்லலை மச்சி ஆடுகளம் படத்தில கூட இதேதான் சொல்லியிருந்தா, வம்சம் வளரக்கூடாதுன்னு..ஆனா அவனோட மிஸ்டரோட பொடியன் ஊரேல்லாம் வெவசாயம் பார்த்துகொண்டு திரியுறான்.. உரெல்லாம் தன்னோட ரத்தங்கள் விருத்தியாகணுமெண்டு.. நல்ல சிந்தனை.

  எனக்கும் ரொம்ப பிடிச்ச நிகழ்ச்சி அது இது எது வில் வரும் நடுப்பகுதி சிரிச்சா போச்சு.. வடிவேல் பாலாஜிம் சிவகார்த்திகேயனும் கொடுக்கும் டைமிங் காமெடிகள் ரொம்ப ரசிக்க வைக்கும்..

  இறுதியில் நீர் சந்திரன் மாஸ்டரின் சீரிய தலைமைசீடன் என்பதை நீரூபித்துவிட்டீர் அமைச்சரே ஹன்சியோட படத்தில. அந்த படத்துக்கான எழுத்துக்களில் சொற்பிழை,பொருட்பிழை அறீயலையோ , அது ஜஸ்பழம் இல்லை மங்குனி அமைச்சரே, அது ஜஸ் சொக்.. சொக்லட் கோட் போடப்பட்டிருக்கு நெற்றீக்கண் திறந்து பாரும்..

  ReplyDelete
 3. @நன்றி பாலா!

  ReplyDelete
 4. @மன்மதகுஞ்சு
  //இப்பிடியே பதிவும்,கவிதையும் எழுதிட்டு இருங்கடா சிங்களவன் 13 என்ன 17+ ஜயே வீட்டுக்கு வந்து கையில தருவான்..//
  நான் அரசியல் எழுதுவதற்கு தார்மீக உரிமை இருக்குதா இல்லையா என்று எனக்குள்ளேயே ஒரு போராட்டம் தான், எழுது என்று பலர் சொன்னதால் தான் எழுதுகிறேன் .. தப்பென்றால் வெறும் கதை கட்டுரையோடு ஸ்டாப் பண்ணலாம். நீ சொல்ல வருவது புரிகிறது. கையாலாகாதவனுக்கு எதுக்கு பெண்டாட்டி என்று கேட்கிறாய் :)  //அது ஜஸ் சொக்.. சொக்லட் கோட் போடப்பட்டிருக்கு நெற்றீக்கண் திறந்து பாரும்..//
  ஹன்சிகாவ பார்ப்பியா? அதை விட்டிட்டு சொக்கை பார்த்துக்கிட்டு இருக்கே!!

  ReplyDelete
 5. This comment has been removed by the author.

  ReplyDelete
 6. அடேய் நான் சொல்லவந்தது.. அனைவரும் கைகோர்க்கும் தருணம் இது.. இன்று தமிழர் விடயத்தில் புள்ளிகள் போட்டிருக்கிறார்கள் அதையே அனைவரும் ஒன்று சேர்ந்து அழகிய கோலமாக மாற்றவேண்டும்.உனது கருத்து சரியானத்துதான்.ஆனால் என்ன செய்வது தாயகத்தில் இருந்து செய்யமுடிவது கூட்டமைப்பூடாக மட்டுமே, ஆனால் புலம்பெயர் தேசத்தில் அப்படியில்லை,ஒரு IT HUB இனை வெற்றீகரமாக தாயகத்துக்கும் -புலத்துக்கும் இணைத்தவர்களுக்கு சொல்லித்தரவேண்டியதில்லை.

  பலருக்கு அமெரிக்க தீர்மானம், என்ன,கற்றுக்கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை, அதன் பரிந்துரைகள் என்ன,ஜ.நா இன் அறீக்கை என்னவென்று தெரியாத நிலைமையில்தான் பல தமிழர்களுக்கு ஆபாச காணொளிகளை பார்க்க நேரமுள்ளவர்களுக்கு போர்க்குற்றம் ஆவணப்படம் பார்க்க நேரமில்லை. KONY 2012 விழிப்புணர்வு படத்தினை FB இல் பகிர்ந்துகொண்ட பலருக்கு போர்க்குற்ற காணொளியை பகிர முடியவில்லை புலத்தின் இருப்பவர்களுக்கு, பெண்களுடன் கடலை போடுவதற்காக Fake ID கிரியேட் பண்ணுபவர்கள் கூட தாயகத்துக்காக ஒரு ஜடி கிரியேட் பண்ணமுடிவக்தில்லை, இதில் எப்படி அவர்கள் எமக்கான ஒரு சிறிய அதிகாரத்தை கூட தர மாட்டார்கள்.

  காலையில் FB இல் ஒருத்தர் எழுதியிருந்த கவிதை படித்தேன்,அவர் ஏதோ எல்லோரும் பிழைவிட்டமாதிரியும்,முள்ளிவாய்க்கால் நேரம் எங்கே போயிருந்தீர்கள் ,இப்போ உணர்ச்சிவயப்படுகிறீர்கள், மீண்டும் ஆயுதம் கைதூக்கும் எண்டு விம்மியிருந்தார்,ஆனால் உண்மை நிலை அந்த மக்களின் இடங்களுக்கு சென்று,மக்களின் வீடுகளுக்கு சென்றுபார்த்தால்தன் தெரியும்..

  ReplyDelete
 7. http://www.facebook.com/Channel4.Fake.Video please forward to your friends or comment to this page

  ReplyDelete
 8. // மன்மதகுஞ்சு சொன்னது…
  அடேய் நான் சொல்லவந்தது.. அனைவரும் கைகோர்க்கும் தருணம் இது.. இன்று தமிழர் விடயத்தில் புள்ளிகள் போட்டிருக்கிறார்கள்
  //
  Its very true, and as eelam tamils from overseas we still love and will give support to our brothers and sisters.

  ReplyDelete
 9. This comment has been removed by the author.

  ReplyDelete
 10. கும்பிடுறேனுங்க

  உங்க பதிவு ரொம்ப ஜோரா இருக்குங்க :-)

  ReplyDelete
 11. >ஆனால் கொஞ்சம் “வாங்கோ” போய் “வாங்க” என்று இயல்பாக எழுதினாலேயே ஈழத்து நடை இல்லை என்றால் என்ன செய்ய தலைவா?

  'வாங்கோ' என்று எழுதினால் தமிழக வாசகர்களுக்குப் புரியாது என்பதை என்னால் அறவே ஏற்றுக் கொள்ளமுடியாது. “வாங்க” என்பது எப்ப யாழ்ப்பாணத் தமிழில் இயல்பானது என்பதைச் சொன்னால் நல்லது. மற்றும்படிக்கு உங்கள் எழுத்துச் சுதந்திரத்தில் தலை போடும் சர்வாதிகாரம் எல்லாம் இல்லை. ஆனால் என் பின்னூட்டச் சுதந்திரத்தில் எழுதுகின்றேன்.

  ReplyDelete
 12. >நெருங்கிய நண்பன் ஒருவன் தன் பெயரை இனிமேல் பதிவில் போடவேண்டாம் என்றான்
  ஹா ஹா. வாசிக்கவும் வண்ணநிலவனின் "பிச்சாண்டி பானர்ஜி" . இது அவரின் மற்றக் கதைகள் போல் இலக்கியத் தரமானது எனச் சொல்லமாட்டேன். ஆனால் கட்டாயம் சிரிக்கவைக்கும், ஒரு எழுத்தாளனை.

  ReplyDelete
 13. அண்ணே "வாங்க" என்பதை வேண்டுமென்றே மாற்றி எழுதவில்லை. நாங்க அப்பிடித்தான் பாவிப்போம் ஊரில். யாழ்ப்பாணம் டவுனடியில் இந்த பிரயோகமா? இல்லை எங்கள் குடும்ப வழக்கமா என்று தெரியாது. ஆனால் "வாங்க" வை உச்சரிக்கும் பொது அது இந்திய தமிழ் போல இருக்காது. அது முதலில் இந்திய தமிழா என்று கூட தெரியாது! "இங்க ஒருக்கா வாங்க" என்று தான் எங்கள் வீட்டில் சொல்வோம். "இஞ்ச ஒருக்கா வாங்கோ'
  என்று இன்னொரு ஊரில் சொல்லுவோம். ஊருக்கு ஊர் கூட மொழி நடை வேறு இல்லையா? மருவி வந்திட்டுது போல! அவ்வளவு ஸ்ட்ரிக்ட் ஆக இருக்கவேண்டுமா என்பது தான் என் கேள்வி ...

  // மற்றும்படிக்கு உங்கள் எழுத்துச் சுதந்திரத்தில் தலை போடும் சர்வாதிகாரம் எல்லாம் இல்லை. ஆனால் என் பின்னூட்டச் சுதந்திரத்தில் எழுதுகின்றேன்.//
  தாளிக்கும் உரிமை உங்களுக்கு தாராளமா இருக்கு ... என் சுதந்திரம், நான் நினைத்தது தான் சரி என்று நினைத்தால் தேங்கவேண்டியது தான் .. வளரவே முடியாது ... நீங்க சொல்றதுக்கு பதிலா ஏதாவது சொன்னாலும், நீங்க சொல்ற விஷயம் மண்டையில ஏறுது அண்ணா!

  ReplyDelete
 14. ஒரு இலக்கியம் அதன் முழுமைக்காக, படைக்கப்பட்ட பாத்திரங்கள் பின்னணியை செரியாக பிரதிபலிக்க வேண்டும் எனும் சக்தி அன்னையின் வாதம் மிகச் செரியானதே. ஆனால் பிரச்சனை வாங்க Vs வாங்கோ. இது யாரும் பேராசிரியரைக் கூப்பிட்டு ஆராய வேணும்.

  ஆமா நம்ம போதிதருமார் எப்படி சொல்லுவார்: "வாங்" ?

  ReplyDelete
 15. //ஒரு இலக்கியம் அதன் முழுமைக்காக, படைக்கப்பட்ட பாத்திரங்கள் பின்னணியை செரியாக பிரதிபலிக்க வேண்டும் எனும் சக்தி அன்னையின் வாதம் மிகச் செரியானதே.//

  பின்னணியை செரியாக பிரதிபலிக்கவேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் அதற்காக எந்த எல்லை என்பதும் சிலவேளைகளில் அதை தாண்டி புகுத்துவதும் தான் நெருடுகிறது. யாழ்ப்பாணத்து தமிழ் மருவி வந்தாலும் இலங்கை வானொலி நாடகங்களில் வரும் தமிழ் என் போன்ற இளைஞர்களுக்கு(!) நெருடுவது போல, என் தமிழ் சிலருக்கு நெருடலாம் அல்லவா! இந்த வாங்கு வாங்கப்படும் "வாங்க" கூட அந்த வகை தான்!

  அது சரி ... பொன்னியின் செல்வன் இலக்கியமா?

  ReplyDelete
 16. >ஆடிவேல்: சக்திவேல் ஓடுடா ஓடு. ஓடித்தப்பு.

  சக்திவேல்: சரிங்க எஜமான், ஓடுறனுங்க; என்னை உட்டுடுங்க.

  Searching ebay.com for கமண்டலம், காவி

  ReplyDelete
 17. @மன்மதகுஞ்சு .. லக்கி(யுவகிருஷ்ணா) ஒரு முறை சொன்னது தான் ஞாபகம் வருகிறது. இப்போதெல்லாம் facebook இல் ஸ்டேடஸ் போட்டாலே போராளி ஆகிவிடலாம்!

  ReplyDelete
 18. @மாறன் .. எல்லாம் ஓகே .. ஆனால் ஒரு முயற்சியை ஈழத்தில் செய்தால் வெறும் லைக் மட்டும் போடுகிறார்கள் .. Yarl IT Hub அனுபவம் இது ..

  ReplyDelete
 19. சக்திவேல் அண்ணா .. ஆட்டத்துக்கு வந்திட்டா வேட்டி அவிழுமே என்று கவலைபடக்கூடாது!!

  //Searching ebay.com for கமண்டலம், காவி//

  அதையும் உருவிடுவோம்ல!

  ReplyDelete
 20. நீங்கள் சொல்வது போல், நெருடல் subjective. ஆனா நான் இதை எப்படிப் பார்கிறேன் எண்டால்: காலம் தீர்மானிக்கும்.

  //அது சரி ... பொன்னியின் செல்வன் இலக்கியமா?// நிச்சயமாக, சந்தேகமின்றி.

  ReplyDelete
 21. ////அது சரி ... பொன்னியின் செல்வன் இலக்கியமா?// நிச்சயமாக, சந்தேகமின்றி.//

  கல்கி, சோழர் காலத்து மொழிவழக்கை சரியாக பிரதிபலித்திருக்கிறாரா?

  ""திருமலை! என்ன விசேஷம்? எங்கே வந்தாய்?" என்று குந்தவை கேட்டாள்.
  "விசேஷம் ஒன்றுமில்லை, தாயே! வழக்கம் போல் தாங்கள் உலக நடப்பைக் குறித்து விசாரிப்பதற்கு வரச் சொன்னதாக நினைத்துக் கொண்டு வந்தேன். மன்னிக்க வேண்டும் போய் வருகிறேன்".
  "இல்லை, இல்லை! கொஞ்சம் இருந்து விட்டுப் போ! நான்தான் உன்னை வரும்படி சொன்னேன்..."
  "தாயே! சொல்ல மறந்து விட்டேன்! சற்று முன் பெரிய பிராட்டியின் சந்நிதியில் இருந்தேன். தங்களிடம் ஏதோ முக்கியமான செய்தி சொல்ல வேண்டுமாம் தங்களை வரும்படி சொல்லச் சொன்னார்கள்..."
  "ஆகட்டும்; நானும் போகத்தான் எண்ணியிருக்கிறேன் நீ இந்தப் பிரயாணத்தில் எங்கெங்கே போயிருந்தாய்? அதைச் சொல்லு!"
  "தென் குமரியிலிருந்து வட வேங்கடம் வரையில் போயிருந்தேன்."
  "போன இடங்களில் ஜனங்கள் என்ன பேசிக் கொள்ளுகிறார்கள்?"
  "சோழ குல மன்னர் குலத்தின் பெருமையைப் பற்றிப் பேசிக் கொள்கிறார்கள். இன்னும் சில காலத்தில் வடக்கே கங்கா நதி வரையிலும், ஹிமோத்கிரி வரையிலும் சோழ மகாராஜ்யம் பரவி விடும் என்று பேசிக் கொள்கிறார்கள்......"
  "அப்புறம்?"
  "பழுவேட்டரையர்களின் வீரப் பிரதாபங்களைப் பற்றியும் பாராட்டிப் பேசுகிறார்கள். சோழ சாம்ராஜ்யம் இவ்வளவு உன்னத நிலைமையை அடைந்ததற்குக் காரணமே பழுவூர்ச் சிற்றரசர்களின்.....""


  கிபி 1000 ஆண்டு தமிழ் இது என்பதில் எனக்கு சந்தேகமே. 1000 வருஷங்களில் பேச்சு தமிழ் .. "கைய்தெ , அவுகளா, வர்றோம்ல, கதைக்கிறன்" என்று மருவும் என்பதை நம்பமுடியவில்லை!! இந்த விஷயத்தில் முழுமையடையாத பொன்னியின் செல்வனை எப்படி இலக்கியம் என்கிறீர்கள் ... ?

  ReplyDelete
 22. இலங்கையின் உத்தியோகப் பற்றற்ற தூதுவர்கள் அமெரிக்கா வந்துள்ளார்கள்

  பதிவலை

  ReplyDelete
 23. அந்த சந்தேகம் நியாயமானதே, ஆயிரமாண்டின் தமிழ் எது எண்டு எனக்கு தெரியாது. ஆனா பழந்தமிழில் எழுதினா வாசகர்களுக்கு புரியாது, அதுக்காக வாசகனின் பேச்சு தமிழை கல்கி பயன்படுத்தவில்லை. In my opinion he stroke the balance right.

  இப்ப ஒரு யாழ்பாணன் கதையில் வரும் போது யாழ் தமிழில் பேசுமாறு படைத்து அது மற்றைய பிராந்திய மக்களுக்கும் புரியும் வாய்ப்பிருக்கும் போது, அதை விடுத்து மற்றவருக்கு புரியாது எண்டு ஒரு அனுமானத்தில் நகர்த்துவது செரியில்லை என்பது எல்லாருமே ஒத்துக் கொள்ளுவோம் என நம்புகிறேன். (இங்க உங்களையோ, வாங்க என்ற வார்த்தையையோ நான் எடை பார்க்கவில்லை - அதுக்கான போதிய தகமை இல்லை).

  அதே சமயம் அதுக்காக 'வலிந்து' முயல வேணும் எனும் சக்தியின் வாதம் (அவர் இயல்பாயே அப்படி எழுதுறவர் - பின்னர் உசாத்துணை விளக்கம் கொடுப்பார்) ஏற்புடையதே. இதை திணிப்பா இல்லை வேறு ஏதுமா எண்டு நியாயமாக நீங்களே முடிவு சொல்லுவீர்கள். நானும் தொலைவால், நாப் பழக்க குறைவால் மொழி மருவினவனே.

  ReplyDelete
 24. கல்கி 1000 ஆண்டுகளுக்கு முந்திய தமிழில் எழுதவில்லை. அது யாருக்கும் புரியாது, ஒரு சில மொழி வல்லுனர்களுக்கு மட்டும் புரியலாம். பிறகு அந்த மொழிவல்லுனர்கள் அதைத் தற்காலத் தமிழில் மொழிபெயர்க்கவேண்டும். அதைத்தான் கல்கி நேரடியாகச் செய்தாரோ?

  >அது சரி ... பொன்னியின் செல்வன் இலக்கியமா?
  என்னப் பொறுத்தவரா ஆம். ஆனால் 'இலக்கியவாதிகள்' இல்லை எனலாம். இரண்டு, மூன்று தலைமுறை வாசகர்களை, காவேரிக்கரையில் குதிரையில் பயணிக்கவைக்கிறார். வந்தியத் தேவனை விரும்ப வைக்கிறார், அவன்மேல் பொறாமை அடைய வைக்கிறார். ஒருவகையில் கல்கி சுஜாதா மாதிரியானவர். இருவரையும் தீவிர இலக்கியவாசகர்களும், அப்படிக் காண்பிப்பவர்களும் ஒரே வரியில் நிராகரிப்பார்கள்.

  ஆனால் நாம் இருக்கிறோமில்லையா? கல்கியையும் சுஜாதாவையும் விரும்பாத பேரா/மொரா (வாசிப்பவர்கள் மட்டும் இங்கே பேசப்படுகிறார்கள்) மாணவர்களை நான் காணவில்லை. Elitist என்று குற்றம் சாட்டப்போகிறார்கள்; பரவாயில்லை.

  இன்னொரு வகையில் 'பொன்னியின் செல்வன்' வாசித்திருக்காவிட்டால், அதற்குப் பிறகு சுஜாதா வாசித்திருக்காவில்லால், நான் இப்போது இருப்பதுபோல் இருக்கமாட்டேன். (பதிவுலக வாசகர்கள் தப்பிப் பிழைத்திருப்பார்கள் !, சுகந்தியும் நிம்மதியாக இருப்பாள்)

  ReplyDelete
 25. யாழ்ப்பாணத்தில் தாங்க என்று சொல்லும் வழமை தீவக பேச்சு வழக்கில் உள்ளது. நாம, நம்மட எனும் பிரயோகங்களும் வழமை. ஜேகே உங்கட வீட்டில தாங்க வாறதுக்கு இது ஒரு காரணமா இருக்கலாம். இருக்கலாம் எண்டதை இருக்கல்லாம் எண்டு சொல்லுற வழமையும் உண்டு. யாழ்ப்பாணத்திலும் பிரதேச வழக்குகள் நிறைய உண்டு. ஜேகே எழுதின தாங்கவும் யாழ்ப்பாண தமிழ்தான். என்ற அம்மா அனலைதீவு, அப்பா இடைக்காடு, நான் கொக்குவில், மூன்று இடத்திலும் வழங்கும் தமிழில் பல வித்தியாசங்கள் உண்டு.

  ReplyDelete
 26. @வாலிபன் .. "வாங்க" வை யாழ்ப்பாண தமிழ் தான் என்று ஒரு நூற்றாண்டாக நான் சொல்லிக்கொண்டு இருந்தாலும் நீங்களும் சக்திவேல் அண்ணேயும் கேட்பதாக இல்லை .. .. என்ன செய்ய?

  நான் இயல்பாக எழுதுகிறேன். இந்த இடத்தில் இப்படி சேர்த்தால், அது யாழ்ப்பாண தமிழ், இது இந்திய தமிழ் என்றெல்லாம் யோசிப்பதில்லை. என்ன வருகிறதோ அது வந்து விழும். என் சிந்தனை எழுதும்போது flow வில் தான் எப்போதும் இருக்கும். சில இடங்களில் இந்திய தமிழ் வருவது தவிர்க்க முடியாது. உங்களுக்கு புதிரான யாழ் தமிழ் வருவதையும் தவிர்க்கமுடியாது. எழுத்தை இயல்பாக விட்டுவிடவேண்டும் என்று நினைக்கிறேன். விமர்சிக்கும் போது பார்த்துக்கொள்ளலாம்.. ஹ ஹா!!

  ReplyDelete
 27. சக்திவேல் அண்ணா,

  என் கேள்வியை தவறாக புரிந்து கொண்டிருக்கிறீர்கள். நான் பொன்னியின் செல்வனை இழுத்ததன் காரணம் வாலிபனின் கமெண்ட் தான்.

  //ஒரு இலக்கியம் அதன் முழுமைக்காக, படைக்கப்பட்ட பாத்திரங்கள் பின்னணியை செரியாக பிரதிபலிக்க வேண்டும்//
  இதை பொன்னியின் செல்வன் செய்யவில்லை. ஆனால் பொன்னியின் செல்வன் இலக்கியம். ஆக வாலிபனின் இலக்கியத்துக்கான "விதி" தவறாகிறது. அதுவே என் வாதம்!

  ReplyDelete
 28. கேதா .. வாடா ராஜா வாடா .. எங்கேடா போனாய் இவ்வளவு நாளும்!

  ஆக, நமக்கு புரியாதது எல்லாம் யாழ்ப்பாண தமிழ் இல்லை என்ற quick generalization க்கு தேர்ந்த ஈழத்து இலக்கியவாதிகளே செல்லும்போது யாரை நொந்துகொள்வேன் பராபரமே!

  மேலும் சில நண்பர்களிடமும், நம்மட சொந்தத்துக்கையும் விசாரிச்சிட்டம் ..அகுதே அகுதே!! தீவாருக்கு ஈழம் கேட்க வேண்டிய நிலை எதிர்காலத்தில வரப்போகுதோ தெரியேல்ல!!!

  ReplyDelete
 29. ஜேகே வாங்க என்ற குறிப்பிட்ட உதாரணத்தில் என் நிலைப்பாடு வேறு, பார்க்க என் முந்திய பின்னூட்டம்: "ஆனால் பிரச்சனை வாங்க Vs வாங்கோ. இது யாரும் பேராசிரியரைக் கூப்பிட்டு ஆராய வேணும்." -> எனக்கு இதில் முடிவு சொல்லும் பின்புலம் அல்லது அறிவுப்புலம் இல்லை. வாங்க வில் நான் முரண் படவில்லை இப்போ ஒரு முடிபுக்கு நகர்கிறேன்.

  ஆனால் நான் சக்தியின் வாதம் என்று கருதி முன் வைத்தது, ஒரு பொதுக் குற்றச்சாட்டு: "ஒரு இலக்கியம் அதன் முழுமைக்காக, படைக்கப்பட்ட பாத்திரங்கள் பின்னணியை செரியாக பிரதிபலிக்க வேண்டும்". பொன்னியின் செல்வன் செரியாக செய்தது என்று என்னால் இலகுவாக வாதிட முடியும். key word: "செரியாக பிரதிபலித்தல்": இதன் புரிதல் subjective and contextual.

  //நான் இயல்பாக எழுதுகிறேன். இந்த இடத்தில் இப்படி சேர்த்தால், அது யாழ்ப்பாண தமிழ், இது இந்திய தமிழ் என்றெல்லாம் யோசிப்பதில்லை. என்ன வருகிறதோ அது வந்து விழும். // அதையே தான் நானும் சொல்கிறேன், இப்ப உங்கள் மொழி வழக்கில் பெரும் மாற்றம் இருக்கு (மறுக்க மாட்டீர்கள் எண்டு நம்புகிறேன்) அதில் மாறிவிட்ட உங்கள் பின்புலம், வாசிப்புத் தளம், மற்றும் பேசிப் பழகும் தளம் எல்லாமே செல்வாக்கு செலுத்துகிறது. அதன் விளைவு உங்கள் எழுத்திலும், இப்போ நீங்கள் ஒரு கொழும்பு வியாபாரியை பாத்திரமாக படைக்கையில் அவரின் மொழி, சிந்தனை reacting முறை எல்லாம் யோசித்து தானே படைப்பீர்கள் - இது பின்புலத்தை செரியாக பிரதிபலிக்கும் முயற்சி. அனா வாசகனின் புரிதலுக்காய் ஒரு கோடு கீறவேண்டு, ஒரு சமப்படுத்தும் முயற்சி செய்ய வேண்டும். இதை மொழி சமரசம் செய்யாது செய்ய வலிந்து முயற்சிக்க வேண்டும்: //என் சிந்தனை எழுதும்போது flow வில் தான் எப்போதும் இருக்கும். சில இடங்களில் இந்திய தமிழ் வருவது தவிர்க்க முடியாது. உங்களுக்கு புதிரான யாழ் தமிழ் வருவதையும் தவிர்க்கமுடியாது. // நீங்கள் முதலில் எழுதும் போது செரி, பிறகு revise பண்ண வேணும் அப்போ நீங்கள் உங்களுக்கான ஒரு bar ஐ தீர்மானியுங்கள். இந்த கோடு - இந்த எல்லை என்பது subjective and contextual.

  செரியாக பிரதிபலித்தலை நீங்கள் கொடுக்கும் அளவுகோலோடு அணுகின், ஆங்கிலத்தில் எப்படி ஒரு இலங்கை களத்தை படைப்பது ? இது ஒரு கத்தில நடக்கிற வித்தை.

  ReplyDelete
 30. >ஆக, நமக்கு புரியாதது எல்லாம் யாழ்ப்பாண தமிழ் இல்லை என்ற quick generalization க்கு தேர்ந்த ஈழத்து இலக்கியவாதிகளே செல்லும்போது யாரை நொந்துகொள்வேன் பராபரமே!

  நான் 'தேர்ந்த' உம் இல்லை. 'இலக்கியவாதி' உம் இல்லை. நீங்கள் என்னைக் குறிப்பிட்டிருக்க மாட்டீர்கள்; இருந்தாலும் நீங்களும் இந்த 'வாங்க' வை விடுவதில்லை என்பதால்.

  (1) 'வாங்க' என்பது புரிவதில் சிக்கல் இல்லை.
  (2) இந்தியத் தமிழ் பாவிப்பதில் எனக்குத் தனிப்பட்ட முறையில் கூட ஆட்சேபணை இல்லை. 'மொக்கை', 'போட்டுக்கொடுப்பது', 'சூப்பர்', 'மாப்ளே' மாதிரியான அரும்பதங்கள் என் பேச்சு மொழியில் உண்டு. என் குறிப்பு -யாழ்ப்பாணக் கதையில் இந்த மொழி கொஞ்சம் இடறுகிற மாதிரி இருக்கின்றது என்பதே. உங்கள் வீட்டில் அது சாதாரணம் எனில் என் கேள்வி அர்த்தம் இல்லாமற் போய்விடுகிறது. So ignore it please;

  கீழே உள்ளது சுயவிளக்கம் மட்டும். இரண்டாம் அர்த்தம் ஏதும் ஒளிந்திருக்கவில்லை.

  BTW, ரப்பர் சிறுகதையில் எனக்கு வந்த முகநூற் comment; 'குட்டைத் தலைமுடி', மற்றது 'லேடீஸ் பைக்' என்பன அப்போது ஊரில் வழக்கத்தில் இல்லை என்று. "பொப் கட் அல்லது சிலிப்பாத் தலை, 'பார் இல்லாத சைக்கிள்' என்பனதான் இருந்தன என்று.

  கதை 'நான் இப்ப சொல்வது மாதிரி' எழுதினேன் என்று பதிலளித்தேன். பிறகு யோசிக்க அது தவறு என்று புரிந்தது. (மீண்டும் இதை எழுதுவதால் உங்களைத் தவறு என்று புரிந்து கொள்ளுமாறு நான் hint அடிப்பதாக நினைக்கவேண்டாம்; This is just a conversation, not an argument)

  ReplyDelete
 31. Just a conversation:

  மொழி எவ்வாறு மாறுகிறது என்பதற்கு எனக்கு நடந்தது ஞாபகத்திற்கு வருகிறது. பேராவில் 2 , 3 வருடங்கள் படித்தபின் ஊர் போனேன்.

  "Bag ஐ எடுத்திட்டு வா" என்று அண்ணன் (முறையான) ஒருவனிடம் சொன்னேன். நக்கலாக "எடுத்திட்டு" வாறேன் என்று அழுத்திச் சொன்னார். அப்பதான் ஞாபகம் வந்தது. "எடுத்தொண்டு வா அல்லது எடுத்துக் கொண்டுவா" இரண்டுமே இடைக்காட்டு வழக்கம்.

  கதைப்பதற்கு "பறைவது" என்று எங்கள் ஊரில் சாதாரணமாகச் சொல்லுவார்கள். மனைவியின் ஊரில் (துன்னாலை) அது இல்லை. ஆனால் அச்சொல் நீர்வேலி இல் உண்டு. வேறு இடங்களிலும் இருக்கலாம். (இது யாழ் தமிழ்/மலையாளக் கலப்பு?)

  ReplyDelete
 32. அண்ணா .. நான் என் கதையில் இந்திய தமிழ் வரவேயில்லை என்று அடம்பிடிக்கவேயில்லையே! "வாங்க" யாழ்ப்பாண தமிழ் என்று தான் அடம் பிடித்தேன்.

  என்னுடைய வாதம் என்னவென்றால், கதையில் வரும் இந்திய தமிழ், அதன் இயல்புக்கு முரணாக இல்லாதவரைக்கும் பிரச்சனையில்லை என்பதே. நீங்கள் சொன்ன உதாரணத்தை போலவே நான் பொன்னியின் செல்வனை தூக்கிபிடித்தேன். அதில் வரும் தமிழ் இந்த காலத்துக்கு உகந்தது எனலாம் தானே. ஆனால் அப்போது வாழ்ந்தவர்கள் இதை வாசிக்க கிடைத்தால் காறித்துப்ப மாட்டார்களா? என்னடா தமிழ் எழுதியிருக்கிறான் என்று கேட்க மாட்டார்களா? எதை இங்கே தவறு என்பது?

  உங்கள் உதாரணமும் அவ்வாறே. எனக்கு அது தவறாக தெரியவில்லை ... அவ்வளவுக்கு நுணுக்கமாக எழுதும் எண்ணமும் இல்லை.. நான் சுந்தர ராமசாமி, ஜெயமோகன் பரம்பரை இல்லை .. எனக்கு கடவுள் சுஜாதா தான் ... சீரியசான விஷயத்தையும் இயன்ற அளவு லைட்டாக உறுத்தாமல் சொல்லுவது தான் என் பாணி .. அந்த வகையில் சில சமரசங்கள் தெரிந்தே செய்வது தான் ... காலப்போக்கில் எழுத்து தீவிரமாகி நான் மாறவும் கூடும் ... ஆனால் இப்போதைக்கு ஆயுதம் தூக்கும் எண்ணம் இல்லை!

  ReplyDelete
 33. அண்ணா ..

  //இது யாழ் தமிழ்/மலையாளக் கலப்பு?)//

  யாழ்ப்பாணத்தவரின் மூலம் மலையாளம் அல்லது பெண் எடுத்தது மலையாளம் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை எனக்கு இருக்கிறது. தமிழர்களுடன் வியாபார தொடர்பு தான் பின்னர் வந்து மொழி கலந்திருக்கலாம் என்று நினைக்கிறேன். புட்டு, தேங்காய்பூ பாவனை, சிவலை பெண்கள், தேசவழமை, வாசிப்பு, படிப்பில் கெட்டி ஆனால் உயர்கல்வியில் கோட்டை! எல்லாமே மலையாளிகள் பண்பு தான ... இது பற்றி யாழ்ப்பாண வைபவமாலையில் ஓரளவு குறிப்பிடபட்டாலும், நாம் தமிழர் என்று அடையாளத்தை தூக்கிப்பிடிக்க வேண்டிய அவசியம் அரசியல் ரீதியாக இருந்ததால் அடக்கி வாசிக்கிறோம் என்று நினைக்கிறேன்!

  ReplyDelete
 34. வாலிபன்

  // நீங்கள் முதலில் எழுதும் போது செரி, பிறகு revise பண்ண வேணும் அப்போ நீங்கள் உங்களுக்கான ஒரு bar ஐ தீர்மானியுங்கள். இந்த கோடு - இந்த எல்லை என்பது subjective and contextual. //

  வாலிபன் .. சொன்னது போல இது subjective and contextual தான் ... அவ்வளவு மோசமாகவா எழுதியிருக்கிறோம் என்று செக் பண்ண மீண்டும் கணவன் மனைவி வாசித்தேன். தக்காளி ... அங்கொன்றும் இங்கொன்றுமாய் ஓரிரு சொற்கள் .. அதுக்காக இப்படி மல்டிபரல் அடிப்பது .. ஷோபாசக்தியின் கோட்டை பிரச்சனை கதையில் ஆட்லறி ஷெல் அடித்தது பற்றி எழுதியதுக்கு வந்த விமர்சனம் தான் ஞாபகம் வருது!

  ReplyDelete
 35. //அதுக்காக இப்படி மல்டிபரல் அடிப்பது .. // கொஞ்சம் ஓவராத்தான் போயிட்டமோ.... ரயிட்டு விடுங்க, நீங்க யாரு எதையும் தாங்கும் இதயம் இல்லை?

  ஆனாலும் நீங்க அநியாயத்துக்கு அநியாயம், கொமெண்டு நிறைய போட்டாலும் அடம் போடா விட்டாலும் அடம்...

  திரும்ப வி.மா வாசிச்சா //எவண்டா அந்த உத்தமனார்? ஒரு டேஸ்ட்டே இல்லாதவனா இருப்பான் போல!// முறுவல் ரகம்.

  ReplyDelete
 36. தம்பி, வியாழமாற்றம் வியாழக்கிழமையே வரவேண்டும். அதுவும் காலையில் ;இல்லாவிட்டால் வெள்ளிமாற்றம் என்று பெயரையாவாது மாற்றவேண்டும்.

  8:25 PM வியாழக்கிழமை எழுதியது.

  ReplyDelete
 37. அண்ணே .. இது மகாதேவா பஞ்சாங்கம் .. இங்கிலிஷ்க்கு கொஞ்சம் லேட்டா தான் வரும்!!!

  ReplyDelete
 38. "நான் ரஷ்யா ஆதரிக்கும் என்று சொல்லியிருந்தேன்"
  எதிர்ப்பார்த்தது தானே .சவுதி எதிர்த்ததை அமெரிக்கா யோசித்துப் பார்க்க வேண்டும் மலேசியாவின் மெளனம் இடிக்கிறது நாங்களும் கூர்ந்து கவனித்துக்கொண்டு BBQபோட்டு முடித்து விட்டோம் NAB CUPமுடிந்து விட்டது West coast Egles ம் கோட்டை விட்டு விட்டது கூர்ந்து பார்த்தபடி இருப்போம்

  " நாங்கள் காந்தி, சுபாஷ் சந்திரபோஸ்(ஆயுத போராட்டம் இல்லை) பாணி அரசியல் செய்யவேண்டும்(செய்திருக்கவேண்டும்)."
  சிங்களவர்களுடனா ?

  "ஆனால் சோறு போடுவார்கள். இந்தியா பருப்பு போடும். பொரியலுக்கு “பிள்ளையார் அப்பளம்” சேர்த்தால் குழையல் கலக்கும்!"
  இலை மட்டும் சீனாகாரன் தானஂ போடுவான் அதுவும் plastic plateஅப்பதானே business நடக்கும் .

  "வீதியால் நடந்து போகும் போது முன்னால் அழகான ஒரு “கிளி” வந்தால், அதன் நதி மூலம், ரிஷி மூலம், என்ன “ஜாதி”, பொருத்தம் கூட பார்த்து"
  கைப்பையினுள் இருப்பதை கூட(card no) சொல்லிவிடுமோ?

  "தமிழக வாசகர்களுக்கு சில பல விஷயங்கள் சரியாக போய் சேராமைக்கு என் “அபரிமிதமான” ஈழத்து dialect தான் காரணமோ
  இது ஊரில் நடந்த விடயம் என்பதால் அவர்களுக்காக மாற்ற முடியாது தானே ஆனால் .இவ்வளவு நாட்களும் வாங்கோ என்பது மட்டுமே யாழ் தமிழ் என்று..... வாங்கோ,வாங்க என்பது ஊருக்கு ஊர் மாறுபடுவதால் இதை அலசுவது முக்கியமாக படவில்லை.
  "“அபூர்வமான ஒன்று தன்னிடம் இருப்பதை பெருமையாக நினைக்கிற மனுஷன், யாரிடமுமில்லாத ஒரு நாய் தன்னிடம் இருக்கவேண்டும் என்று பிரியபடுகிறான்”

  "பெண்குரல் one and only சுசீலா. ஆண் யாரோ சீதாராமனாம்"
  இனிய குரல் இனிய பாடல்
  "பாடசாலையில் படிக்கும் காலத்தில் get to gather/ social இல் வேறு பாடசாலை மாணவர்கள் பாட்டு பாடுகிறேன் என்று கழுத்தறுக்கும் போதும் கைதட்டுவதில்லையா அது போல் தானஂ இதுவும்

  சுக்கு காப்பி போட்டு இருக்க தேவையில்லையோ ? களத்துக்கு புதுசு பாஸ் .குறைப்பதற்கு முயற்சிக்கிறேன் .

  ReplyDelete
 39. @கீதா

  //"நான் ரஷ்யா ஆதரிக்கும் என்று சொல்லியிருந்தேன்"//

  நான் சிரியா நிலைமையை கூட்டிக்கழித்துப்பார்த்து அப்படி சொன்னேன். தவறிவிட்டது. மலேசியா செய்தது எதிர்பார்த்தது. மலேசியாவுக்குள்ளேயே இந்தியர் பிரச்சனை இருக்கிறது. அது அவதானமாக தான் இருக்கும்.


  //NAB CUPமுடிந்து விட்டது West coast Egles ம் கோட்டை விட்டு விட்டது கூர்ந்து பார்த்தபடி இருப்போம்//
  Footy எல்லாம் புரியுதா? எனக்கு சுத்தம்!

  //" நாங்கள் காந்தி, சுபாஷ் சந்திரபோஸ்(ஆயுத போராட்டம் இல்லை) பாணி அரசியல் செய்யவேண்டும்(செய்திருக்கவேண்டும்)."//
  சிங்களவர்களுடன் தான் செய்ய முடியும்.. இஸ்ரேல் போன்ற அதி புத்திசாலி நாட்டுடன் தான் செய்யமுடியாது. கூர்ந்து யோசித்தால், இது சாத்தியமானது என்பது தான் என்னுடைய கருத்து.

  //கைப்பையினுள் இருப்பதை கூட(card no) சொல்லிவிடுமோ?//
  நம்மளிட்ட wallet எப்போதும் எம்டி தான்!

  //சுக்கு காப்பி போட்டு இருக்க தேவையில்லையோ ? களத்துக்கு புதுசு பாஸ் .குறைப்பதற்கு முயற்சிக்கிறேன் .//

  சுக்கு காப்பி பிடிக்காத எழுத்தாளன் இருப்பானா என்ன? நீங்க ஜாஸ்தியா போடுங்க .. ஆனா ஒன்று .. சண்டைன்னு வந்தா அப்பப்ப சட்டை கிழியும் .. திருப்பி கிழிச்சிட்டு போய்க்கிட்டே இருக்கோணும் .. அப்ப தான் அது இலக்கிய உலகம்!

  ReplyDelete

Post a comment

Contact Form