வியாழமாற்றம் 29-03-2012 : நான் தமிழன் இல்லை!

Mar 29, 2012

டேய் ஜேகே

பாலா, மதியுரைஞர்
ஆஸ்திரேலியா
ஈழத்தை சேர்ந்த படித்தவர்கள், இன்டலக்ட்ஸ், புத்திஜீவிகள் எங்கள் பிரச்னையை இன்னும் ஓபன் ஆக அணுகவேண்டும் என்று சொல்லுகிறேன், Facebook இல் அரசியல் கட்சிகள் இணைந்து விவாதம் செய்யலாமா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

534576_10150679855506037_566791036_9127695_592643851_nபாஸ், இப்படி ஒரு கேள்வியை புத்திஜீவிகளிடம் கேட்காம என்னிடம் போய் ஏன் கேட்கிறீங்க? நானெல்லாம் ஒரு டம்மி பீசு என்று சொன்னாலுமே நம்பாமல் மென்னி திருகியே தீருவேன் என்று அடம் பிடிக்கிறீங்க. விதி வலியது!
எனக்கு ஒரு பரம்பரை குணம். நான் நினைப்பது தான் எப்போதும் சரி. உனக்கென்ன தெரியும்? உன்னோட கருத்தும் என்னோட கருத்தும் கொஞ்சம் முரண்பட்டால் கூட நீ துரோகியே தவிர நான் எப்போதும் உத்தமன் தான. இது தான் இப்போதைய தமிழ் உணர்வாளர் நிலை! உணர்ச்சி பெருக்கெடுத்து காவிரி டெல்டாவுக்கு பாயுதுன்னா பாருங்களேன்!  இந்த பயத்திலேயே மற்றவனும் ஆமா போட்டு தேசப்பற்றை நிரூபிக்கவேண்டிய நிலையில். பிரபாகரன் இருக்கும் வரை, வாலை சுருட்டமுடியாமல் சுருட்டிக்கொண்டு இருந்தோம். அவர் இறந்தபிறகு, மீண்டும் தண்டல்காரன் ஆகிவிட்டோம். உணர்ச்சிவசப்படுபவருக்கு மவுசு ஜாஸ்தி. வீரம், புரட்சி என்றால் facebook இல் சராசரி லைக்ஸ் முப்பதாவது கிடைக்கும். சிங்களவர் அராஜகம் என்றால் நாலு கமெண்ட் கூட கிடைக்கும். நிஜமான சூழ்நிலையை உணர்ந்து ஆக்கபூர்வ அரசியல் பேசினால் ஐந்து பேர் லைக் பண்ணுவார்கள். அதிலும் இரண்டுபேர் auto mode ல் ஸ்டேடஸ் வாசிக்காமல் லைக் பண்ணுபவர்கள். அரசியல் போராட்டம் என்பது Facebook இல் எத்தனை லைக் வாங்குவது என்ற நிலைக்கு போய்விட்டதால், தமிழீழத்தை தவிர வேறு தீர்வுக்கும் புத்திஜீவிகள் தயாராக இல்லை!
அதையும் தாண்டி ஓபன் டிஸ்கஷனுக்கு உரிய சூழல் இன்னும் இல்லை. தூக்கி உள்ளே வைத்துவிடுவார்கள். தாண்டி பேசினாலும் ஒரு சிலர் “வயலுக்கு வந்தாயா? நாட்டு நட்டாயா? எம்மின பெண்களுக்கு மஞ்சள் …” கேள்வி கேட்பார்கள். அரைத்தோம் என்றால் நம்பமாட்டார்கள். அரைக்கபோகிறோம் வருகிறாயா என்றால் அவனவன் எஸ்கேப் ஆகிறான். பேசும்போது ஏதாவது தவறுதலாக தப்பாக பேசிவிட்டால், “ஷோபா சக்தியின் தம்பியா?” என்கிறார்கள். அதிலும் பேசும்போது, வெட்டி கதைப்பது, உன்னை விட எனக்கு அதிகம் அரசியல் தெரியும் .. இந்த வகை போட்டி தான். ஆளை ஆள் மடக்குவதும் .. பட்டிமண்டபம் தான் போ! இந்த அயர்ச்சியில் தான் நானெல்லாம் ஆணியே புடுங்குவதில்லை. அரசியலை அது சார்ந்து உருப்படியாக ஏதும் செய்யும் பெர்வழிகளுடன் மட்டுமே பேசவேண்டும் .. Arab Spring க்கு Facebook உம் ஒரு தோற்றுவாய் தான். அமெரிக்க அரசியலில் இதன் பங்கு அதிகம். வட்ட மேசை மாநாட்டுக்கு facebook நல்லது தான்! ஆனால் வட்டமேசையும் டீக்கடையும் பக்கம் பக்கம் இருப்பது தான் பிரச்சனை!

muthukumar29januaryமுத்துகுமார்,  நம்பி ஏமாந்த சோணகிரி
திரிசங்கு சொர்க்கம்
தமிழீழம் என் நிறைவேறாத கனவு, அது கிடைக்கும்வரை தொடர்ந்து போராடுவேன் என்று கருணாநிதி சொல்லியிருக்கிறாரே? ஈழத்தமிழர் மீதான மிரட்டல்களை பிரதமருக்கு தெரியப்படுத்த பக்ஸ் அனுப்பியிருக்கிறார் போல?
அந்த கருமாந்திரம் பிடிச்ச பக்ஸ் மெஷினை காயலாங்கடைக்கு போடோணும். வாழ்க்கை கனவுகளை பக்ஸ் மேல் பக்ஸ் அனுப்பியே அடையலாம் என்றால் நானெல்லாம் இன்றைக்கு ஆப்பிள் CEO வாக வந்திருப்பேனே! இவரு கனவு கண்டா என்ன? குறட்டை விட்டா என்ன? யார் அழுதார்? இப்படி தான் “ராமர் எந்த என்ஜினியரிங் காலேஜில படிச்சவர்” என்று பகுத்தறிவு பேசி, சேது சமுத்திர திட்டம் அம்போ!
உண்மையிலேயே தமிழீழ கனவு காண்பவன் இப்போது இருக்கிற சூழ்நிலையில மூச்சு காட்டாமல் காதும் காதும் வைத்தது போல தான் காரியம் ஆற்றுவான். யுத்தத்தில் யாருமே நாளைக்கு காலைல ஐஞ்சு மணிக்கு ஆர்மி காம்ப் அடிக்கபோகிறோம் என்று சொல்லிக்கொண்டு அடிப்பதில்லை. சொன்னால் அலெர்ட் ஆகிடுவாங்கள். இப்ப ஈழத்தமிழர் இருக்கும் நிலையில் சிவனே என்று தானும் தன்பாடுமாய் செயல்பட வேண்டும். ஓவரா ஸ்டேட்மெண்ட் விடாம, சத்தம் போடாமா.. பச்சையா சொல்லப்போனா நம்பவைத்து கழுத்தறுத்து .. அந்த புத்திசாலித்தனம் எங்களில் இல்லை. அப்படி இருப்பவர்களை வேறு நாங்கள் துரோகிகள் ஆக்கிவிடுவோம்! பொங்கிடுவோம்ல!

michelle-obama-letterman-debutமிச்சேல் ஒபாமா, வெள்ளை மாளிகை
டேய் ஜேகே, உங்கள் அரசியல் கருத்துக்கள் சூப்பர். அமரிக்க தேர்தல் நிலவரம் பற்றி சொல்லுங்களேன்? என்னவர் மீண்டும் வருவாரா?
அடங் கொய்யால, ஏதோ என் பாட்டுக்கு இலங்கை அரசியலை “பாலா” தொந்தரவு தாங்க முடியாம எழுதினா, அமரிக்க அரசியலா? திஸ் இஸ் டூ மச். அவனவன் ஏதோ நானே கேள்வி கேட்டு பதிலும் போடுவதாக நினைக்க போறாங்க. சரி குதிச்சாச்சு!
“அவர்” மீண்டும் வருவது அவ்வளவு சிக்கல் போல தெரியவில்லை. கடந்த நான்கு ஆண்டுகளில் வேலைவாய்ப்பின்மை குறைந்திருக்கிறது என்று ரிப்போர்ட். குடியரசு கட்சி வேட்பாளராக மிட் ரோம்னி வருவது ஏறத்தாள உறுதி. ரோப் புஷ்ஷும் ரூபியோவும் ரோம்னிக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் ரோம்னிக்கு இருக்கும் சிக்கல் அவர் குடியரசுக்கட்சியின் ஆதாரமான கன்சர்வேடிவ் கொள்கையில் தீவிர பற்றாளர் இல்லை. பிஸ்கால் கன்சர்வேட்டிஸம் என்று செலவழிப்பதை குறைத்து நிகர லாபத்தை அதிகரிக்கும் உத்தியை நம்புபவர். அங்கேயும் இல்லாமல் இங்கேயும் இல்லாமலுமான ஒரு அரசியல் தளம். ரொனால்ட் ரேகனின் வெற்றி சூத்திரம் என்கிறார்கள். ரேகனின் காலம் வேறு. அப்போது பனிப்போர் முடியும் நேரம். செலவுகளை அமெரிக்காவால் கட்டுப்படுத்த முடிந்தது. இப்போது செலவுகளை கட்டுப்படுத்தினால், பணப்புழக்கம் குறைந்து வியாபார சமநிலையே ஓடிந்துவிடும். இவரை குடியரசு கட்சியினரே “நம்மாளு தானா?” என்று சந்தேகமாக பார்க்கிறார்கள். குடியரசு கட்சியின் கோட்டைகளான புளோரிடா, டெக்சாஸ், ஜார்ஜியா போன்ற மாநிலங்கள் இல்லாமல் டெமோகிராட்ஸின் ம்ச்சாசுஸ்ட் மாநிலத்தில் இருந்து வருகிறார். அபார்ஷன் எதிர்ப்பு அது இது என பல அடிப்படைவாத கொள்கைகளையும் கொண்ட குழப்பவாதி ரோம்னி. மித வாத வாக்காளர்கள் ஒபாமா பக்கம் சாயவே சந்தர்ப்பம் அதிகம். வெற்றி ஒபாமாவுக்கு நிச்சயம். ஈழத்தவருக்கும் ஜனநாயக கட்சி ஆட்சியே சேஃப். குடியரசுகட்சியினர் அடிப்படை வாதிகள் எங்களை ஆதரிக்க சான்ஸே இல்லை. சோ என்னோட சப்போர்ட் இப்போதைக்கு ஒபாமாவுக்கே. சிங்கன் பல இடங்களில் சறுக்கினாலும், தோற்கும் அளவுக்கு அது இல்லை!

பை த பை சென்ற வாரம் உங்களின் லேட்டர்மான் ஷோ கலக்கல். உங்களை பார்க்க மரியாதை தானாகவே வருகிறது. ஆளுமை, எளிமை மற்றும் இயல்பு. ஆப்கானை கொலை பின்னணியில் படைவீரர் குடும்பங்கள் பற்றிய கருத்தில் உள்ள புத்திசாலித்தனம்! அமெரிக்காவின் முதல் பெண் ஜனாதிபதியாகும் எண்ணம் இருக்கா என்ன?

jaya_011008ஓ பன்னீர்செல்வம்,
போயஸ்தொட்டம் காவலர் விடுதி
ஜெயலலிதாவுக்கு கனவிலும் துரோகம் நினைத்ததில்லை என்று சசிகலா கூறியிருக்கிறாரே?
விரைவில் கண்கள் பனித்து இதயம் இனிக்க போகிறது.

ukumar
உதயகுமார், கூடங்குளம்!
கூடங்குளம் அணு மின்நிலையம் தொடர்பான உண்ணாவிரதம் வேலைக்காகுமா?
நீர்த்துப்போகும். விலக்கிக்கொண்டு விட்டீர்கள் என்று கேள்விப்பட்டேன்.  Wise idea! இந்திய தலைவர்களுக்கு “மணிக்கணக்கில்” உண்ணாவிரதம் இருக்க தெரியுமே ஒழிய அதற்கு மதிப்பு கொடுக்க தெரியாது. இந்த “உண்ணாவிரத பருப்பு” வேக வெள்ளைக்காரன் மனம் வேண்டும்.  எங்களிடம் அது கிஞ்சித்தும் கிடையாது. ஜெயலலிதாவுக்கு ம்கூம். ஞானி எல்லாம் வருஷக்கணக்காக இது பற்றி எழுதுகிறார். ஏதாவது நடந்துதா? உங்களுக்கு தெரியுமா? ஈழத்தமிழர் இருவர் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தார்கள். ஒருவர் திலீபன். மற்றையவர் அன்னை பூபதி. இருவர் உண்ணாவிரதமும் இந்திய ஆக்கிரமிப்புக்கு எதிராக தான். துரும்பை கூட இந்தியா தூக்கிப்போடவில்லை. நல்ல வேலை இந்தியாவை பிரிட்டிஷ்காரன் அடிமைப்படுத்தினான். இந்தியாவை இந்தியரே அடிமைப்படுத்தி இருந்தால் காந்தியை சுடும் வேலை கோட்சேக்கு இருந்திருக்காது. உண்ணாவிரதத்திலேயே அண்ணலாகி இருப்பார்!
அட இப்போது மட்டும் என்ன வாழுதாம்?

10xsxewமன்மதகுஞ்சு, வவுனியா
மச்சி, இந்த அண்டவெளி அகன்றுகொண்டே இருக்காமே? கேள்விப்பட்டியோ?
என்னடா ஹன்சிகா இடுப்பு அகன்றுகொண்டு போகுது, என்ன விஷயம்? என்று கேட்கபோறாய் என்று பார்த்தால் நீ அண்டவெளி ஆகாச வெளி என்று ஆரம்பிச்சிட்டாய். இப்பிடியே போனா வியாழ மாற்றம் ரொம்ப சீரியஸ் ஆகிடுமேடா!
இது கொஞ்சம் சிக்கல் தல! இந்த அண்ட சராசரம் எப்படி உருவானது என்று பலவித கருத்துக்கள் இருக்கு. இருக்கிற ஒன்று இல்லாத ஒன்றில் இருந்து தான் உருவாக வேண்டுமா என்று எனக்கு கூட பலநாள் ஒரு டவுட் இருக்கு. அத விடு.  பிரபஞ்சத்தில் இருக்கும் விஷயங்களை ஒரு பக்க தராசில் வையேன். அதற்கு டார்க் மாட்டர்(Dark Matter) என்று பெயர் வைப்போமா?  இப்போது பிரபஞ்ச சமநிலைக்கு தராசு தட்டின் மறுபுறம் ஏதாவது இருக்கவேண்டும் இல்லையா? இல்லாவிட்டால் static பிரபஞ்சம் என்பது சாத்தியமில்லை. இது ஐன்ஸ்டைன் விதி. அதை டார்க் எனேர்ஜி(Dark Energy) என்பார்கள். அது எது என்று இன்னும் தெரியாது. உணரமுடியாத கதிரியக்க சக்தியாக இருக்கலாம். எங்கள் வசதிக்கு டார்க் மாட்டரை கடவுள் என்றும் டார்க் எனேர்ஜியை அசுரன் என்றும் வைத்துக்கொள்வோம். ஆராய்ந்து பார்த்ததில் கடவுள்கள் பெருகும் விகிதம் அதிகமாம். அதாவது 12 பில்லியன் ஆண்டுகளில் கடவுள்கள் இரட்டிப்பாயிடுவர். இப்படியே போனால் சமநிலை குழம்பும். அசுரரை விட கடவுள்கள் அதிகரிக்கும். ஒரு கட்டத்தில் இது நீண்டு நீண்டு .. விரிந்து .. அகன்று ..வெயிட் வெயிட் .. பிரபஞ்சம் உடைந்து எல்லாமே அசுரராக .. டார்க் எனேர்ஜியாக போய்விடும். ஞாலமே இது பொய்யடா வெறும் காற்றடைத்த பையடா என்று நாமெல்லாம் பாட முதல் ஹன்சிகா இடுப்பு மாட்டரை அடுத்த வியாழமாற்றத்தில் தப்பாமல் கேளு!

நான் தமிழன் இல்லை!

கடந்த வியாழமாற்றத்தில் என் எழுத்தை உண்டு இல்லை என்று ஆக்கிவிட்டார்கள். நான் இந்திய தமிழ் கலந்து எழுதுகிறேன். என் கதைகள் இலக்கியம் இல்லை. வெறும் குப்பை என்பதில் ஆரம்பித்து இறுதியில் நான் ஈழத்தமிழனே இல்லை என்று எல்லா பக்கத்திலும் இருந்து மல்டிபரல். நானும் எவ்வளவு தான் வலிக்காதாது போலவே நடிக்கிறது?  ஆணியே புடுங்கவேண்டாம், மீண்டும் ஆங்கில பதிவை தூசு தட்டுவோம், யாரும் விமர்சிக்க மாட்டார்கள். அட நான் மட்டும் தானே அங்கே வாசகன்! வியாழ மாற்றத்தை “Thursday Report” என்று மாற்றுவோமா என்று யோசித்துக்கொண்டு இருக்கும் போது தான் மன்மதகுஞ்சு இந்த வீடியோவை அனுப்பினான்.  பத்து தடவை பார்த்ததில் ஈழத்தமிழ் இப்போது தெனாலி அளவுக்கேனும் வருகிறது என்று நினைக்கிறேன்.
மணியத்தாரிண்ட பவுடியெல்லாம் பயங்கர முசுப்பாத்தி தான். அதிலயும், வெளிநாட்டில சாப்பிட வழியில்லை எண்டு தம்பிக்காரன் சொல்லேக்க, சரி அப்பிடி எண்டால்  பேசாம யாழ்ப்பாணம் திரும்பி வா .. வந்து தேங்காய் கடை ஒண்டை போட்டு சீவிக்கலாம் எண்டு தமையன் கதைக்கேக்க நல்லா இருக்கும்!
senthil-goundamani-250_19022008மன்மதகுஞ்சு : மக்களே, இவரு யாழ்ப்பாண தமிழில எளுதுராராம்! இனி லக்கியத்தனமா தான் இவரு பதிவு இருக்குமாம். போடாங்! யாருடா இந்த சக்திவேல் கவுண்டரும் … மிட்நைட் வாலிபனும்? ரொம்ப அழும்பு பண்ணினா சொல்லு மச்சி! ரெட்டிய தாக்கறோம்.. பொண்ண தூக்கறோம்!

இந்த வார புகைப்படம்

கூகிள் உருப்படியான ஒரு வேலைக்கு நிதியுதவி செய்திருக்கிறது. நெல்சன் மண்டேலாவின் வாழ்க்கை குறிப்புகள், அவரின் கடிதங்கள், அறிக்கைகள், சிறையில் இருந்தபோது எழுதியது, எல்லாவற்றையும் டிஜிட்டலில் ஆவணப்படுத்தும் முயற்சிக்கு உதவியுள்ளது. இன்றைக்கு மதியம் இந்த வெப்சைட்டில் தான் டேரா. அற்புதமான ஆவணப்படுத்தல்.  ஆர்வம் இருந்தால் இங்கே போய் அலையுங்கள்!

Capture2
இது மண்டேலாவின் சிறையறை. அவ்வளவு மோசமில்லை! கனிமொழியிடம் எது பெட்டர் என்று ஒருமுறை கேட்க வேண்டும்!

கள்ளுக்கடை பக்கம்!

வெண்பா எழுதி அனுப்புங்கள் என்று சொல்லியிருந்தேன் அல்லவா. சுமார் ஒன்றுக்கும் மேற்பட்ட வெண்பாக்கள் வந்து குவிந்ததில் அப்பா டென்ஷன் ஆகிவிட்டார்.  குவியலுக்குள் புகுந்து தெரிந்தெடுத்ததில் “கட்டிளங் கவிஞர்” என்று தன்னை தானே சொல்லிக்கொள்ளும்  கேதா அவர்களின் வெண்பா முதல் பரிசை பெறுகிறது.
கண்ணீர் வழிந்தோட கருவாட்டு சுவை ஊற
கொல்லை பனங்கள்ளை நியூட்டன் புதுப்பிளாவில்
புசித்து ரசிக்கையிலே- உச்சந்தலையை பொத்தி ஓவென்று
தான் அழுதான் -ஏனோ ஓர் பனங்காய் விழ
வெண்பாவின் பொருட்சுவை அதகளம். நம்ம ஊரிலே குடிகாரன் தலையில் குண்டே சாதாரணமாக விழும்போது பனங்காய் எல்லாம் சாதா மாட்டர்! ஆனால் பாடல் என்ன சொல்லவருகிறது என்கிற contextஐ கவனியுங்கள். அதில் ஏன் நியூட்டன்(பின் நவீனத்துவம்) வருகிறான்? நாம் செய்யாதது எதை நியூட்டன் செய்தான்? எப்படி அவனால் மட்டும் அது முடிந்தது? …  கவிதையை விளக்கினால் சுவை போய்விடும். அனுபவியுங்கள்.
r7சாதாரணமாக பார்க்கும் போது கேதா நவீன புகழேந்தி தான். நல்லகாலம், பக்கத்தில் சக்திவேல் அண்ணன் பரிசளித்த மூக்குக்கண்ணாடி கிடந்தது. அணிந்துகொண்டு பார்த்தால் வெண்பா முழுதும் திட்டு திட்டாய் கறைகள்! வெற்றுப்பார்வைக்கு இது நேரிசை வெண்பா தான். யாப்பிலக்கணம் பார்த்தால் ஜெகேயின் சிறுகதையே பெட்டர் என்னும் அளவுக்கு ஏகப்பட்ட தவறுகள்!
நேரிசை வெண்பா என்ன சொல்கிறது? நான்கடி, இரண்டாவது அடியில் தனிச்சொல். நான்கடியும் எதுகையில் இருத்தல் வேண்டும். அட்லீஸ்ட் இவ்விரண்டு அடிகளாவது. இத்தனைக்கும் நான் இன்னும் சீர் வரிசைக்கே போகவில்லை. தாவு தீர்ந்துவிடும்!
யாழ்ப்பாணத்தில் 90களில் தமிழிலக்கியம் படித்தவர்கள் இன்னமும் ஞாபகம் வைத்திருக்கும் வெண்பா உதாரணத்துக்கு.
வாங்குவளைக் கையார் வதன மதிபூத்த
பூங்குவளைக் காட்டிடையே போயினான்--
தேங்குவளைத்தேனாடி வண்டு சிறகுலர்த்தும் நீர்நாடன்
பூநாடிச் சோலை புக.
நாலடி கவிதை, “தேங்குவளை” தனிச்சொல். ஈரடி எதுகை தேனாடி, பூநாடி, வாங்குவளை, பூங்குவளை. டிப்பிகல் நேரிசை வெண்பா. பிச்சு உதறீட்டடா புகழேந்தி!
கேதா நெற்றிக்கண் திறக்கும் முன் அவன் கவிதைக்கு வருவோம். நான்கடி எல்லாம் ஓகே தான். ஆனால் ரெண்டாவது ரூல் சிதறுகிறது. “நியூட்டன்” தனிச்சொல் தான், வரும் இடம் நெருடுகிறது. எதுகை எதுக்கடா என்று கேட்கிறான்! அவன் அனுமதியின்றி இப்போது இதை நேரிசை வெண்பாவாக்க முயற்சிக்கிறேன்.
கண்ணீர் வழிந்தோட கருவாட்டு சுவை ஊற
பன்னீர் பனங்கள்ளை புதுப்பிளாவில் - நியூட்டன்
புசித்து ரசித்தனன் தலைபொத்தி
விசித்து அழுதனன்  பனங்காய் கெலித்து விழ!
பன்னீர் செருகியது கவிதைக்கு நயம் கூட்டியது என் கருத்து என்றாலும் ஆசிரியர் கருத்தில் கை வைத்தது தப்பே. இங்கே விதிப்படி சீரும் தளையும் சேர்க்க எனக்கு கவியாழுமை பத்தாது. இடமும் பத்தாது. யாராவது ட்ரை பண்ணுங்களேன்? வாலிபன் .. சீர் வரிசை கொண்டு வாவேன்?

இந்த வார பாடல்

hariha1094 – 99 காலப்பகுதி தேவாவின் பொற்காலம். தொட்டதெல்லாம் மெலடிதான். 98 இல் சுரேஷ்கிருஷ்ணாவின் “ஆகா” வெளியானது. படம் வெறும் “ஆகா” தான். ஆனால் அதில் ஒரு பாடல். தேவா ஏன் தேனிசை தென்றல் என்பதை நிரூபிக்கும் பாடல். “உயிரே உயிரே” யில் ஆரம்பித்த ஹரிஹரன் சித்ரா ஜோடி மீண்டும் இந்த பாட்டில். இதே வருடம் தான் “நீ காற்று நான் மரம்” கூட வந்தது. ஹரிகரனுக்கும் சித்ராவுக்கும் இயல்பாகவே ஒரு கெமிஸ்ட்ரி இருக்கிறது. ஹரி சங்கதிகள், பிர்க்கா என அடித்து ஆட, சித்ரா சத்தம் போடாமல் ஒரு சின்ன பாவத்தை, காதலை, ஏக்கத்தை குரலில் கொண்டுவந்து சிக்ஸர் அடிப்பார். இந்த எதிரும் புதிருமான பாணி, இசையில் வருமே ஹார்மனி? அதற்கு நிகரானது. ஆணுக்கும் பெண்ணுக்குமான காதலின் நுணுக்கங்களை, வன்மையை, மென்மையை குரலில் புரிந்து உருவேற்றும் விற்பன்னர்கள்.  523884இந்த பாட்டுக்கும் அதே கதி தான். முதல் சரணம் ஹரி. சங்கதி எல்லாம் சும்மா விறு விறு என்று விழுகிறது. சான்ஸே இல்லை. சின்னக்குயில் சிக்கி சின்னாபின்னமாகபோகிறதே என்று நினைக்கும் போது அடுத்த சரணம் ஆரம்பிக்கிறது. கேட்கும் நமக்கு பதட்டம். பாவம் சித்ரா. இதுக்கு ஹரிணி தான் சரிவரும் என்று நினைக்கும் தருணத்தில் தான் சித்ரா குரல் “ஏழு ஸ்வரத்தில்”. “தேகமெங்கும் கண்கள் தோன்றாதோ, நீயென்னை பார்க்கையில் நாணத்தில் மூட” என்ற பாடும்போது ஒரு வெட்க சிரிப்பு சிரிப்பாரே! ஐயோடா இது கதையில்லையினு காதில் சொல்லுங்கோவன்! “என்னில் இன்று நானே இல்லை, காதல் போல ஏதும் இல்லை” என்று ஏங்கும் போது “போடா நீயும் உன்னுடைய சங்கதியும்” என்று ஹரிகரனை பார்த்து சொல்ல தோன்றுகிறது. Gem of a song!

ஒருமுறை இப்படி தான். RMIT நூலகத்தில் இருந்து படித்துக்கொண்டிருக்கும் போது என்னுடன் கூடப்படித்த குஜராத்தி நண்பி(யாவும் கற்பனை!) முன்னாலே இருந்து அசைன்மன்ட் செய்துகொண்டிருந்தாள். iPod இந்த பாடலை ப்ளே பண்ணுகிறது. சித்ராவின் போர்ஷன் வரும்போது இயல்பாக என்னையறியாமல் நான் புன்னகைக்க அவள் கவனித்து என்ன? என்றாள். பாட்டு என்றேன். ஆச்சரியத்துடன் கேட்டு வாங்கி கேட்டுவிட்டு .. சிரித்தாள். என்ன? என்றேன்.  இந்த பாட்டு ஏற்கனவே ஹிந்தியில் வந்த தீவானா பட பாடல் என்றாள்! குமார்ஷானு பாடியது.
எங்களுக்கென்ன? கோழி அமெரிக்காவில இருந்து வந்ததா, ஆண்டிப்பட்டியில் இருந்து வந்ததா என்பது முக்கியம் இல்லை. குழம்பு ருசியாக இருக்கவேண்டும். தேவா இந்த பாட்டை காப்பி பண்ணியிருக்காவிட்டால் நமக்கு தமிழில் இது கிடைத்திருக்குமா? என்ன ஒன்று .. பயபுள்ள ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம்!
vadivelu09மன்மதகுஞ்சு: அது சரி அந்த குஜராத்தி பொண்ணுக்கு இப்போ எத்தனை குழந்தைகள் ஆச்சு மச்சி?


ஹாட் நியூஸ்

தவா இந்த வாரம் பளுரே போர்மட்டில் தமிழ் பாட்டு வீடியோக்கள் கொண்டுவந்து தந்தான். அதில் “180” என்ற படத்தில் வரும் “சந்திக்காத கண்கள்” என்ற பாட்டில் வரும் நித்யா மேனனை அவசர அவசரமாக காதலிக்க ஆரம்பித்துவிட்டேன். கண்டதும் காதல் தான்! இப்போ தலைவர் காதல் மூடில் இருக்கிறாரு. டோன்ட் டிஸ்டர்ப் ப்ளீஸ்!  காதல்னா என்னனு தெரியுமா யாருக்காவது? நிலா வானம் காற்று ஜட்டி .. எல்லாமே கவிதையா தெரியும்டா! அந்த முட்டை கண்ணுக்குள் இருக்கும் ஒரு சோகம், அதை கடந்து வரும் சின்ன சிரிப்பு … கீர்த்தி ஒரு பார்ட்டி அரேன்ஜ் பண்ணுடா! பீல் பண்ணனும் போல இருக்கு!!

Nithya-Menen
அம்மம்மா இன்று மாறினேன்
அன்புக்கு நன்றி கூறினேன்
உள்ளத்தின் காயம் ஆறவே
உதவியது உன் வார்த்தை தான்
நிம்மதி இன்றி வாடினேன்
நின்றிட நிழல் தேடினேன்
திக்கற்று போன வேளையில்
தெரிந்தது என் பாதைகள்
உனது பாடல் கேட்டது
மனதில் பாலை வார்த்தது
புயல் காற்றில் வாடி நின்ற ஓடம் தான்
கரையை சேர்ந்தது

கண்களில் என்ன ஈரமோ
நெஞ்சினில் என்ன பாரமோ

 
41654_100001612310791_4570591_nமன்மதகுஞ்சு : ஐ ஜாலி .. ஜேகே பீல் பண்ண தொடங்கீட்டாண்டா .. நமக்கு நைட் பூரா ரிக்கி மார்ட்டின் சாங் தான் மச்சி!!

Contact Form