வியாழமாற்றம் 05-04-2012 : A Thousand Splendid Suns

Apr 5, 2012

டேய் ஜேகே

imagesபாலா, மதியுரைஞர்
ஆஸ்திரேலியா
டேய் … மியான்மர் தேர்தலில் ஆங்காங் சூகியின் வெற்றியை எப்படி பார்க்கிறாய்? இனி அங்கே நல்லாட்சி தானா?

வெற்றி என்னவோ எதிர்ப்பார்க்கப்பட்டது தான். ஏற்கனவே சூகியின் ராஜதந்திரம் பற்றி வியாழ மாற்றத்தில் எழுதியிருக்கிறேன். ஆனால் சூகி ஒன்றும் இதனால் ஆட்சிக்கு வரமுடியாது! நடந்தது வெறும் இடைத்தேர்தல் தான். 440 ஆசனங்கள் உள்ள மன்றத்தில் சூகியின் கட்சி 44 இடங்களில் போட்டியிட்டு 43 இல் வென்றிருக்கிறது. தோற்ற இடம் ஷான் இனத்து சிறுபான்மையினர் அதிகமுள்ள பிரதேசம் என்பது கொஞ்சம் கவலைப்படவேண்டிய விஷயம்.
இந்த மாற்றங்களை வரவேற்கலாம். சர்வதேசம் தொடர்ந்து கொடுத்த குடைச்சலில், வேறு வழியில்லாமல் மியானமர் ஆட்சியாளர்கள் இந்த நடவடிக்கைக்கு இசைந்து ஓரளவுக்கு ஜனநாயக வழி நோக்கி முன்னேறுகிறார்கள். இதிலிருந்து ஈழத்தவர் பாடம் படிக்க எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. ஆனால் we can’t get carried away! மியான்மர் பிரச்சனை இராணுவத்துக்கும் மக்களுக்குமிடையேயானது. அங்கே அடிமைப்படுத்தபடும் மக்கள் பெரும்பான்மை பர்மியர். எனவே என்றோ ஒரு நாள் பெரும்பான்மையினருக்கு நீதி கிடைக்க வாய்ப்புகள் அதிகம். அதுவே சிறுபான்மை இனமாகும் போது …. ஆணி தான்!

lat rajiniகருணாநிதி, கோபாலபுரம்
அன்பு இளவல் ஜேகே! அடிக்கடி இப்போதெல்லாம் வியாழமாற்றத்தில் அரசியல் “நாறுதே” .. அவதாரம் தரிக்கும் எண்ணம்! அரிதாரம் பூசும் வண்ணம்! அவையில் பழுக்கும் கன்னம்? ஏர்போர்டில் ஈஸ்கொர்ட் பண்ணும் திண்ணம்! இருக்கிறதா என் இளஞ்சூரியனே?
அட்டு ஐயா அலைஞரே!... இதெல்லாம் நாங்க தங்கப்பதக்கத்திலேயே பார்த்திட்டோம்! உங்களோட கொலைவெறி எங்களுக்கு நன்னாவே தெரியும்! அதான் இந்த வாரம் வெவரமா ஒலக அரசியலில குதிச்சிட்டோம்ல! எங்களுக்கேவா? அம்மணமா நிண்டுச்சாம் புலி!! அண்டவெயார குடுத்துச்சாம் எலி!!

here_I_am_boy_cartoonவாலிபன், ஜார்ஜியா
சமூக கருத்துக்கள், அரசியல் போன்றவற்றை கவிதை மூலம் பரப்ப முடியாதா? தீவிர அரசியலுக்கு கவிதை ஒரு தளமாகுமா?
நீ எப்பவுமே கோர்த்துவிடுற ஆளாச்சே!! கேள்விய பார்த்தா பயபுள்ள டீப்பா ஏதோ கிண்டியிருக்காப்ல! Anyway its subjective! என்னை கேட்டால், கவிதையை அதில் இருக்கும் நயத்துக்கும் உணர்வுக்கும் தான் ரசிப்பேனே ஒழிய அதை தாண்டி என்னை, என் சிந்தனைகளை ஒரு அரசியல் கவிதை பாதிக்குமா? என்று கேட்டால், இதுவரைக்கும் இல்லை. உணர்வுகளை தவிர்த்து புத்தியை முன்னிலைப்படுத்துவதே அரசியலுக்கு நல்லது என்று நினைப்பவன். பாரதியின் பாடல் கூட ஒரு உணர்வை கிளரும், மேற்கோளுக்கு உதவும். ஆனால் ஒரு பெரியாரோ, ஒரு சுஜாதாவோ, ஒரு நெல்சன் மண்டேலாவோ, The Namesake புத்தகமோ தந்த கருத்தியல் ரீதியான பாதிப்பை, பாரதி கவிதைகள் எனக்கு கொடுக்கவில்லை. ஒரு கட்டுரை, கதை அதில் வரும் மாந்தர் தரும் தாக்கத்தை வெண்பாக்கள் எனக்கு தருவதில்லை. நான் கடந்து போன, பொதுவான புரட்சி, practical இல்லாத eccentric கவிதைகள், மார்பை அறுத்து எறியும் வீரம், உலையாய் கொதிக்கும் இரத்தம், கலிங்கத்து பரணி போன்ற கவிகள் தந்த அயர்ச்சியும் ஒரு காரணமாக இருக்கலாம். தமிழில் ஒரு “Old Poem” ஐ நான் சந்திக்கவில்லை. கவிதை மிகவும் வலிமையான அரசியல் ஊடகமாக தமிழர் போராட்டங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்னவோ உண்மைதான். முக்கியமாக மார்க்சிய சிந்தனைகளின் பரவலுக்கு கவிதை முக்கிய காரணம். முக்கியமாக நீதிக்கட்சி காலம், பின்னரான திராவிட போராட்டம் … ஈழத்து வரலாற்றில் புதுவை, காசி ஆனந்தன், ஜெயபாலன், சேரன் …  நன்றாக கவிதை வந்தது! கவிதைக்கு நன்றாக அடித்து ஆடக்கூடிய களம். அவர்களும் ஆடினார்கள்! அவ்வளவு தான்! அது எனக்கு அரசியல் புகட்டவில்லை. செய்யும் அட்வைஸ் ஏறவும் இல்லை. குண்டு விழுந்து உடல் சிதறும் தேசத்தில் பதின்மத்தை பயந்து நடுங்கி ஓடிக்கடந்த எனக்கு எவனாவது “உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் .. !” என்று ஸ்டார்ட் பண்ணினால் ... Go and fly a kite! பாரதியேயானாலும்!

downloadபயந்தன், சிலிக்கன் வாலி
டேய் ஜேகே, Yarl IT Hub பற்றி இப்போது எல்லாம் ஏன் எழுதுவதில்லை? உருப்படியாக ஏதாவது செய்யும் எண்ணமே இல்லையா?
செய்யவேண்டும் என்பதால் தான் எழுதுவதை தவிர்க்கிறேன். Yarl IT Hub பற்றிய பிரசாரங்கள் போதும். எழுதி அதற்கு ஐம்பது பேர் வாழ்த்துக்கள் தெரிவித்தாலும் அதற்கு மேல் …. இன்ஸ்பிரேஷன், ஏதாவது செய்யவேண்டும் என்ற எண்ணத்தை தாண்டி இனி நிஜமாகவே செய்யும் நேரம். செய்யபோகிறோம் என்று நினைப்பவர்கள் Yarl IT Hub இன் Facebook தளத்தில் தொடர்பு கொள்ளுங்கள்.

sujathaசுஜாதா, வைகுண்டம்
குப்பை பதிவு, “தமிலை” கொலை செய்கிறது என்று பலராலும் விமர்சிக்கப்பட்டாலும் வியாழமாற்றம் தொடர் இன்றைக்கு இருபத்தைந்து வாரங்கள் நிறைவு செய்ததை இட்டு என்ன நினைக்கிறாய்?
தலீவா, நீங்க துப்பின எச்சில்ல இருக்கும் எலேக்ட்ரோலைட்ல வருமே சொட்டு சோடியம்? அந்த தூசுக்கு கூட என்னுடைய எழுத்து வராது! நீங்க எல்லாம் நிஜமாகவே கேள்வி அனுப்பினீங்க என்று சொன்னா ஆஸ்திகன் என்ன, agnostic கூட atheist ஆயிடுவான் பாஸ்!
ஆனாலும் இந்த வியாழமாற்றம் வெற்றி நெஞ்சை நக்குகிறது! எந்திரன் கலக்ஷனை மிஞ்சி விட்டதாக சொல்லுகிறார்கள்! இதை எல்லாம் தலையில எடுக்ககூடாது என்று தோன்றினாலும் என் நெஞ்சில் குடியிருக்கும் என்னை வாழ வைத்த தெய்வங்களான டமில் மக்களுக்கு நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறேன்!

541601_10150652889392337_714962336_9527709_1157243438_n10xsxewமன்மதகுஞ்சு
நயந்தாரா தற்கொலைப்படை
வவுனியா
ஜேகே அய்யா.. நடிகைகளில் யார் அடுத்த நயந்தாரான்னு துப்பி விளக்கமுடியுமா ?
“விண்ணை தாண்டி வருவாயா”யில் சிம்புவோடு இச் இச்! தெலுங்கில் மகேஷ்பாபுவுடன் “பச் பச்”, சாமியில் இடுப்பு மாமி ... கூட்டிக்கழிச்சு பார்த்தா திரிலோகசுந்தரி திரிஷாம்மாக்கு இரண்டாவது டாட்டு கன்போர்ம்டா!!

Google Glass

இரண்டு வாரங்களுக்கு முன்னர் Google Glasses பற்றி சொல்லியிருந்தேன் இல்லையா. இன்றைக்கு கூகிளே அதன் சாம்பிள் வீடியோவை தந்திருக்கிறது. சாத்தியமான சுவாரசியமான வீடியோ. Watch it!

 

கடவுள்!

கடவுளை கொல்லைப்புறத்து காதலியாக எழுதும்போது இது அவ்வளவாக வாசிக்கப்படாது என்றே நினைத்தேன். சுவாரசியங்களை வலிந்து சேர்க்காமல் பதிவை அதன் போக்குக்கே விட்டும் விட்டேன். அதனால் பிற்பாதியில் பதிவு மிகவும் போரிங் என்று ஒரு நண்பன் சொல்ல. மன்மதகுஞ்சு வேறு, “ரொம்ப டீப்பா போயிட்ட மச்சி, குவாட்டர் விலை வேற இலங்கையில ஏத்தீட்டாங்க” என்றான். எனக்கு கொஞ்சம் வயித்து கலக்கம். எழுதி ஒருத்தனும் வாசிக்காமல் போனால் நானும் இலக்கியவாதி ஆக்கப்பட்டுவிடுவேனோ என்ற பயம் “நெஞ்சை அடைத்தது”. பதிவு எழுதி பத்து மணித்தியாலத்தில் ஒரு கமெண்ட்டும் வராமல் விட, ஜேகே இன்னிலயிருந்து நீ லக்கியவாதிடா!
கடவுள் கைவிடவில்லை! வீணா பதிவுக்கு கொடுத்த கமெண்ட் அதிரவைக்கும் ரகம்! ஏனைய நண்பர்களும் தங்கள் கடவுள்களுடன் இணைய, “வோல்காவில் இருந்து கங்கை” முதல் அத்வைத கோட்பாடு வரை அனுபவங்கள் scattered! அதிலும் கடவுள் இருக்காரா இல்லையா என்ற சர்ச்சைக்குள் போகாமல் எங்கள் நம்பிக்கைகளை எங்கள் சட்டத்தில் அனுபவித்து எழுதியதில், வாலிபன் கேட்ட கடவுள் என்றால் எது? என்ற வரையறை தேவைப்படாமலேயே போய்விட்டது! … Its an experience!
e0c72363-28bf-4840-9129-b94bb59fa8c11மன்மதகுஞ்சு : இப்பிடி எழுதி எழுதி சாகடிக்கிறவனுக்கு கருட புராணத்தில தண்டனை என்னென்னு தெரியுமாடா? ஒரு தனியறைல ஒன்னைய அடைச்சு வச்சி உன்னோட பதிவுகளையே திருப்பி திருப்பி வாசிக்க வைச்சு கொல்லுறது! ஒரு பதிவுக்கு மேலயும் உயிரோட இருந்தாய் எண்டால், உனக்கு நோபல் பரிசு நிச்சயம்டா!

இந்த வார படம்

இந்த படத்தில கூட பவுடர் போட்டு ஸ்டைலாக இருக்கும் பவர் ஸ்டாரின் அபார தன்னம்பிக்கையை பாராட்டி கன்னடத்து பைங்கிளி சரோஜாதேவி பாவித்த சோப்பு டப்பா பரிசாக வழங்கபடுகிறது.
543268_10150648841302337_714962336_9516394_942167488_n
41654_100001612310791_4570591_nமன்மதகுஞ்சு : அவனுக்கு சோப்பு டப்பாவுக்கு முதல்ல ஒரு ஜட்டி வாங்கி கொடுங்க சாரே! தொந்தி வளர்ற ஸ்பீட பார்த்தா, பனியன் கூடிய சீக்கிரம் எம்பிடும்! தக்காளி தூத்துக்குடி பக்கம் கலவரமாயிடும்டா!!

இந்த வார புத்தகம் : A Thousand Splendid Suns

டெல்லி விமானநிலையத்தில் வாங்கி அங்கேயே வாசிக்க தொடங்கி, மூடி வைக்க முடியாமல், சிங்கப்பூர் விமான நிலையத்தில் taxyக்கு வரிசையில் நிற்கும்போது கூட வாசித்து, டிரைவருக்கு PIE சொல்ல மறந்து, AYE நெரிசலில் திணறும்போது நானும் காபுல் சண்டையில் சிக்கி! வீடு வந்து, இரவிரவாக வாசித்து, அடுத்த நாள் வேலைக்கு லீவு போட்டு, சாப்பாடு தண்ணியில்லாமல் அதுவே கதியென்று கிடந்து, இரவு எட்டு மணிக்கு என் அறைக்கதவை திறந்து கொண்டு வெளியே வந்தால், அக்கா பாவமாய் பார்த்து கேட்டாள்.
“யாரடா அந்த பொண்ணு?”
“பொண்ணு இல்ல அக்கா ….. பொண்ணுங்க!
“The Kite Runner” புகழ் காலித் ஹூசைனின் “A Thousand Splendid Suns” வாசித்தால் புரியும், மரியமும் லைலாவும் உங்கள் இதயத்தின் இடது வலது என்று இடம்பிடித்து இருப்பார்கள். சம்பந்தமேயில்லாவிட்டாலும் அகிலனின் பாவை விளக்கில் வரும் தேவகியை மரியத்தோடும், கௌரியை லைலாவுடனும் மனம் ஒப்பிட்டுக்கொண்டு இருந்தது. வாசிக்கும் போது ஒரே முகங்கள் வந்துகொண்டு இருந்தன. என்ன ஒன்று ரஷீத் என்ற அரக்கனை தணிகாசலத்தோடு ஒப்பிடவேமுடியாது!
1000suns (1)ஆப்கான் கதை தான். மரியம், ஒரு பணக்கார தியேட்டர் முதலாளியின் சட்டவிரோதமான மனைவியின்(?) மகள். உருது மொழியில் ஹராமி என்று அசிங்கமாக அழைப்பார்கள். நீங்கள் ஆப்கானில் பெண்களுக்கு என்னென்ன கொடுமைகள் எல்லாம் கேள்விப்பட்டு இருப்பீர்களோ, அதை போல பத்து மடங்கை அனுபவிக்கிறாள். இன்னொருத்தி லைலா. உயர் குடி, ஆங்கிலம் படித்த ஆப்கான் பெற்றோருக்கு பிறந்தவள். கூட படிக்கும் இளைஞனை காதலிக்கிறாள். ஒரு கட்டத்தில் ஆப்கான் அரசியல் போர் மற்றும் குடும்ப சூழ்நிலைகளால் இருவருமே ரஷீதை மணக்கவேண்டிய சூழல். அங்கே ஆரம்பிக்கிறது Family violence இன் உச்சம். இதற்குள் லைலா கர்ப்பம், குழந்தை என்று பல சிக்கல்கள். வெளியாலே ஆப்கானுக்கே உரித்தான ஆக்கிரமிப்புகள். இவற்றின் முடிச்சு தான் “A Thousand Splendid Suns”. நான் அறிமுகப்படுத்தும் சில புத்தகங்களை ஓரிருவர் வாங்கி வாசித்தும் இருக்கிறார்கள்! என்பதால் ரங்கனுக்காக, கதையை இதற்கு மேலே வளர்க்கவில்லை!
வாசிக்கும்போது ஆப்கான் பிராந்திய அரசியல் ஓரளவுக்கு பிடிபடுகிறது. அங்கே ஏன் ஒரு குழப்பமான ஆயுத குழுக்கள், முகாஜுதீன், தலிபான், சோவியத் ஆக்கிரமிப்பு, ஐரோப்பிய ஆக்கிரமிப்பு, ஈரான், பாகிஸ்தான், இப்போது அமெரிக்கா, இதற்குள் ஜனநாயகம் என்ற கழுதை வேறு! எல்லாவற்றையும் அழுத்தமாக சொல்லும் a must, must, must read! Hats off to Khaled Hosseini!
இப்படியான அரசியல் சூழ்நிலையில், சமாந்தரமாக, குடும்ப வன்முறைகளையும் எடுத்து ஆள, அதையும் மிகவும் அயர்ச்சி வராமல் தர, தைரியம் வேண்டும். Khaled க்கு இருக்கிறது. மரியத்தின் மீது வரும் ஒரு பரிதாபம், லைலா மீது வரும் ஒரு மெல்லிய காதல், அவள் பெண் மீது வரும் பாசம், இதை வைத்து அடித்து ஆடி இருக்கிறார் எழுத்தாளர். அரங்கேற்ற வேளையில் குறிப்பிட்டது போல காலித் ஹோசைன் போன்று எங்கள் வாழ்க்கையை, ஈழத்து வாழக்கையை, எங்களுக்காக இல்லாமல், ஏனைய இனங்களுக்காக எழுதவேண்டும் என்பது என்னுடைய கனவு. ஆங்கிலத்தில் திக்கி திணறி கொஞ்ச நாள் எழுதியத்துக்கு காரணமும் அதுவே. ஆனால் ஆணியே புடுங்கமுடியாது என்பது ஆரம்பித்த பின்னர் தான் தெரிந்தது! Khaled Hosseini ஆப்கான் வாழ்க்கையை ஆங்கிலத்தில் எழுதும்போது, அதை ஆப்கான் சமுதாயமே அமெரிக்காவில் ப்ரோமொட் பண்ணி, வாசிக்க வைத்து … அமெரிக்காவுக்கும் அந்த தேவை இருந்தது உண்மை தான் என்றாலும் அந்த இரண்டு புள்ளிகளும் சந்தித்தது இல்லையா?

வாலிபன் எப்போதோ Facebook இல் கொடுத்த லிங்க் இது. அரசியல் என்பது, கூட்டமைப்போடு இணைந்து/எதிர்த்து/தள்ளிநின்று/தட்டிக்கொடுத்து/வியாழமாற்றம் எழுதும் விஷயம் மட்டுமே கிடையாது. இலக்கியத்தில் செய்யும் அரசியல், பொருளாதாரத்தில் செய்யும் அரசியல், தொழில்நுட்பத்தில் செய்யும் அரசியல் இது எல்லாமே ஒரு “Nation Building Process” இன் தூண்கள் தான். அதை புரிந்து கொண்டாட என்றைக்கு நாங்கள் துணிகிறோமோ அப்போது தான் அட்லீஸ்ட் இரண்டு ஆணியாவது ட்ரை பண்ணலாம் அப்பிரசிண்டுகளா!

இந்த வார பாடல்

சிட்டுவேஷன் இது தான். ஹீரோவை நண்பன் ரெட் லைட் ஏரியாவுக்கு அழைத்து போகிறான். அங்கே இன்னும் கொஞ்ச நேரத்தில் ஹீரோயின் அறிமுகம். அவள் ஒரு prostitute, படிப்பில் கெட்டி. ஆனாலும் சூழ்நிலையால் இந்த தொழிலுக்கு வந்தவள். சொல்லப்போனால் சிறுமி. இந்த சிட்டுவேஷனுக்கு முன்னே வரும் பாட்டு. பெண்கள் பாடும் பாட்டு. எப்படி அமையவேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
nayakan
ஒரு சப்டிலான மெலடி. ரொம்ப தாம் தூம் என்று குதிக்கும் மெட்டு போட்டால் ஹீரோயினை பார்க்கும் போது அந்த உணர்வு வராது. ஒரு மெல்லிய சோகம் இருக்கவேண்டும். ஆனால் பாடும் பெண்கள் அதை காட்டவும் கூடாது. வரப்போகும் ஹீரோயின் படிப்பில் கெட்டி என்பதால், இந்த தொழில் செய்பவர்கள் புத்தி கூர்மையாக சிந்திக்க கூடியவர்கள் என்பதையும் பாடல் வரிகள் சொல்லவேண்டும். இந்த காட்சி இடம்பெறும் காலம் 60களில் என்பதால், பாட்டும் அந்த காலத்து பாணியில் இருக்கவேண்டும்.இவ்வளவு விஷயங்களையும் யோசித்து பாட்டு எடுப்பார்களா? என்று கேட்டால், யெஸ்… மணிரத்னமும் இளையராஜாவும் சேரும்போது அப்படித்தான் எடுப்பார்கள். கூடவே கமல் வேறு! கேட்கவேண்டுமா?
மிகவும் தேர்ந்த பாடகிகளான யமுனாராணியும் எம் எஸ் ராஜேஸ்வரியும் பாடிய பாடல். ராஜேஸ்வரி கொஞ்சம் ஹெவியாக பாட, யமுனாராணி, ஐயோடா .. செல்லம் கொஞ்சும். ஒரு சிறுமி பாடுவது போலவே .. அப்புறமாக வரும் சரண்யா அறிமுகத்துக்கு மூட் செட்டர். முதல் இன்டர்லூடில் வழமை போல ராஜாவின் வயலின் எள்ளி நகையாடும். டேஞ்சரஸ் ராஜா!
பாடல் வரிகள் கூட அருமை. புதுமைப்பித்தன் என்று நினைக்கிறேன்.
எனது உலகில் அஸ்தமனம் ஆவதில்லை – இங்கு
இரவும் பகலும் என்னவென்று தோணவில்லை
வந்தது எல்லாம் போவது தானே
சந்திரன் கூட தேய்வது தானே
காயம் என்றால் தேகம் தானே
உண்மை இங்கே கண்டேன் நானே

இப்படியான retro காலத்து பாடல்களுக்கென்று ரெடிமேட் ராகம் ஒன்றை ராஜா வைத்திருக்கிறார். மோகனகல்யாணி என்று சொல்கிறார்கள். நமக்கு ஒரு மண்ணும் தெரியாது! மோகனாவையும் கல்யாணியையும் மிக்ஸ் பண்ணி வரும் ராகமாம். அதென்ன மிக்ஸிங்? ஆரோகணம் மோகனம். அவரோகணம் கல்யாணி! ஐ மீன் மேலே ஏறிப்போகும் போது மோகனாவை பிடிச்சுகிட்டும், இறங்கும்போது கல்யாணியை பிடிச்சுகிட்டும்… அதுக்காக தான் இரண்டு பாடகிகளை பாடவைத்தாரோ தெரியாது! இதற்கு மேல் டெக்னிக்கலாக எழுதினால் கஜன் “அது தான் நமக்கு வராதுன்னு தெரியும்ல? எதுக்கு?” என்பான்.  இந்த ராகத்தில் “பாரிஜாத பூவே”. இதயம் படத்தில் “ஓ ஓ பாட்டி நல்ல பாட்டி தான்” என்று ராஜா சுட்டு தள்ளியிருக்கிறார். எல்லாமே கிளாசிக். நம்ம தேவா சும்மா இருப்பாரா? “பாண்டு மாஸ்டர்” படத்தில் “புத்தம் புது நந்தவனமே” சுட சுட! ஏத்திட்டோம்ல!

dhanush-s-kolaveri-becomes-global-song-8b4b8d57

மன்மதகுஞ்சு: என்னைய கெட்டா இது “மாசிலா என் உண்மைக்காதலி” ல இருந்து சுட்ட பழம்னு தான் சொல்லுவன்!


மெல்லத்திறந்தது படலை!

Nithya_Menon_Hot_10 
நடை மறந்த கால்கள் தன்னில் தடயத்தைப் பார்க்கிறேன்
வடமிழந்த தேரது ஒன்றை நாள்தோறும் இழுக்கிறேன்
சிறகிழந்த பறவை ஒன்றை வானத்தில் பார்க்கிறேன்
உறவுறாத பெண்ணை எண்ணி நாளெல்லாம் வாழ்கிறேன்

வெறும் நாரில் கரம் கொண்டு பூமாலை தொடுக்கிறேன்
வெறும் காற்றில் உளி கொண்டு சிலை ஒன்றை வடிக்கிறேன்
விடிந்து விட்ட பொழுதில் கூட விண்மீனைப் பார்க்கிறேன்
விருப்பமில்லா பெண்ணை எண்ணி உலகை நான் வெறுக்கிறேன்

உளமறிந்த பின்தானோ அவளை நான் நினைத்தது
உறவுறுவாள் என தானோ மனதை நான் கொடுத்தது
உயிரிழந்த கருவைக் கொண்டு கவிதை நான் வடிப்பது
ஒருதலையாய் காதலிலே எத்தனை நாள் வாழ்வது

இது குழந்தை பாடும் தாலாட்டு
இது இரவு நேர பூபாளம்
இது மேற்கில் தோன்றும் உதயம்
இது நதியில்லாத ஓடம்

- டீ ஆர்
 
 
vivek1மன்மதகுஞ்சு : என்ன மச்சி இன்னுமா பீலிங்? அதானே தல போன வாரமே அடிச்சிட்டு வாந்தி எடுத்தாச்சே? ஒரு வாரத்துக்கு மேல உருளைக்கிழங்கு கறி, பிரிட்ஜ்ல இருந்தா கூட ஊசிப்போயிடுமேயடா? சமைக்கிற உனக்கு கூடவா தெரியாது?? நீயெல்லாம் பீல் பண்ணினா உடனேயே மழை வாரி பொழிஞ்சிடும் பாரு! வேலைய பார்ப்பியா?Contact form