கூட்டமைப்பு எம்.பி சுமந்திரனுடன் நேரடி சந்திப்பு!

Apr 17, 2012 29 comments

 

MAS2512தமிழ் தேசிய கூட்டமைப்பு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுடனான சந்திப்புக்கு அழைப்பு வந்தபோது முதலில் போவதில்லை என்று தான் முடிவெடுத்தேன். அப்பாவிடம் சொன்னபோது “உனக்கென்ன விசரா? அவர் கருத்தை அவர் வாயாலேயே நேரடியாக கேட்டால் தானே அவரின் நிலைப்பாடு அறியமுடியும். சும்மா பத்திரிகைகள் எழுதுவதை படித்து வியாழமாற்றத்தில விமர்சித்தால் சரியா?” என்று நெத்தியடி தர, சரி போவோம் என்று முடிவெடுத்தேன். முருகன் தானும் வருகிறேன் என்று சொல்ல, வேலை முடிந்து ஏழு மணி சந்திப்புக்கு ஆறரைக்கே போக அங்கே சுமந்திரன் ஏற்கனவே தன் காரில் டிரைவ் பண்ணி வந்திருந்தார்! அப்புறமாக ஒழுங்கமைப்பாளரும் வந்து சேர்ந்தார்.

என்னை அறிமுகப்படுத்தும்போதே, இவர் ஜேகே, வியாழ மாற்றத்தில சிலவேளைகளில் உங்களை பாராட்டுவார். பலவேளைகளில் விமர்சிப்பார்” என்று சொல்லிவைக்க, என்னடா இது லொள்ளா போயிற்று என்று யோசித்தேன். எந்த விஷயத்தில் என்னை விமர்சிக்கிறீர்கள் என்று சுமந்திரன் கேட்ட போது “13ம் திருத்தம் அமுல்படுத்தல் பற்றிய  உங்கள் நிலைப்பாடு …” என்று நான் சொல்லி முடிக்கும் முன்னமேயே, “புத்திஜீவிகள்” பற்றியும் எழுதியிருக்கிறார் என்று ஒழுங்கமைப்பாளர் அண்ணா சொல்ல சுமந்திரன் “அவனா நீயி” என்ற ரீதியில் என்னை பார்க்க, நல்ல காலம் கதிரை அடுக்கும் வேலை தான் நமக்கு சரி என்று ஜேகே எஸ்கேப்!

அன்றைக்கு காலை தான் சுமந்திரன் லக்பிம பத்திரிகைக்கு கொடுத்த பேட்டி ஒன்றை வாசித்திருந்தேன். I was stunned. இப்படி ஒரு துணிச்சலான பேட்டியை அண்மைக்காலத்தில் இவ்வளவு புத்திசாலித்தனமாக, effective ஆக எந்த அரசியல்வாதியும் கொடுத்ததில்லை. சாம்பிளுக்கு ஒன்று,

NW:
Where is your bargaining power?

MAS:
Bargaining power is the democratic wish of our people, nothing else. Otherwise, it’s a very dangerous thing to talk about bargaining power. In proposals made between 1992 and 2006, the government was willing to go much further than this. In fact, the Oslo Communiqué of December 2002 specifically talked about a federal arrangement. That was between the government and LTTE. If they were willing to go that far when the LTTE were around and today they tell the Tamil people you have no bargaining power so don’t even think of anything close to that…that’s a very dangerous message they are giving the Tamil people. They are telling them you come with the gun and we’ll give you more.

Reference : http://dbsjeyaraj.com/dbsj/archives/4057

அதே நேரம் “The Island” பத்திரிகைக்கு அவர் எழுதிய ஆக்கம் ஒன்றில் பொலிஸ் அதிகாரங்களின் முக்கியத்துவம் பற்றி எழுதும்போது, இப்படி கருத்தை போகிற போக்கில் எழுதிகொண்டு போகிறார்.

“For our part, we are clear that a durable solution to the ethnic problem must be found within the contours of a united Sri Lanka. That aside, that line of argument ignores that it was disillusioned youth – often unemployed and angry – who have resorted to violence against the State, whether in the North East or in the South.”

Reference : http://island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=44922

வடக்கு கிழக்கில் இடம்பெற்ற போராட்டங்களை, தெற்கின் மார்க்சிய சிந்தனை போராட்டங்களின் காரணங்களுடன் பொதுமைப்படுத்தி தவறான சிந்தனையை இந்த பத்தி பரப்புகிறது. இதை சுமந்திரன் வேண்டுமென்று எழுதவேண்டிய தேவை இல்லை என்றே நினைக்கிறேன். தெரியாமல் தான் எழுதினார் என்றால், சுமந்திரன் மீண்டும் 50களில் நம் முன்னைய தலைவர்கள் செய்த தவறுகள் நோக்கி செலுத்தப்படும் அபாயமும் இருக்கிறது.

கொஞ்சம் கொஞ்சமாக ஆட்கள் வரத்தொடங்குகிறார்கள். எல்லாருமே, சேர் பொன்  இராமநாதனின் கிளாஸ்மேட் வயசில் இருக்க, டீனேஜர்ஸ் என்று பார்த்தால் நானும் முருகனும் தான்! வெளிநாட்டு இளைஞர்களின் அரசியல் ஆர்வம் லங்காசிறி, facebook இல் காட்டமான இரண்டு கமெண்ட்களுடன் முடிவது கொஞ்சம் அயர்ச்சி! வந்த ஆட்களில் “பல வகையினரும்” இருந்தார்கள். ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள், நடுநிலையாளர்கள், படம் காட்டுபவர்கள், அரசியல் அனாதைகள் என்று தமிழ்நாட்டில் சொல்வார்களே அவர்கள், என எல்லா குழுக்களும். எல்லோரையும் ஒரே இடத்தில் கண்டவுடனேயே எனக்கு வயிற்றில் வாஷிங் மெஷின் ஸ்டார்ட் பண்ணிவிட்டது! “தக்காளி, சண்டை தொடங்கினா, நாங்க எதுக்கால ஓடலாம்” என்று முருகனிடம் கேட்க, இருவரும் எமர்ஜென்சி எக்ஸிட் பக்கம் கதிரை போட்டு உட்கார்ந்தோம்!

கூட்டம் தொடங்குகிறது. அரை மணித்தியாலம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு பற்றியும் அதன் நடவடிக்கைகள் பற்றியும் மேலோட்டமாக பேசினார்.  அரசியல் போராட்டம், ஆயுதப்போராட்டம் கடந்து இப்போது தமிழர் நடத்துவது அறிவுப்போர் என்று சொன்னார். நாம் புத்திசாலித்தனமாக இயங்கினால்தான் எதையும் செய்யலாம் என்றார். வெளிநாடுகளின் நிலைப்பாடுகள், அவற்றை சமாளிக்க கூட்டமைப்பு எடுக்கும் முயற்சிகள் என முக்கால்வாசி எமக்கு தெரிந்த விஷயங்கள் தான். தெரியாத விஷயங்களும் சொன்னார். வழக்கறிஞர் என்ற முறையில் தந்திரோபாயமாக அரசு  கொண்டுவரும் சட்டத்திருத்தங்கள், தமிழர் நலனுக்கு பாதகமாக இருக்குமேயானால் அதற்கு, சுப்ரீம் கோர்ட்டில் ஸ்டே ஒர்டர், ரிட் மனு என தாங்கள் எடுத்து நிறுத்தி வைப்பதாக உதாரணங்கள்  மூலம் சொன்னார். பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் அறிக்கைகள், ஆவணப்படுத்தப்பட்டு, தேவையான இடங்களுக்கு அனுப்பப்படுவதாகவும், சொன்னார். மக்களை கூட்டி அரசியல் செய்யும் நிலைமை கிஞ்சித்தும் இல்லை. இதனால் இராஜதந்திர அரசியல், குறிப்பாக வெளிநாடுகளையே தாங்கள் நம்பியிருக்க வேண்டியிருப்பதால், நிலைப்பாடுகளில் நெகிழ்வுத்தன்மை காட்டவேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டினார். தீவிரமான நிலைப்பாடுகளை தற்சமயம் கடைப்பிடித்தால், எங்களின் மிஞ்சியிருக்கும் கொஞ்ச நஞ்ச இருப்பை கூட இழக்கும் அபாயத்தை, குடியேற்றங்கள், கலாச்சார பரம்பல் என்ற பல உதாரணங்கள் மூலம் விளக்கினார். இதை சமாளிக்க வேண்டிய உடனடித்தேவை இருக்கிறது என்றார். நீண்ட கால அரசியல் தீர்வு பற்றி கதைக்கும் நிலை தற்போதைக்கு இல்லை என்ற பொருள் பட பேசினார். இப்படி பொதுவாக நாங்கள் எல்லோரும் அறிந்திருக்ககூடிய விஷயங்களை சர்ச்சை ஏற்படுத்தா வண்ணம் வரிசைப்படுத்தினார்.  இடைவேளையின் போது பக்கத்தில் இருந்த தாத்தா ஒருவர், இலையான் ஒன்றை வாயில் இருந்து எடுத்து வெளியே போட்டார்!

சுமந்திரன் பேசிய விஷயங்களில் என்னை மிகவும் கவர்ந்தது வெளிநாட்டு தமிழருக்கு அவர் விடுத்த அழைப்பு தான். அரசியல், அரசியல் தவிர்ந்த சமூக முயற்சிகள் ஏராளமாக செய்யவேண்டி இருக்கிறது. அதற்குரிய ஆளணி பற்றாக்குறை இருக்கிறது. வெளிநாட்டு தமிழர்களை, திரும்பி அங்கே வந்து அரசியலையோ அல்லது சமூக வியாபார முயற்சிகளையோ எங்கள் பிரதேசத்தில் நிகழ்த்தவேண்டும். நிரந்தரமாக வர முடியாவிட்டால், ஒரு ஆறு மாசம், ஒரு வருஷத்துக்காவது வரவேண்டும்.  வருபவரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தமுடியுமா? அங்கே இருக்கும் மக்களுக்கு இருக்கும் பாதுகாப்பு உங்களுக்கும் இருக்கும் என்றார். Ouch! எவ்வளவு தான், வாசித்து அறிந்து புரிந்தது வைத்திருந்தாலும், நிலைமையை அங்கே இருந்து கண்டறிவது போல இங்கேயிருந்து அறியமுடியாது. எங்களுக்கு இருக்கும் அழுத்தங்கள், அபாயங்கள் என்பவற்றை வந்து அறிந்துகொள்ளுங்கள் என்றார். உடனே excited ஆகி இலங்கைக்கு டிக்கட் விலை என்னவென்று அப்போதே ஐபோனில் தேடினேன். அடுத்த நிமிஷமே, “வீட்டுக்கு மோர்த்கேஜ் கட்டவேண்டும், பின்பக்கம் பகோலா போடோணும். டாக்ஸ் ரிட்டர்ன் செய்யோணும்” என்ற யோசனை உறைத்தது! என்ன அவசரம் இப்ப? இருந்து இன்னும் ஐஞ்சு வருஷத்துக்கு உழைச்சு காசு சேர்த்துவிட்டு அப்புறமாக போகலாம். அரசியல் வேண்டுமென்றால் இங்க இருந்தும் செய்யலாம்! காசா பணமா?

பல விஷயங்களை மழுப்பலாகவே பேசினார். உத்திகளை வெளிப்படுத்தினால் அரசாங்கம் அதற்கு பதிலடி தயாரித்துவிடும் என்றார். தமிழ் மக்கள் என்ன விரும்புகிறார்கள் என்பதை விட, அவர்களுக்கு எது நன்மை பயக்குமா அதையே கூட்டமைப்பு செய்யும் என்றார். மக்கள் நலனுக்காகவே போராடுகிறோம். அதற்காக சிலவேளைகளில் புத்திசாலித்தனமாக பேசும்போது அது தவறாக பார்க்கப்படுகிறது. தனக்கு அங்கால பக்கத்தில் இருந்தும் மிரட்டல்கள் வருது. நீங்களும் இப்படி நம்பாமல் இருந்தால் நான் என்ன செய்ய? என்றார். வெளியே சொல்லமுடியாத சூழ்நிலை என்றாலும் நல்லதையே நாங்கள் செய்வோம். அப்படி செய்ய தவறினாலும் கூட ஒரு போதும் துரோகமிழைக்க மாட்டோம், எங்களை நம்புங்கள் என்றார். அன்றைக்கு புதுவருஷம். பலர் கோயிலுக்கு போய்விட்டு வந்து நெற்றியில் வீபூதி, காதிலே பூ எல்லாம் வைத்துக்கொண்டு வந்திருந்தனர். ஒரே பக்திமயமாக இருந்தது.

எனக்கு இதயவலி. என் வலியை போக்குவார் என்று நினைத்து டொக்டரிடம் போகிறேன். எனக்கு என்ன வைத்தியம் செய்யவேண்டும்? ஒப்பரேஷன் தான் செய்யவேண்டும் என்று டொக்டர் நினைத்தால், வலியில் கத்தினாலும் நான் மறுக்கமுடியாது இல்லையா! அவருக்கு என்னைவிட அதிகம் தெரிந்தபடியால் தானே அவரிடம் போனேன். ஆக முடிவை அவரே எடுக்க விடுவது நல்லது தானே! ஆனால் எனக்கு என்ன ஒபரேஷன்? அதை எப்படி செய்யப்போகிறார்? மயக்குவாரா? இதயத்தை வெளியே எடுப்பாரா? எவ்வளவு செலவு? இன்சூரன்ஸ் இருக்கா? என என் வருத்தம் பற்றிய எல்லா தகவல்களையும் எனக்கு அவர் தெரிவிக்கவேண்டிய தார்மீக கடமை டொக்டருக்கு இருக்கிறது. வந்துவிட்டேன் என்பதற்காக, என்னை படுக்கவைத்து வெட்டினால், அவர் லைசன்ஸ் அடுத்தநாளே காலி! இதை தான் சுமந்திரனுக்கு சொல்ல ஆசைப்படுகிறேன். உங்களுக்கு என்னை விட அரசியல் தெரிகிறது. சட்டம் தெரிகிறது. ராஜதந்திரம் தெரிகிறது. ஆனால் தேர்ந்தெடுத்த மக்களுக்கு என்ன செய்யப்போகிறீர்கள் என்று அவர்களுக்கு தெளிவு படுத்தவேண்டிய கடமை இருக்கிறது இல்லையா?

கேள்வி நேரம் ஆரம்பிக்கிறது. முருகன் திடீரென்று தன் பாக்கில் எதையோ கிளற ஆரம்பிக்கிறார். ஆகா இண்டைக்கு “ஹே ராம்” சீன் தான் போல! என்று பயந்தபோது தான், ஒரு கட்டு பேப்பர் வெளியே வந்தது. எல்லாமே சுமந்திரன் அண்மைக்காலத்தில் கொடுத்த பெட்டிகளின் தொகுப்பு. கூட்டமைப்பு/அரசு பேச்சுவார்த்தையால் என்ன பிரயோசனம்? என்று கேட்டதுக்கு, அது “அரசு எமக்கு ஒன்றுமே தர தயாரில்லை என்று சர்வதேசத்துக்கு காட்டுவதற்கு” என்றார். “ஏன் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் தேவை இல்லை?” என்ற அறிக்கை என கேட்க, அதற்கு வெளிநாட்டு அழுத்தம் காரணம் என்றார். “தேசியம் சுயாட்சி” என்ற முக்கிய வார்த்தைகள் ஏன் இந்தியாவில் அனைத்து தமிழ் கட்சிகளும் மத்திய அரசாங்கத்துடன் நிகழ்த்திய சந்திப்பில் நீக்கப்பட்டது? என்ற கேள்விக்கு அது ஒற்றுமைக்காக எடுத்த முடிவு. அதற்கு பதிலாக “peoples” என்ற பதம் உலக அரங்கில் பாவிக்கப்படுவதாகவும் அதிலே பெரிய வித்தியாசம் இல்லை என்றும் விளக்கம் தந்தார். “கொழும்பில் வைத்தே நீங்கள் எல்லோரும் தீர்மானித்த அந்த அறிக்கையை, சுதர்சன நாச்சியப்பனும், சில தமிழ் கட்சிகளும் வேண்டாம் என்று சொன்ன காரணத்துக்காக விட்டுக்கொடுத்தது ஞாயமா?” என்ற முருகனின் கேள்விக்கும் பதில் கிடைக்கவில்லை. எல்லாமே ராஜதந்திரம் போலும்! இன்னும் பல கேள்விகளை முருகன் கேட்டான். இனி கேட்கமுடியாது என்று பின்னால் இருந்து ஒரு ராக்கட் பாய்ந்ததால், சிங்கம் கூண்டுக்குள் போய்விட நான் கை உயர்த்தினேன்!

ஜேகே கேளுங்க என்றார்கள். வாழ்க்கையில் அரசியல் கேள்வி முதன்முதலில் ஒரு அரசியல்வாதியை நோக்கி கேட்டபோது வயிற்றில் இப்போது வாஷிங்மெசின் ஸ்பின் பண்ண தொடங்கியது.

“அரசாங்கம் சர்வதேசத்தை சமாளிக்கவும், குறிப்பாக இந்தியாவை சமாளிக்கவும் கூடிய சீக்கிரத்தில் வடக்கு தேர்தலை நடத்தப்போகிறது. கிழக்கில் விட்ட தவறு போல வடக்கிலும் கூட்டமைப்பு இந்த தேர்தலை புறக்கணிக்க முடியாது. அது மற்ற சக்திகளிடம் வடக்கை கொடுத்து குட்டிச்சுவராக்கி விடும். அதனால் ஏதோ ஒரு வகையில் தேர்தலில் பங்கேற்கவேண்டும். பங்கேற்று வென்று,  மாகாணசபை ஆட்சி தொடங்கும் பட்சத்தில், மத்திய அரசாங்கம் கொஞ்சக்காலத்துக்கு ஆளுனரை அடக்கி வாசிக்க சொல்லி, ஏதோ மாகாணசபைக்கு எல்லா அதிகாரமும் இருப்பது போல பிரமையை கூட ஏற்படுத்திவிடலாம்.  இது தமிழருக்கு நிரந்தர அரசியல் தீர்வு வந்துவிட்டது என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்தும் இல்லையா? இந்த சவாலை எப்படி எதிர்கொண்டு எங்கள் நீண்ட கால அபிலாஷைகளை நிறைவேற்ற போகிறீர்கள்?”

என்று தட்டுத்தடுமாறி ஒரு கேள்வியை கேட்டேன். “முக்கியமான கேள்வி இது முக்கிய விஷயம், முதலில் தேர்தல் அறிவுப்பு வரட்டும், அதற்கு பின் நாங்கள் முடிவுகளை தெரிவிப்போம். இதெல்லாம் யோசிச்சு இருக்கிறோம். ஆனால் இப்போது சொன்னால் அரசாங்கம் எங்கள் உத்தியை கண்டுபிடித்துவிடும்” என்று அவர் பழைய புராணம் பாட, பக்கத்தில் இருந்த முருகன் காதை செக் பண்ணி பார்த்தான். பூ ஏற்கனவே விழுந்துவிட்டது அவனுக்கு!

தொடர்ந்து பல கேள்விகள். காணி நிலம், இராணுவமயப்படுத்தல் போன்ற பிரச்சனைகள். வெளிநாட்டு தமிழர் தங்கள் காணிகளை பயன்படுத்த நில உரிமை எழுதி அங்குள்ள மக்களுக்கு கொடுக்கலாமா என்ற கேள்வி. கூட்டமைப்பு இதற்கெல்லாம் சேர்ந்தாற்போல ஒரு ட்ரஸ்ட் ஆரம்பிக்கபோகிறது என்று சொன்னார். முறையான அறிவிப்பு விரைவில். “தமிழர்களின் செறிவு குறைந்துபோய் இருக்கும் சந்தர்ப்பத்தில், குடியேற்றங்களை வேண்டாம் என்று சொல்ல என்ன தார்மீக காரணம் இருக்கிறது உங்களுக்கு?” என்ற முக்கியமான ஒரு கேள்விக்கு, “இயல்பாக இடம்பெறும் இனப்பரம்பலை நாங்கள் தடுக்க முடியாது, ஆனால் கட்டாயமாக, இன விகிதாசாரத்தை மாற்றும் வகையில் நெறிப்படுத்தப்படும்(orchestrated) குடியேற்றங்கள் சர்வதேச சட்டத்தில் கூட விரோதமானது என்று எழுதப்பட்டு இருக்கிறது என்று பதில் தந்தார். ஆச்சரியமாக பார்த்தேன்.

சில அசந்தர்ப்ப கேள்விகளும் இல்லாமல் இல்லை. “ஏக பிரதிநிதிகள்”, “தர்மம்/அதர்மம்” விவகாரம் என அண்மையில் சுமந்திரன் கும்மப்படும் பல விஷயங்கள் சராமாரியாக வந்தன. அவர் ஓரளவுக்கு சமாளித்தார் எனலாம்.  இலங்கையில் இருந்து கொண்டு செய்யும் சில அரசியல் வேலைகளில் அதுவும் அவர் பாணி அரசியலுக்கு சில விஷயங்கள் தவிர்க்கமுடியாதது என்பதை புரிந்துகொள்ளக்கூடியதாக இருந்தது. இங்கே இருந்துகொண்டு அவற்றை தீவிரமாக அலசுவதற்கும் கதைப்பதற்கும், அங்கே பொதுவெளியில் தர்மசங்கடமான சூழ்நிலைகளை இராஜதந்திர ஸ்தானத்தில் நின்று சமாளிப்பதற்கும் வித்தியாசம் இருப்பதால் முட்டையில் மயிர் புடுங்க வேண்டாம் என்றே தோன்றுகிறது.

எனக்கு அரசியல் அறிவு என்பது, ஓரளவுக்கு அனுபவத்தாலும், வாசிப்பாலும், சமகாலத்து ஏனைய இனப்பிரச்சனைகள் பற்றிய தேடலாலும் மட்டுமே வந்தது. இது தற்சமயம் இருக்கும் விவகாரமான, குழப்பமான, தீவிரமான இலங்கை தள அரசியலை விமர்சிக்க போதாது. அதற்குரிய அனுபவமும் இல்லை. வயசும் இல்லை. என் வயசுக்கு நான் கொஞ்சம் தீவிரமாகவே யோசிப்பேன் என்பதை உணரமுடிகிறது. ஏன் முடியாது? என்று கேட்கும் வயசில் நான் இருப்பதால் அப்படியான கேள்விகளும் சந்தேகங்களும் எழுவதை தவிர்க்கமுடியவில்லை. ஆனால் புத்தி சொல்லுகிறது சுமந்திரனை ஒட்டுமொத்தமாக விமர்சிப்பது அழகில்லை. தவிர அது அழிவுக்கே இட்டுச்செல்லும்.  பல கருத்துக்களில் ஒத்தும்போகும் சுமந்திரன் சில கருத்துக்களில் வேறுபடுகிறார். அது அவர் அனுபவம், வயசு, அறிவுக்கு எட்டிய விஷயம். ஆக்கபூர்வமாக கலந்துரையாடுவதன் மூலம் இவ்வகை வேறுபாடுகளை ஒருவர் மற்றொருவருக்கு புரியவைக்க முடியும். எனக்கு இந்த சந்திப்பில் ஓரளவுக்கு புரிந்தது. எங்களுக்குள் இருக்கும் கருத்தியல் வேறுபாடு புரிந்தது. ஆனால் யார் சரி? என்று புரியவில்லை. இதனால் தான் இலங்கையில் இருந்து இயங்கும் குருபரன், சிறீதரன் போன்ற சக அரசியல்வாதிகளின் கருத்துக்களையும் சுமந்திரன், சம்பந்தன் போன்றவர்களின் கருத்துக்களுடன் சீர் தூக்கி ஆராய்ந்து ஒரு நிலைக்கு நாங்கள் வரவேண்டும். முதலின் நாம் எம்முள் யாரையும் புறக்கணிப்பதை ஓரளவுக்கு தள்ளிவைத்துவிட்டு, ஒருவர் ஒன்றை ஏன், எதற்கு எந்த சந்தர்ப்பத்தில் சொல்லுகிறார் என்று பார்ப்போம். அவர் கருத்துடன் நம் கருத்து மாறுபட்டால் அதை பொறுப்பாக பதிவு செய்வோம். அவர் கருத்தும் மாறாமல், பெரும்பான்மை தமிழர் கருத்தும் அவர் கருத்தாக இல்லாது போகும் பட்சத்தில்,  ஒன்று அவர் தன் கருத்தை மாற்றுவார். அல்லது மக்கள் ஆளை மாற்றுவார்கள்! இந்த பக்குவத்தை நாங்கள் எல்லோரும் எப்போதாவது அடைவோம் என்ற நம்பிக்கையும், நாம் எல்லோரும் ஒற்றுமையாக எம் பிரச்சனையை தீர்ப்போம் என்ற நம்பிக்கையும் .. பொறுங்கள் .. புது வருஷத்துக்கு கோயிலுக்கு போகோணும்!

 

குறிப்பு:

இங்கே சுமந்திரனால் மற்றும் ஏனையவர்களால் கொடுக்கப்பட்ட கருத்துக்கள், அவர்கள் சொல்லி அவற்றை நான் எப்படி புரிந்துகொண்டேன்? என்ற அடிப்படையிலேயே எழுதப்பட்டது.  அது உண்மையான அவர்களின் நிலைப்பாட்டை தான் குறித்து நிற்கிறதா? என்பது என்னுடைய கிரகிப்பு திறன் சம்பந்தப்பட்டதால், எனக்கு அவ்வளவு நம்பிக்கை இல்லை! தவிரவும், இங்கே நான் கொடுத்திருக்கும் தனிப்பட்ட கருத்துக்கள், என் அறிவுக்கு எட்டிய விஷயங்களே. அதை இன்னொருவர் மறுத்து விளக்கினால், எனக்கு புரிந்தால் ஏற்றுக்கொள்வேன். என் முயலுக்கு எத்தனை கால்கள் என்று பலவருஷமாக எண்ணிக்கொண்டு இருக்கிறேன்! மூன்று காலா, நான்கா என்று sure இல்லை! அப்படி இருப்பது எண்ணுவதற்கும் இலகுவாக இருக்கிறது!

தனிப்பட்ட முறையில் அவர் சொன்ன சில கருத்துக்கள், மைக்கை பொத்திக்கொண்டு சொன்ன பதில்கள், நாகரிகம் கருதி இங்கே எழுதவில்லை. ஆனால் அவை முக்கியமான கருத்துக்கள் ஆதலால், சந்தர்ப்பம் கிடைக்கும்போது இப்படியான சந்திப்புக்களை தவறவிடாதீர்கள். போட்டோ எடுக்க கூடாது என்பது ஒர்டர். ரேகொர்ட். பண்ண கூடாது என்று கடைசியில் தான் சொன்னார்கள். அழித்துவிட்டேன்!

References :

http://dbsjeyaraj.com/dbsj/archives/4057/mas2512

http://island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=44922

http://www.thesundayleader.lk/2012/03/11/elucidation-through-effigy-expression/

http://groundviews.org/2011/09/04/crossing-red-lines-the-new-tamil-consensus-in-sri-lanka/?utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+groundviewssl+%28groundviews%29&utm_content=FaceBook

http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=1&contentid=41f49678-bdde-4c0c-9aff-1c0a3ebac99f

 

மிக முக்கிய குறிப்பு : இது அரசியல் பதிவு இல்லை! எனக்கு அரசியல் ஒரு சதத்துக்கும் தெரியாது!

Comments

 1. காலத்திற்கு அவசியமான படைப்பு. நன்றி JK.......நிச்சயமாக கூட்டமைப்பின் நிலைப்பாடுகள் ஓரளவுக்கேனும் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டியது அவர்களின் கடமை.

  ReplyDelete
 2. //வெளிநாட்டு இளைஞர்களின் அரசியல் ஆர்வம் லங்காசிறி, facebook இல் காட்டமான இரண்டு கமெண்ட்களுடன் முடிவது கொஞ்சம் அயர்ச்சி!//
  கொஞ்சம்தானா ?

  ReplyDelete
 3. இலங்கைத்தமிழன்4/18/2012 1:50 am

  //வெளிநாட்டு இளைஞர்களின் அரசியல் ஆர்வம் லங்காசிறி, facebook இல் காட்டமான இரண்டு கமெண்ட்களுடன் முடிவது கொஞ்சம் அயர்ச்சி!//
  ஏன் ஐயா அவங்களை சொல்கிறீர்கள் வெளிநாடு இளைஞர்கள் அதையாவது செய்யினம் இங்க அதுக்குக்கூட துப்பில்லை.

  இந்தப் பேட்டியில் குறிப்பிட்டதை தாண்டி நீங்கள் எதை எதிர்பார்க்கிறீர்கள்.நாட்டிலே இருந்து அரசியல் செய்வது என்றால் வேறு என்ன செய்யலாம் ?

  இண்டைக்கு பாரத லக்ஸ்மன்ர மகள் டிவில வந்து அப்பாடா கொலையை செய்தவன் பற்றி புலம்பினவா ஒரு சிங்கள அரசியல் வாதியிண்ட நிலைமையே இப்படி எண்டால் யோசிச்சு பாருங்கள்

  ReplyDelete
 4. மக்களை இணைத்து அரசியல் செய்வதற்கும் கருத்தக்கூறுவதற்கும் கிஞ்சித்தும் இடம் இல்லை என்றால் தமிழ் சிவில் சமூகம் கூட்டமைப்பின் துரோகங்களை சுட்டிக்காட்டி எப்படி அறிக்கை வெளியிட முடிந்தது. காணிப்பதிவு மற்றும் காணிப்பறிப்பை எதிர்த்து ரெலோ, ஈபிஆா்எல்எவ் ஆகிய அமைப்புக்கள் நகரசபை மைதானத்தில் எப்படி போராட்டம் நடாத்த முடிந்தது. அப்போராட்டத்திற்கு பொது மக்களுடன் வருவதாக மன்னார் ஆயர் மாவையிடம் கூறியபோது மாவை ஏன் அவரை வரவேண்டாம் என்று தவிர்த்தார்.
  கிளிநொச்சியில் சிறீதரன் எம்பி எப்படி 800 பேருடன் மாநாடு ஒன்றைக் கூட்டி அங்கு சம்பந்தன் சுமந்திரனுக்கு முன்னாலேயே குருபரன் sir, மற்றும் சிறீதரனது பிரசார செயலாளா் ஆகியோர் கூட்டமைப்பு சுயநிர்ணயத்தை கைவிடக்கூடாதென்று வலியுறுத்த முடிந்தது.
  லிபியாவில் தலையிட்டது போன்று சிறீலங்காவுக்குள் துழைவதற்கு சா்வதேச சமூகம் கண்களுக்குள் எண்ணைவிட்டுக்கொண்டிருக்கின்றது. அதன் காரணமாக யுத்த காலம்போன்று தமிழ் மக்களை படுகொலை செய்வதென்பது ராஐபக்சே அரசு கடாபியின் நிலைக்கு செல்ல தாமே வழிதேடுவதாக இருக்கும்.
  இது தெரிந்தும் சுமந்திரன் அரசைக் காப்பாற்றவும், தமிழ் மக்களை ஏமாற்றவும் பேசும் கபட வார்த்தைகளை அம்பலப்படுத்துங்கள்

  செந்தில்
  யாழ்ப்பாணம்

  ReplyDelete
 5. வணக்கம் ஜே.கே!அருமையான சந்திப்பு!சில விடயங்கள் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை தான்.ஜன நாயக நாடுகளில் இருந்து பழக்கப்பட்ட எங்களுக்கு,இப்போது அங்கிருக்கும் நிலைமைகள் ஜீரணிக்க முடியாதவையே!பார்ப்போம் மாறாமலா போய் விடும்????

  ReplyDelete
 6. JK,
  I mentioned to you earlier that I did not know much about Eelam politics. I have so many questions in my mind, soon I am going to register that in my blog (it is actually my diary, I will be glad if others read it). Now I am raising two of them, if possible let me know your opinions:
  1. Why they did not take the federal arrangement in year 2002? What were their problems?
  2. Why the war was prolonged till May 18, 2009? Based on the Channel 4 videos, I guess all of the leadership either surrendered or captured at least couple of days before May 18 but due to some unknown reasons it continued.
  Now looking back at things and considering the facts like:
  a) the number of people died duirng the last days of war.
  b) the way his parents died after war
  c) the two sons death and his own death (some people say he is safe, I don't know)
  He should have surrendered to India sometime around Feburary 2009 and hoped Mr. M. Karunanidhi would do something good for Eelam people. At least, he would have saved some life and given them T.V. and Cable connection. I am sorry, if I offened anybody...

  ReplyDelete
 7. இலங்கைத்தமிழன்4/18/2012 8:11 pm

  இந்தக் கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது ?

  ReplyDelete
 8. // சமீபத்திய வாசகர் கருத்துகள் //

  ReplyDelete
 9. @இலங்கைதமிழன்

  சம்பந்தமில்லாமல் வேறு பெயர்களை பயன்படுத்தியதால் அகற்றவேண்டி வந்தது. உங்கள் கருத்தை நான் ஏற்றுக்கொண்டாலும் அதற்காக சில பெயர்களை எனக்கு இருக்கும் பொறுப்பு காரணமாக நீக்கவேண்டியவானாகிறேன்! மன்னித்துக்கொள்க

  ReplyDelete
 10. // குருபரன், சிறீதரன் போன்ற சக அரசியல்வாதிகளின் கருத்துக்களையும் //

  குருபரன் “ அரசியல்வாதி”யல்ல என்று நான் நினைக்கிறேன்.

  அவர் அர,சியலை ”அரசியல்வாதி”களிடம் மட்டும் விட்டுவிடாதீர்கள் என்றே கேட்டுக்கொள்பவர்.

  ReplyDelete
 11. ஆம் அது தவறுதான் ஏற்றுக்கொள்கிறேன். மன்னியுங்கள். சற்று அதிகமாகத்தான் உளறிவிட்டேன்

  ReplyDelete
 12. அரசியல்- நமக்குப் புரியாதப்பு..

  ReplyDelete
 13. சுமந்திரன் ஒரு சட்டத்தரணியாக இருப்பதால் அவரால் குறுக்கு கேள்விகளுக்கு சாதரணமாக பதிலளிக்கமுடியும்,ஆனால் அவர் சொன்ன ஒரு கருத்தை மறுக்கிறேன்..

  {"தமிழர் நலனுக்கு பாதகமாக இருக்குமேயானால் அதற்கு, சுப்ரீம் கோர்ட்டில் ஸ்டே ஒர்டர், ரிட் மனு என தாங்கள் எடுத்து நிறுத்தி வைப்பதாக உதாரணங்கள் மூலம் சொன்னார் " }

  இன்றூ சிங்கள மக்களுக்கு அல்லல் ஏற்படும் நேரத்தில் எல்லாம் ஜேவிபி மேல்முறையீட்டு நீதிமன்றம் சென்றூ விடுகிறது.. தமிழ்மக்களுக்காக் பல சட்டத்தரணிகள் அடங்கிய கூட்டமைப்பு தமிழ்மக்களி உரிமைக்காக நீதிமன்றம் சென்றதுண்டா தேர்தலை தவிர, வலிகாம வடக்கு பகுதி பற்றீ உயர்நீதிமன்ற தீர்ப்பு வந்து எவ்வளவு வருடம் அதை அமுல்படுத்த இவர்கள் நீதிமன்றம் செல்லலாமே, இன்று வழக்குகளே இல்லாமல் வாடும் இளைஞர்கள் அனைவருக்கும் ஆதரவாக ஒஉர் வழக்கு பதிவு செய்யலாமே? வடக்கில் நடைபெறும் அமைச்சரின் மணற்கொள்ளை,காட்டு மரம் தறிப்பு என்றூ அனைத்து சுரண்டல்களுக்கு எதிராக தமிழ்மக்கள் சார்பாக நீதி மன்றம் சென்றால்தன் ஒரு விதமான அந்தஸ்தும் கிடைக்கும் மக்கள் மத்தியில்,இல்லையெனில்,தேர்தல் நேர ஈசல்களாகவே மக்கள் நினைக்கின்றனர் ? மக்கள் சந்திப்புக்கள்,குறைபாடு அறிதலை இன்னும் ஒரு கட்சியாக வளர்த்துக்கொள்ளவில்லை இவர்கள் தாயகத்தில்,பிறகெப்படி மக்கள் பின்னால் போவார்கள்..

  ReplyDelete
 14. @பாலா
  குருபரன், பொதுவெளியில் தீவிர அரசியலில் ஈடுபட்டிருப்பதால் தான அப்படி தெரிவித்தேன். பாராளுமன்ற அரசியலும், கட்சி அரசியலும் செய்தால் தான் அரசியல்வாதியா? இன்றைக்கு ஒரு அரசியல்கருத்துக்கு குருபரன் கருத்தையும் கேட்கிறார்கள் என்றால் ஏன்?

  ReplyDelete
 15. @மன்மதகுஞ்சு

  அந்த விமர்சனத்தையும் பதிந்து இருக்கிறேன். கூட்டமைப்பு சிலவிஷயங்களில் காட்டமாக இல்லை என்பது வெளிப்படை.

  ReplyDelete
 16. @சக்திவேல்

  அரசியல்- நமக்கும் புரியாதப்பு..

  ReplyDelete
 17. @பானு .. உண்மை தான்!

  ReplyDelete
 18. @வாலிபன் .. அதை சொல்லி அலுத்துபோச்சு ..

  ReplyDelete
 19. @செந்தில் .. அந்த கிளிநொச்சி நிகழ்ச்சி பற்றிய முழு விவரமும் அறிந்திருக்கிறேன்.சுமந்திரனை அம்பலப்படுத்தும் எண்ணம் எல்லாம் எனக்கில்லை .. அவர் பகுதி எண்ணங்களை அறிந்து, அவர் தகார் என்றால் மக்கள் நிராகரிப்பார்கள். இல்லை என்றால் ஆதரிப்பார்கள். இதிலே நான் சொல்லி மக்கள் கேட்பார்கள் என்பதற்கு நான் ஒன்றும் பெரிய ஆள் இல்லை. சிந்தனைவாதியும் இல்லை. வெளிநாட்டில் இருந்துகொண்டு சுமந்திரனையோ கூட்டமைப்பையோ விமர்சிக்கும் அருகதையும் எனக்கில்லை. இந்த பதிவு, சாதாரணம் மக்களாகிய நாங்கள் அரசியலை எப்படி அணுகவேண்டும் என்று சொல்லும் பதிவே.

  ReplyDelete
 20. உண்மை தான் .. @yoga நான் எழுதியதுக்கே ஆதரித்தும் எதிர்த்தும் ஈமெயில்கள் குவிந்துவிட்டது.

  ReplyDelete
 21. @udoit

  //1. Why they did not take the federal arrangement in year 2002? What were their problems?//
  அது வெறும் ப்ராமிஸ் மட்டுமே. அடுத்த வாரமே டோக்கியோவில் நடந்த கூட்டம் ஒன்றில் தமிழர் தரப்பை புறக்கணித்து, கொஞ்ச நாளில் பேச்சுவார்த்தை நடத்திய அரசாங்கத்தையே சந்திரிகா ஜேவிபியுடன் சேர்ந்து கலைத்துவிட்டு, இந்தப்பக்கம் மக்களை வாக்க்ளைக்ககூடாது என்று புலிகள் உத்தரவு போட(காரணம் சரி பிழை என்பது வேறுவிஷயம், மக்களிடம் அந்த முடிவேடுக்கம் ஆற்றலை விட்டிருக்கவேண்டும் என்பது அடியேனின் கருத்து), இப்படி அடித்த கூத்தில், இப்போது உள்ள அரசாங்கம் வந்து .. இந்த நிலைமை.

  இந்த விஷயங்களில் எல்லாம் எங்கள் பக்கத்து நாடு பறித்த குழிகள் கூட இன்னமும் நிரம்பாமல் மழை நீர் தேங்கியிருக்கிறது.

  Its very complex. நானும் எப்போதாவது புரிந்துகொள்வேன் என்ற நம்பிக்கையில் தான் இருக்கிறேன்!

  ReplyDelete
 22. @udoit

  அந்த சரண்டர் பண்ணியிருக்கவேண்டும் என்ற விஷயம், விஸ்வமடுவில் சண்டை நடந்தபோதே அப்பாவிடம் சொல்லியிருந்தேன். 87இல் இப்படி ஒரு நிலைமையை திறமையாக கையாண்டவர்கள் ஏன் 2012 இல் செய்யவில்லை என்பது இன்னமும் மிஸ்ட்ரி தான். Total miscalculation. அதை பொதுவெளியில் பேசும் அளவுக்கு எங்களுக்கு இன்னமும் பக்குவமும் வரவில்லை என்பதாலும் அதற்குரிய தேவை இப்போது இருக்கிறதா என்பதாலும், நான் எஸ்கேப்! இனி எப்படி என்ற சிந்தனைக்கு கடந்துகால தவறுகளை முறையானவர்கள் ஆராயாமல் செய்யமாட்டார்கள் என்று நம்புகிறேன். நான் சாதாரண ஏழை கற்றுக்குட்டி எழுத்தாளன். என் கருத்து அவ்வளவு முக்கியமில்லை!

  ReplyDelete
 23. வெளிநாட்டில் இருந்துகொண்டு சுமந்திரனையோ கூட்டமைப்பையோ விமர்சிக்கும் அருகதையும் எனக்கில்லை.

  ReplyDelete
 24. //அதை பொதுவெளியில் பேசும் அளவுக்கு எங்களுக்கு இன்னமும் பக்குவமும் வரவில்லை என்பதாலும் அதற்குரிய தேவை இப்போது இருக்கிறதா என்பதாலும், நான் எஸ்கேப்!//I completely agree with you. Your next sentence - இனி எப்படி என்ற சிந்தனைக்கு கடந்துகால தவறுகளை முறையானவர்கள் ஆராயாமல் செய்யமாட்டார்கள் என்று நம்புகிறேன் - is great. You really understood the soul of my comment. I am not here to judge anybody, my concerns are Genocide and common man's suffereings. Your reply to other commnet - வெளிநாட்டில் இருந்துகொண்டு சுமந்திரனையோ கூட்டமைப்பையோ விமர்சிக்கும் அருகதையும் எனக்கில்லை. இந்த பதிவு, சாதாரணம் மக்களாகிய நாங்கள் அரசியலை எப்படி அணுகவேண்டும் என்று சொல்லும் பதிவே. - is a flawless statement. I read and write about politics not to become a career politician but I believe people should understand things that are affecting them. JK, we are in cross roads (not only Eelam Tamils), we should try to know global politics and economics so that we will be prepared for changes that are coming.

  ReplyDelete
 25. @பெயரில்லா நண்பரே .. நன்றி வருகைக்கு

  ReplyDelete
 26. @Mohan

  நன்றி உங்கள் பக்குவமான பதில்களுக்கு ... என் இப்போது அதிகமாக புத்தகங்களுடன் தான் பொழுது போக்குகிறேன் ... அறிவை எப்படி பயன்படுத்துகிறோம் என்பது கிடக்கட்டும் .. அதை அறிவதே ஒரு அபரிமிதமான அனுபவம் ... We can discuss many I am sure .. and at times can argue with disputes too .. ஆனால் அது தான் வேண்டும்!

  ReplyDelete
 27. இலங்கையன்4/23/2012 8:00 am

  //பெயரில்லா சொன்னது… லிபியாவில் தலையிட்டது போன்று சிறீலங்காவுக்குள் துழைவதற்கு சா்வதேச சமூகம் கண்களுக்குள் எண்ணைவிட்டுக்கொண்டிருக்கின்றது.//
  எப்படியான கற்பனைகள் போலி பிரசாரங்கள் மூலம் உருவாக்கபடுகிறது என்பதிற்கு இது உதாரணம்.அந்த காலத்தில் இந்தியா வந்து பங்களாதேஷ் மாதிரி தனிநாடு எடுத்து கொடுக்கும் என்று நம்பிக் கொண்டிருந்தார்களாம்.
  //ஜேகே சொன்னது… வெளிநாட்டில் இருந்துகொண்டு சுமந்திரனையோ கூட்டமைப்பையோ விமர்சிக்கும் அருகதையும் எனக்கில்லை//
  நேர்மைக்கு தலை வணங்குகிறேன்.

  ReplyDelete
 28. நன்றி இலங்கையன் உங்கள் கருத்துகளுக்கு.

  ReplyDelete
 29. I'd like to find out more? I'd love to find out some additional
  information.
  Here is my weblog :: how to get rid of cellulite

  ReplyDelete

Post a comment

Contact form